பரவாயில்லை செல்லி கனகத்தை மட்டும் திட்டிட்டு விட்டுட்டாங்க. நான் கூட செவ்வந்தி கிட்ட, உன் மாமியாருக்கு ராசியில்லாத குழந்தை உனக்கெதுக்குன்னு கேட்பாங்களோன்னு நினச்சேன்.
யோகன் அப்படி கேட்கமாட்டான், ஏன்னா அவன் இப்ப தாறுமாறா பரிட்சை எழுதி தேர்வாகிட்டதால 'ஆம்பளை'-என்னும் பட்டத்தை அடைய காத்துட்டு இருக்கான். (ஏன்னா வேற எந்த விதத்திலும் அவனுக்கு அதுக்கு தகுதி இல்லை. )
கனகம் உனக்கு உன் மனசாட்சியே கேள்வி கேட்கும்ன்னு சொன்ன பாரு. அது ரொம்ப சரி. தப்பே செய்யாமல் சுயமரியாதை இழந்து நின்னாலும் இந்த சமுதாயம் பொண்ணுங்களுக்கு போட்டு வெச்சுருக்கற rules நம்மையும் அறியாமல் நம்ம மனசுல பதிஞ்சு நம்மளை குடையும். ஏன்னா கனகம் ஒரு நல்ல மனசாட்சி உள்ள பொண்ணு. இதே விதி ஆனா ராக்குக்கு மட்டும் பொருந்தாது, ஏன்னா அவங்களுக்கு மனசாட்சி கிடையாது.
டேய் ராஜா, உன்னோட நிலைப்பாடு தான் சரி. ஆனாலும் உன் பொண்டாட்டி மட்டும் எதுக்கு கெட்ட பெயரையும் சம்பாதிச்சுக்கிட்டு உங்கம்மாவுக்கு சேவகம் பண்ணனும். அதனால நீ என்ன செய்யற, துரித கதியில கனகாம்பரத்தையும் நல்ல செய்தி சொல்ல வைக்கற. எப்படியும் உன்னோட
Mission-Honeymoon-ஐ இனிமேல் தொடர முடியாது. So Operation-Pregnancy-யாவது நடக்கட்டும். அண்ணனும் தம்பியும் Nurse போட்டு பார்த்துக்கோங்க உங்க அம்மாவ.
அடேய் கார்த்திக், நீ கல்யாணமே செஞ்சுக்காம சாமியாராக் கூட வாழ்ந்து வாழ்க்கையை அனுபவி

. ஆனால் செல்லிக்கு மட்டும் மருமகளை கொண்டு வந்து விட்டுராத. அப்புறம் நீ நிஜமாவே துறவறம் தான் போகணும். ஜாக்கிரதை.