Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 10

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
"மாப்பிள்ளை..!"

பொறுமையாய் அழைத்தார் ஶ்ரீனிவாசன்.

"சொல்லுங்க மாமா"

மரியாதையாகவே பதில் சொல்லினான் மருமகன்.

"வீணாம்மா கொஞ்சம் கோபமா இருக்கும் போல.நான் பேசிட்டேன் மாப்பிள்ளை இப்போ சமாதானமாகிட்டு பாப்பா நீங்க வந்தா அழைச்சுட்டு போயிடலாம்!"

"சரிங்க மாமா!" என்றவனுக்கு

'இது என்னடா வாழ்கை!?' என்று தான் தோன்றியது.

தாய் தகப்பன் இல்லாமல் தனியே வாழ்ந்த தன்னையும் ஒருத்தி.அதுவும் அழகில் சுந்தரியாய் மிளிரும் பெண்ணரசி 'காதல் செய்கிறேன்!' என்று வந்து நிற்க.

காதலால் வேறு எந்த சிந்தனையும் அற்று ஒப்புக்கொண்டான்.

ஆனால் அதன் பின் நடந்தது தான்

'தலைகீழ்!'

வீண்வாதம் புரிந்து அன்னையின் இல்லம் செல்வது அவள் தான்.

ஆனால்,"ஒரு தவறும் செய்யாமல் அவளை தான் சென்று அழைத்துவர வேண்டுமா!?"

மாமனார் தன் மகளுக்காக பரிந்து கொண்டு வருவதை பார்த்தால் கோபமாக தான் வருகிறது.

இருந்தும்," அவர் ஒருவர் மட்டும் இல்லை என்றால் இவர்கள் இருவரை கண்டுகொள்ள யாருமே இல்லை!"

"உதவிக்கு வருவோரையும் விரட்டும் மனைவியின் குணம் என்பது தான் உண்மை!"


"ஷ்ரவனுக்கு எப்போதுமே வீணா என்றால் ஆகாது என்பது நாடறிந்த சேதி.காரணம் அவன் மாமா ஶ்ரீனிவாசன் பெற்ற மகளான வீணா அவள் அன்னை தேவியின் வார்ப்பு.
அது ஒன்று தான் ரக்ஷனை குற்ற உணர்வில் ஆழ்த்தாது காத்து நிற்கும் கேடயம்!" எனலாம்.


சௌந்தர்யாவிற்கு அண்ணன் மகள் தன் மகனை 'வேண்டாம்!' என்றதோடு நில்லாமல்;

"அத்தை நான் ரக்ஷனை லவ் பண்றேன்!" என்று முகத்திற்கு நேரே கூறிய போது பெருந்தன்மையாக முன்னால் நின்று திருமணத்தை நடத்தியவர்.



கடந்த காலத்தை நினைத்துக் கொண்டே ஷ்ரவன் அழைத்த நிச்சய விழாவை மறுத்துவிட்டு மனைவியை அழைக்க அவள் இல்லம் சென்றான்.

வந்த மருமகனை

"வாங்க..!"

என்றதோடு சமையல் அறைக்குள் மறைந்த மாமியாரை கண்டுகொள்ளாது மனைவியின் அறைக்குள் சென்றவன் அவளை அழைக்க.


"சாரி கேளு" என்றாள் அவள்

"நான் எதற்கு கேட்க வேண்டும்!?" எனும் வீராப்பு இருந்தாலும்; அவள் மீதான அன்பும், காதலும் ஒரு வார பிரிவில் பன்மடங்காக பெருகிய பாவத்தை கரைக்க

"சரி சாரி போதுமா!"

"அப்போ எனக்கு அந்த சாரியும் ஜூவல்ஸும் வாங்கி தருவியா!?"

"பார்க்கலாம் விணுமா வாடி நம்ம வீட்டுக்கு போகலாம்!"

