மனைவி - 47
தன் வாழ்வில் இழந்த அமைதியைத் தேடி எங்காவது வெளியே செல்லலாம் என்று வந்தவனுக்கு, அங்கே காத்திருந்த காட்சி பேரதிர்ச்சி. கூட்டத்தையோ, அங்கே அழுதுகொண்டிருந்த கலையையோ ஸ்ரீராம் ஆரம்பத்தில் கவனிக்கவில்லை. ஆனால், அவன் பின்னால் அமர்ந்திருந்த ராதை அதைக் கவனித்து விட்டாள்.
"என்னங்க... நில்லுங்க! அங்கே பாருங்க... அது உங்க அம்மா மாதிரித் தெரியுது. எதுக்காக இப்படி அழுதுட்டு இருக்காங்க?"
ஶ்ரீராம் பைக் நிறுத்தியவன் “நீங்க இங்கேயே இருங்க” என தாயிடம் சென்றான்.
மகனை கண்டதும் "கையில இருந்த பத்து லட்சத்தை ஒருத்தன் திருடிட்டு போயிட்டான் ஸ்ரீராம்! அவனைப் போய் புடிக்கணும்... என் பணம் போயிருச்சே!" என கதற,
"தம்பி, அந்த ஆளுங்க எந்தப் பக்கம் போனாங்கன்னே தெரியல. இந்தத் தெருவுல ஒரு சிசிடிவி கேமரா கூட கிடையாது." அங்கே கூடியவர்கள் கூற,
"பத்து லட்சமா? இவ்வளவு பெரிய தொகையை வைச்சுக்கிட்டு எதுக்கு நடுரோட்டில் நின்னீங்க? ஏது உனக்கு"
"வீட்டை வித்துட்ட..." என்றார் கலை.
"வீட்டை வித்துட்டீங்களா? எதுக்காக வீட்டை வித்தீங்க? அந்த வீட்டைக்கட்ட நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன் தெரியுமா?" தொண்டை அடைத்தது அவனுக்கு. உழைத்தவனுக்கு தான் வலி தெரியும்.
"அலரும் மலரும் விக்கச் சொன்னாங்க... அதான் வித்துட்டேன்" என்று அவர் சாதாரணமாகச் சொன்னதைக் கேட்டு அவன் இரத்தம் கொதித்தது.
"கடைசி வரைக்கும் உன் பொண்ணுங்களுக்குத்தான் நீ எல்லாமே செய்வ இல்ல? இந்த வீடு என்னுடைய உழைப்புல உருவானதுன்னு உனக்குத் தெரியாதா? என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கணும்னு உனக்குத் தோணலையா? சரி விடு... என்னிடம் கேட்கத் தோணல... அந்த வீட்டை வித்துட்டா இனி உன் நிலைமை என்ன ஆகும்? இப்ப உன்னை விக்கச் சொன்ன அந்த ரெண்டு பேரும் எங்க போனாங்க? அவங்க கூட நீ போக வேண்டியதுதானே?" என்றான் வெறுப்பின் உச்சத்தில்.
தன் கணவன் மீது அவளுக்கு மலையளவு நம்பிக்கை இருந்தது உண்மைதான்.
ஆனால், அவனின் இந்தத் தீராத தாய் பாசம் எங்கே தன் வாழ்வைச் சிதைத்துவிடுமோ என்ற அச்சம் அவளை விடாமல் துரத்தியது. தாயை அவன் ஏற்றுக் கொள்வதிலோ, அவளுக்குச் சோறு போட்டுப் பார்த்துக் கொள்வதிலோ அவளுக்கு எந்தத் தடங்கலும் இல்லை.
ஆனால், "ஏற்கனவே சிதைந்து போன என் வாழ்வும், என் பிஞ்சு மகள்களின் எதிர்காலமும் அந்த அம்மாவால் மீண்டும் பறிபோய் விடுமோ?" என்ற பயம் ஒரு கொடிய விஷமாக அவள் மனதை மெல்ல மெல்ல அரித்துக் கொண்டிருந்தது.
