Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-2

Advertisement

ஏன் இப்படி என்று சீக்கிரமே வந்து சொல்லுங்க .... ? ?
ya சீக்கிரம் சொல்லிடுறேன்... ஆனா அதுக்கு முன்னாடி ஒரு ஆறேழு எபிசோட் புல்லா பிளேஷ்பேக் வரும்... அதிலே எல்லாம் ஓரளவுக்கு விளங்கிவிடும்... நன்றி?
 
Interesting??januma thatha points vaichu patha ragu nallavaru than.thatha than etho vambu pannitaru polaye. waiting enna sonnarunu paka......wow names ellame sema❤️ பனித்துளி புல்வெளி மெல்லினி இன்னிசை vera level.lav kush names too.......semma twist.twins nala mathi thali katnathu mathavangaluku theriyala pola.aana pethavanga kandu pidichutangale...ama intha aalmarattam mottu anu 2 perukum theriyuma?lav kush nalla pannuniga pa marriage ?
 
Interesting??januma thatha points vaichu patha ragu nallavaru than.thatha than etho vambu pannitaru polaye. waiting enna sonnarunu paka......wow names ellame sema❤ பனித்துளி புல்வெளி மெல்லினி இன்னிசை vera level.lav kush names too.......semma twist.twins nala mathi thali katnathu mathavangaluku theriyala pola.aana pethavanga kandu pidichutangale...ama intha aalmarattam mottu anu 2 perukum theriyuma?lav kush nalla pannuniga pa marriage ?
சொல்றேன்... இந்தக் கதையை யோசிச்சதை விட இந்தப் பேருக்கு தான் அதிகம் யோசிச்சேன்? அதெல்லாம் இனிமேல் சொல்றேன்...நன்றி??�
 
எதையோ சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்த தன்னுடைய மாமனார் தன்னைக் கண்டதும் அதை நிறுத்திவிட்டு அங்கிருந்து அவசரமாகச் சென்றதை ரகுநாத்தாலும் நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது. அந்த ஒரு சம்பவத்திற்குப் பிறகு இத்தனை ஆண்டுகளில் வைத்தியலிங்கத்திடம் நேருக்கு நேராக தான் பேசிய நிகழ்வுகளை எல்லாம் விரல் விட்டே எண்ணிவிடலாம். இந்த இருபத்தி எட்டு இருபத்தி ஒன்பது ஆண்டுகளில் பலமுறை தன்னுடன் எப்படியாவது சகஜமாகப் பேசிவிட வேண்டும் என்று துடிக்கும் வைத்தியலிங்கத்தின் மனதை ரகுநாத்தும் அறியாமல் இல்லை தான். இருந்தும் தன் வாழ்வில் நடந்த எத்தனையோ கசப்பான நிகழ்வுகளை எல்லாம் மறந்து கடந்து வர முடிந்த ரகுநாத்தால் எவ்வளவு முயன்றும் அந்த ஒரு சம்பவத்தை மட்டும் இன்றளவும் கடந்து வர முடியவில்லை. 'தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு' என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சும்மாவா சொல்லி விட்டுச் சென்றார் வள்ளுவர்? ஒவ்வொரு மனுஷனுக்கு ஒவ்வொரு ஃபீலிங் இருக்கிறது தானே?

