Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-16

Advertisement

praveenraj

Well-known member
Member
இரவு உறங்கச் சென்ற அனுவுக்கு அவளுடைய கொலீக் கம் பெஸ்டியான சுமித்திராவிடமிருந்து அழைப்பு வந்திருக்க அதை எடுத்தவளிடம்,
"ஹே அனு எவ்வளவு வாட்டி உன்னைக் கூப்பிடுறது? மெயில் அனுப்பிட்டியா இல்லையா?" என்றவளுக்கு ஏதும் புரியாமல் குழம்பி,
"நீ என்ன சொல்ற அனு? என்ன மெயில்?" என்றதும் தான் அவளுக்கு அந்தச் செய்தியே தெரிந்தது. அதாவது இரண்டு நாட்கள் பொறுத்திருந்து அவளுடைய மென்பொருள் நிறுவனம் தங்களுடைய வேலையைத் தொடர வேண்டி அனைவரையும் 'ஒர்க் ப்ரொம் ஹோம்' முறைக்கு உட்படுத்தியிருந்தது. அதற்கான சாப்ட்வேர் மற்றும் லாக் இன் முறைகளுக்காகவே அவர்களை மெயில் அனுப்ப சொல்லியிருந்தது. அதைக் கேட்டதும் அனுவிற்கு சலிப்பு வந்தாலும் இங்கே தோட்ட வேலை செய்வதற்கு பதில் இந்த வேலையையே செய்யலாம் என்று யோசித்தாள். இந்த இரண்டு நாட்கள் இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் இன்றைய ஒரு பொழுது செய்த வேலையிலே தனக்கும் இதற்கும் செட் ஆகாது என்ற முடிவுக்கு வந்திருந்தாள். அதே நேரம் இந்த புதிய வேலையின் மீது ஒரு அபிப்பிராயமும் வந்திருந்தது. அதன் பின் துரிதமாக தன்னுடைய லேப் டாப்பை எடுத்து(அனு எப்போதும் கர்ணனின் கவச குண்டலம் போல் தன் மடிக்கணினியை தன்னுடனே வைத்திருப்பாள்.) அதற்கான முறைகளை எல்லாம் செய்ய அப்போது அங்கே வந்தார் சித்ரா.
"என்னடா பண்ற? இன்னும் தூங்கலையா?" என்றவருக்கு அனைத்தையும் விளக்க அப்போது உள்ளே வந்த லவா,
"என்னடி பூசணிக்கா நீயே ஒரு ஆளை செட் பண்ணி இப்படியெல்லாம் பேச வெச்சிட்டய்யா?" என்று கிண்டல் செய்ய ஏனோ எல்லோரும் நிம்மதியாக இருக்கும் போது தானொருத்தி மட்டும் வேலை செய்யவேண்டுமோ என்ற கடுப்பில் இருந்தவள் அழகு காட்டி,
"நான் ஒன்னும் உன்னை மாதிரி ஜாலியா லேப் போய்ட்டு சும்மா வேலை செய்யலையே... நான் வேலை செய்யுறது ஒரு பிரைவேட் கம்பெனி. அவங்க சொல்றதுக்கெலாம் நான் தலையாட்டனும்..." என்று சலித்தவளுக்கு உடனே லாக் இன் டீடெய்ல்ஸ் மற்றும் சாப்ட் வேர் முதலியவைக்கான லிங்க் அனுப்பட்டதும்,
'இவனுங்க இதுல மட்டும் கண்கொத்தி பாம்பா இருப்பானுங்க...' என்று சலித்துக் கொண்டாள்.
"யாருடி சும்மா வேலை செய்யுறது? ஒரு நாள் என் லேப்ல வந்து பாரு. அப்போ தெரியும் என் நிலை. நானும் அசோசியேட் ரிசர்ச் சைன்டிஸ்ட்டா நிறைய டி.என்.ஏ ஜீன்ஸ் பத்தியெல்லாம் ரிசர்ச் செஞ்சு அதை கம்பியூட்டர்ல அப்லோட் செஞ்சு அதோட மியூட்டேஷன்ஸ் வேலை செஞ்சு பாரு அப்போ தெரியும் என் கஷ்டம்... யாரும் எனக்கு சும்மா சம்பளம் தரல... அது போக இது கூடவே எங்களுடைய பி.எச்.டியும் போயிட்டு இருக்கு... கிட்டத்தட்ட ரெட்டை குதிரை சவாரி..." என்று லவா தன்னுடைய ஜாப் ப்ரொபைலை எல்லாம் சொல்லிவிட்டு நிமிர அனுவோ மிகத் தீவிரமாக தன்னுடைய லேப்டாப்பை பார்த்துக்கொண்டிருக்க,
"ஏய் இங்க ஒருத்தன் நாயா கத்திட்டு இருக்கேனே கவனிச்சையா இல்லையா?" என்றதும்,
"ஏன் லவா உனக்கும் வேலை பளு ஜாஸ்தியா?" என்று கேட்டார் சித்ரா.
