Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 22

Advertisement

ஐ eagle eyes

Active member
Member
அவளை பிரிந்த பின் மனம்,"கவலையும், வேதனையும், இழப்பும் உணர்ந்த அதே நேரம் ஏனோ ஒரு விடுதலையையும் சேர்த்தே உணர்ந்தது!" சாத்விக்கிற்கு.

இரவு நேரம் ஆளில்லா காஃபி ஷாப்பின் ஜன்னல் ஓரம் அமர்ந்து முடியாது நீண்ட இருள் கொண்ட வானை வெறித்திருந்தான்.

அவனுக்குள் உள்ளக்கிடக்கு ஆயிரம் இருந்து,உள்ளுக்குள் சலசலக்க போராட்டம் நேர்ந்தாலும்;

வெளியில் இருந்து பார்க்கும் அனைவருக்கும் அவன் இரவின் நிழலை 'ரசிக்கின்றான்!' என்றே தோன்றும்.


போர் கோலம் கொண்டு, "அப்பொழுது அவள் மீதான உன் காதல் பொய்யா!?" சாத்விக் மனசாட்சி அவனை சாடியது.

"இல்லை நான் அவளை மனதார விரும்பினேன்..!"

"இதுதான் உன் விருப்பமா!?" என்றது உள்ளம்

"அவள் தானே என்னை இந்த நிலைக்கு மாற்றியது.காதலை உரைக்கும் வரை கண்களால் கலாபம் காட்டியவள் காதலை ஒப்புக்கொண்டு காதலியாக மாறியபின் காதல் காட்டிய கண்கள் எல்லாம் கானல் நீராக போனது யாராலே!?" திரும்பி கேள்வி எழுப்ப.

"அவள் செய்தாள் பதிலுக்கு நீ அவளை விலக முயன்றால்; அவள் உன்னுடன் இருப்பாளா என்ன!? அதுதான் அவள் உன்னை நீங்க தொடங்கினாள்!"

"இல்லையே! அவள் கண்களில் வேறு ஏதோ ஒரு தேடல் இருந்தது.கண்டிப்பாக என் மீதான தேடல் கிடையாது.ஆனால் என்னிடம் இருக்கும் ஒன்றிற்கான தேடல் அது!"

"அவள் உன் காதலி உன்னிடம் காதலை தவிர வேறு எதை அவள் தேடப்போகிறாள்!?"

"இல்லை உனக்கு தெரியாது அவள் என்னிடம் ஆரம்பம் முதலே வேறு ஒன்றை நுணுக்கமாய் கேட்டிருந்தாள்!?"

"அப்படி அவள் கேட்டிருந்தாலும் கூட அது 'உன் ஆராய்ச்சி' பற்றி தானே கேட்டிருந்தாள்.அதுவும் அவளுக்கு அறிவியல் மீது தாகம் அதிகம்!"

அதற்கும் கூட இவனையே குற்றம் சாட்டியது அவன் மனம்.

"நீ சொல்வதில் தான் எனக்கு ஒன்று தோன்றுகிறது.அவளிடம் ஆரம்பம் தொடங்கி நாங்கள் பிரியும் வரையும் கூட மாறாத ஒன்றாக இருந்தது என் ஆராய்ச்சி மட்டுமே!"

இதில் பல இடங்களில் அவளே எனக்கு பல யுக்திகளை உருவாக்கி கொடுத்து முன்னேற்றி இருக்கிறாள்.

அவளின் திறமைக்கு ஒரு பெரும் ஆராய்ச்சி மையத்தில் கூட வேலை தாராளமாக கிடைக்கலாம்.

"ஆனால் ஏன் தன் அலுவலகத்தில் அதுவும் சாதாரண ரிஷப்சனிஸ்டாக வந்து சேர வேண்டும்!?"

அனைத்தையும் ஒன்று சேர்த்து பார்க்கும் போது 'எங்கோ' இடித்தது.


"ஒருவேளை அவள் ஷ்ரவன் அனுப்பிய ஆளாக இருக்கலாம் அல்லது தொழில் முறை எதிரி அனுப்பிய ஆளாக இருக்கலாம்!"

அவ்வாறு எண்ணுவதற்கு வாய்ப்பில்லாத அளவிற்கு அவனுக்கு கிடைத்த பெரும் அளவிலான ஆராய்ச்சிக்கு உதவியவள் அவள்தான்.

