Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பாவை பார்வை மொழி பேசுமே - மொழி 9

Advertisement

TNWcontestwriter049

Member
Member
மொழி 9

கண்களை கசக்கியபடி எழுந்து அமர்ந்த இஷாராவின் நெற்றியில் ஐஸ் கட்டிகளை திணித்ததை போல ஒரு குறுகுறுப்பு. தலையை தாங்கி பிடித்துக்கொண்டபடி எழுந்து அமர்ந்து அறையை சுற்றி பார்க்க " இது என்ன இடம்? நான் இங்க எப்டி" நெற்றியை தேய்த்தபடி சொல்லிவிட்டு திரும்ப கையில் நீளமான டம்ளருடன் நின்றாள் பெண் ஒருத்தி.



"எழுந்துட்டீங்களா..." அவள் பல நாள் பழகியவள் போல சிரித்த முகமாக கேட்க இஷிக்கு தான் நடப்பவற்றை புரிந்து கொள்ள ஏழாம் அறிவு தேவைப்பட்டது. "நீங்க யாரு..? இது யாரோட வீடு?" அவள் மீண்டும் கேட்க "நீ கோமால இருந்து எழுந்துக்கால. போதை தெளிஞ்சு எழுந்திருக்க" என்ற குரல் அறையின் வாயிலில் கேட்க பெண்கள் இருவரும் திரும்பி பார்த்தனர்



அருள் கைகளை கட்டியபடி சுவற்றில் சாய்ந்து நின்றவன் பொய்யாக இளிக்க உள்ளே கனன்றது அவளுக்கு. "ஏய்.. யூ நீ தான. நெனச்சேன் நீயா தான் இருப்பன்னு. என் அண்ணாகிட்ட நல்லவன் வேசம் போட்டு நடிச்சுட்டு என்ன கடத்திட்டு வந்துட்டல்ல..உன்ன" அவள் பற்களை கடிக்க "ஸ்ஸ்.. சும்மா காத்தாத. உன்ன கடத்த எதுக்கு உன் அண்ணன்கிட்ட போய் நடிக்கனும். நேத்து நைட்டு குடிச்சிட்டு மட்டையாகி என் மேல விழுந்தியே. அப்டி நீயே எங்கயாச்சும் விழுந்து கெடக்க போற. ஸ்கெட்ச் போட்டு தூக்குற அளவுக்கு நீ அவ்ளோ பெரிய ஆள் இல்லை ஒவரா பில்டப் பண்ணாம அத வாங்கி குடி" என்றவனை முறைத்தாள் இஷாரா.



" இதுல என்ன கலந்திருக்க?" என்று அவள் காட்டமாக கேட்க "இது லெமன் ஜூஸ் தான். நான் தான் கலந்தேன்" என்றாள் அந்த பெண். அவளை கண்கள் இடுங்க பார்த்தவள் "நீ கலந்தியா?" என்று சந்தேக பாணியில் கேட்க "ஆமா.. லெமன் சுகர் கொஞ்சம் ஹனி சால்ட் எல்லாம் போட்டு.. ஐஸ் வாட்.." என்று அவள் விவரிக்க அருள் பொறுமையை இழந்தவன் "காதுதுது... போதும்.. நீ அத என்கிட்ட குடு. காலேஜ்க்கு டைம் ஆச்சுல. கெளம்பு.. அவங்கள நான் பார்த்துக்குறேன்" பணிவுடன் சொல்ல அதை கவனித்தபடி இருந்து இஷி 'இந்த இடியட்க்கு சாஃப்டா பேசலாம் தெரியுமா' என்று எண்ணியபடி அவனை துளையிடும் பார்வை பார்த்தாள்.



காதம்பரி டம்ளரை கொடுத்துவிட்டு வெளியேற அதை கையில் வாங்கியபடி அவளை நெருங்கியவன் "ம்ம்.. குடி" என்றான். அதை காதில் போட்டு கொள்ளாதவளோ முகத்தை வெட்டி திருப்பியபடி "எனக்கு வேணாம்" என்றதும் அவளது முகத்தின் அருகில் குனிந்து தன்னை பார்க்க செய்தவன் " அப்போ.. சரக்கு அடிக்கிறியா?" புருவம் உயரத்தி கேட்டவனின் கண்களில் இன்னதென்று பிரிக்க முடியாத ரசாயனம் கொட்டிக் கிடந்தது.



