Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 33

Advertisement

parvathi

Active member
Member
Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE 🙏🏻


அத்தியாயம் 33

ராதாவிற்கு பயத்தில் உடல் வியர்த்தது. காலையில் கல்யாண கூட்டத்தின் கலகலப்பிலும் பரபரப்பிலும் தெரியாத பயமும் வேதனையும் இப்பொழுது தனியறையில் விஸ்வரூபமெடுத்து நடுங்க வைத்தது.



துக்கம் வருத்தம் பயம் என்று என்னவென்று கணிக்க முடியாத உணர்ச்சிகளின் கலவையில் ஆழ்மனது படபடத்துக் கொண்டிருந்தது. முரளியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க துணிவின்றி அச்சம் அவள் கண்களை மறைக்க தலை குனிந்திருந்தாள்.முரளியின் குரல் கனமாக விழுந்திருந்த மௌனத்தை கலைத்தது.



"இன்னும் எவ்வளவு நேரம் தான் அங்கேயே நிற்கிறதா உத்தேசம்?"



நெஞ்சம் படபடக்க, பதுமை போல் அடியெடுத்து வைத்து அவன் அருகில் வந்தாள் ராதா.



"ஆச்சரியமாருக்கே? அன்னிக்கு சினிமா தியேட்டர்ல பத்ரகாளி மாதிரி அந்த ஆட்டம் ஆடினே. இப்போ என்னடான்னா பேசக் கூட பயப்படறே. ராதா உனக்கு ஞாபகம் இருக்கா? நான் உன்னையே சுத்தி சுத்தி வந்தப்போ என்னை நாயா விரட்டியடிச்சே. லோகத்தில் வேற ஆம்பளையே இல்லேன்னாலும் கன்னியாவே சாவேனே தவிர உன் மாதிரி தெருபொறுக்கி நாயை திருமணம் செய்ய மாட்டேன்னு சபதம் பண்ணினாய். ஆனால் இப்போ அந்த தெருநாய் தான் உன் கழுத்தில் தாலி கட்டியிருக்கு.

ஹௌ டூ யூ பீஃல் நவ் பேபி? "



ராதா அதிர்ச்சியுடன் நிமிர்ந்தாள். முரளி விழிகளில் பழைய விஷமச்சிரிப்புடன் நின்றிருந்தான்.



"என்ன பார்க்கறே? அன்னிக்கு கோவில்ல திருந்திட்டதா சொல்லி மன்னிப்புக் கேட்டவன் இப்போ இப்படி பேசறானேனு அதிர்ச்சியாயிருக்கா? அது வெறும் நடிப்புடி. உன்னை கரெக்ட் பண்ண நான் போட்ட வேஷம் செம்மையா வொர்க்அவுட் ஆயிடுச்சு இல்ல?"



நக்கலாகச் சொன்னவனின் முகம் கோபத்தை காட்ட கண்கள் மிருகவெறியுடன் அவளை ஊடுருவியது.அவன் கரங்கள் அவள் தோள்களில் அழுத்தமாக பதிந்தன.



"என்னை அவமானப்படுத்தினவங்க யாரையும் நான் சும்மா விட்டதில்ல. இன்னிக்கு இந்த தெருநாய்க்கு நீ தான் விருந்தாகப் போறே."



ராதா சடாரென்று விலகி பயத்துடன் பின் வாங்கினாள்.



"வே…வேணாங்க…ப்ளீஸ்,

பழசையெல்லாம் மறந்துட்டு நிர்மலமான மனசோட புதுசா வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். நீங்க பழி வாங்க நினைக்கறதுக்கு நான் அந்த பழைய ராதா இல்லை.நான் இப்போ உங்க மனைவி.?



குட் ஜோக்.



முரளி வாய் விட்டுச் சிரித்தான்.



"இதோ பார்! தொட்டு தாலி கட்டிட்டதால நீ என் மனைவியாயிடுவியா? என்னைப் பொறுத்தவரை என் வாழ்க்கையில் வந்து போகும் பெண்களில் நீயும் ஒருத்தி. அவ்வளவு தான். இன்னும் தெளிவா சொல்லனும்னா நீ ஒரு லைசன்ஸ் கட்டிய வீட்டு நாய். தெட்ஸ்ஆல்."



கழுத்தில் தொங்கிய தாலிச்சரடை சுட்டிக் காட்டி அவன் சிரிக்கவும் உள்ளம் பதறிப் போனாள் ராதா.