இப்படி தன் கணவரும் தந்தையும் எதிர் எதிரே இருந்தும் பேசிக்கொள்ளாமல் இருப்பதை நினைக்கும் வேளையில் எல்லாம் ஜானகிக்குச் சொல்ல முடியாத ஒரு கையறு நிலை ஏற்படும். இருந்தும் இரு தரப்பிலும் இருக்கும் நியாயத்தை அவரும் அறிவாரே? அதும் சொல்லப்போனால், அந்தச் சம்பவத்தால் அதிகம் காயம் அனுபவித்தது தன்னுடைய 'பெஸ்ட் ஹாப்' (பொதுவா 'பெட்டெர் ஹாப்' என்று கம்பெரேட்டிவ்(ஏற்ற இறக்க ஒப்பிட்டு நிலை) வாக்கியத்தை தான் உரைப்பார்கள். ஆனால் தன்னுடைய கணவனோ யாருடனும் ஒப்பிட முடியாதவர் என்று இன்றளவும் ஆணித்தனமாக நம்பும் ஜானகிக்கு என்றுமே ரகுநாத் ஒரு சூப்பர்லேட்டிவ்(உன்னத ஒப்பீட்டு நிலை) பெஸ்ட் ஹாப் தான்!) தான் என்று நம்பும் அவர் அதை தன் கண்கூடவே பார்த்தும் இருக்கிறாரே? ஒருவேளை ரகுநாத்தின் இடத்தில் ஒரு சராசரி ஆண்மகன் இருந்திருந்தால் இன்று பல பெண்களைப் போல் பிறந்த வீட்டுப் பக்கமும் நிற்க முடியாமல் புகுந்த வீட்டிற்கு ஆதரவாவும் பேசமுடியாமல் ஒரு சராசரி பெண்ணாகவே அவர் வாழ்க்கை இருந்திருக்கும் என்றும் தற்போது அவர் வாழும் இந்த வாழ்க்கை ஒரு எட்டாக் கனியாகவே அமைந்திருக்கும் என்று அவரும் அறிவாரே?
இது கூட இல்லாமல் இருந்தால் பின் வாழ்க்கை என்றுமே ஒரு முரண்களின் சங்கமம் என்னும் அடிநாதத்தையே ஜானகியால் புரிந்து கொண்டிருக்க முடியாதே? பின்னே 'virtual reality' (மெய்நிகர்) 'found missing'(தொலைந்து விட்டது என்பதைக் கண்டு பிடித்தேன்) முதலிய வார்த்தைகளே முரண்களால் வடிவமைக்கப் பட்டது என்னும் வேளையில் 'முரணற்ற வாழ்க்கை' என்பது மட்டும் அத்தனை சுலபமா என்ன?

நொடியில் ஏதேதோ யோசனையில் ஆழ்ந்திருந்த ஜானகி தன்னுடைய கையிலிருக்கும் தீக்குச்சி சுட்டதும் "ஆ..." என்ற சப்தத்துடன் நிகழ்வுக்கு வர அதற்குள் அவர் விரலைப் பிடித்த ரகுநாத் ஆதரவாய் அதை ஊதிவிட்டு,"பார்த்து கவனமா செய்ய மாட்டியா ஜானு?" என்று வினவ அங்கே முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவர்களின் பார்வை மொத்தமாய் தங்கள் மீது தான் இருக்கிறது என்று அறிந்தவர்,"பசங்க கல்யாணத்துலையும் இவங்க ரொமான்ஸ் தொல்லை தாங்கலப்பா..."என்று எவரேனும் சொல்லிவிடுவாரோ என்று எண்ணி வெடுக்கென தன்னுடைய விரலை தன் கணவனிடமிருந்து பிரிந்தவர் வேலை ஏதும் இல்லாமலே இருப்பதாய் உள்ளே விரைந்தார்.

ஆனால் ஜானகியின் கணிப்புக்கு மாறாக, இந்த வயதிலும் ஒருவர் மீது மற்றொருவருக்கு இருக்கும் அவர்களின் அன்பைக் கண்டு மற்றவர்கள் மகிழ்ந்தார்களோ இல்லையோ வைத்தியலிங்கத்தின் மனம் சொல்ல முடியாத ஒரு பரவசத்தில் இருந்தது. இப்படிப்பட்ட ஒரு மருமகனின் அன்புக்கு தான் ஒருவன் பாத்திரமில்லாமல் சென்று விட்டோமே என்பதை நினைக்கையில் தான் வைத்தியலிங்கத்தின் மனம் நிலத்தில் போட்ட மீனாய் குற்றயுணர்ச்சியில் தத்தளிக்கும். சரி அவரவர் வாங்கிவந்த வரம் அப்படியென்றால் யாரால் அதை மாற்ற முடியும் சொல்லுங்கள்?

அந்த நிலையிலும் எதிரே வந்த தன் இளைய மகளான உமாவை அழைத்த வைத்தியலிங்கம்,"அம்மாடி நீ இந்தக் கல்யாணம் முடிஞ்சதும் மறக்காம ஜானகியையும்
மாப்பிள்ளையையும் ஜோடியா நிறுத்தி சுத்திப் போடுற... மறந்திடவே கூடாது உமா..." என்று இறுதியில் ஒரு கண்டிப்புடன் கூடிய உத்தரவை இட தந்தையின் இந்தப் பேச்சு அவருக்கு ஆச்சரியமளித்தாலும் இதற்கு பின் நிச்சயம் ஒரு வலுவான காரணம் இருக்கும் என்பதை அறிந்து தலையாட்டி விட்டுச் சென்றார்.

