மனைவி - 43
"பிரபா சார், உங்களைப் பார்க்க ஒரு ஆண்டி வந்து இருக்காங்க," என்று பியூன் உள்ளே வந்து சொல்ல, 'ஆன்டி' என்றதுமே பிரபாகரனுக்கு அது யார் என்று சட்டென்று புரிந்து போனது.
ஆர்வமோ இன்றி, மிக நிதானமாக, சற்றுத் தாமதமாகவே அவன் வெளியே வந்தான்.
அவன் வரவைக் கண்டதும் கலை மரியாதையாக எழுந்து நின்றார்.
அவனின் அழுத்தமான பார்வை அவரை குத்தியது.
“சாரி மாப்ள... நான் உங்களுக்கு போன் பண்ணிட்டே இருந்தேன், நீங்க எடுக்கவே இல்ல. அதனால தான் வேற வழி இல்லாம நேர்ல வர வேண்டியதாயிடுச்சு."
"எதுக்காக போன் பண்ணீங்க? உங்க பேரப் பிள்ளைகள் நல்லா இருக்காங்களான்னு கேட்கவா? இல்ல, நான் ஏன் வீட்டுக்கு வரலைன்னு விசாரிக்கவா? இத்தனை நாள் வராத போன், இப்ப எதுக்காகத் தேடி வருது?" அவனின் ஒவ்வொரு கேள்வியும் ஈட்டியாக வந்து பாய்ந்தது.
"என்ன மாப்பிள்ளை இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க? உங்களை தேடி வந்தது,
ஸ்ரீராம் எங்க இருக்கான்னு உங்களுக்குத் தெரியும்... அவன் எங்க இருக்கான்னு கொஞ்சம் சொல்றீங்களா?"
"எதுக்கு? திரும்பவும் அவனை நாசம் பண்ணவா? எந்தச் சந்தோஷமும் இல்லாம, வெறும் பொம்மை மாதிரி, உணர்ச்சியில்லாத ரோபோட் மாதிரி அவனை மீண்டும் வாழ வைக்கணுமா?"
"மாப்ள, என்ன பேசிட்டு இருக்கீங்க? அவன் என்னுடைய பையன். அவன் மேல எனக்கு முழு அக்கறை இருக்கு. உயிரைக் கொட்டி வளர்த்திருக்கேன் என் பிள்ளையை.
" சத்தம் போட்டு உங்க தப்பை மறைக்கிற கதை எல்லாம் என்கிட்ட வேண்டாம். நான் ஒன்னும் ஸ்ரீராம் கிடையாது, உங்க பொய்யான பாசவலை குள்ள வந்து விழுறதுக்கு. அவ்வளவு பாசம் னு சொல்றீங்களே, உங்க பையன் வீட்டை விட்டு வெளியில வந்ததுல இருந்து இதுவரைக்கும் ஏன் அவனைத் தேடலை? இவ்ளோ பாசம்னு சொல்றீங்களே, அந்தப் பையனை நிம்மதியா ஒரு நாளாவது வாழ விட்டீங்களா? அவனுக்காக இதுவரைக்கும் நீங்க என்ன செஞ்சு இருக்கீங்க?"
"நான் என்ன செய்யல? என் புள்ளையை தனியாக வளர்த்து ஆளாக்கி, கஷ்டப்பட்டு படிக்க வைத்து, வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சேன்!"
"ஆமா! அவன் நிறையச் சம்பாதிச்சு தரணும், அதை வச்சு நீங்களும் உங்க பொண்ணுங்களும் வீட்ல சும்மா வெட்டியா உட்கார்ந்து தின்னுட்டு தின்னுட்டு பெருத்து தூங்குறதுக்காக அவனைச் சிரமப்பட்டு படிக்க வச்சு வெளிநாட்டுக்கு அனுப்பினீங்க. இதுக்கு பேரு பாசம் இல்ல, இது ஒரு முதலீடு!"
"நீங்க பண்ணிட்டு இருக்கிறது தப்பு மாப்ள. என் பையனை என்கிட்ட கொடுத்துடுங்க. தாயையும் பிள்ளையையும் பிரிக்கிறது மகா பாவம்." என்று கடைசியாக 'செண்டிமெண்ட்' என்ற ஆயுதத்தை எடுத்தார் கலை.
