Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -14

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -14

டூரிஸ்ட் வேனை ஆர்ன்ஜ் செய்து அதில் குடும்பமாக பயணம் செய்தனர் ஊட்டியை நோக்கி...

பெரியவர்கள் முன்னே உட்கார பின் சீட்டில் இளையவர்களின் இருக்கை ஆனது... அபியும் ஆராவும் ஒரு சீட்டில் அமர அதற்கு எதிர் சீட்டில் இனயனும், சரண் உட்கார்ந்திருந்தார்கள்...

அபியோ செல்லில் யூ டியூப்பை பார்த்து கொண்டிருந்தாள்... அந்தபக்கம் பிஸினஸ் பற்றி பேசிய படி இனியனும் சரனும்..

விளங்கிடும்... இனியனை பார்த்து நொடித்துக் கொள்ள..

என்னடி தீட்டுற சைகையில் கேட்டான் இனியன்.. அபி நான் இந்த கேம் எப்படி விளையாடுறதுன்னு உன் அண்ணன்கிட்ட கேட்க போறேன்... சொல்லிவிட்டு சரண் அண்ணா நீங்க என் சீட்டுக்கு வாங்க என்றாள்... இருவரும் இடத்தை மாற்றிக்கொண்டார்கள்...

என்னடா அதிசயமா குட்டிமா ,இனியன்கிட்ட கத்துக் போறாளா... சரணோ சந்தேகமாக பார்க்க...

வா..வா ஆரா நான் சொல்லித்தரன்... செல்லில் எதையோ வைத்துக்கொண்டு... பேசினாள் ஆரா... அவங்க இரண்டுபேரும் மனம்விட்டு பேசதானே இந்த டிரிப்பு... நீ ஏன்டா சரணை ஒட்டிட்டு உட்கார்ந்துட்டு இருக்க...

அப்ப நான் யாரு கூட பேசறது.. நான் தனியாயில்ல இருக்கேன்...

நான்தான் இருக்கேனே என்கிட்ட பேசு..

நான் அவ்வளவா லூஸூக்கிட்ட பேசறதில்ல ஆரா என்று சீரியஸா பதில் சொன்னான்...

உன்கிட்ட போய் பேசுனேனே என்ன சொல்லனும்... காதில் பாட்டை கேட்டுக்கொண்டே வந்தாள்... அடுத்த பத்து நிமிடத்தில் தூங்கி வழிந்தாள்..

என்ன அதுக்குள் தூங்கிட்டா... இப்போதானே பேசிட்டே இருந்தா... அவ வேலையில கரெக்டா இருக்கா... நல்லா சாப்பிடறது , தூங்கறது பொழுதுபோகலனா படிக்கிறது... அவள் முகத்தை உற்று பார்த்தான்... எதை பற்றியும் யோசிக்கிறதில்ல அதான் எந்த டென்ஷன் இல்லாம ஜாலியா இருக்கா... அவளை நன்றாக தன் தோளில் சாய்த்துக் கொண்டான்..

அந்த பக்கம் இருந்த சரண், இனியனை பார்த்து என்னடா நடக்குது...

ம்ம்.. தூங்குறா, நீ உன் வேலையை பாரு...

மெல்ல பொழுதுசாய இருட்ட தொடங்கியது... ரோடு மேடு பள்ளங்கலாக இருக்க, வண்டி குலுங்கி குலுங்கி சென்றது.. ஒவ்வாரு முறை இறங்கும்போது அபியும், சரணும் தங்களின் தோளில் இடித்துக்கொள்ள...

ச்சே நீயேன் என் பக்கத்துல உட்கார்ந்த... இப்போ இடிச்சிட்டே வர..

யாரு நானா இடிச்சேன், வேனாலடி... ரோடு சரியில்ல.. என்னவோ உன் மேல ஆசையில இடிக்கிறேன் நினைக்காதே...

அவனை முறைத்துக்கொண்டே... என்மேல ஆசை வைக்க சொல்லி நான் கேட்கல... க்கும் என்று முகத்தை திருப்பி கொண்டாள் அபி...

யூ டர்ன் அடித்து வண்டி திரும்ப... வின்டோ பக்கம் உட்கார்ந்த அபி முழுவதுமாக சரணிடம் விழ..

அவளை பார்த்து சிரித்தான் சரண்... இவை அனைத்தும் இருட்டில்தான் நடக்கிறது.. ஏன்டா சிரிக்கிற கோவம் கொண்டு அவனை அடிக்க ஆரம்பித்தாள் அபி..

