மனைவி - 28
நன்றியோடு அந்தப் பாட்டியை ஏறிட்டான். அவர் கைகளை இறுகப் பற்றிக் கொண்டான். "ரொம்ப நன்றி பாட்டி... சரியான நேரத்துல எனக்குச் சரியான அறிவைக் கொடுத்திருக்கீங்க. இதுவரைக்கும் நான் என் மனைவிக்கு நல்ல புருஷனாவும் இல்லை, என் பிள்ளைகளுக்குப் பொறுப்பான அப்பனாவும் இல்லை. இனிமேல் அவங்களுக்காக மட்டுமே நான் வாழப் போறேன். தேங்க்ஸ் பாட்டி!"
உடைந்த மனதை ஒட்ட வைத்த மகிழ்ச்சியில் அவரிடம் விடைபெற்றுக் கிளம்பினான். உண்மையில் இந்த ஆறுதல் வார்த்தைகளை, வழிநடத்தும் புத்தியை அவன் தாய் அவனுக்குக் கூறியிருக்க வேண்டும்.
ஆனால், மகனின் வாழ்க்கையை தன் கைகளால் மொத்தமாகச் சிதைத்துவிட்டு, இன்னமும் அந்தத் தாய் தன் நாடகத்தை நிறுத்தாமல் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறாளே என்பதை நினைக்கையில் அவன் நெஞ்சு விம்மியது.
வேகவேகமாக அந்தத் தெருவிற்குள் வந்தான் ஸ்ரீராம். ஆனால் வந்த பிறகுதான் உறைத்தது, எங்கே செல்வது? யாரைப் பார்ப்பது? ராதையை எங்கே தேடுவது என்று அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. எதைப்பற்றியும் யோசிக்காமல் உணர்ச்சி வேகத்தில் ராதையின் வீட்டைத் தேடி வந்தவனுக்கு, இப்போது அடையாளங்கள் தடுமாறின.
திருமணத்திற்கு முன்பு பத்திரிகை கொடுப்பதற்காக ஒரே ஒரு முறை அந்த வீட்டிற்கு வந்திருக்கிறான். அதுவும் இருள் படர்ந்த இரவில் வந்தவன், அதன் பிறகு அந்தத் திசை பக்கம் கூடத் தலைவைத்துப் படுத்ததில்லை. அவன் வரவில்லை என்பதை விட, அவனது அன்னை கலை அவனை அந்தப் பக்கம் வர விட்டதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
வழிதவறித் தவிக்கும் ஒரு சிறு குழந்தையைப் போல அந்தத் தெருவின் நடுவே நின்றான் ஸ்ரீராம். எந்தப் பக்கம் திரும்புவது, அவள் வீட்டை எப்படி அடையாளம் காண்பது என்று திகைத்து நின்றவனைப் பார்த்து, அங்கிருந்த முதியவர் ஒருவர் கேட்டார்.
"என்னப்பா பண்றீங்க? யார் நீ? ரொம்ப நேரமா இங்கயே நின்னு சுத்திச் சுத்திப் பார்க்கிறியே?" - கிழங்கு விற்றுக் கொண்டிருந்த அந்தத் தாத்தாவின் குரலில் ஒருவித சந்தேகம் தென்பட்டது.
"தாத்தா... இங்க ராதை வீடு எதுன்னு தெரியுமா உங்களுக்கு?" என்று கேட்டான் ஸ்ரீராம்.
அந்தத் தாத்தா அவனை மேலிருந்து கீழ் வரை ஏறி இறங்கப் பார்த்தார். "ஏம்பா... இந்த உச்சி வெயில்ல இப்படி வந்து நின்னுகிட்டு எனக்குக் கடுப்பேத்தாத! இங்க ஆயிரம் ராதை இருப்பாங்க... எந்த ராதையைத் தேடுற நீ?" என்று சிடுசிடுத்தார்.
அவனுக்குத் தன் மனைவியின் பெயர் மட்டுமே தெரிந்திருந்தது. மாமியார் பெயரோ, அவள் அண்ணன் பெயரோ சட்டென்று நினைவுக்கு வரவில்லை. விரக்தியுடன் அங்கிருந்து நகர்ந்து நடந்தான். ஆனால் அவனின் நல்ல நேரம், எதிரே கனகவள்ளி வந்து கொண்டிருந்தார்.
