Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!- 31(1)

Advertisement

praveenraj

Well-known member
Member
அன்றைய தினம் வீடு முழுவதும் ஆட்கள் நிரம்பி இருந்ததால் அவர்களால் நிம்மதியாக மனம் விட்டுப் பேச முடியாமல் போனது. அதும் போக வந்ததில் இருந்து லவாவும் மொட்டுவும் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளவே இல்லை. எல்லோரும் ஓய்வெடுக்க மொட்டுவைத் தேடி லவா சென்றான். வீட்டின் ஸ்டோர் ரூமில் அவள் எதையோ தேடிக்கொண்டிருக்க அவளுக்குப் பின்னால் சென்று நின்றவனின் நிழலில் ஒரு கணம் குஷா தான் வந்திருக்கிறான் என்று எண்ணியவள் எங்கே தங்கள் அறையில் அடிக்கடி அவளைச் சீண்டி முத்தம் வைப்பதைப்போல் இங்கேயும் செய்துவிட்டால் அசிங்கமாகப் போய் விடும் என்று எண்ணி திடுமென திரும்பியவள் தலையைத் தொங்கப்போட்டு வாசலில் நின்றவனைக் கண்டதும் அது லவா என்று புரிந்தவள் எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல்,
"என்ன வேணும் லவா?" என்று சாதரணமாகப் பேச அவனோ அவளை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் இருந்தான்.
"இப்போ எதுக்கு இப்படி கப்பல் கவுந்த மாதிரி இருக்க? நியாயமாய்ப் பார்த்தா நான் தான் இப்படி இருக்கனும்..." என்றதும் அவன் முகம் சோர்ந்து தான் போனது.
"என்ன மௌன விரதமா?" என்றதும்,
"சாரி மொட்டு. நான் உன்னை ஏமாத்திட்டேன். உன் நம்பிக்கையை உடைச்சிட்டேன் இல்ல?"
அவளோ பதிலேதும் பேசாமல் இருக்க,
"நீ எப்படி இருக்க மொட்டு..."
"பார்த்தா எப்படித் தெரியுது?" என்று கேட்டவள் தான் தேடி வந்த பொருள் கிடைத்ததும் அதை கையில் எடுத்துக்கொண்டு,
"எனக்கே தெரியில லவா. ஏதோ இருக்கேன்" என்றாள்.
என்ன தான் மொட்டு இதுபோல் ஒரு பதிலைத் தான் தருவாள் என்று அவன் முன்பே யூகித்திருந்தாலும் அதை அவள் வாயால் கேட்டதும் அவனுக்கு சுருக்கென்றது.
"சரி நீ எப்படி இருக்க? உன் லைப் எப்படி இருக்கு? ஹேப்பியா தானே இருக்கீங்க?" என்றவள்,
"உங்களுக்காக நாங்க ரெண்டு பேரும் எங்க வாழ்க்கையையே பணயம் வெச்சி இருக்கோம். மறந்துடாத. நீங்க நல்லா வாழுங்க" என்றாள்.
"அப்போ உங்க வாழ்க்கை?"
"எனக்கு இன்னதுனு தெளிவா விளக்கத் தெரியில லவா. உண்மையைச் சொல்லனும்னா இப்போ தான் குஷாவைப் பத்தி ஏதோ கொஞ்சம் கொஞ்சம் புரிஞ்சிக்க ஆரமிச்சிருக்கேன். முன்ன மாதிரி அதிகம் சண்டை வருவதில்லை தான்" என்றதும் லவாவின் மனம் நிம்மதியடைய,
"ஆனா எவ்வளவு நாளைக்குத் தான் குஷா அவன் பொறுமையை மெயின்டெய்ன் செய்வான்னு எனக்குத் தெரியில. ரெண்டு வெடிகுண்டை ஒரே திரியில கட்டி எப்போ வேணுனாலும் வெடிக்கலாங்கற நிலையில இருக்கு எங்க வாழ்க்கை. அவன் தான் இந்த ரிலேஷன் ஷிப்பை இழுத்து வைக்க ரொம்ப மெனக்கெடுறான். போகுது..."
குஷா மீது இதுவரை இருந்த ஐயம் விலக்கியவனாக லவா இருந்தாலும் மொட்டுவின் இந்தப் பிடித்தமில்லாதப் பேச்சு அவனுக்கு அச்சத்தைக் கொடுத்தது என்னவோ நிஜம். அதே நேரம் இதுவரை குஷா தன் காதலை அவளிடம் சொல்ல வில்லை என்றும் அதைச் சொல்லக் கூடிய ஒரு சந்தர்ப்பத்தை மொட்டுவும் வழங்கவில்லை என்றும் அவனுக்கு நன்கு புரிந்தது.
