மனைவி - 45
நாட்கள் வேகமாக நகர,
"சீதா நேத்து நைட்டே சொல்லிட்டா, அந்த டிக்ஷனரி இன்னைக்கு கண்டிப்பா வேணும்னு. இப்போ லஞ்ச் டைம்ல ஃப்ரீயா தானே இருக்கோம், போய்தான் வாங்கிட்டு வருவோமே" என்று நினைத்து, தன் சக ஊழியரின் ஸ்கூட்டியை வாங்கிக்கொண்டு கடைத்தெருவுக்கு போனாள்.
ஒவ்வொரு புத்தகக் கடையாக ஏறி இறங்கினாள். அப்போது ஒரு மளிகைக் கடையின் வாசலில் பார்த்த காட்சி, அவளை அப்படியே உறைய வைத்தது. அங்கே தன் கணவன் ஸ்ரீராம், அழுக்குப் படிந்த ஒரு பனியனுடன், வியர்வை வழிய முதுகில் பெரிய மூட்டையைச் சுமந்து கொண்டு உள்ளே போவதைக் கண்டாள்.
அதிர்ச்சியில் ஸ்கூட்டியை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு, கல் சிலையாக நின்றாள் ராதை. நல்ல நேரம், பின்னால் வந்த வண்டி மோதாமல் நூலிழையில் பிரேக் அடித்தது.
"ஏம்மா! வண்டி ஓட்டத் தெரியாமல் எதுக்கு ரோட்டுக்கு வர்றீங்க? எவனாவது செத்துத் தொலையணுமா? வீட்டிலேயே இருக்க வேண்டியதுதானே!" என்று அந்த வண்டிக்காரன் கத்திய சத்தத்தில் ஸ்ரீராம் திரும்பிப் பார்த்தான்.
தன் மனைவி அங்கே நடுரோட்டில் உறைந்து நிற்பதைப் பார்த்ததும் அவனுக்குப் பிராணனே போய் விட்டது.
"ரதி! என்ன இது? பார்த்து வரக்கூடாதா? உனக்கு ஏதாவது ஒன்னு ஆயிருந்தா... என் வாழ்க்கை என்னவாகிறது?"
துடித்து போனான்.
“பல வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் நமக்காக வாழ ஆரம்பிச்சிருக்கோம், அதுக்குள்ள உனக்கு ஏதாச்சும் ஆகிடுமோன்னு பயந்துட்டேன் ரதி..."
*நீங்க... நீங்க இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க?"
'ஐயோ... பார்த்துவிட்டாளே!’ நொந்து கொண்டவன்,
"எந்த வேலை செஞ்சா என்ன ரதி? நான் யாரையும் ஏமாத்தலையே!”
“அதுக்காக இப்படி மூட்டை தூக்கவா சொன்னாங்க?”
அவனது அழுக்குப் பனியன், வியர்வை நாற்றம், கறுத்துப்போன சோர்வான முகம்... இதையெல்லாம் பார்க்கப் பார்க்க ஒரு மனைவியாக அவள் இதயம் சுக்கு நூறாக உடைந்தது.
அவன் படிப்பு என்ன? அவன் அந்தஸ்து என்ன? ஆரம்பத்திலிருந்தே இவன் இப்படித்தான் என்று தெரிந்திருந்தால் இவ்வளவு வலித்திருக்காது.
"உன்கிட்ட பொய் சொல்லணும்னு நான் நினைக்கல ரதி. ஆனா நான் மூட்டை தூக்கப் போறேன்னு சொல்லியிருந்தா நீ கண்டிப்பா என்னை விட்டிருக்க மாட்டே... அதான்..."
"இதுக்கு பேர்தான் வாழ்க்கையைத் திருத்தி அமைப்பதா? நீங்க கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்ல... நல்ல வேலை தேடிருக்கலாம்ல? என்றவளுக்கு கண்ணீர் வழிந்தது.
"ரதி ப்ளீஸ்... அழாத..."
“ஸ்ரீராம்! என்ன கோலம் இது?" திடீரென பிரபாகரனின் குரல் அதிர்ச்சியாக கேட்டது
"அண்ணா! இவரு இங்க மளிகைக் கடையில மூட்டை தூக்கிட்டு இருக்காருண்ணா..." என்று விம்மி விம்மி அழுதாள் ராதை.
