Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 11

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
பொன்னார் மேனியனாய் கிழக்கில் கதிரை பரப்பி ஆதவன் வந்துதிக்க பூலோக வாசிகள் சடைவாய் எழுந்தனர்.

ஞாயிறின் ஆலிங்கனம் அது!

ஞாயிறு என்றாலே ராகவனுக்கு உற்சாகம் தான்.ஒரு கம்பெனியில்
அக்கௌன்டன்டாக இருப்பவர்.

வார விடுமுறையில் இந்த ஒரு நாளை எதிர்நோக்கி தான் அந்த வாரத்தை கடத்தும் வளர்ந்த குழந்தை.

நண்பனோடு அன்றைய நாளை கழிப்பதில் அவருக்கு பெரும் சந்தோஷம்.

அன்றைய தினம் நண்பன் தயாளன் வீட்டிலோ அல்லது ராகவன் வீட்டிலோ கூடி கும்மியடிப்பர் இரண்டு குடும்பமும்.

அதுபோல் இன்று நண்பன் தயாளன் இல்லம் செல்வதற்கு தயாராகி வந்தார் மனிதர்.

அவர் முகத்தில் தான் எத்தனை எதிர்பார்ப்பு விடுமுறை நாட்களில் தாத்தா, பாட்டியை தேடி ஓடும் சிறுவனின் எதிர்பார்ப்பு அவரிடம்.

இவர்கள் நால்வரும் சென்று தயாளன் வீட்டில் இறங்க.

"வாங்க அண்ணா!" என்றபடி முதலில் வந்தவர் தயாளன் மனைவி பார்வதியே.

"ஆமாம்மா.."


அன்பாய் கூறி வீட்டிற்குள் ராகவன் செல்ல.

"நீங்களும் உள்ளே போங்கடா அத்தை இதோ வந்துடுறேன்!" பிள்ளைகளை உள்ளே அனுப்பிட.

தன் தோழியான கனியை பிடித்துக் கொண்டார் பெண்மணி.

ராகவன் உள்ளே சென்ற மறுகணம் அவர் முன்பு வளையல் அணிந்த ஒரு கரம் கிண்ணத்தை அன்பாய் நீட்டி நின்றது.

"மாமா இந்தாங்க சூப்பர் சூப் குடிங்க!"

தந்தை தயாளன் இருக்க,இவருக்கு மட்டும் கொண்டுவந்து கொடுத்தாள் தயாளன் பார்வதி தம்பதியின் புதல்வி வெண்ணிலா.

அன்பாய் அவள் கொடுத்தாலும்,உள்ளே ஓர் வில்லங்கம் சேர்ந்தே இருக்கும் என்பதை உணர்ந்த ராகவன் குடிக்காது கைகளில் வைத்துக்கொண்டு.

'இன்று என்னவாக இருக்குமோ!?' எனும் யோசனையில் இருக்க.

ராகவன் தயங்குவதைக் கண்டவள் கையில் இருந்த கிண்ணத்தை ஒரே மூச்சில் குடித்து காலி செய்து மஞ்சளாக மீசைவரைந்ததை புறங்கையால் துடைத்துவிட்டு.சமையல் அறை சென்றவள் கையில் மீண்டும் ஒரு கிண்ணம் இருந்தது.

இப்பொழுது சிறிது தயக்கம் நீங்க அதனை எடுத்துக் கொண்டார் ராகவன்.

வாயில் வைத்ததும் என்னவோ வழுக்கிக் கொண்டு சென்றது கிண்ணத்தை எட்டிப்பார்க்க அதுவோ புதுவித கலவையாக இருக்க.

"இது என்ன நிலா!?"

ராகவன் கேட்டிட

"மாமா இதை தெரியலையா!?"

மனிதர் பாவம் வாயிற்குள் சென்றதை விழுங்கவும் முடியாமல்; துப்பவும் முடியாமல் கவலைக்கிடமான நிலைக்கு செல்ல.

இவளோ சாவாதானாமாக கேள்வி கேட்கிறாள்.

