மனைவி 42

Advertisement

Nivi Ammu

Well-known member
Member
ஸ்ரீராம் முழுமையாக மாறி விட்டானா என்ற பயம் அவருக்குள் இருந்தது. ஆனால், இன்று அவன் முகத்தில் இருந்த அந்தத் தெளிவையும், மகிழ்ச்சியையும் அவர் இதுவரை கண்டதே இல்லை. 'இனி அவர்கள் குடும்பமாக வாழ்வார்கள்' என்ற நிம்மதியுடன் அவர் அங்கிருந்து நகர்ந்தான் பிரபாகரன்.

முதலில் ராதாவை அலுவலகத்தில் இறக்கிவிட்ட ஸ்ரீராம், "ராதா... பாய்! ஈவினிங் நானே வந்து கூட்டிட்டுப் போறேன்," என்றான் ஒரு கல்லூரி மாணவனின் துடிப்புடன். அவன் பேசிய விதத்தில் ராதாவுக்கு முகம் சிவந்தது.

அவள் தன் பெரிய மகளிடம், "உங்க அப்பா என்ன நினைச்சுட்டு இருக்காரு? பெட்ரோல் விலையில இப்படியே சுத்திட்டு இருக்கிறதா? நானே வந்துடுறேன் சொல்லு," என்று சொல்லிவிட்டுச் சென்றாலும், அவளது கால்கள் தரையில் படாதது போன்ற ஒரு உணர்வு.

"அப்பா... இன்னும் கொஞ்சம் நீங்க ட்ரை பண்ணனும், இதெல்லாம் பத்தல!" என்று சின்ன மகள் கிண்டலாகச் சொன்னாள்.

"நீங்க அம்மா கால்ல டெய்லி விழுந்துருங்கப்பா... அம்மா ரொம்ப நல்லவங்க, யார்கிட்டயும் கோவமாப் பேசத் தெரியாது. அதனால எக்சர்சைஸ் பண்றதா நினைச்சுட்டு அம்மா கால்ல விழுந்து எழுந்திருங்க, அவங்க மனசு சீக்கிரம் மாறிடும்," என்று சீதா தந்தைக்கு ஒரு பெரிய 'ஐடியா' கொடுத்தாள்.

பிள்ளைகளின் ஆதரவுடன், தன் மனைவியின் மனதை எப்படிக் கவரப் போகிறோம் என்ற தீவிர சிந்தனையுடன் அவர்களைப் பள்ளியில் விட்டான்.

அவன் பையைத் தூக்கி கொண்டு உள்ளே வரை சென்றதைப் பார்த்து, "இவர்தான் சீதா, மகாவோட அப்பாவா?" என்று மற்றவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர்.

"அப்பா... பாய்!" என்று அவர்கள் இருவரும் கத்தியபோது, அவன் பெற்ற அந்த இன்பம் வர்ணிக்க முடியாதது.

'ஸ்ரீராம்... நீ முதல்ல வேலைக்கு போகணும். அப்பதான் உன் குடும்பத்தை நிமிர வைக்க முடியும்' என்று தனக்குள் உறுதி பூண்டான். தன் படிப்பிற்கு ஏற்ற வேலை தேடி அந்த நகரம் முழுவதும் அவன் புல்லட் சுற்றியது. இன்ஜினியரிங் படித்த அவனுக்கு, ஒரே நாளில் வேலை கிடைப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

அதற்காக பின் வாங்கவில்லை. மனைவியை குழந்தைகளை நினைத்து பார்த்தான்.

'அவள் உனக்காகத் தானே இத்தனை காலம் வாழ்ந்தாள்? அவளை ஒரு ராணி மாதிரி பார்த்துக் கொள்ள வேண்டாமா? என்ன வேலை கிடைத்தாலும் செய்... உழைப்பில் என்ன தப்பு இருக்கிறது?' என்று அவன் மனசாட்சி அவனைக் கேட்டது.

வீடு வந்ததும், தன் பிள்ளைகளைப் பார்த்த அந்த நொடி அவனுக்குள் ஒரு பேரானந்தம் ஊற்றெடுத்தது.

