Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிருந்தாவனத்தில் நந்தகுமாரன் அத்தியாயம் 37

Advertisement

parvathi

Active member
Member
Thanks to all readers for ur genuine support. Pls give ur feedbacks.

என் கதைகள் ஆடியோவில் கேட்க விருப்பப்பட்டால்@ BalaThiagarajanTamil Novels. utube. Com என்ற சேனலுக்கு வருகை தாருங்கள். Last BUT NOT THE LEAST PLS LIKE COMMENT SHARE N SUBSCRIBE 🙏🏻






அத்தியாயம் 37


"எ ஷாக்கிங் மர்டர் இன் தி சிட்டி "





அன்றைய ஹிந்து செய்திதாளில் முதல் பக்கத்திலேயே தலைப்பு செய்தியாக வந்திருந்ததை படிக்கும் ஆர்வத்துடன் பேப்பரிலிருந்து பார்வையை அகற்றாமல் "தாமு ! காபி கொண்டு வா ! "

என்று குரல் கொடுத்துவிட்டு வசதியாக சோபாவில் சாய்ந்து அமர்ந்து கட்டம் கட்டிப் போட்டிருந்த செய்தியை படிக்க ஆரம்பித்தான் ஸ்ரீராம்.



புரொபஸர் வெங்கட்ராமனின் மகன் முரளிதரன் நேற்று இரவு ஏழு மணியளவில் அவருடைய நுங்கம்பாக்கம் பங்களாவில் கத்தியால் குத்தப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கொலைசெய்யப்பட்டு இறந்த முரளியின் மனைவி ராதா தானே இந்த குற்றத்தை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தம்பதியரிடையே இருந்த மனக்கசப்பும் விரிசலும் இந்த கொலைக்கு காரணமாயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காவல் துறை அதிகாரிகள் மேலும் புலன் விசாரணை செய்து வருகின்றனர்.



மேற்கொண்டு படிக்க முடியாமல் கண்களில் கண்ணீர் தளும்பி பார்வையை மறைத்து விட, கலவரத்தில் உடல் வியர்த்துப் போனான் ஸ்ரீராம்.



"என்ன ராம் இது? காலங்கார்த்தால ந்யூஸ் பேப்பரை படிச்சுண்டு சாவகாசமா உட்கார்ந்துண்டிருக்கேள்.நர்ஸிங்ஹோம் கிளம்ப நாழியாகலையா? இன்னிக்கு அந்த சாந்தாவுக்கு ட்யூ டேட். சுகப்பிரசவமாகனும்னு நான் கவலைப்பட்டுண்டிருக்கேன். கொஞ்சம் சீக்கிரமே கிளம்பிப் போய் டெலிவரியை பார்க்கலாம்னா என்னை இந்த ப்ரியா விட மாட்டேன்றா. இவளை கொஞ்சம் பார்த்துக்குங்க. நான் குளிச்சுட்டு வந்துடறேன்…"



ஸ்ரீராமின் நிலைமை புரியாமல் ஜானகி கடகடவென்று சொல்லிக் கொண்டே போனவள் கணவனிடம் எந்த எதிர்வினையும் இல்லாததால் திரும்பி அவனைப் பார்த்தவள் அதிர்ந்து போனாள்.



"என்னங்க என்னாச்சு? ஏன் இப்படி பிரமை பிடிச்ச மாதிரி உட்கார்ந்திருக்கிங்க? உடம்பு ஏதும் சரியில்லையா? ஜுரமா?"



நெற்றியில் கை வைத்து பரிசோதித்தவளின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு , விழிகள் தளும்ப, குரல் கரகரக்க,

"ஜானா! ஜானு! நம்ம ராதாயில்ல ராதா…"

என்று பேசத் தொடங்கி மேற்கோண்டு கோர்வையாக பேச வார்த்தையே வராமல் அவன் தடுமாறவும் ஜானகி பதட்டத்துடன் அவனைப் பற்றி உலுக்கினாள்.



