Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீதானே என் பொன் வசந்தன் -அத்தியாயம் 31

Advertisement

Kalarani Bhaskar

Well-known member
Member
நீதானே என் பொன் வசந்தன்
அத்தியாயம் 31

அன்றைய வேலை முடிந்து அலுத்து களைத்து வெறும் கசங்கிய காகிதமாய் வீடு திரும்பியவன் அந்த நீண்ட வராண்டாவைக் கடந்து தன் வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே செல்லும்முன் அனிச்சையாக எதிர்புறம் நோக்கினான், சட்டென்று முகத்தில் மின்னல் கீற்றாய் புன்னகை தோன்றினாலும் அபி அங்கே இல்லை என்னும் உண்மை மறுநொடியே அவனை மேலும் சோர்வடைய வைத்தது. அபியை ஊரில் விட்டுவிட்டு வந்து ஒரு வாரம் கடந்திருந்தது நாளுக்கு நாள் அவளது பிரிவுத்துயர் தாங்காமல் வாடினான் ,யார் சொன்னது தலைவி மட்டும் தலைவனை எண்ணி பசலை கொள்வாள் என்று இவனும் இங்கு தேய்ந்து கொண்டுதான் இருந்தான்..சில நேரங்களில் அவள் தன் கண்முன் இருப்பது போல பிரம்மையெல்லாம் ஏற்பட்டு அவனை அலைக்கழித்தது.அன்று கூட அபியின் நினைவில் விவேக் வர சொன்ன மீடிங்க்கிற்கு கூட போகாமல் அவள் அனுப்பிய குருஞ்செய்தியை படித்து வாய் முழுதும் பல்லாக அமர்ந்திருந்தவன் விக்கியிடம் வசமாக மாட்டிகொண்டான் .அவன் பிறகு இவனை தாளித்து தக்காளி சாதம் செய்துவிட்டான் ..இப்படியே போனால் பைத்தியம் ஆகிடுவேன் போல என்று நினைத்துக்கொண்டு,
வீட்டுக்குள் வந்து அயர்வுடன் சோபாவில் சாய்ந்தவனின் மொபைல் சிணுங்கியது..
பாக்கெட்டில் தேடி எடுத்து ஃபோனை காதில் வைத்து இவன் பேசும் முன்னர் மறுமுனையில்

“ஏன் கால் அட்டெண்ட் பண்ண இவ்வளவு நேரம்..?” என்று படபடத்த அபியின் குரல் அவனது காதுகளுக்கு வீணையின் நாதமாக ஒலித்தது.

“ஃபோனை எடுத்து பேச கொஞ்ச நேரம் கூட ஆகாதா?”
என்றான் சிரிப்புடன் ..

“நீயே ஃபோன் பண்ணுவன்னு நான் வெயிட் பண்றேன் தெரியுமா?”என்று குறைபட்டாள்.

“ஹே, இப்பதான் வீட்டுக்குள்ள நுழைஞ்சேன்…ஆனா ஆஃபீஸ்ல இருந்து கிளம்பும் போது தானே உங்கிட்ட பேசினேன் ..?”

“அது ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி”

“ஒரு மணி நேரம் தானே இது என்ன பெரிய விஷயம் ?”

“உன்னை மாதிரி ஒரு இன்சென்சிடிவ் இடியட் கிட்ட பேசுறதே வேஸ்ட்..
”என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டு..

“சரி அருண் நீ ரொம்ப பிஸியா இருக்க போல நான் வைக்கறேன் ,பை”என்று கூறிவிட்டு தொடர்பை துண்டிக்காமல் அவன் எதாவது சொல்லுவான் என்று காத்திருந்தாள்..ஆனால் அவனது பதில் அவளை மேலும் எரிச்சலூட்டியது..

“சரி அபி பை ,பிஸிலாம் ஒன்னும் இல்லை ,பட் ரொம்ப டயர்டா இருக்கு ,நல்லா தூங்க போறேன்..”என்றான் அவன்.

