Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேராண்மை 7

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
யாரோ இரண்டு காதலர்கள் அடித்துபிடித்து விளையாடிக் கொண்டே ஓடுவதை கண்ட சாத்விக்

தன் முன் அமர்ந்திருந்த ரேமாவை பாவமாய் பார்த்திருந்தான்.


என்றைக்கு அலுவலக வாயிலில் அவளை இடித்தானோ அன்றே அவளிடம் மடங்கினான்.

எல்லாம் அவளின் பயந்த விழிகள் காட்டிய நாட்டியத்தில் தான்,முதலில் சருக்கினான்.
அன்று விழுந்தவன் இன்றுவரை எழாமல் எழ முடியாமல் தவிக்கிறான்.

இளமைக் கதவுகள் அவளுக்காக மட்டுமே தாழினை விலக்க.

"அவளை எங்கனம் தன் இளமையின் வாசஸ் தளத்தில் ராணியாய் அமர செய்வது!?" எனும் பெரும் யோசனைக்கு மத்தியில் தன் உதவியாளன் நவீனை நாடினான்.

"நவீன்.."

"எஸ் பாஸ்"

"எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு"

"சொல்லுங்க பாஸ்"

"நான் ஒரு பொண்ணை பார்த்தேன்"

"ஓகே பாஸ்!"

"அவளை பார்த்ததுல இருந்து தூக்கமே வரல!"

"ஏன் பாஸ் அவங்களை பார்த்து பயந்துடீங்களா!? எங்க அம்மா எப்பவுமே இப்படி யாரையும் பார்த்து பயந்துட்டா திருநீறு போடுவாங்க பாஸ் அப்பறம் நல்லா தூங்கிடுவேன்!!"


என்றான் அந்த பச்சை மண்.

"அடேய் அவ என்ன பேயா!? அவ என்னோட தேவதைடா!!"

"ஹோ பாஸ் லவ்வுல விழுந்துடீங்களா!"

"இது உண்மையா லவ்வா நவீன்!?"

"யாஹ்! ஆப் கோர்ஸ் பாஸ்.ஒரு முறை பார்த்த ஒருத்தவங்களை நீங்க நினச்சுட்டே இருந்தா லவ்னு தான் படத்துல எல்லாம் காட்டுவாங்க!"

இவனிடம் கேட்டால் தன் மூளை குழம்பிடும் அபாயம் உள்ளதால் தங்கள் நிறுவனத்தின் ஆய்வகம் நோக்கி சென்றான்.


அங்கே அனைவரும் வணக்கம் வைக்க.

எப்பொழுதும் பதிலுக்கு உற்சாகமாக வணக்கம் சொல்லும் சாத்விக் மௌனமாக கடப்ப்பதை கண்டு 'என்ன ஆனது!?' எனும் பயம் அனைவரையும் சூழ.

ஆய்வுக் கூடத்தின் தலைமை ஆய்வாளன் கபில்.ஆனால் இளமையானவன் சாத்விக் வயதுதான் அவனுக்கும் இருக்கும்.

வாகீசனின் நண்பர் ஒருவரின் பிள்ளை.
சாத்விக்கை கூட கபில் போல 'வளர்க்க வேண்டும்!' என்று தான் மனிதர் ஆசை கொண்டார்.

'கடவுளின் ஆசைகளே கனவாய் போகும் கலியுகத்தில்; மனிதரான வாகீசனின் ஆசையா நிறைவேறும்!?'

அதுவும் கனவாய் போக.

மகன் சாதிக்காத சாதனைகளை நண்பன் மகன் சாதிப்பதில் பெருமை கொண்டார் அவர்.

இவனின் சோர்ந்த முகம் கண்ட கபில் அவன் அருகே வர.

நிமிர்ந்து கபிலின் முகம் பார்த்தவன்

"சொல்லு கபி எதும் சைன் வாங்கணுமா!?"