"ராதாவுக்கென்ன ராம்? நீங்க தடுமாறுவதைப் பார்த்தால் நேக்கு பயமாயிருக்கே. என்னாச்சு? சொல்லுங்க ப்ளீஸ்…"



கிட்டத்தட்ட அழாத குறையாக கேட்ட ஜானகியிடம் விஷயத்தை விளக்கி சொல்வதற்குள் ஸ்ரீராம் திணறித்தான் போனான்.



"நோ….. "வீறிட்டு கத்தினாள் ஜானகி

"நான் இதை நம்ப மாட்டேன். ராதா…..நம்ம ராதாவா இப்படியொரு காரியம் பண்ணியிருப்பா? நோ! நிச்சயமாயில்லை

அன்னிக்கு அவ புருஷனை நான் திட்டினேன்னு என்னை அவ எப்படி கோவிச்சுண்டானு உங்களுக்கும் தெரியுமே ராம். அப்படிப்பட்டவ எப்படின்னா கொலையெல்லாம் பண்ணுவோ? நிச்சயமா அவ கொலை பண்ணலே..நோ!"



"லெட்ஸ் ஹோப் ஸோ ஜானா…."

ஸ்ரீராம் இப்பொழுது நிதானத்திற்கு வந்திருந்தான தானும் பதறிப் பரிதவித்தால் ஜானகி மேலும் கலங்கிப் போவாள் என்ற உண்மையுணர்ந்து அவன் சற்றே நிதானத்திற்கு திரும்பிய வேளையில் அலைபேசி அழைக்க , எடுத்து காதில் வைக்கவும் மறுமுனையில் நந்தகுமாரன் பதட்டத்துடன் பேசினான்.



"ராம்! ந்யூஸ் பார்த்தியா? முரளி கொலை செய்யப்பட்டதாகவும் அந்த கொலையை ராதா தானே செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பதாகவும் செய்தி வந்திருக்கு. கடவுளே! ராதாவுக்கு பூ மாதிரி மென்மையான மனசுடா.ஒரு பூனைக்கு கூட பயப்படறவளுக்கு கொலை செய்யற அளவுக்கெல்லாம் தைரியமோ துணிச்சலோ கிடையவே கிடையாது. ஷி இஸ் வெரி இன்னசென்ட். ஐ நோ …."



ராதா அவனை விட்டு பிரிந்த பொழுதில் கூட அமைதி காத்த அந்த காதலன் , இப்பொழுது பஞ்சாய் படபடத்தான். ஸ்ரீராமிற்கு நண்பனை முதலில் தேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது .



"நந்து! பதட்டப்படாதே. ராதாவுக்கு இந்த சமயத்துல உதவ வேண்டிய நாமே மனசு தளர்ந்து போனால் எப்படி? ஸ்டே கூல் மேன்…ரிலேக்ஸ். பேப்பர்ல வர்ற ந்யூஸ் எல்லாம் உண்மையாயிடாது.நாம ராதாவை நேர்ல போய் பார்த்தா தான் உண்மை என்னனு தெரிய வரும்.கெட் ரெடி. நானும் ஜானாவும் இன்னும் கால்மணியில் அங்கே வந்து உன்னை பிக்அப் பண்ணிக்கறோம்.சரியா?"



திட்டமிட்டபடி நந்தகுமாரனையும் அழைத்துக் கொண்டு நுங்கம்பாக்கத்திலிருந்த ராதாவின் இல்லத்திற்கு இரண்டாவது முறையாக ஸ்ரீராமும் ஜானகியும் சென்ற பொழுது, அங்கே ஒரு மயான அமைதி குடி கொண்டிருப்பதை அவர்களால் உணர முடிந்தது

வெங்கட்ராமனிடம் தங்களை மெதுவாக அறிமுகப்படுத்திக் கொண்ட கையோடு அவருடைய மகனின் இறப்பு குறித்து துக்கம் விசாரித்து இரங்கல் தெரிவித்து விட்டாலும் ஏனோ ராதாவைப் பற்றி விசாரிக்க ஆண்கள் இருவருக்கும் வாய் வரவில்லை.