ஒரு நிமிடம் அதில் முழ்க துடித்த மனதை அடக்கியவள் அவனது கையை தட்டிவிட்டபடி "வாட் யூ மீன்.. என்ன பார்த்தா குடிகாரியாட்டமா மேன் தெரியுது உனக்கு... இடியட்.." என்றவள் அவனை வாயில் வரும் வார்த்தைகள் அனைத்தையும் கொட்டி வருத்தெடுக்க "அப்போ நேத்து தான் உனக்கு ஃபர்ஸ்ட் டைமா?" என்றவனின் கேள்வியில் வாய் கோந்து தடவி ஒட்டியதை போல கப் சிப்பென்று மூடிக்கொண்டது.



"என்ன சொல்ற.. நேத்து நான் ஆர்.. ஆரஞ்ச் ஜுஸ் தான கேட்டேன்" என்றவளை பாவமாக பார்த்து வைத்தான் அருள் "மண்டு..மண்டு.. ஆரஞ்ச் கலர்ல இருக்கது எல்லாம் ஆரஞ்ச் ஜூஸா..அறிவில்ல படிச்ச புள்ள தான நீ?" கேட்டுவிட்டு அவளது நெற்றியில் தட்ட நெற்றியை தேய்த்துக்கொண்டாள் இஷாரா.



"உங்கள மாதிரி பணக்கார புள்ளைங்களுக்காக தான காக்டெய்ல் மோக்டெய்ல்ன்னு கலர் கலரா கண்டுபிடிச்சு இறக்கியிருக்கானுக. இதெல்லாம் தெரியாதவ எதுக்கு பப்புக்கு போன" அவளை கடிந்தவனிடம் அக்கறை விரவிக் கிடக்க முகத்தை தூக்கி பிடித்தபடி "அது..உன்ன.. ப்ச்.. உன்னால தான். உன்ன எப்டியாச்சும் இந்த வேலைய விட்டு தூக்கனும்னு.." அவள் முடிக்கவில்லை "தூக்கனும்னு.. ம்ஹூம்" என்றவன் தலையை இடம் வளமாக ஆட்டி சிரித்தான்.



"என்ன பொண்ணு நீ.. என்ன வேலைய விட்டு தூக்க நீ இந்த மாதிரி இடத்துக்கு போன சரியா போச்சா..என்ன விரட்டுறது இருக்கட்டும்.. உன்ன பத்தி யோசிச்சியா? ஐயோ உன்னோட தலை வலி.. நீ இந்தா.. இத குடி" என்றவன் டம்ளரை நீட்ட கையில் வாங்கி கொண்டவள் அவனை பார்க்க "அம்மா தாயே.. அது வெறும் லெமன் ஜூஸ் தான். குடிச்சா ரிஃபிரஷிங்கா இருக்கும். எல்லாத்துக்கும் அந்த முட்ட கண்ண உருட்டாத" என்றவன் மூலையில் கிடந்த சேரில் அமர்ந்தான்.



கிட்டத்தட்ட இருவருக்கும் பத்தடி இடைவேளை இருக்கும். இஷாரா ஜூஸை கடகடவென் வாயில் சரித்தவள் வாயை புறங்கையால் துடைத்தபடி "நேத்து.. வேற எதுவும்?" தயங்கியபடி கேட்க "ஆமா யாரு அந்த ப்ளாக் ப்ளேசர்?" கேள்வியை முன் வைக்க "ப்ளாக் ப்ளேசர்?!" என்று குழம்பி போனாள் இஷாரா. அவளது குழப்பம் தீர்க்கும் முயற்சியில் இறங்கினான் அருள்.



வண்ண நியான் விளக்குகள் நான் நீ என போட்டா போட்டியுடன் பளபளக்க அவற்றை வியந்து பார்க்கும் மனநிலையில் இல்லாத அருள் உள்ளே நடந்தான். "எங்க இவ?" என்று கண்களால் மொத்த பப்பையும் அலசியவன் அவளை ஒரு மூளையில் கண்டுகொண்டான்.



