Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மெய் தீண்டாய் உயிரே -17

Advertisement

lakshu

Well-known member
Member
மெய் தீண்டாய் உயிரே -17

தேனுவின் ரூமிற்குள் சென்றான் இனியன்... இவன் வருவதை கண்டு பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.. ஏய் வெளியே வாடி எதுக்குடி உள்ளே போய் கதவை மூடிட்ட... கதவ திற... கத்த ஆரம்பித்தான்..

அவள் அமைதியாகவே இருக்க..

சரி வரேன் ஈவ்னிங் 6.00 டூ 7.00 ஒன் ஹவர் மட்டும்... அவன் சொல்லி முடிப்பதற்குள் கதவை திறந்து வெளியே வந்தாள் தேன்மொழியாள்...

அவனை வைத்த கண் வாங்காமல் பார்க்க...

உனக்கு பிடிவாதம் அதிகமாயிடுச்சு...

யாருக்கு எனக்கா... போன வாரம் காட்டுக்குள் பார்த்ததுதான் மாமா.. அப்பறம் இப்பதான் பார்க்கிறேன் உன்னைய...

எனக்கு பிஸினஸ் இருக்கு தேனு... அவள் முகத்தை தூக்கிவைத்துக்கொள்ள... தன் ஷர்டை காட்டி நீ வாங்கி கொடுத்ததை தான் போட்டிருக்கேன்.. உள்ள போட்டிருக்கிற பனியன் அதையும் காட்டினான்.. இந்த பேன்ட் , பேன்டை லைட்டாக இறக்கி இந்த ஜட்டியும் ...நீ வாங்கிக்கொடுத்தது தான்.. கோவமாக பேசினான்... எல்லாம் போட்டிருக்கேனா..

இந்த டிரஸ் உனக்கு நல்லாயிருக்கு மாமா... ஹாப்பி பர்த் டே..

சரி எனக்கு டைம் ஆயிடுச்சு நான் கிளம்புறேன்.. இனியன் கிளம்ப ... அவன் கையை பிடித்து மாமா என்றாள்..

இப்ப என்னடி... இன்னைக்கு முக்கியமான பிஸினஸ் தேனு...

பாக்ஸிலிருந்து குளோப் ஜாமூனை எடுத்து அவனுக்கு ஊட்டினாள்... அதை தன் வாயில் வாங்கிக்கொண்டான்.. ஸ்ஸ்.. என்று கையை உதறிக்கொண்டாள்... கோவத்தில கையை கடிச்சிட்டு போகுது..

......

இன்று இனியனோட பிறந்த நாள்.. அவன் பெரியவனான பிறகு பெரிதாக கொண்டாட மாட்டான்... புதிதாக மலேசியாவில் பிஸினஸ் தொடங்கதான் அவன் ஓடிக்கொண்டிருப்பது.. காலையில் அவனுடைய ஆபிஸில் கிளையன்ட் மீட்டிங் இருப்பதால்...... நேற்றே போனில் கேட்டாள் தேனு, பிறந்த நாள் அன்று ஒரு மணிநேரமாவது தன் கூட இருக்கனும்... அதற்குதான் இவ்வளவு போராட்டம் தேனுக்கு..

அங்கே ஆபிஸில் வேலையில் பம்பரமாக சுற்றிக்கொண்டிருந்தான்... மணி 5.30 மேல் ஆகிவிட்டது.. சரணிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்..

மாலை 6.00 மணிக்கு பார்த்தசாரதி கோவில் முன்னே காரை நிறுத்தினான் இனியன்... ஆரஞ்சு நிறத்தில் சிறிய கரை வைத்த சேலையை கட்டியிருந்தாள்.. தலைக்கு மல்லிப்பூ சூடி.. கண்ணில் மையிட்டு தன்னவனுக்காக கோவிலின் வெளியே காத்திருந்தாள் தேனு...

அவளை பார்த்தவுடன்.. ம்ம் சீக்கிரம் வா அவளை அழைத்துக்கொண்டு கோவிலுக்குள் சென்றான்... அன்று கோவிலில் மாதப்பிறப்பு என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது... சிறப்பு தரிசனத்தில் உள்ளே சென்றார்கள்... ஆண்டவர் முன்னாடி கை கூப்பி தன் இனியனுக்காக வேண்டிக்கொண்டாள்... பிறகு அவன் பெயரில் அர்ச்சனை கொடுத்தாள்..

வெளி பிரகாரத்தில் வந்தவுடன் விபூதியை எடுத்து இனியன் நெற்றியில் சிறிதாக இட்டாள்..

காரில் ஏறினார்கள்... பின்சீட்டில் வைத்திருந்த பிட்ஸாவை எடுத்து அவளிடம் கொடுத்து தன் செல்லில் பேசிக்கொண்டேயிருந்தான் இனியன்...