அவளின் கையை பிடித்து தனக்குள் அடக்கிக் கொண்டான் சரண்... விடு என்னை என்று திமிறினாள்

முடியாதுடி என்ன செய்வ... நீ என் பொண்டாட்டி இன்னிக்கு சொன்னதில்ல... எனக்கு கருந்து தெரிந்த முதல்லே மனசுல பதிஞ்சது... உனக்கு பிடிக்குதோ இல்லையோ அதுதான் நடக்கபோகுது...

என்ன அதிசியமா ஸாரு டயலாக்கெல்லாம் பேசுறாரு... உனக்கு என் மேல நம்பிக்கையில்லை தானே... காலேஜில் நீ விசாரிச்ச, யாரோ ஒருவன் சொன்னான்னு.. என்னை தப்பாயில்ல நினைச்சே...கண்கள் கலங்க ஆரம்பித்தன அபிக்கு..

நியாயமா பார்த்தா நான்தான் கோபித்துக்கொள்ளனும்.. உன் அண்ணாகிட்ட சொல்லுற.. என்ன பிரச்சனையின்னு என்கிட்ட தெரிவிக்கல. அப்படியே இனியா அடிச்சவுடன் அழுதுட்டே சொல்லுறே... திமிருதானே உனக்கு.

நீதான் என்னை நம்பலையே அப்பறம் எப்படி உன்கிட்ட அதைபற்றி சொல்லறது..

பணம் கேட்க மட்டும் தோனுதோ..

மறுபடியும் முகத்தை திருப்பி வைத்துக்கொண்டாள்.. ஏய் இங்க பாரு அபி... ஒரே வீட்டில வளரோம்... படிக்கும் சின்னபொண்ணுகிட்ட காதல் வசனம் பேச சொல்லுறீயா... இப்போதான் நீ காலேஜ் வந்துருக்க.. ஆனா ஆறாவது படிக்கிற பொண்ணு கூட மெச்சூரிட்டியா இருக்கும். நீ...

என்ன... நான் பெரிய பொண்ணா உன் கண்ணுக்கு தெரியலையா

பின்ன அந்த ராஜேஷ் எப்படி ஏமாத்திருக்கான் அதுவே தெரியில..

கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது அபிக்கு..

இப்போ எதுக்கு அழற அபி..

தன் கண்களை துடைத்தபடி நீ சொல்லுற மாதிரி நான் மெஞ்சூரிட்டியாவே இல்ல.. உனக்கு ஏத்த மாதிரி நல்ல புத்திசாலி பொண்ணா பார்த்துக்க மாமா...

வாடா போடா போய் அவனை மரியாதையாக கூப்பிட ஆரம்பித்தாள்... அந்த போட்டோஸ் நீ பார்த்தீயா... அவன் எதுவும் பேசாம அவள் கண்ணையே பார்க்க...

எனக்கு இந்த போட்டோஸை பற்றி சொல்ல அசிங்கமா இருந்துச்சு... நீ அதை பார்க்கூடாதுன்னு நினைச்சேன்.. அப்படியே தூக்குமாட்டிகுனும் போல தோனும்...

ஏன்டி சுயநினைவுல எடுக்குற போட்டோக்கும், நினைவில்லாம எடுக்குறதுக்கும் வித்தியாசம் தெரியாதா... அன்னிக்கு உன்னை தேடி நான் வந்ததால அவனுங்க உன்னை விட்டாங்க... இல்லைனா வேற மாதிரி செஞ்சிருப்பாங்க.. சும்மா ராஜேஷ் உன்கிட்ட காட்டுனானே அந்த போட்டோஸ் மட்டும்தான் இருந்தது.. எந்த வீடியோவுமில்ல... அந்த பாபுராஜை ஒரு எலும்பு விடாம எண்ணி பார்த்தாச்சு..

அவன் நான் டிரஸ் இல்லாமயிருக்கேன் சொன்னான் மாமா என்று அழ ஆரம்பித்தாள்...

உனக்கு என்மேல நம்பிக்கையில்லடி... பிரச்சனை ஆரம்பிக்கும்போதே மாமா இந்த பையன் என்னை டார்ச்சர் செய்றான்னு சொல்லிருக்கனும்.. அவன் உயிர்இல்லாம செஞ்சிருப்பேன்...

குன்னூர் வந்துவிட்டது... அங்கேயிருக்கும் ஹோட்டலில் சாப்பிட இறங்கினார்கள்.. ஊட்டியிலிருக்கும் அவர்களின் கெஸ்ட் ஹவுஸிற்கு வர மணி பத்தானது... பயண களைப்பில் தூங்க ஆரம்பித்தார்கள்..

அடுத்தநாள் விடியலில்... இருட்டில் பயமுறுத்தின வெண்மேகங்கள், மரங்கள், பாறைகள்.. மலைகள் அழகான இயற்கையாகி கண்கள் இமைக்காமல் பார்க்க வைத்தன அந்த மலையரசியின் வனப்பு...