"அப்பாவுக்கு வேலை கிடைச்சிருச்சுடா!" என்று அவன் பெருமிதத்தோடு சொல்ல, "வாவ்!" என மகவும் சீதாவும் ஓடி வந்து இரு பக்கமும் அப்பாவைக் கட்டிக்கொண்டனர். அந்த சின்னஞ்சிறு கைகளின் அணைப்பில், இனிமேல் கஷ்டம் தீர்ந்து விடும், வாழ்வாதாரம் உயரும் என்கிற நம்பிக்கை மின்சாரமாய் பாய்ந்தது. ராதையின் முகத்தில் அன்று பூத்த அந்த மெல்லிய புன்னகை தான் அவனுக்கு மிகப்பெரிய சான்றிதழ்.

என்ன வேலை எங்கே வேலை என்று அவன் தெரியப்படுத்தவில்லை. அவர்கள் மறுப்பார்கள் என்று. ராதையும் பேசியதால் அதை பற்றி கேட்கவில்லை.

மல்லிகை கடையில் வேலைக்கு சேர்ந்தவன் தன் வேலையில் தேனி போல் சுறு சுறுப்பாக இருந்தான்.

"தம்பி, இந்தச் சாமானை எல்லாம் எடுத்துட்டுப் போய் பார்க்குக்கு எதிர்ல இருக்கிற வீட்டுல டெலிவரி பண்ணிட்டு வர்றியா?"

"சரிங்கய்யா..."

"இந்த வண்டி சாவியை வச்சுக்கோ, பத்திரமா கொண்டு போய் இறக்கிடு" என்று முதலாளி சொல்ல, வண்டியில் சாமான்களை ஏற்றிக்கொண்டு அந்தப் பூங்காவிற்கு அருகில் வந்தான்.

அங்கிருந்த அடையாளங்களை வைத்து வீட்டைத் தேடினான். வியர்வை முகம் முழுக்க வழிந்து கொண்டிருக்க, கைகளால் அதைத் துடைத்துவிட்டு நிமிர்ந்தவனுக்கு ஒரு காட்சி அதிர்ச்சியளித்தது.

அங்கே அசோக்! பார்க்கின் ஒரு ஓரத்தில் நிம்மதியாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான்.

மணி பார்த்தான்... காலை 11:30.

"இந்த நேரத்துல பேங்க்ல வேலையை விட்டுட்டு இங்க என்ன பண்றாரு? இவருக்கு வேலை இல்லையா?" என்று ஆயிரம் கேள்விகள் அவன் மூளையைக் கசக்கின. ஆனாலும் தன் கடமையே கண்ணாக அந்த வீட்டுப் பொருட்களை இறக்கி வைத்தான்.

பொருட்களை இறக்கி வைத்து விட்டு கிளம்ப பைக் மீது அமர்ந்தவன் எதார்த்தமாக எதிரே இருந்த பார்க்கை பார்த்தான்.

அதே நேரம் அவன் பொருட்களை இறக்கி வைத்த வீட்டு பெண்மணி,
ஓடி வந்து, "ரொம்ப நன்றிப்பா, இந்தா... இது டிப்ஸ், வச்சுக்கோ" என்று அவன் கையில் ஒரு நூறு ரூபாய் நோட்டைத் திணித்தார்.

அந்த நூறு ரூபாய் காகிதம் அவனுக்குக் கோடி ரூபாய் போலத் தெரிந்தது. தன் சொந்த உழைப்பில், வேர்வை சிந்திப் பெற்ற முதல் வருமானம்! மனைவிக்காக ஏதேனும் வாங்க வேண்டும் என்கிற ஆசை அவன் நெஞ்சை நிறைத்தது. அசோக் அங்கே தூங்குவதைப் பார்த்தும் அவனிடம் பேசப் பிடிக்காமல்,

"ஒருவேளை இவன் ஊரை ஏமாத்துறானோ?" என்கிற சந்தேகத்தோடு கடைக்குத் திரும்பினான்.

மாலையில் கடை முடிந்து கிளம்பும்போது, அந்த நூறு ரூபாயை எடுத்துப் பார்த்தான்.

"இதில் என்ன வரும்? ஆனாலும் என் ரதி க்கு ஏதாவது வாங்கணுமே..." அவன் மனதிற்கும் மூளைக்கும் நடந்த போரில் மனமே வென்றது. பூக்கடையை நெருங்கினான்.

"அக்கா... ஒரு முழம் பூ எவ்வளவு?"

"என்ன பூ வேணும் தம்பி?"

"முல்லைப் பூ வேணும் அக்கா..."

"ஒரு முழம் முப்பது ரூபாய் தம்பி."

