Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - முன்னோட்டம் - 1

Advertisement

TNWContestWriter003

Well-known member
Member
ஹாய் பிரெண்ட்ஸ் ..

இதோ அடுத்த அத்தியாயத்தில் இருந்து சின்ன முன்னோட்டம் போட்டிருக்கேன் படிச்சிட்டு கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்..

டீசர் :

"ஏய் என்னடி இது நிஜமாவே கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்ட நான் கூட அம்மா கேட்டதுக்கு விளையாட்டுக்கு சொன்னேன்னு நினச்சேன் ஆனா நீ இவ்ளோ சீரியஸா இருக்க"


அவன் கேள்விக்கு பதிலளிக்காமல் 'உனக்கு ஒன்னு தெரியுமா விஷ்ணு..??' என்றாள் சாப்பிட்டு கொண்டிருந்த வேர்க்கடலையை அவனுக்கும் பகிர்ந்து கொடுத்தவாறு,

'என்னது..??'

'விஷ்ணு அப்பா எவ்ளோ கோபப்பட்டார் என்னல்லாம் பேசினார் நீயும் பார்த்ததானே..??'

'ஆமா அதுக்கும் உன் பதிலுக்கும் என்னடி சம்பந்தம்'

'இருக்குடா பொறுமையா கேளு, டேய் விஷ்ணு ஒரு பொண்ணுக்கு கல்யாணத்துக்கு அப்புறம் தான் நிஜமான சுதந்திரமே கிடைக்குமாம் அப்பா அம்மா கூட இருக்க வரை இப்படி தான் நம்மோட கனவு லட்சியம் எதையும் செய்ய விடாம தடுத்துட்டே இருப்பாங்களாம்.

'அப்படியா..?? இது யார் சொன்னா..??'

'டேய் இந்த **** குக்கிங் சேனல்ல வருவாங்களே ஒரு அக்கா அவங்க தான்டா ஒரு வ்லாக்ல சொன்னாங்க... அவங்களுக்கும் கல்யாணத்துக்கு முன்னாடி என்னை மாதிரியே நிறைய ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் இருந்ததாம் ஆனா அவர் ஹஸ்பன்ட் புல் ப்ரீடம் கொடுத்தாங்களாம் என்ன வேணுமோ செய்துக்கோன்னு சொல்லி.., அவங்க மட்டும் இல்ல பேஸ்புக்ல ஒரு அண்ணா டெயிலி நைட் போஸ்ட் போடுவாரே அவர் கூட அவரோட வைப்பை எப்படி எல்லாம் தாங்குவேன்னு ஒரு இன்டர்வியூல சொல்லி இருந்தாங்க அப்புறம் இன்ஸ்ட்டால நம்ம பேவேரெட் **** கூட இதே தான் சொன்னாங்க..'

'அதனால இந்த முடிவா..??'

'ஆமாடா நான் இங்க இருக்க வரைக்கும் என்னோட யூடியுபர் கனவு நிறைவேறாது.., அப்பாவும் அம்மாவும் என்னை எதையும் செய்ய விடாம தடுத்துட்டே இருப்பாங்க ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் அதே என் ஹஸ்பண்ட் அப்படி பண்ண மாட்டார் இல்ல அதான் ஒத்துக்கிட்டேன், அதே சமயம் வாழ்க்கைக்காக லட்சியத்தை இழக்க முடியாது பாரு' என்று கெத்தாக தம்பியை பார்க்க,

'அப்போ இங்க இருந்து தப்பிக்க, யூடியுபர் கனவை நிறைவேத்த தான் கல்யாணம் பண்ணிக்கிறியா..??உன்னோட பியூச்சர் ஹஸ்பண்ட் பத்தி உனக்கு எந்த கனவும் இல்லையா..??'

'ஏன் இல்லாம..??'

'அப்போ இருக்கா..??'

'ஆமாடா அதெல்லாம் நிறையவே இருக்கு' என்றவள் தன் கைபேசியை எடுத்து குறிப்பிட்ட அப்ளிகேஷனை திறந்து தம்பியிடம் காட்டி,

'இதோ பார் ஒரு ஹஸ்பண்ட் எப்படி இருக்கனும்ன்னு இதுல தெளிவா கொடுத்திருக்காங்க.., இந்த க்ரைட்டீரியால வர மாப்பிள்ளை யாரா இருந்தாலும் கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணலாமாம்டா'

அவனும் சில நொடிகள் அதை பார்த்தவன் அவளிடம், "என்னென்ன க்ரைட்டீரியாடி சொல்லு யாழி நாளைக்கு எனக்கும் யூஸ் ஆகும்" என்று விஷ்ணு கேட்க,

'முதல்ல மாப்பிள்ளை நல்லா ஹைட்டா இருக்கணும்'

'ஏன்..?? அது என்னடி நல்ல ஹைட் ஏன் என்னை மாதிரி நார்மலா இருந்தா ஆகாதா...??'