ஆனால் ஜானகி அதற்கு மேல் பொறுக்க முடியாமல் கதறி விட்டாள்.



"சார்! நான் ராதாவைப் பார்க்கனும். அவ இப்போ எங்கேயிருக்கா? போலீஸ் ஸ்டேஷனிலா?.."

விம்மி அழுத மனைவியின் தோளை மெதுவாக தட்டி சமாதானப்படுத்தினான் ஸ்ரீராம்.



"உஷ்! கன்ட்ரோல் யுவர்செல்ப் ஜானா…"

மெதுவான குரலில் மனைவியை கண்டித்தவன் வெங்கட்ராமனிடம் திரும்பினான்.



"ப்ளீஸ் சர்! நீங்க எங்களை சரியா புரிஞ்சுக்கனும். ராதா ரொம்ப மென்மையான பொண்ணு.அவ ஸ்பாவத்துக்கு மாறா இந்த கொலையை பண்ணியிருக்க வாய்ப்பேயில்லனு தான் நாங்க நம்பறோம். உண்மையை தெரிஞ்சுண்டு அவளுக்கு உதவி பண்ணத் தான் நாங்க வந்திருக்கோம்."



நிதானமாய், தெளிவாய், அதே சமயம் அவர் தங்களை தவறாக நினைத்து விடக்கூடாதே என்ற கவலையுடனும் ஸ்ரீராம் பேச, வெங்கட்ராமன் அவனைப் புரிந்து கொண்டதன் அடையாளமாய் தலையசைத்தார்.



"ராதா மேல நீங்க வெச்சிருக்க அன்பும் நம்பிக்கையும் எனக்குப் புரியுது .யூ சீ…ராதா மேல உங்களை விட அதிகமா அன்பும் அக்கறையும் உள்ளவன் தான் நானும்…."



"அதான் மகனுக்கு காரியம் பண்ண கையோட மருமகளை ஜாமீன்ல விடுவிச்சு இன்னும் ஆத்துல வெச்சு சீராட்டறேளே. அதிலிருந்தே தெரியாதோ?"



ஆவேசமாய் கத்திக் கொண்டு தலைவிரி கோலமாய் வந்து நின்ற பெண்மணியை ஏறிட்டுப் பார்த்தனர் மூவரும். வெங்கட்ராமன் வருத்தத்துடன் சொன்னார்.



"இவ என் மனைவி கௌரி. பிள்ளையை பறிகொடுத்த துக்கம் தாங்காமல் மருமகளை பழிச்சுண்டிருக்கா. யாரைப் பழிச்சு இனி என்ன ஆகப் போறது? போன உயிர் திரும்பி வந்துடுமா என்ன? மை சன் இஸ் நோ மோர் நவ்…"

இதை சொல்லும் பொழுது சற்றே கம்மி தழுதழுத்த அவருடைய குரல் திடீரென்று விரைத்துக் கொண்டது.



"என் மகன்றதால முரளியுடைய பலகீனத்தை நான் மறைக்க விரும்பலே. அவனிடம் ராதா எப்படியெல்லாம் கஷ்டப்பட்டானு எனக்கு தெரியும்

ஆனால் கொலை செய்ற அளவுக்கு ராதா போயிருப்பானு நானும் நம்பலே. மே பீ அது ஆக்ஸிடென்டா கூட இருக்கலாம்.வெல்! என்னிடம் மறைத்த உண்மைகளை அவ உங்களிடமாவது சொல்றாளானு பார்க்கலாம். ராதா மாடியில் தானிருக்கா.போய் பாருங்க…."



மாடிப்படி ஏறுகையில் அதன் வளைவில் புடவைத் தலைப்பை வாயில் வைத்து அரற்றிக் கொண்டிருந்த காயத்ரி ஜானகியைக் கண்டவுடன் ஜானா என்று கதறிக் கொண்டு அவள் மேல் சாய்ந்தாள்.