மருமகனை அந்தத் தெருவில் கண்டதும் கனகவள்ளி க்கு ஒரு நிமிடம் மூச்சே நின்றுவிட்டது. தன் மகளின் விவாகரத்துத் தாளாமல், அது நடந்துவிடக் கூடாது என்று ஒவ்வொரு தெய்வமாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தார் அவர். இப்போதும் கோவிலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய போதுதான், தன் மருமகனை நேரில் கண்டார்.
"மாப்பிள்ளை! எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை?" என்று பதற்றமும் பயமும் கலந்த குரலில் அவர் ஓடி வந்து கேட்க, ஸ்ரீராம் அவரை ஒரு அந்நியனைப் போலப் பார்த்தான்.
அவனுக்கு அவரை அடையாளமே தெரியவில்லை. கடைசியாக அவரைப் பார்த்துப் பத்து வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. "நீங்க யாரு?" என்று அவன் கேட்ட அந்த ஒற்றைக் கேள்வி, கனகவள்ளியின் நெஞ்சை கிழித்தது.
ஒரு நிமிடம் அவர் நிலைகுலைந்து போனார். அடையாளம் கூடத் தெரியாத ஒரு மனிதனைப் போய் 'மாப்பிள்ளை' என்று உரிமை கொண்டாடியது என் தவறுதான் என்று உள்ளுக்குள் நொறுங்கிப் போனார்.
"நான்... நான் ராதையோட அம்மாப்பா..." என்று குரல் கம்மக் கூறினார்.
கண்களில் கண்ணீர் திரையிட, "என் பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு மாப்பிள்ளை. அவ எந்தத் தப்பும் பண்ண மாட்டா. தனக்கு வலிச்சா கூட அந்த வலி வெளியே தெரிய கூடாதுன்னு நினைக்கிறவ. அவளை நான் அப்படி வளர்த்துட்டேன். உனக்கு அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்ததுதான் நான் செஞ்ச பெரிய தப்பு. வேற யாருக்காவது அவளைக் கட்டிக் கொடுத்திருந்தா கூட என் பொண்ணு ராணி மாதிரி வாழ்ந்திருப்பா. அவ வாழ்க்கையை நானே என் கையால வீணாக்கிட்டேன். இப்போ அவ எங்க இருக்கான்னு தெரியலை... எப்படி இருக்கான்னு தெரியலை... நீங்களாவது நல்லா இருங்க," என்று புடவை முந்தானையில் தன் ஆற்றாமையைத் துடைத்துக் கொண்டு அங்கிருந்து நகர முயன்றார்.
"அத்தை!"
அந்த ஒற்றை அழைப்பு அவரை ஆணி அடித்தது போல அதே இடத்தில் நிறுத்தியது.
இவர் தானா அழைத்தது? இவரது வாயிலிருந்து தானா 'அத்தை' என்ற சொல் வந்தது? கனகவள்ளி க்கு அது ஒரு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
"அத்தை... ராதை எங்க இருக்கா? சொல்லுங்க அத்தை," என்று ஆவலாக கேட்டான்.
"எங்க இருக்கான்னு கூட உங்களுக்குத் தெரியாதா மாப்பிள்ளை?" அவர் குரல் கசப்பில் தோய்ந்திருந்தது.
'இப்படிப்பட்ட ஒரு மனிதனுக்காகவா என் பெண் பதிமூன்று வருடங்கள் தவம் கிடந்தாள்? தன் சொந்தப் பிள்ளைகளைக் கூடப் பார்க்க விடாமல் விரட்டியடித்தானே... அவளின் இளமையையும் அழகையும் இந்த மனிதன் காலடியில் அல்லவா தொலைத்துவிட்டாள்!' என்று எண்ணிப் புழுங்கினார். பதில் சொல்லத் திராணியற்று அழுது கொண்டே நடந்தார்.
"அத்தை... அத்தை... சொல்லுங்க அத்தை! ராதை எங்க இருக்கான்னு சொல்லுங்க!" அவன் கெஞ்சிக் கொண்டே அவர் பின்னால் ஓடினான்.