"அன்னிக்கு நீ தியேட்டரில் கொடுத்த அடிக்கு பதிலுக்கு நான் எதாவது கொடுக்க வேணாமா? ம்….,:"



விஷமப்பார்வையுடன் அருகில் நெருங்கிய கணவனைக் காணவும் அச்சப்பட்டவளாக மிரண்டு பின்னால் நகர்ந்தவளை வேகமாய் பற்றியிழுத்து, முரட்டுத்தனமாய் எலும்புகள் நொறுங்கிப் போகும் அளவிற்கு இறுகச் சேர்த்தணைத்தான் முரளி.

அவனுக்கு உடன்பட மறுத்து முரண்டு பிடித்தவளின் செய்கை எரிச்சலை ஏற்படுத்த, பளாரென்ற ஒரு அறையில் அவளை படுக்கையில் வீழ்த்தினான்.



ராதாவின் கன்னித்தன்மையை முரட்டுத்தனமாய் கலைத்த முரளியின் செய்கையைக் கூட கணவனின் உரிமையாய் எண்ணி தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டவள் ,காரியம் முடிந்ததும் அவன் சொன்ன வார்த்தைகளில் அருவெறுப்பு

அடைந்தாள்



"மேடம் அன்னிக்கு என்ன சொன்னிங்க? நீயெல்லாம் ஒரு ஆண்பிள்ளையானு தானே ஆத்திரப்பட்டே. இன்னிக்கு தெரிஞ்சிருக்குமே.நான் ஆம்பளை தான்னு இப்போ புரிஞ்சிருக்குமே."



'தூ….இதுவா ஆண்பிள்ளைத்தனம்? கட்டிய மனைவியைக் அவள் விருப்பமின்றிக் கற்பழிப்பதா ஆண்பிள்ளைத்தனம்?'

அருவெறுப்பு, எரிச்சல், மனவேதனை என்று பலவிதமான உணர்ச்சிகளின் கலவையில் கலங்கிப் போன ராதா அழுகையில் கரைந்தாள்.



ராதா தனக்கு திருமணமான ஒரு மாதத்திலேயே ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொண்டாள்.பெற்றவர்களும் மற்றவர்களும் நினைப்பது போல தான் அந்த வீட்டில் விளக்கேற்றும் உரிமையுடைய மருமகளாக வரவில்லை.தன் கணவருக்கும் மாமியாருக்கும் வேண்டாத விருந்தாளியாகத் தான் வந்திருக்கிறோம் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள அவளுக்கு அதிக நாட்கள் ஆகவில்லை.



முரளிக்கு அவள் இரவு நேரங்களில் மட்டுமே தேவைப்பட்டாள். படுக்கையறை உறவு மட்டுமே தாம்பத்யம் என்றால் முரளியும் ராதாவும் தம்பதியர் தான்.ஆனால் முரளி ராதாவை ஒரு மனைவியாகக் கூட இல்லை மனுஷியாகவே மதிக்கவில்லை என்பது தான் உண்மை.



ஆனால் ராதா அவனுக்கு ஒரு நல்ல மனைவியாகத் தான் நடந்து கொண்டாள்.

அவனை அனுசரித்து நடந்து கொண்டால் நாளடைவில் நயமான வார்த்தைகள் மூலமாக அவனைத் திருத்தி விடலாம் என்ற அவள் நம்பிக்கை சீக்கிரத்திலே சிதைந்து போனது.





ஒரு நல்ல மனைவியின் வாத்சல்யத்துடன் கணவன் சங்கிலித் தொடராய் சிகரெட் குடிப்பதை குறைத்துக் கொள்ளச் சொல்லி அவள் வேண்ட, அன்றே அவளுடைய எல்லைக்கோட்டை முரளி நிர்ணயித்து விட்டான்.



"லுக் ஹியர்!! தாலிகட்டிட்டேன்ற ஒரே காரணத்துக்காக ஒரு மனைவியோட அதிகாரத்தையும் உரிமையையும் எடுத்துக்க முயற்சி பண்ணினா அந்த தாலியையே கழட்டி எறியத் தயங்க மாட்டேன்.புரிஞ்சுதா?"



ராதாவிற்கு புரிந்தது..ஆயுசுக்குமே அவன் தன்னை மனைவியாக மதிக்கப் போவதில்லை என்ற உண்மை அன்றே புரிந்து விட்டது. ஆனால் ஒரு இரவு தவறாமல் அவன் அவளை இம்சிக்கும்பொழுது, சமயங்களில் குடிவெறியில் மிருகபலத்துடன் அவளை ஆட்கொள்ளும் பொழுது, அதற்கு மட்டுமே தான் தேவைப்படும் அவலத்தை எண்ணி துடித்துப்போவாள் ராதா.