எல்லாமே முடிந்துவிட்டது என்று கண்ணீரில் கரைந்து போன வாழ்க்கை, இப்பதான் மெல்லக் குளிர்ந்து, ஒரு வசந்த காலம் போலத் தொடங்க ஆரம்பித்திருந்தது. இந்தச் சூழலில் கலையின் வரவு, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல அவளுக்குள் ஒரு பேரச்சத்தை ஏற்படுத்தியது. அது தப்பில்லை தானே?
ஸ்ரீராம் தன்னைத் தேடி வந்து வண்டியில் ஏற்றிக் கொண்டதும் கலைக்குச் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை.
'என் புள்ள எனக்குக் கிடைச்சுட்டான்! இனிமேல் என் மகனும் நானும் மட்டும் தான் இந்த உலகத்துல வாழப் போறோம். எங்களுக்கு நடுவுல அந்த பொம்பளையும் வேணாம், அவ பிள்ளைங்களும் வேணாம். அவன் என்னை ராணி மாதிரிப் பார்த்துப்பான். சாகுற காலம் வரைக்கும் நான் அவன் நிழல்லயே இருப்பேன்.
நான் இனிமேல் தனியா இருக்கத் தேவையில்லை. எனக்கு அவன்... அவனுக்கு நான்... இப்படித்தான் வாழப் போறோம். இனிமேல் எங்களை யாரும் வந்து தொந்தரவு பண்ண முடியாது,' என்று மனதிற்குள் கற்பனை கோட்டைகளை ஆகாயத் தூரம் கட்டிக் கொண்டிருந்தார்.
மகனுடன் தெம்பாக சென்று கொண்டிருந்த அந்தத் தாய்க்குத் தெரியாது, மகனின் முடிவு என்னவென்று! அன்று வாக்கால் சொன்னதை, இன்று செயலில் காட்டி ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே அவன் சென்று கொண்டிருந்தான்.
அவன் ஓட்டி வந்த பைக் ஒரு முதியோர் ஆசிரமத்தின் முன்னால் நின்றது. கலை அதைச் சற்றும் கவனிக்காமல், ஏதோ பெரிய அரண்மனைக்கு வந்துவிட்டது போன்ற மிதப்பில் வண்டியிலிருந்து இறங்கினார்.
"இந்த வீட்ல தான் நாம தங்கப் போறோமா ஸ்ரீராம்?" என்று அவர் மிகுந்த எதிர்பார்ப்புடன் கேட்க, ஸ்ரீராம் தன் தாயைச் சுட்டெரிப்பது போலக் கூர்ந்து பார்த்தான்.
"நீங்களும் நானும் இங்கே ஒண்ணா தங்கணும்னு எதிர்பார்க்கிறீர்களா?" என்று அவன் கேட்ட குரலில் இருந்த நக்கல் அவருக்குப் புரியவில்லை.
"ஆமா, நீதானே என் புள்ள... அப்ப நீதானே என்னைப் பார்த்துக்கணும்?" என்றார் உரிமையோடு.
"அப்போ என் பொண்டாட்டியையும் பிள்ளைங்களையும் யார் பார்த்துக்கிறது?" என்று அவன் கேட்டதும் கலையின் முகம் சட்டெனக் கருத்து மாறியது.
"ஸ்ரீராம்! உன்னைப் பெத்து, கஷ்டப்பட்டு, படிக்க வைச்சு, ஆளாக்கி, வெளிநாட்டுக்கு அனுப்பிச் சம்பாதிக்க வைச்சது நான்! உனக்கு நான்தான் முக்கியம். இந்த அம்மா தான் முக்கியம். அவள் முகத்தைக் கூடப் பார்க்காம திடீர்னு இவ வந்து 'புள்ளைங்க'ன்னு சொன்னதும் அதை அப்படியே நம்புறீயா?" என்று அவர் கேட்டார்.
அந்த நொடியிலும் தன் தவறை உணராமல், வன்மத்தையே கக்கும் அந்தத் தாயைப் பார்த்து ஸ்ரீராம் விரக்தியில் ஓங்கிச் சிரித்தான்.