"அதெல்லாம் இல்ல சாத்வி நீ ஏன் ரொம்ப டல்லா இருக்க என்ன மேன் ஆச்சு!? வெளிய இருக்க உன் சிரிப்புக்கு மயங்கிய ரசிகர்கள் எல்லாம் சார் ஏன் சிரிக்காம போறாருன்னு? ஒரே ஃபீலிங்!"

விளையாட்டாய் பேசிட

"போடா கபி உனக்கு இதெல்லாம் சொன்னால் புரியாது!"

"ஆமாம் சொன்னால் புரியாது! சுவைத்தால் மறக்காது!! இதென்ன டீத்தூள் விளம்பர டயலாக் எல்லாம் பேசிட்டு இருக்க"

"போடா உனக்கு என் கஷ்டம் டயலொக் மாதிரி இருக்கு ?"

சாத்விக் தனக்குள் நொந்து கொள்வது வெளிப்படையாக தெரிந்திட

"சரி என்னனு சொல்லு மச்சான்? பார்த்துக்கலாம்!"

மறுபடியும் முதலில் இருந்து ரீலை ஓட்டினான் தன் காதலியை முதன்முதலில் கண்ட பொழுதே அவளின் நீள் விழிகள் காட்டிய பயத்தில் பட்டென்று தான் விழுந்ததை.

சாத்விக் நனைந்தது குளிர்ந்த சந்தன மழையிலா அல்லது சுடும் வெண்ணீரிலா என்பது எல்லாம் காலம் தான் பதில் சொல்லும்.


"ஓகோ... கதை அப்படி போகுதா!?"

"எனக்கு ஒன்னுமே புரில கபில்.கண்ணை மூடினால் கூட அவளோட முகம் மட்டும் தான் வருது.அம்மா ஏதாவது கேட்டா கூட இவளோட பேரை சொல்லிட்டு சுத்துறேன் !" வருத்தமாக சாத்விக் கூற.


"அந்த பொண்ணு பேர் எல்லாம் தெரியுமா!?"

ஏன் தெரியாம அவள் என் ஆபீஸ்ல ரிசப்ஷனிஸ்ட்டா வொர்க் பண்றா நேம் ரேமா,நார்த் இந்தியன்,சைன்ஸ் ஸ்டூடண்ட்.

என அவளின் ஜாதகம் தவிர அனைத்தையும் ஒப்பித்தான் சாத்விக்.

விட்டால் அவள் வீட்டிற்கே அழைத்து சென்றுவிடுபவன் போல சாத்விக் அவளை பற்றிய தகவல்களை நீட்டிட.

"டேய் சாத்வி போதும்டா என்னால இதுக்குமேல முடியாதுடா!"

ஒளிபரப்பியது சாத்விக் தான் என்றாலும் மூச்சு வாங்கியது என்னவோ கபில் தான்.

"உனக்கு அந்த பொண்ணை இவ்வளவு பிடிக்குதுன்னா அவளை ஃபாலோ பண்ணி அவளை பத்தி இன்னும் தெரிஞ்சுக்கோ!"

"அது சரியா வருமா கபி!?"

"அதெல்லாம் கண்டிப்பா வரும்.அப்படியே வாய்ப்பு கிடைக்கறப்போ உன்னை உயர்த்தி காமிச்சு இம்பிரஸ் பண்ணு. உன்னை அவள் ஒரு நாள் திரும்பி பார்த்தாள் லவ்வை சொல்லிடு!" என்றான் கபில்.

"ஆனா மச்சான் இங்க லேப் வொர்க் இருக்குதே!?"

"டேய் அதெல்லாம் நான் பார்த்துப்பேன். உன் சைன் வேணும்னா நானே வந்து வங்கிப்பேன் புரியுதா நீ இப்போ கிளம்பி ஆல் த பெஸ்ட் மேன்!"

"தாங்க்ஸ்டா மச்சான்!"

"தனக்கு அறிவுரை வழங்கிய நண்பனை கண்டு நன்றி நவிழ!"

"போடா ஃபூல்..!நமக்குள் எதற்கடா நன்றி?" என்று நண்பனை திட்டிவிரட்டினான் கபில்.