“குரங்கு ,குரங்கு ஃபோனை வைக்கறேன்னு சொன்னதும் சரின்னு சொல்லிட்டான் கொஞ்சம் கூட ஃபீலிங்க்ஸ்ஸே இல்லை “என்று அடிக்குரலில் அவனை திட்டினாள்…

“என்ன சொல்ற அபி எனக்கு சரியா கேக்கலை “

“ம்ம் நல்லா இழுத்து போத்திட்டு தூங்குன்னு சொன்னேன் ..”

“ஹே என்ன ஆச்சு ஏன் இப்படி எரிச்சலா பேசுற?”

“பின்ன கொஞ்சம் கூட ஃபீலிங்க்ஸ் இல்லாதவங்க கிட்ட வேற எப்படி பேசுவாங்கலாம்?”

“அது என்ன ஃபீலிங்க்ஸ் உங்கிட்ட இருக்கு ஆனா என் கிட்ட இல்லை ?எனக்கு ஒன்னும் புரியலையே கொஞ்சம் புரியறமாதிரி சொல்லுங்க மேடம் “
என்று அவளைக் கிடிக்கிப்பிடிகேள்வி கேட்டான் ..

“ஓ ஹீரோ சார் என்னை கார்னர் பண்ண பார்குறாரா? என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு,

“ஃபீலிங்க்ஸ் னா ஒருத்தி நம்மை மதிச்சி கால் பண்ணி இருக்காளே அவளை மதிச்சி பேசலாம் ங்கற ஃபீலிங்க்ஸ் கூட இல்லைன்னு சொன்னேன்..”என்றாள் வினயமாக..

அருண் கோபத்தில் பற்களை நறநறவென்று கடித்தான் .
“திமிரு புடிச்சவ,என்ன ஒரு ஆட்டிடியூட்..உன்னை சொல்ல வைக்கறேனா இல்லையா பாரு ..?”என்று மனதிற்குள் உறுதிபூண்டான் ..

அவனிடமிருந்து பதில் வராமல் போகவே அபி ,
“என்ன அருண் பேச்சையே காணோம் என்றாள்.

“பெரியவங்க பேசும் போது குறுக்க பேசினா அதுக்கும் எதாவது சொல்லுவீங்க அதான் அமைதியா கேட்டுக்கறேன்..” என்றான் ஏளனமாக

“கோச்சிகிட்டியா அருண்?”என்றாள் தயக்கமாக.

“இல்லா ரொம்ப கூலா இருக்கேன் ,சரி அப்புறம் பேச ஒன்னும் இல்லைன்னா வைக்கறேன் பை “என்றவன் அவளது பதிலுக்குக் காத்திராமல் டக்கென்று கட் செய்தான் .

அபி திகைத்துப் போனாள்.. “அருண் கடுப்பாகிட்டான் போல இப்ப அவனை எப்படி சமாதானம் செய்யறது?”டென்ஷனில் நகம் கடித்தாள்.

அருண் சோபாவில் கண்ணை மூடி சாய்ந்திருந்தான்,அப்போது அவனது மொபைலில் பீப் சத்தம் கேட்டது,வாட்ஸ் ஆப் குறுஞ்ச்செய்தி,

ஒரு சிறு குழந்தை முகத்தை பாவமாக வைத்துகொண்டு காதை பிடித்து தோப்புகரணம் போட்டு சாரி கேட்பது போல் ஒரு படம் ,அபி அனுப்பியது,

அதை அவன் கண்டுகொள்ளாமல் இருக்கவே ,மேலும் அதே ரீதியில் வரிசையாக மன்னிப்பு புகைப்படங்களாக அனுப்பத்தொடங்கினாள்,ஒருகட்டத்திற்கு மேல் அவனாலும் கோபத்தை இழுத்து பிடித்துவைக்க முடியவில்லை ...அவளுக்கு கால் செய்து “சரி மன்னிச்சிட்டேன் போதுமா ?போய் தூங்கு குட் நைட் ..”என்றான்.