"சரி நீ சொல்லு எப்படிப் போகுது உன் காதல் வாழ்க்கை?" என்றதும்,
"மொட்டு, நான் நடந்ததை உன்கிட்டச் சொல்லியிருக்கனும் தான். ஆனா அதைச் சொல்லக்கூடிய ஒரு சந்தர்ப்பம் வாய்க்கவே இல்ல. ஆனா ஒன்னு மட்டும் சொல்வேன் நீ என் மேல என்னவெல்லாம் அபிப்ராயம் வெச்சு இருக்கியோ அதெல்லாம் என்னைவிட குஷா கிட்ட அதிகமாவே இருக்கு மொட்டு. இதை நான் உன்னைச் சமாதானம் செய்ய சொல்லல. ப்ராமிஸ்" என்றதும்,
"நீயே என்னை ஏமாத்துனவன் தானே? அப்போ அவன் உன்னை விட பயங்கர ஏமாத்துக்காரேன்னு சொல்ல வர ரைட்?" என்றதும் லவாவுக்கு ஏனோ மனம் உடைந்தது.
மூச்சை இழுத்து விட்டவன்,"ஓகே மொட்டு இப்போ வரை நீ குஷாவைப் புரிஞ்சிக்க முயற்சிக்கலைனு நல்லாவே புரியுது. போனதெல்லாம் போகட்டும். இப்போ இருந்து அதாவது இன்னையில இருந்து ஒரே ஒரு விஷயம் எனக்காக நீ செய்யனும். ப்ளீஸ்" என்று அவன் முகம் சுளிக்க,
அவள் என்ன என்பதைப்போல் பார்க்கவும்,
"குஷாவை இதுவரை நீ பார்த்ததே இல்லை. அதாவது இப்போ இந்த நிமிஷத்துல இருந்து தான் குஷானு ஒருத்தன் உன் லைப்ல வரான். அவன் மீதான உன் கற்பிதங்களை எல்லாம் தூக்கி தூர வீசிட்டு ஒரு புது மனுஷன் கூட நீ பழக ஆரமிக்கும் போது நீ அவங்களை அப்செர்வ் பண்ணுவ தானே அப்படிப் பண்ணனும். ஆனா இதை நீ முழுமனசோடு நியாயமாச் செய்யணும். அவன் மேலான வெறுப்பு கோவம் எல்லாத்தையும் மறந்திடு. நீ அவனை லவ் கூட செய்ய வேணாம் ஆனா ஒரு நியூட்ரல் ஆளைப் போல கவனி. கண்டிப்பா உனக்கு அவனைப் பிடிக்கும்..." என்று முடிக்கும் முன்னே,
"ஒருவேளை பிடிக்கலைனா?"
"பாரு அதுக்குள்ள அவனைப் பத்திய உன் அபிப்ராயம் வெளிய வருது. ஒரு புது ஆளைப் பார்க்கும் போதே நீ அவங்களைப் பிடிக்காதுன்னு நெனச்சிட்டாப் பழகுவ?" என்றதும் அவள் அமைதியானாள்.
"எனக்கு உன்கிட்டச் சொல்றதுக்கு ஆயிரம் விஷயம் இருக்கு. ஆனா இப்போ அதைச் சொல்ல முடியாத நிலையில நான் இருக்கேன். அண்ட் நான் உன்னை ஹர்ட் செஞ்சதுக்கு சாரி" என்று லவா அங்கிருந்து நகர்ந்தான். மொட்டுவோ லவா மீதிருந்த ஏதேதோ கோவத்தை எல்லாம் திரட்டி அவனிடம் சண்டையிட்டு விட்டாள். நமக்குப் பிடித்தவர்கள் அல்லது உரிமையானவர்களிடம் நான் இடும் சண்டை போல் அவளது உற்ற நண்பனான லவாவிடம் தன்னுடைய மனதின் ஓரத்தில் இருந்த வெறுப்பை எல்லாம் இறக்கிவைத்து விட்டாள். ஆனால் குஷாவின் மீது இதற்கு முன்பாகவே அவளுள் எழுந்த பிடித்தத்தை லவாவிடம் காட்டிக்கொள்ளாமல் மறைத்ததை எண்ணி பின்னோ நாளில் அவள் வருத்தப்படக் கூடும் என்று இப்போது அவள் அறியவில்லை!
லவாவுடன் ஒடிஷா சென்று வந்ததில் இருந்து அவனுடைய காதலுக்குச் சொந்தக்காரியானதால் அதன் பொலிவும் நிறைவும் அனுவின் முகத்தில் வழிந்தோடியது. அதை மற்றவர்கள் கவனித்தார்களோ இல்லையோ அவளுடைய பெஸ்டி குஷா தெளிவாகக் கண்டுகொண்டான்.
