Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-13

Advertisement

praveenraj

Well-known member
Member
"ஹே குஷா அத்தையைப் பார்த்தே ரொம்ப நாளாச்சு... அவங்க எப்படியும் இன்னைக்கு வருவாங்கனு நான் எதிர்பார்த்தேன் தெரியுமா?" என்ற அனு அக்கேள்வியை மிகச் சாதரணமாகக் கேட்பதைப்போல் கேட்டு முன்னால் சென்று கொண்டிருந்த இன்னிசை கால் இடறவும்,

"பார்த்து நட இசை... உங்க அப்பா உன்னை இன்னைக்கு இங்க விட்டுட்டுப் போனதே எட்டாவது உலக அதிசயம்... இதுல உனக்கேதாவது ஆச்சுன்னா அப்பறோம் அப்பத்தாவும் தாத்தாவும் தான் மாட்டிட்டு முழிக்கணும்..." என்றாள் புல்வெளி.

"என்ன ஊரு இது? ஸ்ட்ரீட் லைட் கூட ஒழுங்கா எரியமாட்டேங்குது... ஒரே கும்மிருட்டா இல்ல இருக்கு? இங்க வேற ஏற்கனவே பாம்பு தேள் எல்லாம் இருக்கும்னு டேடி சொல்லியிருக்காங்க..." என்று அபி வழக்கம் போல் தன்னுடைய சிட்டி வாழ்க்கையையும் இந்தக் கிராமத்து வாழ்க்கையையும் கம்பேர் செய்கிறேன் என்ற பேர்வழியில் இந்த ஊரை மட்டம் தட்டினான்.

"ஏன்டா அபி உங்க ஊர்ல எல்லாம் பாம்பே இருக்காதா என்ன?" என்ற பாரிக்கு,

"உங்க ஊரு கடவுளே பாம்பு மேல படுத்து தானே போஸ் கொடுக்கறாரு? எதுக்கு இந்த ஸீன்?" என்றான் குஷா.

"ஏன் இசை கையில இருந்த பிளேட் எடுத்தாச்சு தானே?" என்ற பாரிக்கு

"அதெல்லாம் அப்போவே எடுத்தாச்சு அண்ணா..." என்று இசை பதில் சொல்ல ஏனோ எல்லோரும் அந்தக் கடந்த கால நினைவுக்குச் சென்றனர்.

ஆறு வருடங்களுக்கு முன்பு வழக்கம் போல் ஒரு காலாண்டு விடுமுறைக்கு அவர்கள் எல்லோரும் இங்கு கூடியிருந்தனர். மொட்டு, அனு இருவரும் பதினொன்றாம் வகுப்பில் நுழைந்திருக்க லவா, குஷா இருவரும் தங்களுடைய இன்ஜினியரிங் இளங்கலை முடித்து முதுகலை படிப்பிற்குச் சேருவதற்காகக் காத்திருந்த வேளையில் அவர்கள் இங்கே வந்திருந்தனர். அநேகமாக நீண்ட நாட்கள் கழித்து அப்போது தான் இவர்கள் எல்லோரும் ஒன்றாகப் பொழுதைக் கழித்ததாக இருக்கும். இசை மெல்லினி ஆனந்தி மூவரும் ஏழாம் வகுப்பில் இருந்தார்கள். விடுமுறைக்கு வந்த வழக்கம் போல் எல்லோரும் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். மதிய வேளை நெருங்கியிருக்க ஜானு நிம்மி சித்ரா முதலிய பெண்கள் எல்லோரும் வாய் ஓயாமல் அரட்டை அடித்து சமையல் வேலையை முடித்து தலைசீவிக்கொண்டிருந்த பொழுது குழந்தைகளான இவர்கள் ஐஸ் பால் விளையாடினர். அப்போது ஒளிவதற்காக வீட்டின் மன்பு இருக்கும் கிணற்றின் மறுபுறம் சென்ற இசை அருகே இருந்த பாசியில் கால் தவறி பேலன்ஸ் செய்ய தன்னுடைய வலது முழங்கையை ஊன்ற,"அம்மாமா..." என்று அலறலில் எல்லோரும் அங்கு கூடியிருந்தனர். இசைக்கு கை பிராக்சர் ஆகிவிட்டது என்று தெரிந்ததும் அவள் தந்தை திவாகரன் பேசிய பேச்சு இவ்வளவு தான் என்றில்லை.

"எனக்குனு இருக்குறது ஒரே ஒரு பொண்ணு தான்... உங்களையெல்லாம் நம்பி தானே இங்க அனுப்பினேன்... அவளுக்கு இப்படி ஆகிடுச்சே? அவ வாழ்க்கையே போயிடுச்சு..." அப்படி இப்படி என்று தொடர்ந்தவர்,"இது தான் நீங்க அவளைப் பார்த்துக்கற லச்சணமா நாளைக்கு எப்படி என் பொண்ணுக்கு நான் கல்யாணம் பண்ணுவேன்?" என்று வைத்தியையும் கனகாவையும் தன் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிவிட்டார். இதில் மற்றவர்களைக் காட்டிலும் உமாவுக்கு தான் அதிக டோஸ் விழுந்தது. அதன் பின் ஓராண்டு இசையை இங்கே அனுப்பாதவர் பலதரப்பட்ட பேச்சுவார்தைகளுக்குப் பிறகு இங்கே அனுப்ப பல நிபந்தனைகளை எல்லாம் போட்டார்.