அவ்வாறு இருக்க அவள் கண்டிப்பாக தன்னை ஏற்றி விட தான் முயன்றாள் என்றால் அவள் யார்.

அதனை தான் அறிய வேண்டிய கட்டாயம் உணர்ந்து

முதலில் நவீனுக்கு அழைப்பு விடுத்தவன் பிறகு 'வேண்டாம்!' என முடிவு செய்து தானே அவளை காண வேண்டி அவள் குடியிருக்கும் குடியிருப்பு நோக்கி வாகனத்தை செலுத்தினான் சாத்விக்.

இரவு நேரம் அவளை தேடி செல்கிறோம் என்ற தயக்கம் எல்லாம் அவனுக்கு கிடையாது.

ஒன்றை அறிய வேண்டும் என மனம் உந்தினால் செய்து முடிக்கும் வரை அது அடங்குவது கிடையாது அல்லவா.

சற்று தொலைவில் தன் வாகனத்தை நிறுத்திக் கொண்டு அவள் வீட்டின் புறம் செல்ல நடையைக் கட்ட அவனை தாண்டிக் கொண்டு சென்றது ஒரு கார்.


நடந்து செல்லும் வழிப்போக்கர்களை கணக்கெடுக்க எல்லாம் நேரமில்லாது 'சரட்'டென்று விரைந்தது அந்த வாகனம்.


அதை பார்த்து அவனுக்கு,"அதிர்ச்சி என்றால் அதிர்ச்சி உயர் மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சி!"

இப்பொழுது மேலும் கூடியது,"ரேமா உண்மையாக யார்!? அவள் சாதாரண பெண் கிடையாது!"என முடிவு செய்து நடையின் வேகத்தை கூட்டி நடந்தவன் மாஸ்க்கை எடுத்து அணிந்து கொண்டான்.

"கொரோனா போனாலும் அதுவிட்டு சென்ற மாஸ்கின் தாக்கம் மட்டும் அவனை விடாது தொடர்ந்தது எத்தனை நல்லதாகி போனது!"

தரை தளத்தில் இருக்கும் அவள் வீட்டின் சாளரம் வழியே உள்ளே நடப்பது தெரிந்தாலும் அவர்கள் பேசிக் கொள்வது கேட்கவில்லை 'என்ன செய்வது!?'

"டேய் சாத்விக் எதையாவது யோசிடா... யோசி மேன் பிளடி.... எதையாவது யோசி...!" என்றவன் சிந்தைக்கு ஒன்றும் எட்டாது போக.

தலையை அழுந்த கோதி சுற்றம் பார்க்க, அறைக்குள் இன்னும் இருவர் நுழைந்தனர்

"இவனுங்க இங்க என்ன பண்றானுங்க!?" என்று ஒன்றை விட்டு ஒன்று தாவும் வண்டாக முதல் வினாவிற்கு பதில் கிடைக்கும் முன்பு அடுத்த கேள்விக்கு தாவினான் அவன்.

'அதெல்லாம் அவசியமற்றது!' என்று உள்ளே நுழைந்த உருவங்களில் ஒன்று நேரே இவன் நின்றிருந்த சாளர கதவை திறந்தது.

"ஹேய் நவின் ஏன்டா ஜன்னல் டோரை ஓபன் பண்ற!?" என்றாள் ரேமா

"இல்ல ரே எனக்கு என்னவோ சம் ஒன் வாட்சிங்னு தோனுச்சு அதுதான்!" என்றவன் அதன் வழியே வெளிப்புறத்தினை ஆராய.

அவன் வருவது உணர்ந்து பல்லி போல் சுவரோடு ஒன்றினான் சாத்விக்.

வெளியில் யாரும் தங்களை 'கவனிக்கவில்லை!' என்பதை அறிந்த பின்தான் நிம்மதியாக இருந்தது நவீனுக்கு.

அவன் அமைதியாக உள்ளே நுழைய தாங்கள் பேச வேண்டிய விசயத்தின் அவசரம் உணர்ந்து சாளர கதவை அடைக்காது அவன் சென்றது தான் அவர்கள் அனைவரின் வாழ்விற்கு பெரும் எமனாகி போனது.


ஒட்டடை இல்லாத வீட்டில், சோபா,டீவி மட்டும் இருக்க. மின்விசிறி சீராக ஓடிக்கொண்டிருந்தது.


