Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 27

Advertisement

parvathi

Active member
Member
Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE 🙏🏻


அத்தியாயம் 27

முரளி உண்மையிலேயே அதிர்ந்து தான் போனான். அவன் விழிகளில் ஆச்சரியமும் அதிர்ச்சியும் வெளிப்படையாகவே தெரிந்தது.



இவளா? அன்று தியேட்டரில் அவனை அவமானப்படுத்திய ராதாவையா பெண் பார்க்க வந்திருக்கிறான்? போயும் போயும் அந்த திமிர் பிடித்தவளையா? சே! பேசாமல் வெளிநடப்பு செஞ்சிடலாமா?

மனம் பலவாறாக யோசித்துக் குழம்பினாலும் பார்வை பருந்தாக ராதாவை அவள் அழகை பருகி ரசித்தது.



'வாவ்! என்னமா இருக்கா?'

அதிர்ந்த அந்த மனநிலையிலும் அவன் மனவக்ரம் அவனைவிட்டுப் போகுமா என்ன?



ராதா அவனைப் பார்த்த பார்வையில் தெரிந்த கோபமும் வெறுப்பும் நல்லவேளை புராணகாலத்து கண்ணகியாய் அவள் இல்லாததால் தப்பித்தான் முரளி.



ஒரு கணம் ஒரே கணம் தான் என்னமாய் சுதாரித்துக் கொண்டாள் அவள்?

முகத்திலிருந்த வெறுப்பையும் கோபத்தையும் எப்படித்தான் அவளால் மலர்ச்சியாய் மாற்ற முடிந்ததோ?

மாற்றியதோடல்லாமல் கைகுவித்து வணங்கியவளின் முகத்தில் தெரிந்த ஏளனம் .

உனக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா? என்கிறார் போல அந்த பாவனை…



முரளிக்கு அவமானத்தில் முகம் சிவந்து போக தலை குனிந்து கொண்டான்.

வலுகட்டாயமாக அழைத்து வந்த பெற்றோர்களின் மீது கோபம் வந்தது. எழுந்து ஓடி விடத் துடித்த கால்களையும் மனதையும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான்



"உட்காரும்மா…நின்னுன்டேயிருக்கியே…"



கௌரியின் குரலில் ராதா சோபாவின் நுனியில் பட்டும்படாமல் அமர்ந்தாள்.



மதிப்பிற்குரிய ஒரு கல்லூரி முதல்வரின் பிள்ளையா இந்த முரளி? எப்பேர்ப்பட்ட மனிதருக்கு எப்படிப்பட்ட பிள்ளை?

மனம் ஆச்சரியத்தில் மருகிக் கொண்டிருந்தது.



"என்ன படிச்சிருக்கே?"

"பி காம்"

"எந்த காலேஜ்?



இந்த மாமி என்ன பெண் பார்க்க வந்தாளா இல்லே வேலைக்கு ஆள் சேர்க்க வந்தாளா?



ஓரமாய் ஒதுங்கி நின்றிருந்த சந்தியாவிற்கு எரிச்சலாக வர, ராதாவோ குரல் அதிராமல் தான்படித்த கல்லூரியின் பெயர் சொல்ல,கௌரியின் விழிகள் வியப்பை காட்டின.



"அந்த காலேஜா? ஸ்ட்ரைக்னு பொம்பளைப் பிள்ளைங்கலாம் அமர்க்களம் பண்ணினாங்களே.கலாட்டா பண்ணினதா பேப்பர்ல கூட செய்தி வந்துதே.ஏண்டிம்மா நீயும் ஸ்ட்ரைக்ல கலந்துண்டியா?"



ராதா பதில் சொல்லும்முன் வெங்கட்ராமன் குறுக்கிட்டார்.



"கௌரி அநாவசிய கேள்வியெல்லாம் ஏன் கேட்கறே ?.நாம இங்கே பொண்ணு பார்க்கத் தான் வந்திருக்கோம்.இன்டர்வ்யூ பண்றதுக்கில்ல. பொண்ணுங்கல்லாம் கல்யாணத்துக்கு கன்டிஷன் போடற காலத்துல நீ என்னமோ விசாரணை கமிஷன் வைக்கற மாதிரி கேள்வி கேட்கறே?"



