Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 24

Advertisement

ஐ eagle eyes

Active member
Member
"உடலின் குருதி எல்லாம் கண்ணீராய் உருகி வழிந்ததோ!?" பெண்ணவளுக்கு.

கணவன் உள்ளே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வாழ்வே அவனென மாறிய பின் அவனின் உடல் நோவை விட பலமடங்கு கூடுதலான நோவு கொண்டாள் ஷ்ரவனின் மனம் நிறை மங்கை.

சௌந்தர்யா வெளிப்புறம் தைரியமாக இருப்பது போல தெரிந்தாலும் உள்ளுக்குள் பெரும் 'பிரளயம்' தான் அவருக்கு.

"உற்றவருக்கு ஒன்றென்றால் அதனை பொறுக்கும் வல்லமை பெற்றவர் யாருளர் இம்மானிடத்தே!?"

எத்தனை தைரியசாலி என்றாலும்; துரோகத்தையும்,புறமுதுகி்ல் இத்தனை ஆண்டுகளாக வாங்கிய குத்துகளையும்
ஜீரணிக்க முடியவில்லை அவரால்.


'பாவம்' என்று எண்ணி ஒரு பாம்பிற்கு பால் வார்த்ததை அறிந்த பின் வெறுமை ஒருபுறம் என்றால்; தன் பிள்ளையின் உடல்நலம் பற்றிய கவலை பெருங்கவலையாக.

விபத்தால் மீண்டும் ஒரு இழப்பை சந்திக்கும் தைரியம் எல்லாம் அவரிடம் இல்லை.

"சூழலினை எவ்வாறு எதிர்கொள்வது!?" என்ற எந்தவித கட்டளையும் மூளை பிறப்பிக்காது செயலிழந்த நிலைக்கு செல்ல.

அமைதியாக கண்களை மூடி அமர்ந்து கொண்டவர் மருமகளை தன் தோளில் தாங்கி அவளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக தட்டிக் கொண்டிருந்தார்.

அதற்கு பொருள் ,"நான் இருக்கிறேன் கவலை வேண்டாம்!" என்பதாகும்.

"அன்று தனக்கு தைரியம் கூற ஆளில்லாத நிலை. இன்று மருமகளுக்கு அந்நிலை வரவிடக்கூடாது!" என்பதில் உறுதியாக இருந்தார் அவர்.

கன்னிகாவோ," ஐயோ என் மகளே! நான் பெத்த செல்வமே!" என ஆரம்பித்தவர் வேறு அவர் ஒரு புறம் விடாது புலம்பித்தீர்க்க.

அவரின் ஆற்றாமை எல்லாம் வார்த்தையாக உருபெற தேற்றுவார் இன்றி தனியே தவிக்க.


பார்வதி அவரை மடி தாங்க வந்திருந்தார்.

ராகவுடன் வந்து தோள் தாங்க தயாளன் வந்துவிட.

தான் 'ஆண்' என்ற எண்ணம் எல்லாம் அழிந்து நண்பனை கட்டிக் கொண்டு சிறுவனாக தேம்பினார் ராகவன்.

தந்தைக்கு பயந்து தனியே சென்ற பிரவின் அவன் ஒரு புறம் பூங்காவில் அமர்ந்து அழுதிருந்தான்.

"அவனுக்கு அக்கா கணவன் மட்டுமல்லவே; அவன் கனவுகளின் நாயகன் அவன்.எதிர்காலம் குறித்த ஆயிரம் அறிவுரைகளும், நல்ல பாதையையும் காண்பித்தவன் அல்லவா அவன்!"

பிரவினும் ராகவும் மருத்துவமனையின் வழிமுறைகளை கவனிக்க சென்றிருக்க.

நண்பனின் நிலை கண்ட ஜோ "எப்படியும் பிழைத்து வருவான் நண்பன்!" என்ற நம்பிக்கையுடன் கிறிஸ்டியை அழைத்துக் கொண்டு உணவகம் சென்றுவிட்டான்.

சாத்விக் மனமே ஆறவில்லை.

