Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நெஞ்சுக்குள் நீ அத்தியாயம் 15

Advertisement

parvathi

Active member
Member
HERE WE GO WITH THE 15TH EPISODE. PLEASE BREAK UR SILENCE N LET ME KNOW UR FEEDBACK FRIENDS. THANKS TO AL FOR UR GENUINE SUPPORT.




அத்தியாயம் 15


" இப்பொழுது எங்கள் கல்லூரியின் தங்கமங்கை மிஸ் மதுராதேவியைப் பரிசு வாங்க அழைக்கிறோம். பல்கலைகழகத்தின் முதல் மாணவியாய் தேரச்சி பெற்று எங்கள் கல்லூரிக்கு பெருமை தேடித் தந்த மாணவி மதுராவை மேடைக்கு அழைக்கிறோம்."

மேடையிலிருந்து வந்த அறிவிப்பைக் கேட்டு கூட்டம் ஆரவாரமாய் கை தட்டியது.

என்னவோ தங்களுக்கே பரிசு கிடைத்ததைப் போல் மாணவ மாணவிகள் ஒருவர் கையை மற்றவர் குலுக்கிக் கொண்டனர். விசில் சத்தங்களும், வாழ்த்தொலிகளுமாய் அரங்கமே அல்லோலகல்லோலப்பட்டது. உற்சாகமிகுதியில் கார்த்திகாவும் வசந்தியும் சேர்ந்து மதுராவை அலாக்காய் ஓரடி மேலே தூக்கி விட்டனர்.

மதுரா விழியோரம் துளிர்த்த கண்ணீரை நாசூக்காய் கைக்குட்டையால் ஒற்றியபடி, ஒரு வித தடுமாற்றத்துடனேயே தான் மேடையேறினாள்.

தங்கத்தாலான பரிசுக் கோப்பையை நடுவர் அவள் கையில் கொடுத்து வாழ்த்தியபொழுது, தலைகுனிந்து ஏற்றுக் கொண்டாள், சிறு நன்றியுரைக்குப் பின் திரும்பி நடந்தவளின் பார்வை மேடை ஓரத்தில் கைகளைக் கட்டிக் கொண்டு சக ஆசிரியர்களிடமிருந்து சற்றே விலகி நின்றிருந்த ராஜீவ்வின் மீது பதிந்தது.

"கங்கிராட்ஸ் மது........"

அவனைக் கடந்து படிகளில் இறங்கிய பொழுது, மயிலிறகின் வருடலாய் கிசுகிசுத்த அவன் குரலில் மதுராவின் பார்வை சற்றே உயர்ந்து பின் தாழ்ந்தது.

நெஞ்சில் விவரித்துச் சொல்ல முடியாத உணர்ச்சிகள் பொங்கிப் பெருகின.

அந்த கணமே அவன் மார்பில் முகம் புதைத்து அழ வேண்டும் போல், இந்த சந்தோஷ தருணத்தை அவனுடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும் போல், இன்னும் என்னென்னவோ உணர்ச்சிகள் உள்ளத்தில் அலைமோத, கஷ்டப்பட்டு அவற்றையெல்லாம் அடக்கிக் கொண்டாள்.

அதற்குப் பின் வெற்றிக்களிப்பும் ஆரவாரமும் எல்லாம் அடங்கி, விடுதிக்கு திரும்பி இரவு உணவை முடித்துக் கொண்டு படுக்கையில் விழுந்த பொழுது, உறக்கம் வருவேனா என்றது.

அவள் புரண்டு புரண்டு படுப்பதைக கவனித்த கார்த்திகா கேலியாய் கேட்டாள்.

"என்னம்மிணி, முன்னே தான் இராக்கோழி மாதிரி பரீட்சைக்காகக் கணவிழிச்சுப் படிச்சே இப்போ என்ன வந்துச்சு? தூங்காமல் இந்தப் புரளு புரள்றே........"

"ப்ச்சு என்ன பண்ணச் சொல்றே? பழக்கதோஷம். தூக்கம் வர மாட்டேன்றது"

"பழக்கதோஷமா இல்லே பழகின தோஷமா?"

கார்த்திகா வேண்டுமென்றே இழுத்தாள்.

"ஏய் என்ன சொல்றே நீ?"

மதுரா சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள்.

" ம் சொன்னேன் சொரக்காய்க்கு உப்பில்லேன்னு.........".

கார்த்திகா எழுந்து வந்து அவளருகில் அமர்ந்து தன் கைகளை மதுராவின் கழுத்திற்கு மாலையாக்கினாள்

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்- பெண்ணே

நெற்றிப்பொட்டில் தீயை வைக்கிறாய்

கட்டிப் போட்டுக் காதல் செய்கிறாய்- முதுகில்

கட்டெறும்பைப் போல ஊர்கிறாய்

காதல் தானே இது காதல் தானே

கள்ளக் குரலில் பாடிய கார்த்திகா சட்டென்று காதருகில் குனிந்து கேட்டாள்.

