Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -08

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -08

அடுத்த நாள்.. சூரியன் வழக்கமான தனது கடமையை செய்ய.... காலை இதமான வெயில்... தோட்டத்தில் ஜாக்கிங் முடித்து உள்ளே நுழைந்தான் இனியன்...

..கிச்சனில் குக்கர் விசில் கேட்க.. சமையல் மும்முரமாக நடந்தது.. வெள்ளைநிற நைட்டி அணிந்து தன் அத்தை லதாவிடம் பெரிய கப்பில் காபியை வாங்கி சோபாவில் உட்கார்ந்து ருசித்து பருகிக்கொண்டிருந்தாள் ஆரா.அவளருகில் வந்தான்.. எரும மாடு எல்லாரும் வந்து போகற இடம்.. இப்படி நைட்டியில வரலாமா... எத்தனை ஆம்பளைங்க வேலை செய்யறாங்க... போடி வேற டிரஸ் போட்டுவா... சொல்லிட்டு மாடி ஏறினான்..

பக்கத்து சோபாவில் அபி பிங் நிற நைட்டி அணிந்து காபிக்குடித்துக் கொண்டிருந்தாள்... அவளை பார்த்து ஏன்டி உன் அண்ணனுக்கு நீ இருக்கிறது கண்ணுக்கு தெரியலையாடி..

ஒழுங்கா காபிக் குடிக்க விடுறானா பாரு...மூனகியபடியே அடுத்த மிடறு பருக... வாக்கிங் முடித்து உள்ளே நுழைந்தான் சரண்..

ஏய் அபி... என்னடி டிரஸ் போட்டிருக்க எல்லாரும் வந்து போகற இடம் நைட்டியில இருக்க.. போய் வேற துணி போடு, சின்னபொண்ணு நினைப்பு.. எங்கணா மதிக்குதா செல்லம் கொடுக்கிறாங்க இந்தவீட்டில.. திட்டியபடியே சரண் அவன் ரூமிற்குள் செல்ல..

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. இதிலிருந்து என்ன தெரியுது அபி... இவனுங்க கண்ணு தான் தப்பா பார்க்குது..-ஆரா

....

ஆராவின் போன் ஒலிக்க... ம்ம் சொல்லுமா பாட்டி எப்படியிருக்காங்க...

அந்தபக்கம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டே நடந்தாள்... நான் நல்லாயிருக்கேன்.. அப்பா இப்போதான் சாப்பிட்டு ஆபிஸூக்கு கிளம்பினார்..ம்ம் சரி கொடுங்கம்மா..

ஹலோ விக்கி மாமா...

குளித்துவிட்டு, ஆபிஸூக்கு செல்ல ரெடியாகி கீழே இறங்கி வர... ஆரா தன் அம்மாவிடம் போனில் பேசியதை கேட்டபடி டைனிங் ஹாலுக்கு சென்றான்.

நல்லாயிருக்கேன்.. ஹாங் இன்னிக்கு காலேஜ் இருக்கு... கிளம்பனும்...சரி மாமா போன் வைக்கவா..

திருச்சியில் அகிலாவின் அண்ணன் முத்துக்குமார்... ஏம்மா அகிலா நம்ம விக்கியை உன்வீட்டுக்காரர் கம்பெனியில் சேர்த்துக்க வேண்டியதுதானே தொழில் கற்றுப்பான் இல்ல.. நம்மளோ கார்மெட்ஸ் வச்சிருக்கோம்... அவன் இன்ஜினியர் படிச்சிருக்கான்.. அவன் படிப்புக்கேத்த மாதிரி பிஸினஸ் பண்ணா நல்லாயிருக்கும் பார்த்தேன்..

அண்ணே நான் எவ்வளவோ கேட்டு பார்த்துட்டேன்... இவங்க ஹார்ட்டுவேர்ஸ் நடத்துறாங்க.. ஆனா கன்ஸ்டரஷன் செய்யறது அந்த போக்கிரி பையன் இனியன் தானே.. மகா புத்திசாலி இவங்க பிஸினஸையும் சேர்த்து அவன்தான் பார்த்துக்கிறான்...

அவன் யாரையும் உள்ளே சேர்க்க மாட்டானாம்.. அவன்தான் ராஜா இதுகெல்லாம் கூஜாதான்..

அப்ப பங்கெல்லாம் கரெக்டா வந்துடுதாமா..