அதற்குள் அங்கே வந்த இன்னிசை,"தாத்தா, அம்மாச்சி உங்களை உள்ள கூப்பிடுறாங்க..." என்று அழைக்க தன் நண்பனிடமிருந்து விடைபெற்று உள்ளே விரைந்தார் வைத்தியலிங்கம்.

வெளியே தன் நண்பர்களுடன் அமர்ந்து கதை அளந்துகொண்டிருந்த பாரியைக் கண்டவள்,"அண்ணா நீ இன்னும் அதை ஒட்டவே இல்லையா?" என்று கேட்கவும் தான் இன்னிசை தன்னிடம் ஒப்படைத்த வேலையே பாரிக்கு நினைவு வந்தது.

"சாரி சாரி இசை... மறந்துட்டேன்" என்று பாரி சொல்ல,

"இதுக்கு தான் யார்யாரைகூடலாமோ சேரவே கூடாதுனு சொல்றது..." என்று அபியைப் பார்த்தவாறே அவள் உரைக்க, தன்னை தான் இவள் வம்பிழுக்கிறாள் என்று அறிந்துகொண்டவன்,"ஆம் பேசாம உங்க அண்ணனை சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா போன்றவங்க கூடச் சேர சொல்லவேண்டியது தானே?" என்று அதே நக்கலாய் பதில் தந்தான் அபி.

"இவ்வளவு பேசுரையே, வீட்ல கல்யாணம் நடக்குது. வெளிய ப்ரைட் அண்ட் க்ரூம்ஸ் பேரையாச்சும் ஒட்டியிருக்கலாமில்ல?" என்று வினவ,

"இப்போ என்ன? பேரை ஒட்டனும் அவ்வளவு தானே?" என்றபடி எழுந்தவன் பாரியுடன் இணைத்து அந்த வீட்டின் முன் போடப்பட்ட பந்ததில் தாங்களே வடிவமைத்து பிரிண்ட் அவுட் எடுத்த பெயர் பலகையை அங்கே ஒட்டினார்கள்.
லவா (எ) ஆர்வலன்- மொட்டு (எ) பனித்துளி
குஷா (எ) ஆழியன்- அனு (எ) புல்வெளி


பெயர் பலகையை ஒட்டியவர்கள்,"அப்பப்பா நாலு பேருக்கு இப்படி எட்டு பேரா வெக்குறது?" என்று சலித்துக்கொண்ட அபியிடம்,

"டேய் மச்சி இந்தக் கேள்வியை வெளியில இருக்க யாராச்சும் கேட்டால் கூட நான் அக்செப்ட் பண்ணிப்பேன். ஆனா எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படிக் கேக்கலாமா?" என்று உரிமையாய் அபியிடம் கோவித்துக்கொண்டான் பாரி.

"நல்லா காதுல உரைக்குற மாதிரி கேளுண்ணா..." என்று தன் தமயனுக்கு ஆதரவாய்ப் பேசினாள் இன்னிசை.

"ஓகே ஓகே தெரியாத் தனமா நான் கேட்டுட்டேன்... இதுக்குப் போய் அண்ணனும் தங்கையும் என்னை இப்படி காய்ச்சு எடுக்கறீங்களே? மாமா பேரு ரகுநாத் அத்தை பேர் ஜானகிங்கறதுனால அவங்களுக்கு ட்வின்ஸ் பிறந்தாங்கனு ராமருக்கும் சீதைக்கும் பிறந்த ரெட்டைக் குழந்தைகளான லவா குஷா ஞாபகார்த்தமா அந்தப் பேரையே வெக்கலாம்னு யோசிக்க, தனித்தமிழ் இயக்கத்துல முக்கிய போராளியா இருந்த அவங்க தாத்தாவோட வேண்டுகோளுக்காக தூயத் தமிழ்ல அவங்களுக்கு ஆர்வலன்னும் ஆழியனும் பேர் வெச்சாங்க. ஆனா நம்ம தாத்தாவோட ஆசைப்படி அவங்க ரெண்டுப் பேரையும் லவா குஷானு தான் எல்லோராலும் கூப்பிடப்படுறாங்க... இதே மாதிரி அக்காங்க ரெண்டு பேரோட வீட்லயும் அவங்களுக்கு தமிழ்ல பேர் வெச்சு வீட்ல கூப்பிடுறதுக்காக மொட்டு அனுன்னு நிக் நேம் வெச்சிட்டாங்க... பாசமலர்களே உங்களுக்கு இந்த விளக்கம் போதுமா இல்லை நம்ம குடும்ப ஹிஸ்டரியை இன்னும் டீப்பா சொல்லனுமா?" என்றான் அபி.