"நீங்க செய்த பாவத்தை விடவா?
ராதாவையும் ஸ்ரீராமையும் பிரிச்சது பாவம் இல்லையா?
கல்யாணமான ஒரே வாரத்துல ஒரு புருஷனையும் பொண்டாட்டியையும் பிரிச்சது பாவம் இல்லையா?
இரட்டை குழந்தைகள் பிறந்து, ஒரு நாள் கூட அந்தப் பிள்ளைகளை கையில தூக்கி ஆசையா கொஞ்ச விடாம, பெத்த தாயையும் பிள்ளைகளையும் பிரிச்சது பாவம் இல்லையா?
பெத்த அப்பனுக்கே பிள்ளைங்க பிறந்திருக்குங்கிற செய்தியைச் சொல்லாம மறைச்சது பாவம் இல்லையா?
அப்பாவையும் பொண்ணுங்களையும் பிரிச்சது பாவம் இல்லையா?
மொத்தத்தில் ஒரு அழகான குடும்பத்தையே சிதைத்து நிர்மூலமாக்க நினைச்ச நீங்க என்ன தெய்வமா?"
கலை திகைத்துப் போய் சிலையாக நின்றார்.
"உன் பொண்ணுங்க உன் கூடவே இருக்காங்க. அதனாலதான் இந்த நிமிஷம் வரைக்கும் உன் பொண்ணு என் பிள்ளைகளைத் தேடவே இல்லை. எனக்காக இல்லைன்னாலும், அந்தப் குழந்தைகளுக்காகவாவது அவ மாறுவான்னு நான் இத்தனை காலம் காத்துக்கிட்டு இருந்தேன். ஆனா அவ மாறவே இல்லை. அதனால அவளுக்கு நான் 'டிவோர்ஸ்' நோட்டீஸ் அனுப்பிட்டேன்.
ஸ்ரீராம் எங்க இருக்கான்னு எனக்குத் தெரியும். உன்னால முடிஞ்சா, உன் போலித் தாய் பாசத்தைக் காட்டி அவனை ஏமாத்தி பழையபடி கூட்டிட்டுப் போ," என்று ஒரு சவாலோடு அந்த முகவரியைக் கலையிடம் கொடுத்தான்.
மகள் வாழ்வை விட ஶ்ரீராம் இருக்கும் இடத்தை அவசரமாக தேடி சென்றார்.
திடீரென்று வாசலில் ஒரு நிழல் ஆடுவதைக் கண்டு ராதை எட்டிப் பார்த்தாள். அங்கே நின்ற உருவத்தைக் கண்டதும் அவள் அப்படியே உறைந்து போனாள். உடல் நடுங்கியது.
தன் மனைவி வாசலில் மிரட்சியோடு நிற்பதைக் கண்ட ஸ்ரீராம் மெல்லத் திரும்பினான். அங்கே தன் தாயைக் கண்டதும் அவன் முகத்தில் எந்த பதற்றமும் இல்லை.
"ரதி, நீ போய் உன் வேலையைப் பாரு... பிள்ளைகளுக்கு பசி எடுக்கும்," என்று மிகவும் நிதானமாக கூறிவிட்டு, மீண்டும் தன் குழந்தைகளின் கல்வியில் தன் கவனத்தைச் செலுத்தினான்.
“ஸ்ரீராம்... அம்மா வந்திருக்கேன்டா..." கலை தழுதழுத்த குரலில் அழைத்தாள்.
அடுப்படியில் இருந்த ராதை, தீயை அணைத்து விட்டுப் பதற்றத்துடன் வந்தாள். தன் மகள்களை தன் பக்கம் இழுத்து அணைத்துக் கொண்டாள், கணவனின் கண்களில் தெரிந்த ஆக்ரோஷத்தைக் கண்டு அஞ்சினாள்.
"பிள்ளைங்க பயப்படுற மாதிரி எதையும் பண்ணாதீங்க," என்றாள் ஒரு கட்டளையாக. அது வேண்டுகோள் அல்ல, தன் குடும்பத்தைக் காக்கத் துடிக்கும் ஒரு தாயின் எச்சரிக்கை.