சந்தோஷமாக வாங்கிக் கொண்டான். அந்தப் பூவின் மணம் அவன் கைகளில் ஒட்டிக்கொண்டது. உலகையே வென்றுவிட்ட ஒரு பேரரசனின் கர்வத்தோடு அந்தப் பூவை வாங்கித் தன் பாக்கெட்டில் பத்திரப்படுத்தினான்.

"கண்டிப்பா இதை ராதை வைப்பாள்" என்கிற நம்பிக்கை அவன் கண்களில் மின்னியது.

அடுத்து பிள்ளைகளுக்கு... அவர்கள் கடையிலிருந்து எதையும் வாங்கிச் சாப்பிடாமல் குடும்பச் சூழலைப் புரிந்து நடந்து கொள்வதைக் கண்டு அவன் இதயம் பலமுறை வெடித்திருக்கிறது.

"அதிக விலையில் வாங்கினால் ராதை திட்டுவாளே" என்று யோசித்தவன், பேக்கரியில் நுழைந்து இருபது ரூபாய்க்கு இரண்டு ஐஸ்கிரீமும், பத்து ரூபாயில் மூன்று கேக்குகளும் வாங்கினான்.

திருப்தியான ஒரு தந்தைக்கும் கணவனுக்கும் உண்டான கம்பீரத்தோடு வண்டியை மிதித்தான். அப்போது அவனுக்கு எதிரே அசோக் வந்தான்.

"மச்சான்... என்ன இந்தப் பக்கம்? ஆளையே காணோம்?"

ஸ்ரீராம் தன் கோபத்தை மறைத்துக்கொண்டு அதிகாரமாகக் கேட்டான், "எங்கிருந்து வர்றீங்க நீங்க?"

"வேலைக்குத்தான் போயிட்டு வர்றேன். வேற எங்க போவேன்? பேங்க்ல நாய் மாதிரி வேலை வாங்குறானுங்க. நாள் முழுக்க உழைச்சு ஓடாயிட்டேன்!" என்று பச்சையாகப் பொய் சொன்னான் அசோக். ஸ்ரீராமுக்கு அவன் பார்க்கில் தூங்கியது அப்பட்டமாகத் தெரியும்.

"அசோக் ஒரு பெரிய பிராடு!" என்று அவன் மனதுக்குள் முத்திரை குத்தினான்.

அசோக்கைப் பார்த்தால் அப்படியே டீசண்டாக, அயர்ன் செய்த சட்டை மடிப்பு கலையாமல் நின்றான்.

"இவன் என் தங்கையையும் குடும்பத்தையும் ஏமாத்துறான்" என்பது ஸ்ரீராமுக்கு நன்றாகப் புரிந்தது.

"ரொம்ப நல்லது... இதே மாதிரியே தினமும் வேலை பாருங்க, அப்பதான் குடும்பம் உருப்படும்!" என்று நக்கலாகச் சொல்லிவிட்டு வண்டியைச் சீறச் செய்து கிளம்பினான்.

அசோக் அங்கேயே நின்று திகைத்தான். "என்ன இவன் இப்படிப் பேசுறான்? பேச்செல்லாம் மாறி இருக்கே? சட்டைப் பாக்கெட்டில் பூ வேற தெரியுது... ஒருவேளை அவன் பெண்டாட்டி கூடத்தான் இவன் இருக்கானோ?" என்று புரியாமல் யோசித்தபடி நின்றான்.

அசோக் விறுவிறுவென வீட்டிற்குள் நுழைந்தவன், மூச்சிரைக்க நின்றான். "அத்தை... உங்க புள்ள வந்தாரா?" என்றான் படபடப்புடன்.

"வரல..." கலையின் குரலில் ஒருவித நடுக்கம் தெரிந்தது. அந்த ஒரு வார்த்தைக்குள் ஆயிரம் ஏமாற்றங்கள் ஒளிந்திருந்தன.

"உங்க புள்ள இன்னைக்கு வரமாட்டாரு அத்தை. நான் இப்பதான் அவரை பேக்கரி வாசலில் நேருக்கு நேரா பார்த்தேன்."

கலை ஒன்றும் புரியாமல், என்ன என்பது போல மாப்பிள்ளையின் முகத்தைப் பார்த்தார்.

அவன் ஒரு ஏளனச் சிரிப்புடன் தொடர்ந்தான்,

"நமக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கலாம்னு வண்டியை நிறுத்தினேன். அப்ப பார்த்தா உங்க புள்ள கெத்தாக வெளியே வராரு. புது பைக்... புது டிரஸ்... பாக்கெட்ல பார்த்தா மணக்க மணக்க முல்லைப் பூ! கையில பேக்கரி பை வேற. இதெல்லாம் யாருக்கு வாங்கிட்டு போறாரு? எங்க தங்கி இருக்காரு? எதுவுமே நமக்குத் தெரியல.