பிள்ளைகள் எல்லோரும் இந்தக் கடந்த கால நினைவுகளில் மூழ்கியிருக்க ஏனோ குஷாவுக்கு இதன் பின் நடந்த அந்தச் சம்பவமும் நினைவுக்கு வந்தது. பின்னே அதுவரை குஷாவுக்கும் மொட்டுவுக்கும் சிறு சிறு மனஸ்தாபங்களாகவே இருந்து வந்த பிரச்சனை ஒரு விஸ்வரூபம் எடுக்க காரணமான தினமே அன்றைய இரவு தானே? அன்று நடந்ததையும் இன்று நடந்ததையும் ஒப்பிட்டுப் பார்த்த குஷா,"திமிரு திமிரு அவ உடம்பெல்லாம் திமிரு..." என்று முணுமுணுத்தவன் ஒரு ஐந்தாண்டில் எப்படி ஒரு மந்திரியாக இருந்தவரின் சொத்துக்கள் அபரிவிதமான வளர்ச்சியை எட்டுமோ அதே போல் இந்த ஆறாண்டுகளில் மொட்டுவின் திமிரும் அடுக்குக் குறியைப்(exponential growth) போல் பன்மடங்கு உயர்ந்திருப்பதாக எண்ணி ஆத்திரம் கொண்ட குஷா அந்தத் தினத்தை நினைவுகூர்ந்தான்.

நாளையுடன் தனக்கும் பரீட்சை முடிவதாலும் அது போக நாளைக்கு நடக்கவிருக்கும் வேல்யூ எஜூகேஷன் பரீட்சை வெறும் ஒப்புக்குச் சப்பாணி என்பதாலும் மாலை எல்லோருடனும் இணைந்து விளையாடலாம் என்று ஆவல் பொங்க வீடு திரும்பிய மொட்டுவுக்கு நிசப்தமாய்க் காட்சியளித்த வீட்டைக் கண்டு எதுவும் புரியாமல் திகைத்தவள் மன வருத்தத்துடன் இருந்த தன் தாத்தா பாட்டியைக் கண்டு விசாரிக்க அப்போது நடந்த அனைத்தையும் அவளுக்குத் தெரியப்படுத்தினர். இசையை திருச்சிக்கே கூட்டிச்சென்று விட்டதையும் ஜானகியைத் தவிர மற்ற அனைவரும் ஊருக்குச் சென்றுவிட்டதையும் தெரியப்படுத்த மொட்டுவுக்குள் எழுந்த கோவத்திற்கு அளவே இல்லாமல் போனது. எல்லாப் பேரப்பிள்ளைகளுக்கும் வைத்தி கனகா மீது அன்பு இருந்தாலும் அவர்களை உடனிருந்து மிக உன்னிப்பாய்க் கவனிக்க நேர்ந்ததால் மொட்டுவுக்கும் மணவாளனுக்கும் மற்றவர்களைக் காட்டிலும் அவர்கள் மீது அதிக பாசம் இருந்தது என்னவோ உண்மை. அவர்கள் அடிக்கடி ஆளுக்கொரு பக்கமாக வைத்தியை பந்தாடுவதைக் காண்கையில் சொல்ல முடியாத ஒரு கோவம் அவளை ஆட்கொள்ளும். ஒரு மனிதர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார் என்ற காரணத்திற்காகே அவரை எல்லாத் திசையில் இருந்தும் பந்தாடுவது எந்த வகையில் நியாயம் என்பது மொட்டுவின் வாதம். ஜானகி மீது கொள்ளை அன்பைக் காட்டும் வைத்திக்கு அவர் நியாயம் சேர்ப்பதில்லை என்றும் ரகு அவருடன் பேசுவதில்லை என்றும் நிர்மலாவும் கோபியும் தன் தாத்தா பாட்டியிடம் சகஜமாகப் பழகினாலும் கோபியின் பெற்றோர்கள் வைத்தியை மதிப்பாக நடத்தாததும் திவாகரன் எப்போதும் வைத்தியிடம் தன்னுடைய மாப்பிள்ளை முறுக்கையும் அடக்கியாள நினைக்கும் குணத்தை வெளிப்படுத்துவதையும் இன்று நேற்றா பார்க்கிறாள்? பெண் பிள்ளைகளைப் பெற்றுவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக தன்னுடைய தாத்தாவை எல்லோரும் குனிய குனிய கொட்டுகிறார்கள் என்பதை எல்லாம் கிரகித்துக் கொள்ளும் வயதை அவள் அடைந்துவிட்டாள் அல்லவே? ஊரே மரியாதையாகவும் மதிப்புடனும் பார்க்கும் தன் தாத்தாவை அவர்கள் எல்லோரும் செல்லாக் காசாகவே நடத்துவது ஏனென்று தான் அவளுக்குப் புரியவே இல்லை.