"சொல்லுங்க அங்கிள் என்ன நிலவரம் அங்க!?"
நவீன் தான் கேள்வி எழுப்பினான்.

"வைட் பண்ணு யங் மேன் இன்னும் நம்ம மெயின் பார்ட்னர் வரணும் இல்ல!" என்றார் அந்த வீட்டின் கூடத்து சோஃபாவில் அமர்ந்திருந்த ரகோத்வா.


"அங்கில் எப்போப்பா வருவாங்க இட்ஸ் கெட்டிங் லேட் அண்ட் ஐம் சோ ஈகர் பப்பா..!"

அவரின் சோபா கைப்பிடியில் அமர்ந்து அவரின் கழுத்தை கட்டி இருந்த ரேமா கேட்க.

"டாட் உங்களுக்கு எப்போ வருவேன்னு அங்கிள் சொல்லவே இல்லையா!?"
கபில் தந்தையின் பதிலை எதிர்நோக்க.

"இதோ வந்துட்டேன்..!" என்றபடி வந்தார் அந்த நபர்.

அனைவரின் காத்திருப்பிற்கு காரணமான நபரை கண்டு நெஞ்சு தன் துடிப்பை நிறுத்தியது சாத்விக்கிற்கு.

உள்ளே வந்த வாகீசன் ரகோத்வாவை அணைக்க.

"இவரா!?"

"தன் தந்தையா!?"

"இவர்களின் காத்திருப்பிற்கு காரணம்!"

"ஆனால் ஏன்!?"

இவர்கள் அனைவரும் ஒன்று என்றால்;


சென்ற முறை,

"தன் திறமைக்கு கிடைத்ததாக நினைத்த வெற்றி இவர்களின் கள்ள தனத்தால் தட்டி பறிக்கப்பட்டதா!?"

"தனக்குள் உறையும் நேரம் இதுவல்ல இவர்களின் திட்டம் என்ன? என்பதை அறிந்தே ஆக வேண்டும்!"என்பதால் மேலும் கவனிக்க தொடங்கினான் அவன்.

"அங்கிள் கூல் ட்ரிங்க்ஸ்!"
அவரைக் கண்டு ஒரு டம்ளரில் நிரப்பிய பழ ரசத்தை கபில் நீட்ட.

"நோ மை பாய் இது கூல் ட்ரிங்க்ஸ் குடிக்கற நேரம் கிடையாது ஹாட் ட்ரின்க் எடுக்கற கொண்டாட்டமான நேரம்!" என்றார்

அவர் குரலில் தான் எத்தனை உற்சாகம் இதுவரை சாத்விக் காணாதது

எப்பொழுதும் அலுவலகம் ஆராய்ச்சி பற்றி கேள்விகள் எழுப்பி மேலும் மேலும் வேலை செய்ய உந்தும் தந்தை ஒரு மாதமாக எதையும் கண்டுகொள்ளாது இருந்தது எதனால் என்பது புரிவது போல இருந்தது அவனுக்கு.

குளிர் பானங்களை மறுத்து மது பான கோப்பைகளை கைக்கொள்ள.

ரேமா மட்டும் தனக்கு இன்னும் வேலைகள் இருப்பதாக கூறி மறுத்து குளிர்பானம் ஏற்க.

அங்கிருந்த ஆண்கள் நால்வரும் ஆளுக்கு ஒன்றாக கோப்பையை உயர்த்திட தன் குளிர்பான கோப்பையை உயர்த்தி தானும் 'சியர்ஸ்' என்றவாறு ஐவரும் குடிக்கத் தொடங்கிட.

மூச்சு விட்டால் கூட அவர்களுக்கு "தன்னைத் தானே காட்டிக்கொடுத்து விடுவோமோ!?" என்று அஞ்சி மெதுவாக விட்டுக் கொண்டான் சாத்விக்.

தந்தையை அங்கே கண்டதும் யாரோ விஷம் தோய்ந்த கத்தியால் 'சதக்சதக்'கென்று நெஞ்சில் குத்திய உணர்வு.

ஓர் நொடியில் அன்னை தங்கையின் முகங்கள் கண்முன் விரிந்து அவனை வேதனைக்குள் ஆழ்த்த



"வாசன்..!"