அன்பாய் அழைக்க.அன்னை கற்று கொடுத்த

"வீம்பாய் இரு! வீராப்பு கொள்!!"

என்ற வாசகம் எல்லாம் காற்றோடு கரைய கட்டியவன் பின்னால் நாய்குட்டியாய் சென்றிருந்தாள்.

"எவ்வளவு சொன்னாலும் அவரு வந்த உடனே நாய் குட்டிமாதிரி ஓடிடுறா என்ன ஜென்மமோ!?" மகளை வசவு பாடிக்கொண்டே அறைக்குள் சென்றிருந்தார்.

தங்கள் வசதிக்கு குறைவான ரக்ஷனை அவருக்கு பிடிக்காததே இதற்கு காரணம்.

**********************************

"மச்சான் எனக்கு ஒரே எக்சைட்மெண்ட்டா இருக்கு!"

"எதுக்கு ரபீக்!?"

"எனக்கு இன்னைக்கு எங்கேஜ்மென்ட் இல்ல அதுதான்!"

"எங்களுக்கும் கூட ஒரே ஆச்சர்யம் மச்சான்!"

"என்னடா ஶ்ரீ உங்களுக்கு ஆச்சர்யம்!?" ரபீக் ஆர்வமாக

"இல்லை உனக்கும் கூட எங்கேஜ்மென்ட்னு தான்!!" என்றிட

நண்பர்கள் கூட்டத்தில் வெடி சிரிப்புதான்.


"டேய் ஶ்ரீ கல்யாணம் முடியுற வரைக்கும் சங்கத்து ரகசியத்தை வெளிய லீக் பண்ணிடாதடா!"

கெஞ்சினான் மாப்பிள்ளை.

"நீ எதுக்கு மச்சி இந்த ஶ்ரீ கிட்ட கெஞ்சிட்டு இருக்க!?"

அப்துல்லா முன்வர

"அப்பா ராசாக்களா எவனும் என் கல்யாணம் முடியுற வரைக்கும் உங்க வாயை திறக்காதீங்கடா.அதும் முக்கியமா நான் மாப்பிள்ளைடா அவமுன்னாடி மட்டும் என் மானம் போய்டுச்சு...!"

"ஏன் ரபீக்கு தங்கச்சி திட்டுமா!?" ஜோ கேட்க

"யாரு அவளா அதெல்லாம் பண்ணமாட்டா!"

"அப்பறம் வேற என்ன பண்ணும் தங்கச்சி!?"

"வேற என்ன பண்ணுவாளா மச்சான் மூஞ்சிய பாக்கறப்போ எல்லாம் கலாய்ச்சி தள்ளிடுவா தெரியுமா!?" பாவமாக ரபீக் கூறியதை

"அதுகூட பரவாயில்லடா எங்க அம்மா பொண்ணு ரொம்ப சாது வாயே பேசத் தெரியாதுன்னு சொல்லிட்டு இருக்கு.ஆனா அவ என்னையே எப்படி காலாய்கிறா தெரியுமா மச்சான் !?"

சிரிப்பலை தான் அங்கே...

"என்ன யங் பாய்ஸ் ஒரே சிரிப்பா இருக்கு? உங்க சிரிப்பு சவுண்ட் தான் மண்டபத்துக்கு வழியே காண்பிக்கும் போல அப்படி இருக்கு!"

"வாங்க பிரோஃபசர்!"அனைவரும் ஒன்றாக வரவேற்க.

"ஹேய் இது என்ன லேபா ஒரே கோரஸ் பாடிட்டு இருக்கீங்க உட்காருங்க பாய்ஸ்!"

என்றவர் தானும் அவர்களுடன் இணையாது வந்தவர் வந்த கையோடு மணமக்களை வாழ்த்தி அங்கிருந்து சென்றிருந்தார்.

"மாப்பிள்ளை உன்னை ஸ்டேஜ்கு கூப்பிடுறாங்க நீ கிளம்பு நான் போய் என் ஆளை பார்த்து ரிசிவ் பண்ணிட்டு வர்றேன்!" என்றபடி ஜோ கிளம்ப.