“தாங்க் யூ அருண் ,யூ ஆர் தி பெஸ்ட்.ஐ லைக் யூ சோ மச் ,குட் நைட் பை..”என்றுவிட்டு வைத்தாள்.

லைக் யூ வா?சீக்கிரமே உன்னை லவ் யூ சொல்ல வைக்கறேன் ..”என்று மனதில் நினைத்தவாறு உறங்கிப்போனான் அருண்..

ஆஃபிஸில் அடுத்த புது ப்ரோஜெக்ட்டிற்கான அடிப்படை வேலைகளைத் தொடங்கி இருந்தனர், வால் மார்ட் என்னும் பெரிய சூப்பர் மார்கெட் செயின் கம்பனிக்காக ப்ராஜெக்ட் செய்ய இவர்களை அணுகியிருந்தனர்.

விவேக் ப்ரசன்டேஷன் தயாரிக்கும் பணியை அருணுக்கும் விக்கிக்கும் வழங்கி இருந்தான்.
“ இந்த ப்ராஜெக்ட் நம்ம கம்பெனிக்கு ரொம்ப முக்கியம், ப்ரசன்டேஷன் நல்லபடியா முடிச்சா தான் நமக்கு இந்த ப்ராஜக்ட் கிடைக்கும்” என்று சொல்லி இருந்தான் விவேக்… அவர்களுக்கு ஏனோ இந்த ப்ரசென்டேஷனை ஒழுங்காக செய்தால் தான் உங்களுக்கு இங்கே வேலை நிரந்தரம் என்று அவன் மறைமுகமாக எச்சரிப்பது போல் இருந்தது…

அருண் தன் வேலையை தொடங்க ஆஃபீஸ்ஸிற்கு சீக்கிரம் வந்து வால்மார்ட் கம்பனி பற்றிய விவரங்கள் ,ப்ராஜெக்ட் பற்றிய விவரங்களை ஆழ்ந்து படித்து அதில் மூழ்கிப்போனான் , சட்டென்று ஏதோ தோன்ற தலையை நிமிர்த்தி பார்த்தவன் எதிரே அபி அமர்ந்து அவனையே பார்த்துக்கொண்டிருப்பைதைக் கண்டு ஒருகணம் செயல் மறந்து திகைத்துப்போனான் ..அவள் இருப்பது நிஜம் போலவே இருந்தது , ஆனால் அபி எப்படி வர முடியும்..?அவள் தான் அடுத்த வாரம் வரை விடுப்பில் இருக்கிறாளே என்று பெருமூச்சுடன் நினைத்துவிட்டு ,
”பைத்தியம் முத்திடுச்சா?கடவுளே.” என்று தலையில் அடித்துக் கொண்டு ,திரும்ப வேலையில் ஆழ்ந்தான் .அப்போது அவனது மேசை மேல் இருந்த ஃபோன் ஒலிக்க எடுத்து
“ஹல்லோ அருண் ஹியர் “என்றான் .

“அது தெரியாதா ?உங்கிட்ட பேசதான் உன்னோட எக்ஸ்டென்ஷங்க்கு பண்ணுவாங்க ..”என்றது அபியின் கோபமான குரல் ,சட்டென்று தலை நிமிர்ந்து பார்த்தவன் அபியை அவளது இடத்தில் கண்டு ஆனந்தமாக அதிர்ந்தான் .

தன்னிருக்கையிலிருந்து எழுந்து அவளை நோக்கி விரைந்து சென்று,முகமெல்லாம் சிரிப்பாக “ஹாய்..”என்றான் நம்ப முடியாத அதிசயத்துடன்..
அதற்குள் அவள் தனது இருக்கையிலிருந்து எழுந்து ,

“என்ன ஹாய் ஓய்..? நான் வந்தா நீ சந்தோஷபடுவேன்னு நினைச்சா நீ கண்டுக்காம இருக்க ..இவ ஏன் டா வந்தாங்கற மாதிரி தலைல அடிச்சிக்கற? போ நான் ஊருக்கே திரும்பி போறேன் ..”என்று கோபமாக கிளம்பினாள்..