அதெல்லாம் இந்த சரண் பையன் பார்த்து கரெக்டா செட்டில் பண்ணிடுவான்.. அதுக்குதான் அவனை காமர்ஸ் குருப் படிக்கவச்சான் இனியன்... ஒரே ஒரு ரூபாய் கூட கணக்குல தப்பு வராத பார்த்துப்பான், அங்க வெளிநாட்டிலதான் படிச்சான் பேரு... இங்க ஆபிஸில நடக்கிறதெல்லாம் அவன் சொல்லபடிதான்... இப்போ மலேசியாவில வேற பிஸினஸ் ஆரம்பிக்க போறானாம் பேசிட்டிருந்தார் எங்க வீட்டுக்காரரு... திமிறு பிடிச்ச பையனா அவன்..

எப்படியும் விக்கி என் பொண்ணை கட்டிக்கிட்டா அவனும் கூட சேர்த்து பிஸினஸ் பார்க்க போறான்..

அதில்லமா நம்ம விக்கி சென்னையில் ஃபிரண்ட்ஸோட சேர்த்து கம்பெனி ஆரம்பிக்க போறானாம்... நானும் சரி சொல்லிட்டேன்..

நல்ல விஷியம் .. நான் சென்னையில தானே இருக்கேன் பார்த்துக்கிறேன்.

.....

மதியம் லன்ச் பிரேக்.. கேன்டினில்.. ஆராவும், அபியும் சாப்பிட உட்கார்ந்தார்கள்...

ஆரா என்ன ப்ளானுடி போட்டிருக்க நாளைக்கு வெளியே போறாங்கபா...

அங்கே மாயா ஜீன்ஸ் , டிசர்டில் அணிந்து...ஹை ஹீல்ஸ் போட்டு அவர்களிடம் வந்தாள்... ஹாய் ஐயம் மாயா.. நீதான் அவங்க தங்கச்சியா ஆராவிடம் கேட்க...

இல்ல இதோ இவங்கதான் அபி..

ஹாய் அபி... எப்படி உங்க அண்ணா, உன்கிட்டபோய் கேட்கிறேன் பாரு..ஏய் ஆரா நீ சொல்லு... ஆள் எப்படி... செம்ம ஹாட்டா..இல்ல கூல் பேபியா..

ஹாட்டுதான்... பயங்கற சூடு..

ம்ம்... பார்க்கவே ஹாண்ட்ஸசம் தான்.. எப்படி கம்பெணி கொடுப்பாரு..

தன் கையின் இருவிரலை மடக்கி சூப்பரா கொடுப்பாரு.. இவர்கள் பேசுவதை அமைதியாக பார்த்திருந்தாள் அபி..

ஆமாம் நீ அவங்க கெஸ்ட்டா..

ம்ம்.. இனியாவை எப்படி தெரியும் மாயா...

பேஸ்புக்குல... செம்ம ஹாட் பிக்ஸ் போட்டிருந்தார் அதில விழுந்தேன்... சரி இந்தா என் அசைன்மென்ட் சம்மிட் பண்ணிடு... பை அபி.. என்று கிளம்பிவிட்டாள் மாயா..

என்ன அபி.. உன் வருங்கால அண்ணி... என்னமா டிரஸ் போட்டிருக்கா பாரு.. காலையில நைட்டி போட்டதற்கே அப்படி திட்டினான்... செம்ம ஹாட்டாம்டி உங்கண்ணா.. உன் அண்ணியும் ஹாட் தான்டி..

ச்சீ அவளை என் அண்ணின்னு சொல்லாதே... உனக்கு கிண்டலா போயிடுச்சில்ல... உனக்கு என்ன தெரியும் எங்க அண்ணனை பத்தி... நாங்கெல்லாம் அவனை பார்த்து பயப்படுறோம் நினைச்சிருக்கியா இல்லடி... அவன் எங்கமேல வச்சிருக்க பாசத்திற்காகடி...

எங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா அவனால தாங்கமுடியாது.. அதனாலதான் இப்படி பண்ணாதே அப்படி செய்யாதேன்னு திட்டுவான்... இவ்வளவு ஏன் உங்கப்பா, உன்னைவிட அவன்மேலதான் பாசம் அதிகமா வச்சிருக்காரு...