உள்ளே செல்லும் போது கூம்பிய முகம். வெளியே வரும் போது கண்களுக்குள் வண்ண வண்ண கனவுகளை சுமந்து கொண்டே வழியில் இருக்கும் அனைவருக்கும் மாலை நேர வணக்கம் சொல்லிக்கொண்டே சென்றது.

அப்படி கபில் கூறிய அனைத்து வகைகளையும் பயன்படுத்தி தான் ரேமாவை காஃபி ஷாப் வரையில் அழைத்து வந்திருந்தான் சாத்விக்.


அதை பார்த்துவிட்டு தான் ஜோ ஒரே ஓட்டமாக ஓடி இருந்தான்.

"சொல்லுங்க சார் என்னை எதுக்கு இங்க கூப்பிட்டு வந்தீங்க !?"

இந்த காலத்திலும் சுடிதாரின் ஷாலுக்கு இரண்டு புறமும் பின் குத்தி வந்திருக்கும் அவளின் சாத்வீகம் சாத்விக்கை கவர்ந்தது.

"அது வந்து ரேமா நான்... உன்னை... "

ஆணவன் தயங்கும் போதே திருதிருவென விழித்தவள்

"மேட்லி ஐம் இன் லவ் வித் யூ ரேமா!" என்றதும் பொல பொலவென கண்ணீரை பொழிய

அவன் ஏதோ சொல்லக்கூடாது ஒன்றை சொல்லியது போல அவள் அழுக.

"ஏய் ஏன்மா அழற என்ன ஆச்சு!?" பதறி சாத்விக் வினவ.

"யாரும் இல்லாத பொண்ணு ஏமாத்திடலாம்னு நினச்சீங்களா இனிமே இப்படி தப்பு தப்பா பேசிட்டு இருந்தீங்க அவ்வளவு தான். நீங்க முதலாளின்னா இப்படித்தான் பண்ணுவீங்களா!?"

பத்து பக்கத்திற்கு பேசிவிட்டு அங்கிருந்து விருட்டென்று சென்றுவிட்டாள்.

அவள் அழுகையோடு சிறுமி போல புலம்பி சென்றது புன்னகையை சேர்க்க.

அப்படியே இதை கபிலிடம் சென்று சேர்ப்பிக்க.

அவனோ," கொஞ்ச நாளைக்கு விட்டுப்பிடி மச்சான் கண்டிப்பா ஓகே சொல்லிடும்!" என்று ஆரூடம் கூற.

அவன் சொல்வதையும் செயல்படுத்தி பார்க்க முன்வந்தான் சாத்விக்.


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


"டேய் பூனை சீக்கிரம் கிளம்புடா நம்ம அங்க போகணும்.."

"அக்கா நீ வேடிக்கை தானே பார்க்க போற அதுக்கு எதுக்கு இந்த அவசரம்!?"

"பூனை இன்னைக்கு எங்க ஸ்கூல் கரஸ்பாண்டன்ட் ஸ்பீச் இருக்குடா அங்க!"

"ஓ அதுக்கு தான் இவ்வளவு துள்ளலா!?"

"ஆமாண்டா பூனை குட்டி கொஞ்சம் சீக்கிரமா கிளம்பி வாடா!"

"ஏன்கா...!?"

"என்னடா இந்த மத்த பொண்ணுங்க எல்லாம் கிளம்பரதுக்கு டைம் எடுப்பாங்களாமே நீ ஏன் எனக்கு முன்ன கிளம்பி உட்கார்ந்து இருக்க!?"

"எனக்கு என்னடா இருக்கு முகத்துக்கு பவுடர் நெத்திக்கு சின்ன பொட்டு,அப்பறம் கண்மை அவ்வளவு தான் இதுக்கு எதுக்கு நான் டைம் எடுக்கணும்!?"

"அதும் சரிதான் வரியா கிளம்பலாம்..!"

"டேய் இது என்னடா தலையை சீவாமலே வர்ற!?"

"அக்கா இதெல்லாம் ட்ரெண்ட்!"