"சொல்லு யாரந்த கள்ளன்? நம்ம ராஜீவ் சார் தானே?"

மதுராவின் கன்னங்களில் குபீரென்று பாய்ந்த வெட்கச் சிவப்பு அவளைக் காட்டிக் கொடுத்தது.

"நெனச்சேன். அன்னிக்கு கோயில்ல அவங்கம்மா உன் பேருக்கு அர்ச்சனை பண்ணப்பவே நெனச்சேன் இதிலே என்னவோ சூட்சுமம் இருக்குன்னு....அது சரியாப் போச்சு...... ராஜீவ் சாராவது தன் மனசை மறைக்கற வித்தை தெரியாமல் அவ்வப்போது மாட்டிக்குவார். ஆனால் நீ பெரிய நடிகையா போயிருக்க வேண்டியவடி.....என்ன அழுத்தம்? இத்தனை வருஷமா ஒரே அறையில் இருந்தும் எங்கிட்ட உன் காதலை மறைச்சுட்டியே...."

"மறைக்கனும்னு மறைக்கலே கார்த்தி.....அவரை மறக்கனும்னு எனக்கு நானே விதிச்சுகிட்ட கட்டுப்பாடு.........."

மதுரா சுருக்கமாய் தன் முன் கதையைச் சொல்ல, கார்த்திகா கன்னத்தில் கை வைத்துக் கேட்டாள்.

"ராஜீவ் சார் உண்மையிலேயே ரொம்ப க்ரேட்ப்பா.....அவனவன் சந்திச்ச நாலு நாள்லயே ஃபிகர் மடங்கலேன்னா கிளைக்குக் கிளை தாவற குரங்காட்டமா வேற ஃபிகருக்குத் தாவிப் போயிட்டேயிருக்கான். ஆனால் இவர் உன்னையே நெனச்சு இத்தனை வருஷமாக் காத்திருக்கார்ன்னா ஹி இஸ் சிம்ப்ளி க்ரேட் உன் தங்கை சொல்றதை தான் நானும் சொல்வேன் அப்பா ஆட்டுக்குட்டின்னு சென்ட்டிமென்ட் பார்த்து ஒரு நல்ல மனுஷனை இனிமேலும் நோகடிக்காதே. அவ கொடுத்தா இவ கொடுத்தான்னு உனக்கு ஏகப்பட்ட நோட்ஸ்ஸ¨ம்

ரெஃபரென்ஸ் புக்ஸ§ம் கொண்டு வந்து கொடுத்தேனே. எல்லாம் யார் கொடுத்தான்னு நெனக்கறே? ராஜீவ் சார் தான். நல்லாப் படிக்கற மாணவின்ற அக்கறையில கொடுத்தார்ன்னு அப்போ நெனச்சேன். இப்போ தானே தெரியுது மாணவியை மனைவியாக்கிக்கத் தான் அவர் ப்ளான் பண்ணினார்ன்னு.......ம் சோழியன் குடுமி எங்கேயாவது சும்மா ஆடுமா?"

" சீ.....போ கார்த்தி ரொம்ப டீஸ் பண்ணாதே....இதுக்கு பயந்து தான் நான் உன்கிட்ட எதுவும் சொல்லாமல் மறைச்சேன்...."

அன்றிரவு ராஜீவ்வைப் பற்றிய கனவுகளுடனேயே தூங்கிப் போனாள் மதுரா.

மறுநாள், வழக்கம் போலவே மருத்துவமனைக்குப் பணி புரியச் சென்ற பொழுது, மனசுக்குள் ராஜீவ்வைச் சந்திக்க வேண்டும் என்ற துடிப்பு நிறையவே இருந்தது.

சீனியர் மருத்துவரான அவனின் கீழ் பயிற்சி மருத்துவராய் தான் பணிபுரியப் போகும் அந்த இனிய தருணங்களை அவள் ஆவலுடன் எதிர்பார்த்தாள். ஆனால் அவனோ அவளைத் தெரிந்ததாகக் கூட காட்டிக் கொள்ளவில்லை.

புற நோயாளிகள் பிரிவில் பணிபுரிந்த பொழுதும், வார்டுகளைச் சுற்றி வந்து கேஸ் பார்த்தபொழுதும், அவனைப் பின் தொடர்ந்த மாணவர்களில் அவளையும் ஒருத்தியாகத் தான் பார்த்தானே தவிர, ரகசியமாய் ஒரு பார்வை பேச்சு சிரிப்பு

ஊகூம் எதுவுமேயில்லை.

மதுரா தவித்துப் போனாள்.