"எனக்குத் தெரியாது! என் பொண்ணு எங்க இருக்கான்னு எனக்குத் தெரியாது! உங்க வீட்ல இருந்து அவ அடிபட்டுத் துரத்தப்பட்டு எங்களைத் தேடி வந்தப்போ, அவளுக்குப் புகலிடம் கொடுக்க எங்களுக்கும் தெம்பில்லை. அன்னைக்கு குழந்தைகளைத் அழைச்சிட்டு போனவ தான்... அவ எங்க இருக்கா, என்ன பண்றான்னு எதுவுமே எங்களுக்குத் தெரியாது. அவளை விட்டுடுங்க மாப்பிள்ளை! இனிமேலாவது அவ தன் பிள்ளைகள் கூட நிம்மதியா இருக்கட்டும். உங்க அம்மா கிட்டயும் உங்ககிட்டயும் அவ பட்ட கஷ்டம் போதும். போதாக்குறைக்கு எங்ககிட்டயும் கஷ்டப்பட்டு அவ வாழ்க்கையே நாசமாப் போச்சு. இனியாவது அவளை வாழ விடுங்க!" என்று கதறியவர் வீட்டிற்குள் புகுந்து கொண்டார்.
மருதுபாண்டி தன் தாயின் அழுகைச் சத்தம் கேட்டு வெளியே வந்தான். அங்கே ஸ்ரீராம் நிற்பதைக் கண்டதும் அவன் முகம் ஆத்திரத்தில் சிவந்தது. ஸ்ரீராம் ஏதோ பேச முயன்று முன்னால் வர, மருதுபாண்டி வெறுப்புடன் 'டமார்' என்று கதவைச் சாத்திவிட்டு உள்ளே சென்றான்.
அந்தக் கதவுச் சத்தம் ஸ்ரீராமுக்கு உணர்த்தியது ஒன்றுதான் இனி இங்கு நிற்பதில் பயன் இல்லை.
ராதையின் நிலையை நினைக்கையில் அவன் கண்கள் குளமாயின.
"நானும் அவளைப் பார்த்துக்கலை... என் குடும்பமும் அவளை மதிக்கலை... இப்போ பிறந்த வீடும் கைவிட்ட நிலையில், அவ அந்த இரண்டு குழந்தைகளையும் வச்சுக்கிட்டு எங்கே போயிருப்பா? என்ன நிலைமையில் இருப்பா?" முதல் முறையாக அவன் இதயம் ராதைக்காகத் துடித்தது. அவளைப் பற்றிய நினைவுகள் அவன் மூளையைக் குடைந்து எடுத்தன.
எப்படி அவளைக் கண்டுபிடிப்பது என்று தெரியாமல் திக்குமுக்காடி நின்றவனுக்குப் பிரபாகரனின் நினைவு வந்தது.
அவருக்குத் தெரியும், ராதை எங்கே இருக்கிறாள் என்று. பதற்றத்துடன் தன் சட்டையில் கைவிட்டுத் தேடினான். அப்பொழுதுதான் உறைத்தது, அவனிடம் போன் இல்லை என்பது.
யாரிடமாவது வாங்கிப் பேசலாம் என்றால், அவனுக்கு எந்த எண்ணும் மனப்பாடமாகத் தெரியவில்லை. தன் மீதே அவனுக்கு அளவில்லாத ஆத்திரமும் வெறுப்பும் வந்தது.
பக்கத்திலிருந்த மரத்தில் தன் கை முட்டி பலமாக மோதும் படி ஓங்கி ஒரு குத்து விட்டான். தோல் கிழிந்து இரத்தம் வழிந்தது. ஆனால் அந்த வலி அவன் மன வலியைக் காட்டிலும் பெரிதாகத் தெரியவில்லை.
"அவர் வேலை செய்ற ஆபீஸ் எங்க இருக்குன்னு கூட எனக்குத் தெரியாதே!"
ஸ்ரீராமுக்கு இப்போதுதான் தன் சுயரூபம் புரிந்தது. தன்னை நினைத்துத் தானே கசப்புடன் சிரித்துக் கொண்டான்.
மனைவி வீட்டை அடையாளம் தெரியவில்லை, பிள்ளைகள் வளர்ந்தது தெரியவில்லை, அம்மாவின் சுயரூபம் தெரியவில்லை, கூடப்பிறந்த தங்கைகள், அவர்களின் கணவர்கள் என்று எவரைப் பற்றியும் அவனுக்கு எந்த அக்கறையும் இருந்ததில்லை.
