Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நிலா..என்..வெண்ணிலா-10

Advertisement

lakshu

Well-known member
Member
நிலா..என்..வெண்ணிலா-10
2192


ராம் எல்லோரையும் ஓரு வழியாக தன் ஊருக்கு அழைத்துச் செல்ல சம்மதம் வாங்கினார். ஈஷ்வரிடம் கெஞ்சிக் கூத்தாடி நான்கு நாட்கள் அங்கே இருக்குமாறு கேட்டார், அனைவரும் கோயபூத்தூர் பக்கத்தில் உள்ள செல்லனூர் கிராமத்திற்கு மாலை வந்து சேர்ந்தார்கள்.

இதுதான் ராமின் ஊர், அமைதியான, அழகான கிராமம். தன் சொந்த ஊருக்கு திரும்பி வந்த சந்தோஷம் நிலாவிற்கு. முன் ஏற்பாடாக வீட்டை சுத்தம் செய்து இரவு உணவையும் செய்ய சொன்னார் நம்ம ராம்.

இங்கே வந்ததே. தன் சித்தப்பா மகனின் பெண்ணிற்கு திருமணம் என்று, பிறகு குலதெய்வம் கோவிலில் வேண்டுதல் செய்ய.

பெரிய வீடு, அந்த ஊரில் உள்ளே பழைமை மாறாத தூண்கள்,மற்றும் புதுமையாக டைல்ஸ் போட்டிருந்தார். நிலாவின் ரூமில் ஈஷவர் தங்க, மற்றவர்களுக்கு தனித்தனி அறை ஓதுக்கப்பட்டது
.
இரவு உணவிற்கு அனைவரும் வர, அங்கே ராமின் தங்கை மங்களம், இவர் கணவர் நீலகண்டன், மற்றும் அவள் பையன் ரகுவரன் வந்திருந்தனர்.

அவர்களை அறிமுகப்படுத்தினார் ராம். போங்க அண்ணா கடைசியில ரகுவுக்கு உன் பொண்ண கட்டிக்கொடுக்க மாட்டேன் சொல்லிப்புட்டே, நம்ம ரகு எப்படி அழுதான் தெரியுமா. ரகுவை காட்டி கேட்க, ஈஷ்வர் சடாரென்று திரும்பி ரகுவை பார்த்தான்.

பார்க்க சுமாரா தான் இருக்கான் கட்டிக் வேண்டியது தானே இவ ஏன் வேணா சொல்லிட்டா, உற்று அவனையே பார்த்தான்.

பக்கத்தில் நிலா நிற்க, ஏன் இவனையே கட்டிக் வேண்டியது தானே.

யாரு இந்த அரை லூஸையா, ஊருக்கு ஓரு பொண்ணை சைட் அடிப்பான். என்னைவிட ஆறு மாசம் சின்னவன், பரவாயில்ல கட்டிக்கோ சொல்லும் அத்தை. அங்கே பெரியவர்கள் பேச,

டேய் ரகு, இங்க வா , நிலா கூப்பிட அவளை முறைத்துக் கொண்டே என்னடி டேய் கூப்பிடற, என்ன உன் புருஷன் வந்துட்டான் என்ற திமிரா, சொல்ல.

மவனே என்னடா கொஞ்ச நாள் ஆளில்ல பயம் விட்டுபோச்சா கை ஓங்கி அவனை அடிக்க வர, நிலா என்ன இது என்று ஈஷ்வர் அவளை தடுத்தான்.

சகல நீ நம்ம ஆளா, உன் பெயரு என்னப்பா , என்று கட்டிக் கொண்டான். ரகு.
ஈஷ்வர் ...

அய்யோ இப்படி இவகிட்ட மாட்டிக்கிட்டியே சகல.. ஓரு வார்த்தை கேட்க கூடாது, இந்த அடாங்காபிடாரியை கட்டிக்கிட்டியேப்பா. சரி உன் தலைவிதி, ஆனா நான் எஸ்கேப்.