இருவரும் அவனை ஒருசேர முறைக்க,"என்னா லுக்கு? நாங்கல்லாம் அப்பவே அப்படி... லேடன் கிட்டப் பேசுரையா?" என்று வடிவேலு பாணியில் நக்கல் செய்தவாறு உள்ளே நுழைந்தான் அபி.

"அண்ணா, இவனுக்கு வாய் மட்டும் இல்லைனு வெச்சுக்கோங்களேன் நம்ம எல்லோரையும் எப்போவே வித்து இருப்பான்..." என்ற இன்னிசைக்கு ஆமோதித்தவாறே உள்ளே விரைந்தனர்.

அங்கே திருமணத்திற்கு நேரம் ஆக மணமக்களை எல்லோரும் தயாராகினார்கள். வழக்கமாக திருமணம் என்றால் எல்லோருக்கும் குறைந்த பட்ச ஆசையாக வண்ண உடைகள், ஆர்ப்பரிக்கும் அணிகலன்கள், மேக் அப், போட்டோ ஷூட் என்று கனவு இருக்கும் தானே? அது இந்நால்வருக்கும் கூட இருந்தது தான். ஆனால் யாரும் எதிர்பார்க்காமல் இப்படி வீட்டில் அதும் இவ்வளவு எளிமையாகவே தங்களுடைய திருமணம் நடக்கும் என்று அவர்கள் நால்வரும் கனவில் கூட நினைக்கவில்லை.
அந்தப் பெரிய வீட்டின் மாடியில் இடம் வலமாக இருக்கும் அந்த இரண்டு அறைகளில் இன்றைய விழா நாயக நாயகிகள் அமர்ந்திருக்க அவர்களைச் சுற்றி அலங்கரிக்கிறேன் என்ற பேர்வழியில் ஒரு கூட்டம் அமர்ந்து கதை பேசிக்கொண்டும் அவர்களை வம்பிழுத்துக்கொண்டும் இருந்தது. ஆனால் அந்த நால்வரின் உள்ளமோ வேறு சில யோசனையில் மூழ்கியிருந்தது. நிச்சயம் அதில் திருமணம் என்பதற்கான ஒரு எக்ஸைட் மென்டோ உற்சாகமோ அவர்கள் மனதில் துளியும் இல்லை என்பதை அங்கிருந்தவர்கள் யாரும் அறியவில்லை.

இத்தனைக்கும் இது ஒன்றும் கட்டாயத் திருமணம் இல்லை. அதேபோல் இவர்களின் சம்மதம் பெறாமலும் நடக்கவில்லை. ஆனாலும் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் பெரிய 'ட்விஸ்ட்' ஒன்று நிகழ்ந்துவிட்டது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணங்ககள் தோன்ற சில விஷயங்களை அன்றே தெளிவாகப் பேசியிருக்க வேண்டுமோ என்று தற்போது தான் யோசித்தனர். ஆனால் இன்று போல் ஒரு நிலை அன்று இல்லையே? ஒருவேளை அன்றே அனைத்தும் பேசியிருந்தால் இன்று எல்லாம் சுமுகமாகவே நடந்திருக்குமோ என்னவோ? கிட்டத்தட்ட இன்றிலிருந்து எட்டு நாட்களுக்கும் முன் தான் இவர்களின் திருமணம் உறுதியானது. கொரோனா காலகட்டம் என்பதால் எப்படியும் எல்லோரையும் அழைக்க முடியாது என்றும் மீறி அழைத்திருந்தாலும் அவர்கள் எல்லோரும் வந்திருக்க முடியாது என்றும் அறிந்து திருமணத்தை தற்போது எளிமையாக வைத்துக்கொண்டு நாளை சூழ்நிலை சரியாகும் பட்சத்தில் வேண்டுமென்றால் ஒரு வரவேற்பை வைத்துவிடலாம் என்று முடிவெடுத்து உறுதியானது தான் இத்திருமணம் சாரி திருமணங்கள்.

