Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா- அத்தியாயம்- 1

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
விழிகளில் வழியும் கண்ணீரை அவளுடைய காட்டன் புடவையால் துடைத்து கொண்டே இருக்கிறாள் ...ஆனாலும் அது நிற்க வில்லை...

அவளால் ஒன்றும் செய்ய முடியாது நிலை...
ஏன்னென்றால் அவளுடைய திருமணத்திற்கு தான் சென்றுக் கொண்டு இருக்கிறாள்....

இதோ அவள் வந்த கார் நின்றுவிட்டது...அப்படினா வீடு வந்துவிட்டது என்று தானே அர்த்தம்..கடைசியாக ஒருமுறை அவள் பெரியம்மா காஞ்சனாவிடம் எனக்கு இந்த திருமணம் வேண்டாம் என்றாள்...

உனக்கு எத எப்போ பண்ணணும்னு எங்களுக்கு தெரியும்....இப்போ நீ கீழே இறங்கு னு இழுத்து நிறுத்திட்டாங்க....

அவளுடைய அப்பா கேசவன்னிடம் இறங்காம என்ன செய்துட்டு இருக்கீங்கனு அதட்டல் வேற...

அவர்க்கு இந்த திருமணத்தில் மிக்க மகிழ்ச்சி...பின் தன் மகளுக்கு அந்த வீட்டிலிருந்து விடுதலை கிடைக்க போகுதே!!!(அப்படி அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார்...இங்கு அதைவிட கொடுமைகளை அனுபவிக்க போகிறாள் என்று அவர்க்கு யார் சொல்வது)...அவர் இறங்கி அவளுடைய பேக்கை கையில் வைத்துக் கொண்டார்...

இனி இவர்களிடம் பேசி பயனில்லை மாப்பிள்ளை மற்றும் அவங்க குடும்பத்தினரிடம் பேசி பார்ப்போம்னு அவள் நினைத்து கொண்டிருக்கும் போதே காஞ்சனா அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார்...

அவள் வீட்டின் வாயிலை பார்க்க இது துக்கவீடு மாதிரி இருந்தது..
அவள் அப்பாவை திரும்பி பார்க்க அவர் முகத்திலும் அதிர்ச்சி தெரிந்தது.

அதற்குள் அந்த வீட்டின் உறவினரின் ஒருவர் பொண்ணு வந்தாச்சினு சொல்ற சத்தம் கேட்டது...

வீட்டிற்குள் சென்றவளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சிகள்...
என்னன்னா அங்கு பெரியளவில் மாட்டி மாலை அணிவித்து பூக்கள் தூவிருந்தது அவளுடைய பள்ளிகால உயிர்த் தோழி அனுசியாக்கு.....
அதற்கு கீழே அவளின் அம்மாவின் மடியில் இன்று விடியற்காலை பிறந்த இரட்டைக் குழந்தைகள் (ஒரு ஆண் ஒரு பெண்)தூங்கி கொண்டு இருந்தனர்...

அதைப் பார்த்ததும் ஓடிச்சென்று குழந்தைகளருகே உட்கார்ந்து இருந்தாள்.
அவளை அனுசியா அம்மாவிற்கு அடையாளம் தெரிந்தது..அவர் அவள் கைகளை பிடித்து அழுது கொண்டிருந்தார்..


யாரோரு உறவினர் அனுசியா அம்மாவிடம் வந்து இதுதான் திருமணப்பெண் என்றும் கூறியதும் இருவர் கண்களும் சந்தித்து கொண்டன..

அவர் இருக் குழந்தைகளையும் அவள் மடியில் வைத்துவிட்டு எழுத்துக் கொண்டார்..

அவள் இருக்குழந்தைகளையும் பார்த்துக் கொண்டே இருக்கும் போது அவள் கழுத்தை ஏதோ உறுத்த நிமிர்ந்து பார்த்தாள்..

பார்த்தவளுக்கு அவள் வாழ்நாளின் உச்சக்கட்ட பேரதிர்ச்சி... அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டுக் கொண்டிருந்தான் ஹர்சித்....

இதைப்பார்த்ததும் கேசவனின் கையிலிருந்த பேக் நழுவி விழுந்தது...கண்ணிலிருந்து கண்ணீர் வந்தது...தான் ஒரு பெண்ணுக்கு செய்த பாவம் தன் மகள் வாழ்வை இப்பிடியா பாதிக்கும் என்று உள்ளுக்குள் கதறினார்..இதை பார்த்த காஞ்சனாக்கு அவ்வளவு மகிழ்ச்சி...தன் வாழ்வில் வந்த எல்லா இன்னல்களுக்கும் கிடைத்த பரிசாக எண்ணி மகிழ்ந்தார்...