"எது தூங்கி எழுந்த மாதிரி தலையை வச்சுட்டு வர்றதா.இரு நான் பண்ணி விடுறேன்!" என இரண்டே நிமிடத்தில் பிரவீன் சிகையை அலங்கரித்தாள் ரித்து.

"இப்போ கண்ணாடி பாரு!"என்றிட

"ஆனாலும் நீ பயங்கர வித்தக்கார புள்ளக்கா கைவசம் தொழில் ஒன்னு இருக்கு பாரு!"கிண்டலடிக்க.

தம்பியை முதுகில் மொத்திக் கொண்டே பெற்றோரிடம் விடை பெற்று பிரவீனின் இருசக்கர வாகனத்தில் புத்தக கண்காட்சிக்கு சென்றாள்.

இருவரும் செல்வதற்கு முன்பே அங்கே முதல் நாள் விழா தொடங்கி இருக்க.

பிரபல எழுத்தாளர் ஒருவர் மேடையில் அமர்ந்திருக்க அடுத்து பேசுவதற்காக பெண்மணி ஒருவர் இடப்பக்கம் கோலை ஊன்றி வந்தவர்.

வலகரத்தில் மைக்கை ஏந்தி பேசத் தொடங்கினார்.

'பெண் எனும் போராளி!'

தலைப்பில் அவர் பேச பேச கீழ் இருந்து கேட்டிருந்த ரித்துவிற்கு,"தானும் இவர் போல தைரியசாலியாய் வரவேண்டும்" எனும் விதை மனதில் விழுந்தது.

அவர் பேசி முடித்து மேடையில் இருக்கும் நாற்காலியில் அமர.

"அக்கா வாக்கா போகலாம்!" ரித்துவை அனத்தி எடுத்தான் பிரவீன்

"டேய் இருடா இன்னும் எல்லாரும் பேசறதை கேட்டுட்டு போகலாமா!?"

"அக்கா அதுக்கு எல்லாம் நேரம் ஆகும்கா இப்போ வா உள்ள போகலாம்!"

"பூனை நீ இப்படி அனத்துவன்னு தான் உன்னை சனிக்கிழமை கூப்பிட்டு வந்தேன். இன்னைக்கு முழுக்க இங்க இருந்து பார்த்துட்டு நாளைக்கு வந்து புக்ஸ் வாங்கிக்கலாம்டா!" என்று கெஞ்சல் தொனியில் கேட்க.

"அவனோ அக்கா வாக்கா என்னோட அயர்ன் மேன் அங்க போய்ட்டு இருக்காரு அவரை பார்க்கணும்!"

இளம் வயதில் பிரவீனை உழைக்க தூண்டிய போராளன் ஒருவன் இருக்கிறான். அவனைத் தான் இப்பொழுது கண்டதாக பிரவீன் குறிப்பிட.

'கண்டிப்பாக இதற்கும் மேல் தன்னை உடன் பிறந்தவன் விடமாட்டான்!' என்பது புரிந்து ; வருத்தமாக அவன் பின்னால் சென்றாள் ஏக்கமுறு ஏந்திழை.

அக்காவை அவசர படுத்தியதில் 'அயர்ன் மேன்'எந்த புத்தக நிலையத்திற்குள் சென்றான் என்பதை கவனிக்காத பிரவீன் தன் அயர்ன் மேனை தவறவிட்டிருந்தான்.

"அக்காளை பார்த்து எல்லாம் உன்னால தான்!" என்று முறையாய் முறைக்க

"என்னடா பூனை முறைக்கிற உனக்காக தானே அங்க இருந்து வந்தேன்!"

பதிலுக்கு புலம்பியவள் கூட்டமாக மக்கள் வருகையில் தம்பியின் கரத்தை பிடித்துக் கொண்டு அவன் பின்னால் ஒதுங்கினாள்.

"அக்கா....!" கண்டிப்பாக வந்தது அவன் குரல்

"என்னை என்னடா பூனை பண்ண சொல்ற!?"