இதைப் பற்றி மொட்டு அடிக்கடி தன் தாத்தாவிடம் நேரடியாகவே கேட்டும் விடுவாள். அதற்கு ஒரு புன்னகையை மட்டும் தந்துவிட்டுச் செல்லும் தன் தாத்தவை ஒரு புதிராகவே தான் பார்ப்பாள். லவா குஷா பிறந்ததும் அவர்கள் மீது அளவற்ற அன்பைச் செலுத்திய வைத்திக்கு அவர்களை தன்னுடனே வைத்துக்கொள்ளும் பாக்கியம் கிட்டாமல் போகவே அடுத்ததாகப் பிறந்த தன் பேத்திகளான மொட்டு அனு இருவரையும் தன்னுடனே வைத்துக்கொள்ள ஆசைப்பட்டார். ஆனால் சுசி வெளியில் வேலை செய்வதால் அவர்களிடமிருந்து அனுவைப் பிரிக்க விரும்பாதவர் தன்னுடைய மொத்த அன்பையும் மொட்டுவின் மீதே காட்டினார். அவருக்கும் மொட்டுவுக்கும் இடையே ஒரு தாத்தா பேத்தி என்ற உறவைத் தாண்டி ஒரு நண்பனாய் பழகினார். அது போக தன் பிள்ளைகளிலே நந்தா ஒருவன் மட்டும் சற்று முரட்டு குணம் கொண்டவராக இருந்ததால் அவள் மீது பாசம் பொழியும் கடமை அவருக்கு வந்தது. அதே தான் மொட்டுவிற்கும். இந்தக் காரணத்தினாலே பின்னாளில் மொட்டு தான் விரும்பிய அக்ரி படிப்பையும் ஆசைப்பட்ட இயற்கை விவசாயத்தையும் எதிர்ப்புகளைக் கடந்து சுதந்திரமாகச் செய்ய முடிந்தது.

அன்று நடந்ததை மாலை ஜானகியுடன் வைத்தி பேசுவதைக் கண்டு மனம் பொறுக்காமல் அவர் ஊஞ்சலில் அவருடனே அமர்ந்து கொண்டாள் மொட்டு. தனக்கு வந்த அழைப்பைப் பேச ஜானகி சென்றுவிட பெரியவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருக்க அப்போது இடையிட்டவள்,"நீ ஏன் தாத்தா ஃபீல் பண்ற? எப்படி மூணு பெண் பிள்ளைகளைப் பெத்து உன் மருமகன்க எல்லோரும் உன்னை டார்ச்சர் பண்றாங்களோ அதே மாதிரி நாளைக்கு அவங்க எல்லோரும் டார்ச்சர் அனுபவிப்பாங்க... நீ வேணுனா பாரு தாத்தா எல்லோருக்கும் வரிசையா ஆப்பு இருக்கு. இசைக்கும் இனிக்கும் வரப் போற மாப்பிள்ளைங்க ரெண்டு மாவையும் உண்டு இல்லைனு செய்யுறாங்களா இல்லையானு பாருங்க..." என்றவள் அதனூடே ரகு மீது இருந்து கோவத்திற்கும் அவருக்காக வக்காலத்து வாங்கும் குஷா மீதிருந்த கோபத்தையும் எண்ணி,"உன் பெரிய மருமகனுக்கு பொண்ணு இல்லைனு எல்லாம் ஃபீல் பண்ணாத... அவருக்கு வரபோற மருமகங்க கொடுக்குற டார்ச்சர்களையே அவங்க நொந்து நூடுல்ஸ் ஆகறாங்களா இல்லையானு பாரு..." என்று சொல்ல அவள் சொன்ன தொனியில் வைத்தியும் கனகாவும் புன்னகைக்க அவர்களுடனே இணைந்து கிளுக்கென சிரித்து வைத்தாள் மொட்டு. அப்போது பார்த்து உள்ளே வந்த ஜானகி மற்றும் குஷாவின் செவியில் இவை தெளிவாகவே விழுந்தது. குஷா கோவத்தில் பல்லைக்கடிக்க ஜானகி அவனை அங்கிருந்து அனுப்பிவிட்டு எதுவும் கேட்காததைப் போல் உள்ளே வந்தார்.