உரிமையாய் அழைத்த ரகோத்வா முகத்தில் எதையோ முக்கியமாக பேச போகும் பாவனை

அதை தானும் உணர்ந்தானோ என்னவோ சாத்விக் தன் கைபேசியை காணொளி பதிவிற்கு தயாராக பிடித்துக் கொண்டான்.

அவன் நிற்கும் சாளரத்திற்கு எதிராக L வடிவ அமைப்பில் சோஃபாக்கள் போடப்பட்டிருந்தது நல்லவேளையாக அமைய.

அனைவரின் முகமும் காணொளியில் பதிவாகும் வாய்ப்பு இருந்தது அங்கே.


நவீன் சிறிதாக திறந்துவிட்டு சென்ற சாளர வழியே கண்களை இன்னும் கூர்மையாக்கி நடப்பதை வேடிக்கை பார்க்க தொடங்கினான் சாத்விக்.


யாருக்கும் அழைப்பு விடுத்து இவர்களின் கூட்டணி பற்றி சொல்ல கூடிய சூழல் அங்கே இல்லை என்பதாலும்;

யாரேனும் வந்துவிட்டால் இவர்களின் முழு திட்டம் எதுவென்பது தெரியாது போகும் என்பதாலும்; தானே அனைத்தையும் செய்யும் யோசனைக்கு வந்தான்.

"வாசன்..!"

"சொல்லுடா ராகா என்ன செல்லணும்!?"

"இன்னைக்கு நான் ரொம்ப ஹேப்பிடா நம்ம பல வருஷ கனவு நனவாக போகுது!
இன்னும் ஒரு வாரத்தில்.காத்திருப்பின் பலனை நம்ம கைகள்ல தந்திடும் இல்ல!"

'ஆனந்தம்' ரகோத்வா குரலில் விரவியது. மதுபானம் அவரை உணர்ச்சி வசத்தில் ஆழ்த்தி இருந்தது என்பதும் தெரிந்தது.

"ஆமாம் ராகா நம்ம கனவு நம்ம பல வருஷ கனவு அந்த சுந்தர் மட்டும் இல்லைன்னா எப்பவோ நம்ம கைல கிடைச்சு இருக்கும்!"

"என் மகன் அவன் அம்மா மாதிரி என் உழைப்பு,என் முயற்சின்னு, வெட்டியா பேசிட்டு இருந்திருப்பான்.அவனால் இப்பவும் கூட வீணா போயிருக்கும் நம்ம கனவு!"

"ஆனால் உன் பொண்ணு அப்படியே உன்னை மாதிரி ராகா.அதுதான் நம்ம நினைச்சதை உள்ள வந்த கொஞ்ச நாளிலேயே முடிச்சு நம்ம கனவை பழிக்க வச்சிட்டா!"

"அங்கிள் டூ பீ பிரவுட் டா ரேமா கண்ணா!"

"பொண்ணு மட்டும் இல்லை,பையனும் கூட உன்னை மாதிரி பெரிய அறிவாளிடா ராகா!"

"ஆனால் நான் பெத்த ரெண்டும் அவங்க அம்மா மாதிரி நீதி..நேர்மைன்னு...!"

"அங்கில் இவ்வளவு தெரிஞ்ச நீங்க ஏன் ஆண்ட்டியை விடவே இல்லை!?"

"ஏன்னா அவளை எனக்கு உண்மையா பிடிக்கும் ரேமா!"

அவளிடம் சொல்லும் பொழுதே சங்கீதாவை பற்றி பேசியதால் துள்ளி குதித்த இதயத்தை தன் கையால் மெதுவாக 'ஆதூரமாக' தட்டிக் கொண்டார் வாகீசன்.

"அங்கிள் இந்த வயசுல கூட இவ்வளவு லவ்வா!?"

"அவமேல நான் வச்ச லவ் என்னைக்கும் மாறாதும்மா!" என்றவர் முகம் மென்மையாக.

"அந்த ஷ்ரவன் தான் வாசன் என்னை இத்தனை வருசம் கண்ல விரலைவிட்டு ஆட்டிட்டான்!" மூர்க்கம் நிறைந்தது அவர் முகத்தில்.

"இதோ அவன் முயற்சி எல்லாமே நம்ம கைல இருக்குடா ராகா. யூ டோண்ட் ஒரி மேன்!"

நண்பன் கூற்றின் தாத்பரியம் உணர்ந்து தானும் அவரின் உற்சாகத்தில் பங்கு கொண்டார் ரகோத்வா.