"தெரியலையா மாமா பரவாயில்லை நானே சொல்றேன் இதுதான் வாழைப்பழ சூப்!"
என்றாளே பார்க்கலாம்

அவ்வளவு தான் ராகவன் நண்பனை நோக்கி,

"பிள்ளையை பெத்துக்க சொன்னா சரியான தொல்லையை இல்ல பெத்து வச்சிருக்க பாவி!" என்பதாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு நிலாவின் முகம் பார்த்து


"ஏம்மா நிலா.."

"சொல்லுங்க மாமா.."

"ஏன் இந்த மாதிரி டிஷ் எல்லாம் உங்க அப்பனுக்கு கொடுக்க கூடாது.அவன் தான் எதையும் தாங்கும் வயிறன்!"

நண்பனை சிக்கவைக்கும் எண்ணத்தோடு கூற.

"எங்க அப்பாக்கு தினம் இது போல ஒரு டிஷ் பண்ணி கொடுப்பேன்.ஆனா உங்களுக்கு வீக்லி ஒன்ஸ் தானே பண்ணமுடியும். அதுதான்!" குரலில் பெருமை கூத்துவேறு.

இதை கேட்டு தயாவின் முகத்தை ராகவன் பார்க்க அவரோ

"பார்த்தியா நண்பா உன் ஆருயிர் தோழன் எப்படி வந்து வகையா சிக்கி இருக்கேன்!?" பரிதாபமாக விழித்தார் மனிதர்.

'அடப்பாவமே!'என எண்ணுவதை தவிர வேறு என்ன சொல்லமுடியும் நல்லவேளை ரித்து இது போல் சமைப்பது இல்லை அதில் ஒரு ஆத்ம நிம்மதி.

ஞாயிறின் அடையாளமாய் இறைச்சியின் படையெடுப்பு தயாராகிட.

அதனுடன் போரிட அனைவரும் கூடத்தில் பாய் விரித்து அதில் ஒன்றாய் அமர்ந்தனர்.

இன்றைய நாளுக்காக ஏங்கியே ஒரு வாரம் கழியும் அவர்களுக்கு. ஒன்றாய் கூடி பேசி சிரித்து பிடித்த உணவை உண்டு சொர்கம் தான் அது.

இதோ இப்பொழுது தயா வீட்டு வாழை இலை பளிச்சிட.

ரித்து உணவு பாத்திரங்களை எடுத்து வர.
தண்ணீர்,தயிர்,உப்பு,கரண்டி வகைகளை தூக்கிக் கொண்டு பின்னால் வந்தாள் நிலா.

உணவு அவரவர் பரிமாறிக்கொள்ள அன்றைய விருந்து தொடங்கி இருந்தது.

பார்வதி தான் முதலில் தொடங்கினார்
"கனி ஏன்டி சோகமா இருக்க?என்ன ஆச்சுன்னு கேட்டா அப்பறம் சொல்றேன்னு உள்ளாற வந்த.வந்ததுல இருந்து எதும் பேசாம இருந்தா என்னடி அர்த்தம்!?"

பேச்சில் இருக்கும் அக்கறையும்,
நெருக்கமும் கூறிவிடும் அவர்களின் அன்பின் ஆழத்தை.

பாரு கேட்ட நொடி அன்று நடந்த சம்பவத்தை ஒப்பிக்க தொடங்கி இருந்தார் கனி.

"இல்லைடி பாரு அன்னைக்கு நாங்க ஜாதகம் பார்க்க போனோம் இல்ல அங்க...." என தொடங்கி ஒவ்வொன்றாக வரிசையாய் கூறிட.

கண்கள் இலையில் இருந்தாலும்; காதுகளை அன்னையின் புறம் பதித்திருந்த பிரவீன் இந்த கதையை முழுதாய் கேட்டுக்கொண்டான்.