ஒரு குடும்பத்தைச் அழித்து அதில் உவகை கொண்ட தந்தைக்கு மகனாக தான் பிறந்த பாவத்தை எங்கு சென்று கழிப்பது என்றே அறியாது துடித்தான்.

ஆண்மகன் நிலையே 'இப்படி!' என்றால்; சங்கீதாவின் நிலையும் கீர்த்தனாவின் நிலையும் 'யார் வந்து விளக்குவது!? இல்லை எங்ஙனம் விளக்குவது!?'

பெற்ற தகப்பனே ஆனாலும் சாத்விக் வாகீசனை மன்னிக்க விரும்பவில்லை.

அதனால் ரபீக் உடன் இணைந்து தன் தந்தையுடன் சேர்த்து ரகோத்வா, ரேமா, கபில், நவீன் ஐவரையும் காவல் துறையில் செய்தியாளர்கள் முன்பே சாட்சியங்களை காண்பித்து ஒப்படைத்தான்.

தந்தை பற்றி அறிந்தவன் கண்டிப்பாக இவ்வாறு செய்யவில்லை எனில்; "எப்படியும் 'ஜாமீனில்' வந்து ஷ்ரவன் குடும்பத்தை அழிக்காது விடமாட்டார்!" என்பதால் பத்திரிக்கையாளர்கள் முன்பே வைத்து இவ்வாறு செய்தது.

'அதுமட்டுமா!?'

சுந்தரின் கண்டுபிடிப்பை திருட முயன்றது,
கொலை முயற்சி ஆள்கடத்தல் என்று ஆதி காலத்து களவாணி வேலைகளும் தூசி தட்டப்பட்டு ரக்சன் உதவியுடன் காவல் துறையிடம் சமர்ப்பித்தான்.

இவை எல்லாம் ஷ்ரவன் சேகரித்து வைத்தவை தான்.

"சாத்வி இனி நாங்க பார்த்துக்கிறோம் நீ போய் அம்மாவை, கீர்த்தியை பாரு!" ரக்க்ஷன் கூற.

"அன்னையை நினைத்து பாதியாகிய நம்பிக்கை; தங்கையை தேற்றுவதை நினைத்து முழுதாக அடிசரிந்தது!"

நடை தடுமாற பிடிமானம் தேடிய அவன் கரங்களில் தன் கரம் பதித்த ஶ்ரீதரன் வேறெதுவும் பேசாது

"வா மச்சான் நான் ட்ரைவ் பண்றேன்!"
என்றவாறே நண்பர்கள் புறம் தானும் செல்வதாக கண்களை காண்பித்துவிட்டு 'காதல் கண்மணி'யின் துயர் துடைக்க பறந்தான் அந்த ரசாயனன்.


எட்டு எடுத்து வைக்க கால்கள் மறுக்க,
தன் மனதை இரும்பாக்கி பெண்கள் இருவரையும் ஆறுதல் படுத்த விரைந்தான் சாத்விக்.

பளிச்சென்று விளக்குகள் ஒளிர்ந்த கண்களை கூசாத ஒளியூட்டம் நிறைந்த அறை அது.அதன் நடுவே மேசை ஒன்று இருக்க.

அதை சுற்றி வரிசையாக அடுக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருந்தனர் வெள்ளை நிற மேலங்கி அணிந்த மருத்துவர்கள் குழு.


ஒவ்வொருவரின் முகமும் ஒவ்வொரு விதமாக மாறியது.


நரம்பியல், எலும்பியல்,இருதயவியல் என உச்சி முதல் பாதம் வரை இருக்கும் அத்தனைக்குமான சிறப்பு மருத்துவர்கள் குழுவினர் குழுமி இருந்தனர் அங்கே.


துரோகம் அவர்களுக்கு முன்னால் நின்றது.

'ஆம்!' துரோகம் தான் அது.

"நன்றாக வாழவேண்டிய ஒரு சிறுவனின் கனவுகளை சிதைக்க நடந்த நாடகம்!

ஒரு அறிவியலாளரின் கனவை சூறையாட நடந்த வஞ்சகம்!