"அதுக்காக இப்படியா யாரும் உன்னை எதுவும் நினைக்க மாட்டாங்க.உன்னை விட குள்ளமா எவ்வளவோ பேர் இந்த உலகத்துல இருக்காங்கக்கா..!"

"ஆனால் எனக்கு நான்தான் குள்ளம்..!" கண்ணீர் வந்துவிடும் போல பெண்ணவளுக்கு.

இந்த உயர குறைவால் அவள் பட்ட அவமானம் கொஞ்சநஞ்சம் கிடையாது.

குழந்தையில் இருந்து, கன்னியாய் கனிந்தும் கூட அவள்பட்ட துன்பங்களும், அவமானங்களும் உருவ கேலிகளும் மறையவில்லை.

"ஏன் இந்த சாபக்கேடு!?" என அவள் வருந்தாத நாளில்லை.

அப்படி என்ன உயரம் குறைவு என்றால்; ஐந்தடிக்கு கொஞ்சம் குறைந்த உயரம் அவளது.

பெற்றோருக்கும், உடன் பிறந்தவனுக்கும் அவள் தேவதை பெண் தான்.

அடுத்த வேளை சோற்றுக்கு வழி இல்லாது வாடிய போது தன் சேமிப்பு உண்டியலை கொண்டு வந்து ராகவன் கைகளில் திணித்த தயாபரி அவள்.

"அப்படி சிறுமியின் உண்டியலில் எவ்வளவு இருந்துவிடும்!?" என்று ராகவன் மகளின் வற்புறுத்தலால் அதனை உடைக்க முதலில் தெரிந்தது பழைய ஐநூறு ரூபாய் தாள் தான்.

இன்னும் நூறு,ஐம்பது,பத்து,இருபது என எப்படியும் ஒரு இரண்டாயிரம் ரூபாய் பணத்தை தந்தைக்கு கொடுத்து குடும்பத்தை குழந்தையில் சீர்தூக்கிய சீராளி.

"தனக்கு இது வேண்டும்!" என்று ராகவனிடம் சென்று நின்றதே கிடையாது.

அதனால் தான் புத்தக கண்காட்சிக்கு பணம் அதிகம் வேண்டும் என்று கேட்பதற்கு அக்காளை முன்னால் அனுப்பினான் பிரவீன்.

கேட்காத மகள் வந்து கேட்டதால் தான் ஆளுக்கு எழனூறு கொடுத்து அனுப்பி விடும் ராகவன் இந்த முறை ஆயிரமாக கொடுத்திருந்தார்.

அவளுக்குள் பல திறமைகள் உண்டு.ஆனால் காண்பவர் கண்களுக்கு திறமை என்றுமே முதலில் தெரிவதில்லை அல்லவா

அவர்களின் கண்களில் முதலில் படுவது மற்றவரின் உருவம் தான் என்பதால் அதை வைத்து அடுத்தவரை எடை போடுகின்றனர்.

"இதனால் மற்றவர் மனம் படும்பாடு யாரறிவார்!?"


"சரி சரி கோபப்படாத பூனை அது சின்ன பிள்ளைல இருந்து பழகினது இப்போ மாத்திக்க வரமாட்டேன்னு அடபண்ணுது!" சமாதானமாக பேசி தம்பியை அழைக்க

அவனோ,"இனி இவ்வாறு ஒதுங்க மாட்டேன்!" என்றவள் சத்தியம் செய்யாத குறையாக கூறிய பின்பு தான் அவளுடன் நடையைக் கட்டினான்.

"எப்படியும் இந்த கூட்டத்துல உன் அயர்ன் மேனை பார்க்க முடியாது சோ.. நீ கேட்ட கார் புக் எங்க இருக்குன்னு பார்க்கலாம் வாடா பூனை!"

தம்பியை அழைத்துக் கொண்டே சென்றவள் மனதில்

தனக்கும் வாய்ப்பிருந்தால்,"இதுபோல் புத்தக கண்காட்சியில் தன் புத்தகங்களும் கூட இடம்பெறும் அல்லவா!?" எனும் ஆசை தோன்றியது.

