Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக. 31,final &epilogue

Advertisement

#tnwcontestwriter
#028
#மாசறுகண்ணேவருக
அருமையான கதை ?
சிவன்யா.. பார்கவி..
தாய் தந்தை இல்லாமல் பாட்டியுடன் வசிக்கும் இவர்களின் வாழ்வு வண்ணமயமாகவே இருக்கிறது பாட்டியின் திடீர் மறைவு வரை.. இரு மாமன்களும் ஆளுக்கு ஒருவராக இவர்களின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்கள் சில சங்கடங்களுக்கு பிறகு மாமன்கள் இருவர்களுக்குமே இவர்களின் மேல் அலாதி பிரியம்.. இதில் ஒரு மாமனின் மனைவிக்கும் அவரின் மகன்களுக்கும் அதே பிரியம் இருந்ததா என்பது கதையில்... சர்வேஸ்வரன்... அழுத்தக்காரன் தன் கண் பார்த்தே ஆட்டுவிக்கிறான் தன்னவளை? மிகுந்த வெறுப்போடும் கோபத்தோடும் சிவன்யாவிடம் இவன் நடந்து கொண்டாலும் இவன் மனதில் இருந்து தான் என்ன என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. சதானந்தன் ஆரம்பத்தில் ஓட்டுதலோடு இவன் இல்லாமல் இருந்தாலும் போகப் போக பாப்பூ என அவளை அழைத்து அதிக நெருக்கமாகி விடுகிறான் மற்றொருவர் பாப்பு என இவளை அழைக்கும் போது அதில் பொறாமையும் கோபமும் கொல்வது அழகு ? வேணி... இவரின் நிலை என்ன என்பதை கணிக்கவே முடியவில்லை.. பாசமாகவும் இருக்கிறார் கோபமும் கொள்கிறார் ? கோபத்தில் இவர் விடும் வார்த்தைகள் சற்று அதிகம் தான் ? ஆருத்ரன் அப்பப்பா இவனின் காதல் அவ்வளவு அழகு ? காத்திருந்து தன்னவளை கைப்பிடித்த போது இவனின் பூரிப்பும் மகிழ்வும் நம்மையும் வந்து அடைகிறது ? சரவணன் சங்கர் என இரு மாமன்களுக்கும் இழந்துவிட்ட மரியாதையை மீட்டெடுக்கும் சிவன்யாவின் முயற்சியும் அதற்கான மெனக்கிடலும் அருமை ? சிவன்யாவின் குறும்புத்தனமும் பொறுப்பும் தன்னவன் மீது கொண்ட காதலும் உடன் பிறந்தவளின்மீது கொண்ட பாசமும் இவளின் ஒரே லட்சியமான குழந்தை குட்டிகளுடன் குடும்பமும் என அனைத்தும் அவள் ஆசை படியே நடக்கிறது ?? அருமையான கூட்டு குடும்ப கதை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் தோய்வில்லாமலும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ?
 
Top