மனைவி - 27

Advertisement

Nivi Ammu

Well-known member
Member
மனைவி - 27

ஒரு பெண்ணின் கற்பையும், தன் வீட்டு வாரிசுகளையும் இத்தனை அற்பமாகக் கொச்சைப்படுத்திய கலையை எந்த ஜென்மத்தைச் சேர்ந்தவர் என்று சொல்வது?

ஸ்ரீராம் தன் தாயை ஒரு காயம் பட்ட மிருகத்தைப் போலப் பார்த்தான். "நீங்க என்னைப் பெத்தப்போ... நான் தான் அவரு வாரிசுன்னு என் அப்பா நம்பினாரா?" என்று கணத்த குரலில் கேட்டான்.

கலையின் கண்கள் சிவந்தன. "என்ன ஸ்ரீராம் பேசிட்டு இருக்க? நாக்கை அறுத்துடுவேன்!" என்று கத்தினார்.

"அறுத்துருங்க... இப்பவே அதைச் செய்யுங்க! என் பொண்டாட்டியை இவ்வளவு கேவலமாப் பேசின நாக்கு இது... அவளைச் சந்தேகப்பட்ட உடம்பு இது. இத்தனை வருஷம் எனக்காகவே வாழ்ந்தவளைக் குப்பைன்னு நினைச்சேனே... அவகிட்ட பேசாத இந்த நாக்கு எதுக்கு இனிமே? அறுத்து எறியுங்க..." என்று அவன் கதறியபோது, அவன் கண்களில் இருந்து ரத்தக் கண்ணீராக வழிந்தது.

கலை அப்படியே உறைந்து போனார்.

"ஸ்ரீராம்... அம்மா கோபத்துல பேசிட்டேன். அதுக்காக நீ இப்படியெல்லாம் சொல்லுவியா? உன்னை உங்க அப்பா எவ்வளவு கொண்டாடி வாழ்ந்தார்..."

"அவருக்கு நான் பிறந்தேன்னு அவர் நம்புன மாதிரி, என் பொண்ணுங்க எனக்குத்தான் பிறந்தாங்கன்னு நான் உறுதியா நம்புறேன்!"

"ஸ்ரீராம்... உண்மை தெரியாமப் பேசாத. நான் உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். பொறுமையா சொல்றதை கேட்டுக்கோ..."

"நீங்க என் நல்லதுக்குத்தான் செய்றீங்க... எனக்குத்தான் அது புரியாமப் போச்சு. இப்ப எல்லாமே தெளிவாப் புரிஞ்சு போச்சு. என்னை இப்படியே தனியா விடுங்க. நீங்க போய் உங்க வேலைகளை பாருங்க..."

என்று சொல்லிவிட்டு அவன் எழுந்து வெளியே நடக்கத் தொடங்கினான்.

அவன் சத்தம் போட்டுப் பெரிய சண்டை போடவில்லை, தர்க்கம் செய்யவில்லை... அதை அப்படியே விட்டு விட்டுப் போனதே போதும் என்று கலையும் அவனை விட்டுவிட்டார்.

"அம்மா... அண்ணன் போறான்," என்று மலர் பதறினாள்.

"அவன் போகட்டும்டி... எங்க போனாலும் திரும்ப இங்கதான் வந்து ஆகணும்."

"ஒருவேளை ராதா கிட்ட போயிட்டா என்ன பண்ணுவ அம்மா?" என்று அலர் தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

"அவ மேல நாம உருவாக்கி வச்சிருக்கிற சந்தேகம் சாதாரணமானது இல்லை. அவ்வளவு சீக்கிரம் அவன் அவ கிட்ட போக மாட்டான். எங்கேயாவது சுத்திட்டு திரும்ப நம்மகிட்டதான் வரணும். அவனுக்கு வேற வழியே கிடையாது," என்றார் கலை உறுதியாக. அவருக்குள் இருந்த தாய்மை என்றோ செத்துப் போய்விட்டது.

அவரைப் பொறுத்தவரை ஆண் பிள்ளை என்றால் சம்பாதிக்க வேண்டும், குடும்பத்தைச் சுமக்க வேண்டும், பணத்தைத் தாய் கையில் கொடுத்துப் பம்மி நடக்க வேண்டும். அதற்கு மட்டும் தான் மகன் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார்.

வெறும் காலோடு தார் சாலையில் நடந்து கொண்டிருந்த ஸ்ரீராமின் பாதங்கள் வெந்து கருகின. அந்த வலி அவனுக்கு ஒரு இதத்தைத் தந்தது. அவனுக்கு அவனே தண்டனை கொடுத்துக் கொள்கிறான்.