அவளிடம் பேசாமல்... தன்னையும் பாராமல் அவன் செல்லில் பேசிக்கொண்டிருப்பது தேனுவிற்கு பிடிக்கவில்லை... சரி நம்ம பிட்ஸாவ சாப்பிடுவோம்... அதை பிரித்து முதல்ல பர்த் டே பேபிக்கு ஊட்டலாம் என்று நினைத்து அவனுக்கு கொடுத்தால்.. அந்த பீஸ் முழுவதும் சாப்பிட்ட படியே ப்ளூடூத்தில் கேட்டுக்கொண்டிருந்தான்..

அடுத்ததும் எடுத்து ஊட்டினாள்.. அதையும் சாப்பிட்டான்..

மாமா என்று கூப்பிட்டாள்... அவள் தன்னை அழைத்ததை கவனிக்காமல் போனில் கேட்டுக்கொண்டிருந்தான்.. அவனின் தோளை தொட்டு... மாமா என்றாள்..

இனியன் திரும்பினான்... நீ இன்னிக்கு முழுக்க சாப்பிடலையா

தன் கீழ் உதட்டை கடித்து எதுவும் பேசாமல் அவளையே பார்த்தபடி அமைதியாக இருந்தான்... எங்கிருந்துதான் கோவம் வந்ததோ தேனுவிற்கு அவன் கையிலிருக்கும் போனை பிடுங்கி காரின் பின் சீட்டில் எறிந்தாள்..

ஏய் என்னடி செய்யற.. பளாருன்னு அவள் கண்ணத்தில் அறைந்தான் இனியன்... எதுக்கு ஓவரா பாசமாயிருக்கிற மாதிரி சீனை போடுற...

கண்கள் கலங்க... சட்டை மாத்துற மாதிரி ஆளை மாத்துற ஆளுடா நீ.. உன்னை மாதிரி என்னை நினைச்சியா...

எதுக்கு எதை பேசுறா பாரு.. இனியன் முனுங்க...

இன்னைக்கு உன் பிறந்தநாள் ஒரு மணிநேரம் உன்கூட இருக்கனும் ஆசை பட்டது தப்பா... எனக்கு நீ சூட்டாக மாட்ட...

ப்ச்.. என்று இனியன் நொந்துக்கொள்ள..

எனக்கு சாதாரணமா புருஷன் பொண்டாட்டின்னு அன்னோன்யமா வாழனும் ஆசை... இந்த பிஸினஸ் மேன் எனக்கு வேண்டாம்... தன் கண்ணை துடைத்துக்கொண்டு

நாளைக்கு என் அம்மாவீட்டுக்கு போறேன்... உன்னை பார்க்கனும் நினைச்சது தப்புதான்..

தன் வாட்சை பார்த்தாள், ஓகே பை நான் கேட்ட ஒரு மணி நேரம் முடிஞ்சிடுச்சு இனியா...

காரின் கதவை திறந்தாள்.. இனியன் அவள் கையை பிடித்தான்... அவன் கையை உதறிவிட்டு... ரோட்டில் நடக்க ஆரம்பித்தாள் தேன் மொழியாள்...

ஸ்டேரிங்கில் தலையை வைத்து படுத்துக்கொண்டான்... அவள் சொன்ன வார்த்தை காதில் ஒளித்தது.. நான் எங்க அம்மாவீட்டுக்கு போறேன்..

சிரித்துக்கொண்டான் அவளவன்... கல்யாண ஆன பெண் கூறுவது போல் தன் வீட்டையே அம்மாவீட்டுக்கு போறேன் சொல்லுறா... உன்னை நைட் வந்து கவனிச்சிக்கிறேன்டி..

தன் போனை தேடி எடுத்தான்.. டிஸ்பிளே போயிடுச்சு... தன் ஆபிஸை நோக்கி வண்டியை ஒட்டினான்..

......

ஆபிஸில் ,எங்கடா போனான்...சக்கரவர்த்தி சரணை பார்த்து கேட்டார்..

தெரியல மாமா... ஏதோ முக்கியமான ஆளை பார்க்கனும் சொன்னான்..

பார்டனர்ஸ் வையிட் பண்ணுறாங்க... ம்ம் இதோ வரான் பாரு...

சீக்கிரம் வா இனியா நல்ல நேரம் முடியபோகுது அவனை கூட்டிக்கொண்டு எம்.டி ருமிற்குள் சென்றனர்.

பிஸினஸ் ஆரம்பிக்க ஒப்பந்தம் செய்து சைன் போட்டார்கள் மலேசியாவின் ஹார்டுவேர்ஸ் கம்பெனியோட ஒனரிடம்... வந்த ஐவர்களை கூட்டிக்கொண்டு ஹோட்டல் சோழாவிற்கு காரில் சென்றனர்...