இத்தனை வருடங்களாக அவன் தெரிந்து வைத்திருந்தது ஒன்றே ஒன்றுதான், தன் தாய்!
அவர் பேச்சை கேட்பது, சம்பளத்தை அப்படியே அவர் கையில் கொடுப்பது, அவருக்காக மாடாய் உழைப்பது... இதுதான் வாழ்க்கை என்று வாழ்ந்து வந்த தன் முட்டாள்தனத்தை இந்த நொடி உணர்ந்தான்.
"இதுக்காகவா என் அம்மா என்னை இப்படி ஒரு ஜடமாக ஆக்கினாங்க? அவங்க பாசம் உண்மைன்னு நம்பி, இன்னைக்குச் சொந்த வாழ்க்கையே இல்லாம நடுத்தெருவுல நிக்கிறேனே... எனக்கு ஏன் இப்படி ஒரு துரோகத்தைப் பண்ணாங்க?" அவன் மனம் பாரமாகி இறுகியது.
ஆனாலும் அவன் மனம் சோர்ந்து விடவில்லை. அந்தத் துரோகத்தின் வலியை விட, தன் குடும்பத்தை மீட்க வேண்டும் என்ற வைராக்கியம் அவன் கண்களில் மின்னலாய்த் தெறித்தது. எப்பாடுபட்டாவது அவர்களைக் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினான்.
"இன்னைக்கு வீட்ல பெரிய சண்டையே நடக்குமோ?" என்று சொக்கன் தன் மனதுக்குள் இருந்த நடுக்கத்தை நாவிற்கு கொண்டு வந்து சந்தேகமாகக் கேட்க,
பிரபா ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு சொன்னான்,
"அப்படி எல்லாம் எதுவுமே நடக்காதுங்க. ஏன்னா ஸ்ரீராம் குணம் அப்படி. அவங்க அம்மா அவனை அந்த மாதிரி வளர்த்து வச்சிருக்காங்க. அவனுக்கு வெளியுலகம் எதுவுமே தெரியாது, ஏன்... தன் மனசுல இருக்கிற கோபத்தைக் கூட அவனுக்கு முழுசா வெளியே காட்டத் தெரியாது. அதுவும் அவங்க அம்மாகிட்ட அவன் இதுவரைக்கும் கோபப்பட்டுப் பேசினதே கிடையாது. இப்போ அவன் மனசுக்குள்ள ஆயிரம் எரிமலை வெடிச்சாலும், அதை அவனால் அவங்க முன்னாடி காட்ட முடியாது. அப்படியே எல்லாத்தையும் உள்ளேயே வச்சுக்கிட்டு அமைதியாத்தான் இருப்பான்."
சொக்கனின் கண்கள் கலங்கின, "அப்போ... ராதை வாழ்க்கை மறுபடியும் சரியாகாதா பிரபா?"
"கண்டிப்பா சரியாகும். நம்ம இப்பதான் உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கோம்.
ஆமா, அவன் அம்மாகிட்ட கோபப்பட மாட்டான்னு சொன்னேனே தவிர, அவன் இன்னமும் பழையபடி 'அம்மா பிள்ளை'யாவே இருப்பான் அப்படின்னு சொல்லல. இந்நேரம் அவன் தன்னைச் சுத்தி இருக்குறவங்களை புரிஞ்சிருப்பான்.
தன்னோட ரத்தமான குழந்தைகளையும், உயிரா நினைக்க வேண்டிய ராதையையும் தேடிக்கிட்டுதான் இருப்பான். நீங்க வேணா பாருங்க…”
“ நீங்க போயி இப்போ அவரை இங்கே கூட்டிட்டு வந்துடுங்களேன்." என சொக்கன் கேட்க,
அதற்கு பிரபா உறுதியான குரலில் சொன்னான்,
"வேண்டாம்... அவன் கொஞ்சமாவது கஷ்டப்படட்டும். ரொம்ப ஈஸியா இவங்க ரெண்டு பேரையும்
நான் சேர்த்து வச்சுட்டா, அந்த ஸ்ரீராமுக்கு ராதையோட அருமை கடைசி வரைக்கும் தெரியாமலே போயிடும்.
தொடரும்.....