தொட்டதென்னவோ தாலி கட்டிய கணவன் தான்.ஆனால் ஏதோ மாபாதகத்திற்கு ஆளானது போல உடலும் மனமும் கூசிப்போகிறதே. கங்கையில் குளித்தாலும் தொலையாத பாவத்திற்கு ஆளானது போல அருவெறுப்பு அவளை அலைக்கழிக்கிறதே.என்ன செய்வாள் ராதா?



இரவுதோறும் இம்சிக்கும் கணவனின் அரக்கத்தனத்தைக் கூட பொறுத்துப் கொள்ள முடிந்தவளால், மனைவியென்று அவள்வந்த பின்னாலும், பிற பெண்களின் தொடர்பை முரளி விடவில்லை என்ற உண்மையை அவன் வாய் வழியே அறிந்தபொழுது துடித்துதான் போனாள்.



இரவு அவளை அணைத்துக் கொண்டே அவன் பி ஏ ஸ்டெல்லாவின் ஷேஃப்பைப் பற்றியும் ரிஷப்ஷனிஸ்ட் பிரேமாவின் பிஃகரைப் பற்றியும் விலாவாரியாக வர்ணிக்கையில் , கொலைவெறியே வரும்.



இரவில் அவன் ஆளுகைக்கு உட்பட மறுப்பவளை வலுகட்டாயமாக அணைத்துக் கொண்டு வெட்கமின்றி தன் அனுபவங்களை விவரிக்கும் கணவனின் பச்சை துரோகம் நெஞ்சில் நெருப்பாய் தகித்தது. அந்த நெருப்பில் வெந்து சாம்பலானாளே தவிர அவளால் அதை அணைக்கவோ அதிலிருந்து வெளியே வரவோ முடியவில்லை.



முரளியாவது தனிமையில் அவளிடம் காய்ந்தாலும் தன் அப்பாவின் எதிரிலாவது அருமையாகத் தான் நடந்து கொள்வான்.ஆனால் கௌரி தனிமையிலும் சரி கணவன் அருகிலிருந்தாலும் சரி ராதாவை வார்த்தைகளால் வதைப்பதை தன் வழக்கமாகவே கொண்டிருந்தாள்.



என்ன தான் பதவிசாகவும் நறுவிசாகவும் காரியங்கள் செய்தாலும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டூ அதில் குறைகளைத் தேடும் கௌரியின் குணம் ராதாவிற்கு புரியாத புதிராகத் தானிருந்தது.



தன் அண்ணா பெண் சரண்யாவை மருமகளாக்கி கொள்ள ஆசைப்பட்ட கௌரியின் விருப்பம் நிறைவேறாமல் போக தானும் ஒரு காரணம் என்று புரிந்த பொழுது கௌரியின் ஏச்சுக்களையும் விதியே என்று தாங்கிக் கொண்டாள் ராதா.



என்ன தான் அவளை உட்கார வைத்து வகைதொகையாய் சமைத்து வக்கணையாய் பார்த்து பார்த்து பரிமாறினாலும் கௌரியின் வாயானது வசை தான் பாடும்.



"என்ன சமைக்கற நீ? உப்பு காரம் எதுவுமே இல்லாமல் சே! இதை மனுஷா சாப்பிடுவாளா? கொண்டு போய் நாய்க்கு தான் கொட்டனும். எங்க சரண்யா சமைப்பா பாரு!! வாசனையே எட்டூருக்கு மணக்கும். பீட்ரூட் அல்வா அவ பண்ணினால் இன்னிக்கெல்லாம் சாப்டுண்டிருக்கலாம். ம்…என் தலையெழுத்து. சொந்தத்திலே சொக்கத்தங்கமா பொண்ணிருந்தும் அந்நியத்தில பொண்ணெடுத்து அவஸ்தைப்படனும்னு விதி….என்ன செய்ய?"



வாஸ்தவத்தில் அந்த சரண்யா சமையலறைப் பக்கம் தலை வைத்துக் கூடப் படுத்திருக்க மாட்டாள் என்று ராதாவிற்கு தெரியும். ஆனாலும் தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளாமல் சிறு புனசிரிப்புடன் நகர்ந்து விடுவாள்.