அதிலும் அவன் குறையை காணாது நிறையை காண் பைத்தியக்கார இளைஞர் கூறிய தகவல் சங்கிலித் தொடராக கனி மூலம் பார்வதியோடு சேர்ந்து பூனையும் இந்த செய்தியை அறிந்து கொண்டான்.

"தெரிந்தவன் சும்மா இருப்பானா!? ரித்து, நிலாவின் காதுகளில் இதனை ஓத!"

ரித்துவின் நினைவில் வந்தது எல்லாம் அவன் தான், அவன் ஒருவன் தான், அவன் மட்டும் தான் மின்னி மறைந்தான்.

அவளை சிறு பார்வையில் பற்ற வைக்கும் பகலவன்.

எட்டிக் கொடுத்தாலும்,கொட்டிக் கொடுத்தாலும் காந்தார குழகனை கூர்விழியால் ஆழ்மனம் கொய்த கள்வனை மட்டுமே நாடி ஓடியது பிரபையளின் மனம்.

"அவன் எதற்காக தன் மனதில் தோன்றுகிறான்!?"

அவன் மீது ஒரு ஈர்ப்பு உண்டு.ஆனால் ஒரு வேலை அதையும் தாண்டிய அன்பு,நேசம், பாசம் இப்படி "வேறு எந்த பரிணாமம் கொண்டதோ ஈர்ப்பு!?" அவளே அறியாள்

"ஈர்ப்பா!? பிரியமா!?"

"தெளிந்த குளத்தில் கல் எறிந்த கயவன் அவனே! அதுமட்டும் திண்ணம்!!"

ஆயிரம் சிந்தனை செய்தாலும் அன்றைய தினம் ஓடி அடைய.ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் தங்கள் நினைவுகளில் சுழல.

மகனின் பொறுப்பில் மகளையும் மனைவியையும் இல்லம் அனுப்பிய ராகவன் தயாளனுடன் பேசலானார்.

இவரும் பைத்தியம் போல தெரிந்த சித்தனை பற்றி கூற.

"கண்டிப்பாக நம்ம பிள்ளைக்கு நல்ல இடம் தகைஞ்சு வரும் ராகவா நீ எதையும் நினைக்காமல் போய்ட்டு வா!"ஆறுதல் உரைத்து அனுப்பி இருந்தார்.

இதையே தான் பார்வதியும் கன்னிகாவிற்கு சொல்லி அவரை தேற்றி அனுப்பி வைத்தார்.

**********************************
மீண்டும் ஒரு காஃபி ஷாப்..

தன் எதிரில் இருந்த ரேமா முகத்தை அழுத்தமாய் பார்த்தான் சாத்விக்.

"என்ன சொல்லணும் சொல்லுங்க!?"

"நான் சொல்றதை சொல்லி ரொம்ப நாள் ஆயாச்சி இனி நீ தான் சொல்லணும்!

"இல்லை அது வந்து....!"

"நான் உங்களை பார்க்கவே இல்லை உங்க மேல எனக்கு பீலே இல்லைன்னு பீலா விடலாம்னு நினைக்காத.ஏன்னா நான் பார்க்காத போது நீ என்னை குறுகுறுன்னு பார்க்கற ரிசப்ஷன் வீடியோ இருக்கு பார்க்கறியா!?" என்றான் மிரட்டலாய்.

அவளோ,"ஹா.... அதை வச்சு நான் உங்களை தான் பார்க்கறேன் எப்படி தெரியும்? நீங்க பொய் சொல்றீங்க!" என்றிட

"ஹோ... யாரு நான் பொய் சொல்றேனா!?" என்றவன் கைபேசியை எடுத்து காணொளியை ஒளிபரப்ப.

அவனை நோக்கி,"கண்களால் அவள் விடும் தூது எல்லாம் ஆச்சு பிசகாமல் திரையில் தெரிய!"

நாணம் வந்து அவளை தாக்க.

"சும்மா பார்த்தேன்..!"

"சும்மா பார்க்கலை நீ என்னை சுத்தி சுத்தி பார்த்திருக்க.அதுவும் எத்தனை இடத்தில் நின்னு பார்த்திருக்க பார்த்தியா.!?"


