Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீ நான் வாழவே-4

Advertisement

venba

New member
Member
ஹாய் தங்கம்ஸ்.... இதோ அடுத்த யூடி...
**************************************************************\
அத்தியாயம் நான்கு:

சூரியன் பளிச்சென்று முகத்தில் அறைய சர்ரென்று விலை மிகுந்த கார் ஒன்று அந்த வீட்டின் முன் நின்றது. அதில் இருந்து மெதுவாக இறங்கினான் இந்தர்.

நேற்று மாலை ஒரு போன் கால் மூலம் குகன் அவனது மனைவியும் குழந்தையும் ஈரோட்டுக்கு அழைத்து செல்ல சம்மதம் தெரிவித்து இருந்தான். அது அவனுக்கு பெரும் ஆச்சர்யத்தியை அளித்தது. அதற்குள் தங்களை மன்னித்து விட்டானா குகன்…

இல்லை என்றே மனம் கூறியது… சரி சொல்ல காரணம் பெரிதாக யோசிக்க ஒன்றும் இல்லை இந்தருக்கு. அதற்கு பின்னால் குகன் இனியா மீது வைத்திருக்கும் காதலே தெரிந்தது. அது வரையில் அவனுக்கு மகிழ்ச்சி தான்.

வீட்டிற்குள் அவன் வந்துவிட அங்கிருந்த லட்சுமி அம்மா அவனை வரவேற்றவர் உட்கார சொல்லி குடிப்பதற்கு டீ கொடுத்தார். இனியாவிற்காக இந்தர் காத்துக்கொண்டிருக்க, அங்கே
மேல் அறையில் கண்களைத் துடைத்துக்கொண்டிருந்தாள் இதழினியா.
அவளைக் கடந்துசென்ற குகன் குழந்தைக்கு தேவையான மிட்டன்ஸ் பைக்குள் வைத்துக்கொண்டிருந்தான். அவனவளின் அழுகையை அசட்டை செய்தவன் மேலும் எதுவோ எடுக்க அவளை கடக்க சட்டென்று அவனது கைகளைப் பிடித்தாள் இனியா.

குகன் அமைதியாக இருக்க, “ நான் எங்கேயும் போல. பிளீஸ் என்கிட்ட பேசு மித்து… “ என்று கெஞ்சினாள்.

குகன் அமைதியாகி போனான். இன்று மட்டுமல்ல… ஒரு வாரமாகவே அமைதி அமைதி தான். அவர்கள் காதலித்த 7 வருடத்தில் கூட குகன் கோவம் கொண்டு பேசாமல் இருந்தது இல்லை. சூழ்நிலையால் பேசாமல் இருந்திருக்கின்றனர் தவிர கோபம் எல்லாம் குகன் இனியாவிடம் காண்பித்தது இல்லை. இதுவே முதல் முறை.

அது அவளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த தாக்கத்தில் அழுகையில்,

“மித்து… “ என்று அவள் கண்ணீருடன் தேம்ப அவளை அப்படியே பொக்கிஷமாய் அள்ளி எடுத்துக்கொண்டான் குகன்.


மித்து என்று அதிர்ச்சியில் கத்தியவளின் அடுத்த வார்த்தை மித்து தனது வாயிற்குள் விழுங்கியிருந்தான்.

நொடிகள் நிமிடங்களாக இருவர்களின் இதழ்களும் பிரியும் நேரம் குகனின் மூச்சுக்காற்று அவளது நெற்றியில் மோதி முன் முடிகளை களைத்தது.

முத்தம் தந்த இனிமையில் கண்மூடியிருந்த இனியா சட்டென்று குகனின் புஜங்களை பட் பட் என்று அடித்தாள்.

அடிப்பது மட்டுமா… “போ போ எனக்கு நீயும் வேணாம்.. யாரும் வேணாம். என்கிட்ட பேசலல .. அதுவும் ஒரு வாரமா” என பினத்தியவளுக்கு முனுக்கென்று கண்ணீர் மீண்டும் வந்தது.

ஆளை இழுக்கும் அவளது கடல் போன்று விரிந்த கண்களில் தழும்பிய முத்துக்கள் போன்ற கண்ணீரை அப்படியே தன் உதடுகள் கொண்டு துடைத்தான் குகன்.

அவன் இதழின் ஈரம் பட்டவுடன் இனியா அமைதியாகி போக, அவனை கவர்ந்திழுக்கும் அவளது பெரிதான சிவந்திருந்த இதழ்கள் முத்தத்தினால் மேலும் மினுமினுக்க......அந்த உதடுகளை பெரு விரல் கொண்டு வருடியவன்

“அம்மாடி…. இதழ் மா” என்று ஹஸ்கி குரலில் அழைத்திட

இனியாவின் அகமும் புறமும் சட்டென சிலிர்த்திட்டது.