'எந்த முகத்தை வச்சுக்கிட்டு நான் போய் அவங்களைப் பார்ப்பேன்? என்னைப் பார்த்துக் கேள்வி கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்? என் பொண்ணுங்க யாருன்னே தெரியாம போச்சே... அவங்க இப்ப எங்க இருக்காங்க? யாரைத் தேடி நான் போவேன்?' என்று மனதைக் கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல், அவனுக்குள் இருந்து அழுகை வெடித்துக் கிளம்பியது.

சாலையோரம் அப்படியே இடிந்து அமர்ந்து, ஒரு சிறு பிள்ளையைப் போல வாய்விட்டு ஓலமிட்டு அழுதான். அவன் அழுகையின் பாரம் கண்டு அந்தப் பாதையில் சென்றவர்கள் ஒரு கணம் திகைத்து நின்று, அவனை ஒரு பரிதாப பார்வையுடன் பார்த்து விட்டுச் சென்றனர்.

நாகரிகமான உடையில், பார்ப்பதற்கு விவரம் தெரிந்தவனாகத் தெரிந்த மனிதன், நடுத்தெருவில் ஒரு பைத்தியத்தைப் போல் பரட்டை கோலமாக அழுதுகொண்டிருப்பதை பார்த்துச் சிலர் அருவருப்போடும், சிலர் ஒருவித அச்சத்தோடும் அவனை விட்டு எட்டி விலகிச் சென்றனர். உலகமே அவசர கதியில் ஓடிக்கொண்டிருக்க, அவன் மட்டும் காலத்தின் பிடியில் சிக்கி உறைந்துபோய் அமர்ந்திருந்தான்.

அசோக் கடைக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தபோது, தெருவோரத்தில் ஒரு உருவம் குறுகிக் கிடப்பதைக் கண்டான். அது ஸ்ரீராம் தான் என்று தெரிந்த கணத்தில் அவனுக்குள் ஒரு பேரதிர்ச்சி மின்னலாய் இறங்கியது. பதற்றத்தில் தன் பைக்கைச் சடாரென ஓரம் நிறுத்திவிட்டு, மூச்சிறைக்க அவனை நோக்கி ஓடினான்.

"ஸ்ரீராம்... என்னாச்சு உங்களுக்கு? ஸ்ரீராம், அழாதீங்க... ப்ளீஸ் கண்ட்ரோல் பண்ணிக்கோங்க! ஸ்ரீராம், உங்களத்தான் எல்லாரும் ஒரு மாதிரியா பாத்துட்டு இருக்காங்க. தயவு செஞ்சு கொஞ்சம் அமைதியா இருங்க. இங்க பாருங்க, வாங்க நம்ம வீட்டுக்குப் போகலாம்... ப்ளீஸ் ஸ்ரீராம், எழுந்திருங்க..."

அசோக் அவன் தோள்களைப் பிடித்து பலமாக உலுக்கினான். அந்த உலுக்கலில் ஸ்ரீராமின் கதறல் சத்தம் சற்று அடங்கி விம்மலாக மாறியதே தவிர, அவனது வெறித்த பார்வையில் எந்த மாற்றமும் இல்லை.

ஏனோ ஸ்ரீராமின் அந்த நிலையைப் பார்க்கப்பார்க்க அசோக்கின் நெஞ்சுக்குள் கத்தி சொருகுவது போல ஒரு வலி பிறந்தது.

"தெருவில் நின்று இப்படிப் பைத்தியக்காரன் போல அழுவதற்காகவா, இத்தனை வருடங்கள் அவன் ஊண் உறக்கமின்றி ஓடி ஓடிச் சம்பாதித்தான்?" என்ற கேள்வி அசோக்கின் மனதை ஏனோ பிசைந்தது.

அசோக் பரிதாபத்தோடு ஸ்ரீராமை அணைத்து ஆறுதல் சொல்ல முயன்றான். ஆனால், அந்தத் தொடுதல் ஸ்ரீராமுக்கு ஏதோ ஒவ்வாமையைத் தருவது போல இருந்தது. அவனது நினைப்புகளும் எண்ணங்களும் அசோக்கின் அணைப்பை ஏற்க மறுத்தன. அவனைச் சட்டென விலக்கித் தள்ளிய ஸ்ரீராம், சிவந்த கண்களோடு சொன்னான்:

"இப்ப நான் ஓகே... நீங்க வீட்டுக்குப் போங்க அசோக்."