வெங்கட்ராமனின் பேச்சு கௌரியை கோபப்படுத்த,

அந்நியமனுஷாள் எதிர்க்க என்னை அவமானப்படுத்தனும்னு எத்தனை நாளா காத்துண்டிருந்தேள்? …என்று கேட்கும் பாவனையில் அவரை முறைத்துவிட்டு பதில் சொன்னாள்.



"இல்லன்னா அந்த காலேஜ் பொண்ணுங்க கொஞ்சம் போல்டுன்னு வெளியில பேச்சிருக்கு அதான் விசாரிச்சேன்.இது ஒரு தப்பா?"



கௌரி நீட்டி முழக்கவும், ராதா சட்டென்று பதில் சொன்னாள்.



"நீங்க விசாரிச்சதில் தப்பேயில்லை மாமி. ஸ்ட்ரைக்னு ஆர்ப்பாட்டம் பண்ற பொண்ணு குடும்பத்துக்கு நானும்அடங்கி ஒத்து வருவாளானு நீங்க யோசிக்கறது நியாயம் தான்.ஆனால் ஸ்ட்ரைக்ல கலந்துக்கலேன்னாலும் துணிச்சலான போண்ணு தான்.ஏன்னா காலம் அப்படியிருக்கு.டீசென்டா ட்ரஸ் பண்ணின்டு சுத்தற பொறுக்கிங்க கிட்டருந்து தங்களை பாதுகாத்துக்க பொண்ணுங்க இன்னிக்கு துணிச்சலா தைரியமா இருக்க வேண்டியது அவசியம்."



இதைச் சொல்லும் பொழுதே ராதாவின் பார்வை சற்றே உயர்ந்து முரளியை வெட்டவா குத்தவா என்று கூறு போட, முரளி நெருப்பில் நிற்பது போல் தவித்தான். மேற்கொண்டு எதுவும் சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில் வியர்த்து போனான்.அதனால் நெற்றி வியர்வையை கைகுட்டையால் ஒற்றியபடி வெங்கட்ராமனிடம்

"போகலாமா? "என்று மெதுவாக கேட்க, அவர் யோசனையுடன் திரும்பினார்.



அவர் ராதாவையும் அவனையும் மாறி மாறி பார்த்த பார்வையில் என்ன இருந்தது?



"அப்போ நாங்க கிளம்பறோம்.எங்களுக்கு இந்த சம்பந்தம் கூடி வந்தால் சந்தோஷம்.நீங்களும் உங்க குடும்பத்தில் கலந்து பேசிட்டு எங்களுக்கு நல்ல தகவலா சொல்லுவிங்கனு நம்பறேன்."



"என்னது?"



வெங்கட்ராமனின் சம்மதத்தில் அதிர்ந்து போனது முரளியும் கௌரியும் மட்டுமில்லை.ராதாவும் தான்.

தனக்கு சம்மதமில்லை என்று ராதா வெளிப்படையாக சொல்லவில்லை தான்.ஆனால் தன் முகபாவனைகளில் அதை வெளிப்படுத்தியவளுக்கு எத்தகைய ஏமாற்றம்? ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு புரொபஷர் ஒன்றும் முட்டாள் இல்லையே?



ராதா மனம் குமுறினாள். கண்ணோரங்களில் கண்ணீர் தேங்கி கன்னங்களில் வழிய காத்திருந்தது.



"எப்பவுமே இன்ஸ்டென்டா ரீயாக்ட் பண்றது தான் என் ஸ்பாவம்.அதனால தான் என் முடிவை இங்கேயே உடனேயே சொல்லிட்டேன்.சுபஸ்யம் சீக்கிரம்னு பெரியவா சொல்லுவா.அதனால கல்யாணத்தை சீக்கிரமா சிம்பிளா கோவில்ல வெச்சு நடத்தனும்றது என் ஆசை. உங்க பொண்ணு மட்டும் எங்காத்து மாட்டுப்பொண்ணா வந்தால் போதும்.

மத்தபடி சீர் வரதட்சணைனு எந்தவித எதிர்பார்ப்பும் எங்களுக்கு இல்லை."



மகனுக்கும் மனைவிக்கும் கூட சம்மதம் தான் என்ற ரீதியில் வெங்கட்ராமன் சாமர்த்தியமாய் பேச, சுந்தரம் பிரமித்துப் போனார். இந்த சம்பந்தம் இவ்வளவு எளிதாய் கூடிவரும் என்று அவர் கனவு கூட கண்டதில்லை.