"அப்படி இல்ல அத்த... ஆனா சும்மா ஒன்னும் சம்பளம் கொடுக்க மாட்டாங்களே?" என்று சிரித்தான்.
"நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டையே? உனக்கு சம்பளம் எவ்வளவு இருக்கும்?" என்று கேட்டவருக்கு,
"இதுல என்ன இருக்கு அத்த? பிப்ட்டி செவன்... எல்லாம் போக கைக்கு ஒரு நாற்பத்தி எட்டு வரும்..." என்றதும் மூக்கு வேர்த்தவளாய்,
"அடப்பாவி அம்பதாயிரம் வாங்குறியா நீ? எனக்கு முப்பத்தி ரெண்டு சொச்சம் தான் வரும்..." என்று சொல்ல,
"அப்போ நீ திங்குறதெல்லாம் எங்க போறது? அதுவே மாசம் பத்தாயிரம் ஆகும்..." என்று அவளை வார அவளுக்கோ கன்னமெல்லாம் சிவந்து புஸுபுஸுவென்று மூச்சு விட்டாள்.
அப்போது கையில் அவனுடைய அலைபேசியுடன் வந்த குஷா,"லவா உனக்கு போன்... ப்ரொபெஸர் லைன்ல இருக்காரு..." என்று நீட்ட அதை வாங்கியவன் பேசும் போதே கொலை வெறியில் அனுவை முறைத்தான். பிறகு அலைபேசியை வைத்தவன்,
"கருநாக்கு கருநாக்கு காரி மனசுக்குள்ளேயே சாபம் கொடுத்தியா என்ன?" என்று கோவத்தில் லேப் நோண்டிக்கொண்டிருந்தவளின் பொசு பொசு கன்னத்தைக் கிள்ள,அவளோ வலியில் அலறினாள்.
"டேய் விடுடா அவளை ஏன் இப்படிக் கிள்ளுற?" என்று அவன் கையை விலக்கிய குஷாவிடம்,"எந்த நேரத்துல என்னைப் பார்த்து ஜாலியா இருக்கேன்னு சொன்னாளோ நாளையில இருந்து ஒர்க் பிரம் ஹோமாம்..." என்றவன் அனுவை மீண்டும் முறைக்க,
"எஸ்... கடவுள் இருக்கான் குமாரு... எஸ்..." என்று ஆர்ப்பரித்தாள் அனு.
இம்முறை மீண்டும் அவளைக் கிள்ள சென்ற லவாவிடமிருந்து லாவகமாக தப்பித்தாள் அனு. குஷா இவர்களின் இந்தச் சண்டையை ரசித்தவாறே பார்க்க ஏனோ பிள்ளைகள் எல்லோரும் கள்ளங்கபடம் இல்லாமல் பழகுவதை எண்ணி உண்மையில் உளமார மகிழ்ந்தார்.
பிறகு ஒரு வழியாக சமாதானம் அடைந்தவர்கள்,
"ஆனா இப்போ பாரு உன்னால குஷா பெட்ல தோற்க போறான்... நாம இப்படி ஆபிஸ் வேலை செஞ்சா எப்படி குஷா எஅவன் பெட்ல ஜெயிப்பான்?" என்ற அனுவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் லவா விழிக்க,
"என்ன ஆனாலும் சரி நான் இந்த போட்டியில இருந்து பின்வாங்கப் போறதில்லை..." என்று சாதரணமாக குஷா சொன்னாலும்,
'ஏற்கனவே அவ இவ்வளவு தான்னு இல்லாத திமிர்ல சுத்துறா இதுல இப்போ நான் விலகிட்டேன்னு அவ்வளவு தான் அவளை கையில பிடிக்கமுடியாது...' என்று மொட்டுவின் மீதான கோவத்தில் இருந்தான் குஷா.