"இருடா மச்சான் நானும் வர்றேன்!" அவனுடன் தானும் கிளம்பினான் ஶ்ரீ.

"எப்போ வர்றேன்னு சொன்னாங்கடா?"

"ஃபங்ஷன் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி வருவேன்னு சொன்னா ஆனா ஆளைக்காணலை!" ஜோ வருத்தமாக.

"அதெல்லாம் டிராஃபிக்ல இருப்பாங்க டா நீ ஒன்னும் கவலை படாத ஓகே!"

"அவமட்டும் வரலைடா கூடவே அவ ஃப்ரெண்ட்ஸ் கூட வர்றாங்க.இந்த ஷ்ரவனும் வர்றேன்னு சொன்னவன் இன்னும் காணலை!" வரிசையாய் அடுக்க.

ஷ்ரவனின் கார் வருவதை கண்ட ஜோ ஓட்டம் எடுத்தவன் காற்றோடு கத்திவிட்டு சென்றான்

"மச்சான் உனக்கு என் ஆளை தெரியும் இல்ல.அவ வந்தா நான் ஷ்ரவனை ரிசீவ் பண்ண போயிருக்கேன் சொல்லிடுடா....!"

"இவன் ஒருத்தன் இப்படி தனியா விட்டுட்டு போய்ட்டான் பாவி!"

ஶ்ரீ புலம்பிய நேரம்

"பாஸ் கொஞ்சம் நகருங்க..!"

காற்றில் ஆடும் கற்றை கூந்தலுக்கு இணையாக காதில் தொங்கட்டான் ஆட்டம் போட முடியை ஒதுக்கி ஒற்றை பக்கமாக விட்டுக்கொண்டே இவனை முறைத்து நின்றாள் அணங்கவள்.

தன் கண்முன்னே ஒருவன் ஆடா பார்வை பார்ப்பதை கண்டு; சற்று கூச்சம் வந்தாலும், கோபமும் கூட இலவச இணைப்பாக வந்துசேர

"ஏய் என்ன!?"
என்றவாறு எகிறினாள் அவள்.

அம்பகம் ரெண்டும் அம்புகளாகி இவன் மீது கணையை ஏவ.

தன்னை மறந்து நின்ற நேரம்.

உள்ளங்கால் முதல் உச்சம் தலை வரை ஒரு வலி 'சுர்ரென்று' ஏற.

அப்போது தான் உணர்ந்தான் அவன் அணங்கு என எண்ணி இருந்த கீர்த்தி 'அராத்து' என்பதை.

'ஆம்'

அவன் பாதத்தில் தன் ஹீலின் முனையை வைத்து ஒரு மிதி மிதித்து விட்டு ஓடி இருந்தாள் அவள்.

"அடிப்பாவி ஒரு ரெண்டு செகண்ட் பார்த்தது தப்பா? அதுக்காடி இப்படி என் காலை பதம் பார்த்த பாதாகத்தி!"

வலியில் ஶ்ரீ கத்த.

"அண்ணா நீங்க ரெண்டு செகண்ட்டா இல்ல கடந்த அஞ்சு நிமிசமா அவ கூப்பிட்டதை கூட காதுல வாங்காம ஆன்னு பார்த்திட்டு இருக்கீங்க!"

கிறிஸ்டி வர

"அது ஒன்னும் இல்லம்மா கிறிஸ்டி...!"

ஏதோ சமாளிப்பாக கூறவேண்டுமே என சொல்ல வர.

"கேவலமா சமாளிக்காத மேன்!" என்றபடி திரும்பி வந்தாள் கீர்த்தி.

"இல்லங்க..." என்றாலும் பார்வை மட்டும் மாறவில்லை அவனிடம்.