சிலிர்ப்பினால் எழும்பி குதித்திருந்த காது ரோமங்களை வருடியவன் அவளது ரோமங்களை செவிகளுக்கு பின்னால் சொருகி, ““என்னால முடியலை இதழ்… நீ என்ன காரணம் சொன்னாலும் உங்கள அங்க அனுப்ப என் மனசும் மூளையும் ஊகும்… சண்டித்தனம் பண்ணுதேமா…

நான் என்ன பண்ணட்டும் டீ இதழ்… அதான்… இந்த ஒரு வாரம் ரொம்ப ரொம்ப என் மனசையும் மூளையும் சாமதானம் பண்ண எடுத்துக்கிட்டேன்…

இப்போவும் அது 50% தான் ஒத்துக்குது… அதுக்குள்ள நீங்க கிளம்பிடுங்க. கீழே உங்க அண்ணன் வந்திருப்பான் கூட்டிட்டு போக…

வேற மாறி முரண்டுண அவ்ளோ தான் நான் எங்கேயும் அனுப்ப மாட்டேன்” என்று அழுகையால் சிவந்திருந்த காதுகளில் கிசுகிசுத்தவன் அப்படியே காதோடு அழுத்தி ஒரு அழுத்தமான முத்தம் பதித்து அவளை இறக்கி விட்டான்.

அவனை விட்டு பிரிவது அவளுக்கும் பெரிய வேதனையாக இருக்க அதனை தன் உதடுகள் கடித்து அடக்கியவள் மனதில் தனக்காக… தன்னுடைய மகிழ்ச்சிக்காக… காதலுக்காக என யோசிக்க யோசிக்க இனியாவின் நெஞ்சம் விம்மி அடங்கியது.

ஏறி இறங்கிய நெஞ்சை காண்கையில் குகனின் பார்வை கள்ளப்பார்வையாக மாற்றம் அடைய அவனது கண்களை கைகளால் பொத்தியவள்,
” தேங்க்ஸ் மித்து… ரொம்ப தேங்க்ஸ்… ஒரே ஒரு மாசம் தான். வந்துடுவேன். “என்று அவனது இதழ்களில் அவசரமாக இதழ் ஒற்றி பிரிந்தாள்..

ஊகும் பிரிய முனைந்தால் ஆனால் அதற்குள் அவளது கைகளைப் பிடித்த குகன் தன்னுடைய பாக்கெட்டிலிருந்து ஒரு செயின் எடுத்தான்.

அதில் இருந்த இதய வடிவில் இருந்த டாலர் இனியாவை வெகுவாக கவர்ந்திட ஓரெட்டு முன்வந்து அதனை ஆர்வத்துடன் பார்த்தாள்.

அவளை இன்னும் மெருக்கமாக மிக மெருக்கமாக அருகில் இழுத்தவன் அவளது கழுத்தில் அணிவித்து அவளது கழுத்தை ஆட்காட்டி விரலால் கோடிழுக்க.........

மீண்டும் இனியா உடல் சிலிர்த்து அடங்கியது.மனமோ அடங்காமல் சிலிர்த்துக்கொண்டு நின்றது.

சட்டென்று அவனது கைகளை பிடித்தவள் மித்து என செங்க்கொழுந்தாக வெக்கப்பட,

புன்னகையுடன் அவளை தன் நெஞ்சோடு அணைத்தவன்,” இது முக்கியமான செயின் இதழ். இதுல சென்சார் இருக்கு. நீ அங்க இருந்து வர வரைக்கும் இது உன் கழுத்தில இருக்கணும். அதே மாறி அப்பா கூப்பிட்டாங்க… அம்மா கூப்பிட்டாங்க… சித்தப்பா… பெரிப்பா கூப்பிட்டாங்கன்னோ கேட்டாங்கன்னோ பேபிய தனியா குடுக்காத… நீயும் தனியா போகாதா.. ஒரு மாசம் ஒரே மாசம் தான். ஆனா ஜாக்கிரதை டா இதழ்… என் உயிர் நீங்க ரெண்டு பேரும் தான்" என்று தனக்குள் அவளை பொத்திவைப்பதுபோல் இறுக்கி அணைத்தான்.

“அது என்னோட அம்மா அப்பா மித்து" என சொல்ல வந்தவள் வார்த்தைளை தனக்குள் விழுங்கினாள். அவனுக்காக இது செய்ய முடியாதா என்ற எண்ணம் வர நிமிர்ந்து அவனை பார்த்தவள்,
அவனது அகன்ற நெற்றியில் அழுத்தமாக எச்சில் படும்படி முத்தம் தந்தவள் ,” கண்டிப்பா மித்து.நான் வந்திட்ட பின்னாடி ஹாஸ்பிட்டல்ல ஜாய்ன் பண்ணுறது பத்தி பேசலாம்” என்று குழந்தையை நோக்கி நகர்ந்தாள்.