"அதெல்லாம்...!?"

"என்ன ஒன்னுமில்லை சொல்லபோறியா!?" படக்கென்று ஆணவன் கேட்டுவிட.

அவளுக்கோ முகம் கூம்பியது.

மெதுவாக தன் எண்ணங்களை பகர்ந்தாள் ரேமா.

"எனக்குன்னு யாரும் கிடையாது. ஆனால் உங்களுக்கு குடும்பம் மட்டும் இல்ல பெரிய பேரும் புகழும் நிறைஞ்சு இருக்கு.அப்படி இருக்க உங்களை நான் எப்படி....!?"

"என்ன சொல்ல வர்ற? அதை முழுசா சொல்லிடு!"

ஆற்றாமையில் வெடித்தது அவன் குரல்.

"இல்லை இத்தனை ப்ளஸ் இருக்க உங்களை எதுமே இல்லாத நான் லவ் பண்ணினா அது நடக்குமா!? இதெல்லாம் வீண் கற்பனை தானே.நாளைக்கு உங்க அப்பா அம்மா சொந்தம் பந்தம் என்னை ஏத்துக்குமா என்ன!?"

"அதெல்லாம் நீ பார்க்காத எங்க அப்பா அம்மா கண்டிப்பா ஏத்துப்பாங்க. மத்தபடி சொந்தம் பந்தம் இதெல்லாம் ஜஸ்ட் பாஸிங் கிளவுட்ஸ் அவ்வளவுதான் புரியுதா!?"
என்றிட

புரிந்ததாக 'படக்கென்று' தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.

"இன்னும் உனக்கு ஹோப் வரலைன்னா சொல்லிடு உன்னை எங்க வீட்டுக்கு கூப்பிட்டு போய் பேரண்ட்ஸ்கிட்ட இன்ட்றோ கொடுக்கிறேன் சரி தானே!?"

"இல்ல எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு!"

"சோ.. என் மேல் நம்பிக்கை மட்டும் தான் இருக்கு இல்ல!?"

"அப்படி இல்ல..!"

"அப்போ அதும் இல்லையா?"

"நீங்க என்ன வம்பு பண்றீங்க..!" சினுங்களாய் சொன்னவள்

"கிளம்பவா?" அனுமதி கேட்க

"கிளம்பணுமா..!?" என்றவன் அவள் கரத்தை மெதுவாக எட்டிப்பிடிக்க

அவளோ தட்டிபறிக்க.

சாத்விக் முகம் சுருங்க

"சாரி ஆரு இது எல்லாம் எனக்கு பழக்கம் கிடையாது அதுதான்!" தயக்கத்தின் விளக்கம் கொடுத்தாள் ரேமா.

"ஆமாம் எனக்கு மட்டும் இதில் எல்லாம் பழக்கமும், முன் அனுபவமும் இருக்கு பாரு?" என்றவன் தொடர்ந்து

"இதெல்லாம் பழகிக்கோ டார்லிங் புரியுதா!?"

"இம்... இனிமே ஒன்னு ஒன்னா பழகிக்கிறேன். இப்போ கையை விடுங்க எனக்கு டைம் சேஞ்ச் பண்ணனும்!"

என்றபடி வேலையை சாக்கிட்டு தப்பி ஓடி இருந்தாள் அவள்.

**********************************

"சொல்லுங்க தணிகாசலம் நான் சொன்ன பொண்ணு விசயம் என்ன ஆச்சு!? அதுக்காக நீங்க எவ்வளவு கேட்டாலும் தர நான் தயார்.ஆனால் எனக்கு அவதான் மருமகள்!"

தணிகாவிடம் ரித்துவை பற்றி கூறி அவரின் மூலமாகவே அவளின் குடும்பத்தை அணுக முயன்றார் சௌந்தர்யா.

ரித்துவை அவர் பள்ளியில் கண்ட நாள் முதல் ஏனோ, "அவள் தான் மகனுக்கு சரியான ஜோடி!" என்று தோன்றிட.