ஸ்ரீராம் அவளைப் பார்த்து ஒரு கணம் வசீகரமாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் 'நான் பார்த்துக்கொள்கிறேன்' என்ற நம்பிக்கை இருந்தது. அடுத்த நொடி, அவன் பார்வை தாயின் பக்கம் திரும்பியது.
"எதுக்கு என்னைத் தேடி இங்க வந்தீங்க?" அவன் குரல் கம்பீரமாக பற்றற்று ஒலித்தது.
"ஸ்ரீராம்... நான் உன் அம்மாடா! நீ நம்ம வீட்ல இருக்கணும்... எதுக்காக இங்க வந்து கிடக்கிற?"
"நம்ம வீடா? எது நம்ம வீடு?" அவன் கேள்வி கலையைத் திகைக்க வைத்தது.
"நானும் உன் தங்கச்சிகளும் இருக்குற வீடுதான் டா... நாங்க இருக்குற வீடுதான் உனக்கும் வீடு!"
ஸ்ரீராம் கசப்பாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பு ஒரு சாட்டை அடி போல விழுந்தது. "அந்த வீட்டை... ரத்தம் சிந்தி, கஷ்டப்பட்டுப் பணத்தை அனுப்பி கட்டுனது யாரு?"
கலைக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. "ஸ்ரீராம்... கண்டபடி பேசாத. கிளம்பி அம்மா கூட வா!"
"நான் வரணும்னா, நான் மட்டும் தனியா வரமாட்டேன். என் பொண்டாட்டியும் என் பிள்ளைகளும் வந்தாத்தான் நான் வருவேன்!"
"நான் உயிரோட இருக்குற வரைக்கும் அது நடக்காது ஸ்ரீராம்! பொம்பள பிள்ளைகளை வச்சுக்கிட்டு நீ எப்படி வாழ்வ? அதுங்களுக்குச் சோறு போட்டு, சீர் செஞ்சு எப்படி கல்யாணம் பண்ணி வைப்ப? ஒரு ஆம்பளப் புள்ளையை உனக்குப் பெத்துத் தர முடியாதவ... இவ எதுக்கு உனக்குப் பொண்டாட்டியா இருக்கணும்?" கலை தன் விஷத்தைக் கக்கினாள்.
"ரெண்டு பொம்பளப் பிள்ளைகளை நீங்க எதுக்கு பெத்தீங்க? எதுக்கு அவங்களை வச்சுக்கிட்டு சோறு போடுறீங்க? அந்தப் பொம்பள பிள்ளைகளுக்காகத் தானே... அவங்க வாழ்க்கைக்காகத் தானே என்னை வெளிநாட்டில் நாயா உழைக்க வச்சீங்க?" என்று ஆவேசமாகத் திருப்பிக் கேட்டான்.
"எனக்கு அம்மா, தங்கச்சி யாரும் வேணாம். என்னைப் பெத்துப் படிக்க வச்சு ஆளாக்குனதுக்காக இத்தனை வருஷம் சம்பாதித்துக் கொடுத்துட்டேன். நீங்க நிழல்ல வாழ்றதுக்கு வீடும் கட்டிக் கொடுத்துட்டேன். இனிமேல் என் பொண்ணுங்களுக்காக நான் வாழ்வேன். உங்க பொண்ணுங்களுக்கு சம்பாதித்துக் கொடுத்ததை விட 100 மடங்கு என் பொண்ணுங்களுக்காக என்னால் சம்பாதிக்க முடியும். என் இரத்தத்துல, என் உதிரத்துல பிறந்தவங்களைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க முடியாத கோழை கிடையாது நான்!"
"நானும் உன் தங்கச்சிகளும் என்ன ஆகுறது?" கலை தன் சுயநலத்தை விடாமல் கேட்டாள்.
"உன் மருமக மட்டும் உன் வீட்டு வேலை செஞ்சு ஓயணும், ஆனா உன் பொண்ணுங்க மட்டும் சாப்பிட்டுட்டு தண்டமா உட்கார்ந்திருக்கணுமா? ஏன் அவங்களை அவங்க மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைக்கல? அங்க புருஷனுங்க பார்த்துக்க மாட்டாங்களா?"