அவரைக் கண்ட மொட்டு திருதிருவென விழித்து அங்கிருந்து அப்ஸ்காண்ட் ஆக,"என்னாமா பேசுறாப்பா இவ? இவ பொழச்சிபாப்பா... இப்போவே இந்த போடு போடுறாளே நாளைக்கு வளர்த்தா எல்லோரையும் உண்டு இல்லைனு செஞ்சிடுவா..." என்று சிரித்தபடியே உரைத்தார் ஜானகி. ஏனோ அவள் பேசியதில் பெரிய உடன்பாடு இல்லை என்றாலும் அவள் தன்னுடைய தந்தைக்காகத் தான் பேசுகிறாள் என்றும் அவளுடைய துணிச்சலைக் கண்டும் உண்மையிலே கர்வம் கொண்டார் ஜானகி. பின்னே இந்தக் குடும்பத்து பெண்களிலே தான் ஒருவர் மட்டுமே பட்டப்படிப்பை முடித்து வேலையில் இருப்பதால் தவறை எதிர்த்து தட்டிக் கேட்கும் குணம் அவருடன் இயல்பாகவே இருந்தது. வேலைக்குச் சென்று பல வருடங்கள் கழித்தே தனக்கு வந்த அந்தக் குணம் இந்த சிறுவயதிலே அவளிடம் இருக்கக்கண்டு உண்மையிலே அவர் அகம் மகிழ்ந்தார்.

ஆனால் அங்கிருந்து வெளியே சென்ற மொட்டுவை எதிர்பார்த்து இருந்த குஷா அவளை வழிமறித்து,"உனக்கென்ன இவ்வளவு திமிரு? அதும் இந்த வயசுல? பெரியவங்க பேசும் போது உனக்கென்ன பேச்சு வேண்டியிருக்கு? அண்ட் இதுல திவா சித்தப்பா பேசுனதுல எந்தத் தப்பும் இல்லையே? அவர் பொண்ணு மேல இருக்க அக்கறையில தானே பேசுனார். அது போக நீங்க என்ன பண்ணாலும் எதிர்த்து எதுவும் பேசாம ஒதுங்கிப் போக அவர் ஒன்னும் ரகுநாத் இல்லையே? வல்லவனுக்கு வல்லவன் உண்டுன்னு சும்மாவா சொன்னாங்க? மரியாதையைக் கொடுத்து தான் மரியாதையை வாங்கணும்... அதுவும் இல்லாம எங்க அப்பா எதுக்கு இதெல்லாம் அனுபவிக்கனும்? வேணுனா நாளைக்கு உன்னைக் கட்டிக்கப்போறவனால உங்க அப்பாவும் தாத்தாவும் வேணுனா அனுபவிக்கலாம்... அனுபவிக்கலாம் என்ன அனுபவிப்பாங்க... அதையும் பார்க்கத்தானே போறேன்..." என்று தன் தந்தையைப் பற்றி அவள் பேசியதைக் கேட்டு கோவம் அடங்காமல் பதிலளித்தான் குஷா.

குஷா சொன்னதைக் கேட்டவளுக்கு இன்னும் இன்னும் கோவம் எழ,"மேல கடவுள்னு ஒருத்தன் இருக்கான். எல்லாம் அவனுக்குத் தெரியும். அண்ட் எதுனாலும் மனசுல வெக்கமா வெளிப்படையா பேசுற திவா மாமா எல்லாத்தையும் மனசுலயே வெச்சு பழிவாங்குற உங்க அப்பாவைக் காட்டிலும் நூறு மடங்கு இல்ல இல்ல ஆயிரம் மடங்கு பரவாயில்ல... உங்க அப்பா ஒரு சேடிஸ்ட்... இல்ல இல்ல உங்க குடும்பமே ஒரு சேடிஸ்ட் குடும்பம். என் தாத்தாவைக் கஷ்டப்படுத்திப் பார்த்து அதுல சந்தோசப் படுற உங்க குடும்பத்துக்கு தகுந்த பரிசை கடவுள் கொடுப்பாரு... அண்ட் என்னைக் கட்டிக்கப் போறவனை சமாளிக்கக் கூடிய தைரியம் எனக்கிருக்கு... ஆனா இந்த உலகத்துலயே யாருக்குமே அடங்காத ஒரு ராட்சசி ஒரு அடங்காப்பிடாரி தான் உன்னைக் கட்டிப்பா. உனக்கு வரிசையா பெண் கொழந்தை பிறந்து அவங்களைக் கல்யாணம் பண்ண மாப்பிள்ளைங்க கொடுக்குற டார்ச்சரை நீயும் உன் வைஃப்பும் அனுபவிக்கத்தான் போறிங்க... இதை நீ என்னோட சாபமாவே எடுத்துக்கலாம்... இதெல்லாம் நடக்குதா இல்லையானு பாரு..." என்று அவளும் பதிலுக்குக் கோவமாகவே பேச குஷாவுக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது. தான் என்ன பேசினாலும் தனக்கு சரியான பதிலடியைத் தரும் அவள் மீதும் அவள் கொடுத்த சாபத்தின் மீதும் கோவம் கொண்டவன் கோவத்தில் அவளை அடிக்க கை ஓங்க அதைப் பிடித்தவள்,

"பேசுனா பேச்சுல பதிலடிக் கொடு... அதை விட்டுட்டு கையை ஓங்காத... ஏன்னா நீ கையை ஓங்குனா அடி வாங்கி அழுதிட்டு ஓடுற டைப் நான் இல்ல... இப்போ உன் கையைப் பிடிக்க தெரிஞ்ச எனக்கு திரும்ப பதிலுக்கு கை ஓங்கத் தெரியாதா என்ன?" என்றவள் மேலும் அங்கிருக்கவே பிடிக்காமல் நகர்ந்தாள்.