"என் பொண்ணு கொலை பண்ணிட்டாளாம் ஜானா! உனக்குத் தெரியாதா ஜானா? என் மகள் சுவத்துல ஊர்ற பல்லிக்குக கூட பயப்படுவாளே.அவளைப் போய் வாய் கூசாமல் கொலைகாரிங்கறாங்களே.இது அக்கிரமமில்லையா? நான் அப்பவே தலைப்பாடா அடிச்சுண்டேன் இந்த சம்பந்தம் நமக்கு வேண்டாம்னானு. கேட்டாரோ அந்த மனுஷர்? கிளியாட்டம் பொண்ணை வளர்த்து கடுவன்பூனைக்குக் கொடுத்துட்டோம்மா. என் மகளை கஷ்டப்படுத்தினது போறாதுனு கூசாமல் கொலைகாரினு பழி வேற சொல்றாங்களே

ஐயோ! எனக்கு மனசு தாங்கலையே! பொண்ணு பெரிய இடத்துல வாக்கப்பட்டு அமோகமாயிருக்கானு பெருமைபட்டுண்டிருந்தோமே.இப்போ பூவிழந்து, பொட்டிழந்து, கொலைகாரினு பட்டத்தையும் சுமந்துண்டு நிக்கறாளே.நா என்ன பண்ணுவேன்?"



வாய் விட்டு அழுத அந்த தாயின் வேதனை புரிந்து ஜானகி அவளை ஆறுதலாய் அணைத்து,

"கவலைப்படாதிங்க மாமி. கடவுள் நமக்கு துணையிருப்பார்…"என்று பரிவுடன் சொல்ல காயத்ரியோ இன்னும் பெரிதாக அழ ஆரம்பித்தாள்.



"கடவுள்னு ஒருத்தர் இருந்தாதானேம்மா காப்பாத்துவார்? திக்கற்றவருக்கு தெய்வமே துணைங்கறதெல்லாம் நிஜமில்லை ஜானா.நான் கும்பிட்ட சாமியெல்லாம் வெறும் கல்லா போயிடுச்சு. இவ்வளவு கஷ்டப்பட என் பொண்ணு அப்படியென்ன பாவம் பண்ணினா? பிறந்த வீட்ல தான் அவ பாட்டி அவளை சுகப்பட விடலேன்னால் புகுந்த வீட்டையாவது அந்த சாமி நல்லபடியா அமைச்சு கொடுத்திருக்க வேணாமா?

கொடுக்கலையே! அந்த அம்பிகைக்கு கண்ணில்லாமல் போச்சும்மா.என் மகள் பட்ட வேதனையை கண் கொண்டு பார்த்திருந்தால் இந்த கொடுமையெல்லாம் நடந்திருக்குமா? என் மகள் வாழ்க்கை மண் மூடிப் போச்சு ஜானா.எங்களை அந்த அம்பிகை நன்னா ஏமாத்திட்டா…."



ஒரு வார்த்தை அதிர்ந்து பேசாத காயத்ரி, புன்சிரிப்பைத் தவிர வேறு அறியாத காயத்ரி, அபிராமி துதி பாடியே பழக்கப்பட்ட காயத்ரி, அம்பிகையே துணை என்று அல்லும் பகலும் பூஜிக்கும் காயத்ரி, பொறுமையில் பூமாதேவியைப் போன்ற காயத்ரி, இப்பொழுது தான் நித்தமும் வணங்கும் அம்பிகையையே நிந்திக்கிறாள். அவளுக்கு சித்தம் கலங்கிவிட்டதோ என்று அனைவரும் அரண்டு போய் நிற்க, இப்பொழுது கௌரி வேறு அவள் பங்கிற்கு அழ ஆரம்பித்தாள்.