அவளை அவசரமாக தடுத்து,”அப்படி இல்லை அபி ,டெய்லி நான் பார்க்கற இடத்துல எல்லாம் உன்னோட உருவம் வந்து நின்னு என்னைப் பாடாப்படுத்துது அதனால உன்னை நிஜமா பார்த்தப்ப கூட எனக்கு இது உண்மையா இல்லை எப்பவும் போல என் கற்பனையில் தோன்றும் மாய பிம்பமான்னு குழம்பி போய்ட்டேன்..”என்றான்.
அவனது சமாதானத்தை கேட்டு சிறிது தயங்கி நின்றவள்..

“என்னமோ சொல்ற..இதெல்லாம் நம்புற மாதிரி இல்லையே”என்றாள் சந்தேகமாக..

“சத்தியமா அபி ,நான் பார்க்குற இடமெல்லாம் உன் உருவம் என்னை பார்த்து சிரிக்கற மாதிரி இருக்கும் தெரியுமா?ஆஃபிஸ்ல,கான்டீன்ல,வீட்டுல,கிச்சன் ல, ட்ரெஸிங்க் டேபிள் கண்ணாடில,ஏன் என் பெட்ல கூட என் பக்கத்துல படுத்திருக்குற மாதிரி இருக்கும் தெரியுமா?”

“ச்சீ,ச்சீ..இப்படி எல்லாம் நெனைச்சி பார்ப்பியா
?என்றாள் முகம் சிவக்க

“இதுக்குமேலயும் நினைச்சி பார்ப்பேன் ஆனா இப்போதைக்கு வேணாம்ன்னு விட்டுட்டேன்..”என்றான் குறும்பாக..

அதற்குள் அங்கே வந்த விக்கியும் பூர்ணாவும் அபியை பார்த்து “அபி…..”என்று ஆனந்த கூச்சலிட்டனர்..

“என்ன அபி, இப்படி திடீர்ன்னு வந்து ஷாக் குடுக்கற?”என்றாள் பூர்ணா..

“சும்மா தான் உங்க எல்லாருக்கும் சர்ப்ரைஸா இருக்கட்டும்ன்னு தான் சொல்லாம வந்தேன் ..”

“நல்ல வேளை வந்தீங்க அபி…இல்லைன்னா இங்க ஒருத்தன் சேதுவா மாறி இருப்பான்..”
என்று அருணை கலாய்த்தான் விக்கி..

“எப்படியோ..அபி வந்துட்டா.. நாம செலிபரேட் பண்ணவேண்டாமா?”
“என்ன பூர்ணா.. என்னமோ ஃபாரீன் போய்ட்டு வந்த மாதிரி ஃபீல குடுக்கற..?”
என்றாள் அபி சிரித்துக்கொண்டே..

“அபி ,பார்ட்டி பண்ண வாய்ப்பு கிடைக்கலைன்னா நாமா உருவாக்கிக்கணும்,அப்படி உருவாக்கின ஐடியா தான் இது..” என்று கூறி சிரித்தான் விக்கி..

“சரி எங்க போக போறோம்.. ?

“பார்பிக்கியூ நேஷன் ”
என்றான் விக்கி உற்சாகமாக ..

சென்னையின் பிரதான இடத்தில் அமைந்திருந்த அந்த உணவகத்திற்கு நம் நால்வர் அணி வந்துசேர்ந்தனர் .பணியாளர்களின் உற்சாக வரவேற்பை இன்முகத்துடன் ஏற்று அவர்களுக்காக முன்பதிவு செய்த இட த்தில் அமர்ந்தனர் .டேபிளின் மேலேயே கிரில் அடுப்பு வைக்க பட்டு விதவிதமான மசாலா தடவிய உணவுத்துண்டுகள் கம்பியில் கோர்க்கப்பட்டு..வரிசையாக அடுக்கப்பட்டிருந்தது.