"இங்க பாருடி கிறிஸ்டி உன் ஆளோட ஆளு...!"
அவள் அவ்வாறு சொல்லவும் ஶ்ரீ முழிக்க.

அவன் முழியில் தன் தவறை உணர்ந்து "சாரி உன் ஆளோட பிரெண்டுன்னு நீ சொன்னதால தான நான் இவனை சின்ன காயத்தோட விட்டேன் இவனை பாரு திரும்ப திரும்ப என்னை முறைக்குறான்!" முறையிட.

"என்ன ஶ்ரீ!?" என்ற அழுத்தமான குரல் இவர்களின் குழுவிற்கு பின்னால் கேட்க.

"யார் அந்த நபர்!?" என்பதை காண்பதற்கு முன்பே

"சும்மா பேசிட்டு இருக்கேன் மச்சான் நீ எப்போடா வந்த!?" என்றபடி பெண்கள் கூட்டத்தை தாண்டிக் கொண்டு நல்லபிள்ளை போல ஷ்ரவன் அருகே வந்தான் ஶ்ரீதரன்.

நண்பனின் முறைப்பில் உதறல் எடுக்க.

உண்மையாகவே கீர்த்தியின் அழகு அவனை கட்டி இழுத்தாலும்; ஒரு பெண்ணை தான் அவ்வாறு பார்த்தது 'தவறு' தானே என எண்ணி

"சாரி மச்சான்!" என மன்னிப்பை வேண்ட.

ஷ்ரவனோ கீர்த்தியின் புறம் கண்களை காண்பிக்க

"சாரிங்க..!"

மனமார மன்னிப்பை வேண்ட

"இட்ஸ் ஓகே சொல்லமாட்டேன். ஆனால் இனிமேல் யாரையும் இப்படி பார்த்து பயம்காட்டாத மேன்!"

என்றவளோ கைகளை கட்டிக் கொண்டு அங்கே நடப்பதை சுவாரஸ்யமாக கண்டிருந்தவள் சும்மா இராது

ஷ்ரவனை காண்பித்து,"ஹேய் ரித்து நீ சொன்ன ஃபேர் அண்ட் ஹாண்டம் இவரு தானாடி!?" என்க.

ஆணவனின் பார்வைக்கு அஞ்சி கிறிஸ்டி பின்னால் ஒழிந்து கொண்டாள் அவள்.

'ஐயோ! என் மானமே போய்டுச்சு இவளால' மானசீகமாக தலையில் தட்டிக் கொண்டே கிறிஸ்டியின் முதுகில் கிள்ளிவிட.

அவளோ,"பாவி எதுக்குடி கிள்ளின!?" குதித்துக் கொண்டு துள்ளி விலக.

கடல் பச்சை வர்ணத்தில் ஒரு பார்ட்டி வியரை அணிந்து பொம்மைக்கு ஜோடனை செய்தது போல நின்றிருந்த ரித்துவை ஒரு நொடி மேலிருந்து கீழாக அழுத்தமாய் பார்த்தவன்

"தன்னை பார்த்தானா!?" என ரித்து உணரும் முன்னே தன் உதவியாளன் உடன் உள்ளே செல்ல தொடங்கி இருந்தான்.

"வாங்க உள்ள போகலாம்!" என்ற ஜோ

"ஏன்டா மச்சான் அவனை பத்தி தெரிஞ்சும் இந்த வேலையா பார்ப்ப!?"

ஶ்ரீயை திட்டிக் கொண்டே உள்ளே அழைத்து சென்றான்.

ஷ்ரவனை பொறுத்தவரை பெண்கள் பொக்கிஷங்கள் அவர்களை பாதுகாக்க வேண்டும்.

அன்னையின் அசௌகரியங்கள் பலவற்றை கண்டு வளர்ந்தவன் என்பதால்;

பெண்கள் செய்யும் ஆரோக்கியமான செயல்களை ஆதரித்து முதுகெலும்பாக இருக்கவே ஆண்கள் இங்கே படைக்கப்பட்டதாக நம்புபவன்

அதுமட்டுமல்ல பெண்களின் மீது சிறு பார்வை தவறாக படிந்தால் அல்ல; படுவது போல தோன்றினாலும்; முனுக்கென்று கோபம் கொள்பவன்.