அப்போது அங்கே வந்த வைத்தியலிங்கமும் கனகாவும் தங்கள் பெயரங்களின் அறைக்கதவைத் தட்ட கதவைத் திறந்தான் லவா.

"வாங்க தாத்தா, வா அம்மாச்சி..." என்றவன் ரெஸ்ட் ரூமில் இருந்த குஷாவை அழைக்க,
"அவன் வரட்டும்யா... எங்க உன் தோஸ்துங்க யாரையுமே காணோம்?" என்னும் வேளையில் உள்ளே வந்தான் ஸ்ரீ, குஷாவின் பெஸ்டி.

"எங்க அவன்? இன்னுமா பாத்ரூம்ல இருக்கான்?" என்று ஸ்ரீ வினவ, மெலிதாய் ஒரு முறுவல் செய்தேன் லவா.

அப்போது வெளியே வந்த குஷா,"டேய் ஸ்ரீ இந்த வேஷ்டி மட்டும் நிக்கவே மாட்டேங்குது டா..." என்று நிமிர்ந்தவன் எதிரில் தன் தாத்தாவைக் கண்டதும் சிரிக்க,

"என்னலே பசங்க நீங்க? உங்களுக்கு ஒழுங்கா ஒரு வேட்டி கட்டி நடக்ககூடத் தெரியல..." என்று சலித்துக்கொள்ள,

"ஐயோ தாத்தா அதெல்லாம் இவன் நல்லாவே கட்டுவான்... ஒருவேளை கல்யாணம்னு சொன்னதும் எல்லாம் மறந்திடுச்சோ?" என்று வார அதற்கு எல்லோரும் மெலிதாய் சிரித்தனர். பிறகு மணமகன்களிடம் சிறிது பேச வேண்டும் என்று உரைத்தவர் ஸ்ரீயைப் பார்க்க அவன் வெளியேறியதும்,

"ஐயா லவா, மொட்டைப் பத்தி நான் உனக்கு எதையும் புதுசா சொல்ல வேண்டிவயதில்லை... அவ நம்ம குடும்பத்து பொண்ணு..." என்னும் போது அவரை ஒருவாறு பார்த்த குஷாவின் பார்வையை உணர்ந்தவர்,

"அனுவும் நம்ம வீட்டுப் பொண்ணு தான். இருந்தாலும் அவ பட்டணத்துல வளர்ந்தவ... ஆனா..." என்று முடிக்கும் முன்னே,

"தாத்தா மொட்டைப் பத்தி நீங்க எனக்குப் புதுசா சொல்லனுமா என்ன?" என்னும் வேளையில் கதவு தட்டப்பட அதை குஷா திறந்தான். வெளியே தன் தந்தையைக் கண்டவன்,"வாங்கப்பா..." என்று அழைக்க அவரோ தன் மாமனார் இருப்பதைக் கண்டு,"சீக்கிரம் ரெடி ஆகுங்க..." என்றுரைத்து விட்டுச் சென்று விட ஜானகி உள்ளே வந்தார்.

"டேய் லவா நீ தான் முதல வரணும்... ரெடியா இரு..." என்றுரைத்தவர் அங்கே தன் தந்தையைக் கண்டு,"என்னப்பா? என்ன விஷயம்?" என்றதும்,

"ஒன்னும் இல்ல ஜானு. சும்மா தான்..." என்றார் கனகா. தற்போது பேரன்களிடமிருந்த எண்ணம் சற்று முன்னர் வந்து சென்ற ரகுநாத்தின் மீது செல்ல அதை உணர்ந்தவர்,"அப்பா அவரை நான் சமாளிக்குறேன்..." என்று ஜானு சிரிக்க,

