மனைவி - 29
அவன் செஞ்ச தப்பு சின்னது கிடையாது... இத்தனை வருஷம் அந்தப் பொண்ணை ஒரு ஓரமா ஒதுக்கி வச்சுருந்தானே, அந்த வலிக்கு அவன் கொஞ்சமாவது துடிக்கட்டும். இப்போ அந்தத் தேடல் அவனுக்குள்ள இருக்கட்டும்; தேடி அலையட்டும். அவனா என்னைத் தேடி வரட்டும், அதுக்கப்புறம் நம்ம அடுத்தடுத்த கட்டத்தை யோசிக்கலாம்."
"அப்போ இந்த டிவோர்ஸ் விஷயம் என்ன ஆகும்?"
"இனிமேல் டிவோர்ஸ் பத்தி பேச்சுக்கே இடம் இல்லை. ஸ்ரீராம் அதை இனி நடக்க விடமாட்டான். இந்த டிவோர்ஸ் அவனே ஓடிப்போய் வாபஸ் வாங்கிப்பான் பாருங்க."
சொக்கன் ஏக்கத்துடன் சொன்னார், "எப்படியோ பிரபாகரன்... ராதையும் அந்தப் பிஞ்சுப் பொண்ணுங்களும் இனிமேலாவது நிம்மதியா வாழணும். அவங்க அனுபவிச்ச கஷ்டம் இந்த ஒரு ஜென்மத்துக்குப் போதும்."
"ஸ்ரீராமும் ஒரு பக்கம் கஷ்டப்பட்டுட்டு தான் இருக்கான். அவன் மேல எனக்குக் கோபமா இருந்தாலும், அவனும் இதுவரைக்கும் நிம்மதியா வாழல, சொல்லப்போனா அவனுக்கு வாழத் தெரியல.
இப்போதான் அவனுக்குள்ள 'வாழணும் என்கிற ஆசை துடிக்குது. அப்படிப்பட்டவனை நாம இனி தடுத்து வைக்கக் கூடாது, எப்படியாவது அவங்களைச் சேர்த்து வைக்கணும்."
பிறகு சொக்கன் கிளம்பத் தயாரானான், "எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு பிரபா, நான் கிளம்புறேன். எனக்கும் இவங்க எல்லாரும் ஒரு முழு குடும்பமா சேர்ந்து வாழணும் தான் ஆசையா இருக்கு. ஸ்ரீராம் திருந்தி இவங்களை ஏத்துக்கிட்டா அதுவே எனக்குப் போதும். அந்த ரெண்டு பெண் பிள்ளைகளுக்கும் அப்பாங்கிற உறவு ரொம்ப முக்கியம். அன்னைக்கு கோர்ட்ல அந்த ரெண்டு பிள்ளைகளும் தங்களோட அப்பாவை ஏக்கத்தோட பார்த்தாங்களே... அப்போ என் உயிரே போயிருச்சு. இது தன் ரத்தம், தன் பிள்ளைங்கன்னு கூட அடையாளம் தெரியாத அளவுக்கு ஒரு முட்டாளை நான் உலகத்துல பார்த்ததே இல்லை.”
"யாராலயும் பார்க்க முடியாது... இவனுங்க எல்லாம் ஏதோ அரிதா கிடைக்கிற விசித்திரமான பொருள் மாதிரி. அம்மா பிள்ளையா இருக்கலாம், அதுக்காக இப்படியா ஒரு மனுஷன் மோசமா இருக்கிறது?" என்று வருத்தப்பட்டார் பிரபா.
பிரபாகரன் சட்டென ஒரு கேள்வியைக் கேட்டான், "இந்தக் கல்யாணம் முதல்ல எப்படி நடந்துச்சு சொக்கன்? ஸ்ரீராமுக்கும் ராதைக்கும் யாரு கல்யாணம் பண்ணி வச்சது?"