"என்ன புஜ்ஜு கன்னம் ரெண்டு பன்னு மாதிரி ஆகியிருக்கு? என்ன சொல்றான் என் அண்ணன்? அலைபாயுதே மாதவன் ஷாலினி மாதிரி காதல் சடுகுடு குடு தான் போலயே?" என்று ஹாலில் இருக்கும் சோபாவில் வழக்கம் போல் அவளை இடித்து அங்கிருந்த மேக்ஸைனை புரட்டியவாறு கேட்ட அவன் கேட்டதில் அவளுக்கு இன்னும் வெட்கம் கூடிக்கொள்ள நெளிந்தாள்.
"பார்ரா உன்னையே வெட்கப்பட வெச்சிட்டானா அவன்?" என்று கிசுகிசுப்பாய்க் கேட்க,
"போடா..." என்று அவள் நகரப்போக,
"எப்படிப் போகுது லைப் எல்லாம்? ஆளே ரெண்டு சுத்து வெய்ட் போட்டுட்ட மாதிரி இருக்கு?" என்று மேலும் மேலும் அவளைச் சீண்ட அப்போது அங்கு அமர்ந்திருந்த வைத்தி தான் பேத்தியின் முகத்தில் இருக்கும் வெட்கத்தைக் கண்டு மனம் நிம்மதியடைய அதே நேரம் அங்கு வந்த மொட்டுவைக் கண்டு சற்று வருந்தினார். பின்பு பேச்சு வாக்கில் ஜானகியிடம் இதைப்பற்றி விசாரிக்க அவரோ கூட்டத்தில் அன்று குஷா சொன்ன அவர்களின் காதல் கதையை அவிழ்த்துவிட்டார்.
அந்தக் கதையைக் கேட்ட பெரியவர்கள் அதை உண்மை என்று நம்பி ரசிக்க வைத்தி அனு குஷா ஆகிய மூவரும் ஒருவரை ஒருவர் அர்த்தமாகப் பார்த்துக்கொள்ள லவாவோ மொட்டுவின் நிலை அறிந்தவனாக குழப்பத்தில் இருக்க ஆனால் மொட்டுவோ சற்று முன் லவா சொன்னதைச் செயல் படுத்த எண்ணி குஷா கூறிய பொய் கதையை உண்மையாக நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணி சிரித்து அவளையும் அறியாமல் அங்கு அமர்ந்திருந்த குஷாவை 'சைட்' அடிக்க ஆரமித்தாள். அத்துடன் இதுவரை குஷா தன்னுடன் நடந்து கொண்டதை நினைக்கையில் அவளுக்குள்ளும் முதல் முறை பட்டர் பிலைஸ் சிறகை விரிக்க ஆரமிக்க தன்னுள் எழுந்த வெட்கத்தை மறைக்க அவள் உள்ளே சென்றாள். ஏனோ அது லவாவுக்கு தவறாக கன்வே ஆக தன்னுடைய நட்புக்கு நாம் தவறு செய்து விட்டோமோ என்று குற்றயுணர்ச்சி எழுந்தது.
*************
மொட்டுவுக்கு தன்னுடைய முதல் நாள் கல்லூரி தொடங்க இருந்தது. அன்று காலையிலே ஜானகி ரகுவிடம் சொல்லிவிட்டு குஷாவின் பைக்கில் பயணித்தாள்.
"ஹே அழகி என்ன அழுகையா வருதா?" என்று கிண்டல் செய்தான் குஷா.
"நான் ஏன் அழனும்?"
"உனக்கு ஞாபகம் இருக்கானு எனக்குத் தெரியில ஆனா எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அப்போ உனக்கு மூணு வயசு இருக்கும். ஒரு சரஸ்வதி பூஜை அன்னைக்கு உன்னை முதன் முதலா சூரக்கோட்டையில இருக்குற ஸ்கூல்ல சேர்த்தோம். ஆமா சேர்த்தோம். ஏன்னா அப்போ எனக்கு ஒன்பது வயசு இருக்கும். கண்ணெல்லாம் கண்ணீர் முட்டி நிற்க மூக்கு ஒழுக குட்டி கௌன் போட்டுட்டு நீயும் அனுவும் ஒரே நாள்ல ஸ்கூலுக்கு போனீங்க. ஆனா அனு அழாம ஜாலியா போனா. நீ ஏன் அழுத தெரியுமா? ஏன் நாங்க மட்டும் ஸ்கூலுக்கு போகணும்? லவாவும் குஷாவும் மட்டும் ஏன் வீட்ல இருக்காங்கனு நீ லாஜிக் பேசுனயாம். அம்மா அடிக்கடி அதைச் சொல்லிச் சிரிப்பாங்க" என்றதும் அவள் வெட்கப்பட அவளை கல்லூரி வாசலில் இறக்கி விட்டவன்,
"ஹூய் பனி, தனியாப் போயிடுவியா இல்ல நானும் வரனுமா?" என்றவனுக்கு அழகு காட்டிவிட்டு உள்ளே சென்றாள்.