அதான்டி உங்கம்மாவுக்கு பிடிக்கல.. அவங்கதான் எப்ப பார்த்தாலும் முரடன், போக்கிரின்னு ஊரு முழுக்க சொல்லி வச்சிருக்காங்க.. எங்க அண்ண கிழிச்ச கோட்ட தாண்டமாண்டான் இந்த சரண்...

இப்போ கூட புரியலையா ஆரா... எங்க இனியாவ கல்யாணம் செஞ்சிக்க நீதான் கொடுத்துவச்சிருக்கனும்... அவனை கலாச்சி பேசிட்ட இல்ல.. ஒருநாள் நீ அவன் காதலுக்காக, அன்புக்காக ஏங்கி நிற்கபோறடி பார்த்துக்கோ..

ச்சீ வாயை மூடு... உனக்கென்ன மாயா நாளைக்கு டேட்டிங் போக கூடாது..

ஆமாம்

சிரிடி மூஞ்சை தூக்கிவச்சிருக்க.. உன் அண்ணன் நல்லவன், நாலும் தெரிஞ்சவன், நாப்பது பொண்ணுங்களையும் தெரிஞ்சி வச்சிருக்கவன் போதும்... ஆனா இவ்வளவு மூச்சை விடாம பேசுற எரும உன் பிரச்சனையை ஏன் இனியாகிட்ட சொல்லமாட்டுற...

இந்நேரம் லேசா பத்தவச்சிருப்பான் உன் பரட்டை அண்ணே..

யாரடி சொல்லுற..

ம்ம்..உன் அண்ணன் சரணை தான்.பிரச்சனை வரும்போது கரெக்டா என் முன்னாடி வருவான எங்க இனியாண்ணே.. அன்னிக்கு வாங்கபோறேன் பாரு அவன்கிட்ட அடி... அப்பவாச்சு வந்து காப்பாத்துடி.. சரி கிளாஸூக்கு போகலாம்..

அன்று இரவு.. சோபாவில் அமர்ந்து டிவி பார்த்திருந்த இனியனை ஸ்..ஸ்ன்னு கூப்பிட்டாள் ஆரா.. இனியன் பக்கத்தில் சக்கர மற்றும் சத்யமூர்த்தியும் ஏதோ பேசிக்கொண்டிருக்க..

என்ன பிசாசு சைகையெல்லாம் வச்சு கூப்பிடுது.. அப்பாவும், மாமாவும் இருக்கிறாங்க.. என்ன என்று புருவம் உயர்த்தி கேட்டான்.. அவனருகில் வந்து உன்னை பத்தி ஒரு சூப்பரான மேட்டர் மாட்டியிருக்கு... தன் செல்லை காட்டினாள்.. தோட்டத்திற்கு செல்லும் வராண்டாவில் வரச்சொன்னாள்..

சரணை கூட்டிக்கொண்டு அங்கே வந்தான்.. அங்கிருக்கும் சேரில் ஆரா உட்கார்ந்தபடி தன் செல்லை காட்ட...

எடுத்து காட்டுடி நேற்று நாங்க தண்ணீ போட்ட வீடியோவை...

அய்யோ இவனுக்கு எப்படி தெரியும்.. மெம்ரி கார்டில் தேடினாள் .. அவள் எடுத்த வீடியோ இல்லை..

ஏய் உன் நைட்டி வச்சே கண்டுபிடிச்சிட்டேன்டி...காலையிலே டெலிட் செஞ்சிட்டேன்... என் செல்லுலதான் இருக்கு.. மவளே இது என் வீடுடி... அவளை அடிக்க போனான்..

டேய் எப்ப பார்த்தாலும் சின்னபொண்ண அடிக்க போற.. சரண் இனியனை தடுக்க..

யாரு இவளா... டேய் நான் மரத்துக்கு தண்ணீ ஊத்தனதெல்லாம் எடுத்துவச்சிருக்கா.. அறிவில்ல இவளுக்கு இந்த அகிலா அத்தை பொட்ட பிள்ளையை எப்படி வளர்த்துவச்சிருக்கு..

எங்கம்மாவ தீட்டுன எனக்கு கோவம் வரும் சொல்லிட்டேன்..

என்னடி பண்ணுவ.. எகிறிக் கொண்டு அவளை அடிக்க சென்றான்...

ஏன் குட்டிமா அவனை அப்படி எடுக்கலாமா..