"டாடி எப்படி அந்த சுந்தரம் அங்கிள் உங்களுக்கு பழக்கம்!?"

"மை பாய் அவன் தொடங்கின லேப்ல தான் நான் முதல்ல ரிசர்ச் டிபார்ட்மெண்ட்ல சேர்ந்தேன்!"

"எனக்கு எதையும் சீக்கிரம் முடிக்கணும். ஆனால் அவனுக்கு எதையும் அலசி ஆராய்ந்து மக்களுக்கு சரி தப்புன்னு யோசிப்பான் முட்டாள்!"

நண்பன் நிறுத்திட அதில் இருந்து தான் தொடர்ந்தார் வாகீசன்.

"அப்போ தான் நானும்,ராகாவும் சந்திக்கிற ஒரு சூழல் கிடைக்க.ரெண்டு பேரும் பேசினப்போ நாங்க ரெண்டு பேரும் ஒரே வேவ்ல இருக்கது புரிஞ்சுது!"



"அதுக்கு அப்பறம் சுந்தருக்கு தெரியாம நானும் இவனும் தனியா சில ஆராய்ச்சிகளை தொடங்க...!"

"அப்பறம் என்ன அங்கிள் ஆணுச்சு!?" அதுவரை வேடிக்கை பார்த்த நவீன் ஆர்வமாக கேட்டான்.

"வேற என்ன யங் மேன் ஆகும் அவனுக்கு ஒரு நாள் என் மேல சந்தேகம் வந்தது போல.கொஞ்ச நாளாவே அவன் என்கிட்ட பேசற விதம் எல்லாமே சேன்ஜ் ஆக ஆரம்பிச்சுடுச்சு!"

"அப்பறம் எப்படி டாடி அவரை சமாளிச்சீங்க!?"
ரேமா வினவ.

"அவனை என்னால என்னைக்குமே சமாளிக்க முடியாது பேபி.அதுமட்டும் இல்லாம நானே போய் அவன்கிட்ட எங்க திட்டம் பத்தி சொல்லிடற மாதிரி ஆகாது.அதுதான் அவனை கொலை செய்ய திட்டம் போட்டோம் நானும் வாசனும்!"

சுந்தரத்துக்கு நம்பிக்கையான ஒரு டிரைவர் இருந்தான் அவன் பேரு தியாகு.

"நாங்க எவ்வளவோ அவனை த்ரட்டன் பண்ண ஸ்டெப் எடுத்தோம்.ஆனா அவன் எங்ககிட்ட மடங்கவே இல்லை.சோ கார் கிளீனர் ஒருத்தனை பிரைப் பண்ணி சுந்தர் டிராவல் பண்ற கார் பிரேக்கை கட்பண்ணிட்டோம்!"

"அவனும் எந்த தொல்லையும் இல்லாமலே மேல போய்ட்டான்!" என்றார் ரகோத்வா.

"டாடி ஆனா நீங்க அதுக்கு அப்பறம் எல்லாத்தையும் உங்க கண்ட்ரோல்கு கொண்டு வந்திருக்கலாம் இல்லையா!?"

"உன் கேள்வி சரிதான் கபில்.ஆனா அந்த ஷ்ரவன் சாதாரண ஆள் கிடையாது. அவங்க அப்பா உயிர் போய்ட்டு,அம்மா கால் நடக்க முடியாது.இவனுக்கும் கூட கால் வேலை செய்யாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க!"

"மத்த பசங்களா இருந்தா ஓடஞ்சு போய்டுவாங்க. பட் இவன் சம்திங் டிஃபரெண்ட் கபில்!"

"அப்படி அவன் என்ன அங்கிள் பண்ணிட்டான் நீங்க புகழ்ற அளவுக்கு!?"
பொறாமை எட்டி பார்த்தது நவீனுக்கு

"நவீன் அவனை சாதாரணமா நினைக்காத
அந்த வயசிலையும் கூட அந்த சுந்தர் தன் மகன்கிட்ட என்ன சொல்லி வளர்த்தானோ!? மயக்கத்துல இருந்து எழுந்தவன் என்ன செஞ்சான் தெரியுமா!?"

"என்ன டாடி பண்ணினான்!?" கண்களை விரித்துக் கொண்டு கேட்டாள் ரேமா.

