Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

முத்தத்தின் ஈரத்தில் விமர்சனம்.

Advertisement

Chitrasaraswathi64@gmail.

Well-known member
Member
தமிழ் நாவல் ரைட்டர்ஸ் போட்டிக் கதை 027ன் முத்தத்தின் ஈரத்தில் எனது பார்வையில். மஹிமா பெண்களில் மக் உயரமான பெண் என்பதால் உருவக் கேலிக்கு ஆளாகும் பெண். தனது சிறு வயது தோழன் சுசீந்திரனுடன் காதல் திருமணம். அன்புக்குரிய ஜெயா அத்தை பக்கத்திலிருக்கும் பெண்ணாக அவளை விரும்பி நலன் காக்கும் அத்தை தனது இளைய மகனுடன் திருமணம் என்ற உடன் மருமகளே என்று கூப்பிடும் அவர் மாமியார் அவதாரம் எடுப்பது யதார்த்தமானதுதான். காதல் லண்டனில் சொல்லி திருமண வாழ்வு அங்கே நடத்தும் பொழுது தன் காதலை காப்பாற்ற சுசீ பேசிய பேச்சு இருவரையும் பிரிக்கிறது. மீண்டும் இணைய சுசீ எடுக்கும் நடவடிக்கைகள் அவளது மனப்புண்ணை ஆற்றி இருவரும் சஞ்லமில்லாமல் இணைய முடிந்தததா என்பதை முன்னும் பின்னுமாக கதையைத் தந்திருக்கிறார். மஹிமா தைரியமான பெண் பலரின் கேலியை கடந்து வந்தாலும் அத்தை மற்றும் சுசீயின் வார்த்தைகளை கடந்தவர முடியாமல் தவிக்கிறாள். பெற்ற அம்மாவின் யதார்த்தமான வார்த்தைகளை கடந்து வரும் அவள் இவர்களின் வார்த்தைகளையும் கடந்து வந்து துணிந்து கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றிருக்கலாம். ஆனால் அந்த இடத்தில் இவளுக்கு அவன் மேல் கோபம் வந்தது தவிர்க்க முடியாமல் இருந்தாலும் அந்தக் கோபத்தை வெகு நாட்களாக மனதில் வைத்திருப்பதும் மற்றவர்கள் பேசும் கேலிகளுக்கு உடனடியாக புத்திசாலித்தனமாக பதில் அளிக்காமல் இருப்பது அவளது பலவீனமாக இருக்கிறது. கதை ஒரே நேர்கோட்டில் சென்றிருந்தால் இன்னமும் சுவாரசியமாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம். முன்னும் பின்னுமாக சென்றது சிலரையாவது குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் என்பது என் எண்ணம். எழுத்தாளரின் எழுத்தில் தலையிடவில்லை. இது சிறிய யோசனை மட்டுமே தவறாக நினைக்க வேண்டாம். மற்றபடி கதையின் எழுத்து நடை முதிர்ச்சியாக இருக்கிறது.
 
நீண்ட நாட்களாக நான் எதிர்பார்த்த என் கதைக்கான விமர்சனம் தந்தமைக்கு நன்றிகள் பல.

சிலரின் அடக்கப்பட்ட கோபம் குடும்பத்தில் உள்ள ஒருவரிடம் வெடிக்கும் போது வரும் சூழ்நிலைகளை கொண்டு எழுத முயற்சித்திருக்கிறேன்.

கதை பற்றிய தங்களின் கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஏற்று அடுத்தடுத்து எழுதும் கதைகளில் எனது தவறுகளை திருத்திக் கொள்ள நிச்சயம் முயற்சிக்கிறேன்.

விமர்சனத்துக்கு நன்றிகள் பல அம்மா. :love: :love: :love:
 
Enna irunthalum Mahima hair cut panninadhu yenakku romba feeling aah irunthuchu😒
Excellent review 🙌
எங்கோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறாத்தா கதை தான் மஹியோடது. வேற ஒன்னும் இல்ல.

ஆனாலும் அதை அவள் கடக்க அவளின் காதல் கணவன் கடக்கும் காலங்களையும் கடந்த காலத்தையும் கலந்து எழுதிய எனது இரண்டாவது கதை.

கண்டிப்பாக வருங்காலத்தில் என் தவறுகளை திருத்திக் கொள்கிறேன். :love::love::love:
 
Top