மனைவி 38

Advertisement

Nivi Ammu

Well-known member
Member
மனைவி - 38

"ரேணுகா மாதிரி தான் உங்க அம்மாவும் இருப்பான்னு நான் நினைச்சு தான் கல்யாணம் பண்ணினேன் அரவிந்த். நான் ஒண்ணு நினைச்சேன், ஆனா கடவுள் எனக்குக் கொடுத்தது வேற ஒண்ணா இருக்கு. ஒரு விதத்தில் இதுவும் தண்டனை. நல்ல உள்ளத்தை உண்மையான அன்பை உதாசீனப்படுத்தினா இப்படி தான்."

"கடவுளைக் குறை சொல்லாதீங்கப்பா. நீங்க சரியா புரிஞ்சுக்காம அந்த வயசுல முடிவெடுத்துட்டீங்க. நீங்க பண்ணின அந்தச் சின்னத் தப்போட விளைவு, இன்னைக்கு எங்களையும் சேர்த்துப் பாதிக்குது.

சரி... அம்மாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. அட்லீஸ்ட் அந்த வீட்டிலிருந்து தனியா போயாவது அவங்களைத் திருத்தி இருக்கக் கூடாதா? நீங்க அவங்களை மாத்தி இருக்கக் கூடாதாப்பா?"

"நீ வேற ஏண்டா பழைய காயத்தைக் கிளறி வயித்தெரிச்சலை உண்டாக்குற? தனியா போகணும்னு நான் சொன்ன ஒரே வார்த்தைக்காக, உங்க அம்மா கைய அறுத்துக்கிட்டு செஞ்ச டிராமா இருக்கே... அப்பப்பா... நினைச்சாலே நெஞ்சு நடுங்குது."

"சரி... பாட்டி எங்கப்பா?"

பிரபாகரன் மனம் அப்படியே பல வருடங்களுக்குப் பின்னால், கடந்த காலத்தை நோக்கிப் பயணித்தது.

அன்று... அந்த நாள் இன்னும் அவன் கண்ணுக்குள் நிற்கிறது.

'இன்னைக்கு அம்மாகிட்ட அலர்விழி பத்தி எப்படியாவது சொல்லிடணும். என் காதலுக்குச் சம்மதம் வாங்கணும். அலர் வீட்ல சம்மதிச்சுட்டாங்க. அம்மாவை அழைச்சிட்டுப் போய் முறைப்படி பொண்ணு கேட்கணும்' என்கிற ஆயிரம் கனவுகளோடு ஆசையாக வீட்டிற்கு வந்தான் பிரபாகரன்.

ஆனால், உள்ளே நுழைந்தவன் கண்ட காட்சி அவனை நிலைகுலையச் செய்தது. அங்கே அவனுக்கும் ரேணுகாவுக்கும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன.

பந்தல் போடப்பட்டிருந்தது. சொந்தங்கள் ஒவ்வொன்றாக வந்து இறங்கிக் கொண்டிருந்தனர். என்ன நடக்கிறது என்று அவனுக்குத் துளியும் புரியவில்லை.

சொந்தங்கள் சூழ, பட்டுப்பாவாடையில் அமர்ந்திருந்த ரேணுகாவோ, காதலும் தவிப்புமாகப் பிரபாகரன் முகத்தைப் பார்த்தாள்.

"பிரபா வந்துட்டியா? உனக்காக அம்மா ஒரு நல்ல ஏற்பாடு பண்ணி இருக்கேன். என் வார்த்தையை நீ என்னைக்குமே மீற மாட்டேங்கிற நம்பிக்கையில..."

"என்ன ஏற்பாடு பண்ணி இருக்கீங்க அம்மா?" அவன் குரல் எச்சரிக்கையாக மாறியது.

"உனக்கும் ரேணுகாவுக்கும் கல்யாணம் பேசி முடிச்சுட்டேன். வர்ற முகூர்த்தத்துல ஏற்பாடு பண்ணி இருக்கேன்" என்றார் மல்லிகா சந்தோஷமாக.