ஆனால் அவன் பார்த்த காட்சி அவனது தாடையை இறுக செய்தது. கருப்பு நிற பிளேசர் அணிந்திருந்தான் அவன். இஷியின் அனுமதியின்றி அவளது கைகளை பற்றியிருக்கிறான். அவளோ சுயநினைவு தப்பியவளாக இருக்க அவனிடம் கையை விடுவிக்க போராடுவது அவனது கண்களுக்கு நன்றாக தெரிந்தது.



சட்டையின் ஸ்லீவை மடித்தபடி இஷியின் டேபிளை நெருங்கியவன் வந்த வேகத்தில் அந்த ஆடவனின் நெஞ்சில் கை வைத்து தள்ள.. தள்ளாட்டத்துடன் தடுமாறி அவன் ஒரு புறம் விழ இஷியோ மறுபுறம் மயங்கி சரிய அவளை நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான் அருள்.



அதுவரை அமைதியாக கேட்டவள் "யூ.. யார கேட்டு மேன் என்ன ஹக் பண்ண நீ?" முக்கை விடைத்தபடி அவள் முறுக்கிக்கொள்ள "மேடம்.. அகேன்.. அகேன்.. டெல்லிங்.. உனக்கு அவ்ளோ சீன் இல்ல. அஸ் அ பாடி கார்ட் உன்ன காப்பாத்த என்னால ஆன முயற்சிய செஞ்சேன். அவ்வளவே" கையை உயர்த்தி தலை தாழ்த்தி சொன்னவனை முறைப்பதை தவிர வேறு வழி இல்லை இஷியிடம்.



"அப்றம் என்ன ஆச்சு?" அவள் மேலும் அறிந்துகொள்ள கேட்க "அப்றம் என்ன.. கையில் மிதக்கும் கனவா நீன்னு உன்ன தூக்கிட்டு வந்து கார் பின் சீட்ல சேர்க்குறதுக்குள்ள செத்து போன என் பாட்டன் வர கண்ணு முன்னாடி வந்துட்டு போயிட்டான். எம்மா... என்னா கனம்" சொல்லிவிட்டு கைகளை உதறியவன் அவளை பார்க்க முதலில் முறைத்தவள் "உன்ன" என்றபடி கையில் வைத்திருந்த டம்ளரை அவனை நோக்கி எறிய அதை லாவகமாக கேட்ச் செய்தவன் "ஏன் இந்த கொலை வெறி. உன்ன கஷ்டப்பட்டு ஃபைட் பண்ணி தூக்கிட்டு வந்ததுக்கா? இல்ல.." என்றவன் கீழ் உதட்டை கடித்தபடி அவளை ஓர பார்வை பார்க்க தலை முடியை காதோரம் ஒதுக்கியவள் "உன் மூஞ்சு" என்றபடி திரும்பி கொண்டாள்.



அருள் அங்கிருந்து எழுந்தவன் " உனக்கு நல்லா நியாபகம் இருக்கா நீ ஆரஞ்ச் ஜுஸ் தான் ஆர்டர் பண்ணியா?" இம்முறை தீவிர முக பாவத்துடன் கேட்க "ஆமா" என்றபடி தோளை ஏற்றி இறக்கினாள் இஷாரா. அவளது பதிலை காதில் வாங்கிக் கொண்டவன் "ம்ம்... அந்த கப்போர்ட்ல காதுவோட டிரஸ் இருக்கு. உனக்கு செட் ஆகுறத எடுத்து சேஞ்ச் பண்ணிக்கோ. உன்ன வீட்டுல ட்ராப் பண்ணிடுறேன்" என்றவன் அவளது தலையசைப்பை பெற்றபடி அங்கிருந்து வெளியேற இஷி போகும் அவனை இன்று தான் முதல் முறையாக பார்ப்பதை போல பார்த்தாள்.



"இவன் கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலையே" என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவள் எழுந்து கப்போர்டை திறந்து கையில் சிக்கியதை எடுத்துக்கொண்டு குளியலறை புகுந்தாள்.