"உங்க சம்பந்தம் கிடைக்க நாங்க கொடுத்து வெச்சிருக்கனும் "

என்றபொழுது சுந்தரத்தின் குரல் தழுதழுத்தது.



"நோ..நோ..உங்க பொண்ணை மருமகளா அடைய நாங்க தான் கொடுத்து வெச்சிருக்கனும். ஆ…ஒரு சின்ன வேண்டுகோள் நான் ராதாவிடம் கொஞ்சம் தனியா பேசலாமா அஃப்கோர்ஸ் நீங்க அனுமதிச்சால்…"



வெங்கட்ராமன் தயக்கத்துடன் கேட்க சுந்தரம் நிர்மலமாய் சிரித்தார்.



"உங்க பெண்ணோட பேசறதுக்கு உங்களுக்கில்லாத உரிமையா?"



மறைமுகமாக சுந்தரம் சம்மதம் சொன்னதை கேட்டு ராதாவின் மனம் பதறியது.அதனாலேயே வெங்கட்ராமனிடம் தனித்துப் பேசும் பொழுது தன் சம்மதமின்மையை அவரிடமாவது வெளிப்படுத்திவிட வேண்டும் என்ற தீர்மானத்துடன் அவரை பின் தொடர்ந்தாள்.ஆனால் அவர் முகம் பார்த்து தன் முடிவைச் சொல்ல அவளுக்கு வாய் வரவில்லை.அவரே தான் முதலில் பேசத் தொடங்கினார்.



"உனக்கு முரளியை முன்பே தெரியுமாம்மா?"



"ம்…"

ராதா வெறுமனே தலையசைத்தாள்.



"அவனைப் பற்றி எல்லா விவரமும் உனக்கு தெரியும்னு சித்த முன்னால நீ ஜாடையா பேசினப்பவே நான் புரிஞ்சுண்டேன்மா. இருந்தும் கல்யாணம் பத்தி ஏன் பேசினேன்னு உனக்கு ஆச்சரியமாத் தானிருக்கும். நான் அவனை பெத்தவன்மா.என் கடமையை செய்யனும் இல்லையா? சின்ன வயசுலருந்து அவனை அவங்கம்மா செல்லமாவே வளர்த்துட்டா. நானும் கண்டிக்காமல் விட்டுட்டேன்

இப்போ கண்டிச்சும் பலனில்லை.அடிச்சு திருத்த வேண்டிய வயசுல அடிச்சு திருத்தாமல் இப்போ இந்த தள்ளாத வயசுல அவனால அவஸ்தைபட்டுட்டிருக்கேன்.இந்த நிலைமையில தான் உன்னை பார்த்தேன் என்னால முடியாதது உன்னால முடியும்னு நம்பினேன்.ஆமாம்மா ஒரு கால்கட்டு போட்டுட்டா அதுவும் உன்னை மாதிரி ஒரு பொண்ணை அவனுக்கு மனைவியாக்கிட்டா அவன் நல்லவழிக்கு வந்துடுவான்னு முழு மனசா நம்பினேன்.

என் நம்பிக்கையை நிறைவேற்றுவாயா ராதா?"



கைகளை கூப்பி வணங்கி அவள் சம்மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் மகன் அப்படியாவது திருந்த மாட்டானா என்ற கவலையிலும் வேண்டியவரைப் பார்த்து பதட்டத்துடன் பின்வாங்கினாள் ராதா.



"வேண்டாம் சார் வேண்டாம். என்னை நம்பாதிங்க.நான் சாதாரணமானவ தான்.எதிர்காலத்தைப் பற்றி கனவுகளும் ஆசைகளும் இருக்கற சாதாரண பொண்ணு.உங்க பிள்ளைக்காக என் வாழ்க்கையை பணயம் வைக்க சொல்றிங்களே. இது நியாயமா?"



"நியாயம் இல்ல தான்.அலைகடல்ல தத்தளிக்கறவன் ஒரு துரும்பை பிடிச்சுண்டு கரைசேர்ற மாதிரி உன்னை வெச்சு கரையை அடைஞ்சுடலாம்னு நெனச்சேன்மா."