"யாரைக் கேட்டு இந்த ஏற்பாடு பண்ணீங்க? என் விருப்பம் என்னன்னு ஒரு வார்த்தை தெரிஞ்சுக்காம, நீங்க பாட்டுக்கு எப்படி முடிவு பண்ணலாம்? என்கிட்ட ஒரு வார்த்தையாவது கேட்டீங்களா? நான் ரேணுகாவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு என்னைக்காவது உங்ககிட்டச் சொல்லி இருக்கேனா? எனக்கு அப்படி எந்த ஆசையும் கிடையாது!" என்று அனைவர் முன்பும் பளார் என்று அறைந்தாற்போலப் பேசிவிட, ரேணுகா அப்படியே துடித்துப் போனாள்.

மல்லிகா தன் மகனை நம்ப முடியாமல் ஏமாற்றமாகப் பார்த்தார். "பிரபா... விளையாடாதடா!"

"யார்மா இங்க விளையாடுறா? நீங்கதான் என் வாழ்க்கையில விளையாடிட்டு இருக்கீங்க. ரேணுகாவைக் கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பம் கிடையாது. எனக்கும் அவளுக்கும் ஒத்து வராது. அவளோட 'டேஸ்ட்' வேற, என்னோடது வேற. நான் ஒரு பொண்ணை உயிருக்குயிராய் காதலிக்கிறேன் மா. அந்தப் பொண்ணு வீட்ல வந்து பேசச் சொல்லலாம்னு தான் உங்களைப் பார்க்க வந்தேன். அதுக்குள்ள நீங்களே அவசரப்பட்டு இப்படி ஒரு முடிவு எடுத்தது தப்பு இல்லையா?" என்று அவன் வெளிப்படையாகக் கேட்க, ரேணுகா கதறி அழுதுகொண்டே அங்கிருந்து ஓடிப் போனாள்.

அவள் பின்னாலேயே அவள் தாய் தந்தையும் பதறியபடி ஓடினர்.

"நீங்கதான் யோசிக்காம விட்டுட்டீங்க... அவளாவது யோசிச்சிருக்க வேண்டாமா? அவகிட்ட என்னைக்காவது நான் தப்பா பேசி இருப்பேனா? அவ மனசுல ஆசையை வளர்க்குற மாதிரி ஒரு சின்னச் செய்கையாவது செஞ்சிருப்பேனா? எதுக்காக அவ மணப்பெண்ணா ரெடி ஆகி உட்கார்ந்து இருக்கா? இப்ப எல்லாரும் சேர்ந்து என்னைக் கெட்டவனாக்கப் பார்க்குறீங்களா? நான் காதலிச்ச பொண்ணுக்கு இப்ப நான் என்ன பதில் சொல்லுவேன்?"

மல்லிகா அப்படியே உடைந்து போய் தரையில் அமர்ந்தார். தன் மகன் தன் சொல்லைத் தட்டமாட்டான், ரேணுகாவைத் திருமணம் செய்து கொள்வான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் ஊர் முழுவதற்கும் சொல்லிவிட்டார். இப்போது இந்த அவமானத்தைச் சுமந்துகொண்டு என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை.

மல்லிகா நிலைகுலைந்து போயிருந்தாள். உள்ளுக்குள் பொங்கி வரும் கண்ணீரைத் துடைக்கக்கூடத் திராணியில்லாமல், மரத்துப் போனவளாய் அமர்ந்திருக்க... அவளது மௌனம் அந்த இடத்தையே கனக்கச் செய்தது.

அப்போது அத்தை முறை உறவுள்ள ஒருவர் அவள் அருகே வந்து, "சரிப்பா பிரபா... உன் அம்மா உன்கிட்ட ஒரு வார்த்தை கேட்காம இந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனா, இன்னைக்கு ஊர் முன்னாடி அவ நிக்கிறாளே... அவ கௌரவத்தை நீ காப்பாத்த வேண்டாமா? உன்னையே நினைச்சு, உனக்காகவே தேஞ்சு தேஞ்சு வாழ்ந்துட்டு இருக்காளே... அவளுக்கு நீ என்ன பதில் சொல்லப்போற?" என்று குரலில் பாரத்தைச் சுமந்து கேட்டார்.

பிரபா சற்றும் தயங்காமல், உறுதியான குரலில் சொன்னான், "எனக்கு ரேணுகா வேணாம் அத்தை. அவ மேல எனக்கு எந்த ஈடுபாடும் கிடையாது. இவங்களா ஒரு முடிவை எடுத்துட்டு, இப்ப என் மேல திணிக்கிறாங்கன்னு என்னால தாலி கட்ட முடியாது. நான் ஒரு பொண்ணை உயிருக்குயிரா காதலிக்கிறேன். இவங்க சம்மதிச்சா சந்தோஷம், இல்லைன்னா நானே என் கல்யாணத்தைப் பண்ணிப்பேன். என்னை நம்பி ஒரு ஜீவன் எனக்காகக் காத்துட்டு இருக்கு... அதை என்னால நடுத்தெருவுல விட முடியாது அத்தை!"