"மாப்பிள்ளைக்கு இதுல ஒன்னும்..." என்று இழுத்த கனகாவிடம்,

"அம்மாச்சி, இந்த விஷயத்துல என் அம்மா உன்னை மாதிரியே..." என்று இடைவெளி விட்ட குஷா,"நீ எப்படி தாத்தாவை சேலையில் முடிஞ்சி வெச்சியிருக்கையோ அப்படியே தான்..." என்று முடிக்கும் முன்னே அவன் காதைத் திருகிய ஜானகி,

"இரு இரு இதையே அனு கிட்டயும் சொல்றேன்..." என்ற அன்னைக்கு,

"அதுக்கு அவசியமே இல்லம்மா அவனை தான் ஏற்கனவே அனு வசியம் பண்ணிட்டாளே..." என்று லவா உரைக்க சில சிரிப்பொலியுடன் அவர்கள் வெளியேறி மணமகளின் அறைக்குச் சென்றனர்.

ஏனோ இதுவரை இருந்த கலகலப்பு மறைந்து சகோதர்கள் இருவரும் ஒருவரை ஒருத்தர் அர்த்தமாய்ப் பார்த்தனர்.

அதன் பின் நேரம் காலில் சக்கரத்தைக் கட்டியது போலே சுழல அபி, பாரி ஆகியோர் உள்ளே வந்து மாப்பிள்ளை இருவரையும் அழைத்துச் சென்று வீட்டின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த மனையில் அமரவைத்தனர்.

அங்கே மணமக்கள் இருவரும் சிறு சிறு சம்பிரதாயங்கள் செய்யவும் மணப்பெண்களும் அங்கே வந்தனர். அதுவரை ஜானகியும் ரகுநாத்தும் இதர வேலையில் மூழ்கியிருக்க நிர்மலாவும் உமாவும் தான் மணமக்களுடன் இருந்தனர். போட்டோஸ் வீடியோஸ் ஆகியவற்றை எடுக்க வேதங்கள் ஏதும் ஓதப்படாமல் வீட்டின் பெரியவர்களின் ஆசிர்வாதத்தில் வைத்தியலிங்கமும் கனகாவும் தம்பதி சகிதமாய் பொன்தாலியை எடுத்து லவாவிடம் நீட்டும் நேரத்தில் தான் அங்கே வந்த ஜானகியும் ரகுநாத்தும் அதைக் கவனிக்க அவர்கள் ஏதும் பேச ஆரமிக்கும் முன்னரே மேடையில் லவாவாக வீற்றிருந்த ஆழியன் மொட்டு என்கின்ற பனித்துளியின் கழுத்தில் அதைப் பூட்டியிருந்தான்.
தற்போது இங்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை உணரும் நிலையிலோ இல்லை அதைத் தடுக்கும் நிலையிலோ ஜானகியும் ரகுநாத்தும் இல்லவே இல்லை.

அதற்குள் குஷாவாக வீற்றிருந்த ஆர்வலன் அனு என்கின்ற புல்வெளியின் கழுத்தில் பொன் தாலியைக் கட்டிவிட இனி என்ன நடக்கப்போகிறதோ என்ற பீதியில் ஜானகியும் ரகுநாத்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். (நேரம் கைகூடும்...)

அடுத்த எபில இருந்து பிளாஷ் பேக் ஸ்டார்ட் ஆகப்போகுது... திங்கள் அல்லது செவ்வாயில் அடுத்த அத்தியாயம் வரும்.

Corona time la enga v2 la rendu marriage a mudichutom, onnu v2 la vachchu innonnu mini hall la vachchu pannitom,,,,, thatha remba pesirupanga polaye,,,,ஆழியன் ஆர்வலன் intha rendu namum remba pidichurukku read pannum pothe pala thadava solli paarthuten,,,,,, so brothers rendu perum aal maarattam pannitaanga parents ku therinjiduchu but ponnunga avangaluku theriyala na pavam illaya ,,,,, story?
 
Corona time la enga v2 la rendu marriage a mudichutom, onnu v2 la vachchu innonnu mini hall la vachchu pannitom,,,,, thatha remba pesirupanga polaye,,,,ஆழியன் ஆர்வலன் intha rendu namum remba pidichurukku read pannum pothe pala thadava solli paarthuten,,,,,, so brothers rendu perum aal maarattam pannitaanga parents ku therinjiduchu but ponnunga avangaluku theriyala na pavam illaya ,,,,, story?
athe corona experience thaan... solren. thank you? yes pavam than...
 
Top