"இந்த வயசுலயே இவ்வளவு திமிரு இவளுக்கு... அது சரி நாலாவது படிக்கும் போதே இவ திமிரைப் பார்த்தவன் தானே நான்... நீ என்னடி எனக்குச் சாபம் கொடுக்கறது நான் கொடுக்குறேன் பாரு... உன்னைக் கட்டிக்கப்போறவன் உன்னை டார்ச்சர் பண்ணப் போறான்டி... பார்க்கத்தானே போறேன்... அப்போ கவனிச்சுக்கறேன்..." என்று வாய்விட்டே முணுமுணுத்தான்.

"ஹே குஷா என்ன அப்படியே நின்னுட்ட? ஹலோ பாஸ் எந்த உலகத்துல நீங்க இருக்கீங்க?" என்று அவனைக் கிள்ளினாள் அனு. அதில் சுயம் கொண்டவன்,

"ஆம் என்ன சொன்ன?" என்றதும்

"எனக்குத் தூக்கம் தூக்கமா வருது... வா வீட்டுக்குப் போலாம்..." என்று உள்ளே அழைத்து வந்தாள் அனு. அவர்களுக்கு சற்று முன்னே மற்றவர்கள் சென்றனர்.

"என்ன யோசனை குஷா? அந்த நாள் ஞாபகமா? நாங்க எல்லோரும் இன்னும் ஒரு நாள் இருக்கலாம்னு நெனச்சோம்... ஆனா உடனே ஊருக்குப் போக வேண்டி வந்தது..." என்று உச் கொட்ட அங்கே வைத்தி இவர்களுக்காக திண்ணையில் அமர்ந்திருந்தார்.

"எவ்வளவு நேரம் நடப்பிங்கா? போய் தூங்குங்க கண்ணுங்களா..." என்று உள்ளே அனுப்ப அந்த ஹாலில் லவாவுடன் பேசியவாறு அமர்ந்திருந்தவளை முறைத்தவாறு மாடியேறினான் குஷா. அதைக் கவனித்த லவா திரும்பி மொட்டுவைப் பார்க்க அவளும்
அவன் செல்வதையே தான் கவனித்து கொண்டிருந்தாள்.

"போச்சு போ ஒரு பேச்சுக்கு அன்னைக்கு சொன்னா உண்மையிலே ரெண்டு பேரும் டூயட் பாடிடுவீங்க போலயே? அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாளா... ஹே மொட்டு ஹ்ம்ம் ஹ்ம்ம்..." என்று ராகமாய் இழுத்து லவா கண்ணடிக்க அவன் தொடையை ஓங்கி குத்தினாள் மொட்டு.

இப்போது நிமிர்ந்து மேலே பார்க்க என்ன உணர்வு என்று வரையறுக்க முடியாத வகையில் ஒரு பார்வையை கீழே செலுத்தினான் குஷா. அதைக் கண்டு திரும்பிய லவா அதே போல் பார்க்கும் மொட்டுவையும் கண்டு ஒன்றும் விளங்காமல் விழித்தான்.

'ஆஹா இதுங்க ரெண்டும் இப்படி முறைச்சிகரத்தைப் பார்த்தா என்னமோ இடிக்குதே?' என்றவன் மொட்டுவின் காதோரம் குனிந்து,"என்ன ஒருத்தர ஒருத்தர் இப்படி டாவடிச்சுக்கறீங்க? அப்போ அன்னைக்கு நான் விளையாட்டுக்குச் சொன்னது நிஜமாகிடும் போலயே?" என்று நிறுத்த அவன் இறுதியில் சொன்னது மட்டும் அவள் காதில் விழவும்,

"என்ன நிஜமாகிடும்?"

