Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிலா.. என்.. வெண்ணிலா-08

Advertisement

lakshu

Well-known member
Member
நிலா... என்.. வெண்ணிலா-08
மகி..ஏன் இப்படி இருக்கீங்க, ஃபிரஷ் ஆயிட்டு கீழே வாங்க மகி , அவனை எழுப்ப ,ஏய் என்னை தொந்தரவு செய்யாத சொல்லி,நிலாவை கோவத்தில் தள்ளிவிட கீழே போய் விழுந்தாள்.

அவளை தூக்கி விட்டு, ஐயோ சாரிடி தெரியாத ஈஷ்வர் தினற சாரி நிலா, நீ போ , நான் ரொம்ப மூட் அவுட்...தலையில் கை வைத்து உட்கார்ந்துவிட்டான்.

மகி என்ன பிரச்சனை சொல்ல மாட்டியா, ஒரு ஃபிரண்டா சொல்ல மாட்டியா..

தன் தலையை கோதிவிட்டு, எனக்கு அசிங்கமா இருக்கு உன்கிட்ட சொல்லவே நிலா , அவளை பார்க்க முடியாமல் கண்களை தாழ்த்தினான்.

எப்படியென்றாலும் தெரிந்துவிடும், அதை நீயே சொல்லிடு மகி.

நீ போ நிலா... என்னைய தனியா விடு ,பீளீஸ்ம்மா...

மாட்டேன் மகி நீ சொன்னாதான் போவேன். ஏன்டி உனக்கு பிடிவாதம் , ம்ம் இன்னிக்கு ஷேர் ஹோல்டர் மீட்டிங் நம்ம ஆபிஸ்ல, நான் ரூமுக்குள்ள வர சொல்ல எல்லோரும் என்னைய பார்த்தாங்க, செல்லையும் பார்த்து சிரித்தாங்க, அந்த முரளி இல்ல, என்னைய பார்த்து , வீட்டில பொண்டாட்டி இருக்க வெளியே குடிச்சிட்டு பொண்ணுங்க கிட்ட போதையில கூத்தடிக்கிறேன் பேசினான்.

எனக்கு ஓண்ணுமே புரியில , அப்ப ராகவ் தான் உள்ளே ஓடிவந்து சில படங்களை காட்டுனான். நெட்ல போட்டுவிட்டாங்க.

என்ன போட்டாங்க, காட்டு மகி..

அது வேணாம் நிலா, காட்டு மகி... பிஸினஸ் அதிபரின் லீலை, போதையில் பல பெண்களுடன்... மது ஈஷ்வர்மேல் விழுந்திருப்பது, அவனை கட்டிப்பிடித்திருப்பது போன்ற போட்டோஸ் இருக்க.. அதிர்ச்சியாக பார்த்தாள் நிலா...

தன் மனைவி இதை பார்ப்பதை அசிங்கமாக நினைத்தான், தலையில் கையை வைத்து பின்னாடி சாய்ந்து உட்கார்ந்திருந்தான் ஈஷ்வர்.

நான் என்னடி செஞ்சேன், என்னை நிம்மதியாக வாழ விட மாட்டாங்களா. எனக்கு இந்த பிசினஸே பிடிக்கல நிலா. எங்கியாவது அமைதியான இடமாம பார்த்து போயிடலாம் இருக்கேன், அவ்வளவு ஸ்டரஸ்.

மகி, அவன் தலையிலிருந்து கையை எடுத்து ,ஈஷ்வரை தன் மடிமீது படுக்க வைத்தாள். பின் மகி இந்த உலகத்தில யாருக்கும் உங்களை நிருபிக்க தேவையில்ல என்னையை தவிர. அதாவது உங்க பொண்டாட்டி நான் நம்புறேன். இதை ஓரு பெரிய இஷ்யூ ஆக்காதீங்க.

அவன் தலையை கோதிவிட்டு, அவங்க சொன்னதுக்கு நீங்க ரியாக்ட் பண்ணாதான். உங்கள வேறுப்பேற்ற திரும்பவும் அதையே செய்வாங்க. நீங்க கண்டுக்காதீங்க.

நீ சுலபமா சொல்லிட்ட நிலா, ஆனா அந்த டைம்ல எனக்கு கோவம் வருது... அவங்க அவங்களுக்கு பிரச்சனை வந்தாதான் தெரியும் நிலா.

கொஞ்சம் நினைச்சு பாருங்க , நீங்க ஆம்பள உங்களையே இந்த சமுதாயம் இப்படி சொல்லுதுன்னு ஃபீல் செய்யறீங்க. ஓரு பெண்ணாக இருக்கும் எனக்கு விவாகரத்து நடந்து முடிந்து, நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா மகி.

எந்த ஓரு விஷியத்தையும் பிரச்சனை நினைக்காம சாதாரணமா நினை...