ரகு தலையை தட்டிவிட்டு கிச்சனுக்குள் போனால் நிலா. அவனை பார்த்து ஓரே சிரிப்பு ஈஷ்வருக்கு.

சரி சகல எங்கனா போறதுன்னா என்ன கூப்பிடு,நீங்க இங்க இருக்கிற வரை நான்தான் பார்த்துக்கனும் சொன்னாரு மாமா. அப்பறம் எங்க அம்மா ஏதாவது சொல்லுவாங்க. ஆனா நிலாவ அப்படி நினைச்சு தில்ல, அக்கா மாதிரிதான் நடந்துப்பா என்கிட்ட.

ஆனா ரொம்ப அடிக்கிறா, கொஞ்சம் கண்டிச்சு வைக்கங்க சொல்லிட்டேன். வாங்க சாப்பிட போகலாம். ரகு ,பவன், விக்கியிடமும் நன்றாக பேசினான்.

பயணக் களிப்பில் நன்றாக தூங்கினர்... காலையில் ஓரே சத்தம் கேட்டு எழுந்தான் ஈஷ்வர் ரூமின் சன்னலை திறந்து பார்க்க, கீழே ஓரு பக்கம் சமையல் நடந்துக்கொண்டிருந்தது. இன்னோரு பக்கம் பந்தி நடக்க சேரும் , டேபிளும் போடப்பட்டது.

கல்யாணம் இன்னும் மூன்று நாள் இருக்கு, அதுக்குள் என்ன விருந்து பொண்ணு வீடு இங்கயில்ல சொன்னாரு மாமா. யோசித்துக் கொண்டே இருக்கும்போது குளித்து முடித்து தலையில் ஈரம் சொட்ட பாத்ரூமிலிருந்து வெளியே வந்தாள் நிலா.

என்ன மகி எழுந்திட்டிங்களா, இருங்க காபி எடுத்துட்டு வரேன்.

நிலா என்ன கீழே சத்தம், ஓ அதுவா நம்ம கல்யாணம் நடந்தது, இங்க யாருக்கும் தெரியாது, அதுக்கு விருந்து வைக்கிறாரு, எல்லா சொந்தங்களும் , ஊரில் இருக்கிற ஆளுங்களும் வருவாங்க மகி, நம்ம இரண்டு பேரையும் பார்க்க. ஸோ

ஈஷ்வர் முறைக்க, என்னை கேட்காம இது என்ன..

நீங்க குளிச்சுட்டு புது டிரஸ் போட்டுட்டு சீக்கரம் வருவீங்களாம், கையில் ரோஸ் நிற ஸாப்ட் சில்க் சாரியை எடுத்துக்கொண்டு நானும் ரெடியாகனும் மகி.

ஏய்ய் நிலா சாரி கட்டனும்மா நான் ஹெல்ப் செய்யவா.

பரவாயில்ல மகி கீழ, அத்தை , சித்தப்பா பொண்ணுங்க வந்துட்டாங்க, அவங்க மேக்கப் போட்டு விடுவாங்க, நீங்க சீக்கீரம் கிளம்பி வாங்க.

கையை கண்ணத்தில் வைத்து வடை போச்சே.... சரி நாமும் கிளம்புவோம், ரெடியாகி கீழே இறங்க, ஹாலில் ஓரே பெண்கள் கூட்டமாக இருந்தது.

பார்த்தி , ஈஷ்வரை அழைத்து வாடா,ஏன் வேட்டி கட்டிட்டு வந்திருங்களாமில்ல.
அப்பா..

போ என் ரூமில்ல வைச்சிருக்கேன் , போயி கட்டிட்டு வா, பார்த்தி சொல்ல, பத்து நிமிடத்தில் வேட்டி கட்டிக் கொண்டு மணமகனாக வந்தான் ஈஷ்வர். ஏற்கனவே ஈஷ்வர் ஆணழகன்தான், இதில் இன்று வேட்டியில் புது மாப்பிள்ளையாக இருந்தான்.
அண்ணா சூப்பரா இருக்கீங்க , அழகுண்ணா நீ என்று ஈஷ்வர் கண்ணத்தில் முத்தமிட்டான் விக்கி.