உடையை மாற்றிவிடும் ஹாலுக்கு வந்தவள் கண்களால் அவனை தேட "மாமாவ தேடுறீங்களா?" என்றது ஒரு சிறு பெண்ணின் குரல். குரல் வந்த திசையில் திரும்பி பார்க்க விசித்ரா தான் பள்ளி சீருடையுடன் சோஃபாவில் அமர்ந்திருந்தவள் "மாமா கார் எடுக்க போயிருக்கு.. உங்கள வெயிட் பண்ண சொல்லிட்டு போச்சு." சிரித்த முகமாக சொல்ல அந்த சிரிப்பு அவளையும் தொற்றிக்கொண்டது.
விசி அமர்ந்திருக்கும் சோஃபாவின் அருகில் காலியாக கிடந்த இடத்தில் அமர்ந்தபடி "அதுவரைக்கும் நீ எனக்கு கம்பெனி குடுக்குறியா.. உன் பேர் என்ன?" கன்னம் தாங்கியபடி கேட்க "விசித்ரா...விசின்னு கூப்பிடுவாங்க..உங்க பேரு.." என்றதும் "வாவ் நைஸ் நேம்..நான் இஷாரா.. இஷின்னு கூப்பிடுவாங்க" என்றவள் பேச்சை தொடர்ந்த விசித்ராவுடன் ஒரு அழகான நட்பை ஏற்படுத்திக்கொண்டாள். அதற்குள் அருள் காருடன் வர விசியிடம் விடைபெற்று காரில் ஏறிக்கொண்டாள் இஷாரா.



காரை மெதுவாக செலுத்தியவன் பேசாமல் இருக்க அவனை மிரர் வழியே பார்த்தபடி வந்தவள் "தாங்க்ஸ்" என்றாள். அவன் அவளது வார்த்தை காதை அடைந்ததும் ரிவியூ மிரரை பார்த்தவன் "உன் பார்த்துக்க எனக்கு சம்பளம் தராங்க... அது போதும் தாங்க்ஸ்லாம் அதிகம். ஆன்.. அப்றம் இந்த மாதிரி நேரத்துல உன்ன உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறது சரியா இருக்காதுன்னு தான் என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன். தப்பா எடுத்துக்காத ம்ம்" என்றவன் ரோட்டில் கவனத்தை வைத்தான்.



சிறிது நேர பயணத்திற்கு பிறகு இஷாரா வீடு வந்து சேர்ந்தவள் கீழே இறங்கி அவனை பார்த்தவள் புன்னகைக்க அவனும் பதில் புன்னகை செய்தவன் காரை பார்க் செய்ய பறந்தான். நடப்பவற்றை மேற்கூரையில் இருந்து பார்த்தபடி இருந்த பத்மாவதியின் முகம் கோபத்தில் கன்றி சிவந்தது.



மாலை நேர சூரியன் மேற்கில் பளிச்சிட தார் சாலையில் வைரம் பதித்ததை போல கானல் நீர் காண்பவர் யாவரையும் ஒரு நிமிடம் திணற செய்வதாக இருந்தது. சாலையின் ஓரத்தில் தோழி ஒருத்தியுடன் சுவாரஸ்யமாக உரையாடிபடி நடந்து சென்றாள் காதம்பரி.



"ஹேமா.. நான் சுஷ்மிய பார்க்க போறேன். நீ வரியா?" என்று கேட்க ஹேமா என்பவளோ "இல்ல காது.. நான் இன்னிக்கு டியூஷன் டைமிங் மாத்தியிருக்கேன். பிள்ளைங்க வெயிட் பண்ணுவாங்க. நான் இப்போ வீட்டுக்கு போனா தான் சரியா இருக்கும் டி. நீ போயிட்டு வா. சுஷ்மிதா ஏன் இன்னிக்கு காலேஜ்க்கு வரல காது" என்றாள்.



"தெரியலையே..நைட் கூட என்கிட்ட நல்லா தான் பேசிட்டு வச்சா.. என்ன ஆச்சோ.போய் பார்க்கனும்" என்றவள் நிமிர அவளுக்கு முன் வேகமாக வந்து நின்றது ஒரு உயர் ரக கார். கண்களை அகலமாக விரித்த தோழிகள் இருவருக்கும் இதயம் தொண்டையில் துடிக்க முதலில் சுதாரித்த ஹேமா "யோவ்.. அறிவில்ல. அதான் அவ்ளோ பெரிய ரோட் இருக்குல்ல. அத விட்டுட்டு இங்க வந்து ஏத்துற." என்று கத்த துவங்க காரில் இருந்து கூலாக கூலர்ஸ் அணிந்தபடி இறங்கினான் ஹர்ஷா.



