மனைவி - 39
"அவங்க வாழ்க்கையில அப்படி என்னப்பா நடந்துச்சு?"
அதைத் தெளிவாகச் சொல்ல அவனுக்கு விருப்பமில்லை. அது ஒரு பெண்ணின் சிதைந்து போன வாழ்க்கை.
"கல்யாணம் ஆகிப் போன இடத்துல புருஷன் அவளை மிருகம் மாதிரி கொடுமைப்படுத்தியிருக்கான். அவளை கசக்கி எறிந்து இருக்கான். அவன் கிட்ட இருந்தும் அவன் குடும்பத்து கிட்டேந்தும் அவள் அனுபவிக்காத கொடுமை கிடையாது. அந்த போராட்டத்தில் இருந்து மீள முடியாமல் இருந்தவளை அவ அப்பா அம்மா தான் எப்படியோ போராடி அவளைக் காப்பாத்தி கூட்டிட்டு வந்து ஊரை விட்டு அனுப்பி இருக்காங்க. ஆனா கையில குழந்தையை வச்சுட்டு எங்க போறதுன்னு தெரியாம, அந்த ஹோட்டல் பெரியவர் கொடுத்த வேலைக்காக அங்கேயே தங்கிட்டாங்க."
"அப்பா... அப்போ ஐஸ்வர்யா?"
"ஆமாடா... ஆறு மாசம் வரைக்கும் அந்தப் பிள்ளைக்குப் பேரே வைக்காம இருந்திருக்கா ரேணு. ஐஸ்வர்யான்னு பேர் வச்சதே நான் தான். 'அம்மா தைரியமானவங்க, கிராமத்துல அவங்க பார்த்துப்பாங்க'ன்னு நான் தப்பா கணக்கு போட்டுட்டேன். உன் அம்மாவும் உங்களை வச்சே என்னை மிரட்டிப் பணிய வச்சுட்டா."
"ரேணுகாவை அந்த நிலைமையில பார்த்ததுக்கப்புறம் தான் நான் ஊருக்குப் போனேன். அங்க போனா... அவ புருஷன் எல்லாச் சொத்தையும் ஏமாத்தி எழுதி வாங்கிட்டு அவளைத் தெருவுல துரத்திட்டான். 'என் மருமகள் வாழ்க்கையை நானே அழிச்சிட்டேனே'ன்னு அழுது அழுதே உன் பாட்டி இறந்து போயிட்டாங்கடா."
பிரபாகரன் சொல்லச் சொல்ல அரவிந்த் கண்கள் கலங்கின.
"ஆண்டி அப்பா அம்மாவை நம்ம கூடவே கூட்டிட்டு வந்திருக்கலாம்லப்பா?"
"அவங்க வரலன்னு சொல்லிட்டாங்கடா. 'என் பொண்ணு மட்டும் பத்திரமா இருக்கட்டும்... நாங்க இப்ப வெளியே வந்தா அந்தப் பைத்தியக்காரன் (புருஷன்) கிட்ட திரும்ப மாட்டிப்போம். எங்களுக்கு இங்க எந்தக் குறையும் இல்லை, எங்க பொண்ணை மட்டும் பார்த்துக்கோங்க'ன்னு அவங்க அப்பா என் கால்ல விழுந்து கெஞ்சிட்டார்."
"இப்ப அந்தச் சொத்து எல்லாம்?"
"கோர்ட்ல கேஸ் போட்டுருக்கேன் அரவிந்த். அந்தப் புருஷன் காரன் செத்துட்டான். ஆனா சாகுறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் நாசமாக்கிட்டுப் போயிட்டான். “
“ஆண்டி பாவம் தனியா குழந்தையுடன் போராடி இருக்காங்க.”
ஐஸ்வர்யாவுக்கு உடம்பு ரொம்ப முடியாமல் போனப்பதான் ரேணு பயந்து போய் எனக்குப் போன் பண்ணா. வைரஸ் காய்ச்சல்ல அந்தப் பிள்ளை துடிச்சப்ப, நான் தான் கூட இருந்து பார்த்துகிட்டேன். அன்னைக்கு அவகிட்ட சண்டை போட்டுத்தான் இந்த வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன்."