கணவன்,மகன் என்று அன்பாய் வாழ்ந்த பெண்ணின் வாழ்வை சிதைத்து மானிடர்கள் ஆடிய கோரத் தாண்டவம்!" இவை தான் அவர்களுக்கு முதலில் தெரிந்தது.


"மிஸ்டர். ராபின் நீங்க என்ன சொல்றீங்க!?" என்று மருத்துவமனை டீன் ஆரம்பிக்க.

"டீன்...!" என்று தொடங்கிய மூளை நரம்பியல் நிபுணர் ராபின் தன் உரையைத் தொடர்ந்தார்.

"டீன் இதில் ஐம்பது சதவீதம் தான் வாய்ப்பு இருக்கு.ஆனா அதை நம்ம ட்ரை பண்ணி பார்க்கலாம் டீன்.ஏன்னா மிஸ்டர். ஷ்ரவன் ஹெல்த் இஸ் நார்மல்!"

ஒவ்வொரு நிபுணராக பார்த்து தன் பக்க கேள்வியை ஒவ்வொன்றாக எழுப்பி அவர்களின் விளக்கங்களை தெளிவாக பெற்ற பின்பே அந்த அறையில் இருந்து வெளியே வந்தார் டீன்.

வெளியில் வந்தவர் முதலில் சௌந்தர்யாவின் முன்பு சென்று நிற்க.

நிழல் வடிவை உணர்ந்து கண்திறந்த சௌந்தர்யா மருத்துவரை கண்டு எழுந்தார்.

அவரையும் ரித்துவையும் அழைத்துக் கொண்டு தன் அறைக்கு சென்றார் மருத்துவர்.


"டாக்டர் என்ன ஆச்சு என் பையனுக்கு!?"
மறைக்க முயன்று முடியாத தாயின் பதற்றம் அவரிடம்.

அத்தை கேட்டதை போல கேட்பதற்கு கூட பலமில்லாது; அழுது சிவந்த முகமும் வீங்கிய இமை பட்டைகளும் பழமாய் கனிந்த மூக்கின் நுனியும் என அவர்முன் அமர்ந்திருந்தாள் பிரீத்தா.



அவளைக் கண்டவர் "ஒன்னும் இல்லை.."
தயங்கினார் அவளின் கரு சூல் வயிற்றை பார்த்து.

"மேடம் ஒரு சின்ன...!"" என்று தொடங்கி மீண்டும் தயங்கி நிற்க.

பாதியில் நிறுத்திய மருத்துவ தலைவரை நோக்கி, "அந்த சின்ன பிரச்சனைக்கு எதுவும் சொல்யூசன் இருக்கா டாக்டர்!?" என்றார் சௌந்தர்யா.

"மேம் இதுக்கு பெரிய தீர்வே இருக்கு!" என்று ஒரு அறுவை சிகிச்சை பற்றி விளக்கம் கூறி.

தங்களால் முடிந்தவற்றை முயலுவதாகவும்,
அதன் பின்னான முன்னேற்றம் நோயாளியின் மன உறுதியை பொறுத்தது என்றிட.


அதன் சாதக பாதகங்களை தெரிவிக்க அதை கேட்ட சௌந்தர்யா சிறிதும் யோசிக்காது அதனை உடனே ஏற்றுக் கொண்டார்.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஶ்ரீனிவாசன் தங்கை இல்லம் மீண்டும் ஒரு விபத்தை சம்பவித்ததை கேள்விபட்டு புறப்பட.

தேவியோ கணவனை தடுக்காது தானும் உடன் வர.

ரக்ஷனுடன் இணைந்து வீணாவும் முன்பே மருத்துவமனை சென்றிருந்தாள்.

முதன்முறையாக மனைவியை மெச்சுதல் பார்வை பார்த்த ஶ்ரீனிவாசன் மருத்துவமனை வந்திருந்தார் தன் தங்கையைக் காண.

"அம்மா சௌந்தர்யா!" என்ற அண்ணன் குரலுக்கு தான் எத்தனை சக்தி.