சமையல் என்றில்லை சகல விஷயங்களிலும் சரண்யாவின் பெயர் கௌரியின் வாயில் புகுந்து புறப்படாமல் இருந்ததேயில்லை. எங்க சரண்யாவுக்கு அது தெரியும் இது தெரியும் என்று அவள் நித்தமும் படித்த பாட்டில் அலுத்துப் போனது ராதா மட்டுமில்லை. வெங்கட்ராமனும் தான்.



"கௌரி! நீ மனசுல என்ன நெனச்சுண்டு இப்படி சதா சரண்யா புராணம் படிச்சுண்டிருக்கே? லஷ்மி அஷ்டோத்ரம் படி

தேவாரம் திருவாசகம் படி ஏன் விஷ்ணுசகஸ்ரநாமம் கூட சொல்லு. தப்பேயில்ல. பகவான் நாமத்தைச் சொன்னால் போற வழிக்கு புண்ணியமானும் கிடைக்கும். ஆனால் தயவு செய்து இந்த சரண்யாவை துதி பாடறதை மட்டும் நிறுத்திடு.ப்ளீஸ்."



"சொல்லுவேளே. ஏன் சொல்ல மாட்டேள்? இவ பாட்டி இவ பொறந்த வேளை சரியில்லேன்னு சொன்னது சரி தான் போலிருக்கு. இவ பொறந்த வேளை மட்டுமா நம்மாத்துக்கு மருமகளா வந்த வேளையும் தான் சரியில்லை. படுபாவி! வந்தாலும் வந்தாள் உங்களுக்கும் எனக்குமே ஆகாமல் பண்ணிட்டாளே. இல்லன்னா நீங்க என்னை இப்படியெல்லாம் பேசற ஆளேயில்லையே. கௌரி கௌரினு கரைஞ்சு போயிடுவேளே."



பிறந்த வீட்டில் பாட்டி ஏசித் தீர்த்த மிச்சத்தை புகுந்த வீட்டில் கௌரி பேசித் தீர்த்தாள் என்று சொன்னால் அது ஒன்றும் மிகையில்லை. எள் எனும் முன் எண்ணெயாக நிற்கும் அவளிடமே குற்றம் குறை சொல்லும் மாமியார், சுடும் வார்த்தைகளால் மனதை காயப்படுத்துவதோடு சமயங்களில் சிகரெட் தணலால் உடலையும் ரணமாக்கும் கணவன், இருவருக்கிடையில் மத்தளமாய் அடிபட்டாள் ராதா.



எண்ணி ஏழே மாதங்களில் மணவாழ்க்கை ராதாவிற்கு வெறுத்துப் போய்விட்டது தான் உண்மை. கோடையில் ஒரு மின்னல் போல இயந்திரமாய் சென்று கொண்டிருந்த ராதாவின் வாழ்விலும் ஒர் திருப்பம்.



அவளை மனுஷியாக கூட மதிக்காத முரளி திடீரென்று ஒரு நாள் அவளை மனைவியாக மதித்து பிரபல ஹோட்டலில் நடந்த விருந்திற்கு அழைத்து சென்றான்.

குனிந்த தலை நிமிராமல் வந்தவளை எரிச்சலுடன் பார்த்து எச்சரித்தான்.



"ஏய்! படிச்சவ தானே நீ? பட்டிக்காடு மாதிரி இதென்ன தலையை தொங்க போட்டுண்டு வர்றே? நாகரீகமா நடந்துக்க தெரியாதா?

எழவு! இந்த கடன்காரன் ஷர்மாவை சமாளிக்க உன்னை இழுத்துண்டு போக வேண்டியிருக்கு…"



அவனுடைய பேச்சின் அர்த்தம் அப்பொழுது ராதாவிற்கு புரியவில்லை.

முரளியின் சில்மிஷங்களை பற்றி யாரோ ஒரு முகமறியாதவன் மேலிடத்தில் போட்டுக் கொடுத்து விட, கம்பெனி சேர்மேன் ஷர்மாவை சரிகட்டி புகாரை வாபஸ் வாங்கினால் தான் வேலை நிலைக்கும் என்ற நிலைமையில், சேர்மேனை சமாளிக்க தன்னை கணவன் அழைத்து வந்திருக்கிறான் என்ற விஷயம் ராதாவிற்கு அன்று தெரியாது தான்.



விருந்தில் ஓரு நடுத்தர வயதுக்காரரை

கம்பெனி சேர்மேன் ஷர்மா என்று அறிமுகப்படுத்தி வைத்தான் முரளி.



"யூ லக்கி யங் மேன்! வேர் டிட் யூ கெட் திஸ் ஏஞ்சல்?"