"நானும் பிள்ளைகளும் இவருக்குப் பாரமா இருக்கோம்னு நினைக்கிறேன்...
"ரதி!" என அலறினான்.
"என்ன வார்த்தை பேசிட்ட? நீயும் பிள்ளைகளும் எனக்குப் பாரமா? உங்களுக்காக வேலை செய்யறது பாரமா? இன்னொரு முறை இந்த வார்த்தையைச் சொன்னா கொன்னுடுவேன்!"
அந்த ஒரே ஒரு வார்த்தை... "பாரம்" என்கிற அந்த ஒற்றைச் சொல், அவன் இத்தனை நாள் பட்ட கஷ்டத்தை எல்லாம் விட அதிகமாக அவன் இதயத்தை நூறு துண்டுகளாகச் சிதறடித்தது.
"உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கிற வரைக்கும் நீங்க வீட்டிலேயே இருங்க. எந்த வேலையும் செய்யணும்னு அவசியம் இல்லை"
“ரதி, புரியாம பேசாதம்மா... பாதி நாள் வேலை செஞ்சு முடிச்சிட்டேன். இன்னும் பத்து நாள் ஓட்டிட்டேன்னா இந்த மாதச் சம்பளம் முழுசா தருவாங்க. இல்லைன்னா இத்தனை நாள் கஷ்டப்பட்டு வேர்வையைச் சிந்தினதுக்கும் பலன் இல்லாமப் போயிடும். இந்த ஒரு மாதச் சம்பளத்தை மட்டும் எப்படியாவது வாங்கிக்குறேன். அதுக்கப்புறம் நான் கண்டிப்பா வேற நல்ல வேலை தேடுறேன்.”
ஒருவழியாக பேசியே மனைவி மனம் கரைத்து சமாதானம் செய்தான்.
"ஸ்ரீராம், நானே உன்னைப் பார்க்கணும்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். உன் தங்கச்சி அலருக்கு நான் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிட்டேன்"
“தங்கச்சி வாழ்க்கை இப்படி நாசமாப் போகுதேன்னு நினைக்கும்போது ஒரு அண்ணனா கஷ்டமா தான் இருக்கு. ஆனா, உங்க நிலைமையிலிருந்து யோசிச்சுப் பார்த்தா நீங்க எடுத்த முடிவு நூற்றுக்கு நூறு சரிதான். என் தங்கச்சி உங்களுக்கு ஒரு நல்ல மனைவியாவும் இல்லை, அவ பெத்த பிள்ளைகளுக்கு ஒரு பொறுப்பான அம்மாவாவும் இல்லை.” அவனால் தடுக்க முடியாது என்பது தெரியும்.
பிரபாகரன் விவகாரத்தில் உறுதியாக இருந்தான். இவனை விட அலர் உறுதியாக இருந்தாள்.
ஸ்ரீராம் மீதிருந்த கோபங்கள் மெல்ல மெல்லச் சூரியனைக் கண்ட பனி போல உருகத் தொடங்கிய நேரம் அது. அதிலும் குடும்பத்திற்காக அவன் எவ்வளவு கடினமாக உழைக்கிறான் என்பதைக் கண்ட பிறகு, ராதையின் கோபம் முற்றிலுமாக நீங்கியிருந்தது. அவனை ஏற்றுக்கொள்ள அவள் மனம் துடித்தாலும், ஏதோ ஒரு சின்ன உறுத்தல் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருந்தது.
பிள்ளைகள் விளையாடி கொண்டிருக்க மொட்டை மாடியில் கிடைத்த தனிமையில்,
"அன்னைக்கு உன்னைச் சந்தேகப்பட்டது நான் செஞ்ச மிகப்பெரிய பாவம்... இந்தப் பாவத்துக்கு பரிகாரம் பண்ண காலம் முழுக்க நான் தயாரா இருக்கேன். எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன். ஐ லவ் யூ ரதி... ரொம்ப லேட்டா சொல்றேன், ஆனா மனப்பூர்வமாக உணர்ந்து சொல்றேன். நீ இல்லாம என்னால வாழ முடியாது.