சரி நிலா நமக்கு நடந்தது, கல்யாணமா சொல்லு உனக்கு விருப்பமோடு தான் செஞ்சிக்கிட்ட, எனக்கு இந்த வாழ்க்கையே பிடிக்கல நிலா,வெறுப்பா இருக்கு எல்லார் மேலையும் கோவப்படுறேன்.

கல்யாணம்னா என்ன மகி, ஊரே கூப்பிட்டு பெரிய கல்யாண மண்டபத்தில, சிறப்பா விருந்து வச்சி, பல கனவோட முதல் கல்யாணம் செஞ்சோமே அதுவா. எங்க போய் முடிச்சிடுச்சு கோர்ட்ல டிவோர்ஸ்.

ஆனா மகி யாருமே இல்லாத சிம்பளா கோவில நடந்ததே நம்ம கல்யாணம், அது தான் எனக்கு பிடிச்சிருக்கு மகி.

ஈஷ்வர் அவளை உற்று பார்க்க, ஆமாம் மகி நீ தாலி கட்டும் போது உன்கூட கடைசிவரை வாழனும் நினைச்சேன். எனக்கு உன்கிட்ட எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்ல. ஓரு தோழனா ,நமக்குள்ள புரிதல் வரனும் நினைச்சேன்.

நானும் நிலா உன்ன கடைசி வரைக்கும் பிரிய கூடாது நினைச்சேன்.

அப்பறம் என்ன மகி உன் வாழ்க்கை நீ வாழு , மத்தவங்களுக்காக ஏன் நீ யோசிக்கற. உன்மேல தப்பு இல்லை , என்ஜாய் யுவர் லைப் மகி.

மகி தெளிவாக, குட் பாய் இப்படிதான் சிரிச்ச முகத்தோடு இருக்கனும்.
ஏய் கடைசியில என்னை உன் ஸ்கூல் பையன் ரேஞ்சுக்கு டீரிட் பண்ணிட்டே, குட் பாயா.. நானா..

சாரி மகி , பசங்களுக்கு அட்வைஸ் பண்ணி பண்ணி அதே மாதிரி ஓரு ஃப்லோ வந்திடுச்சு. சரி ரிலாக்ஸ் ஆகுங்க நான் காபி எடுத்துட்டு வரேன் என்று அவனை தலையனையில் படுக்க வைத்து கீழே இறங்கினாள்.

நிலா நானே கீழே வரேன்...
-------
எனக்கு தூக்கம் வருது லைட் ஆப் பண்ணு நிலா, பெட் பூல்லா எக்ஸாம் பேப்பரா இருக்கு.. எங்க படுக்க.

மகி நாளைக்கு பேப்பர் திருத்தி கொடுக்கனும், கொஞ்சம் ஹெல்ப் செய்யேன்.

நானா...

ம்ம் டோட்டல் போட்டு கொடு மகி..ப்ளீஸ்....

உனக்கு ஏன் இந்த வேலை, நீ கரஸ்பாண்டா இரு நிலா, ஏன் டீச்சரா இருக்க...

கொஞ்ச நாளைக்கு தான் மகி...அப்பதான் ஸ்கூல் எப்படி நடத்தனும் தெரிஞ்சிக்கலாம்.

சரி உன் அப்பாவும், என் அப்பாவும் சும்மாதான இருக்காங்க, அவங்கிட்ட கொடுக்க வேண்டியதுதானே , நிலா முறைக்க...பேப்பரை எடுத்து டோட்டல் போட்டான்.

எப்படி எல்லோரும் பாஸ் ஆயிட்டாங்க, ஓருத்தன் கூடவா பைல் ஆகல... இந்த ஹரி ஒண்ணுமே எழுதிலியே, எப்படி முப்பத்தஞ்சு எடுத்து பாஸ் ஆனான்.

ஈஷ்வரை பார்க்க, அவன் விஷம்ம மாக சிரிக்க, அதில் மயக்கி போனாள் நிலா... பவன் சொன்னது ஞாபகம் வந்தது நிலாவுக்கு , எங்க அண்ணா சிரிச்சே மயக்கிடுவான் மூன், அந்த சிரிப்பே காணாம போயிடுச்சு...

எனக்கு தூக்கம் வருது நிலா ,பெட்சீட் போட்டு முகத்தை மூடி கொண்டான்.

டேய் மகி என்னடா பண்ணி வச்சே, அவள் மகி போர்வையை விலக்க
என்ன, நீ எல்லா கணக்கும் தப்பு போட்டு வச்சிருக்க.. அதான் பாவமில்ல பசங்ச பாஸ் போட்டேன்.

அவள் காளியாக முறைக்க... அப்பறம் நீ தான் சரியா கணக்கு சொல்லிதரல நினைப்பாங்க புரியுதா... உனக்கு பேவரா தான் செஞ்சிருக்கேன்..