மதுக் கோப்பையை முரளியிடம் நீட்டி விட்டு கேட்ட அந்த ஷர்மாவின் பார்வை குத்தீட்டியாய் ராதாவை துளைத்தது.



"ஏஞ்சல்?...."புருவம் உயர்த்தி கேட்ட முரளி விஷமமாக கண் சிமிட்டினான்.

"இன் ஹெவன் பாஸ்…"



"ஓஹ்!...தெட்ஸ் எ குட் ஜோக்."



முரளியின் பதிலில் ஷர்மா கலகலத்து சிரிக்க, அவருடைய பேச்சும் பார்வையும் பிடிக்காமல் எப்பொழுதடா கிளம்பலாம் என்று தவித்துக் கொண்டிருந்த ராதா,கணவன் "எக்ஸ்க்யூஸ் மீ " என்று எழுந்த உடனேயே தானும் அவசரமாய் எழப் போக அவள் தோள்களை அழுந்தப் பற்றி அமர வைத்தான் முரளி.



"அவருக்கு கம்பெனி கொடு ராதா.ஐ வில் பீ பேக் இன் பைஃவ் மினிட்ஸ்."



சின்னக்குரலில் கட்டளை போல சொல்லிவிட்டு நகர்ந்த கணவனை புரியாமல் பார்த்தாள் ராதா.



'இந்த மனுஷனுக்கு எதற்காக நான் கம்பெனி கொடுக்க வேண்டும்? இந்த ஆளோட பார்வையே சரியில்லையே…'



குழப்பத்துடன் விழித்தவளிடம் ஷர்மா மதுக் கோப்பையை நீட்டினார்.



"வொய் டோன்ட் யூ ஜாய்ன் மீ?"

"நோ ! தாங்ஸ்."

வலிய வரவழைத்த புன்னகையுடன் நாசூக்காய் ராதா மறுத்த நாழிகையில் ட்ரம்ஸ் அதிர அதிரடியாய் மேற்கத்திய இசை அந்த பிரமாண்ட ஹாலில் ஒலிக்க ஆரம்பித்தது.

டி ஜே யின் ஆர்ப்பாட்டமான குரல் வந்திருந்த அனைவரையும் நடனமாட அழைக்க, அங்கேயிருந்த நடனமேடையில் ஜோடியாக ஆட ஆரம்பித்தவர்களை கூச்சத்துடன் பார்த்தாள் ராதா.



அரைகுறை வெளிச்சத்தில், மது மயக்கத்தில், சகிக்க முடியாத அங்க அசைவுகளும் கண்களில் கிறக்கமுமாக ஆடிய ஜோடிகளை அருவெறுப்புடன் பார்த்தவள் குடும்பப்பெண் வரக்கூடாத இடத்திற்கு கணவன் தன்னை அழைத்து வந்திருப்பது இப்பொழுது தான் புரிய, அவஸ்தையுடன் அமர்ந்திருந்தவளை மேலும் அதிர்ச்சியடைய வைத்தார் அந்த ஷர்மா.



"ஷால் வீ டான்ஸ் ஸ்வீட்டி?"

"வாட்?"

ஏதோ கேட்க கூடாத கெட்ட வார்த்தையை கேட்டு விட்டது போல ராதா அதிர, அந்த அரைகுறை வெளிச்சத்தில் நடனமாடும் ஜோடிகளில் கணவனைத் தேடி அவள் பார்வை அலைய, ஷர்மா வெகு ஸ்வாதீனமாக எழுந்து வந்து அவள் கை பற்றி எழுப்பி இடையை வளைத்து அவருடன் இழுத்தார்.



"கமான் ஸ்வீட்டி! லெட்டஸ் டான்ஸ்…"



"யூ…பிஃல்தி ரோக்! ஹௌவ் டேர் யூ டச்மீ?"



அடுத்த கணம் ராதாவின் கோபக் கத்தலில் ஒலித்துக் கொண்டிருந்த இசை சட்டென்று நின்றது. அனைவரும் திரும்பிப்பார்க்க

ராதா அவமானத்தில் கூனி குறுகிப் போனாள் .

.

கம்பெனி கொடு ராதா என்று அவளை விட்டு சுலபமாய் கழன்று கொண்ட கணவனின் மீது எரிச்சலும். ஷர்மாவின் தொடுகையால் ஏற்பட்ட அருவெறுப்பும் ஆத்திரமாக உருவெடுக்க,தன் பலம் அனைத்தையும் திரட்டி ஷர்மாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
 
Top