அதனால் தான் ஶ்ரீக்கு இந்த பேச்சு.

அனைவரும் உள்ளே செல்ல.

"வாங்க தல!" என்றவாறு ஷ்ரவனை வரவேற்றான் ரபீக்

"வாழ்த்துக்கள் ரபீக்!" என்றவன் கைகொடுக்க.இருவரும் கை குழுக்கிக் கொண்டனர்.


ஜோ தான் அறிமுகப் படலம் தொடங்கினான்.

"மச்சான் இதுதான் என் பியான்சே" என கிறிஸ்டியை அறிமுகம் செய்திட.

இவங்க அவளோட ஃப்ரெண்ட்ஸ் இவங்க 'பிரீத்தா' என்றதும்;


ரித்து "வாழ்த்துக்கள் அண்ணா!" என்க

"தாங்க்ஸ்மா" என்றான் மாப்பிள்ளை என்பதால் கலையாக இருந்தான் ரபீக்.

அப்துல்லா கூட கேட்டிருந்தான்,"மச்சான் பொண்ணு பார்க்க போய்ட்டு வந்த பின்னாடி இன்னைக்கு தான் குளிச்சியாடா!?" கேலியாக கேட்டிருந்தான்.

தொடர்ந்து ஜோவே "இவங்க கீர்த்தனா" என்றதும்

"வணக்கம் அண்ணா!" என்று மரியாதையாக கீர்த்தி கூற

"புள்ள மரியாதை தெரிஞ்ச பொண்ணா இருக்குப்பா!" ரபீக் கூற.

பாவம் அவளிடம் மிதி வாங்கிய ஶ்ரீ தான் அரண்டு போனான்.

பெண்களை தன் வருங்காலத்திடம் அறிமுகம் செய்தவன் அவர்களை அழைத்து வர.

ஜோ அருகே கிறிஸ்டியை அமர வைத்துவிட்டு சுற்றி இருந்த
நாற்காலிகளில் அனைவரும் வட்டமாக அமர.

எதேர்ச்சையாக கீர்த்தி அருகே தன் ஜாகையை அமைத்தான் ஶ்ரீ.

கீர்த்தி அதனை கண்டும் காணாது இருந்துகொள்ள.

விழா தொடங்கிட அந்த இடமே சந்தனத்தாலும் பன்னீராலும் மணக்க.

அத்துடன் அத்தர்,ஜவ்வாது போன்ற வாசனை பொருட்களோடு,பூக்களின் மணமும் வேறு ஒரு மணமும் ஆளைத் தூக்க.

அதில் மயங்கிய ரித்து

"ஹேய் இந்த ஸ்மெல் நல்லா இருக்குல்ல கீர்த்தி!?"

தன் அருகில் இருப்பவள் தோழி தான் என்று நம்பி அவளுடன் பேசிக்கொண்டே திரும்பியவள் 'ஆனந்தமாய்' அதிர்ந்தாள்.

அவள் அருகே இருந்தது என்னவோ அவளின்,"அகத்தை வேரறுக்கும் வேந்தன் தான் அங்கே இருந்தான்!"

அதுவரை பேசிய வாய் 'பட்டென்று' பூட்டி கொள்ள.

"ஆமாம் இந்த ஸ்மெல் நல்லா தான் இருக்கு!"

அவளின் கேள்விக்கு பதில் உரைத்து சாதாரணமாக அமர்ந்து கொண்டான் கள்வன்.

"இப்போ யாரு பேசினா!?" என பெண்ணவள் பயந்து சுற்று புறத்தை ஆராய.