ஹேமா அவனை முறைக்கு காதுவோ "ஹர்ஷா.." என்றாள் உற்சாகமாக. அவளது உற்சாகத்தை கண்டுகொண்ட ஹேமா அமைதியாக பார்த்தபடி "உனக்கு தெரிஞ்சவரா காது? " என்றாள். காதம்பரி தலையை வேகமாக அசைத்தவள் "என்னோட ஃபிரண்ட் தான் ஹேமா..நீங்க எங்க இங்க" ஹேமாவிடம் தொடங்கி ஹர்ஷாவிடம் முடித்த காதுவின் கால்கள் தரையில் இல்லை.



"நான் கவின பார்க்க போயிட்டு இருந்தேன். வழியில உன் பார்த்தும் நிறுத்தாம போக முடியுமா..சோ..." என்றவன் தோளை ஏற்றி இறக்க ஏனோ ஹேமாவிற்கு ஹர்ஷாவின் தோற்றமும் சைகையும் அவனது பார்வையில் சொட்டும் ரசனையும் அவ்வளவாக பிடித்தமில்லை. அவள் அவனை ஸ்கேன் செய்ய "நானும் அங்க தான் போறேன்" என்று குதூகலித்தாள் காதம்பரி "அப்போ வா நானே உன்ன ட்ராப் பண்ணிடுறேன்" என்றவனை இடைமறித்தாள் ஹேமா.



" இல்ல.. நாங்க ஆட்டோல போயிக்கிறோம். நீ வா காது" என்றவள் அவள் கையை பிடித்து இழுக்க "நீ வரலன்னு சொன்ன?" என்று மொத்தமாக உடைத்தாள் காதம்பரி. ஹேமா ஹர்ஷாவை பார்த்தபடி சமாளிப்பாக இளித்தவள் "நான் எப்போ அப்டி சொன்னேன். எனக்கும் சுஷ்மிதாவ பார்க்கனும். நம்ம ஒன்னவே போகலாம்" என்றவள் கண்களால் ஜாடை காட்ட அதை புரிந்து கொள்ளும் மனநிலையில் தான் காதம்பரி இல்லை.



ஆனால் ஹர்ஷாவின் கவனத்தை அது ஈரத்துவிட்டிருக்க "என்ன காது உன் ஃபிரண்ட்க்கு என் மேல நம்பிக்கை இல்ல போல? " புருவம் உயர்த்த காதம்பரி "ச்சே.. ச்சே.. அப்டிலாம் இருக்காது ஹர்ஷா.. என்னடி உனக்கு ஹர்ஷா மேல நம்பிக்கை இல்லையா?" அவள் வெகுளியாக கேட்டு வைக்க தலையில் அடித்துக்கொள்ளலாம் போல இருந்தது அவளுக்கு.



" ஆல்ரைட் மிஸ் ஹேமா.. உங்களுக்கு டவுட் இருந்துச்சுன்னா நீங்களும் எங்க கூட வாங்க. பயப்படாதீங்க. நான் காதுவ கடுச்சு ஒன்னும் சாப்பிடுற மாட்டேன் " என்றவன் கார் கதவை திறந்து விட முதலில் ஏறிக்கொண்டாள் காதம்பரி. அவளை முறைத்தபடி அவளுக்கு அருகில் ஹேமா அமர்ந்து கொள்ள கார் அப்பார்ட்மெண்டை நோக்கி பறந்தது.

 
பாருடா இஷிக்கு இப்போ தான் அருள் மேல் நம்பிக்கை வந்து இருக்கு... ஆனா இந்த பத்மா எதுக்கு இப்படி முறைச்சிட்டு இருக்காங்க.... காது நீங்க கவின் சுமி க்கு ஹெல்ப் பண்ணுற மாதிரி தெரியல ஹர்ஷாக்கு தான் ஹெல்ப் பண்ணிட்டு இருக்க
 
Top