"நீ நினைக்கிற மாதிரி எங்களுக்கிடையே எந்தத் தப்பான உறவும் இல்லை அரவிந்த்..." என அவர் முடிக்க, அரவிந்த் அவர் கைகளைப் பற்றிக்கொண்டான்.
"எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்குப்பா. அம்மா பத்தி எனக்குத் தெரியும். எப்பப்பா அவகிட்ட இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும்? எப்ப டைவர்ஸ் பண்ணப் போறீங்க?"
"ஏன்டா இப்படிக் கேக்குற?"
"சும்மாதான் கேட்டேன். நீங்க வீட்டை விட்டு வந்த விஷயம் தெரிஞ்சா, இந்நேரம் அம்மா ஊர் முழுக்க என்னென்ன கதையை கட்டி விட்டிருக்குமோ... அந்த அம்மா சும்மா இருக்காதே!" என கசப்புடன் கூறினான் அரவிந்த்.
"அத்தையும் என்னையும் ஒண்ணா சேர்த்து வச்சு, உன் அம்மா எப்பவோ ஒரு பெரிய டிராமாவையே ஆரம்பிச்சிட்டாப்பா..." பிரபா வேதனையாக கூற,
“உனக்கு வேணும்…” அரவிந்தின் குரலில் நையாண்டியை விட நஞ்சாக ஏறியிருந்த வெறுப்புதான் அதிகமாக தெரிந்தது.
அரவிந்த் தன் பற்களை ஒன்றோடொன்று அழுத்தி கடித்தான். தாடை நரம்புகள் புடைக்க, ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றவன், "அம்மாவை அன்னைக்கே அந்தப் பாவி கழுத்தை நெரிச்சுக் கொன்னிருக்கலாம்... அதை விட்டுட்டு இன்னும் உயிரோட விட்டு வச்சிருக்காரே, அதான் பெரிய தப்பு! நாங்க என்ன பொம்பள புள்ளைங்களா? அம்மா இல்லைன்னா தவிக்கப் போறோம்னு நினைப்பா? ஆம்பள பசங்க நாங்க... எங்கேயாவது ஒரு மூலையில பிழைச்சுப் போவோம். இப்ப மட்டும் இந்த அம்மா இருந்து என்ன புண்ணியம்? உனக்கு ஒரு துளி கூடப் பொழைக்கத் தெரியலப்பா... ஆள் பார்க்க விவரமா இருக்கிற மாதிரிதான் இருக்கு, ஆனா உன்னை மாதிரி ஒரு தண்டம் இந்த நாட்டிலேயே கிடையாது!"
அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சவுக்கடியாக விழ, பிரபாகரன் சிலையென நின்றிருந்தான்.
"அன்னைக்கே அழகா அந்த ரேணுகாவை கல்யாணம் பண்ணி இருந்தா, இன்னைக்கு ஜம்முனு வாழ்ந்திருப்ப... எங்களையும் பெத்திருப்ப, நாங்களும் சந்தோஷமா இருந்திருப்போம். ஆனா இப்போ? கடைசியில இப்படி ஒரு மூலையில உட்கார்ந்து ஊமை அழுகையா அழ வேண்டியதுதான் உன் தலைவிதி!"
பிரபாகரன் தன் நிலைமையை எண்ணி உள்ளுக்குள் கூனிக் குறுகிப் போனார். பெத்த மகனிடமே இப்படி வார்த்தைகளால் மிதிபடும் நிலைக்கு வந்துவிட்டோமே என்கிற வலி அவர் மனதைச் பிழிந்தது. சொல்ல முடியாத வேதனையில் தொண்டை அடைக்க, மகனிடம் எதிர்வாதம் செய்ய கூடத் திரணியற்று மௌனமாக அந்த இடத்தை விட்டு நகர நினைத்தான்.
"அட்வைஸ் பண்ணது போதும்... ஐஸ்வர்யாவைப் பத்திரமா பார்த்துக்கோங்க," என்று பிரபாகரன் அதிகாரத் தொனியில் சொல்ல,
"பார்த்துக்கிறோம்... ஆனா ஐஸ்வர்யா அப்பா எப்படி செத்தாரு? அதை மட்டும் எனக்குத் தெளிவா சொல்லு..." என அரவிந்த் நல்ல கேள்வியைக் கேட்க, பிரபாகரன் முகம் சிவந்தது.
