மனைவி 46
"அக்கா... அவருக்கு ஏதோ காசு வேணுமாம், ஒரு இரண்டாயிரம் ரூபாய் கொடு" என்று மலர் கேட்க, அலர் எரிச்சலானாள்.
"என்கிட்ட காசு என்ன கொட்டியா கிடக்கு? என்கிட்ட வந்து கேக்குற... அந்த ஆள்தான் மாசச் சம்பளம் வாங்குறானே, அவன் காசை என்ன பண்றான்?" என்று மரியாதை இல்லாமல் அலர் பேச, மலருக்குக் கோபம் தலைக்கேறியது.
"அலர்... மரியாதையா பேசு, அவர் என்னுடைய புருஷன்!"
"சத்தம் போடாத மலர்! பத்து பைசா சம்பாரிச்சு கொடுக்க வழி இல்லாத ஒருத்தனைக் கட்டிக்கிட்டு என்கிட்ட வந்து காசு கேட்கிறாய்? என்னால ஒத்த ரூபா தர முடியாது... போ இங்கிருந்து!" என்று ஒரு நாயை விரட்டுவது போல் தன் தங்கையை விரட்டியடித்தாள்.
கலை தன் கண் முன்னே தன் பிள்ளைகள் அடித்துக் கொள்வதை பார்க்க முடியாமல் ஒரு நடைபிணமாக அமர்ந்திருந்தார்.
அந்த வீட்டின் மகாராணியாக இருந்தவர், வெறும் இரண்டு மாதங்களிலேயே அங்கே ஒரு செல்லாக்காசாக மாறியிருந்தார்.
திடீரென மலர் குண்டைத் தூக்கிப் போட்டாள். "அம்மா... இந்த வீட்டை விக்கணும். எனக்குப் பணம் தேவைப்படுது. இனிமேல் என்னால இந்த வீட்ல இருக்க முடியாது. நான் தனிக்குடித்தனம் போகலாம்னு இருக்கேன்."
"வீட்டை விக்கணுமா? என்ன பேசிட்டு இருக்க மலர்? இந்த வீட்டை விட்டுட்டா நாம தெருவுக்கு தான் வரணும். நாம எங்க போறது?" என்று கலை பதறினார்.
"அலர் ரொம்பக் கேவலப்படுத்துறா. எனக்குன்னு சுயமரியாதை இருக்கு. நீ வீட்டை வித்து பாதி பங்கு பணத்தை கொடு."
"நீங்க ரெண்டு பேரும் அக்கா தங்கச்சின்னு சொல்லிக்கிறீங்க... இப்படி அடிச்சுக்கிறீங்களே! அண்ணன் தம்பிங்க கூடச் சொத்துக்காக இப்படி அடிச்சுக்க மாட்டாங்க. இந்த வீட்டை வித்துட்டா நமக்குன்னு ஒரு கூரை கிடையாது."
கலை பேசுவதை இருவரும் கேட்கவில்லை.
“இவ மட்டும் புருஷன் சம்பாரிச்சு கொடுத்தா வாழ்ந்துட்டு இருக்கா? நான் புருஷனோட வாழ்றேன். இவ புருஷனே இல்லாம 'வாழாவெட்டியா' இந்த வீட்ல உட்கார்ந்து தின்னுட்டு இருக்கா..."
இந்த வார்த்தை அலரைச் சீண்டியது. "நான் வாழாவெட்டியா இருந்தாலும், புருஷன் கூட வாழ்ந்து ரெண்டு புள்ள பெத்தவடி! உன்ன மாதிரி மலடி கிடையாது!"
அக்கா, தங்கை இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி நாராசமான வார்த்தைகளால் தாக்கி கொள்ள, கலை செய்வதறியாது திகைத்து போனார்.
"என்னை மலடி ன்னு சொல்றியா? " ஆங்காரமாக இருவருக்கும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டவர் தாய் முன்பே.
கலை இருவரையும் தடுக்க போராட,
" இவளுடைய திமிருக்குத்தான் இவ வாழாவெட்டியா இருக்கா! என்னைப் பார்த்து 'மலடி'ன்னு சொல்லிட்டால்ல... இவ எப்படி நாசமாப் போறான்னு மட்டும் நீ பாருமா! இனிமேல் இந்த வீட்டில் நான் ஒரு நிமிஷம் இருக்க மாட்டேன்." என கண்ணீர் வடித்தாள்.