"லாங் ஷாட் வரப்புல நீயும் குஷாவும்..." என்று முடிக்கும் முன்னே,

"நல்லாக் கேட்டுக்கோ, இந்த உலகத்துலயே வேற எந்த ஆம்பளையும் இல்லைங்கற நிலை வந்தால் கூட உன் தம்பியை நான் ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன்... உங்க..." என்று ஆரமித்தவள் உங்க குடும்பத்தில் வாக்கப்படுறதுக்கு என்று சொல்ல வந்ததை மாற்றி,"அவன் கூடலாம் மனுஷி வாழுவாளா?" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். லவா தான் எதுவும் புரியாமல் விழிக்க அப்போது அவன் கையிலிருந்த ரிமோட் பறிக்கப்படவும் சுயம் கொண்டவன் தன்னை ஒட்டி அமர்ந்து பால் குடிக்கும் அனுவைக் கண்டு சிரித்தவன்,"ஹே பூசணிக்கா கொஞ்ச நேரம் கூட உன் வாய்க்கும் வயித்துக்கு ரெஸ்டே கொடுக்க மாட்டியா? ஆல்வேய்ஸ் ஓவர் டூட்டி தான் பார்க்கும் போல?" என்று சொல்ல அதுவரை டிவியில் இருந்த பார்வையை விலக்கி,"ஓ சாருக்கு நான் இருக்குறதெல்லாம் கூட கண்ணுக்குத் தெரியுதா?" என்று நக்கலாய் வினவ,

"ஏன் புஜ்ஜு நல்லா புளிமூட்டை மாதிரி உக்காந்திருக்க உன்னை எப்படிடி பார்க்காம இருக்க முடியும் சொல்லு? நீ தான் எப்பயும் என் தம்பிகூடயே ஜோடி போட்டுட்டு சுத்திரியே? பை தி வே நான் லவா. நானும் உனக்கு சொந்தக்காரன் தான்..." என்று கைநீட்டவும் முறைத்தவள்,

"இதெல்லாம் நான் சொல்லணும். நாங்க எல்லோரும் இங்க ஒன்னா இருந்து கதை பேசி காத்தாட நடந்துட்டும் வந்தோம்... நீங்க தான் மிஸ்ஸிங்..." என்று சொல்லி தன் குடுவையில் கவனம் செலுத்த அதைப் பிடுங்கியவன் அதிலிருந்ததைக் கண்டு நுகர்ந்தவன்,"ஏ பாதம் பாலாடி? நீ மட்டும் கமுகமா குடிக்கிற? அது போக உனக்கு யாரு பாதாம் எல்லாம் கொடுத்தது? ஏற்கனவே நீ ரொம்ப ஒல்லியா இருக்க பாரு?" என்று சொல்லி ஒரே மிடறில் அதை அவன் வாயில் ஊற்றிக்கொள்ள,

"ஏய் அது எனக்குனு பெரியம்மா ஸ்பெஷலா தந்தாங்க... உனக்கு வேணுனா உள்ள வாங்கிக்க வேண்டியது தானே?" என்று சிணுங்கினாலும்,

"சரி அத்தை மாமா எல்லாம் எப்படி இருக்காங்க? அவங்க இன்னைக்கு வருவாங்கனு நான் எவ்வளவு எதிர்பார்த்தேன் தெரியுமா? அவங்களும் இருந்திருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும்..." என்று அவள் சிரித்து பின் வருந்தி இறுதியில் எதிர்பார்ப்புடன் பேச அவளின் இந்த உடனுக்குடன் மாறிய முக பாவங்களை எல்லாம் கண்டு லவா லயிக்க,

"ஹலோ சார் என்ன இப்படி சைட் அடிக்கறிங்க? நல்ல வேளை நீயும் குஷா மாதிரி காலேஜ் ப்ரொபெஸர் ஆகல... இல்லைனா என்ன ஆகியிருக்கும்?" என்று அவனை வார,

"நான் உன்ன ஸைட்டெல்லாம் அடிக்கல... இப்போ இப்படிச் சிரிச்சு பேசுற நீயா இன்னைக்கு ஹாஸ்ப்பிட்டல்ல அந்த அழு அழுத? என்னால நம்பவே முடியல... நீ எஸ்பிரெஸ்வியூனு தெரியும் ஆனா இவ்வளவு எக்ஸ்பிரெஸ்வியூவா இருப்பன்னு தெரியல... அதான் உன் முகத்தையே கண்கொட்டாம பார்த்தேன். அண்ட் எங்க ரெண்டு பேர்லயே நான் தான் ரொம்ப நல்லவன் தெரியுமா?" என்று சிரிக்க,

"சொன்னாங்க சொன்னாங்க... அதெல்லாம் இருக்கட்டும் நான் கேட்டதுக்கு நீ பதிலே சொல்லலையே?" என்றவளுக்கு உடனே தன் அன்னைக்கு வீடியோ கால் செய்து கொடுத்தான்.

மேலே சென்ற அந்த இருவரின் மனமும் நிலையில்லாமல் குழம்பி தவித்தது. எப்போது உறங்கினார்கள் என்று தெரியாமல் உறங்கியவர்கள் காலையில் அவரவர் வைத்த அலாரத்தில் விழித்து தங்களுடைய பொழுதைத் துவங்கினார்கள். மொட்டு வழக்கம் போல் தன்னுடைய பணிகளை எல்லாம் செய்ய குஷாவும் ஜாகிங் சென்றான். சிறிது நேரத்தில் லவாவும் அவனுடன் இணைந்துகொள்ள தங்கள் வேலையை முடித்து வந்தவர்களிடம் வைத்தி உரையாடிக்கொண்டிருந்தார்.

