Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 25 நிறைவு பகுதி

Advertisement

ஐ eagle eyes

Active member
Member
"டேய் ஓடாத கிருஷாந்த் நில்லு கண்ணா அம்மாவால உன் ஓட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியல. தங்க புள்ள நில்லுடா!"

அதற்கும் மேல் மகன் பின்னால் ஓடமுடியாது மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க தோட்டத்து குடிலில் நின்று கொண்டாள் ரித்து.

"அப்பனை போல பிடித்தம் நிறைந்த இடம் கிருஷாந்திற்கு குடில் தான் அதுவும் அதனை வட்டமிடுவதில் அந்த கருடனையும் மிஞ்சிடுவான் போல!"

"எல்லாம் அவளின் மகனின் ஓட்டம் தான்.குடிலின் உள்ளே சிவகாமி சபதத்தை ஒரு கண்ணும் பேரனிடம் மருமகள் படும் பாட்டை ஒரு கண்ணும்!" என ரசித்திருந்தார் சௌந்தர்யா.

"மனைவிக்கு உதவும் கரம் நீட்டிடவே ஓடிய மகனை இரண்டே எட்டில் பிடித்திருந்தான் ஷ்ரவன்!"

ஓட்டமாய் ஓடிய மகனை இறுக்கிப்பிடித்து தோளில் அமர்த்தியவன்.

"தாதி.. என்னை விதுங்க தாதி..!" மழலையாய் கெஞ்சிட.

"மகனை வாங்க இருகரம் நீட்டிய மனைவியை பிள்ளை கொடுக்கும் சாக்கில் செல்லமாக ஊரல் செய்து வெல்லமாய் தித்திக்க செய்தான் வேங்கையவன்!"

"மாமியார் கண்களில் கணவனின் சேட்டை பட்டுவிட்டதோ!?" பதறி சிதறியது பெண்ணின் நாணத் தூரிகைகள்.

மகனின் தலையை கண்டவுடன்
சிறியவர்களுக்கு வாய்ப்பை வழங்கி நாகரீகமாக உள்ளே சென்றிருந்தார் பெரியவர்.

மனைவியின் முகம் கண்டு கள்ளப் புன்னகை தவழ,"எட்டி நின்ற சிட்டுப் பெண்ணை கைகளுக்குள் பொத்திக் கொண்டு மகனை அம்பாரி ஏற்றி!" இல்லம் நோக்கி நடையைக் கட்டினான் ஷ்ரவன்.

"ஆம்!"

"இரண்டாண்டுகளுக்கு முன்பு மருத்துவர்கள் ஐம்பதுக்கு ஐம்பது வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது!" என்றது ஷ்ரவனின் முதுகுத் தண்டு அறுவை சிகிச்சை பற்றிதான் கூறி இருந்தனர்.

முன்னால் அறிக்கைகள் எல்லாம் ரகோத்வாவால் உருவாக்கப்பட்ட போலிகள்.

இந்த விபத்தில் அவன் உடல் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட ,"அறுவை சிகிச்சை செய்தால் அவன் நடக்க வாய்ப்பு உள்ளது!" என்று கூறி இருக்க.

முயன்று பார்க்க முடிவு செய்தார் சௌந்தர்யா.அதனால் தான் யோசிக்காது பட்டென்று ஒப்புக்கொண்டார்.

"அன்று நடந்த அறுவை சிகிச்சையில் மருத்துவம் பாதி கைகொடுத்தது என்றால்; மீதி பாதியை கைகொண்டது என்னவோ ரித்து தான்!"

"சராசரி கணவன் தடுமாறும் நேரம் தாங்கி பிடிக்க மனைவி இருக்கும் தைரியமே மலையை புரட்ட செய்யும் வல்லமை பெற்றது!" எனில்;

"ஷ்ரவன் போன்ற அழுத்தக்காரனை எதையும் சாதிக்கும் சாதனையாளனை எழுந்து நடக்க செய்யாதா என்ன!?"

"இதோ இன்று அதையும் நடத்திகாட்டியது காதல் கொண்ட சிற்பக மகள் அதை நடத்தி காட்டினாள்!"

அதன் பலன் நம்முன் கம்பீர நடையிட்டு வீட்டிற்குள் சென்றது தன் குடும்பத்துடன்.