சோபாவில் ஈஷ்வர் உட்கார, பட்டுச்சேலை கட்டி , மல்லிப்பூ சூடி ,ஆரம் ,நெக்லஸ் காதுகளில் பெரிய சிமிக்கி அணிந்து, முகத்தில் சிறிய ஓப்பனையோடு, வெட்கத்தில் முகம் சிவக்க , வெண்ணிலவே தரையில் இறங்கி ஈஷ்வர் பக்கத்தில் அமர்ந்ததுப் போல் இருந்தாள் நிலா.

அவனே ஓரு நிமிடம் தன் மனைவியை பார்த்து ஆடிவிட்டான். தன்னவள் என்ற உரிமை எப்போது உணர்ந்தனோ, அவனுக்கே தெரியவில்லை.

ஊரின் முக்கிய தலைவர்கள் வந்து அவர்களை வாழ்த்த, பிறகு பெரியவர்கள் ஆசிர்வதிக்க, ஈஷ்வருக்கு இன்றுதான் நமக்கு கல்யாணம் ஆனதோ என்று நினைத்தான்.

நிலாவின் தூரத்து பாட்டி ஓருவர் ஈஷ்வரை பார்த்து என்ன ராம் எங்கிருந்து பிடிச்சுட்டு வந்த சினிமா நடிகர் மாதிரி இருக்காருப்பா உன் மாப்பிள்ள சொல்லி கிள்ளி முத்தமிட்டது.
வயதானவர்கள் வந்து அவனை பிடித்து எங்க நிலாவுக்கேத்த மாப்பிள்ள திருஷ்டி கழிச்சி சென்றார்கள்.

பெரியவர்கள், சொந்தங்கள் சென்றவுடன், ஹப்பா, மகி நான் கொஞ்சம் கிச்சனுக்கு போயிட்டு வரேன் அத்தை கூப்பிடுறாங்க, நிலா உள்ளே எழுந்து போனாள்.

அடுத்த பெண்கள் பட்டாளமே ஈஷ்வரை சூழ்ந்து கொண்டது. மாமா எப்படியிருக்கீங்க, அதில் ஓருத்தி அழைக்க...

என்னது மாமாவா, நீங்கயெல்லாம்...

நாங்க எல்லோரும் உங்களுக்கு முறையாவரும் மாமோய்..

ஈஷ்வர் கண்களை விரிக்க, என்ன செம ரியாக்ஷன் மாமா, அள்ளுது போ இன்னோருவள் ஈஷ்வரை இடிக்க. ஈஷ்வர் நெளித்தான்.

போங்க மாமா , நாங்க இவ்வளவு பேரும் இருக்க எங்க அக்காவ கட்டிக்கிட்டிங்க, சரி விடுங்க, எங்க அக்காதான, அவளாள முடியாதப்ப நாங்க பார்த்துப்போம் உங்கள.

என்னது...

என்ன மாமா இப்படி ஷாக்காகிறீங்க..இதோ இவ டாக்டருக்கு படிக்கிறா என்று ஓரு பெண்னை கையை காட்ட, அப்பெண் ஈஷ்வரை பார்த்து கண்ணடிக்க,

ஐயோ, நிலா எங்கடி போயிட்ட ஈஷ்வர் மனதில் புலம்ப... இவ இஞ்சினியரு, நான் டிகிரி முடிச்சிருக்கேன் மாமா.

அடித்த பெண் , அக்கா சரியா சாப்பாடு போடுறதில்ல போல இப்படி நெளிச்சிருக்கீயே மாமோய். நல்ல வஞ்சிர மீண் போட்டு குழம்பு வைச்சு, நான் உங்களுக்கு போட்டா அப்படியே என்னைய கட்டிப்பிடிச்சிக்குவிங்க மாமா.