"நான் பாவியண்ணா! மகா பாவி! மலை மாதிரி முழுசா ஒரு பிள்ளையை வாரி கொடுத்துட்டு நிக்கறேன். ஐயோ! கல்லுகுண்டாட்டமா நானிருக்கேனே.அந்த கற்பகாம்பாள் என் உயிரை எடுத்துண்டு என் பிள்ளையை காப்பாத்தியிருக்கக் கூடாதா? அந்தக் கொலைகாரி என்னை கொன்னிருந்தாலும் சந்தோஷமாய் போய் சேரந்திருப்பேனே.நான் மார் மேலயும் தோள் மேலயும் போட்டு வளர்த்த என் பிள்ளையையில்ல முழுங்கிட்டா….பெத்த வயிறு பத்தி எரியுதே. கொலைகாரியை ஆத்துல வெச்சு சீராட்டற என் ஆத்துக்காரருக்குத் தான் கண்ணில்லாமல் போச்சுன்னா அந்த அம்பிகைக்கும் கண்ணில்லாமல் போச்சே..தேவி! என்னையும் என் பிள்ளையிருக்கற இடத்துக்கு அழைச்சுண்டு போயிடம்மா.."



கௌரியும் காயத்ரியும் தாயுள்ளத்தின் பரிதவிப்போடு மார்பில் அடித்துக் கொண்டு அழுவதைக் கண்ட ஜானகி பெண்மைக்கே உரிய பலகீனத்துடன் அப்படியே படியில் சரிந்தமர்ந்து தானும் அழ ஆரம்பித்தாள்.



"தெய்வம் நல்ல மனுஷாளைத் தான் அதிகம் சோதிக்கும்ங்கறது நம்ம விஷயத்தில் உண்மையாகிப் போச்சே மாமி!..."

விம்மி அழுத மனைவியை சிரமத்துடன் எழுப்பி மேலே அழைத்து சென்றான் ஸ்ரீராம்.

மாடி அறையில் துவண்ட மலரென ராதா படுத்திருந்த கோலம் மனதை உருக்க, ஜானகி இன்னும் பலமாக அழ ஆரம்பிக்க, அவளுடைய அழுகையில் கண் விழித்த ராதாவின் பார்வை முதலில் தோழியின் மீது பதிந்து, மெல்ல நகர்ந்து அருகிலிருந்த ஸ்ரீராமை வருடி, பின் நந்தகுமாரனிடம் வந்து நிலைத்தது.



நந்தகுமாரன் ராதா என்று கதற துடித்த தன் நாவை அடக்க மிகவும் சிரமப்பட்டான். உதடுகள் துடிக்க விழிகள் கண்ணீரில் தத்தளிக்க அவனையே இமைக்காமல் பார்த்த ராதா சோர்வுடன் விழிகளை மூடிக் கொண்டாள்.



"உங்களையெல்லாம் பார்க்காமலேயே போயிடுவேனோனு நெனச்சேன். ஆனால் கடவுள் கருணையுள்ளவர் ஜானா. உங்களையெல்லாம் என் கண் முன்னால கொண்டு வந்து நிறுத்தி என் கடைசி ஆசையை மட்டுமாவது நிறைவேற்றியிருக்கார்."



என்ன சொல்கிறாள் இவள்?

விலுக்கென்று தலையை நிமிர்த்தினாள் ஜானகி..அழுகையை விடுத்து ராதாவின் முகத்தை ஆராய்ந்த பொழுது தான் அவள் முகமெல்லாம் வியர்த்து போயிருப்பதையும், கண்கள் செருக தொடங்கியிருப்பதையும் இனம் காண முடிந்தது. நிமிஷமாய் ஜானகியின் மருத்துவ மூளை ராதாவின் கண் செருகலுக்கும் மயக்கத்திற்குமான காரணத்தை ஊகித்து விட, பதட்டத்துடன் கத்தினாள்.



"ஐயோ ராம்! ராதா எதையோ சாப்பிட்டிருக்கா போல. சீக்கிரம் வந்து பாருங்க. எனக்கு பயமாயிருக்கு. ராதா! ஏண்டி ஏண்டி இப்படி பண்ணினே? என்னை விட்டு போயிடாதேடி.ப்ளீஸ்"



அடுத்த சில நிமிடங்களில் ராதா தேவகி நர்ஸிங்ஹோமில் ஸ்ரீராம் நந்தகுமாரனின் தீவிர கண்காணிப்பில் அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள்.
 
Top