ஆழ்மன கருத்தை பெரிதும் மதிக்கும் சௌந்தர்யா. தணிகாவை பிடித்து தன் வேலையை தொடங்கி இருந்தார்.

அன்று புதன் கிழமை விடியலில் எழுந்த ராகவன் குளியலை முடித்து சாமி அறைக்குள் தியானம் செய்து வெளியேவர.

சரியாக அழைத்தது அலைபேசி.

'யார்?' என்று பார்க்க தெரியாத எண்ணில் இருந்துதான் அழைப்பு வந்திருந்தது.

அழைப்பை ஏற்று பேசிய ராகவனுக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை.அப்படி ஒரு செய்தி இன்பத் தேனாய் அவர் காதுகளை நிறைத்தது.

"ஹலோ யாருங்க ராகவன் சாருங்களா!?"

"ஆமாம்! சொல்லுங்க. நீங்க யாரு!?"

"நான் தரகர் தணிகாசலம்!"என்றவர் "குளோபல் குரோத் நிறுவனர் சௌந்தர்யாவின் ஒரே மகனுக்கு உங்கள் மகளை கேட்கின்றனர்!?" என்றார் மனிதர்.

பெரும் பனிப்பாறையை தூக்கி சாதாரணமாக ராகவன் தலையில் வைத்துவிட்டு இன்னும் இரண்டு நாளில் அதாவது வெள்ளி காலைவரை யோசிக்குமாரும்.

அப்படி விருப்பம் இருந்தால் தனக்கு அழைப்புவிடுமாரும் கூறியவர் அழைப்பை துண்டிக்க.

பொறுக்கவில்லை ராகவனுக்கு..

"கனீ....!!!"

அடித்தொண்டையிட்டு உற்சாகமாக அழைத்தார் மனைவியை.

திருமணம் ஆகிய இத்தனை ஆண்டுகளில் இதுவே முதல்முறை கணவன் தன் பெயரை இவ்வாறு அழைப்பது என்பதால்

"என்னவோ!? ஏதோ!?"பயந்து பதறி வந்தவர் ராகவன் முகம் காட்டிய உவகையில் தானும் புன்னகை கொள்ள.

"என்னங்க என்ன ஆச்சு ஏன் இவ்வளவு சந்தோசம்!?"என்க

"கனி நமக்கு காலம் கனிஞ்சுடுச்சுடி!"

"என்னங்க சொல்றீங்க!?"

"ஆமாம்!" என்றவர் தணிகாவின் அழைப்பை பற்றி பெருமையாக கூறி இருந்தார்.

"தாயே கருமாரி உன் கருணையே கருணையம்மா!"

அன்றைக்கு சென்று வந்த அம்மனை மனதார வணங்கி நின்றார் கன்னிகா.

மனைவிக்கு செய்தியை சொன்ன கையோடு நண்பனுக்கு பகிர சென்றார் மனிதர்.

துள்ளிக்குதித்து உற்சாகமாக செல்லும் கணவனை நிறைவாய் கண்டார் கன்னிகா.

"சொல்லு ராகவா என்ன இந்நேரம் கால் பண்ணி இருக்க!?"

"டேய் தயா...!" என்றவர் அடுத்து பேச முடியாது ஒரு நொடி ஆனந்த மௌனம் கொண்டு அமைதியுற

"டேய் என்ன ஆச்சு சொல்லுடா ஃபூல் எனக்கு ஒருமாதிரி இருக்கு!"என்ற நண்பன் குரலில் பதட்டம் உணர்ந்து

தணிகாவின் அழைப்பும் அதனை தொடர்ந்த அனைத்தையும் வரிசையிட.

பொறுமையாய் கேட்டிருந்த தயாளன் தனக்கு தெரிந்த தகவலை கூறினார்.

"நான் அந்த பையனை பார்த்திருக்கேன் ராகவா.ஆனா...!"

"ஆனா என்னடா ஆனா...!?"