"இன்னும் பத்து என்றதுக்குள்ள இந்த இடத்தை விட்டு நீ காலி பண்ணல... அப்புறம் நடக்குறதே வேற!" பிரபாகரன் பல்லை கடித்தான். அரவிந்திற்கு அவர் மீது துளி கூட நம்பிக்கை இல்லை. தன் தந்தை தான் அந்தக் கொலையைச் செய்திருப்பார் என்று அவன் மனது நூறு சதவீதம் ஆணித்தரமாக நம்பியது.
வெறுப்பும் ஆத்திரமும் பொங்க வேகவேகமாக படிக்கட்டுகளில் இறங்கி வந்தவன், நேராக ரேணுகாவைத் தேடிச் சென்றான். ரேணுகா சமையலறைக்கு அருகில் ஏதோ வேலையாக நின்றுகொண்டிருக்க, அவள் மீது அதுவரை இருந்த பார்வை இப்போது அரவிந்திற்கு முற்றிலும் மாறியிருந்தது. ஒருவிதமான பரிதாபமும், ஆழமான அன்பும் அவன் கண்களில் மின்னியது.
அவள் அருகில் சென்று, அவள் தோளோடு அணைத்தபடி, "நாளைக்கு நம்ம எல்லாரும் சினிமாவுக்குப் போகலாமா? நீங்க என்ன சொல்றீங்க?" என்று கேட்டான். அவன் நடவடிக்கையில் சட்டெனத் தெரிந்த இந்த மாற்றத்தை ரேணுகா கவனித்தாலும், அதை பெரிதுபடுத்தவில்லை.
"நானா? நான் எதுக்கு சினிமாவுக்கு? எனக்கு அங்கெல்லாம் போய் பழக்கம் இல்லை அரவிந்த்... நீங்களே போயிட்டு வாங்களேன்," என்றாள் மென்மையாக.
"இனிமே இந்த பழக்கம் இல்லைங்கிற விஷயத்தையும் பழகிக்கணும். வாழ்க்கையைச் சந்தோஷமா வாழணும் ரேணுகா... எங்க அப்பாவை மாதிரி அந்த உரிச்ச தேங்காய் மாதிரி வாழ்க்கையை வீணடிக்க கூடாது," என்றான் அழுத்தமாக.
ரேணுகா அரவிந்தின் தோளில் செல்லமாகத் தட்டினாள். "அப்பாவை அப்படி எல்லாம் சொல்லக்கூடாதுப்பா... உங்க அப்பா ரொம்ப ரொம்ப நல்ல மனுஷன். உங்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்துட்டு இருக்காரு. அவரைப் போய் இப்படிப் பேசலாமா?"
அரவிந்த் ஒரு கசப்பான புன்னகையுடன், "'நல்ல மனுஷன்'..." என்று வார்த்தையை இழுத்தான். "ஒரு ரப்பர் எடுத்துட்டு வந்து அந்த 'நல்ல மனுஷன்'ங்கிற பேரை மட்டும் என் அப்பாவோட வாழ்க்கையில இருந்து அழிச்சுட்டா, எல்லாம் தெளிவாயிடும்னு நினைக்கிறேன்.
அவருக்குக் கண்ணு நல்லாத் தெரியும் னு தான் நான் நம்புறேன்," என்றான் உள்ளர்த்தத்தோடு. அவன் பேச்சில் இருந்த அந்தத் தார்மீகக் கோபத்தையும் குத்தலையும் ரேணுகாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. 'சின்னப்பையன்... இரவு நேரத்துல ஏதோ விளையாட்டா பேசுறான்' என்று நினைத்துக் கடந்து போனாள்.
அரவிந்த் இயல்பாகத் தெரிந்தாலும், ரேணுகாவிடம் முன்பை விட அதிகப்படியான அன்பைக் காட்டினான்.
அன்று இரவு...
சுவர் ஓரமாக ராதை படுத்திருக்க, அவளுக்கு மிக அருகில் சீதையும், அவளையொட்டி மகாவும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். மகாவுக்கு அருகில் ஸ்ரீராம் படுத்திருந்தான். அவன் கண்களில் உறக்கம் இல்லை, ஆனால் பழையபடி கவலையோ, எதிர்காலத்தைப் பற்றிய பயமோ இல்லை. இத்தனை வருடம் கழித்து தன் மொத்தக் குடும்பத்துடன், தன் ரத்தங்களுடன் இப்படி ஒரே இடத்தில் மனநிறைவாக படுத்திருப்பது அவனுக்குச் சொர்க்க பூமியில் இருப்பது போல் இருந்தது.