மறுநாளிருந்து வழக்கம் போல் அதிகாலையில் எழுந்து தங்களுடைய பணிகளை எல்லாம் செய்ய ஆயத்தமானார்கள். என்ன தான் இதில் யாருக்கும் பெரிய நாட்டம் இல்லையென்றாலும் அவர்களுக்கு இங்கு வேலை செய்வது இரண்டு நன்மைகளைக் கொடுத்தது. முதலாவதாக அவர்களுக்கு இங்கு பொழுதைக் கழிக்க இது பெரிதும் உதவியது. இரண்டாவதாக காலையில் எழுந்து வேலை செய்து பதினோரு மணிபோல் சென்று உறங்கும் அந்த வழக்கமும் அந்தி சாயும் பொழுதில் மீண்டும் ட்ராபிக் கூட்ட நெரிசல்கள் ஏதுமில்லாமல் அமைதியான அந்த வயல் வெளி தோட்டம் ஆகியவற்றில் நடை பழகுவது அவர்களுக்குள் ஒரு புதிய இதம் கொடுத்தது என்றால் அது மிகையில்லை. அத்துடன் இங்கிருக்கும் கோழி, மாடு, நாய், பூனை மட்டுமில்லாமல் அவர்களின் வீட்டின் அருகில் வரும் மைனா, புறா, கிளி ஏன் சமயங்களில் அவர்களின் கோழி குஞ்சுகளைத் தூக்க வரும் கழுகு, கருடன், வல்லூறு முதலியவற்றையும் கண்கூடவே கண்டு மகிழ்ந்தனர். இவற்றையெல்லாம் விட மாலையில் இருந்து இரவு உண்ணும் வரை எல்லோரும் சேர்ந்து கார்ட்ஸ், தாயம், கேரம் முதலியவற்றை விளையாடி தங்கள் அன்னையர்கள் சமைப்பதைக் காட்டிலும் கனகா சித்ரா ஆகியோர் செய்யும் சுவையான உணவுகளை உண்டு தங்களுக்கு வேண்டிய பலகாரங்களை எல்லாம் கேட்டு சாப்பிட்டு இந்த நாட்களை மிக அழகாகவே கடத்தினார்கள்.
என்ன தான் தங்களுடைய சிட்டி வாழ்க்கை தரும் சகல சௌகரியங்களை தராமல் இருந்தாலும் அங்கு கிடைக்காத ஒரு அமைதி இங்கு கிடைத்தது. (முக்கியமானது இணைய சேவை! இங்கே கிடைக்கும் இன்டர்நெட் 3ஜி 4ஜி என்று மாறிமாறி தான் வரும். வோல்ட் யூஸ் செய்தே பழகியவர்களுக்கு இது கொஞ்சம் சிரமமாகவே இருந்தது)
லவாவுக்கும் அனுவிற்கும் ஒர்க் ப்ரம் ஹோம் என்று தெரிந்ததும் மற்ற பிள்ளைகளைப் போல் வைத்தி கனகாவும் வருந்தினார்கள். இருந்தாலும் இது தானே இவர்களின் வேலை என்று அறிந்து மனம் தேற்றினார்கள். குஷா தங்களுடைய அறைக்குச் சென்று அன்று மொட்டுவிடம் சண்டையிட்டுப் பெற்ற அந்தப் பெட்டியைத் திறந்தான். அது அவன் அன்னை சிறுவயதிலிருந்து சேகரித்த நாணயங்கள் அஞ்சல் தலைகள் அடங்கியதாகும். அது போக அந்தக் கால புகைப்படங்கள் பலவும் அதில் இருந்தது. வைத்தி- கனகா திருமண படம் ஜானு மற்றும் தன் உடன் பிறந்தவர்களின் சிறு வயது படம் ஆகியவை அதில் அடங்கும். சிறு வயதிலிருந்தே மொட்டுவுக்கும் குஷாவிற்கும் இந்தப் பெட்டியின் மீது ஒரு கண். தன் அன்னை தான் சேகரித்தவற்றைப் பற்றி குஷாவிடம் ஒரு முறை சொல்ல ஏனோ அதை இங்கே எடுத்து வந்து அதில் தன்னுடைய சேகரிப்புகளும் இருக்க வேண்டும் என்று எண்ணினான் குஷா. அதற்காகவே அவன் சென்னையில் நடக்கும் பழைய பொருட்களின் அங்காடிக்குச் சென்று அதை அதிக விலை கொடுத்து வாங்கிச் சேகரித்தேன். அப்படி ஒரு முறை இங்கே வந்த பொழுது இந்தப் பெட்டியை அவன் ஊருக்கு எடுத்துச்செல்ல முடிவெடுக்க அதைத் தர மாட்டேன் என்று மொட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.(இதெல்லாம் சிறு வயதில் நிகழ்ந்தது) பிறகு பெரியவர்கள் தலையிட்டு இதை இங்கேயே வைக்குமாறு சொல்லிவிட ஏனோ தான் வெற்றியடைந்ததைப் போல் ஒரு பார்வையை குஷாவின் மீது செலுத்திய மொட்டுவைக் கண்டவன்,'சரியான ஏமாத்துக்காரி. எப்படி நடிக்கிறா பாரு?' என்று வசைந்ததெல்லாம் ஒரு காலம்.