"ஆனா அந்த பையனால நடக்க முடியாது ராகவா!"

"என்னடா சொல்ற!?"

"ஆமாம்..! அவன் வீல் சேர்ல தான் இருப்பான்" என்றிட.

மகளுக்கு காலம் கடந்தாலும் ஒரு நல்ல இடமாக தணிந்து வந்ததை எண்ணி அவர் பெருமை கொள்ள.

அதற்கும் ஓர் 'க்கை' வைத்து இறைவன் விளையாட.

"இன்னும் ஒன்னு ராகவா.அவன்கிட்ட அந்த குறை தவிர வேற எந்த குறைவும் கிடையாது.நல்ல பையன்னு தான் கேள்வி பட்டிருக்கேன்.என் பிரெண்ட் ஆறுமுகம் அவனோட பையன் கூட அவன் ஆபீஸ்ல தான் வேலை பார்க்கிறான் நான் எதுக்கும் அவன் மூலமா விசாரிக்கிறேன்.நீயும் வீட்ல பேசிட்டு சொல்லு!"

என்றதோடு அழைப்பை துண்டித்தார்.

கைபேசி உடன் வெளியில் செல்லும் போது மகிழ்வுடன் சென்ற கணவர் ஏன் சோர்ந்த முகமாக வருகிறார் 'அதற்குள் என்னவானது?'

"என்னங்க என்ன ஆச்சு!? அண்ணா என்ன சொன்னாங்க!?

"கனி அந்த பையனுக்கு கால் நடக்க முடியாதாம்டி!"


"என்னங்க சொல்றீங்க!?"

"ஆமாம் தயா அந்த பையனை எங்கேயோ பார்த்திருக்கானாம்!"

"ஏங்க நீங்க மறந்துடீங்களா!?"

"என்னத்தை மறந்தேன்!?"


"அன்னைக்கு நம்ம அந்த கோவில்க்கு போனோம் இல்ல அங்க இருந்த அந்த பைத்தியம் மாதிரி இருந்த சித்தர் பையன் ஒன்னு சொன்னாரே!"

"அட ஆமாம் அவரு கூட இது மாதிரி தான் ஏதோ சொன்னாரு ஆனா சரியா நினைவுல இல்லையே கனி!"

அவரு,"தேடும் மாப்பிள்ளை தேடாது வருவான்.அவன் குறையை காணாது நிறைவை கண்டு உன் மகளை அவனிடம் கொடு!" அப்படின்னு சொன்னாருங்க.

"சரியா சொல்லிட்ட கனி அப்போ இந்த பையனுக்கே கொடுப்போமா!?"

"எதுக்கும் ரித்துகிட்ட கேட்கலாம்ங்க!"

"அதுவும் சரிதான் இன்னைக்குன்னு பார்த்து டென்த் ஸ்பெஷல் கிளாஸ்னு சொல்லி சீக்கிரம் போய்ட்டு பாரு பிள்ள!"

"என்னங்க ஒரு வேலை இந்த இடம் முடிஞ்சுட்டா அந்த கருமாரிக்கு நம்ம ஒரு பொங்கலை வைக்கணும்ங்க!"

"கண்டிப்பா பண்ணிடலாம் கனி!"

பெற்றவர்கள் பேசிக்கொண்டதை கேட்டிருந்த பிரவீனுக்கு தலைகால் புரி
யாத சந்தோசம்.

அறையை விட்டு வெளியே வந்தவன்

"அப்பா என்னோட அயர்ன் மேனையா அக்காவுக்கு பேசலாம் இருக்கீங்க!?" என்றான் சந்தோசமாய்.

மகனின் மானசீக குருவான அவன் அயர்ன் மேன் ஒரு வயதான நபராக இருப்பார் என நம்பி இருக்க.

அவனோ ஷ்ரவனை கைகாண்பித்து இவர்தான் 'என் குரு!' என்றான்.

ஷ்ரவன் முகத்தை கண்ட பின்பும் அவர்களால் மறுக்கமுடியவில்லை.
 
Top