என்னது, அந்த பக்கம் போன பவனை பார்த்து நிலா என்றான்
.
என்ன மாமா இப்படி அமைதியா இருக்கீங்க. எங்களை யார உங்களுக்கு பிடிச்சிருக்கு சொல்லுங்க. உதட்டை குவித்து பறக்கும் முத்தமிட.

எச்சையை கூட்டி முழுங்கினான், பவன் நிலாவிடம் அண்ணா கூப்பிடறாங்க அண்ணி சொல்லி சென்றான்.

தன அத்தையிடம் பேசிக்கொண்டிருந்த நிலா, ஈஷ்வரிடம் வந்தாள்.

என்ன மகி...அது நிலா.

என்ன அக்கா நாங்க சும்மா மாமாகிட்ட பேசிட்டு இருந்தோம். மாமா ஏன் பயப்படுது.

ஓ அப்படியா, சரி மகி எனக்கு உள்ள வேலையிருக்கு நான் கிளம்பறேன் என்றாள்.

நிலாவின் கையை பிடித்து என்னைய விட்டுட்டு போகாதே- ஈஷ்வர்.

சரிக்கா நாங்க வரோம், மாமாவ பார்த்துக்க.

எல்லாம் நல்லாவே பார்த்துப்பேன் நிலா , ஈஷ்வரை பார்த்து கூற.

நிலா.. என்ன மகி..

அது இன்னிக்கு சூப்பரா இருக்க இந்த சாரியில்..

அப்படியா மகி நீங்க கூட சூப்பரா...சொல்ல வர.
நான் சொன்னேன் அதுக்காக நீ சொல்லாத, ஏற்கனவே இதோ இப்ப போனாங்களே அந்த கேர்ல்ஸ் காம்ப்ளீட்மெண்ட் கொடுத்துட்டாங்க.

அய்யோ மகி , என் கண்ணே பட்டுட்டும் போல செம மேன்லி லுக்.

போடி பவன கொஞ்சற மாதிரி பேசற, புருஷன்கிட்ட எப்படி பேசனோம் தெரியுதா, இடையில் ரகுவரன் வந்து சகல நம்ம பசங்க வந்திருக்காங்க உங்களை பார்க்கனும்மா , வாங்க போலாம்.

நிலாவிடம் தலை அசைத்துவிட்டு, ரகுவின் எட்டு நண்பர்கள் குழு சூழ்ந்திருக்க அங்கே சென்றனர்.
-நிலாவை பிடித்தேன்
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

ஹா ஹா ஹா
செல்லனூர் பிள்ளைகளெல்லாம் மகேஸ்வரனை ஒரு வழியாக்கிடுவாளுங்க போலிருக்கே
நிலா எங்கேம்மா இருக்கே
சீக்கிரமா வந்து உன் புருஷனை இந்த பெண்களிடமிருந்து காப்பாத்தும்மா நிலாம்மா
இன்னும் ரகுவின் நண்பர்கள் வேற ஈஷ்வரை வைச்சு செய்யப் போறாங்களா?
ஹா ஹா ஹா
 
Last edited:
ரொம்ப நல்லா இருக்கு
கொழுந்தியாலுக
செமயா மிரள வச்சாலுக
 
மிகவும் அருமையான பதிவு,
லக்ஷு அருணாச்சலம் டியர்

ஹா ஹா ஹா
செல்லனூர் பிள்ளைகளெல்லாம் மகேஸ்வரனை ஒரு வழியாக்கிடுவாளுங்க போலிருக்கே
நிலா எங்கேம்மா இருக்கே
சீக்கிரமா வந்து உன் புருஷனை இந்த பெண்களிடமிருந்து காப்பாத்தும்மா நிலாம்மா
இன்னும் ரகுவின் நண்பர்கள் வேற ஈஷ்வரை வைச்சு செய்யப் போறாங்களா?
ஹா ஹா ஹா
Thk u banu mam for ur longgg comments
 
eshwar ra yella ponnungalum serndhu oru vazhi pannitanga ???raghu friends enna pannaporangalo..paavam eshwar?semma epi sis keep rocking
 
Top