அவ்வளவுதான்....எல்லாம் முடிந்து விட்டது.
ஹர்சித் அவளிடம் இருந்து ஒரு குழந்தையைத் தூக்கி கொண்டு என்னுடன் வா என்றும் கூறி நேராக அவன் அம்மா கற்பகத்திடம் எங்களுடன் வந்து ஒருமாதம் இருங்கள்னு கூறிவிட்டு பொத்தம் பொதுவாக இவள் தான் என் குழந்தைகளின் அம்மா நான் அப்பா வேற யாரும் வேறேதும் உரிமைக் கோரிக் கொண்டு வரக்கூடாது...ஆனால் உறவாக வரலாம் என்று உரக்கமாக அதே சமயம் மிக அழுத்தமாக கூறினான்..

உடனே கேசவன் காஞ்சனா வை யாருக்கும் தெரியாமல் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்று விட்டார்...

அவன் கிளம்பியதும் அவளும் அவன் வீட்டு வேலை செய்பவருமான பார்வதியம்மாவும் ஆளுக்கொரு குழந்தைகளை தூக்கி கொண்டு சென்றனர்..

பின்னே வந்த கற்பகம் ,"நான் உன்னுடனே வரமுடியாது மாலை அப்பாவுடன் வருகிறேன்" என்று ஹர்சித் திடம் கூறினார்.
அவனும் சரியென்று அவனுடைய வீட்டிற்கு சென்று விட்டான்....

அவள் கிளம்பும் போது காஞ்சனா மற்றும் கேசவன் இருவரையும் காணவில்லை..அவளுக்கு கிடைத்த வாழ்வை நினைத்து மகிழ்வதா அழுவதா என்றே தெரியவில்லை...அப்படியே சென்று காரினுள் ஏறினாள்...

அவர்கள் சென்றதும் ஆளாளுக்கு ஒன்று பேசிவிட்டு சென்று விட்டனர்...

அனைவரும் சென்றதும் வேலையாட்கள் வைத்து வீட்டை தூய்மை செய்தார்...
அந்த வீட்டு சின்ன மருமகள் ஸ்வேதாவிடம்(அவளுக்கு இது மூன்றாம் மாதம்) நீ இப்பொழுது இங்கே இருக்க வேண்டாம் உன் அம்மா வீட்டில் போய் இருன்னு சொல்லிவிட்டு அவருடைய இரண்டாவது மகன் சரவணனிடம் அவளை அழைத்துப்போ நாங்கள் இங்கே வந்ததும் வாருங்கள் னு சொன்னார்...

இங்கே காரினுள், அவளுடைய மனது இனி இது தான் அவளுடைய வாழ்க்கை,எதையும் மாற்ற முடியாது ஆதலால் இதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவதே சிறந்தது..‌‌
தன்னை விட தன் தோழியின் குழந்தைகளை யாராலும் அன்பாக கவனித்துக் கொள்ள முடியாது .....தன் தோழி அனுசியாவின் குழந்தைகளுக்கு தான் சிறந்த தாயாக இருக்க வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டாள்..தன் தோழியை இத்தனை வருடங்கள் கழித்து இப்படி போட்டோவில் பார்ப்போம் என்று அவள் கனவில் கூட நினைத்ததில்லை...அதைத் தான் அவளால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை...

கார் நிற்கவும் இறங்கிய அவளை நிற்க சொல்லிவிட்டு ஹர்சித் திடம் குழந்தையை கொடுத்து விட்டு வீட்டிற்குள் சென்று ஆலம் கரைத்து வந்து அவர்களை குடும்பமாக நிற்க செய்து ஆலம் சுற்றி உள்ளே செல்ல சொல்லிவிட்டு பார்வதி வெளியே சென்றார்...

அங்கே வாயிற் காவலாளியும் தன் கணவருமான முரளியிடம் ,சின்னய்யா திருமணம் செய்த பெண் இவங்கதான் என்று மகிழ்ச்சியாக கூறிவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டார்....

அவர் வந்ததும் பார்த்தது ஹர்சித் அவளிடம் ,உன் பெயர் என்ன என்றும் கேட்டதைத் தான்...அவள் மெதுவாக மகிழினி என்று கூறினாள்...(ஹீரோயீன் பெயர் சொல்லியாயிற்று) ..

தான் வைத்திருந்த குழந்தையை அவரிடம் கொடுத்து விட்டு , என்னென்ன வேண்டும் என்று கூறுங்கள் நான் கடைக்கு சென்று குழந்தைகளுக்கு பொருட்கள் வாங்கிட்டு வரேன் என்று கூறி லிஸ்ட் போட்டுக்கொண்டு கிளம்பி விட்டான்..

அந்த வீடு ஒரு தளம் கொண்ட வீடு..
கீழ் தளத்தில் ஒரு சமையலறை, ஒரு பெரிய வரவேற்பையுடன் சாப்பாட்டுஅறையும் ,ஒரு சிறிய பூஜையறை,ஒரு படுக்கையறை மற்றும் மணி செல்ல படிகளும் மாடியில் மூன்று படுக்கை அறைகள் மற்றும் பெரிய பால்கனியும் உள்ளன.. பால்கனியில் பெரிய மரத்தாலான ஊஞ்சலும் சிறுசிறு செடிகளும் உள்ளன..
வீட்டின் பக்கவாட்டில் ஒரு சமையலறை மற்றும் படுக்கையறை உள்ளவீட்டில் தான் பார்வதி மற்றும் முரளி இரவு தங்குவர்...