அங்கிருந்த ஒரு பெரியவர் மல்லிகாவைச் சுட்டிக்காட்டி கத்தினார், "இதுக்குத்தான் சொன்னேன்... புள்ளையை ரொம்பப் படிக்க வைக்காதே, வெளியூருக்கு வேலைக்கு அனுப்பாதேன்னு! கேட்டியா நீ? இப்ப பாரு, பெத்தவ முகத்துக்கு நேரா என்ன பேச்சு பேசிட்டு நிக்கிறான்!"

மல்லிகாவின் கண்கள் கெஞ்சலாகப் பிரபாவைப் பார்த்தன. "பிரபா... ரேணுகா மனசுல நான் தான் ஆசையை வளர்த்து விட்டேன். இன்னைக்கு அந்தப் புள்ளை மனசை உடைச்சா, அந்தப் பாவம் என்னைச் சும்மா விடாதுடா. வேற யாரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் அவளால நிம்மதியா இருக்க முடியாது. கொஞ்சம் புரிஞ்சுக்கோடா கண்ணா..." எனத் தேம்பினாள்.

"அம்மா! நீங்க என்னை முதல்ல புரிஞ்சுக்கப் பாருங்க," என இடைமறித்தான் பிரபா. "நீங்க அவகிட்ட ஆசையை வளர்த்தது உங்க தப்பு. என்கிட்ட கேட்காம அவளா மனசுக்குள்ள கனவு கண்டது அவ தப்பு. இதுல சம்பந்தமே இல்லாத நான் ஏன் கஷ்டப்படணும்? நான் ஒரு பொண்ணை வருஷக்கணக்கா லவ் பண்றேன். அவகூடத்தான் என் வாழ்க்கைன்னு முடிவு பண்ணிட்டேன். முடிஞ்சா நீங்க எங்கூட வந்து வீட்ல பேசுங்க."

மல்லிகா மெல்லத் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள். அவள் குரலில் இப்போது ஒரு வைராக்கியம் தெரிந்தது. "உன் வாழ்க்கை உன்னோடது... நீ போய் உன் பிழைப்பைப் பாரு பிரபா. நான் தான் தப்பு பண்ணிட்டேன். பெத்த புள்ளை மேல வச்ச நம்பிக்கையில ஆசைப்பட்டுட்டேன். என் தப்பை நானே சரி பண்ணிக்கிறேன். ஆனா ஒன்னு... இந்த நிலைமையில அந்தப் பிள்ளைக்கு ஒரு வழி காட்டாம நான் இந்த வீட்டை விட்டு வரமாட்டேன். நீ போ... போய்க் கல்யாணம் பண்ணி நிம்மதியா இரு. உன் மேல எனக்கோ, ரேணுகாவுக்கோ எந்தக் கோபமும் இல்லை... நாங்க யாரும் உன்னைச் சாபமிட மாட்டோம்.

நீ ஆம்பளை எப்படியோ வாழ முடியும். ஆனால் ரேணுகா வயசு பொண்ணு. அவளுக்கு ஒரு நல்ல வழி காட்டாமல் உனக்கு ஒரு நல்ல தாயா இருக்க முடியாது. நீ போ. என் பொண்ணா ரேணுகாவை நினைச்சு அவளுக்கு ஒரு நல்ல வழி கட்டிட்டு வரேன். அதுவரை நீ என்னை தேடி இங்க வரவே கூடாது. அம்மா மேல சத்தியம்."

மல்லிகா வழியைக் காட்டிவிட்டு அங்கிருந்து நகர, பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த மகனிடம் தன் வெறுப்பைக் காட்ட கூட அவளுக்குத் தெம்பில்லை.

ரேணுகா அழுதுகொண்டே வெளியே வந்தாள். அவள் கண்கள் வீங்கியிருந்தன. "அத்தை... எதுக்காக மாமாவை போகச் சொல்றீங்க? நீங்க மாமா கூட போய் பேசி அவருக்குப் பிடிச்ச கல்யாணத்தையே பண்ணி வைங்க. நான் என் அப்பா அம்மா கூட வீட்டுக்கே போயிடறேன்..." என்றாள், உள்ளுக்குள் ரணமான தன் இதயத்தின் வலியை விழுங்கியபடி.