"இல்ல சார் வேண்டாம்.நானே அதில் மூழ்கிடுவேன்.ப்ளீஸ் உங்களை கெஞ்சிக் கேட்டுக்கறேன்.என்னை விட்ருங்க.என் மேல நம்பிக்கை வெச்சு ஏமாந்து போகாதிங்க."



ராதா விம்மி அழவும்,வெங்கடராமன் கலங்கிய தன கண்களையும் துடைத்து சுதாரித்துக் கொண்டார்.



"இட்ஸ் ஓகேம்மா.இது தான் உன் முடிவுன்னா நான் வற்புறுத்த மாட்டேன். உங்கப்பாவிடமும் நீயே உன் முடிவை சொல்லிடும்மா.பாவம் அவர் ஆசையை நான் மறுத்ததாக இருக்கக் கூடாது. "



கெஞ்சும் பாவனையில் சொல்லிவிட்டுச் சென்றவரை திகைப்புடன் பார்த்தாள் ராதா.

அப்பாவையும் பாட்டியையும் சமாளிப்பது

சாதாரண காரியமா?

ராதாவிற்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் பயமாயிருந்தது.
 
தருதலையான பிள்ளையைப் பெற்று விட்டு திருமணத்திற்கு பெண் பார்க்க வந்த இடத்தில் தாறுமாறாக கேள்வி கேட்கும்
தாய்க் குலமே...... திருந்த மாட்டீங்களா நீங்க எல்லாம்???

பிள்ளைகளுக்கு புத்திமதி சொல்லும்
ப்ரொபசரே.....
பையனின் வாழ்க்கையை நினைத்து
பெண்ணின் வாழ்க்கையை பாழாக்க நினைப்பது
பிழை இல்லையா?????

பாவம் ராதா
ப்ளீஸ் விட்டுடுங்கோ.......

மகனை திருத்த
மாட்டுப்பொண்ணு தான் வேணுமோ?????
😭😭😭😭😭😭
 
தருதலையான பிள்ளையைப் பெற்று விட்டு திருமணத்திற்கு பெண் பார்க்க வந்த இடத்தில் தாறுமாறாக கேள்வி கேட்கும்
தாய்க் குலமே...... திருந்த மாட்டீங்களா நீங்க எல்லாம்???

பிள்ளைகளுக்கு புத்திமதி சொல்லும்
ப்ரொபசரே.....
பையனின் வாழ்க்கையை நினைத்து
பெண்ணின் வாழ்க்கையை பாழாக்க நினைப்பது
பிழை இல்லையா?????

பாவம் ராதா
ப்ளீஸ் விட்டுடுங்கோ.......

மகனை திருத்த
மாட்டுப்பொண்ணு தான் வேணுமோ?????
😭😭😭😭😭😭
கவிக்குயிலின் கோபம் நியாயமானது👍
 
தருதலையான பிள்ளையைப் பெற்று விட்டு திருமணத்திற்கு பெண் பார்க்க வந்த இடத்தில் தாறுமாறாக கேள்வி கேட்கும்
தாய்க் குலமே...... திருந்த மாட்டீங்களா நீங்க எல்லாம்???

பிள்ளைகளுக்கு புத்திமதி சொல்லும்
ப்ரொபசரே.....
பையனின் வாழ்க்கையை நினைத்து
பெண்ணின் வாழ்க்கையை பாழாக்க நினைப்பது
பிழை இல்லையா?????

பாவம் ராதா
ப்ளீஸ் விட்டுடுங்கோ.......

மகனை திருத்த
மாட்டுப்பொண்ணு தான் வேணுமோ?????
😭😭😭😭😭😭
ராதா காதல் வராதானு அடுத்த எபியில் மகன் வந்து நிக்கப்போறான்.கவிக்குயில் என்னை என்ன பண்ண காத்திருக்காங்களோ தெரியல்ல 😳
 
radha pavam
பாவம் தான்
ஆனால் என்ன செய்ய? விதியின் வழி போகும் வாழ்க்கை.இப்போ ரெண்டு பேர் வரிஞ்சு கட்டிகிட்டு வருவாங்க பாருங்க.விதியில்ல இது ஆத்தரோட சதினு...🚶‍♀️நான் ஓடிடறேன்பா..😀
 
Top