அந்த ஹாலில் அமர்ந்து பிள்ளைகள் எல்லோரும் கதை பேசியவாறு பொழுதைக் கழிக்க வைத்தியும் கனகாவும் அவர்களின் வேலை படிப்பு அன்றாடம் என்று எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தனர்.

"டேய் உன் அரியரை நீ க்ளியர் பண்ணிட்டயா இல்ல இன்னும் இல்லையா?" என்று மெல்லினி வினவ ஏனோ கூட்டத்தில் ரகசியங்களை அவிழ்த்துவிட்டாளே என்ற ஆதங்கத்தில் அவளை முறைத்தான்.

"அண்ணா நீ அரியர் வெச்சியிருக்கையா? வீட்ல சொல்லவே இல்ல?" என்று அதிர்ந்தான் அவன் தம்பி ரித்தீஷ்.

"ஏன்டி? போச்சுபோ இதைவெச்சே இவன் என்னை பிளாக் மெயில் பண்ணுவான்னே..." என்று புலம்பினான் அபி. மற்றவர்கள் எல்லோரும் சிரிக்க வைத்தி தான்,"என்னய்யா இது? ஒழுங்கா படிக்க வேண்டியது தானே?" என்று வழக்கம் போல் சில அறிவுரைகளை எல்லாம் சொல்ல அப்போது பார்த்து உள்ளே நுழைந்த மொட்டுவைக் கண்ட குஷா,

"ஏன் தாத்தா இந்த அட்வைஸ் எல்லாம் இவனுக்கு மட்டும் தான் சொல்லுவிங்களா? இவனாச்சும் ஒன்னே ஒன்னு தான் வெச்சியிருக்கான். சிலர் எல்லாம் ஐஞ்சு ஆறுன்னு வெச்சியிருக்காங்க..." என வேண்டுமென்றே சப்தமாகக் கூறினான் குஷா.
இப்போது எல்லோரும் அமைதியாக, பேச்சை மாற்ற எண்ணி இசை,"இன்னைக்கு ஒரு நாள்ல பாதி பொழுதே இப்படி போராவும் மெதுவாவும் போகுதே நாம எப்படி அடுத்த இருபது நாளைக் கடத்துறது? வடிவேல் சொல்ற மாதிரி சும்மா இருக்கறதுக்கும் ஒரு திறமை வேணும் போல" என்று கேட்க எல்லோரும் சிரித்தனர். அவள் வேண்டுமென்றே டாபிக்கை மாற்றுகிறாள் என்று அறிந்த குஷா,

"கரெட்டா சொன்ன டா... நம்மால ஒரு அரை பொழுதையே வெட்டியா கழிக்க முடியறதில்லை... ஆனா சிலர் வருஷ கணக்கா படிக்கவும் செய்யாம வேலைக்கும் போகாம சும்மா வெட்டியாவே இருக்காங்க... அது எப்படினு தான் புரியல..." என்று இன்னும் கூர்மையாகவே மொட்டுவைத் தாக்கினான்.

எல்லோரும் என்ன பேசுவதென்று தெரியாமல் விழித்து அதே நேரம் அவர்கள் அனைவரையும் விட அவன் வயதில் மூத்தவன் என்பதால் எப்படி இதற்கு பதில் சொல்வதென்று தவித்து அருகிலிருந்த லவாவைப் பார்த்தனர்.லவாவோ இப்போது மொட்டுவைப் பார்க்க, அவளோ வேலையை முடித்து அவர்களுடன் கதை பேசலாம் என்று வந்தவள் இப்போது மேலே செல்வதைக் கண்டு இன்றுடன் இதற்கொரு முடிவுகட்ட எண்ணிய லவா,

"மொட்டு இங்க வந்து உட்காரு..." என்று குரல் கொடுத்தான் லவா. ஏனோ பிள்ளைகள் எல்லோரும் லவாவின் இந்தப் பதிலை எதிர்பார்க்காமல் இன்னும் அதிர இன்னும் நின்றுகொண்டிருந்தவளைப் பார்த்து,"மொட்டு உன்கிட்ட தான் பேசுறேன்... நான் சொன்னது உன் காதுல விழுந்துச்சா?" என்று வழக்கத்திற்கும் மாறாக குரல் உயர்த்தி அழைத்த லவாவை குஷாவே அதிர்ச்சியுடன் பார்க்க அப்போது மற்றவர்களின் நிலையை தனியாக வேறு சொல்ல வேண்டுமா என்ன? (நேரம் கைகூடும்...)
 
Last edited:
இந்த இருபது நாளும் அவங்களுக்கு வேணும்னா போரிங்கா போகலாம் ஆனா அவங்கள வச்சு நமக்கு நல்லா ஜாலியா போகும் போல ???