இது போல் குஷாவுக்கும் மொட்டுவுக்கும் எதற்கெடுத்தாலும் முட்டிக்கொள்ள பல காரணங்கள் இருந்தது. ஆனால் இவர்களின் இந்த வெறுப்பு வளர முக்கியமான காரணமே அவள் நான்காவது படிக்கும் வேளையில் ஜானுவின் பாட்டி(வைத்தியின் அன்னை) இறந்து விட பல வருடங்களாக சூரக்கோட்டையில் கால் பாதிக்காமல் இருந்த ரகுநாத் அந்த முறை ஊருக்கு வந்திருந்தார். தோட்டத்தில் பிள்ளைகள் எல்லோரும் விளையாட அந்தக் காலத்தில் வந்த அலைபேசியில் ஒரு முக்கியமான அழைப்பை ஏற்க(இன்றளவுக்கு அன்று எல்லா இடங்களிலும் சிக்னல் கிடைக்காது. அதைத் தேடி நாம் அலையவேண்டும்!) வெளிய வந்த ரகு ஒரு ஓரத்தில் பேசிக் கொண்டிருந்தார்.
தோட்டத்தில் ஒரு பாழடைந்த கிணறு மூடப்படாமல் இருந்தது. அப்போது அங்கே ஒளிய வந்தவள் கால் இடறி அக்கிணற்றில் விழுந்து விட ஏனோ அவளுடைய அழைப்பு அங்கிருக்கும் யாருக்கும் கேட்காமல் போனது. ஆனால் அவளோ ரகுவைக் கண்டு,"மாமா மாமா..." என்று அழைத்தாள். தன்னுடைய நண்பர்களுடன் இணைத்து தொழில் செய்துகொண்டிருந்த ரகு அப்போது அந்த பேக்டரியில் ஒரு புதிய யூனிட்டை நிறுவியிருந்தார். அதில் எதிர்பாராமல் ஒரு தீவிபத்து நடந்துவிட அதைப் பற்றிய முக்கிய உரையாடலில் இருந்தவருக்கு மொட்டுவின் அழைப்பு ஏதும் காதில் விழவில்லை. சிறிது நேரம் அங்கேயே கத்தியவாறு இருந்தவளுக்கு எதார்த்தமாக அங்கே திரும்பிய ரகுவின் பார்வை தன்னைக் கண்டும் அவர் காணாமல் பேசிக் கொண்டிருந்ததாய்க் காட்ட அவர் மீதான தவறான பிம்பம் அவளுக்கு எழுந்தது. ஆனால் அவரோ அலைபேசியில் பேசும் பொழுது சிக்னலுக்காக எதற்ச்சையாகத் திரும்பினார். அவர் அவளைக் காணவில்லை. கிணற்றில் விழுந்த பயம் ஏற்பட்ட காயம் தன்னைக் கண்டும் காணாமல் சென்ற மாமா ஆகியவை எல்லாம் அவளை மயக்கமடைய செய்தது. பிறகு அவளைக் காணவில்லை என்று வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் அவளைத் தேட நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவளை அக்கிணற்றில் மயங்கிய நிலையில் கண்டெடுத்தவர்கள் விழித்தவளிடம் விசாரிக்க அவளோ ரகுவை மாட்டிவிட்டாள். ஏற்கனவே அவர்களுக்குள் இருந்த மன கசப்பு தீரும் முன்னே அது இன்னும் அதிகமாய் வளர்ந்தது. ரகுவோ தன்னுடைய தரப்பு நியாயத்தைக் கூட எடுத்துரைக்க முடியாத நிலை எழுந்தது. அதுவே ரகு தன் மாமனார் வீட்டிற்கு இறுதியாக வந்து சென்ற நாளானது. யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து சென்ற ரகு அங்கே இருந்த குஷாவிடம் இதைப் பற்றிக் கூறிவிட்டுச் செல்ல அன்று மாலையே அங்கு நடந்ததை எல்லோருக்கும் விளக்கமளித்தான் குஷா. கீழே இருந்து அழைத்தால் மேலே