கூடத்தில் அமர்ந்து சிவகாமி சபதத்தை தொடர்ந்த சௌந்தர்யாவிற்கு,"மகன் நடந்து வரும் அழகை காண இரண்டு கண்கள் போதவில்லை!"

கண்கள் ஆனந்த கண்ணீரை சொரிய நாசுக்காக சுண்டி எறிந்தார் அந்த இரும்புப் பெண்மணி.

"எல்லாம் சரியாக உள்ளதா!?" என கண்ணாடியில் தன்னை ஒருமுறை சரி பார்த்திருந்தாள் ரித்து.

"ஐயோ நான் என்ன செய்வேன் இந்த சேலை தான் கட்டணும் சொன்னாலுங்க. ஆனா இதை கட்ட இந்த பாடா இருக்கே!" என்று சற்று அசௌகரியம் உணர்ந்தாள் தாரகை.

"என்னடி உறுத்தலா இருந்தா இதை ரிமூவ் பண்ணிடு!"

"நீங்க சொல்றதும் சரிதான்..!" என்று சொல்லிக்கொண்டே வந்தவள் கணவன் விழிப்பாவை சொல்லும் சேதி வேறு எங்கோ இழுத்துச் செல்வது கண்டு.

"ஆமாம் இப்போ என்ன சொன்னீங்க!?"

"இல்லடி உனக்கு அன்கம்பஃபர்ட்டா இருந்தா ரிமூவ் பண்ணிட சொன்னேன்!" இதழின் ஓரம் முகிழ்ந்தது கள்ள மூரல் ஒன்று.

"கண்டுகொண்டாள் கள்ளனின் ஆசையை.!"

"ஐய்ய எந்நேரமும் இதே நினைப்பு தானா!?" செல்லமாக முறைக்க.

அவனோ கண்ணாடியோடு சேர்த்து அவளை இறுக்கி பின்னிருந்து தோளில் கன்னம் பதித்து காதோரம் மெலிதாக தன் காற்றை ஊத.

"இம்..."என்றொரு முனகல் அவளிடம் "விடுங்க ப்பா நான் போறேன் எனக்கு இந்த சேரியே போதும்!"ஓடபார்க்க

"எங்கடி தப்பிக்க பார்க்கற குள்ளி!?"

"என்ன சொன்னீங்க நான் குள்ளமா!?"

"ஆமாம் நீ குள்ளம் தான்டி குள்ளி, குவ்வா குவ்வா வாத்து!"என்று கிண்டல் செய்ய.

"நீங்க நீங்க நீங்க... ஹும்...!"முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அவள் அறையை நீங்க முயல.

"நான்.. நான்..நான்.. என்னடி சொல்லு!?" என்ன

"நீங்க மேல் மாடி உயரம் வளருவீங்கன்னு யாருக்கு தெரியும் வேணும்னா இன்னைக்கு போற ஃபங்ஷன்ல உங்க உயரத்துக்கு குதிரை கூட்டிட்டு வருவாங்க இல்ல அதை வேணா கட்டிக்கோங்க!" என்றிட.

அவளை விட்டிருந்தால் அமைதியாக சென்றிருப்பாள் அவளை மீண்டும் இழுத்து பிடித்து கேள்வி எழுப்ப அவள் பொறுக்காது
பதில் பேசிட.

அவளின் பதிலில் முதலில் முழித்தவன் பொருள் புரிந்ததும்," ஏய் என்னை குதிரையை கரக்ட் பண்ண சொல்ற!?"

"எனக்கு குதிரை எல்லாம் வேண்டாம்டி!"

"அப்பைக்கு அப்போ மேல எதையாவது வச்சுட்டு எடுக்க முடியாம எட்டி எட்டி கள்ளப்படம் காட்டுற என் குள்ளி தான் வேணும்!" என்றான் மையலாய்.

"ச்சீ... ஒரு பெரிய மனுசன் பேசுற பேச்சா இது!?"

"ஆமாம் டி பெரிய மனுஷன் எதையுமே பேச்சுல காட்டமாட்டங்க செயல்ல தான் காட்டுவாங்க அதைத்தானே சொல்லவர்ற!"
சொன்னதோடு நிற்காது

இன்பகணைகளை அவள் இதழ் மீது வன்மையாய் தொடுக்க.

"ஹா..ஹா..ஹா..!" மூச்சுமுட்ட வாயுபகவானால் இருவரும் விலகினர்.

"ஐயோ!" இப்போது மீண்டும் ஒரு அலறல் அவளிடம்.