'அப்படி இல்லடா.., இப்போ எல்லாம் டால் பாய் ஷார்ட் கேர்ள் தான் விஷ்ணு ட்ரெண்ட்'

'அட ஆமால்ல மறந்தே போயிட்டேன்.., சரி அடுத்து'

'பியர்ட் வச்சி இருக்கணும்'

'எதுக்குடி..??'

'என்னடா கேள்வி இது..?? அப்பதான் ஹாண்ட்ஸ்ஸமா மேன்லியா இருப்பாங்க நாங்க ரெண்டு பெரும் போட்டோ எடுத்து ஷார்ட்ஸ்.., இன்ஸ்ட்டா ஸ்டோரி fb போஸ்ட் போடறப்போ கெத்தா மேட் பார் ஈச் அதரா இருக்கும்' என்று விழிகள் மின்ன கூற,

'ஆமாடி சரியா சொன்ன இப்போல்லாம் கோஹ்லி, தோனி, நம்ம தளபதி எல்லாம் கூட தாடி வச்சி இருக்காங்க என்று நிறுத்தியவன், ஏன் யாழி அப்போ நானும் தாடி வைக்கணுமா..?' என்று கவலையுடன் கேட்க,

'என்னடா இப்படி கேட்கிற..?? கண்டிப்பா வைக்கணும் இல்ல உனக்கு பொண்ணு கிடைக்கிறது கஷ்டம் தம்பி'

'யாழி இன்னும் மீசையே ஒழுங்கா வளரலையே தாடிக்கு நான் என்ன பண்ண..??'

'தம்பி கூகுள் எதுக்கு இருக்கு..?? நம்ம கூகுலாண்டவரை கேளு எப்படி வேகமா மீசை தாடி வளரணும்னு அவரே சொல்லுவாரு' என்றாள்.
 
Last edited:
அடியே யாழி உங்க அப்பாவையே அலற விடுவார் உன் மாப்பிள்ளை இதுல உனக்கு எப்படி அவரு எல்லாத்துக்கும் சுதந்திரம் தருவாருனு நம்புற உன்னைய நெனச்சி ரொம்ப கஷ்டமா இருக்கு????, இப்படி சோசியல் மீடியா பைத்தியம் பிடிச்சி திரியுற உன்னை தெளிய வைக்குறத்துக்கு நம்ப துடியானால் தான் முடியும்.இன்னும் என்னலாம் நடக்க போகுதோ ??????roflphotos-dot-com-photo-comments-20180420182349.jpg
 
ஸ்ப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே. இதெல்லாம் எங்க போயி முடியப்போகுதோ?. யாழி உனக்கு இருக்கறமாதிரி மத்த எல்லாருக்கும் கனவு எதிர்பார்ப்பு லட்சியம் எல்லாம் இருக்குங்கிறதை மறந்துட்டு பேசறீயே யாழிஇஇஇஇ.??????சோசியல் மீடியாவை எப்படி பயன்படுத்தனும்ன்னு தெரிஞ்சுக்கோ யாழி. பர்மிஷன் இல்லாம போட்டோ எடுத்தாலே பொழுக்குன்னு ஒன்னு வக்கிறான் துடியன். ரைட்டர் ஜீ இரண்டையும் கோத்துவுட்டு நல்லா வே சம்பவம் நடத்தப் போறீங்க.
 
ஹையோ.. ஹையோ.. அதி பத்தி தெரியாம என்னென்னமோ பேசிட்டு இருக்கா.. ??????கனவுலகத்துலயே இருக்காம கொஞ்சம் முழிச்சுக்கம்மா.. அதி தான் விபூதி அடிக்கணும் போல.. ?
 
ஹையோ.. ஹையோ.. அதி பத்தி தெரியாம என்னென்னமோ பேசிட்டு இருக்கா.. ??????கனவுலகத்துலயே இருக்காம கொஞ்சம் முழிச்சுக்கம்மா.. அதி தான் விபூதி அடிக்கணும் போல.. ?
கண்டிப்பா நம்ப ஹீரோ பற்றி தெரியாமல் உளறிட்டு இருக்கா துடியன் தான் சாட்டை எடுத்து ரெண்டு கொடுக்கணும் டியர் அப்புறம் நீங்க சொன்னா மாதிரி வீபூதியும் அடிக்கணும் ?????.
 
Top