வரை ஒலி வராது என்று உண்மை அறிந்த பெரியவர்கள் தீர விசாரிக்காமல் தாங்கள் நடந்துகொண்ட விதத்தைப் பற்றி வருந்த அப்போது தங்கள் தொழில் சாலையில் நிகழ்ந்த தீ விபத்தைப் பற்றியும் அதில் இறந்தவரைப் பற்றியும் குஷா சொன்னதும் அவருடைய நிலையை எல்லோரும் புரிந்தும் கொண்டார்கள். திட்டமிட்டு தன் தந்தையை மாட்டி விட்டதாக எண்ணிய குஷாவிற்கு அதன் பின் மொட்டு எதைச் செய்தாலும் சொன்னாலும் அவற்றுக்கு ஒரு எதிர்வினையை ஆற்றத் தொடங்கினான். அதே போல் மொட்டுவின் மனதில் ரகு ஒரு செல்ஃபிஷ் என்றும் தன் தாத்தாவை அவமானப்படுத்த வேண்டும் என்றே இந்த வீட்டின் நிகழ்வுகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார் என்றும் தன் தாத்தாவை வேண்டுமென்றே நோகடிக்கிறார் என்றும் ஆழப் பதிந்தது. இதுவே பின்னாளில் குஷாவிடம் தன் தாத்தாவிற்காகப் பேசி சண்டையிட அவனும் தன் தந்தைக்காகப் பேசி சண்டையிட அது இன்றளவும் பல்வேறு பரிணாமங்களை அடைந்து அவர்களுக்குள் ஒரு தீர்க்கப்படாத பிரச்சனையாகவே விஸ்வரூபம் எடுத்து இறுதியில் இந்த முறை குஷா இங்கே தங்குவதற்கு பணம் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறது.
இன்றுடன் இந்த லாக் டௌனின் நான்கு நாட்கள் முடிந்து ஐந்தாம் நாள் தொடங்கியிருந்தது. அன்று காலை வழக்கம் போல் தன்னுடைய ஜாகிங் எல்லாம் முடித்து வேலை செய்துகொண்டிருந்தவர்களை கனகா சாப்பிட அழைக்க குஷா அங்கு இருந்த ஸ்கூபியுடன் விளையாடியவாறே நடந்தவன் அங்கே தன் ஆர்கானிக் தோட்டத்திற்காக வேண்டி கொட்டப்பட்டிருந்த எருவு குழியில் அவனது ஒரு காலை விட்டவன் அது புதைகுழி போல் அவனை உள்ளே இழுக்கக் கண்டு பதற்றத்தில் இன்னொரு காலையும் அதில் ஊன்றிவிட அவனை இடுப்புவரை அது உள்ளே இழுத்திருந்தது.(உண்மையிலே எருவுகளைக் கொட்டியிருக்கும் குழி காயும் வரை காத்திருக்க வேண்டும். தப்பித்தவறி காலை விட்டுவிட்டால் அது நம்மை உள்ளே இழுத்துக்கொள்ளும் என்பதை இந்த லாக் டவுனில் நானே அனுபவித்திருக்கிறேன்!)
தன்னைக் காப்பாற்ற வேண்டி அவன் அலற அவன் நேரம் அங்கே யாரும் இல்லை. ஆனால் ஸ்கூபி அவனுடைய நிலையைக் கண்டு குரைக்க அப்போது அந்தப் பக்கம் வந்த மொட்டுவின் கண்களில் இது தெரிய ஏனோ பதற்றத்தைக் காட்டிலும் சிரிப்பு தான் அவளுக்கு முதலில் வந்தது. "கடவுள் இருக்கான் குமாரு... ஓவரா ஆடுனா இப்படித்தான்..." என்று அவனை வெறுப்பேற்றியவளைக் கண்டு அவனுக்கு இன்னும் இன்னும் கோவம் பொங்கியது. அதை விட தன்னை இந்த நிலையில் கண்டும் உதவாமல் சிரிப்பவளைக் கண்டு எரிச்சல் அடைந்தவன் இன்னும் சப்தமாகக் கத்த அவன் நேரம் அங்கே யாருமே வரவில்லை.