அதைக் கண்டு யார் கண்ணிலும் சிக்காது கள்ளமாய் புன்னகை செய்த ஷ்ரவன் பெரும் நடிகன் தான்

அப்துல்லா இவர்களிடம் பேச தொடங்கும் முன் கைகளில் பிள்ளையுடன் வந்து நின்றாள் முக்காடு இட்ட பெண் ஒருத்தி.

"ஹேய் ரம்மு வாடி என்ன வேலை எல்லாம் முடிஞ்சதா!?" அக்கறையாக அப்துல்லா கேட்க.

"ஆமாம் வர்ற இடத்தில பிள்ளைய பிடிக்கிறது கிடையாது; அது ஏதாவது வேலை பார்த்தா துணைக்கு கூட வரணும் தெரியாது!"

"இல்லடி எனக்கு எப்படி தெரியும்!?"

"ஆமாம் உனக்கு ஒன்னுமே தெரியாது தான் இது உன் பிள்ளை தானே? யாராவது கேட்டா இப்படி பதில் சொல்லு ஊரு உன்னை மெச்சுக்கும்!"

"அடியே ஒரு குழந்தை பையனுக்கு குழந்தையான்னு சொல்லும் வேற என்ன சொல்லும்!?" என்றிட.

"நீ ரொம்ப பேசுற இந்தா உன் பிள்ளை இதை நீயே வச்சு பார்த்துக்க நான் போறேன்!"

"நீ எங்கடி போற!?"

"வேற எங்க போவாங்க என் அத்த பையன் துபாய் ஷேக் மாதிரி ஜம்முனு வந்திருக்கான் அவன்கிட்ட பேசிட்டு வர்றேன்!"

"ஏய் அவன்கூட எல்லாம் நீ பேசவேண்டாம் இனிமே பிள்ளையை மட்டும் இல்ல உன்னையும் கூட தூக்கிட்டு சுத்துறேன் இங்க உட்காருடி!!" என்று தன் அருகிலே ஒரு நாற்காலியை போட்டு அவளை அமர்த்தியவன்,அத்தோடு நில்லாது ஓடி சென்று ஐஸ்கிரீம் வாங்கிவந்து கொடுக்க.

'அது' எனும் பார்வையோடு உண்ணத் தொடங்கினாள்,அப்துல்லாவின் மனைவி ரம்ஜான்.

"ஹா...ஹா..ஹா....." என்று சிரிப்பொலியில் தான் சுற்றம் கண்டவள் அங்கே தன்னை மறந்து பூவாய் சிரித்த ரித்துவை ஆதுரமாய் கண்டாள்.

உண்மையாகவே உயிர் பெற்ற சிலை ஒன்று புன்னகை செய்வது போல் இருந்தது அவளின் அழகு.

கொழு கொழு தேகம், வெள்ளியை குழைத்து குங்குமப்பூவில் தோய்த்த தேகமாய் மின்னியது அவள் மென்னுடல்.

"இவங்க...?"

கைநீட்டி மனைவி கேட்ட பின்புதான் நடந்த கலவரத்தில் அறிமுகபடலத்தை தான் மறந்ததை அறிந்து

முதலில் ஜோ, கிறிஸ்டியை காதலர்கள் என்று கூற.

அடுத்து கணவன் அறிமுகம் செய்வதற்கு முன்பே "இருங்க நானே சொல்றேன்..!"

"இவங்க ஶ்ரீ அண்ணா இவங்க அவரோட லவ்வர்!"

'ஐயோ!' இதை கேட்ட ஶ்ரீ யின் முகம் மின்சாரம் இல்லாது ஒளியை மின்ன செய்ய

"அப்பறம் இவங்க ஷ்ரவன் அண்ணா அவங்களோட லவ்வர் கரெக்ட்டா!?"

ரித்துவிற்கு கண்களில் 'கனவுகள் மின்ன' அருகில் இருந்தவனை ஓரக்கண்ணால் பார்த்து தனக்குள் நினைவுகள் சேர்த்திருந்தாள்.