மணி 9.00 ,அங்கே பார்ட்டி ஆரம்ப ஆனது... ஆபிஸில் உள்ளவர்களும் கலந்து கொண்டனர்..

இனியன் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.. சரண் அவன் அருகில் சென்று.. என்னடா எதுவும் டிரிங் பண்ணல... பார்ட்டியே நீதான்டா தர உனக்கு பர்த் டே வேற..

தண்ணி அடிச்சா அவளுக்கு பிடிக்காது என்று மெதுவாக பேசினான்..

யாருக்குடா பிடிக்காது... லைட்டா எடுத்துக்கோ... சரண் அவன் கையில் கிளாஸை கொடுக்க..

மச்சான் நான் கிளம்பறேன்... நீ பார்ட்டியை முடிச்சிட்டு ஆட்களை பத்திரமா ஹோட்டல் ரூமுல விட்டு வாடா..

ஏய் இனியா ஏன்டா டல்லா இருக்க, இந்த பிஸினஸ் உன்னுடைய கனவுடா, நீ இல்லாம எப்படி...

ப்ச்... சொல்லுறதை செய்.. நான் கிளம்பறேன்..

அவனால் பார்ட்டியில் கவனம் செலுத்த முடியவில்லை...தேனு அழுது சென்றதே அவன் மணகண்ணில் ஓடியது...ஒரு மணி நேரத்தில் வீட்டை அடைந்தான்... போனில் தேனுவை அழைக்க...

அவள் போனை ஆன் செய்து “என்ன” என்றாள்..

மேல டேரஸ்க்கு வாடி...

முடியாது.. நீ சொன்னா ஓடி வரனுமா..

சரி விடு.. நான் உன் ரூமுக்கு வரேன்.. ஏதாவது அசம்பாவிதம் நடந்தா நான் பொறுப்பு கிடையாது.. வசதி எப்படி..

என்னடா ப்ளாக்மெயில் செய்றீயா.. இதோ வரேன், மவனே செத்தடா... போனை அனைத்துவிட்டு கதவை திறந்து மேலே மாடிக்கு வந்தாள்..

வாடி வா... உனக்காகதான் வையிடிங்...

வானத்தில் நட்சத்திரங்கள் மின்ன , அந்த மாடியின் சுவற்றை பிடித்து நின்றிருந்தான் இனியன்..

மாடிக்கு வந்த தேனு, எதுக்கு வரசொன்ன... ஐயா ரொம்ப பிஸி ஆச்சே... நிற்க நேரமில்ல, சாப்பிட நேரமில்ல... இப்போ தண்ணீ பார்ட்டி ஆச்சே அங்க பிரசன்ஸ் ஆகாம இங்கயிருக்கீங்க...

அவள் பேசுவதை பார்த்தபடி அமைதியாக நின்றான்...

ஸாருக்கு நான் யாருன்னு தெரியுதா...

ரொம்ப பேசறீயே தேனு என்று அவளை தூக்கிக்கொண்டான்..

ச்சீ கீழேயிறக்கி விடுடா...

அவளை தூக்கிட்டு போய் அங்கே விரித்துவைத்திருந்த பெட்டில் விட்டான்..

அப்பொழுதுதான் சுற்றியும் பார்த்தாள்.. மெத்தை விரிப்பு.. இருதலையனையும் இருந்தது...

அய்யோ ஏதோ முடிவோட வந்திருக்கான் போல நான் வரலப்பா என்று எழ முயற்சி செய்..

அவளை எழ விடாமல் கட்டியனைத்து.. எங்கடீ எஸ்கேப் ஆகற..

ம்ம்... நான் இன்னைக்கு எந்த டிரஸ் போட்டேன்னு தெரியுமா... என்னை நிமிர்ந்து பார்த்தீயா.. என்ன கலர் தெரியுமா மாமா.. உனக்கு நான் முக்கியமில்லை... ஆனா எனக்கு உன்னை தவிர இந்த உலகத்தில எதுவும் முக்கியமில்ல... நான் லூஸூ மாதிரி பேசுறேன் நினைப்ப...

தன் கீழ் உதட்டை கடித்தபடி சாரிடி.. என்மேலதான் தப்பு உன்னை அடிச்சிட்டேன்... அவள் கையை பிடித்து அவன் கண்ணத்தின் அருகே எடுத்துச் சென்றான், மாமாவ அடிச்சிக்கோ....

அவன் கண்ணத்தை பிடித்து, நம்ம லவ் புக் ரூல்ஸ் என்னன்னா யாரு அடிச்சாங்களோ அவங்க திரும்பவும் நூறு கிஸ் தரனும் அதே கண்ணத்தில..

வாவ்... இந்த பனீஷ்மன்ட் நல்லாயிருக்கே... அங்கமட்டுமா கொஞ்சம் வேற இடத்தையும் கன்ஸீடர் செய்யலாமே..