அதன் பின்னான நாட்கள் அனைத்தும் அழகாகவே நகர்ந்தது. ஜானகிக்கு அதிக வேலை பளு இருந்த காரணத்தால் அவர் தினமும் வீடு திரும்பவே எட்டு ஆகிவிடும். மொட்டுவும் கல்லூரி முடித்து மாலை வருவதற்கு ஐந்து ஆகிவிட வந்தாலும் அவளை தன்னுடைய வேலைகளைச் செய்ய சொல்லிவிட்டு குஷாவும் ரகுவும் தான் இரவுணவைத் தயார் செய்வார்கள். மொட்டுக்கோ மனசு கேட்காமல் அவ்வப்போது அவர்களுக்கு உதவவும் செய்வாள். தனக்கு திருமணம் முடிந்ததாகவோ இல்லை மாமியார் வீட்டில் இருப்பதைப் போலவோ மொட்டுவுக்கு எந்த எண்ணமும் தோன்றாது. அன்றைய தினம் மாலை எல்லோரும் கூடிப் பேசிக்கொண்டிருக்க மொட்டு தான் தன்னுடைய அசௌகரியத்தை அவர்களிடம் வெளிப்படுத்தினாள்.
அதைக் கேட்ட ஜானகி,"நீயாச்சும் ஏதாவது ஹெல்ப் பண்ற, என்னை எடுத்துக்கோ? நான் வரவே எட்டு ஆகிடுது. உன்னை மாதிரியே நானும் பீல் பண்ணிட்டா இருக்கேன்?" என்றதும்,
"அத்தை பொதுவா எவ்வளவு நல்ல மாமியாரா இருந்தாலும் உங்க அளவுக்கெல்லாம் யாரும் இவ்வளவு ஃப்ரீயா விட மாட்டாங்க. உங்களுக்கு உண்மையிலே என் மேல எந்தக் கோவமும் இல்லையா? அதாவது நான் படிக்கறேன்னு சொல்லி எந்த வேலையும் செய்யாம..." என்று இழுத்தாள் மொட்டு.
"ஒருவேளை நானும் வேலைக்குப் போகாம வீட்ல இருந்திருந்தா இந்த சீரியல் எல்லாம் பார்த்து உன்னால என்னோட ஹோல்டு போயிடும்னு பயந்து நானும் எதாவது கோமாளித்தனம் செஞ்சு இருப்பேன் தான்" என்றதும் ரகுவும் குஷாவும் சிரிக்க,
"ஆனா பாரு நானே எங்க பேங்க் கொடுத்த வாராக் கடனை எப்படியெல்லாம் வர வெக்கலாம்னு தினமும் மண்டை காஞ்சி இருக்கேன். பேலன்ஸ் ஷீட், லோன், என்.பி.ஏ ஆடிட்டிங், அக்கௌன்டிங், இயர் எண்ட் டார்கெட்ன்னு நிறைய மருமகள்கள் கூட மல்லு கட்டிட்டு இருக்கேனா அதனால் என்னுடைய ரெண்டு மருமகள்கள் என்ன பண்றங்க அதுல என்ன குத்தம் கண்டு பிடிச்சு சண்டை போடலாம் நம்முடைய கெத்தைக் காட்டலாம்னு எல்லாம் எனக்கு யோசிக்க நேரமே இல்ல... ரொம்ப சந்தோசப்படாத இன்னும் அஞ்சு வருஷத்துக்குள்ள தான் சர்விஸ் இருக்கு. அதனால ஜானகி வெர்சன் டு பாயிண்ட் ஓ வைப் பார்ப்ப..." என்று அவரும் சிரிக்க,
"ஆனா அதுவரை உன்னை நாங்க மாமியாராக விட்டு வெக்க மாட்டோமே? உன்னை அதுக்குள்ள பாட்டியா ப்ரமோஷன் கொடுத்திடுவோமே?" என்றவன் மொட்டுவின் செவிகளுக்கு மட்டும் கேட்குமாறு,
"என்ன கொடுத்திடலாம் தானே?" என்றதும் மொட்டு முகத்தில் இன்னதென்று தெரியாத ஒரு உணர்வு வந்து சென்றது.