"இப்போ என்னடி வெக்கம்!?" என்றவனிடம் கண்ணாடியை காண்பிக்க.

சேலை மட்டுமே அசௌகரியம் என்ற நிலை மாறி;கண்களில் வைத்த மை இவன் கைகள் தீண்டலில் புருவம் வரை நீண்டிருக்க.

வன்னிதழ் செய்த ஜாலத்தால் பெண்ணின் மலர் இதழ் கொண்ட சாயம் இதழை விட்டு இடம் பெயர்ந்து சதி செய்ய.

கூந்தலுக்குள் கோர்த்த கரம் சிகை அலங்காரத்தை சிறப்பாய் கலைத்திருந்தது.

சேலையின் நிலையை எல்லாம் சொல்வதற்கு பொறுமையில்லை.

சகலமும் நிலை திரிந்து சிந்தனை அவளை கள்ளத்தனமாய் எங்கோ இழுத்து செல்ல.

கள்வன் தன் காதலி மனதை புரிந்து அவளை மீண்டும் நெருங்குவதற்கு முன்பு கதவை திறந்து வந்திருந்தான் கிருஷாந்த்.

மகனின் பாத சுவடின் ஓசை கேட்டு ஓய்வு அறைக்குள் சென்று மறைந்தாள் கஸ்தூரி மான்.

"ஐயோ இந்த மனுசனால இப்போ நான் திரும்ப கிளம்பனுமா!?" என்று கூறிக் கொண்டே வேறு சேலைக்கு மாறி வெளிவந்து கணவனை முறைக்க.

"ஏய் என்னடி மறுபடியும் முதல்ல இருந்தா ஏதோ நான் மட்டும் தான் உன்னை இது பண்ணின மாதிரி பார்க்கற.நீ இப்படிலாம் ஏதாவது பண்ணுவேன்னு தெரிஞ்சு தான் இன்னும் நான் டிரஸ் கூட சேஞ்ச் பண்ணாம அப்படியே இருக்கேன்!" என்றான் ஷ்ரவன்.

அவன் கோலத்தை கண்டு "இன்றைக்கு விழாவிற்கு சென்றது போல தான்!?" என்றுதான் தோன்றியது அவளுக்கு.

"வாரணம் ஆயிரம் சூழ வையத்து வாழ் தேவதை அவளை நாணமுற செய்த தன் காதலில் கர்வம் கொண்டான்!" அவன்.

டெகரேஷன் ஆல் செட் பேக் ஸ்டேஜ் ரெடியா பவுன்சர்ஸ் ரெடியா செக்யூரிட்டி அலாட்டர்ட்.

ஆன்கர்ஸ் ரெடியா என்ற விழா அமைப்பாளர் அனைத்தையும் ஒருமுறை சரிபார்த்து விழாவிற்கு வரவிருக்கும் பெரிய பெரிய தொழில் ஜாம்பவான்களின் உதவியாளர்களுக்கு தகவல் தெரிவிக்க.

அடுத்த ஒரு மணி நேரத்தில் அழைக்கப்பட்ட விருந்தினர்களின் வருகை தொடங்கியது.

சுந்தரின் சாதனைக்கு அங்கே மாநிலங்கள் மற்றும் மத்திய மட்டுமல்ல உலக அளவில் பெரும் அங்கீகாரம் கிடைக்க.

"நோபல் பரிசுக்கு கூட அவரது கண்டுபிடிப்பு இடம் பிடித்திருந்தது!"

இத்தனை ஆண்டுகள் தன் சேவைக்கு மட்டுமே வாங்கிய சௌந்தர்யாவின் கரங்கள் கணவனின் கனவுக்கு கிடைக்கும் அங்கீகாரத்திற்கும் பெறப்போவதை எண்ணி உவகையில் ஆழ்ந்தது.

இந்த நிகழ்வை முடித்துக் கொண்டு அனைவரும் அங்கு தான் செல்ல உள்ளனர்.

கடைசியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அன்னையும் மகனுமாக மட்டும் சென்றவர்கள் இந்த ஆண்டு இரட்டை நோபலை ஒரே குடும்பத்தில் தட்டி தூக்க உள்ளனர்.

"ஆம்! சௌந்தர்யாவின் சேவைக்கும், அவரின் கணவர் சுந்தரின் கண்டுபிடிப்பை பாராட்டியும் இரட்டை நோபல் வாங்கும் குடும்பம்!" எனும் பெருமையை பெற்றனர்.