கலை இத்தனை காலம் கட்டிக் காத்த குடும்பம், பலமான காற்றில் சரிந்து விழும் 'சீட்டுக்கட்டு' போல கண்முன்னே உருக்குலைந்து போனது.
முன்பெல்லாம் ஸ்ரீராம் மூலமாகக் கட்டுக் கட்டாக வருமானம் வந்து கொண்டிருந்த போது, அங்குப் பிரிவுகள் பெரிதாகத் தெரியவில்லை.
பணத்தின் மினுமினுப்பில் மனக்கசப்புகள் மறைந்து கிடந்தன. ஸ்ரீராமின் சம்பாத்தியத்துக்காக ஒருவரை ஒருவர் குறை கூறாமல், பல்லைக் கடித்துக் கொண்டு ஒரே வீட்டில் ஒட்டிக்கொண்டு இருந்தனர். ஆனால், இன்று வருமானம் குறையத் தொடங்கியதும், கசப்புகள் கசிந்து வெளியே வந்துவிட்டன. ஒரு காலத்தில் கை கொடுத்துக் கொண்டவர்கள், இன்று ஒருவரை ஒருவர் விரல் நீட்டிப் பேசும் அளவிற்கு மிருகங்களாக மாறிவிட்டனர்.
ஸ்ரீராம் ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவனின் இடைவிடாத உழைப்பும், விடாமுயற்சியும் அவனுக்கு ஒரு கௌரவமான வருமானத்தை ஈட்டித் தந்தது.
குடும்பத்துடன் சந்தோஷமாக கண்ணியமாக வாழ்ந்தான்.
ராதைக்கும் அவனுக்கும் இடையே மெல்ல மெல்ல வாழ்க்கை மலர தொடங்கியது.
"அப்பா, நாளைக்கு ஸ்கூல்ல பேரண்ட்ஸ் மீட்டிங் இருக்கு... நீங்க வரிங்களா?" என்று மகா தன் பிஞ்சு விரல்களால் அவன் சட்டையைப் பிடித்து ஏக்கமாக கேட்டாள்.
"அப்பா கண்டிப்பா வருவேன்..."
சொன்னது போல் பள்ளிக்கு சென்றான்.
அங்கே மற்ற மாணவிகள் ஶ்ரீராமை ஆச்சர்யமாக பார்த்து சீதா மகாவிடம் கேட்க, அப்போது ஒருவள் கேட்டு சென்றாள்.
"அந்தப் பொண்ணுதான் எப்பவுமே எங்களைக் கிண்டல் பண்ணி சிரிச்சுக்கிட்டே இருக்கும்," என்றாள் மகா, மெதுவான குரலில்.
"என்ன சொல்லி கிண்டல் பண்ணுவாங்க மகா?"
சீதா தடுக்கும் முன்னே,
"அப்பா இல்லாத பொண்ணுங்க... அப்பா பேரு தெரியாத பொண்ணுங்கன்னு சொல்லி கிண்டல் பண்ணுவாங்கப்பா..."
அந்த வார்த்தைகள் ஸ்ரீராமின் இதயத்தை அப்படியே பிழிந்தன. ஒரு கணவன் செய்யத் தவறிய கடமை, அவன் பிள்ளைகளை எவ்வளவு காயப்படுத்தி இருக்கிறது என்பதை அவன் உணர்ந்தான். சட்டென்று மகளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
"யாராவது உங்களை கிண்டல் பண்றாங்கன்னா, அவங்களை எதிர்த்து நீங்க தைரியமாப் பேசுங்க. நீங்க பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கும் உயிர் இருக்கு. நீங்க பேச ஆரம்பிச்சா தான் மத்தவங்க நிறுத்துவாங்க. உங்களுக்கு எப்பவும் நான் பக்கபலமாக இருப்பேன்." என்றான் பிள்ளைகளை தைரிய படுத்தினான்.