ஸ்ரீராம்னு ஒருத்தன் வாழ்றது உனக்காகத்தான். உன் கூட நிம்மதியா, சந்தோஷமா வாழ ஆசைப்படுறேன். சாகுற வரைக்கும் உன் நிழல்லயே இருக்கணும்னு தோணுது. உன் மனசு எப்ப மாறுதோ அதுவரைக்கும் நான் வெயிட் பண்றேன். என் மனசுல இருக்கிறதைச் சொல்லிட்டேன். நீ இவ்வளவு தூரம் நான் சொல்றதை அமைதியா கேட்டதே என் பாதி வெற்றியா நான் நினைக்கிறேன்." காதலோடு கூறினான்.
பதிமூன்று வருடங்கள்... இந்த ஒற்றை வார்த்தைக்காக அவள் தவம் கிடந்தாள்.
அவளுக்கு முடிவு செய்ய தனிமை கொடுத்து பிள்ளைகளை தேடி சென்றான்.
நீண்ட நேரம் யோசித்தாள். எத்தனை முறை யோசித்தாலும் அவன் மீது அவளுக்குக் கோபம் வரவில்லை, மாறாக ஆழ்ந்த காதல் மட்டுமே மேலோங்கியது.
ஆசைப்பட்ட வாழ்க்கை, அவள் நேசித்த கனவு இப்போது அவள் காலடியில் காத்திருக்கும் போது, அதை மிதிக்க அவளுக்கு மனம் வரவில்லை.
ஶ்ரீராம் பிள்ளைகளுடன் தூங்குவது போல் படுத்திருந்தான். அவன் காதலை வெளிப்படுத்துவதற்கு அவளிடம் என்ன பதில் என்று ஆவலாக காத்திருந்தான்.
ராதை வேலைகளை முடித்து எரியும் விளக்குகளை அனைத்து விட்டு சீதா அருகே படுக்காமல் கணவன் அருகே படுத்து செயலால் தன் சம்மதத்தை கூறினாள்.
அவனுக்குள் ஒரு மின்னல் வெட்டியது! இது நிஜமா இல்லை கனவா? அவன் இதயம் தாறுமாறாக துடித்தது.
அந்த இருட்டில், ஸ்ரீராமனின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவளுக்குத் தெரியவில்லை. உடல் லேசாக நடுங்க, மெல்ல மனைவியை நோக்கி நகர்ந்தான். அவன் கைகள் அவள் இடுப்பில் உரிமையோடு படர, ராதைக்கு ஒரு நிமிடம் தூக்கி வாரிப் போட்டது. அவளின் சிறு நடுக்கத்தை அவன் கைகள் உணர்ந்தன. ஆனால் விலக அவன் மனம் இடங்கொடுக்கவில்லை. இன்னும் அவளை நெருங்கி படுத்தவன், அவள் தலையை மெல்லத் தூக்கித் தன் நெஞ்சில் அணைத்துக் கொண்டான்.
அவன் மனம் அவள் உடலை தேடவில்லை; அவன் கொண்டது தூய்மையான காதல் விரதம். அவனுடைய ஆழ்மனம் அவளின் அன்பிற்காக ஏங்கியது. அவள் தானாக முன்வந்து காட்டிய அந்தச் சிறு நெருக்கமே அவன் மனதை குளிரச் செய்தது. ஏற்கனவே ஸ்ரீராம் அவளுக்கு அடிமையாகிப் போயிருந்தான். அவளையே தன் மந்திரமாக மாற்றிக் கொண்டவன் அவன்.
"ஏண்டி பயப்படுற? நான் உன் புருஷன் தாண்டி.... உன்னுடைய நடுக்கத்தை கண்டு கூனி போறேன். கல்யாணம் ஆகி 13 வருஷம் ஆகுது. இத்தனை வருஷத்துல உன்னைப் புரிஞ்சுக்காம விட்டுட்டேன். உன்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கல, உன் ஆசைகளை நிறைவேத்தல. இனிமே நான் வாழப் போற ஒவ்வொரு நிமிடமும் உனக்காக மட்டும் தான்."