"சோ சேட். இப்போ நான் ஹெல்ப் பண்ணா தான் உண்டு... நான் ஹெல்ப் பண்ணவா வேணாமா?" என்று அவள் வெறுப்பேற்ற,"உன்ன..." என்று பல்லைக் கடித்தவன் அவனாகவே எழ முயற்சிக்க அவன் பாரம் தாங்காமல் மேலும் உள்ளே புதைந்தான். பிறகு வேறு வழியில்லை என்று எண்ணி அவன் கையை நீட்ட மொட்டு அவனை மேலே இழுத்தாள். ஆனாலும் நீண்ட சிரமங்களுக்கு இடையே தான் அவன் வெளியே வந்தான். குஷாவின் ஆடையில் கீழ் பகுதி முழுவதும் சாணத்தில் மூழ்கியதால் நாற்றம் அடிக்க அவன் கழுவுவதற்காக அங்கே இருக்கும் தொட்டி அருகே செல்ல மொட்டு தான் அவனுக்கு தண்ணீர் ஊற்றினாள். அப்போது வெளியே வந்த லவாவின் கண்களில் இக்காட்சி விழ கள்ளச்சிரிப்புடன் அவர்களை நெருங்கியனைக் கண்டு மொட்டு விழித்தாள். பின்னே அடுத்து அவ்விருவரையும் இணைத்து கிண்டல் பேசுவான் என்று அவள் அறிய மாட்டாளா என்ன?
"போயிடுச்சா? கறை போயிடுச்சா?" என்று தண்ணீர் ஊற்றும் மொட்டுவிடம் லவா வினவ,
"ஹ்ம்ம் போயிடுச்சு..." என்றவள் மேலும் தண்ணீர் ஊற்றியவளைக் கண்டு,"அதான் போயிடுச்சி இல்ல அப்பறோம் ஏன் விடாம தண்ணீர் ஊத்துற? க்ராஜிவேட் பாடிங்கறதால கரெக்ட் பண்ணலாம்னு பார்க்குறியா?" என்று அவளுக்கு மட்டும் கேட்கும் ஹஸ்கி குரலில் அவன் பேச குஷா அங்கிருக்க பிடிக்காமல் நகர்ந்ததும் லவாவை மொத்தினாள் மொட்டு.
"மொட்டு நல்ல இம்ப்ரூவ் மென்ட் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்ம்..." என்று கண்ணடித்து ராகமாய் இழுத்த லவாவை வெறிகொண்டு துரத்தினாள் மொட்டு.
*****************
தினமும் எட்டு மணிநேரம் லாக் இன் செய்ய வேண்டும் என்ற காரணத்தால் அனு பத்து மணிக்கெல்லாம் ரெடி ஆகி வேலை தொடங்கிவிடுவாள். லவாவும் தன்னுடைய சக ஆய்வாளர்களுடன் இணைந்து காண்பெரென்ஸ் காலில் ஐக்கியமாகிவிட வெளியே மற்றவர்கள் மட்டும் கூடி கும்மாளம் அடித்தனர். அவர்களின் தொல்லை தாங்காமல் லவாவும் அனுவும் ஓரறையில் தங்களைப் பூட்டிக்கொண்டு தங்கள் வேலையில் மூழ்குவார்கள்.
கையும் கண்ணும் வேலைசெய்கிறதோ இல்லையோ அனுவின் வாயிலிருந்து அவள் ஜீனரக்குழாய் வரை அனைத்தும் செவ்வென தன் வேலைகளைச் செய்து கொண்டிருக்கும். முதலில் அவளுடைய இந்தக் குணத்தைப் பார்த்து ஓயாமல் கிண்டல் செய்த லவாவுக்கும் தன்னிடம் இருக்கும் சீடை முறுக்கு சிப்ஸ் மிக்ஸர் முதலியவற்றை கொடுத்து அவனையும் தனக்கு கம்பெனி ஆக்கிக்கொண்டாள் அனு என்கின்ற புல்வெளி.
போர் அடிக்காமல் இருக்க எப்போதும் பின்னணியில் பாடல் ஒலிக்க அத்துடன் தங்கள் வேலை நிமித்தமாகவும் பேசிக்கொண்டே வேலை செய்தார்கள்.அன்று மிகத் தீவிரமாக வேலையில் இருந்த அனுவை எதார்த்தமாகப் பார்க்க நேர்ந்த லவா அவள் தட்டச்சு செய்யும் பொழுதெல்லாம் அவளுடைய உதடுகளும் அதற்கு ஏற்றார் போல் முணுமுணுக்க அதையே விந்தையாகப் பார்த்தான் லவா. அவள் உதடுகளோ நான் ஸ்டாப்பாக நாட்டியம் ஆடிக்கொண்டே இருந்தது. இதற்கிடையில் அவ்வப்போது அவள் கண்கள், நாசி, கன்னம், புருவம் என்று அவள் முகம் முழுவதும் நளினங்களை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தது. அவளுடைய அகன்ற நெற்றிக்கு கீழ் திருத்தம் செய்யப்பட்ட புருவங்களுடன் புட்டு கன்னத்தில் வளர்ந்தும் குழந்தை போல் இருக்கும் அனுவை ஏனோ இன்று தான் முதல்முறை பார்ப்பதைப் போல் பார்த்தான் லவா.