அதன் பின் அடுத்த இரண்டு வாரத்தில் ஜானகியை திருச்சிக்கு மூன்று வாரம் வேலை நிமித்தமாக மாற்றம் செய்துவிட சுசியின் வீட்டில் தங்கி தன்னுடைய வேலையை அவர் தொடர ரகுவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு வேலூருக்குச் சென்று இருந்தார்.
நீண்ட நாட்கள் கழித்து கிடைத்த அந்தத் தனிமையில் அவ்வபோது குஷா மொட்டுவைச் சீண்டியவாறு தான் இருந்தானே ஒழிய ஒரு போதும் அவளிடம் அட்வான்டேஜ் எடுக்கவில்லை. முதலில் அவளிடம் இப்போதெல்லாம் ஏற்படும் அந்த மாற்றங்களை குஷாவும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான். அது போக அவர்களுடைய பி.எச்.டி வேலையானது ப்ரீ கிளைமேக்ஸை நெருங்கியிருந்தது. அதும் போக படிக்கும் அவள் மனதை சஞ்சலப்படுத்த அவன் விரும்பவில்லை. ஆனால் இதற்கு நேர்மாறாக மொட்டுவோ கொஞ்சம் கொஞ்சமாய் குஷாவின் பக்கம் சாயத் தொடங்கினாள். அவளை அவன் பால் ஈர்க்கும் பொருட்டு மிக முக்கியமான இரண்டு சம்பவங்கள் அவர்கள் வாழ்வில் நிகழ்ந்தது.
*************
இதற்கு நேர்மாறாக ஹைதராபாத்தில் லவா அனு இருவருக்குள்ளும் சின்ன சின்ன விரிசல்கள் எழ ஆரமித்தது. லவாவுக்கு இறுதியாக மொட்டுவுடனான அந்த உரையாடல் அடிக்கடி கொடுங்கனவாகவே வந்து போனது. அதற்கு தூபம் போடும் விதமாக அன்று எல்லோரும் அவர்களது காதல் கதை என்று ஒன்றைப் பேசும் போது மொட்டு அங்கிருந்து எழுந்து சென்ற நிகழ்வும் அமைந்தது. இந்த வேளையில் பல வருடங்களாக அவனை உறுத்திக்கொண்டிருந்த அந்தக் குற்றயுணர்ச்சி அவனுள் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியது.
லவா குஷா என்னதான் இரட்டையர்களாக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் நிறைய வித்தியாசங்கள் இருக்கவே செய்தது. அவர்களின் விருப்பங்களும் வெவ்வேறாகவே வளர்ந்தது. ஆயினும் அவர்கள் இருவரின் விருப்பங்களும் ஒரே நேர்கோட்டில் சந்தித்தது என்னவோ ஹாக்கியில் தான். ஹாக்கி என்றால் இருவருக்கும் உயிர். சிறுவயதில் இருந்தே அதற்காக தங்களை முழு மூச்சாகத் தயார் செய்துகொண்டனர்.
ஸ்கூல் டீமில் இருவரும் தவறாமல் இடம்பிடித்து விடுவார்கள். ஆனால் லவா விளையாடுவதில் ஜானகி மற்றும் ரகுவுக்கு துளியும் விருப்பமில்லை. லவா சிறிது விளையாடினாலே அவனுக்கு மூச்சு வாங்கிவிடும் என்று அவனை விளையாட அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் அவனை ஏங்க வைத்துவிட்டு தான் மட்டும் விளையாட விரும்பாதவன் அன்றுடன் தானும் ஹாக்கி விளையாடுவதையே நிறுத்தி விட்டான் குஷா.
இது போல் பல சந்தர்ப்பங்களில் லவாவுக்காக குஷா பலவற்றை நிராகரித்தும் விட்டுக்கொடுத்தும் இருக்கிறான். இதனாலே குஷாவின் சுதந்திரத்தை தான் பறித்துக்கொள்வதாய் லவாவுக்கு ஒரு எண்ணம். சின்ன சின்ன நெருடல்கள் எல்லாம் விஸ்வரூபம் எடுத்து இருந்தது.