ஒருவேளை அவர் தன் பொண்டாட்டி புள்ளைங்க கூடயும் சேர்ந்துட்டாரோ என்னவோ? இனிமேல் உங்க நிலைமை அவ்வளவுதானா? சாப்பாட்டுக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதானா?

'என் பிள்ளை நான் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டான், என்னை விட்டுப் போக மாட்டான், அம்மா இல்லாம அவனால மூச்சு கூட விட முடியாது'ன்னு சொன்னீங்க.

ஆனா இன்னைக்கு அவன் தன் குடும்பத்தோடு ரொம்ப சந்தோஷமா இருக்கான்" என்று நஞ்சைக் கக்கிவிட்டு அவன் அமைதியாக நிற்க, அங்கே நின்ற மூன்று பெண்களின் முகமும் எண்ணெய் ஊற்றி எரிவது போல் தகித்தது. அவமானம் நெஞ்சைக் கவ்வியது.

"நான்தான் அப்பவே சொன்னேன்... அண்ணனைப் போய் கூப்பிடு, அண்ணனைக் கண்காணி, அவனை நம்ம கைக்குள்ளேயே வச்சுக்கணும்னு. என் பேச்சை ஒரு வார்த்தையாவது கேட்டியாமா? இப்ப பாரு, அண்ணா அவகிட்டவே போயிட்டான். இனிமேல் எங்கே டிவோர்ஸ் நடக்கப் போகுது? அண்ணன் நம்மளை விட்டுப் பிரியப் போறான்!" என்று மலர் ஆத்திரத்தில் கத்தித் தீர்த்தாள்.

கலைக்குத் தலை சுற்றுவது போலிருந்தது. நெஞ்சுக் குழிக்குள் ஏதோ ஒன்று அடைப்பது போல் மூச்சுத் திணறினார். தன் மகன், அந்தப் பெண்ணுடன் சேர்ந்து வாழ்வான் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை.

ஒரு சதவீதம் கூட அந்த உண்மையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. "மாப்ள... ஸ்ரீராம் எங்க இருக்கான்? உங்களுக்குத் தெரியுமா?" என்று மீண்டும் கெஞ்சலாகக் கேட்டார்.

"எனக்குத் தெரியாது அத்தை. நான் கேட்டதுக்குக் கூட அவர் பதில் சொல்லல. வண்டி எடுத்துட்டு மின்னல் வேகத்துல போயிட்டார்..."

"அவனை எப்படி கண்டுபிடிக்கிறது? இனிமேல் அவனை விட முடியாது, சீக்கிரம் வீட்டுக்கு இழுத்துட்டு வரணும்" என்று கலை அவசரமாகக் கிளம்பத் தொடங்கினார்.

"இனியும் அவனை விட்டோம்னா, மொத்தமா அண்ணா நமக்கு இல்லாமப் போயிடுவான்மா. அப்புறம் நம்ம கதியை நினைச்சுக்கூடப் பார்க்க முடியாது. இதுக்குத்தான் அண்ணனை வெளிநாட்டிலிருந்து வர வைக்காதே, அவன் வர்றேன்னு சொன்னாலும் வேணாம்னு சொல்லிடுன்னு சொன்னேன். நீதான் புள்ளை மேல இருந்த பாசத்துல என் பேச்சைக் கேக்காம விட்டுட்ட... இப்ப பாரு!" என்று அலர் தன் பங்குக்குக் கோபத்தைக் கொட்டினாள்.

"ரெண்டு பேரும் கொஞ்சம் வாயை மூடிட்டு அமைதியா இருங்க. தப்பு எல்லாத்தையும் என் மேலேயே சொல்லாதீங்க. நான் போய் ஸ்ரீராமை எப்படியாவது கூட்டிட்டு வர்றேன்" என்று கலை அங்கிருந்து வெறியோடு கிளம்பினார்.

தொடரும்....

கலை அப்படியே தெருத்தெருவாக கையில தட்டை ஏந்தி போய் தேடு உன் பிள்ளையை. வழியில் விழும் சில்லரை உனக்கு திரும்பி வரும் செலவுக்கு யூஸ் ஆகும் 🤷‍♀️
 
வரமட்டனே நீ என்ன பண்ணுவ......
 
Advertisement

Advertisement

Back
Top