கீர்த்தி 'இவனா?' என்று ஶ்ரீ யை ஒரு பார்வை பார்க்க

ஷ்ரவனோ 'என்ன நினைத்தான்?' என்பது அவனுக்கு தான் தெரியும்.

"கவுத்துட்டியே காதம்பரி! கரெக்ட்டா எல்லாமே தப்பு"

"என்ன சொல்றீங்க!?"

"அப்பறம் அவங்க ரெண்டு பேரும் கிறிஸ்டி பிரெண்ட்ஸ்!"

"ஓ அப்படியா! ஆனா அவங்க இப்படி பேரா உட்காரவும் ஒரு சின்ன கன்ஃப்யூஷன் சாரி!" என்றவள் பேச்சினை வளர்க்க.

ஐஸ்கிரீம் தீர தீர ஒவ்வொருவராக சென்று வாங்கிவர.

ரித்து "வேண்டாம்!" என்று மறுத்துவிட்டாள்.

"ஏன்டி வேண்டாம் சொல்ற? உனக்கு பிடிச்ச பிளாக் கரெண்ட் கூட அங்க இருக்குடி!" என்றாள் கீர்த்தி.

அவள் கையில் ஶ்ரீ வாங்கி வந்த கோப்பை இருக்க. ரம்ஜானுக்கு இதோடு நான்கு ஐஸ்கிரீம் அப்துல்லா வாங்கி வந்து டயர்டாகி இருந்தான்.

கிறிஸ்டி ஜோ இருவரும் ஒற்றை கோப்பைக்குள் குளம் வெட்டினர்.

அவளுக்கோ "அவன் கைகளால் வாங்கிவராத ஐஸ்கிரீமை ருசிப்பதில் விருப்பம் இல்லை!"


கீர்த்தி, ஶ்ரீயை முறைக்க

கிறிஸ்டி ஜோவை விட்டு கண்ணை நகர்த்தவில்லை.

மேடையில் நிச்சய செய்தி வாசிக்கப்பட கண்களாலேயே 'நமக்கான நாள் எப்பொழுது!?' என்று இருவரும் தூதுவிட.

சுற்றத்தை நன்றாக பார்த்த ரித்து,

"இருக்கட்டும் கீர்த்தி நீங்க சாப்பிடுங்க!" என்றவள் சுற்றிவிட்டு வருவதாக கூறி அங்கிருந்து செல்ல.

மெதுவாக அங்கிருந்து நடக்க தொடங்கியவள் அழுகையை நிறுத்தாது அழுதிருந்த குழந்தையின் புறம் நடக்க.

கூட்டத்தில் இருந்து நகர்ந்திருந்தான் ஷ்ரவன்.

கண் பார்வையில் அவள் தெரியும் தூரத்தில் இருந்தவன் அவளை பார்த்திருந்தான்.

அழுது சிவந்த முகத்தோடு இதழை பிதுக்கியது அந்த இரண்டு வயது வெண்ணெய் கட்டி.

குழந்தையின் தாய் என்ன செய்தும் மாறாத பிள்ளையின் முகம் இவள் அதன் அருகே முகத்தை மூடிக்கொண்டு விளையாட்டு காண்பிக்க.

ஒரு ஐஸ்கிரீமை தின்று முடித்து மற்றையது கேட்டு அடம்பிடித்த சின்ன சிட்டு அதையே மறந்து சிரிக்க.

இவளுடன் சேர்ந்து தானும் "பே" சொல்லி விளையாடியது.

குழந்தை சிரிக்கவும் "பாய்" சொல்லி நகர்ந்தாள் இவள்.

தூரத்தில் இருந்து இதனை கவனித்தவன் மனதில் 'இன்ப சாரலா?' என்பது அவன் தான் கூறவேண்டும்.

நடந்து வந்தவளின் நடை ஒரு நொடி ஐஸ்கிரீம் கொடுக்கும் இடத்தை ஏக்கமாய் தழுவி வந்தது.