இது போலொரு சூழலில் மொட்டுவின் அன்றைய பேச்சு அவனையும் அறியாமல் அவனுள் பல தாக்கங்களை உண்டு செய்ய அதற்கு ஒத்து ஊதும் விதமாய் அவனுடைய லெபாரெட்டரி வேலை இறுதிக்கட்டத்தை நெருங்க அந்த அழுத்தமும் வேலை பளுவும் அவனை வாட்டி வதைக்கத் தொடங்கியது. இதனால் அவன் அனுவிடம் செலவழிக்கும் நேரமும் குறைய தொடங்க அனுவுக்கும் புதிய ப்ராஜெக்ட் வேலை வந்ததால் ஒரு வாரம் பகல் ஷிப்ட் மறுவாரம் இரவு ஷிப்ட் என்று வேலை மாற்றியமைக்கப் பட்டிருந்தது. இதனால் அவளாலும் லவாவின் மனதை அறிய முடியாமல் போனது.
ஆனாலும் வார இறுதி நாட்களில் எப்போதும் போல் அருகிலிருக்கும் ஏதேனும் ஊர்களுக்கு அவர்கள் மினி டூர் சென்று வந்தவாறு தான் இருந்தனர். ஆனாலும் முன்பு இருந்த அந்த இணக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. அதைக் கவனிக்கும் நிலையில் அவர்கள் இருவரும் இல்லை. ஒவ்வொரு முறை அனுவைக் கூடிப் பிரியும் நேரமெல்லாம் குஷாவும் மொட்டுவும் தங்கள் வாழ்வில் அடுத்த அடியை எடுத்து வைத்திருப்பார்களா என்ற எண்ணமும் கேள்வியும் லவாவை மிகக் கூர்மையாகத் தாக்கத் தொடங்கியிருந்தது. இருந்தாலும் இதை எவ்வாறு அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதென்று புரியாமல் லவா தத்தளிப்பான்.
நாட்கள் மாதங்களாய் நகர அன்று காலை அனு லவாவிடம் எதையோ கேட்டிருக்க மாலையில் அதை மறந்து வந்திருந்த லவாவிடம் செல்லமாக வம்பிழுக்க நினைத்தவள்,
"என்ன லவா இப்போல்லாம் அடிக்கடி ஞாபக மறதி வருது போல? போறபோக்கைப் பார்த்தா சஞ்சய் ராமசாமி போல உடம்பு முழுக்க டேட்டூ குத்திடலாமா? அண்ட் இது மட்டும் தான் மறந்திடுச்சா இல்ல எல்லாம் மறந்திடுச்சா?" என்று அர்த்தமாய் அவள் கண்ணடிக்க,
"ஷட் அப் அனு. ஏன் உனக்கெல்லாம் மறதியே வராதா? நான் என்ன வேணும்னேவா செஞ்சேன்? யு ஆர் க்ராஸிங் யுவர் லிமிட்ஸ். பி கேர்புல்" என்றவன் தங்கள் அறைக்கதவை 'டம்' என்று சாற்றியதில் அவன் தன்னையே அறைந்ததைப்போல் உணர்ந்தவள் கண்கள் கலங்க அந்த சோபாவிலே குறுகிப்போனாள்.
***************
ஜானகி இல்லாத குறையைப் போக்க அவர்களுடைய எதிர் பிளாட்டில் புதியதாக ஒரு ஜோடி தங்களுடைய இரண்டு வயது வாண்டு முகிலுடன் குடியேறினார்கள். முதலில் அவர்களிடம் நேரம் ஒதுக்கிப் பேசக்கூட முடியாத நிலையில் மொட்டு இருந்தாள். அவளுக்கு கல்லூரி தொடங்கியதால் தினமும் அங்கு சென்று வந்து தன்னுடைய வேலையை முடித்து ஓய்வெடுக்கவே சரியாக இருந்தது. இதில் குஷாவும் அதிக பிசி ஆகிப்போனான். அவர்களின் தீசிஸ் வேலை மற்றும் கல்லூரி தொடங்கியதால் அதற்கு நோட்ஸ் எடுப்பது என்று நாட்கள் சென்றது.
அதன் பின் அவர்களுடன் பேசி ஓரளவுக்கு நெருக்கமாகி இருந்தாள் மொட்டு. வழக்கமாக மாலை ஆறு மணிபோல் இருவரும் வெளியே வராண்டாவில் நின்றோ இல்லை அங்கிருக்கும் படிக்கட்டில் நின்றோ சிறிது உரையாடுவார்கள். அன்றும் அவ்வாறு உரையாடிக் கொண்டிருக்க எல்லாக் குழந்தைகளைப் போல் முகிலும் தன் தந்தையின் செருப்பை கால் மாற்றி அணிந்து அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாரா விதமாக படிக்கட்டில் நின்றவனுக்கு கால் இடற தலை கீழாக விழ அதை நொடியில் யூகித்த மொட்டு அவனுக்கு முன்பு படிக்கட்டில் தாவி அவனைத் தன்னுடன் அணைத்துக்கொள்ள இப்போது அவள் கீழே விழுந்தாள். அப்போதும் முகிலுக்கு தலையில் அடி பட்டு விடுமோ என்று எண்ணி தன்னுடைய வலது முழங்கையை ஊன்றியவள் சில வினாடிகளில் ஐயோ என்று அலற அவள் தலையும் தரையில் மோதி ரத்தம் வழிந்தது. அவளது குரலைக் கேட்ட குஷா பதறியவாறு வெளியே வர அங்கே தலைகீழாக விழுந்து வலியில் துடிக்கும் மொட்டுவைக் கண்டவன் விரைந்து அவளை நெருங்க அவளின் நிலையைக் கண்டவனுக்கு உடல் பதைத்தது.
