Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முக்கிய தகவல்..

Advertisement

Hilma Thawoos

Well-known member
Member
Hello dears!

எல்லாரும் நலமா இருப்பிங்கனு நம்புறேன். சொல்ல வந்த விஷயத்தை சோர்ட் அன்ட் ஸ்வீட்டா சொல்லனும்னா, சைட்டுல பல்லிளிச்சிட்டு நின்ன கதைகளை கொத்தா அள்ளிட்டு போய், இந்தா இப்போ தான் கிண்டில்ல அப்லோட் பண்ணிட்டு வந்திருக்கேன். படிக்க விரும்புறவங்க கீழ லிங்க்ல கதை படிக்கலாம்!

#நாணலே_நாணமேனடி!?
(Remarriage concept)

குடும்ப சுமைகளுடன், தாயின் துயர் நீக்கும் பொருட்டும், தங்கையின் திருமணம் தன்னால் தள்ளிப் போய்விடக் கூடாதே என்ற எண்ணத்தோடும் திருமண வாழ்வில் காலடி எடுத்து வைக்கிறாள் நாயகி! ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகி, விதி வசத்தால் மனைவியைப் பறிகொடுத்த நிலையில் அவளின் கரம் பற்றுகிறான் நாயகன்!
திருமணத்தின் பின்னரான அவர்களின் வாழ்வில் புயல் வீசுமா? தென்றல் வாடை மணம் பரப்புமா என்பது கதை டியர்ஸ்..

நாணலே நாணமேனடி - Naanale Naanamenadi
(Tamil Edition)
Check this out!

India link,

USA link,

UK link,

••••••°•••••••

#நின்_விழிகளில்_கண்டேன்_நேசம்!
(Tnw contest story)

ஒற்றைத் தாயாக நின்று, தன் உப்புசப்பற்ற வாழ்வுக்கும், எல்லையில்லாக் காதலுக்கும் ஆதாரமான மகளை எந்தக் குறையுமின்றி வளர்த்தெடுக்கப் பாடுபடும் நாயகி! தன் உதிரத்தில் உயிர்த்தெழுந்த மகளைப் பற்றி எந்தவிதத் தகவலும் அறியாமல், மனம் கொய்தவளின் தீரா நினைவுகளுடன் அவளை அண்ட முடியாத தொலைவில் மனைவி-மகனோடு வாழ்ந்து வரும் நாயகன்!

இருவரும் அவர்களின் வாழ்வில் மீண்டுமொரு முறை சந்தித்துக் கொள்வார்களா? அவர்களின் பிரிவுக்கு காரணமென்ன? இருவரது காலத்தால் மாறாத, மனதோடு உக்கிப் போகாத காதலின் முடிவு தான் என்ன..
காத்திருப்புடனான ஒரு காதல் கதையிது!
படிக்க விரும்புவோருக்காக கீழே லிங்க்..

நின் விழிகளில் கண்டேன் நேசம்! - Nin vizhigalil kanden nesam! (Tamil edition)
Check this out!

India link,

USA link,

UK link,

••••••°•••••••

#கால்_மீ_அக்னிதா!
(Crime, thriller, suspense blah.. Blah..)

தன் வாழ்வில் ஈவிரக்கமின்றி விளையாடியவர்களை வேரோடு அழித்தே தீருவேன் என கங்கணம் கட்டிக் கொண்டு வேட்டையில் இறங்கிய ஒரு பெண் அரிமாவின் பழி வாங்கும் படலமிது! இடையிடையே மெலிதாய் தழுவிச் செல்லும் சிருங்கார உணர்வுகளுடன், வாசகர்களின் கண்களுக்கும், கருத்துக்கும் விருந்தாகும் வகையில் காத(வ)லனுக்கும், அபலைக்குமிடையே ஓர் ஆத்மார்த்தமான காதல்!
படிக்க விரும்புவோருக்காக லிங்க் கீழே..

கால் மீ 'அக்னிதா' - Call me 'Agnitha' (tamil edition)
Check this out!

India link,

USA link,

UK link,

வெகு விரைவில் புதுக் கதையோட வர்றேன் டியர்ஸ் 🙂

-Hilma Thawoos 🖊
 
Last edited:
Top