சொக்கன் பழைய நினைவுகளில் மூழ்கினார், "அந்த மருதுபாண்டி தான் முன்ன நின்னு கல்யாணம் பண்ணி வச்சான். ஆனா மாப்பிள்ளை யாரு, அவனோட பின்னணி என்னன்னு யார்கிட்டயும் சொல்லல. திடீர்னு ஒரு நாள் அவனே எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு, கல்யாணப் பத்திரிகையை மட்டும் கொண்டு வந்து கையில கொடுத்தான். நாங்க எவ்வளவோ கேள்வி கேட்டோம். ஆனா அவன், 'மாப்பிள்ளை நல்லா படிச்சவன், தங்கம் போன்ற குணம், நல்ல குடும்பம், இதைவிட என்ன வேணும்? நான் தீர விசாரிச்சு தான் முடிவு பண்ணிருக்கேன் னு சொன்னான். அப்பக்கூட கல்யாணப் பத்திரிகையை முகூர்த்தத்துக்கு முதல் நாள்தான் எல்லார்கிட்டயும் கொடுத்தான். ஆனா ராதைக்கு இதுல துளி கூட விருப்பம் இல்லை, 'எனக்கு இந்தக் கல்யாணமே வேணாம்’னு அவ சண்டை போட்டதா நான் கேள்விப்பட்டேன்."
"சரி... இனி முடிஞ்சதை நினைச்சுப் பேசி எந்தப் பயனும் இல்லை. இனி நடக்கப் போறது எல்லாம் நன்மையாகவே முடியும்னு நம்புவோம் பிரபாகரன்."
"நிச்சயமா... இனி எல்லாம் நல்லதாவே நடக்கும். ஸ்ரீராம் இப்போ காயப்பட்டிருக்கான், அவன் வாழ்க்கையைத் திருத்திக்க அவனே போராடுவான். நீங்க கிளம்புங்க சொக்கன், இங்க என்ன நடந்தாலும் நான் உங்களுக்குத் தகவல் சொல்றேன். நீங்க செஞ்ச உதவிக்கும், செய்யப் போறதுக்கும் நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கிறேன்."
"இதெல்லாம் என்ன பெரிய விஷயம்... அந்தப் பிள்ளைகளோட முகத்துல ஒரு சிரிப்பு தெரிஞ்சா போதும்" என்று சொன்னவர் தன் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பிச் சென்றார்.
மறுபக்கம்...
அந்த இரவு நீண்டுகொண்டே இருந்தது. சாலைகள், வீதிகள், சந்து பொந்துகள் என ஸ்ரீராம் ஒரு பித்தனைப் போல அலைந்தான். கால்கள் தேய்ந்து போனது அவனுக்குத் தெரியவில்லை.
'வீட்டிற்குச் செல்ல வேண்டும்' என்ற எண்ணமே அவனுக்குத் தோன்றவில்லை.
'இனி அந்த நாலு சுவற்றுக்குள் நான் போனா, என் குடும்பத்தோடு தான் போவேன்' என்று வைராக்கியம் கொண்டான்.
அவன் அனுபவித்த அந்த ஒரு இரவின் வேதனைக்கு ஈடாக உலகில் வேறு எந்த வார்த்தையையும் சொல்ல முடியாது.
ஒவ்வொரு தெருவிலும் அவன் தேடும்போது, அவன் கண்கள் குளமானது.
'எனக்காக அவள் இத்தனை வருஷம் இப்படித்தானே துடிச்சிருப்பா? ஒவ்வொரு நாளும் வாசலையே பார்த்துக்கிட்டு இருந்தவளுக்கு நான் ஏமாற்றத்தை மட்டும்தானே கொடுத்திருக்கேன்...' என்று அவன் மனம் கதறியது.
கடந்த காலத்தில் ராதை அனுபவித்த ஒட்டுமொத்த வலியையும், அவன் இந்த ஒரே இரவில் அனுபவித்துக் கொண்டிருந்தான்.
ஒரு கட்டத்தில் உடல் அவனுக்கு ஒத்துழைக்க மறுத்தது. கால்களில் பலம் இழந்தது, தலை சுற்றி மயக்கம் வருவது போல் இருக்க, தட்டுத்தடுமாறி அருகில் இருந்த ஒரு பழைய கோவில் வாசலில் வந்து அமர்ந்தான். கோவில் கதவுகள் பூட்டப்பட்டிருந்தாலும், அதன் வெளித் திண்ணையில் சாய்ந்தவனுக்குக் கண்ணீர் அணையை உடைத்துக் கொண்டு வெளியேறியது.
"எப்படியாவது உங்களைக் கண்டுபிடிச்சிடுவேன்... என் பொண்ணுங்க முகத்தை நான் ஒரு வாட்டியாவது பார்த்தே ஆகணும். நான் யாருன்னு தெரிஞ்சும் அவங்க தனியா இருந்தப்போ என்னைப் பத்தி என்ன நினைச்சிருப்பாங்க?