துரிதமாக அவளைத் தூக்கியவன் அவளது கையைப் பிடிக்க அவளோ இன்னும் வலியில் அலறினாள். அது போக காலும் வீங்கி எழ முடியாமல் தவித்தவளை தன்னுடைய கையில் ஏந்தியவன் முகமோ வேதனையில் துடித்தது. அப்போது தான் அவன் முகத்தில் ஓடும் உணர்வுகளை மொட்டு நன்கு படிக்க ஆரமித்தாள். நாம் நேசிப்பவர்களின் வலியைக் கண்டால் நமக்கு ஏற்படும் அந்தப் பதட்டமும் ஏதும் ஆகிவிடக் கூடாது என்ற படபடப்பும் அனிச்சையாக அவன் கண்ணின் ஓரத்தில் சில கண்ணீர் துளிகளை வரவழைத்திருந்தது. அதைக் கண்டவளுக்கோ சொல்ல முடியாத உணர்வுகள் எழுந்தது. அதன் பின் மருத்துவரைப் பார்த்தது வீடு வந்தது என்று எதுவும் அவளுக்கு நினைவு இல்லை. அவள் எண்ணமெல்லாம் குஷாவின் உணர்வுகளுக்கான அர்த்தத்தைக் கண்டு பிடிப்பதிலே இருந்தது. சட்டென அதற்குப் பெயர் தான் காதல் என்று அவள் மனம் சொல்ல அவளால் அதை நம்பவும் முடியாமல் அதே நேரம் நம்பாமலும் இருக்க முடியாமல் தரையில் விழுந்த மீனாய்த் துள்ளித் துடித்தது.
வலது கை, தலை, முட்டி கால் என்று ஆங்காங்கே கட்டு போடப்பட்டிருந்ததால் அவளால் எந்த வேலையையும் தன்னிச்சையாகச் செய்ய முடியாத நிலை அவளுக்கு.
அதை உணர்ந்ததாலோ என்னவோ அவளுக்கு வேண்டியதை எல்லாம் அவனே பார்த்து பார்த்து செய்தான். ஆனால் மறந்தும் அவளிடம் ஒரு வார்த்தையும் பேச வில்லை. அதிலே அவன் கோவத்தை உணர்ந்தவள் அவனைப் பேச வைக்க முயன்றாள். அவனுடைய இந்த மௌனம் தான் அவள் உடல் வலிகளை விட அதிகம் வலித்தது.
அவனைப் பேச வைக்க வழக்கம் போல் அவனைச் சீண்ட எண்ணியவன் வேண்டுமென்றே,"ச்சே இவளுக்கெல்லாம் சேவகம் செய்ய வேண்டிய நிலைமை வந்திடுச்சேன்னு ஃபீல் பண்றயா குஷா?" என்று சொன்னது தான் தாமதம் அவன் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்தான். அது விழுந்த அதிர்வுகளில் அரண்டவளிடம்,
"ஏன்டி என்னை ஒருமுறை கூட நல்ல கோணத்துல பார்க்கவே மாட்டியா?" என்றவனுக்கு அன்று லவாவிடம் பேசியதிலிருந்து புதிய குஷாவாகத் தான் பார்க்கிறாள் என்பதை எப்படிச் சொல்லுவாள் மொட்டு?
31(2) நாளை...
 
Last edited:
ஏன் இல்லை ஏன்னு கேக்குறேன். அவனே இப்பதான் ஏதோ சர்ப்ரைஸ்லாம் கொடுத்து அனுவ சந்தோஷப்படுத்தி ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தாங்க அது பொறுக்கல உங்களுக்கு ??? இப்படி பண்ணிட்டிங்களே☹☹☹ போன எபில மொட்டுகிட்ட கில்டி ஃபீல கிளியர் பண்ணி விடுனு சொன்னேன் ஆனால் அவ ஏத்தி விட்டுருக்கா?☹?☹. என்ன இங்கையும் ஆரம்பிச்சுருச்சா. ஒரு முடிவோடதான் இருக்கிங்க போலயே. எபி??? ???????