ஆயிரம் யானை பலம் வந்த அதே நேரம் இதுவரை உள்ளுக்குள் கிடந்து மனதை அழுத்திய பாரமும் கேவலாய் வெளிவர.

தோள் சாய அண்ணனின் தோள்கள் இருக்க அழுகையோடு பற்றிக் கொண்டார் சௌந்தர்யா.

"கவலைபடாதம்மா மாப்பிள்ளை யாரு? அவன் எத்தனுக்கு எல்லாம் ஜித்தன்டா கண்ணா!"

"ஐயோ! அதுதான் இல்லையே அண்ணா.எங்களை ஏமாத்த கூடவே ஒரு குள்ளநரியை இல்ல அண்ணா வச்சுட்டு சுத்தி வந்திருக்கோம்!"

"அதெல்லாம் இல்ல கண்ணா நீ வேணா பாரு அவன் எப்படி வர்றான்னு ராஜா மாதிரி திரும்ப வருவான்டா!" ஆறுதல் மொழிய.

அவர் குரலிலும் தங்கை மகன் மீதான அன்பு அழுகையை அடக்கிய கரகரப்பு குரலில் தெரிந்தது.


"அம்மா..!" என்ற மகனின் குரல் எல்லாம் அவரின் செவியை நிறைக்கவில்லை.

"என் கணவன் ஒரு குடும்பத்தை அழித்தானா!?"

"அவன் அத்தனை பெரிய அரக்கனா !?"

"இவனுடனா என் வாழ்வை பகிர்ந்தேன்!?" என்ற எண்ணமே வாட்டி வதைக்க. சங்கீதா தன்னையே வெறுத்தார்.

சுயத்தை இழந்து தனக்குள் மூழ்கிய "அன்னையை நிகழ்விற்கு கொண்டுவர வேண்டும்!" என்ற கட்டாயம் சாத்விக்கை கடைந்தது.

"அம்மா..!" என்றவன் ஓடி சென்று அவரின் மடியில் சாய.

வளர்ந்த பிள்ளை மனதின் கணம் தாங்காது அழுது கொண்டே வருவதை எந்த தாயால் பொறுக்க இயலும்.

"சங்கீதா போன்ற இளகிய மனம்கொண்ட பெண்மணியால் மட்டும் முடிந்திடுமா என்ன!?"

"டேய் சாத்வி நிமிரு கண்ணா ஒன்னும் இல்லைடா. அம்மா இருக்கேன் இல்ல கவலை படாதடா ஐயோ கடவுளே!" என்று சுயம் பெற்றவர் அப்பொழுது தான் மகளை தேட.

அவளோ மூலையில் அமர்ந்து 'எங்கோ' வெறித்திருந்தாள்.


விரிந்த கூந்தலை அள்ளி முடிந்த சங்கீதா நேரே மகளின் எதிரே சென்று நின்றார்.

"வர்ணி, தங்கம், அம்மு!" என்று எத்தனை அழைத்தும் அவள் திரும்பவில்லை.

அவளின் உயிரான தந்தை,"ஒரு உயிரை எடுத்து இன்று தோழியின் கணவன் உயிரையே எடுக்கும் அளவிற்கு இரத்த வெறியன்!" என்பதை உணர்ந்த நொடி முதல் கண்ணீர் கூட விடாது கல்லாய் சமைந்தாள்.

வயது பெண்ணை அவ்வாறு வைக்க விரும்பாது அவளின் முகத்திலே 'ஓங்கி அறைந்தார்' சங்கீதா.

வலியில் 'அம்மா' என்றவள் முன் நின்றிருந்த அண்ணன் இடையை இறுக்கிக் கொண்டவளின் அழுகை வெடித்து சிதறியது.

ஆயிற்று இன்றோடு அனைவரின் வாழ்வும் தலைகீழாக மாறி ஆண்டுகள் இரண்டாக ஓடி இருந்தது.

"ஏய் கீர்த்தி நில்லுடி..!"

"எதுக்கு நிற்கணும் எனக்கு வேலை இருக்கு!"