நோ வே.. என்றாள் தேன்மொழியாள்..

ஒண்ணு.. இரண்டு ஆரம்பித்தான், அவளின் கண்ணத்தில் இச்.. இச் என்று முத்தமிட... அவள் கண்ணை மூடி ரசித்தாள். அவனின் ஸ்பரிசத்தை..

எதுக்கு இப்படி சாப்பிடாம உழைக்கிற.. ஏற்கனவே உங்கப்பாவும் எங்கப்பாவும் நம்ம பிள்ளைக்கும் சேர்த்து சம்பாரிச்சு வச்சிட்டாங்க... என்னை கல்யாணம் பண்ணிகிட்டா என்னுடைய சொத்தும் உனக்குதான்.. அப்பறம் எதுக்கு மாமா பணம் பணம் ஓடுற..

ஏய் வாழ்க்கையில நான் சாதிக்க வேண்டாமா தேனு..

பிஸினஸ்ல சாதிச்சுதான் இருக்க மாமா ... அவன் நெற்றியின் உச்சியில் முத்தமிட்டு உன் பொண்டாட்டிய ஒழுங்கா கவனி... புரியுதா...

புரியுது... அவன் பக்கத்தில் வைத்திருந்த கேக்கை எடுத்து சிறிய ஸ்டூலில் வைத்தான்.. நீ எனக்காக வாங்கினேன்னு சரண் சொன்னான்... கேன்டலை எடுத்து பற்ற வைத்தான்...

ஹார்டின் கேக் சூப்பர்டி..., ஐ லவ் யூ தேனு சொல்லி அவள் கண்ணத்தில் முத்தமிட்டு நூறு என்று முடிக்க... தேனு ஹாப்பி பர்த் டே பாட்டு பாட .. அவளை அனைத்துக்கொண்டு கேன்டலை ஊதி அனைத்தான்...

அங்கே கைதட்டும் சத்தம் கேட்டு இருவரும் நிமிர்ந்து பார்த்தனர்... ஹாப்பி பர்த் டே பாட்டு பாடிக்கொண்டு சரண், லதா, அபி, சக்கர,சத்தியமூர்த்தி நின்றிருந்தார்கள்..

தேனு தன்மேல் அனைத்திருந்த இனியனின் கையை எடுக்க... அவன் எடுக்காமல் இன்னும் இறுக்கி பிடித்தான்... இவள் என்னவள் என்று அங்கியிருப்பவர்களுக்கு தெரிவிக்க..

என்னடா நடக்குது சரண் முதலில் அமைதியை உடைக்க... எலியும் பூணையுமா சண்டை போட்டு எப்படி லவ் பண்ணுறாங்க பாரு மாமா என்றான் சரண்..

அப்ப தேனுவை பார்க்கதான் வெளியே போனீயா இனியா சத்தியமூர்த்தி கேட்க..

ஆமாம் மாமா.. இன்னைக்கு பர்த் டே அவ கூட ஸ்பென்ட் பண்ணலன்னு கோவம்...

அபி... தேனுவிடம் சென்று எப்படி நான் சொன்ன மாதிரி நீதான்டி என் அண்ணி.

லதா.. தேனுவை கிள்ளி முத்தமிட்டு எங்கவீட்டுக்கு மருமகளா வரனும் எவ்வளவு ஆசை தெரியுமா... தேனு வெட்கப்பட்டு தலையை குனிய... இவர்கள் பேசுவதை பார்த்து தன் மனதில் நிம்மதி கொண்டார் சத்தியமூர்த்தி..

சக்கரவர்த்தி... அவரின் தோளில் கையை போட்டு உன் ஆசை நிறைவேறிடுச்சுடா.. இனிமே என் பையனை கையில பிடிக்கமுடியாது...

தேனுவை தவிர அனைவருக்கும் கேக்கை ஊட்டிவிட்டான் .. எல்லோரும் அவர்களின் ரூமுக்கு செல்ல... இனியன் ரூமிற்குள் தேனுவை இழுத்துக்கொண்டான்..

மாமா என்ன நினைப்பாங்க... விடு.

அவள் தினற தினற அவளுக்கு கேக்கை ஊட்டிவிட்டான் அவன் வாயால்...

நாளைக்கு நாள் முழுக்க உன் கூடதான்..ஃபுல் டே ஸ்பென்ட் பண்ணபோறேன் தேனுமா...

என்னால வர முடியாது எனக்கு ப்ராடிக்கல் எக்ஸாம் இருக்கு.. அதுவும் நீ கூப்பிட்டா நான் வரனுமா... பாய் சொல்லிட்டு அவள் ரூமிற்குள் சென்றாள்..

-----மெய் தீண்டுவான்
 
Nirmala vandhachu ???
 
Top