"இல்ல ஸ்ரீராம், உங்களை இந்த நிலைமையில நான் தனியா விட்டுட்டுப் போக முடியாது. வாங்க, நானே உங்களை அழைச்சிட்டுப் போய் வீட்ல விடுறேன்," அசோக் விடாப்பிடியாகக் கெஞ்சினான்.

"இல்ல! நீங்க முதல்ல வீட்டுக்குப் போங்க. நான் இப்போதைக்கு வரமாட்டேன்," என்று ஸ்ரீராம் மிகத் தீர்மானமாக, அதே சமயம் உடைந்துபோன குரலில் கூறினான்.

அசோக் நகர மனமில்லாமல், செய்வதறியாது அங்கேயே சிலையாக நின்றிருந்தான்.

"தயவுசெஞ்சு இந்த இடத்தை விட்டுப் போங்க! என்னைத் தனியா விடுங்கன்னு சொல்றேன்ல!" என்று ஸ்ரீராம் ஆத்திரத்தில் கத்தவும், அதற்கு மேல் அங்கு நின்றால் அவன் இன்னும் மோசமாவான் என்று அஞ்சி, அசோக் கனத்த இதயத்தோடு அவனைத் தனியே விட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

ஸ்ரீராம் மெல்ல நிமிர்ந்து தன்னைச் சுற்றி இருப்பவர்களைக் கசப்போடு பார்த்தான். வேடிக்கை பார்ப்பவர்களின் பார்வையில் தான் ஒரு பைத்தியமாக உருவகப்படுத்தப்படுவதை அவனது ஆழ்மனம் உணர்ந்தது. தன் நிலையை நினைத்து அவனுக்கே ஒரு விரக்தியான சிரிப்பு வந்தது.

"யாருன்னே தெரியாதவங்க பார்வையில நான் இப்போ பைத்தியமாத் தெரியுறேன். ஆனா, இத்தனை வருஷமா எனக்காக இதே வீட்ல காத்துக்கிட்டு இருந்தாளே அவ... அவ முன்னாடி நான் எப்படித் தெரிஞ்சிருப்பேன்? அவ என்னைப் பத்தி என்னென்ன நினைச்சிருப்பா? தினம் தினம் நான் மாறி வருவேன்னு நம்பிக்கையோடக் காத்துக்கிட்டு இருந்தவளை, இன்னைக்கு 'நீயே வேணாம்'னு விவாகரத்து பண்ற நிலைமைக்குக் கொண்டு வந்து நிறுத்திட்டேனே... எனக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்கன்னே தெரியாமல் இத்தனை வருஷம் வாழ்ந்திருக்கேனே, நான் உண்மையில் பைத்தியம் தானே?

பொண்டாட்டி பிள்ளைகளை பத்தித் துளிகூட தெரிஞ்சுக்காம ஓடிய நான் உருப்படியானவன் இல்ல... பைத்தியம் தான்!" என்று உரக்கத் கத்திக்கொண்டே, ஆத்திரத்தில் தன் தலையில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டான்.

அப்போது, நரைத்த கூந்தலும் கனிவான பார்வையும் கொண்ட ஒரு வயதான பெண்மணி மெல்ல அவன் அருகில் வந்தார். அவன் அந்த இடத்தில் அமர்ந்து கதறிய ஆரம்பத்திலிருந்தே கவனித்துக் கொண்டிருந்த அந்தத் தாய்க்கு, அவன் அனுபவிக்கும் மன அழுத்தம் என்னவென்று புரிந்தது.

அருகில் வந்து வாஞ்சையோடு பேசத் தொடங்கினார்:
"தம்பி... உனக்கு என்ன பிர்ச்சனைன்னு எனக்குத் தெரியாது. அதுக்காக இப்படி நடுரோட்டுல உட்கார்ந்து அழுதுகிட்டிருக்கிறது எதற்கும் தீர்வாகாதுப்பா. உன் பிரச்சனையை நீதான் நின்னு சரி பண்ணிக்கணும். அழுவுறதால மட்டும் எந்தப் பிரச்சனையும் தானா சரியாகிடாது. நீ ஒன்னும் விவரம் தெரியாத சின்னப் பையன் இல்ல, நல்லா விவரம் தெரிஞ்ச நிதானமான ஆளுதானே? இப்படி நடுரோட்டுல உட்கார்ந்து சின்னப் புள்ளைங்க மாதிரி அழுதா எப்படி? நீ குழந்தையா? உன் புள்ளைங்க உன்னை இந்த மாதிரி பார்த்தா என்ன நினைக்கும்? ஒரு அப்பன்காரன் இப்படி வீதியில உட்கார்ந்து அழுதுட்டு இருக்கானேன்னு அதுங்களுக்கு அசிங்கமா இருக்காதா? நீ ஏதோ பெரிய மன உளைச்சல்ல இருக்கிறன்னு எனக்குப் புரியுது தம்பி. ஆனா ஒன்னு தெரிஞ்சுக்கோ... இந்த உலகத்துல சரி பண்ணவே முடியாத பிரச்சனைன்னு எதுவுமே கிடையாது.”