"நீ என்னைப் பெத்து வளர்த்தது உண்மைதான்... எனக்காகக் கஷ்டப்பட்டேன்னு சொல்றேல்ல? ஆனா உனக்காக உன்னை விட அதிகமா நான் அங்கே கஷ்டப்பட்டேன். என்னோட சந்தோஷம், சுகம் எல்லாத்தையும் விட்டுக்கொடுத்து, பெண்டாட்டி பிள்ளைகளை அனாதையா விட்டுட்டு, உனக்காக அங்கே நாயா உழைச்சேன்.
நல்ல சாப்பாடு இல்லாம, ஒரு நல்ல துணி கூட உடுத்தாம, எனக்காக எடுக்காமல் ஒவ்வொரு ரூபாயும் சேமிச்சு உனக்கு அனுப்பி, உன்னை இங்கே ராணி மாதிரி வாழ வைச்சேன். அந்த நன்றி கொஞ்சமாவது இருக்கா? நீ இன்னைக்கு எங்கே வந்து நிக்கிறன்னு தெரியுதா?" அவனின் ஒவ்வொரு கேள்வியும் சம்மட்டி அடியாகக் கலையைத் தாக்கியது.
"என் பொண்டாட்டிக்கு நான் ஒரு பைசா செலவு பண்ணல. ஆறுதலா நாலு வார்த்தை கூட அவகிட்ட பேசினது இல்ல. ஆனா, அவ வாடகை வீட்ல கஷ்டப்பட்டாலும், தெருவுல நின்ன புருஷனைத் துரத்தாமல் வீட்டுக்குள் சேர்த்துக்கிட்டா. உங்க ரெண்டு பேருக்கும் இருக்கிற வித்தியாசம் இதுதான்!"
"என் பிள்ளைங்க முகத்தை நான் பல வருஷம் பார்க்காம இருந்திருக்கலாம். ஆனா அவங்க தான் என் ரத்தம், என் பிள்ளைங்க. அவங்க முகமே அந்தச் சாட்சியைச் சொல்லும். அதை உன்கிட்ட நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை."
"இப்பவாவது, இந்த நிமிஷமாவது நீ உன் தப்பை உணர்ந்து திருந்துவ, எங்களோட வந்து வாழ்வன்னு நான் ஒரு துளி ஆசைப்பட்டேன். ஆனா உன்னோட இந்தத் திமிரும் வன்மமும் குறையவே இல்லை. இனி உன்னை நான் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போனா, என் நிம்மதியான குடும்பம் அப்படியே
உள்ள வா..." என்று கையைப் பிடித்து
கலை வரமாட்டேன் என்று அடம் பிடித்துத் திமிறினார்.
"நீ மரியாதையா என் கூட வந்தா, உன்னை இந்த இடத்துல முறைப்படிப் பணம் கட்டி சேர்த்துட்டுப் போவேன். இது பிரைவேட் இடம், நல்லாப் பார்த்துப்பாங்க. இல்ல, நான் இப்படித்தான் பிடிவாதமா இருப்பேன்னு சொன்னா, உன்னை அப்படியே நடுரோட்டில் விட்டுட்டு நான் போயிட்டே இருப்பேன்.
தன் மகன் இவ்வளவு கொடூரமாக பேசுவான் என்று கலை எதிர்பார்க்கவில்லை.
சம்மட்டியால் மண்டையில் அடித்தது போல இருந்தது அவருக்கு. கண்கள் கலங்க மகனைப் பார்த்தார். "நீயா இப்படிப் பேசுற ஸ்ரீராம்?"
"அம்மா! ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பப் பேசி என் மண்டையை காய வைக்காத. என் வாழ்க்கையை என்னை வாழ விடு. உன்னை நான் தெருவுல தூக்கிப் போடல, நீயா தேடி வந்து தெருவுல நிக்கிற. எனக்கு ஏதாவது செய்யணும்னு நான் கேட்டேனா? இருந்ததை வைச்சுட்டு அமைதியா வாழ்ந்திருக்கலாம்.