பிள்ளைகள் மட்டும் பாயில் படுத்திருக்க, ஸ்ரீராமும் அவன் மனைவியும் வெறும் தரையில் படுத்திருந்தனர். தரையின் குளிர்ச்சி அவன் முதுகில் ஏறினாலும், அது அவனுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. பிள்ளைகளின் உறங்கும் முகங்களையே வெறித்துப் பார்த்தவன், பக்கத்தில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்தான்.
"சாரிடி... சத்தியமா இனிமே உங்களைக் கஷ்டப்படுத்துற மாதிரி எதையுமே செய்ய மாட்டேன். இத்தனை வருஷத்தை வீணடிச்சுட்டேன்... நீயும் குழந்தைகளும் எவ்வளவு கஷ்டப்பட்டுட்டீங்க. இனிமே உங்களை ஒரு துளி கூட வருத்தப்பட விடமாட்டேன். யாரையும் உங்களைக் காயப்படுத்த விடமாட்டேன். நாளைக்கு எப்படியாவது எனக்கேத்த ஒரு வேலையைத் தேடி பிடிச்சுடுவேன்... அதுக்கப்புறம் பாரு, நம்ம வாழ்க்கையை மெல்ல மெல்ல நானே மாத்திடுவேன்," என்று தூங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளிடமும் மனைவியிடமும் தன் மன பாரத்தை இறக்கி வைத்து பேசிக்கொண்டிருந்தான்.
அந்த நிமிடம், அவனுக்குத் தன் தாயின் ஞாபகமோ, உடன் பிறந்த தங்கைகளின் நினைவோ ஒரு துளி கூட வரவில்லை. ஒரு நாள் கூடத் தாயிடம் பேசாமல் இருக்க முடியாதவன், இன்று ஏனோ மொத்தமாக அவர்களைத் தன் மனதிலிருந்து துடைத்து எறிந்திருந்தான்.
"அம்மா... நீ என்ன இவ்வளவு கேர்லெஸ்ஸா இருக்க? பெத்த புள்ளை எங்க இருக்கான், என்ன ஏதுன்னு ஒரு வார்த்தை கூட விசாரிக்காம இப்படி நிம்மதியா உட்கார்ந்து இருக்கியே! அவன் வீட்டை விட்டுப் போய் இத்தனை நாள் ஆகுதுமா..." மலர் தன் குரலில் அத்தனை ஆத்திரத்தையும் கவலையையும் குழைத்து எச்சரிக்கும் தொனியில் கத்தினாள். அந்த வீட்டின் அமைதியைக் கிழித்தது அவள் குரல்.
அம்மா மெதுவாகத் தலை நிமிர்ந்து, எந்தச் சலனமும் இல்லாத கண்களுடன் மலரைப் பார்த்தாள். "மலர், நீ எதுக்கு இப்ப இப்படி டென்ஷன் ஆகுற? அவனுக்குன்னு இங்கே என்ன இருக்கு? சொந்தமா ஒரு வீடு வாசல் கிடையாது, அவசரத்துக்கு எடுத்து செலவு பண்ண கையில ஒரு பத்து ரூபா காசு கிடையாது. எல்லாமே நம்ம கண்ட்ரோல்ல தான் இருக்கு. ஒரு மனுஷன் ஊர் சுத்துறதுக்கும், திமிரா திரியுறதுக்கும் கையில காசு வேணும். இல்ல, அவனுக்குன்னு ஒரு கிராம் நகை இருந்தா கூட அதை வச்சாவது எங்கயாவது ஓடிப் பிழைக்கலாம். ஆனா, அவன்கிட்ட இருக்கிறது அவன் போட்டுருக்கிற ஒட்டுத்துணி மட்டும் தான். பசி வயித்தைக் கிள்ளும் போது, மானம் பாக்காம நாளைக்குக் காலைல இதே வீட்டு வாசலில் வந்துதான் அவன் நிக்க போறேன். போங்க... போய் நிம்மதியா படுத்துத் தூங்குங்க."
தொடரும்...