இறுக்க கண்ணை மூடிட்டுதாண்ணா எடுத்தேன்...

பல்லைக் கடித்தபடி இவள... வீடியோ பார்க்க சொல்ல..

சத்தியமா இனியா, அப்பவும் கண்ணை மூடிக்கிட்டேன்..

எப்படி பொய் சொல்லுறா பாருடா... சரி அதைவிடு இப்போ எதுக்கு ப்ளாக்மெயில் பண்ண வந்த..

அய்யோ மாட்டிக்கிட்டோமே... சமாளி தேனு...ச்சீ ஆரா.. அது ஈ...ஈன்னு சிரித்துவிட்டு சும்மா...

சும்மாவா... டேய் அவள இங்கிருந்து போக சொல்லுடா..

என்ன ரொம்ப தான் செய்ற.. மாமா பத்து பாத்ரூம் கட்டிவச்சிருக்கு.. அங்கிருக்கும் பத்தொட்டியை தூக்கி அடிக்க வர... இனியனை இறுக்கி கட்டிக்கொண்ட சரண்..குட்டிமா ஓடிடு...

அந்தபக்கம் ஏன் வரபோறா.. அபி ரூமில் சென்று கதவை சாத்திக்கொண்டாள்...

ச்சீ என்னை விடுடா.. எல்லாம் உன்னால வந்தது.. பிட்டு படம் ரேன்ஞ்க்கு எடுத்து வச்சிருக்காடா... எல்லாரும் தூங்கிட்டாங்களா பார்க்க சொன்னா..

டேய் ஆரா திருட்டுதனமா குல்பி ஐஸ் வாங்க வந்திருக்கா.. அதை பார்க்காத போயிட்டேன்..

அவனை முறைத்துக் கொண்டே நின்றிருந்தான் இனியன்..

சரிவிடுடா.. யாரு பார்த்தா நம்ம தேனுதானே..

ம்ம் வெங்காய தேனு.. பச்சை பச்சையாக இனியன் திட்டிதீர்த்தான்...

அடுத்த நாள் விடியலில்,

சக்கரவர்த்தியும்...சத்தியமூர்த்தியும் வேலை விஷியமாக பெங்களுருக்கு சென்றனர்.

காலையில் லதா தன் மகனிடம்... இனியா இன்னிக்கு ஆரா வடபழனி முருகன் கோவிலுக்கு போகனும் சொன்னாடா.. நான் முக்கியமான உறவுக்காரங்க வளைகாப்புக்கு போனோம்.. நீ ஆராவை கூட்டிட்டு போயேன்..

அம்மா எனக்கு வெளிய நிறைய வேலையிருக்கு... என்னால முடியாது..

அவனுக்கு சாப்பாட்டை வைத்துக்கொண்டே...ப்ளீஸ் டா எனக்காக..

ஏன் அபியை கூட்டிட்டு போக சொல்லு...

அய்யோ அண்ணா எனக்கு ப்ராட்டிகல் எக்ஸாம் இருக்கு...

விடுங்க அத்தே நானே போயிக்குவேன்...

இல்ல உனக்கு பிறந்த நாள் வேற.. அண்ணா என்ன நினைக்கும்... இதுவே உங்கம்மா இருந்தா உன்னை கோவிலுக்காக அழைச்சிட்டு போவாம்.. என்னால முடியில என்னை மன்னிச்சுடா ஆரா, லதா உருக்கமாக ஆராவின் கையை பிடித்து பேச..

சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்தான் இனியன்... அவளை ரெடியாக சொல்லு நான் கூட்டிட்டு போறேன்... ஆனா 10.30 க்குள் ரிட்டன் வந்துடனும்.. எனக்கு முக்கியமான வேலையிருக்கு...

..... மெய் தீண்டுவான்
 
Nirmala vandhachu ???
Plan plan ahh podurangha
Rendu rendu per oru oru plan
Yaroda plan succees agum
 
Last edited:
நல்லா இருக்கு
என்ன ஆரா இப்படி
காணொளி காட்சி எடுத்தாளா
????
 
பிட்டு படம் போல
படம் பிடித்து விட்டு
பிறந்த நாளுக்கு
பிக் கப் பண்ண கேக்கும் கேடி தேனு....
பிளான் ஏதோ இருக்கு இனியா
பீ கேர்பூல்......
 
Top