முடிஞ்சு போனதைப் பத்திப் பேசிப் பயன் இல்லை. ஒரு மகனா உன்னை அனாதையா விட எனக்கு மனசு இல்ல. ஆனா உன்னோட இந்தக் குணத்துக்கு உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போகவும் எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு வசதி வரும்போது உனக்குன்னு ஒரு தனி வீடு எடுத்து வச்சு உன்னைத் தங்க வைக்கிறேன். அதுவரைக்கும் இங்கேயே இரு. கஷ்டம்னா என்ன, மனவலினா என்ன, உறவுகளோட அருமை என்னன்னு இப்போவாவது உனக்குப் புரியட்டும்,"
அவர் கெஞ்சல் கதறல் எதுவும் அவன் காதில் ஏறவில்லை.
பிடிவாதமாக அந்த ஆசிரமத்தில் சேர்த்து பணம் கட்டினான்
சேர்க்கும் முன்பு தீர விசாரித்தான்.
“தம்பி, நீங்க பயப்படாம போயிட்டு வாங்க. நாங்க பல வருஷமா இங்கேதான் இருக்கோம். இதுவரைக்கும் ஒரு குறையும் இல்லை. உடம்பு சரியில்லைன்னா கவனிச்சுப்பாங்க. வெளிய கூட்டிட்டு போவாங்க. சாப்பாடு ரொம்பச் சுத்தமா, ஆரோக்கியமா இருக்கும். ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா நாங்க இருக்கோம். மாசம் மாசம் பணம் கட்டிடீங்கன்னா போதும், எந்தப் பிரச்சனையும் இருக்காது," என்று அவர்கள் நம்பிக்கை கொடுத்தனர்.
தன் மகன் இப்படி ஒரு முடிவை எடுப்பான் என்று அவர் கனவில் கூட நினைக்கவில்லை. அது நிஜமாக நடக்கும் போது, இந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்வதை விட உயிரே போயிருக்கலாமோ என்று அவருக்குத் தோன்றியது. ஊரில் மகாராணி போல வலம் வந்தவருக்கு இன்று என்ன ஒரு அவல நிலை!
மிச்சமிருந்த எல்லாப் பணத்தையும் எடுத்துத் தாயின் கையில் திணித்தான். "இதை வைச்சுக்கோ... எக்காரணத்தைக் கொண்டும் உன் பொண்ணுங்களுக்கு அனுப்பித் தொலைக்காத."
"நீ உன் பொண்ணுங்களுக்குச் சேர்த்து வைச்ச மாதிரி, நானும் என் பொண்ணுங்களுக்குச் சேர்த்து வைக்கக் கூடாதா?" என்று அவர் தேம்பி அழ, ஸ்ரீராம் வெடித்தான்.
"என் சுமையைத் தூக்கி யார் முதுகிலேயும் வைக்க நான் விரும்பல. என்னை நிம்மதியா வாழ விடுமா! நீயும் நிம்மதியா வாழப் பழகு. இனிமேல் யாருக்காகவும் எதற்காகவும் அலையாத. இவங்க கூட பழகிப் பார், அப்போதான் உறவுகளின் முக்கியத்துவம் புரியும். பணம்தான் உலகம் இல்லைன்னு புரியும்.
இனியாவது திருந்தினா உனக்கு நல்லது. எனக்காக அங்கே என் பெண்டாட்டி பயத்தோட காத்துக்கிட்டு இருப்பா. நான் போய் என் ரதியைப் பார்க்கணும்!" என்று கூறிவிட்டு, பின்னால் திரும்பிப் பார்க்காமல் வண்டியை எடுக்க,
கலையின் பதிலுக்காக அவன் ஒரு நொடி கூடக் காத்திருக்கவில்லை.
"நான் இங்க இருக்க மாட்டேன் ஸ்ரீராம்... என்னை இந்த இடத்துல இப்படி அனாதையா விட்டுட்டுப் போகாத!
நீ என் கூடவே இரு... நான் உன் அம்மாடா!" என்று அவர் கதறிக் கூற, ஸ்ரீராமின் முகம் கல்லாய் இறுகியது.
தொடரும்...