அதற்கு மேல் அவரவர் விரும்பிய பானங்களையும் தனியாக ஆர்டர் செய்து கொள்ளலாம் …மேலும் பலவித உணவுவகைகள் பஃபே முறையில் இருந்தது.

அருண் அபியின் புறமாக சாய்ந்து அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக ..
“அபி உனக்கு குடிக்க எதாவது டிரிங்க் ஆர்டர் பண்ணட்டுமா ?என்று குறும்பாக கேட்க
அவள் அவனைப்பார்த்து முறைத்து ..
“இனிமேல் உன்கையால எதையும் வாங்கி குடிக்கறதா இல்லை “என்றாள் உறுதியாக.

கலகலப்பாக பேச்சும் சிரிப்புமாக நால்வரும் உணவருந்திக் கொண்டிருந்த போது ,திடீரென்று அந்த உணவகத்தில் பணிபுரியும் அனைவரும் இவர்களின் பக்கத்து டேபிளை சுற்றி நின்றுகொண்டு பின்னணியில் பிறந்த நாள் பாடல் இசைக்க கைத்தட்டி சேர்ந்து பாடியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.வந்திருந்த விருந்தினர்களில் ஒருவருக்கு பிறந்த நாள் போலும் ,
அந்த உணவகத்தின் சிறப்பம்சமாக வருகின்ற விருந்தினர்களில் யாருக்காவது பிறந்தநாள் ,திருமணநாள் ,மற்றும் ஏதேனும் முக்கியநாளாக இருந்தால் அவர்கள் இவ்வாறு பாடி வாழ்த்து சொல்லுவர் ..கேக் கூட வெட்டி கொண்டாடுவர்.இப்படி எல்லோரது கவனமும் இந்த ஆர்பாட்டங்களில் நிலைத்திருக்க அபி ஏதோ தோன்ற எதிர்புறம் திரும்பி பார்த்தாள் அங்கே விவேக் நின்று இவர்களைப் பார்த்துகொண்டிருந்தான் ,இவள் பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டு அவசரமாக அங்கிருந்து வெளியேறியது போல் இருந்தது..

அபி குழம்பிப் போனாள் ,அவள் கண்டது விவேக் தான் அதில் சந்தேகமில்லை ஆனால் அவன் அவளைக்கண்டதும் எதற்காக முகத்தை மறைத்துக் கொண்டு ஓட வேண்டும் ?
அபியின் குழம்பியமுகத்தை பார்த்த அருண் என்ன என்று விசாரிக்க அவள் அவனிடம் நடந்ததைக் கூறினாள்.

“விவேக்கா… இந்த மாதிரி இடத்துகெல்லாம் வர்றதுக்கு ஃபிரெண்ட்ஸ் வேணும் அவனுக்கு எங்க இருகாங்க?அதுமட்டுமில்லாம அவன் நம்மை பார்த்திருந்தா என்ன வேலை செய்யாம பார்ட்டி பண்ணிட்டு இருகீங்கன்னு எதாவது கடுப்படிச்சிட்டு தான் போய் இருப்பான்,சோ அது அவனா இருக்காது வேற யாராவதா இருக்கும் அபி..” என்றான் .

“இல்லை அருண் நான் நல்லா பார்த்தேன் அது விவேக் தான் ..”

“சரி அவனா தான் இருக்கட்டுமே இப்ப என்ன ?விடு அபி, இந்த நல்ல நேரத்துல அவனை எதுக்கு நியாபகப்படுத்துற..”
என்றான் அருண்.
அபி அப்போதைக்கு விட்டுவிட்டாலும் அவளுக்கு மனதிற்குள் உறுத்திக் கொண்டே இருந்தது,
அடுத்து நடக்க போவது முன்னரே தெரிந்திருந்தால் அருண் இப்படி அலட்சியமாக அபி கூறியதை புறந்தள்ளி இருக்கமாட்டான்..
தொடரும்
 
Top