மீட்டிங் தொடங்கியது, ஆசிரியர் அழைக்கவும் ஶ்ரீராம் அவர் எதிரே சென்று அமர்ந்தான்
"சார், ஃபர்ஸ்ட் டைம் நீங்க இந்த பிள்ளைகளுக்காக பேரண்ட்ஸ் மீட்டிங் அட்டென்ட் பண்ண வர்றீங்க. இதுவரைக்கும் ராதா கூட இங்க வந்தது கிடையாது. ஏன்னா அவங்க இருந்த சிச்சுவேஷன் அப்படி. இருந்தாலும் எச்.எம் கிட்ட ஒவ்வொரு முறையும் பதில் சொல்றது எனக்குப் பெரும் போராட்டமாக இருக்கும். இந்த முறை அந்தப் போராட்டத்திலிருந்து நான் தப்பிச்சுட்டேன் போல இருக்கு!"
ஸ்ரீராம் தலைகுனிந்தான். "ஸாரி மேடம், எங்க ஃபேமிலி பக்கம் இருந்த சில குழப்பங்களால் என்னால வர முடியாம போச்சு. இனிமேல் என் பொண்ணுங்களுக்காக எல்லாத்துக்கும் நான் கண்டிப்பாக வருவேன்."
"உங்க பொண்ணுங்க மேல எந்த குறையும் இதுவரைக்கும் வந்தது கிடையாது சார். சீதா எப்பவுமே படிப்புல நம்பர் ஒன். மகாவுக்கு ஸ்போர்ட்ஸ் மேல அதிக ஆர்வம். ஆனா அவ ஸ்போர்ட்ஸ்ல மட்டும் இருந்தா போதாது, படிப்புலயும் கொஞ்சம் கவனம் செலுத்தணும். அவ ஒன்னும் படிக்காத பொண்ணு கிடையாது, இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டா அவளும் ஃபர்ஸ்ட் ரேங்க் வருவா."
ஸ்ரீராம் நிதானமாகச் சொன்னான், "மகா ஃபர்ஸ்ட் ரேங்க் வந்துட்டா, அப்புறம் சீதா ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்க முடியாது இல்லையா மேடம்? மகா தன் அக்காவுக்காகத் தன் இடத்தைச் சில சமயம் விட்டுக் கொடுக்கிறான்னு கூட நம்ம எடுத்துக்கலாம்." என்றான் பொறுமையாக.
ஆசிரியர் பெருமையாக சிரித்தார். பிள்ளைகளின் விருப்பத்தை மதிக்கும் பெற்றோர்கள் இருப்பது அறிதல்லவா?
பேரண்ட்ஸ் மீட்டிங் முடிந்ததும் பிள்ளைகளை அழைத்து கொண்டு மனைவி வேலை செய்யும் இடத்திற்கு வந்தான்.
தரையில் கிடந்த ஒரு கனமான பருப்பு மூட்டையைக் கவனிக்காமல் அதில் தடுக்கி நிலைகுலைந்து கீழே விழப்போனாள்.
அதற்குள் ஒருவன் அவளை பிடித்து விட,
அதே நேரம் ஶ்ரீராம் குழந்தைகளுடன் அங்கு வந்தான்.
ராதை சட்டென்று பதறிப்போய் அவனிடமிருந்து விலகினாள். அவள் உடல் நடுங்கியது. முகம் வெளிறிப் போனது. அவன் சந்தேகப்படுவான் என்று.
ஸ்ரீராம் உள்ளுக்குள் உடைந்து போனான். தன் மனைவியை தான் எவ்வளவு காயப்படுத்தியிருந்தால், ஒரு விபத்தில் யாரோ உதவப் போனதைக் கூட இப்படி பயந்து பார்ப்பாள்?
"தேங்க்ஸ் பிரதர்! நீங்க மட்டும் கரெக்டா பிடிக்கலைனா என் வைஃப் கீழே விழுந்து பலமா அடிபட்டு இருக்கும்." காப்பாற்றியவனுக்கு நன்றி கூற,
தன்னைச் சந்தேகிக்காத கணவனின் அந்தப் புதிய அன்பில் ராதை அப்படியே கரைந்து போனாள்.
அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தவன், “என்ன ரதி... இப்போவும் என்னைப் பார்த்தா அந்தப் பழைய சந்தேகப் பிராணி மாதிரி தெரியுதா?”