ஊட்டியில் இவளின் பின்னணி அறியா சுற்றம் என்று புதிய சூழலில் வாழ பழகி இருந்தாள் கீர்த்தி.

அவள் மட்டுமல்ல; சங்கீதாவும்,சாத்விக்கும் கூட.

சாத்விக் புதிதாக வங்கியின் மூலம் கடன் வாங்கி சிறு தொழில் ஒன்றை தொடங்க.
தந்தை தந்த ஏமாற்றமும்,காதல் தந்த வலியும் அவனை அயராது உழைக்க செய்தது.

இதோ இன்று உழைத்து சிறிதாக முன்னேறி இருக்கிறான்.அதுவே அவனுக்கு போதுமானதாக இருந்தது.

இன்னும் 'உழைக்க வேண்டும்!' எனும் வெறியையும் அள்ளிக் கொடுத்தது முன்னேற்றம்.

"உன்னை தானே கூப்பிடுறேன் தினமும் நின்று ஒரு நிமிடம் என்ன!? ஏது!? என்று கேட்கின்ற பழக்கம் இருக்கா உனக்கு!?"

"நான் ஏன் உன்கிட்ட பேசணும் எனக்கு வேலை இருக்கு!" ஶ்ரீ தரனை எப்பொழுதும் போல விலக்கி துரத்த.

அவனோ "அடியே இப்போ உன் முடிவை சொல்லல...!"

"சொல்லலைன்னா என்ன பண்ணுவ.அப்படியே கிளம்பி போய்டுவியா!?"

அவன் மனதை அறியும் ஆவல் அவளுக்குள் வெளியே பெண்மையின் நாடகம் அரங்கேற.

"ஆமாம் அது என்னால முடிஞ்சிருந்தா நான் ஏன் இன்னும் உன் பின்னாடி நாயா அலையறேன்!?" முணுமுணுக்க.

"என்ன அங்க முணுமுணுப்பு!?"

"அது ஒன்னும் இல்லைடி கீர்த்தி செல்லம் உன்னை விட்டு நான் பிரிந்தால் உயிரின் துகள்கள் வெடிக்கும் சொல்லிட்டு இருந்தேன்..!"

"யாரு நீயா..!?"

"ஆமாம் செல்லம் பிளீஸ் இதுக்கும் மேல என்னால முடியலைடி!"

"முடியலைன்னா என்ன பண்ண போற!?"

"கன்னி பையனை காதலித்து ஏமாற்றிய காதலின்னு நாளைக்கு காலைல நியூஸ்ல வரும்!" என்றான் அவன்.

அவன் கூறிய விளக்கம் அவளுக்கு புன்னகையை கொடுக்க.

இரண்டு ஆண்டுகளில் இன்று தான் தணிந்து வந்து பேசுகிறாள்.

'இல்லை' என்றால் விறுவிறுவென்று நடையை கட்டிவிட்டு இவனுக்கு டிமிக்கி கொடுத்திடுவாள்.இன்று அவளாக பேசிட இவனுக்கு உள்ளம் துள்ளியது.

"கீர்த்தி....!"ஆணின் குரலில் மென்மை.

"ஆண்மையில் ஓர் மென்மை தனி அழகு தான்!"

"கல்யாணம் பண்ணிக்கலாம் கீர்த்திம்மா!?" சூட்டோடு சூடாக கேட்டுவிட்டான் அவன்.

"ஏய் என்ன ஏதோ மிட்டாய் வாங்கிகலாமா மாதிரி சாதாரணமா கேட்கற!?"

"அப்பறம் வேற எப்படி கேட்கணும்!?இந்த முட்டி போட்டு எல்லாம் கேட்கமாட்டேன்!"

"என்ன சொன்ன!?" அவள் முறைக்க

"இல்லடி செல்லம் முட்டி போட்டு வெளிநாட்டுக்காரன் மாதிரி எதுவும் பண்ணாம.
நம்ம பண்பாட்டை வளர்க்க மாதிரி, பண்பாட்டை போற்றும் விதமா உன் காலை பிடிச்சு மெட்டி போடுவேன்னு சொன்னேன்டி என் பட்டு!!" என்றான் ஶ்ரீ.