குழந்தையை தூக்கியவள் அவனுடன் கதவருகே வர, குழந்தையுடன் அவளை அப்படி இறுக்கி அணைத்தவன் உச்சிமுகர்ந்து,”இருந்துகுவல்லமா... என்னால அங்க வர முடியாது. ருத்ரன் அங்கதான் இருக்கான். இருந்தாலும் எனக்கு மனசு என்னவோ செய்யுதே அம்மாடி... “என்று அப்படியே பேச,

அவனது முதுகை வருடியவள் கண்களிலும் கண்ணீர் தேங்கி நின்றது. கடந்த காலம் அவனை பயமுறுத்தி வைத்திருப்பது அவளுக்கு புரிந்தது. அவர்களுக்கு ஏதேனும் நடந்துவிடுமோ என்ற பயம் அவனை விரட்டி அடிப்பது அவளுக்கு புரியாமல் இருக்குமா. ஆனால் அது தேவையில்லாத பயம் என்று சொல்லி புரியவைப்பதுவிட செயல்முறையில் புரியும் என்றே இனியா திடமாக நினைத்தாள். அதுவே மேலும் அவளை ஈரோட்டை நோக்கி செல்லத் தூண்டியது.

”ம்ம்ம் நாங்க நல்லா இருப்போம்.. லக்ஷ்மி மா ருத் அண்ணாகிட்ட இருக்கபோறாங்க தான.... அதுனால நீங்க உங்கள பார்த்துகோங்க மித்து... டெய்லி போன் பேசுவோம். “

“ம்ம்ம் பத்திரம் இதழ்மா...” என்றவனுக்கு மனசு பிசைந்தது. இனியாவின் சந்தோஷம் காண, இது வேண்டாம் என்று மறுக்கவும் முடியவில்லை அவனால் . பெரும் மன போராட்டத்தில் இருந்தவன் அவளுக்கு மீண்டும் முத்தம் வைத்து கையை இறுக்கி பிடித்து வெளியே வந்தான்.

குகன் மித்ரன், இதழினியா கையில் குழந்தையுடன் கீழே வர இந்தர் இருக்கையில் இருந்து எழுந்தான்.

அவனைப் பார்த்து சிரித்த இனியா குகனைப் பார்க்க குகன் முகத்தில் சிரிப்பு இல்லையென்றாலும் இறுக்கம் இல்லை என்பதே அவளுக்கு நிம்மதி தந்தது.

“கிளம்பலாமா” என்று இனியா அருகில் வந்து பேக் வாங்கிய இந்தர் குகனின் முகம் பார்க்க அவனுக்கே வருத்தமாக இருந்தது.

“இல்ல அது....” என்று இந்தர் என்னவோ சொல்ல ஆரம்பிக்க,

“பத்திரம் ரெண்டு பேரும்.. அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி நாங்க உங்கள தான் நம்புறோம். “ என்ற குகனின் வார்த்தைகளில் இந்தரின் மனம் சுணங்கியது.

ஆனால் அதனை முகத்தில் காட்டாது வலுக்கட்டாயமாக உதடுகளை இழுத்து சிரித்தவன், “அன்னைக்கு கொஞ்சம் ஏமாந்துட்டேன். இப்போ அப்படி இல்ல. ரெண்டு பேரும் என் பொறுப்பு” என்று குகனின் கைகளை அழுத்தி கூறியவன் இனியாவைப் பார்த்து போலாம் என்பது போல் தலை அசைத்தான்.

தன்னுடைய தங்கப்பொண்ணுக்கு முத்தம் பதித்த குகன் இனியாவின் கைகளில் அழுத்தம் குடுத்து கிளம்பினார்கள். லக்ஷிமா அவர்களை புன்னைகையுடன் வழியனுப்ப மூவரும் காரில் ஏறி கிளம்பினர்.

குடும்பத்தின் ஒற்றுமைக்காக என ஓநாய்கள் வாழும் காட்டிற்கு கன்றுக்குட்டியுடன் பசுமாடு செல்ல, மாட்டுத்தோள் போர்த்திய ஓநாய்களை மாடென நம்பி வழியனுப்பிவிட்டு கையறு நிலையில் நின்றது என்னவோ முரட்டு காளை.

தலைவியின் பின்னே செல்ல துடித்த கால்களையும் மனதையும் இழுத்த குகன் நினைவு ஆறு ஏழு வருடங்கள் முன் இதழினியாவைக் கண்ட நாளுக்கு சென்று முட்டி மோதி நின்றது.

வாழவே......
 
அப்போ இன்னும் இனியா உறவுக்காரய்ங்க ஜாதி வெறியோடத் தான் இருக்கானுங்களா...😱
இனியாக்கு இல்லை குழந்தைக்கு எதுவும் ஆகிடுமா... 🙁
இந்த தடவையாவது நம்பிக்கையை காப்பாத்துவானா இந்தர்...
 
Top