"இம்ஹிம்...." பெருமூச்சு அவளிடம்.

"தான் மட்டும் எதற்கும் ஆசை கொள்ள கூடாது போல!" விரக்தியாய் எண்ணிக்கொண்டு நகர தொடங்க.

"ஐஸ்கிரீம் வேணுமா!?"
எனும் குரல் அவளை இன்பத்தில் மூழ்க செய்தது.

"ஹா..."என்றவாறு திரும்பியவள்

ஒன்று வீதம் இரண்டு கைகளில், இரண்டு ஐஸ்கிரீம்களை சுமந்து கொண்டிருந்த தன்னவன் அன்பில் மூழ்கி இரண்டையும் வாங்கிக்கொள்ள.

அவனோ தயக்கம் சிறிதும் இன்றி

"ஒன்னு எனக்கு!" என்றான்

'அசடாய்' புன்னகை செய்து ஒன்றை அவனிடம் நீட்டிவிட்டு

தயக்கமாக,"உங்களுக்கும் பிளாக் கரெண்ட் பிடிக்குமா!?" என்க

"எனக்கு ஐஸ்க்ரீம் பிடிக்காது!" என்றான்.

"ஓ ஆனா இப்போ சாப்பிடுறீங்க!?"

"கேட்டேன் குடுத்தாங்க வாங்கிட்டு வந்தேன். பட் ரெண்டு ஐஸ்க்ரீம் ஒரே நேரம் சாப்பிட கூடாதுன்னு ரூல்ஸ் பேபிஸ்கு சொன்னா மட்டும் போதுமா!?" என்றவன் சுவாதீனமாக தன் கோப்பையை காலி செய்தான்.

"ஐயோ இன்னைக்கு நைட்டு என்ன இவன் முன்னாடி பல்பா வாங்கி குமிக்கிறோம்!?" என்று சங்கடமாய் உணர.

அவனுக்கு அதெல்லாம் கிடையாது போல
சிறிதாய் புன்னகை செய்துவிட்டு திரும்பிக் கொண்டான்.

மணமக்களை வாழ்த்தி புகைப்படம் எடுத்துக்கொள்ள.

ஷ்ரவன் மேடைக்கு வராமல் கீழேயே இருக்க.அவனுடன் நின்றுக்கொண்டாள் ரித்து.

"நீ இல்லா இடத்திற்கு நானும் செல்ல மாட்டேன்!" என்பதாய்.

ஆனால் ரபீக்'விடவேண்டுமே?'

வருங்கால மனைவி ஃபாத்திமா உடன் கீழிறங்கி வந்தவன் ஷ்ரவனுடன் தன் குழுவை நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டான்.

ஒருவழியாக விழா நிறைவு பெற அன்றைய நாள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அழகாய் மாற.

அங்கிருந்து செல்லவே மனமில்லாது கடைசியில் பாய் வீட்டு பிரியாணி உடன் விழாவை நிறைவு செய்து இல்லம்
சென்று சேர்ந்தனர்.

மறுநாள் ஞாயிறு என்பதால் எந்த அவசரமும் இல்லாமல் பொறுமையாகவே சென்றனர் அனைவரும்.

ஶ்ரீ,"ஒரு முறை பார்க்க மாட்டாளா!?" என கீர்த்தியை பார்க்க.

ரித்துவோ தன் கைப்பையை ஒரு முறை தடவி பார்த்தாள்.

இருவரும் இணைந்து ருசித்த ஐஸ்க்ரீம் கோப்பைகளை அதற்குள் தான் பதுக்கி இருந்தாள் பாவை.

"மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு எப்பொழுது கிடைக்கும் தேவனே!?"

எனும் கேள்வியை அவனை நோக்கி செலுத்திவிட்டு கிறிஸ்டி உடன் கிளம்பினாள் ரித்து.
 
Top