கவலையோடு அவனைப் பார்த்தவள், “முன்னாடி நடந்த கசப்பான விஷயங்களை என்னால டக்குனு மறக்க முடியலங்க...” என விம்மினாள்.
“வெறும் மன்னிப்பு மட்டும் உன்னைச் சரி பண்ணாது ரதி. ஆனா ஒவ்வொரு முறையும் என்னை அந்தப் பழைய கோணத்திலேயே பார்க்காதே. அன்னைக்கு நான் இருந்த மனநிலை அப்படி. தப்பு, சரி எதுவுமே யோசிக்க முடியல. ஆனா இப்போ சொல்றேன், இனிமேல் கடவுளே வந்து உன்னைப் பத்தித் தப்பா சொன்னாலும், ஏன்... நீயே வந்து உன் மேல தப்புனு சொன்னாலும் நான் எதையும் நம்ப மாட்டேன். எனக்கு என் பொண்டாட்டி மேல நம்பிக்கை இருக்கு. என் மேல இருக்கிற நம்பிக்கையை விட உன் மேல அதிகமா இருக்கு. வாழ்க்கையையும் புரிஞ்சுக்கிட்டேன், உன்னையும் புரிஞ்சுக்கிட்டேன்." கூறியவன் அவள் தோளில் உரிமையோடு கை போட்டு அணைத்தபடி அழைத்துச் சென்றான்.
அன்று நாள் முழுவதும் குடும்பமாக கழித்தனர்.
அலர் மலர் சண்டை போட்டு வீட்டை விற்று தாயை நடுத்தெருவில் விட்டு சென்றனர்.
"அம்மா அவளுக்கு ஏற்கனவே பணம் இருக்கு எனக்கு 30 லட்சம் வேணும்" என மலர் சண்டை போட்டு எடுத்துக் கொண்டு கணவனுடன் கிளம்ப,
"அம்மா நான் பெங்களூர் போறேன். எனக்கு 25 லட்சம் போதும். மீதியை நீ வச்சுக்கோ. உன் வாழ்க்கையை பார்..." என அவளும் விட்டு சென்றால்.
கலை நடுத்தெருவில் சிலையாக நின்றார். கையில் மிச்சம் இருந்த சொற்ப பணத்துடன் அவர் மொத்தமாக உறைந்து போனார். பெற்று வளர்த்த இரண்டு பெண்களும் அவரை ஒரு குப்பையைப் போல தூக்கிப் போட்டுவிட்டு சென்றனர்.
அந்த நிமிடம் தான் அவருக்கு பேருண்மை சுட்டெரித்தது. அவர் தன் பெண் பிள்ளைகளுக்காகப் பணம் சேர்த்தாரே தவிர, அவர்களைப் பக்குவப்படுத்தி வளர்க்கவில்லை. அவர்களுக்கு அன்பையும், ஒழுக்க நெறியையும் சொல்லிக் கொடுக்கத் தவறிய ஒரு தாயாக, இன்று அனாதையாகத் தெருவில் நின்றார்.
அவரும் சரியில்லை, அவர் வளர்த்த வளர்ப்பு முறையும் சரியில்லை. விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று காய்க்குமா என்ன?
சுட்டெரிக்கும் வெயிலில், மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்தச் சாலையில், கையில் ஒரு பையை இறுக்கப் பிடித்தபடி அழுதுகொண்டே நின்றிருந்தார் கலை. அவளை கடந்து சென்ற மக்களும் அவரை கண்டு கொள்ளவில்லை.
பைக்கில் வந்த இருவர் நொடிப்பொழுதில் அவள் கையில் இருந்த பையைப் பிடுங்கிக் கொண்டு அந்த மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் பைக்கைச் செலுத்தினர்.
"ஐயோ என் பணம்! ஐயோ என் பணம்!" என்று அந்தச் சாலையே அதிரும்படி கதறிக் கொண்டு நின்றார். "ஐயோ... யாராவது காப்பாத்துங்க... என் பணம்... போயிருச்சே... என தலையில் அடித்துக் கொண்டு கதறி அழுதார்.
அதே வழியில் தன் மனைவி ராதை மற்றும் பிள்ளைகளுடன் ஸ்ரீராம் பைக்கில் வந்து கொண்டிருந்தான்.
தொடரும்....