 
Ennada Ellam nalla poguthenu ninaichen.intha kattaiya potutingalla..yen ilal yengaren...irukathulaye periya kodumai guilty feeling than.atha poi vagai thogai illama lava manasula niraichu vaichurukingale.athum childhood la irunthu.ithula intha mottu vera.motha kaduppaiyum Ivan mela katita??...lava pavam thane?ithula en anumava vera kashta pada vaikaringale?? so sad .... ragupa kusha ?.......intha mottuku vai than prachanaiye.pesarathu ellam ava patuku pesidara.pochu ipo kushavum malai yeritan.oruvela kovathula love ah sollituvano??analum avalukum purinju pochu.yethuka than mudiyala ...papom...seekram lava guilt ah poga vainga.anuma happiness ah kondu vanga writer ji
 
ஏன் இல்லை ஏன்னு கேக்குறேன். அவனே இப்பதான் ஏதோ சர்ப்ரைஸ்லாம் கொடுத்து அனுவ சந்தோஷப்படுத்தி ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தாங்க அது பொறுக்கல உங்களுக்கு ??? இப்படி பண்ணிட்டிங்களே☹☹☹ போன எபில மொட்டுகிட்ட கில்டி ஃபீல கிளியர் பண்ணி விடுனு சொன்னேன் ஆனால் அவ ஏத்தி விட்டுருக்கா?☹?☹. என்ன இங்கையும் ஆரம்பிச்சுருச்சா. ஒரு முடிவோடதான் இருக்கிங்க போலயே. எபி??? ???????
ஒரே ரொமான்ஸா போனா கதை சூடு பிடிக்காதில்லை? அதான். எஸ் எஸ் ஆனால் எல்லாத்துக்கும் கடைசி எபில எண்டு கார்ட் போட்டுடுறேன் நன்றி ?? less tension more work
 
Ennada Ellam nalla poguthenu ninaichen.intha kattaiya potutingalla..yen ilal yengaren...irukathulaye periya kodumai guilty feeling than.atha poi vagai thogai illama lava manasula niraichu vaichurukingale.athum childhood la irunthu.ithula intha mottu vera.motha kaduppaiyum Ivan mela katita??...lava pavam thane?ithula en anumava vera kashta pada vaikaringale?? so sad .... ragupa kusha ?.......intha mottuku vai than prachanaiye.pesarathu ellam ava patuku pesidara.pochu ipo kushavum malai yeritan.oruvela kovathula love ah sollituvano??analum avalukum purinju pochu.yethuka than mudiyala ...papom...seekram lava guilt ah poga vainga.anuma happiness ah kondu vanga writer ji
அப்போ தானே ட்விஸ்ட் வெக்க முடியும்? கண்டிப்பா அந்தக் குற்றயுணர்வு ரொம்ப மோசம். மொட்டு ஒன்னும் இன்டென்சனாலா சொல்லல... ஏதோ ஆற்றாமையில சொல்லிட்டா. எஸ் இங்க லவ்வ சொல்லப்போறது மொட்டு தான்? நன்றி
 
oru flow la pohumbothu Mottu ippadi gate pottaa enna panrathu, Lava thiriya paththa vachaachu, seekiramaa nalla glow ahuthaanu paarpom,
Janaki amma maathiri mother inlaw irunthaa avanga gifted thaan,
enna ji .. Suddenaa twist.... oruthar life innum start panna vidala, Anu Lava life aathu romantic aa pohuthunaa athukkum idaikaala lockdown potuteenga,
Kusha 1adi eduthu vacha 16adi sarukkuthu, Mottu seekiram propose pannu, mudiyala,
Me so sad Kusha feel panrathaala,
epi super
 
இதுக்குத்தான் சொல்றாங்களோ வாழ்க்கை ஒரு வட்டம்ன்னு ??
 
oru flow la pohumbothu Mottu ippadi gate pottaa enna panrathu, Lava thiriya paththa vachaachu, seekiramaa nalla glow ahuthaanu paarpom,
Janaki amma maathiri mother inlaw irunthaa avanga gifted thaan,
enna ji .. Suddenaa twist.... oruthar life innum start panna vidala, Anu Lava life aathu romantic aa pohuthunaa athukkum idaikaala lockdown potuteenga,
Kusha 1adi eduthu vacha 16adi sarukkuthu, Mottu seekiram propose pannu, mudiyala,
Me so sad Kusha feel panrathaala,
epi super
athane mottu tube light? unmaiyile irukanga... ha ha ellorum happya iruntha namaku enna velai irukum sollunga? kusha has to try hard?
 
Top