'எங்க அப்பா ஏன் எங்களைப் பார்க்க வரல? ஏன் எங்களைத் தேடல?'ன்னு அந்தப் பிஞ்சு மனசுங்க எவ்வளவு துடிச்சிருக்கும்?" என்று நினைக்க நினைக்க அவன் இதயமே ரத்தமாக வடிவது போல் பாரமாக உணர்ந்தான்.
பிரபாகரன் மொட்டை மாடியில் நிலவு வெளிச்சத்தில் அந்தப் பாழாய்ப்போன இரவைப் பார்த்தபடி சிலையாக நின்று கொண்டிருந்தான்.
"மாமா..." என்று ஒரு மெல்லிய குரல் பின்னாடி இருந்து கேட்டது.
நீண்ட பெருமூச்சு விட்டு திரும்பினான். "நீ இன்னும் தூங்கலையா ரேணுகா?"
"இன்னைக்கு கோர்ட்ல என்ன ஆச்சு மாமா? விவாகரத்து கிடைச்சிருச்சா?" என்று ரேணுகா மெதுவான குரலில் கேட்டாள்.
"இல்ல ரேணுகா... ஸ்ரீராம் அங்கேயே மயங்கி விழுந்துட்டான்."
"சீதாவைப் பத்தியும், மகாவை பத்தியும் அவர் தெரிஞ்சுகிட்டாரா? குழந்தைகள்கிட்ட பேசினாரா? அந்தப் பிள்ளைங்க அப்பாவைப் பார்த்தாங்களா?"
"உண்மையை அவன் இப்போ முழுசா தெரிஞ்சுகிட்டான். அந்த அதிர்ச்சியில் தான் மயங்கி விழுந்துட்டான்."
"அதுக்கப்புறம் அவர் தேடி வரலையா?" ரேணுகா சந்தேகமாக கேட்டாள்.
"அவன் இப்போ எங்க இருக்கான்னு தெரியல, ஆனா அவன் வீட்ல இல்லைங்கிறது மட்டும் நிச்சயம்."
"பாவம் மாமா அந்த ரெண்டு குழந்தைகளும். அதுலயும் ராதா அக்கா எவ்வளவு பாவம்... இத்தனை வருஷம் அந்த மனுஷனுக்காகத் தவம் இருந்துட்டு, இப்போ இப்படி ஒரு அசிங்கத்தை அவங்க பார்த்திருக்கக் கூடாது."
"என்ன பண்றது? ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலயும் கடவுள் என்ன எழுதி வச்சிருக்காரோ அதுதான் நடக்கும். நம்ம நினைக்கிறது எல்லாம் அப்படியே நடந்துராது."
"சரி... நீங்க வந்து சாப்பிடுங்க மாமா. கண்டிப்பா ராதா அக்கா பிரச்சனை சீக்கிரம் சரியாயிடும்."
"எனக்கு இனிமேல் ராதாவைப் பத்தி பயமில்லை ரேணுகா. ஸ்ரீராம் எல்லாத்தையும் பார்த்துப்பான். ஆமா, நீ எதுக்கு இப்போ மேல வந்த? ஐஸ்வர்யா என்ன பண்றா? பாப்பாவைத் தனியா விட்டுட்டு வந்தியா?"
"ஐஸ்வர்யா தூங்கிட்டா மாமா, சத்தியன் அவ கூட தான் இருக்கா. நீங்க இன்னும் சாப்பிடாம இருக்கீங்களேன்னு உங்களைக் கூப்பிடத்தான் வந்தேன்."
"எனக்கு சாப்பாடு வேண்டாம் ரேணுகா... நீ போய் படு."
"மனசுல ஆயிரம் கஷ்டம் இருக்கலாம் மாமா, ஆனா அதுக்காக வயிற்றை பட்டினி போடக்கூடாது. தயவு செஞ்சு கொஞ்சம் சாப்பிட்டு அப்புறம் வந்து படுங்க."
தன்னைப் பற்றி இவ்வளவு அக்கறையோடு பேசும் அந்தப் பெண்ணைப் பார்க்கும்போது பிரபாகரனின் உள்ளம் பிசைந்தது.