இதயங்களின் தேடல்
அவரின் ஒவ்வொரு வார்த்தையும் சவுக்கடியாய் விழ, அந்தச் சொற்களை அப்படியே உள்வாங்கிக் கொண்டு ஸ்ரீராம் சிலையென அமர்ந்திருந்தான். சுற்றியுள்ள உலகமே இயங்கிக் கொண்டிருந்தாலும், அவன் மட்டும் ஒரு சூனியத்தில் உறைந்து போயிருந்தான்.

அவன் தோளை உலுக்கிய அந்தப் பாட்டி, "டேய் லூசாடா நீனு? கிளிப்பிள்ளைக்கு சொல்ற மாதிரி இவ்வளவு தூரம் எடுத்துச் சொல்றேன்... ஆனா நீ என்னடான்னா எருமை மாடு மாதிரி மரக்கட்டையாட்டம் உக்காந்து இருக்க! இப்படியே சாகுற வரைக்கும் அழுதுகிட்டே இருக்கப் போறியா? உன் முகத்தை பார்த்தாலே தெரியுதுடா, தப்பு உன் பக்கம் தான் இருக்குன்னு. என்ன... பொண்டாட்டியோட சண்டையா? போடா... போ! அவ கால்ல விழுந்தாவது அவளைச் சமாதானம் பண்ணி, அவ கூட சேர்ந்து வாழுற வழியைப் பாரு. சாகுற வரைக்கும் கூட இருக்கிறது பொண்டாட்டி தான்டா. உனக்கு ஒண்ணுன்னா அவதான் முதல்ல துடிப்பா. காசு இருக்கோ இல்லையோ, இருக்கிறதை வச்சு உன் கூடவே வாழ்வாடா அவ. அவகிட்ட கோபிச்சுக்கிட்டுப் வந்து நீ என்னத்தை சாதிக்க போற? அவளைக் கஷ்டப்படுத்தி நீ எப்படிடா சந்தோஷமா வாழப் போற?"

பாட்டியின் குரல் கம்மியது, "ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்கோ... ஒரு வீட்ல பொம்பளை சந்தோஷமா இல்லைன்னா, அந்த வீடே சந்தோஷமா இருக்காது. நீயும் நிம்மதியா வாழ முடியாது. இதுவரைக்கும் நீ எப்படி வாழ்ந்தியோ அதையெல்லாம் தூக்கி ஓரங்கட்டி வை. இனிமேலாவது உன் பொண்டாட்டி கூட சந்தோஷமா வாழ்வதற்கு என்ன வழின்னு தேடி ஓடு. அவளைச் சமாதானம் பண்ணி அவ கூட வாழ்வதை பாரு. இப்படி நடு ரோட்டுல அசிங்கமா அழுதுகிட்டு இருக்காத... எந்திரி!" என்று உரிமையோடு அவன் தலையில் ஒரு தட்டுத் தட்டி எழுப்பி விட்டார்.

"ஆம்... இதுவரை என் வாழ்வு ஒரு சிதைந்த காகிதத்தைப் போலச் சீரற்றுத்தான் இருந்தது. இனி இதை நான் சரி செய்ய வேண்டும். எனக்காக இல்லாவிட்டாலும், எனக்காகவே தேய்ந்து போன என்னவளுக்காகவும், என் இரத்தமான என் குழந்தைகளுக்காகவும் நான் வாழ வேண்டும்."

தொடரும்.....
 
அருமையான பதிவு 😍😍😍😍😍😍

ஸ்ரீராம் அவன் ஆத்தாக்காரியை ஒருவார்த்தைனாலும் திருவார்த்தையா கேட்டுட்டான்
 
Last edited:

Very interesting and nice 👌
 
Advertisement

Advertisement

Back
Top