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில்
இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவுத் திட்ட அமைப்பிற்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பசிப்பிணி போக்குதல் மற்றும் போரைத்தவிர்த்து அமைதியை காத்தலுக்காக இந்த விருதிற்கு உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து 20 ஆண்டுகளாக 83 நாடுகளில் 9 கோடி பேருக்கு உணவு வழங்கி சேவையாற்றி வந்ததால் இதற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான இந்த நோபல் பரிசு 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி வாய்ந்ததுடன், இப்பரிசைப் பெற்றுக்கொள்ளும் 101 ஆவது வெற்றியாளராக குளோபல் குரோத்தின் உலக உணவுத் திட்டம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்றைய நாள் முடிய..

இரண்டாம் நாள் வெகு அழகாய் புலர்ந்தது.
இன்றைக்கு தான் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.

வந்திருந்த கூட்டம் மொத்தமும் ஒரே பரபரப்பாக இருந்தது.

'ஏனென்றால்!?'

அடுத்த உரையானது உலகை திரும்பி பார்க்கவைத்த.

புற்றுநோயை முற்றிலும் அழிக்கும் ஒரு மருந்து கண்டுபிடிப்பு.இதனை சுந்தர் தான் கண்டறிந்தார்.

அதனை விளக்கிக் கூறி நோபல் பரிசை பெற மேடை ஏறினர் நம்மவர் குழு.

" தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் செடியின் கிழங்குச் சாறில் இருந்து புற்றுநோயை குணப்படுத்தும் வெள்ளி நானோ துகள்களை கண்டறிந்து.

``செங்காந்தள் மலர் அல்லது கண்வலி கிழங்கு என்றழைக்கப்படும் தாவரத்தில் வேதியியல் பொருள் அதிகமாக உள்ளது. இது புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இதற்கான ஆய்வை மேற்கொண்டு வந்தார் சுந்தர்.

முதலில் செங்காந்தளின் வேதியியல் கூறுகளைப் பிரித்து வெள்ளி உலோகத்துடன் சேர்த்து.

பிறகு அதை நானோ அளவில் துகள்களாக உருவாக்கி. நானோ துகள்களாக உருவாக்குவதன் மூலம் எளிமையாக புற்றுநோய் செல்களுக்குள் செல்ல முடியும்.

முதற்கட்டமாக ஆய்வகத்திலிருந்து புற்றுநோய் செல்களை வாங்கி ஆராய்ச்சியை மேற்கொண்டு.

செங்காந்தள் வேதியியல் கூறுகளினால் புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்த முடிகிறது என்பதை கண்டுபிடித்து.

மேலும் எலியில் புற்றுநோய் செல்களை செலுத்தியதில் நானோ துகள்கள் நன்றாகவே வேலை செய்ய.

அடுத்தகட்டமாக மருத்துவர்கள் ஆலோசனைப்படி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு.

நீரிழிவு முதல் புற்றுநோய் வரை ஏற்படுத்தும் செயற்கை இனிப்புகள் - WHO அறிவிப்புக்கு மருத்துவ விளக்கம்
மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், தொண்டை புற்றுநோய் என ஒரு சில புற்றுநோய் செல்களில் நானோ துகள்களைக் கொண்டு ஆய்வுகள் நடந்தி.

இதில் மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்களில் நானோ துகள்கள் நல்ல பலன்களை கொடுத்து வருகின்றன.

இதன் மூலமாக புற்று நோய் எனும் உயிர் கொல்லியை வேரறுக்க முடியும்.
என்ற விளக்கத்தை ஜோ வழங்குகிறது

கடைசியாக "இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம் ஜெய்ஹிந்த்!!"

என்றதும் அரங்கம் அதிர கைதட்டல் கிடைக்க.

நண்பர்கள் அனைவரும் ஒன்றாக கூடி நோபல் பரிசை கைப்
பற்ற.

கீழே அமர்ந்து பார்த்திருந்த மனைவிமார்களுக்கும்,பெற்றோருக்கும் பெருமை பிடிபடவில்லை.

இதுபோல இவர்களின் சேவை என்றும் மாறாது வளர வாழ்த்தி விடைபெறலாம்..!

முற்றும்.
 
நன்றிகள் கோடியாய் 💐
 
Top