Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாயம் செய்தாயோ MS 1

Advertisement

AnuJey

Well-known member
Member
அத்தியாயம் 1

திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்டுள்ள திவ்யாவிற்கு அப்பா அம்மா சிறிய வயதிலேயே பிரிந்தனர். இருவரும் மனம் வேறுபாட்டால் வெவ்வேறு பாதையில் சென்றனர்.அவர்கள் திவ்யாவை ஒரு அனாதை ஆசிரமத்தில் விட்டனர் பதினைந்து வயதான திவ்யா அழுது கெஞ்சியும் அவர்கள் மனது கல்லாகவே இருந்தது. மாதா மாதம் அவளுக்கு பணம் அனுப்பினார்கள் ஆனால் திவ்யாவிற்கு வாழ்வே வெறுப்பாக இருந்தது இப்படியே ஏழு வருடங்கள் சென்றது. அப்போது தான் அவள் வாழ்க்கையில் வந்தாள் யமுனா என்னும் தேவதை. யமுனா வின் அப்பா அம்மா அவள் சிறு வயதிலேயே ஒரு விபத்தில் இறந்து விட்டார்கள். அப்போது இருந்து அவளுடைய மாமா சேகர் தான் அவளை வளர்த்தார். தன்னுடைய மகன் மேற்படிப்பிற்காக டெல்லி செல்லவிருந்தனர் அப்போது சமயம் பார்த்து சேகர் மனைவி விஜயலட்சுமி யமுனாவை அழைத்து செல்ல வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் செய்தாள். ஏனென்றால் யமுனா தங்களுடைய இருந்தால் எங்கே தன் மகனை மயக்கிவிடுவாளொ என்று பயந்தாள். தன் மாமா வளர்ப்பில் வளர்ந்த யமுனா மிகவும் கலகலப்பான பெண் அவளின் துரு துருத்தனம் அனைவரையும் ஈர்க்கும். பதினெட்டு வயதான யமுனா பார்க்க மெழுகு பொம்மை போல் பப்ளியாகவும் லட்சணமாகவும் இருப்பாள். தன் அத்தையின் எண்ணத்தை உணர்ந்த யமுனா தானாகவே வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறினாள். சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் முதல் ஆண்டு படித்துக்கொண்டிருந்தவள் மாமாவிடம் அடம்பிடித்து ஹாஸ்டலில் சேர்ந்தாள். "மாமா சின்ன வயதில் இருந்து என்ன மகாராணி மாரி பார்த்துட்டு இருக்கீங்க எனக்கு தேவையான உணவு உடை செலவுக்கு பணம் இப்படி நிறையா நான் கேட்கும் முன்னாடியே தந்திருக்கீங்க எல்லாத்துக்கும் மேல தரமான கல்வி குடுத்திருகீங்க இதுக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப்போரேனு தெரியல" என்று கையெடுத்துக் கும்பிட்டாள்." யமூக்குட்டி நீ என்னோட பொண்ணுமா உன் அத்தைய நான் பார்த்துப்பேன் அவளுக்காக நீ ஏன் கஷ்டப்படனும் என்றார். இல்ல மாமா எனக்கே என் சொந்தக் காலுல நிக்கனும்னு தோனுது உங்க கூட இருந்தா நீங்க கொடுக்கிற செல்லத்துல நல்லா சாப்பிட்டு தூங்குவ இப்பவே பாருங்க பூசணிக்காய் மாதிரி இருக்க என்று சிரித்தாள் நீங்க கவலைப்படாதீங்க இங்க இருக்கிற டெல்லி தான அடிக்கடி போன் பண்ணுங்க என்றாள். உனக்கு என்னடா குறைச்சல் பார்க்க தேவதை மாதிரி இருக்கிற உன்னை கல்யாணம் பண்ண குடுத்து வெச்சிருக்கனும். இதுல ஐந்து லட்சம் டெபாசிட் பாண்டு இருக்கு என்னோட தங்கை மற்றும் மாப்பிள்ளை சேர்த்த பணம் இது இனிமேல் உன்னிடம் தான் இருக்க வேண்டும். இதனுடைய வட்டிப் பணம் இந்த சேமிப்புக் கணக்கில் விழுகிறது. மாதா மாதம் நான் உனக்கு ஐந்தாயிரம் ரூபாய் அனுப்புவேன் வேண்டாம்னு சொல்லாத இது உன் மாமா மீது சத்தியம் என்றார்


~மாயம் செய்ய வருவான்
 
உங்களுடைய "மாயம் செய்தாயோ"-ங்கிற
அழகான அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், அனு ஜெய் டியர்
 
மிகவும் அருமையான பதிவு,
அனு ஜெய் டியர்

யமுனாவுக்கு பெற்றோர் இல்லை அதனால அவள் அனாதை
திவ்யாவுக்கு பெற்றோர் இருந்தும் அவள் அனாதை
யமுனாவின் மாமா சேகர் நல்லவரா இருக்கிறார்
மாமிதான் ராட்சசி போலிருக்கு
 
Last edited:
Top