நீண்ட நேரம் சப்தம் ஏதும் இல்லாமல் இருக்க என்னவென்று நிமிர்ந்தவள்,"என்ன மேன் இப்படி சைட் அடிக்கிற? உன் பார்வையே சரியில்லையே..." என்று சொல்லவும் சுயம் பெற்றவன் ஏனோ தன்னுடைய செய்கையைக் கண்டு கொண்டவள் எங்கே தன்னை தவறாக எண்ணிவிடுவாளோ என்று அஞ்ச,"சரி எவ்வளவு மார்க் கொடுப்ப?" என்றவளுக்கு,
"எதுக்கு?" என்றான் லவா.
"எனக்கு தான்... எப்படியும் ஒரு பொண்ணைப் பார்த்தா பசங்க எல்லோரும் இப்படித் தானே கமெண்ட்ஸ் பாஸ் பண்ணிப்பிங்க? சும்மா சொல்லு நான் ஒன்னும் நெனைக்க மாட்டேன்..." என்றவள் அவன் பதிலை ஆவலாக எதிர்பார்க்க,
"ஹே நான் அப்படியெல்லாம் இல்ல... நான் ஒரு அக்மார்க்..." என்று முடிக்கும் முன்னே,
"இந்த வயசுல எந்தப் பொண்ணைப் பார்த்தும் நீ சைட் அடிக்கலனா ஒன்னு நீ பொய்ச் சொல்றன்னு அர்த்தம்... இல்லைனா..." என்று அவள் நிறுத்த,
"இல்லைனா?" என்றவனுக்கு ஒரு புன்முறுவலைக் கொடுத்து,
"நீ உடனே ஒரு நல்ல யுரோலஜிஸ்டை பார்க்கணும்னு அர்த்தம்... என்ன டோக்கன் போட்டுடலாமா?" என்று கேட்டு கண்ணடித்தாள் அனு.
"ஏய் உன்னை ஒரு ரெண்டு நிமிஷம் பார்த்தது ஒரு குத்தமாடி? இப்படி பீதியைக் கிளப்புற? ஆளை விடு சாமி உன் கூடலாம் நான் வேலை செய்ய மாட்டேன்..." என்று லவா அலறியடித்து ஓடினான். அனுவோ அவனைச் சீண்டிய மகிழ்வில் மேலும் குதூகலித்தாள். ஆனால் வெளியே சென்றவனுக்கோ சற்று முன் அவள் கேட்ட கேள்வியும் அதில் ஒலித்த கிண்டலும் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட அவனையே அறியாமல் ஒரு பரவசம் அவனை ஆட்கொண்டது.
சிறிது நேரம் கழித்து உள்ளே வந்தவனை மீண்டும் மடக்க எண்ணியவள்,"லவா நீ லேப்லேயே தான வேலை செய்யுற? ஐ மீன் அதொரு க்ளோஸ்ட் அட்மாஸ்பியர் தானே?"
"ஆமா அனு. வெளியாட்கள் யாருக்கும் அனுமதி இல்ல அண்ட் அதே நேரம் அங்க உள்ள இருக்குற அம்பியண்ஸ் வித்தியாசமா இருக்கும்..."
"ஓ! ஆமா நீ பிரசன்னா நடிச்ச கல்யாண சமையல் சாதம் படம் பாத்திருக்கையா?" என்றதும்,
"எது அந்தக் கல்யாணம்..." என்றவன் புரிந்து,"எதுக்கு இதைக் கேக்குற?" என்றதும், தன்னுடைய லேப்டாப்பை மூடியவாறு,"எனக்கென்னவோ உனக்கும் அந்த மாதிரியே எதாவது..." என்று முடிக்கும் முன்னே அவன் அவளைத் துரத்த அவளோ அதை எதிர்பார்த்திருந்ததால் முன் கூட்டியே ஓடினாள்.
அவளோ எதுவும் நடக்காததைப் போல் வெளியில் மற்றவர்களுடன் அமர்ந்துகொள்ள அவனோ அவளை தீயாக முறைத்தான்.