இவனை யார் உயிரா நினைச்சு நிக்கணுமோ, அவளோ இவனைப் பத்தின நினைப்பே இல்லாம இருக்கா. பிரபாகரன் கண்கள் கலங்கின. அவன் முதுகு காட்டி நின்று கொண்டிருந்ததால் ரேணுகாவிற்கு அது தெரியவில்லை.
"மாமா... ப்ளீஸ், வந்து கொஞ்சமா சாப்பிடுங்க" என்று அவள் கொஞ்சலாக கேட்க,
"சரி போ... நான் வர்றேன்" என்று அவளை அனுப்பி வைத்தான். அவள் போனதும் தன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு குலுங்கி அழுதான்.
அவன் செய்த ஒவ்வொரு பிழையும் அவனைத் தீயாக சுட்டது. யாரை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு இன்னொருத்தியை திருமணம் செய்தானோ, அவளோ இவனுக்காகக் கால் கடுக்க காத்துக் கிடக்கிறாளே என்று நினைக்கும் போது அவன் தன் குற்ற உணர்ச்சியில் ஒவ்வொரு நொடியும் செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தான்.
அதே சமயம், தன் தந்தையைத் தேடி மாடிக்கு வந்த அரவிந்த், இருளில் மறைந்து நின்று இவர்கள் பேசிக் கொண்டதைக் கேட்டு அதிர்ந்து போனான். .
"அப்பாவுக்கும் அந்த ஆன்ட்டிக்கும் முன்னாடியே தெரியுமா? ரெண்டு பேரும் சொந்தக்காரங்களா? அப்பா ஏன் இதை என்கிட்ட மறைக்கணும்?" மனதில் ஆயிரம் கேள்விகள் எழ, ரேணுகா கீழே வருவதை உணர்ந்து வேகமாக கீழே ஓடிச் சென்று மறைந்தான்.
ஆனால், அவன் தன் தந்தையைத் தப்பாக நினைக்கவில்லை, அந்த மௌனத்தின் பின்னாலிருக்கும் வலியை உணர முயற்சி செய்தான்.
மீண்டும் அரவிந்த் மேலே பார்க்கும்போது, அவன் தந்தை முகத்தை மூடிக்கொண்டு அழுவது அவன் நெஞ்சைத் துளைத்தது.
"ஒருவேளை நான் பண்ண பாவம் தான் இன்னைக்கு எனக்குத் தண்டனையா நடக்குது போல..." என்று பிரபாகரன் உரத்த குரலில் சொல்லிவிட்டு தன் முகத்தைத் துடைத்து கொண்டார்.
அரவிந்த் அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் கீழே இறங்கி விட்டான்.
பிரபாகரன் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து முகத்தை கழுவிவிட்டு, மனதைத் தேற்றிக் கொண்டு கீழே வந்தான்.
ரேணுகா அங்கு அவனுக்காக ஆவி பறக்க தட்டில் சாப்பாடு வைத்துக் காத்துக் கொண்டிருந்தாள்.
அவளின் அந்த அமைதியான முகம், பண்பான குணம்... "இவளையா நான் வேணாம்னு சொன்னேன்?" என்று அவனைப் பார்த்துக் கேட்கும் அந்த மனசாட்சிக்கு பதில் சொல்ல முடியாமல் அவன் தலைகுனிந்தான்.
"எனக்கு இதுவே போதும் ரேணுகா" என்று அவன் வேண்டா வெறுப்பாக கடமைக்குச் சாப்பிட்டான்.
"மாமா... உங்களுக்கு கத்திரிக்காய் பொரியல்னா ரொம்பப் பிடிக்குமேன்னு செஞ்சேன், கொஞ்சமா வச்சுச் சாப்பிடுங்க" என்று அவனை வற்புறுத்திப் பரிமாறினாள் அந்த அன்புக்காரி.
“சாப்டியா ரேணுகா?” - பிரபாகரனின் குரலில் அத்தனை நாட்களாக இல்லாத ஒரு மென்மை தட்டுப்பட்டது.
ரேணுகா நிமிர்ந்து அவனைப் பார்க்கவில்லை. தலை குனிந்தவாறே, “இன்னும் இல்ல மாமா... நீங்க சாப்பிட்டதுக்கப்புறம் நான் சாப்பிடுகி
றேன்,” என்றாள் மிகத் தாழ்வான குரலில். அதில் ஒரு விதமான அர்ப்பணிப்பும், அதே சமயம் சொல்ல முடியாத வலியும் கலந்திருந்தது.
தொடரும்.....