அவளுக்கு என்றுமே ஷ்ரவனின் அறிவில் பிடித்தம் உண்டு.அதனால் அவ்வாறு கேட்க
அதை நவீனால் பொறுக்கமுடியவில்லை.


"கார் ப்ரேக் பிடிக்காம போனது சம்திங் ஃபிஷின்னு சொல்லி போலீஸ்ல கம்பிளைன் பண்ணினான்!"

"என்ன டாடி சொல்றீங்க!?"

"ஆமாம் பேபி அவன் அதைத்தான் முதல்ல பண்ணினான்.அப்போ இந்திரா அவ்வளவு வொர்த் இல்லை. இவன் தான் எல்லாத்தையும் போலீஸ்கிட்ட சொல்ல முன்வந்தான்!"

"அதுதான் எங்க பிளானை கொஞ்சம் தள்ளி வைக்க.அவன் அந்த கேப்ல அவங்க அம்மாவை முன்னேத்திட்டான்!"

"அவனுக்கு இருக்க வீக்னஸ் என்ன தெரியுமா!? நம்பினவங்களை சந்தேகப்படமாட்டான்!"

அதனால தான் அவன்கூடவே இருந்து நான் தகவலை சேமிக்க பாடுபட்டேன்.

ஒரு வழியா அவன் லேபை யூஸ் பண்ணி "நாங்க எங்களோட கண்டுபிடிப்பை கண்டு பிடிச்சோம்!"

"அங்கிள் நீங்க ஏன் உங்க பையனை லவ் பண்ற மாதிரி நடிக்க சொன்னீங்க. ஒருவேளை அப்ப சொன்னமாதிரி நம்ம ரெக்வெஸ்ட்டை அவன் ஏத்துக்க மாட்டான்னு நினச்சீங்களா!?"


"யூ ஆர் அப்சல்யூட்லி ரைட் ரேமா!" என்றார் அவர்.

ஷ்ரவன் முதுகிற்கு பின்னாலும், தன் குடும்பத்தின் முதுகிலும் வாங்கிய குத்துக்கள் எல்லாம் கண்முன்னே விரிந்தது.

கெட்டதிலும் ஒரு நல்லதாக அன்னை மீதான தந்தையின் 'காதல் உண்மை' என்பது தான் அவனுக்கு நிம்மதியை கொடுத்தது.

ரகோதாவாவை தன்னுடன் திரைக்கு பின் நிறுத்தியவர்.அவருக்கு குடும்பம் உள்ளதையே மறைத்திருந்தார்.

அவரின் மனைவி விவாகரத்து பெற்று சென்றது மட்டுமே அறிந்த மக்கள் அவரின் இரண்டு பிள்ளைகள் பற்றி அறியாது போயினர்.


நவீனை மகனின் செயல்களை அவனுடன் கண்காணிக்க செய்தவர்..கபிலை தன் ஆய்வில் இருத்திக் கொண்டார்.

இந்த மகனின் கவனத்தை திசை திருப்பும் அதே நேரம் தன் ஆராய்ச்சிக்கு குறைவு இல்லாத ஒரு ஆள் ரேமா என்பதால் அவளை மகனின் காதலியாய் நடிக்க வைக்க முயன்றுள்ளார்.

அப்போது ஆரம்பம் முதல் தான் கொண்ட காதல் எல்லாம் திரைக்கு பின் நின்றாடும் பாவை கூத்து என்றானதா


மனம் ஆறவில்லை இருந்தும் நடப்பதை ஷ்ரவனுக்கு தெரிவிக்க முயன்றான்.

அதன்படி 'வேட்ரீ'யை அழைத்தான்.

"தங்கையின் வாழ்வைப் பற்றி பேசப் போவதாகக் குறிப்பிடுங்கள்!"

இவனும் சென்றிருந்தான்.


அவன் மூலம் நடந்த அனைத்தையும், ஷ்ரவனிடம் தெரிவிக்க.

ரக்ஷன், ஷ்ரவன், சாத்விக், இயக்கி நால்வரும் இணைந்து செய்த சதியில் தான் கடைசியாக சிக்கினர் "உலகறியா உன்னத மாணவர்கள் குழு!"

இரண்டாம் ஐ.எம். ஏ கூட்டத்தின் முதல் நாள் இரவு தான் ஜோ,அப்துல்லா,ரபீக் மூவருக்கும் தெரிந்தது.

"யார் அந்த கள்ளநரி என்பது!?"
 
Top