வருடா வருடம் நடக்கும் புத்தக திருவிழாவிற்கு வந்து தான் படிக்கும் எழுத்தாளர்களின் புத்தகங்களை காணும் போது எல்லாம் அவள் மனம் துள்ளும்.

ஒருவேளை தான் எழுதிய ஒன்று புத்தக வடிவு கொண்டால் என்ற எண்ணமே அவளை உற்சாக கூத்தாட்டும் மனதை.

"இது வெறும் கற்பனை தான் மனமே!" என்று அடக்கிக் கொண்டு நகரும் பொல்லா ஏக்கம் அது.


இன்றும் அந்த ஏக்கம் விடாது துரத்த பிரவீனை தொடர்ந்தாள் ரித்து.

"அக்கா இது பாரு மாஸ்டர் பீஸ்கா.இதெல்லாம் சாதாரண நேரம் கிடைக்கிறது கஷ்டம்.அதுவும் இவ்வளவு ரேட் குறைவா கிடைக்காதுக்கா!"

"பூனை இது அன்னைக்கு நீ அமேசான்ல தேடின புக் தானே அங்க கூட ஸ்டாக் இல்லைன்னு வந்தது இல்ல.அப்போ இந்த புக்கை வாங்கிக்கோடா!"

"அக்கா ரேட்டை பார்த்தியா..!?"

"நீ எதுக்கு அதை பார்க்கற அந்த ஸ்டார்ட் அப் கம்பெனிக்கு லோகோ பண்ணினேன் இல்ல அதுக்கு அமௌன்ட் கிரெடிட் ஆகிருக்கு அதுல வாங்கிக்கலாம்!" என்றாள் அந்த பாசக்கார அக்கா.

"ஆனா அக்கா...!"

"டேலே இப்போ நீ வாங்குறியா!?இல்ல நான் வாங்கவா!?"

"அக்கான்னா அக்கா தான்..!"

மகிழ்வோடு அந்த புத்தகத்தை வாங்கிக்கொண்டு பிள்ளையின் தலையை கோதுவதை போல அன்பாய் கோதிட.

அதைக் காணவே 'இரண்டு கண்கள் போதாது!'நின்றிருந்தாள் பிரவீனின் குட்டி அன்னை.

"அக்கா கார் புக் இந்த இடத்தில இல்ல.வா நம்ம அந்த கடைக்கு போகலாம்"

"டேய் அப்போ நான் எப்படா வேடிக்கை பார்க்கிறது!?"

"அந்த புக்கை வாங்கிட்டு நம்ம வேடிக்கை பார்க்கலாம் சரிதானே!"

"சரிடா வா வேகமா தேடலாம்..!"

"அக்கா அங்க பாரு என்னோட அயர்ன் மேன்!"

தம்பி உவகை பொங்க காண்பித்த திசையில் நோக்கிய ரித்துவிற்கு ஆனந்த அதிர்வு தான்.


அதே கண்காட்சிக்கு அன்னை உடன் வந்திருந்தான் ஷ்ரவன்.

வந்த போது அன்னையின் பேச்சை ரசித்த பூங்காரிகை இப்பொழுது மகனின் வருகையை ரசித்திருந்தாள்.


"தம்பி யாரையோ காண்பிக்கின்றான்!" என எண்ணி "யாரடா பிரவீன் காண்பிக்கிற!?" என்றாள் ரித்து.

"அக்கா அ
துதான் வீல் சேர்ல இருக்காரே அவரு தான் என்னோட அயர்ன் மேன்!"

அதன் பின் அக்காவும்,தம்பியும் அவனை சுற்றி வர.

காரணம் பிரவீனின் மானசீக குரு 'ஷ்ரவன் தான் என்பதால்; அவன் சுற்றி வர.

ரித்துவின் அகம் கொய்த அம்பலன் அவன் என்பதால்; அவள் அவனை சுற்றி வர.

இப்படி இருவர் தன்னை சுற்று வருவது கூட தெரியாது ஷ்ரவன் சுற்றி வந்தான்.
 
Top