"நிம்மதியா தூங்கு... உன்கிட்ட நான் வேற எதையும் எதிர்பார்க்கல. நீ பயப்பட வேண்டாம். நம்ம பொண்ணுங்க பக்கத்துல இருக்காங்க, அதனால எனக்கு எந்தத் தப்பான ஆசையும் இல்ல. எனக்குத் தேவை உன்னுடைய நெருக்கம், உன்னுடைய அன்பு மட்டும் தான். அதை மட்டும் எனக்குக் கொடு. எத்தனை காலம் ஆனாலும் இந்த அன்போட நான் இருப்பேன்.
என்றவன் மென்மையாக அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
இருவர் விழிகளும் கலங்கியது. ஆனந்த கண்ணீரில் தத்தளித்தது.
பிள்ளைகள் அருகில் இருந்தால் அவர்கள் அதிகம் பேசவில்லை. ஆனால் அவன் இதயம் பேசிக்கொண்டிருந்தது. அவள் அவன் நெஞ்சத்தை மஞ்சமாக்கி, அந்த இதயத்துடிப்பை ஒரு சங்கீதமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். ஸ்ரீராமின் கைகள் அவள் இடுப்பைச் சுற்றி வளைத்துத் தனக்குள் புதைத்துக் கொண்டது. அது காமத்தால் வந்த அணைப்பல்ல; சிதைந்து போன உறவைப் புதுப்பிக்கும் ஒரு புனிதமான அணைப்பு.
கணவனின் நெஞ்சில் முகம் புதைத்து, தன் கவலைகள், எதிர்காலப் பயங்கள் அனைத்தையும் மறந்து, மௌனம் என்ற மொழியில் பேசும் துறவியாய் அவனிடம் தன்னை அர்ப்பணித்தாள் ராதை. இங்கே வ தாம்பத்தியம் இருந்திருந்தால் கூட இவ்வளவு அர்த்தம் இருந்திருக்காது.
இவர்கள் வாழ்வில் மெல்ல மெல்ல காதல் மணம் வீச தொடங்கியது.
அலர் பிரபாகரன் விவாகரத்து நாள் வந்தது.
நீதிபதி அலரைப் பார்த்து, "அலர், குழந்தைகள் கஸ்டடியை நீங்க எடுத்துக்கிறீங்களா?" என்று கேட்டார்.
அவள் சிறிதும் தயக்கமின்றி, "எனக்கு அவங்க கஸ்டடி வேணாம் மேடம். அவங்க அவங்க அப்பா கூடவே இருக்கட்டும். எனக்கு என்னுடைய பிள்ளைங்க வேண்டாம். எதிர்காலத்துல அவங்க என்னை வந்து தொந்தரவு பண்ணவும் கூடாது" என்று நஞ்சைக் கக்கினாள்.
நீதிபதி அவளை அருவருப்புடன் பார்த்தார். ஒரு தாயின் வாயிலிருந்து இத்தனை வன்மமான வார்த்தைகளா? "பெண் குலத்திற்கே நீ ஒரு சாபக்கேடு!" என்று அவர் முகத்தில் அடித்தார் போலச் சொன்னார்.
அதே நீதிமன்ற வளாகத்தில் ஸ்ரீராம், பிரபாகரனுக்குத் துணையாக நின்றிருந்தான்.
"ஸ்ரீராம்... உன் தங்கச்சி வாழ்க்கை உன் கண் முன்னாடி நாசமா போகுது. நீ எதையுமே கண்டுக்காம எப்படி இவ்வளவு பெரிய கல்நெஞ்சக்காரனா இருக்க?" கலை அவனை குற்றவாளியாக்கி,
“கல்நெஞ்சம் தான். பிரபா கொடுத்த வாய்ப்பை குப்பையா தூக்கி போட்டது உங்க பொண்ணு.
அவ வாழ்க்கையைக் காப்பாத்திக்க நீங்களும் அவளுக்கு நல்ல புத்திமதி சொல்லல. எப்படியோ போங்க, சீரழியணும்னு முடிவு பண்ணிட்டீங்க!"
அடுத்த இரண்டு மாதத்தில் குடும்பத்தில் வருமானம் இல்லாமல் அக்கா தங்கைகளுக்குள் சண்டை அதிகமானது. அலரிடம் பிரபாகரன் கொடுத்த நஷ்டஈடு இருக்க மலர் அசோக் பேச்சை கேட்டு அந்த பணத்தில் குறி வைத்தாள்.
தொடரும்...