சின்னக்கவுண்டர் படத்துல ஒரு சீன் வரும்ல மாமியார் பத்தி மருமக சொன்னதும் மருமக பத்தி மாமியார் சொன்னதும் நெனச்சு பார்ப்பாங்கல்ல அந்த மாதிரி இவங்க ரெண்டு பேர் பேசுனதும் சாரி சாரி சாபம் விட்டதும் அவங்களுக்கு ஞாபகம் வந்தா :p :p :p
 
Last edited:
ஹா ஹா??? மொட்டு அண்ட் குஷா மாத்தி மாத்தி சாபம் குடுத்தது செம்ம. இன்னும் குஷாவதான் கல்யாணம் பண்ணிருக்கோம்னு மொட்டுக்கு தெரியாதுல தெரிஞ்சதும் அவ ரியாக்ஷன் பாக்க வெய்டிங். குஷா என்னதான் டார்ச்சர் பண்ணாலும் மொட்டு சமாளிச்சுருவா அப்படிதான. இந்த சண்டையை ரெண்டு பேரும் ராசியானப்பறம் நினைச்சாங்கன்னா ஸ்வீட் மெமரியா ஆகிறும். வாவ் சூப்பர் லவா மூலமா ஏதோ நடக்க போகுது. இதுக்குத்தான் லவா வேனும்னு சொல்றது. எபி ??????
 
wow Semmma interesting.... Eagerly waiting for next ud
 
"ஏன் இசை கையில இருந்த பிளேட் எடுத்தாச்சு தானே?" என்ற பாரிக்கு k ji

Ponnukku fracturenaa vaara nyayamaana kovam Divakar ku, antha nerathula ippadithaan behave panna mudiyum, athuvum penngalnaa innum kooduthal carefullaa irukanum, ippadi oru society la thaan vazhroam,ji.... unga exponential growth overload nalla irukku,
Janaki amma romba perumaipadaatheenga , aappu ungalukku thaan, aduthavangalukku saabam koduthu paathruken, inga Mottu thanake sabam koduthukuraa,ha..Ha... Oruthar maathi oruthar saabam super,ji... Oru clarification venum, ennathaan Lavakum, Mottukkum nalla purithal irunthalum avan appava sadist nu pesunathellam Lavakku theriyatha, appadi Lavakku theriyathunaa Kusha panrathu thappilaye, yaarthaan appava vittu koduppa,.
Ha..Ha... Vithi valiyathu Mottu,parraa.... Kedacha gapla Lava avan duty a ozhunga panraan,enna kacheri vaikka poraanu theriyalaye Lava
 
இந்த இருபது நாளும் அவங்களுக்கு வேணும்னா போரிங்கா போகலாம் ஆனா அவங்கள வச்சு நமக்கு நல்லா ஜாலியா போகும் போல ???

சின்னக்கவுண்டர் படத்துல ஒரு சீன் வரும்ல மாமியார் பத்தி மருமக சொன்னதும் மருமக பத்தி மாமியார் சொன்னதும் நெனச்சு பார்ப்பாங்கல்ல அந்த மாதிரி இவங்க ரெண்டு பேர் பேசுனதும் சாரி சாரி சாபம் விட்டதும் அவங்களுக்கு ஞாபகம் வந்தா :p :p :p
கண்டிப்பா அடுத்த ரெண்டு மூணு எபிசோட் நிறைய fun கொஞ்சம் சென்டிமெண்டுன்னு நகரும்... அட ஆமாயில்ல??? கண்டிப்பா கல்யாணத்துக்கு பிறகும் இதுங்க லூட்டி நிறையவே இருக்கு... எல்லாம் ஞாபகம் வரும்...?? நன்றி
 
ஹா ஹா??? மொட்டு அண்ட் குஷா மாத்தி மாத்தி சாபம் குடுத்தது செம்ம. இன்னும் குஷாவதான் கல்யாணம் பண்ணிருக்கோம்னு மொட்டுக்கு தெரியாதுல தெரிஞ்சதும் அவ ரியாக்ஷன் பாக்க வெய்டிங். குஷா என்னதான் டார்ச்சர் பண்ணாலும் மொட்டு சமாளிச்சுருவா அப்படிதான. இந்த சண்டையை ரெண்டு பேரும் ராசியானப்பறம் நினைச்சாங்கன்னா ஸ்வீட் மெமரியா ஆகிறும். வாவ் சூப்பர் லவா மூலமா ஏதோ நடக்க போகுது. இதுக்குத்தான் லவா வேனும்னு சொல்றது. எபி ??????
எஸ் தெரியாது தெரியாது... இருக்கு இதுங்கள வெச்சு நிறைய ஃபன் ரொமான்ஸ் எல்லாம் இருக்கு??�� உண்மையிலே செம ஸ்வீட் மெமோரிசா இருக்கும்? எஸ் அடுத்த இருபது நாள் நடக்கபோறதை லவா தான் முடிவுபண்ணுவான்... சொல்றேன் நன்றி?��
 
Top