போகும் முன் மறுபடியும் உள்ளே வந்து மாடியுள்ள பெரிய படுக்கையறையில் குழந்தைகளை தூங்க வைக்குமாறு சொல்லிவிட்டு சென்றான்...

ஒரு குழந்தை சிணுங்கியதும் பார்வதி சமையலறைக்கு சென்று வென்னீரும் பால்மாவும் கொண்டு வந்து எவ்வாறு ஆற்றி எவ்வாறு கொடுக்க வேண்டும் என்று கூறியதை கவனமாகக் கேட்டுக் கொண்டாள்...

அந்த குழந்தை பால் குடித்து சமத்தாக உறங்கிய சிறிது நேரத்தில் அடுத்த குழந்தை சிணுங்கியது...இந்த தடவை மகிழினி அதே மாதிரி செய்ததை கவனித்துக் கொண்டார்...

சிறிது நேரத்தில் வந்த ஹர்சித் குழந்தைகளுக்கென வாங்கி வந்த தொட்டிலில் குழந்தைகளை தூங்க வைத்தனர்...

நான் உறங்கும் குழந்தைகளை பார்த்து கொள்கிறேன் நீங்கள் அடுத்த வேலைகளை பாருங்கனு அங்கிருந்த கட்டிலில் படுத்து கொண்டான்....

கீழே வந்து பார்த்தால் வரவேற்பறையில் அவ்வளவு பொருட்கள்..
அனைத்தையும் எடுத்து கீழறையில் அடுக்கிவிட்டு சமையலறை க்கு சென்று பார்வதிக்கு உதவினாள்...

சமையல் முடிந்ததும் ஹர்சித்தை சாப்பிட கூப்பிட சென்றவள் அவன் உறங்கி கொண்டிருப்பதை பார்த்து அவனை ரசித்துக் கொண்டிருந்தாள்..அவன் உறக்கம் கலையவும் அப்பொழுது தான் வந்தவள் போல் சாப்பிடக் கூப்பிட வந்தேன்னு கூறிவிட்டு சென்று விட்டாள்...

அவன் கீழே வந்ததும் பார்வதி நாசுக்காக விலகிவிட்டு தான் குழந்தைகளை பார்த்து கொள்வதாக கூறி மேலே சென்று விட்டார்...

அவர் சென்றதும் அவளையும் அமரசெய்து இருவரும் பரிமாறிய படியே எதுவும் பேசாமல் உண்டனர்.

சாப்பிட்டு முடித்ததும் அவன் கீழேயுள்ள அறைக்குள் சென்று விட்டான்...மகிழினியும் குழந்தைகளை காணச் சென்றாள்...

குழந்தைகளுக்கு பாலூட்டி உறங்க வைத்து விட்டு பார்வதியம்மா மற்றும் முரளியை சாப்பிடடு சிறிது ஓய்வெடுத்து விட்டு வருமாறும் சொல்லி விட்டு அவர் சென்றதும் இரண்டு தொட்டிலுக்கும் இடையே அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள்..அவரும் நீயும் சிறிது நேரம் தூங்குமா னு கூறிச் சென்றிருந்தார்...

எவ்வளவு நேரம் அப்படிருந்தாள் என்று அவளுக்கே தெரிய வில்லை...அடுத்து குழந்தைகள் பசிக்கு அழும் போது தான் சுயநினைவுக்கே வந்தாள்...

அவளால் எப்படி இருக் குழந்தைகளையும் பார்க்க முடியும்..வேகமாக வெளியே வந்து பர்வதியம்மாவை அழைத்தாள்..அவள் நல்ல நேரம் அப்பொழுது தான் அவர் வீட்டுக்குள் நுழைந்தார்...உடனே அவரும்வந்து ஒருக் குழந்தையை கவனித்து கொண்டார்...

குழந்தைகள் உறங்கியதும் இருவர் முகத்திலும் புன்னகை அரும்பியது...

மாலை கற்பகம் வந்ததும் அவள் பேக்கை கொடுத்தார்....பின் அவரும் மகிழினியும் குழந்தைகளை பார்த்து கொண்டனர்..பார்வதியம்மாள் சமையல் மற்றும் வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டார்...

ஹர்சித்தின் தந்தை கணேசனும் இவர்களுடனே இருந்தார்...
கணேசனும் ஹர்சித் தும் காலை அவர்கள் அலுவலகம் சென்றா மாலை தான் திரும்புவர்...

இப்படியே ஒரு மாதம் நல்ல விதமாக சென்றது.....
 
Top