காலையில் எழுந்து வாக்கிங் போயிட்டுவந்து டீயை பருகினர் சத்தியமூர்த்தியும், சக்கரவர்த்தியும்.. சத்தியா நமக்கே கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கு.. இந்த சென்னை வாழ்க்கை மெஷின்டா... இந்த சுத்தமான காற்று, இயற்கை.. சான்ஸே இல்ல..

ஆமாம் சக்கர... அவர்களின் காம்பவுன்ட்குள் கார் நுழைந்தது... காரிலிருந்து அபி மற்றும் ஆராவின் தோழிகள் ஐவர் இறங்கினார்கள்..

பசங்க வந்துட்டாங்க சக்கர.. ஆரா ,அபி வாங்க உங்க பிரன்ட்ஸ் வந்திருக்காங்க சத்தியா குரல் கொடுக்க.. மேலே பால்கனியிலிருந்து சரனும், இனியனும் அவர்கள் இறங்குவதை பார்த்து நின்றனர்..

மச்சான் சரனு இதெல்லாம் படிக்கிற பொண்ணுமாதிரி தெரியலைடா..

ஆமாம் மச்சான் எல்லாம் வாலில்லா வாணரம்.. எனக்கு ஏற்கனவே இவங்களை தெரியும்.. நம்ம வீட்டுக்கு அபியோட பர்த்டேக்கு வந்தாங்க...

ஆனா ஒண்ணும் தேறாத கேஸ் போல இன்னும் எட்டாவது பசங்க ரேன்ஜில் இருக்குங்க.. அப்படியே ஆரா மாதிரி அவளை போலதான் டிரஸ் பண்ணுதுங்க.. பாரேன் எங்க அப்பாகிட்ட போய் எப்படி பேசிட்டு இருக்குதுங்க..

ஆரா என்று சத்தயமூர்த்தி மறுபடியும் குரல் கொடுக்க...

இந்த மாமா எப்படி கத்தறாரு.. நல்லா தூங்குதுடா.. நேற்று எனக்கு ஷோல்டரே வலி தெரியுமா. மேலேயே தூங்கிட்டு வந்துச்சு... அவளின் ரூமின் வாயிலில் நின்று இனியன் பேச.. பின்னாடி இடுப்பில் கையை வைத்து இனியனை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள் ஆரா..

மச்சான் குட்டிமா உன்னை முறைக்குது சரண் சொல்ல..

திரும்பி ஆராவை பார்த்தான் இனியன்... என்ன அப்படி ஒரு லுக்கு.. உண்மைதான் பேசுறேன் பொய் ஒண்ணும் பேசல.. எனக்கு எப்படி கை வலிக்குது தெரியுமா..

அவனை இடித்துக்கொண்டு கீழே இறங்கினாள் ஆரா... எரும எப்படி இடிச்சுட்டு போதுபாரு..

கீழே இறங்கி வந்தாள்.. அவளின் தோழிகள் அவளை கட்டிக்கொள்ள.. எல்லோருக்கும் தங்க தனி ரூமை கொடுத்தார்கள்... டீ குடிக்க இனியன் ஹாலுக்கு வர.. ஹாய் அண்ணா என்று நிகிதா மற்றும் சிநேகா கூற..

அண்ணாவா என்று முழித்தான் இனியன்... ஆமான்டா உனக்கு இவங்கெல்லாம் தங்கச்சிங்க தான் என்றாள் ஆரா..

எனக்கு எப்போவோ தங்கச்சி ஆயிட்டாங்க சரணும் கூற... வில்லதனமா சிரித்தாள் ஆரா. எப்படீ என்று..

த்தூ உன் ஃபிரண்டுங்க எல்லாம் மொக்க பிகருங்க போடி..

அப்பா இங்க முதுமலை தான்டி உள்ள பாராஸ்ட் ஏரியா கர்னாடகா மாநிலத்தை சார்ந்தது... அங்க மலையில டிரக்கிங் போக போறோம்.. போன வருஷம் எங்க பிரன்ட்ஸ் போனாங்க அவங்க சொன்னாங்க சேப்பாவும் இருக்கும்மா... நைட் அங்கதான் ஸ்டே..

அண்ணா நாங்களும் வரோம் என்று அந்த வாணர கூட்டங்கள் கெஞ்ச.. அய்யோ வீடே இறைச்சலா இருக்கு.. காதை மூடிக்கொண்டான்.. சரி கூட்டிட்டு போறேன்...

----மெய் தீண்டுவான்
 
Nirmala vandhachu ???
 
Top