அவன் பேச்சு வெட்கப்புன்ணகை வெடிக்க செய்ய

"எனக்கு இப்போவே ஒரு பதில் வேணும்
வீம்பாய்!?"நின்றான் ஶ்ரீ.

'உன் பதிலை இன்றே கூறவேண்டும்!' எனும் பிடிவாதம் அவனிடம்.

அவள் தயங்க அவன் குடும்பமே அங்கே வந்து இறங்கியது காரில்.

'என்னடா இது!?' என்பதாய் அவள் பார்க்க.

அவனோ,"நீ ஓகே சொன்னா, ரெண்டு பேருக்கும் லவ் மேரேஜ்.நீ மாட்டேன்னு சொன்னா, உங்க அம்மாகிட்ட பேசி எனக்கு லவ் மேரேஜ் உனக்கு அரேன்ஜ் மேரேஜ்னு
மாத்திக்களாம்!"

"அப்போ என்ன பண்ணினாலும் என்னை விடமாட்ட!?"

"கட்டாயம் அதுமட்டும் நடக்கவே நடக்காது.. நடக்கவே நடக்காது.. நடக்கவே நடக்காது..!" விளையாட்டாக தன் மனம் உரைக்க புன்னகையோடு அவன் கரம் பற்றினாள் கீர்த்தி.

மன அழுத்தம், தன் பக்க குறைகள் எல்லாம் அவன் முன் கரைந்து காணாமல் போவதை உணர்ந்தாள் கீர்த்தி.


உடனே அலைபேசியில் இருந்து அழைப்பு விடுத்தான் தன் மச்சான் சாத்விக் எண்ணிற்கு.


"என்னடா என் தங்கச்சி விரட்டி அடிச்சூடாளா!?"

"மாப்ள..மாப்ள...!"
அதற்கு மேல் பேசமுடியாது ஶ்ரீயின் குரலில் தான் எத்தனை உற்சாகம்.

காதல் கைகூடிய தருணம் அவனை நிலைகொள்ள விடவில்லை அவனை.

"டேய் ஶ்ரீ என்னத்தையாவது சொல்லித் தொலைடா பக்கி!?"
அந்த பக்கம் இருந்து பதட்டமாக கத்தினான் சாத்விக்.

"மாப்ள உன் தங்கச்சி இருக்கா இல்ல அவ அவ...!"

"அப்பறம் என்னடா சொல்லு..!?"

"அவ என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லிட்டாடா மாப்ள!"

"என்னடா சொல்ற!?"

"எனக்கு நேரம் இல்லை நான் இன்னும் அவனுங்களுக்கு கால் பண்ணனும் பாய்!" என்றதோடு அழைப்பை துண்டித்து

தன் நண்பர்கள் குழாமிற்கு அழைப்பு விடுத்தான்.

"என்ன மாப்ள
'என் சோக கதைய கேளு
நண்பர் குழாமேன்னு'
பாட்டு பாட கூப்டியா சாரி மச்சான் நான் ரொம்ப..... பிசி!"
எடுத்த எடுப்பில் ரபீக் பேசிட.

"அதுதானே ஒருத்தன் நல்லா இருந்திட கூடாதே!"

ஆறுதலாக கூறிய ஜோ

“நீ சொல்லு மச்சான் இன்
நாய்க்கு எவ்வளவு சாணி அடிவாங்கின!?" என்று வாரிவிட.

"டேய் மச்சான்ஸ் என் கல்யாணத்துக்கு மொய் எழுத உங்க கார்டை எல்லாம் ஃபில் பண்ணி வச்சுக்கோங்கடா இன்னைக்கு உனக்கு தான்டி மாப்ள சாணி அடி!" என்றவன்

"எப்போ ரிட்டன் வர்ற மச்சான்!?"

"கல்யாணம் அங்கதான் மச்சான்!" என்றான் இயக்கி.

வேறு என்ன 'கெட்டி மேளம்' தான் அடுத்தது.
 
Top