"இல்லை ரேணு... இந்த வீட்டை விட்டு நீ வெளியே போகணும்னா, இன்னொருத்தனுக்கு மனைவியாத்தான் போகணும். பிரபாகரனுக்கு உன்னைக் கட்டித் தர்றேன்னு சொல்லித்தான் உன்னை இந்த வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்தேன். என்னால அதைச் செய்ய முடியல... நீ உள்ள போ," என மல்லிகா கத்தினாள்.

பிரபாகரன் அங்கிருந்த சூழலைப் பார்த்தான். அவன் மனசாட்சி ஒரு நிமிடம் உறுத்தினாலும், அவனுக்காகத் தவம் இருக்கும் காதலியின் முகம் நினைவுக்கு வர, அவன் எதற்கும் கட்டுப்படாமல் வீட்டை விட்டு வெளியேறினான்.

பல வருடங்களுக்குப் பிறகு...

"அதுக்கப்புறம் நீங்க போய் பாட்டியையும் ரேணுகா ஆன்ட்டியையும் பார்க்கவே இல்லையாப்பா?" என அரவிந்த் ஆதங்கமாக கேட்க, பிரபாகரன் பெருமூச்சு விட்டான்.

"என்னை உன் அம்மா விடலடா. கல்யாணம் வரைக்கும் தான் அவ நல்லவளா நடிச்சா. தாலி கட்டுன அடுத்த நாளே அவளோட நிஜ முகம் தெரிஞ்சுது. என்னால எதையும் ஏத்துக்க முடியல. உன் பாட்டியைப் பார்க்கப் போகணும்னு சொன்னாலே பெரிய சண்டை வரும். அதுக்குள்ள நீ கருவுல உருவாகிட்ட... 'உனக்கு உன் குடும்பம் முக்கியமா, இல்லை அவங்க முக்கியமா? அதிகமா பேசுனா குழந்தையைக் கலைச்சிடுவேன்'னு மிரட்ட ஆரம்பிச்சுட்டா. அவகிட்ட இருந்து உன்னைக் காப்பாத்தவே என் காலம் போயிடுச்சு. அதுக்கப்புறம் அவங்க என்ன ஆனாங்கன்னு தெரியல, போன் பண்ணாலும் நம்பர் மாறிடுச்சு."

"அப்புறம் எப்படிப்பா ரேணுகா ஆன்ட்டியைப் பார்த்தீங்க?"

"ஒரு நாள் பயங்கரமான மழை... ஒதுங்குறதுக்காக ஒரு கடையோரமா நின்னுட்டு இருந்தேன். அதுக்கு எதிர்பக்கம் இருந்த ஒரு சின்ன ஹோட்டல்ல, ஒரு பொண்ணு எச்சில் இலை எடுத்துட்டு இருந்தா..."

"என்னப்பா சொல்றீங்க? எச்சில் இலையா?" அரவிந்த் அதிர்ச்சியில் உறைந்தான்.

"ஆமாடா... அவளை அந்த நிலைமையில பார்ப்பேன்னு நான் கனவுல கூட நினைக்கல. கிழிஞ்சு போன புடவை, தலை கூட வாராம, சுருங்கிப்போன உடம்பு... வெறும் எலும்பும் தோலுமா நின்னுட்டு இருந்தா. அவளைப் பார்த்ததும் என் உயிரே போயிட்ட மாதிரி இருந்துச்சு. பதறிப்போய் அவகிட்ட ஓடுனேன்... ஆனா, அவளுக்கு என்னை அடையாளம் கூடத் தெரியலடா..." சொல்லும்போதே பிரபாகரன் குரல் உடைந்து அழுகையாக மாறியது.

தொடரும்...
 
ரேணுகாவுக்கு இப்படி ஒரு நிலமையா? பாவம், பிரபா நீ இவ்வளவு பெரிய பாவத்தை செஞ்சிருக்க
 
பிரபா....வைரத்துக்கும்... கண்ணாடி கல்லுக்கும் வித்தியாசம் தெரியல 😮😮
 
Advertisement

Advertisement

Back
Top