**************
அன்று மாலை மாடுகளை பால் கறப்பதற்கு ஏதுவாய் கட்டிப்போட்டிருக்க மொட்டுவோ வேறொரு வேலையாக உள்ளே இருந்ததாள். லாக் டௌன் என்பதால் இப்போதெல்லாம் சரியாக ஐந்தரை மணிக்குள் பால் கொண்டு சென்றால் தான் சொசைட்டியில் வாங்குகிறார்கள் என்பதால் அவளைத் தேடிக்கொண்டிருந்தார் வைத்தி. முன்பெல்லாம் அவரே பால் கறப்பார் தான். ஆனால் வயோதிகத்தின் காரணமாய் இப்போதெல்லாம் அவரால் முடிவதில்லை. அவரோ செந்திலைத் துரிதப்படுத்திக்கொண்டிருக்க அப்போது வந்த லவா,
"என்னாச்சு தாத்தா என்ன விஷயம்?" என்றதும் பால் கறக்க ஆளில்லை என்றார்.
இந்த ஒரு வார காலத்தில் குஷா இங்கிருக்கும் பெரும்பாலான வேலைகளை செய்து பார்த்துவிட்டான் தான். அவனுக்கு இன்னும் பாக்கி இருப்பதில் பால் கறப்பது ஒன்று தான் பெரிய வேலை. அதனால் இன்று அதை அவன் செய்துபார்க்க முடிவெடுத்து அவனாகவே ஒரு மாட்டின் அருகில் சென்றான்.(நேரம் கைகூடும்...)

எல்லோரும் முடிஞ்சா வேக்சின் போட்டுக்கோங்க மக்களே! இன்னைக்கு தான் நான் கோவிஷீல்ட் பர்ஸ்ட் டோஸ் போட்டுட்டேன். பிளாஷ் பேக் இன்னும் இரண்டு அத்தியாயம் வரும் போல... நானும் ஷார்ட் பண்றேன் முடியல...
 
வரட்டும் வரட்டும் ஒன்னும் தப்பில்ல.... நல்லாத்தானே போகுது லாக் டவுன் ???

ம்ம்ம்... இப்பதான் லவா ட்ராக் கொஞ்சம் மாறுது... இந்த குஷாஷாஷா ம்ஹும் வாய்ப்பில்ல ???
 
ஏன் இவ்வளவு வேகமா நகருது கதை. ஏதோ அங்கங்க பிச்சு போட்ட மாதிரி இருக்கு. டெய்லி அதே வேலைதான் பாத்துருப்பாங்க சொல்லதுக்கு ஒன்னும் இல்லனு வேகமா எழுதுறீங்களா. அட இதான் விஷயமா அதான் மொட்டு அன்னைக்கு ஊசி கத்தி எக்ஸாம்பிள் சொன்னாளா, நான் குஷாவ மீன் பண்ணி சொல்லிருக்கானு நினைச்சேன் ரகுப்பாதான் அந்த இன்ஷிடென்ட் ல சம்பந்தபட்டுருக்காங்க. லவா ? அனு ?????. குஷா மாட்டுச் சானத்துனால நோஸ்கட் வாங்கியாச்சு மாடு கிட்ட போறான் என்ன ஆகுமோ. எபி ?????
 
Super super
 
semaiya iruku...
Kusha mottu lve scene ku waiting
 
Anu paavam,Lava eppavum Anu sapdrathaye kannu vaikiraan,Anu super,ipa Lavavum work pannatum, summa summa avala kindal pannaanla,aval petra inbam peruha ivvaiyaham,ellarum onna gramathula irunthu iyarkai kaathu inhale panni jolly aa iruntha antha suhame alathithaan,, ipa irukura timela suthamana oxygen vera kidaikkum,
Oh.. Ithuthaan Kushaku kovamaa? Avan kovathula oru nyayam irukku,but Rahu entha thappum pannathappa Mottu kovathula reason illaye,
Lava ivvalavu openaavaa sight adikirathu, Anu Lavaku equally tough kodukuraa, Lavaku building strong basement weak pola, therichu odraane,
Achacho Kusha maatukitta poraane, shenbahame paadi paal karakka mudiyaathu,
 
1st dose vettiharamaa potuteenga, kai vali irukkaa?
 
Super....ohhhoo ithan reason ah ...ithula yara thappu sollam. situation apdi agi poche..so sad thatha konjam enna yethunu ketrukalamo ketruntha intha varutham illama poirukun...mottu thatha pasam kushaku appa pasam.last la athuve ivangaluku nadula periya virisal vara vachuruche?....intha lava avangala kindal senju senju avangaluku spark agucho illaiyo ivanuku nalla spark aguthu ?...anu ipdi damage pandriye lavava .....lava kusha solli solli ivanga real name maranthe poitum pola ...lava arvalan...kusha azhiyan... correct ?....lock down la nalla enjoy pannirkinga native la.enjoy enjoy......onnun prachanai illa..nalla flow la pogarapo y surukka pakaringa.apram antha flow miss agitum...apdiye poga vidunga writer ji
 
Top