"காலம் முழுக்க என்னை நீ பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு!" கலை கூற,
"கண்டிப்பா பார்த்துப்பேன்! ஒரு அனாதை ஆசிரமத்தில் உன்னைச் சேர்த்து.
உன்னை இனிமேல் என்னால அம்மாவா ஏத்துக்க முடியாது. நீ உயிரோட இருக்குற வரைக்கும் ஒரு மகனா உன்னைப் பார்த்துக்க வேண்டியது என் கடமை... அதை எப்படிச் செய்யணுமோ அப்படிச் செய்வேன். இப்போ இந்த நிமிடம் இந்த வீட்டை விட்டு வெளியே போ!
"உன்னை இப்படியே விடமாட்டேன் ஸ்ரீராம்! எனக்கும் என் பொண்ணுங்களுக்கும் ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்!" என்று கத்தினாள் கலை.
"போங்க... எங்க போறீங்களோ போங்க! இனிமேல் என்னைத் தேடி வராதீங்க."
கலை போவதாக இல்லை,
“உன்னை படிக்க வச்சு வளர்த்து ஆளாக்கு…” என்று அவர் சொல்ல முயல,
"நீ என் உழைப்பைச் சுரண்டுனது கூட எனக்கு வலிக்கல. ஆனா எனக்கு என் பிள்ளைங்க இருக்குறதைக் கூட என்கிட்ட சொல்லாம மறைச்சியே... உன்னை அம்மான்னு சொல்லவே அசிங்கமா இருக்கு. இதுக்கு மேல நான் அசிங்கமாப் பேச விரும்பல... வீட்டை விட்டு வெளியப் போ!"
சொன்னதோடு நில்லாமல், அவளின் கைப்பிடித்து வேகமாக இழுத்து வந்தான். அவளது போராட்டங்களை மதிக்காமல் நடுரோட்டில் விட்டு விட்டுத் திரும்பிப் பாராமல் சென்றான்.
அவர் நிற்கும் நிலையைக் கண்டு ராதைக்கு மனதுக்குள் ஒரு கணம் பாவமாக இருந்தது. "அவங்க பாவம் தானே..." என்றாள் மெதுவாக.
ஸ்ரீராம் தன் மனைவியைக் கூர்மையாகப் பார்த்தான்.
"நீ அவங்களைப் பாவம்னு நினைக்கிற... ஆனா அவங்க நம்ம வாழ்க்கையைத் திரும்பவும் அழிக்கணும்னு நினைக்கிறாங்க. இப்பக் கூடத் தன் மகன் வேணும், பேரப் பிள்ளைங்க வேணும்னு அவங்க தேடி வரல. மகன் வருமானம் இல்லையே, இனிமேல் வாழ்க்கைக்கு என்ன பண்ண போறோம்னு நினைச்சு தான் தேடி வந்திருக்காங்க. அவங்க சுமைகளை இன்னமும் என் தலையில ஏத்தி வைக்கத் தான் துடிக்கிறாங்க."
அவன் மனதில் துளி கூடக் குற்ற உணர்ச்சி இல்லை. தான் செய்தது தவறு என்ற எண்ணம் எழவில்லை. அவரிடம் சண்டை போட்டுப் பழிவாங்கவோ, அவருக்குத் தண்டனை தரவோ அவன் விரும்பவில்லை. அவர் அவனுக்கு ஒரு நல்ல தாயாக இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் இவன் அவருக்கு ஒரு நல்ல மகனாகவே இருந்தான். அந்தப் பழைய அன்பின் மிச்சம் தான், அவரை மேற்கொண்டு அவமதிக்கவோ கஷ்டப்படுத்தவோ விரும்பாமல் விலகிப் போகச் செய்தது.
அந்த மூடிய கதவு, ஒரு பழைய உறவின் இறுதிக்கட்டமாக இருந்தது. அவன் தாய் மீது கொண்ட பாசம் அனைத்தும் வடிந்து போனது.
தொடரும்....