'என்ன ஆயிற்று ராஜீவ்விற்கு? ஏன் இந்தப் பாராமுகம்? இப்பொழுது உதாசீனப்படுத்துவது அவன் முறையா? அவளை பதிலுக்கு பதிலாய் பழி வாங்குகிறானா? இல்லையே அப்படியரு கீழ்த்தரமான குணம் அவன் இயல்பிலேயே இல்லையே........'

பலதும் எண்ணிப் பார்த்துக் கலங்கிக் கொண்டிருந்தவளின் வயிற்றில் பால் வார்த்தது போல் சேதி சொன்னாள் தலைமைச் செவிலி சுமதி.

"டாக்டர் ராஜீவ் அந்த ஹார்ட் பேஷன்ட் கருணாகரனோட கேஸ் ரிப்போர்ட் எடுத்துக்கிட்டு உங்களை வரச் சொன்னார் மேடம்......."

"அப்படியா? டாக்டர் இப்போ எங்கே இருக்கார்?"

முடிந்த அளவிற்கு இயல்பாய் இருக்க முயற்சி செய்தாள் மதுரா.

"ரெஸ்ட் ரூம்ல இருக்கார். உங்களை அங்கே தான் வரச் சொன்னார்."

சுமதி சொல்லிவிட்டு தன் வேலையைப் பார்க்க நகர்ந்தாள். நல்லவேளை அந்த சமயத்தில் கார்த்திகா மட்டுமே அவளருகில் இருந்தாள்.

"அம்மிணியைத தனியா சந்திக்கறதுக்கு கருணாகரனோட கேஸ் ரிப்போர்ட் தான் சாக்கா? ம் நடக்கட்டும் உங்க காதல் விளையாட்டு.....ஆல் த பெஸ்ட்...."

சிரித்துக் கொண்டே விடைபெற்ற தோழியை அனுப்பிவிட்டு ராஜீவ்வைச் சந்திக்கச் சென்றாள்

மதுரா. விரல் முட்டியால் கதவை நாசூக்காகத் தட்டிவிட்டு அவன் அனுமதி பெற்று உள்ளே நுழைந்த பொழுது, கைகளைக் கழுவி விட்டுத் துவாலையால் துடைத்துக் கொண்டிருந்த ராஜீவ் நிமிர்ந்தான்.

"கருணாகரனின் கேஸ் ரிப்போர்ட் கேட்டீர்களாமே? கொண்டு வந்திருக்கிறேன்"

சுவரைப் பார்த்துக் கொண்டு பேசியவளின் எதிரே வந்து நின்ற ராஜீவ் சிரித்தான்.

"ஹார்ட் பேஷண்ட் கருணாகரனின் கேஸ் ரிப்போர்ட் தான் வேணும்னா அதை நான் ஸிஸ்டரிடமே கேட்டிருக்கலாமே. என்னோட ஸ்வீட் ஹார்ட் உன்னை ஏன் கொண்டு வரச் சொல்கிறேன்?"

குறும்பு கொப்பளித்த அவனுடைய பேச்சில் கன்னம் சிவந்தவளைப் பார்த்து ரசித்துக் கொண்டே தொடர்ந்து பேசினான் ராஜீவ்.

"உன்னிடம் ஒரு விஷயம் சொல்லத் தான் அழைத்தேன் மது. அடுத்த வாரம் நான் அப்பா அம்மா எல்லாருமே மும்பை போறோம். என் தங்கை வித்யா கன்சீவ் ஆகியிருப்பதால் அவளை இங்கே அழைத்துக் கொண்டு வருவதாய் ப்ளான். வித்யாவைக் கூட்டிக் கொண்டு வந்த பின் அப்பாவும் அம்மாவும் உன் அப்பாவைச் சந்தித்துப் பேச நினைத்திருக்கிறார்கள். அதற்கு முன் உன் சம்மதம் கேட்டுவிடலாம் என்று தான் உன்னை அழைத்தேன்......"

சந்தோஷம் குழப்பம் பயம் எல்லாம் கலந்த கலவையாய் உணர்ச்சிகள் உள்ளத்தில் அலைமோத பிரமித்துப் போனவளாய் நின்றாள் மதுரா.









16
 
இந்த சந்தோஷ தருணத்தை அவனுடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும் போல், இன்னும் என்னென்னவோ உணர்ச்சிகள் உள்ளத்தில் அலைமோத, கஷ்டப்பட்டு அவற்றையெல்லாம் அடக்கிக் கொண்டாள்.

இவ்வளவு தவிப்பும் வேதனையும் ஏன், மது?


கொஞ்சம் இறங்கி வந்தா தான் என்ன....
 
நிச்சயமாக காலமும் சூழ்நிலையும் கனிந்து மதுவை இறங்கி வர வைத்து விடும் சிஸ்.உங்கள் கருத்தை தொடர்ந்து என்னுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி.நெஞ்சார்ந்த நன்றிகள்.💖🙏🏻
 
Top