உன்னை, தலையனை எடுத்து அவனை அடிக்க, இரண்டு வேல பண்ணி வச்சிருக்க..வேணா விடுடி, சொல்லி தலையனை வாங்கி எறிய...

அவள் கையால் அடிக்க, நிலா கையை பிடித்தான் அடிக்காத வாறு... இருவரும் பார்த்துக் கொள்ள...சிறிது நேரத்தில் கையை இழுத்தாள்.. நீ தூங்கு மகி நான் வேலை முடிச்சிட்டு வரேன்....

ஏய் ஒரு பத்து பசங்க மார்க் மட்டும் மாத்துனேன், முப்பத்தஞ்சு மார்க் எடுத்த பசங்க மட்டும் செக் பண்ணு....
-------
அடுத்த நாள் நானும் உன்கூட வரேன் மகி , உன் ஆபிஸ பார்த்ததே இல்லை...

எதுக்கு ,நீ வர வேணாம், எனக்கு தெரியும் என்ன செய்யனும். உன் வேலையை பாரு நிலா.

11 மணிக்கு , ஈஷ்வர் செல் அடிக்க, போனை பார்த்தான் ...நிலா அழைத்திருந்தாள்.

என்ன நிலா... மகி நான் உங்க ஆபிஸ் முன்னாடிதான் இருக்கேன், என்னை உள்ளே கூட்டிட்டு போ.

உன்ன வர வேண்டாம் தான சொன்னேன். சரி நான் கீழே வரேன்... நிலாவை அழைத்துக் கொண்டு மேலே வந்தான். எல்லா ஸ்டாப்புக்கும் அறிமுக படுத்தினான் தன் மனைவி என்று... அறிமுக படலம் முடிந்தவுடன் தன் அறைக்கு அழைத்து வந்தான். அவர்களுடனே உள்ளே வந்தாள் மது...

ஸார் இன்னிக்கு மீட்டிங் இருக்கு ஈஷ்வரிடம் சொல்லி திரும்ப... நிலா வேணா என்று ஈஷ்வர் முடிப்பதற்குள்..நிலா மதுவின் கண்ணத்தில் பளார் என்று அடித்தாள்.

என்ன தைரியமிருந்தா நேத்து என்கிட்ட இப்படி பேசுவ...
இதை எதுவும் எதிர்பார்க்காத மது பயந்துபோய் கண்ணத்தில் கையை வைத்தாள்.
நிலா அவளுக்கு எதுவும் தெரியாது ஈஷ்வர் குறுக்கிட...

இவளுக்கா சொல்லு மது, உனக்கு ஒண்ணும் தெரியாது...

எனக்கு எதுவும் தெரியாது மேடம்... என் போட்டாதான் வந்திருக்கு.. நான் ஸாருக்கு ஹெல்ப் செய்யபோய் ,என் பெயர்தான் கெட்டுபோயிருக்கு..

நீதான அவர்மேல விழுந்திருக்க, அவர் உன்ன தொடல...யாரு உனக்கு இந்த வேலையை செய்ய சொன்னது, இல்ல போலிஸை கூப்பிடவா...

வேணாம் ஸார், முரளி ஸார்தான் இப்படி செய்ய சொன்னது ஆனா போட்டோ எடுத்தது என் பிரண்ட், நெட்ல போட்டதும் அவன்தான்...உங்கமேல உள்ள ஆசையில..

நிறுத்து உன்கிட்ட நான் அப்படி பழகினதில்ல ...உங்க அப்பா இங்க வேலை செய்யறப்ப இறந்ததால உனக்கு வேலை தந்தேன். இப்ப நீ வேலைவிட்டு கிளம்பு... மத்த செடில்மெண்ட் உன் வீட்டுக்கு வரும். கெட் அவுட்.. என்று ஈஷ்வர் கத்தினான்.

இவ்வளவு நிலா கேட்டு, உன்ன என்று மறுபடியும் அடிக்க வர... அவள் கையை தன் கைகளுக்குள் கொண்டுவந்து நிலாவின் கோவத்தை அடக்கினான் ஈஷ்வர்.
விடு மகி... என்ன செஞ்சிருக்கா பார்த்தியா...

நிலா கண்டோரல் யூர்ஷெல்ப்..மது கெட் அவுட்.. மது வெளியேற, உனக்கு என்ன இவ்வளவு கோவம் வருது, கூல் டவுன். நல்லா குழாயடி சண்ட போடற நிலா... நீ ஓரு டீச்சர், பொறுமை எங்காவது இருக்கா.

..ம்ம் எல்லாம் மனசுக்குள்ள இருக்கு ,சரி வீட்டுக்கு வாங்க போலாம்..

என்ன , இப்பதான ஆபிஸ்கே வந்தேன்...அதுக்குள்ள

லன்ச் டைம் ஆயிடுச்சு , என்னைய வீட்டுல விட்டுட்டுங்க..

----- நிலாவை பிடித்தேன்
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்
 
Last edited:
Top