Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா- அத்தியாயம்-13

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே....

போன பதிவுக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி.... ? ? ? ?

இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.....:love:
கற்பகம் &கண்மணி பிளாஷ்பேக் இவ்வளவு நீளமா வரும்னு நானே எதிர் பார்க்கவில்லை......???


ஐப்பசி நல்ல முகூர்த்த நாளில் கண்மணியை பெண் பார்க்க பெற்றவருடன் வந்திருந்தான் இருபத்தேழு வயது கேசவன்...

வந்தவரின் முகத்தில் சிறிதும் ஆர்வமோ,தயக்கமோ, பதற்றமோ ஏன் வெட்கமோ கூட இல்லை....யாருக்கோ பொண்ணு பார்க்க வந்த மாதிரி அமர்ந்திருந்தான்....

கண்மணியை அன்று பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் இருக்க சொல்லிருந்தனர்....ஆதலால் கற்பகத்திற்கு இது எதுவும் தெரியாது....

மெரூன் கலரில் அகல பார்டர் வைத்த பட்டுச்சேலை கட்டவைத்து ஒரு டாலர் செயினும்,கல் வைத்த அட்டியலும், காதில் ஒரு குடைஜிமிக்கியும்,கையில் ஒரு ஒரு காப்பும் அணிந்து தலை நிறைய கனகாமரம் பூவும் பிச்சிப்பூவும் கலந்து கட்டியதை வைத்து அழைத்து வந்து நிறுத்தினர்....

அவளுக்கு இப்போது திருமணம் செய்ய விருப்பம் இல்லை...படிக்க ஆசை...அவள் பெற்றோருக்கும் இது தெரியும்....ஆனால் இவள் மேற்படிப்புலாம் படித்தால் பெரிய வீட்டு வரனல்லவா பார்க்க வேண்டும்....நிறைய நகை, ரொக்கம்,திருமணச் செலவு,சீர் என நிறைய செலவாகுமே என்று தங்கள் நிலையை எண்ணி வந்த வரனில் தங்கள் வசதிக்கேற்ப பார்த்து கொண்டிருந்தனர்....

இந்த வரனில் மாப்பிள்ளை கவர்மெண்ட் உத்தியோகம்...சென்னையில் தங்கியுள்ளது வேலை பார்க்கிறான்.ஓரே பையன்...தங்களை விட உயர்வான வசதி உடையவர்கள்....பக்கத்திலுள்ள நகரத்தில் வசிக்கீறார்கள்...ஆதலால் தங்கள் மகள் சீறும் சிறப்புமாக வாழ்வாள் என்று இதனை முடிவு செய்தனர்...

மாப்பிள்ளை யின் பெற்றோர்க்கு!!!!! பெண்ணை மிக பிடித்து விட்டது....அவன் அவளை திரும்பி கூட பார்க்கவில்லை....

எங்களுக்கு சம்மதம்!!!....மாசி மாதத்தில் திருமணம் வைத்து கொள்வோம்..... பதினைந்து சவரன்,பத்தாயிரம் ரொக்கம்,சீர்ரெல்லாம் பார்த்து செய்ங்க....
திருமணத்திற்கு எங்க பக்கம் இருநூறு பேர் வருவோம்...சாப்பாடு பார்த்துச் செய்ங்கள்.....என்றார் கேசவனின் தந்தை...

பொண்ணு பன்னிரெண்டாம் வகுப்பு படிக்குது.....இவ்வளவு நாள் படிச்சதுக்கு பரீட்சை எழுத விடுவீர்களா???...மணப்பெண்ணின் அத்தை....

தாரளமா எழுதட்டும்... மாப்பிள்ளை யின் தாய்....

(மாப்பிள்ளை யின் அப்பா பேசவில்லையே ஏன் னு தான யோசிக்கீங்க....அவர் முக்கிய வேலையில் உள்ளார்....அது என்ன னு நீங்க கண்டுபிடித்து கமெண்ட்ஸில் சொல்லுங்க சகோதரிகளே ?)

பெண் வீட்டில் எல்லாருக்கும் சம்மதம் என்று கண்மணியின் அப்பா சொல்ல ஒப்பூத தாம்பூலம் மாத்திக் கொண்டனர்....

மாப்பிள்ளை வீட்டார் கிளம்பி சென்ற சிறிது நேரத்தில் சொந்த பந்தங்களும் கிளம்பினர்...

சாயங்காலம் பள்ளி முடிந்து தன் பக்கத்து வீட்டிலிருப்போர் பெண்ணிடம்,"நான் கண்மணி வீட்டுக்கு போறேன்...எங்க அம்மாட்ட சொல்லிவிடு..."என்று அவள் அம்மாவுக்கு தகவல் அனுப்பிவிட்டு நேராக கண்மணியை காண கற்பகம் வந்து விட்டாள்....

அவளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போய் விட்டதாக எண்ணி ருந்தாள்....

அன்னப்பூரணியை வாயிலேயே பார்த்ததும் "கண்மணி எங்கே?அவள் ஏன் பள்ளிக்கு வரவில்லை??? உடல்நலம் சரியில்லை யா?இப்போ எப்படி இருக்கா???னு அவரை பதில் பேச விடாமல் கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருந்தாள்.....

கொஞ்சம் மூச்சு விட்டு பேசுமா....ஒவ்வொரு கேள்விக்கும் என்ன பதில் சொல்லவிடுமா....என்று கூறி நகைத்தார்....

அதற்குள் கற்பகத்தின் குரல் கேட்டு கண்மணியே வந்துவிட்டாள்....

நல்லாத்தான் இருக்க???... அப்புறம் ஏன் நீ பள்ளிக்கூடத்துக்கு வரவில்லை??....லீவு போட்டு விட்டு அப்படி என்ன பண்ணுன????
மறுபடியும் கேள்விகளை அடுக்கிக் கொண்டே இருந்தாள்.....

நல்ல புள்ளமா நீ....போங்க...உள்ள போய் பேசுங்க.... கண்மணி, அவளுக்கு சாப்பிட எதாட்டி குடுத்துட்டு பேசுங்க....னு சொல்லி அவர் வெளியே சென்று விட்டார்....

உள்ளே அழைத்து சென்று அவளுக்கு பண்டங்களை கொடுத்து விட்டு அன்றைய நிகழ்வுகளை கூறினாள்...

உனக்கு இந்த திருமணத்தில் விருப்பமா??

விருப்பம்... விருப்பமில்லை னு ஒன்னும் இல்ல.... எப்படியும் மேற்படிப்பு லாம் படிக்க முடியாது.... அதனால் அப்பாம்மா இஷ்டம் தான்....

சரி... பரீட்சை எழுத சம்மததித்தாங்களே அதுவரை சரிதான்... பக்கத்திலிருக்கும் நகரத்திற்கு போற.... ஒருவேளை உன்ன திருமணம் முடிந்த பிறகு கூட படிக்க வைக்கலாம்....

ம்ம்ம்... பார்ப்போம்....

வழக்கம் போல தோழிகளுக்கு நாட்கள் சென்றன....இருவரும் சீக்கிரம் பிரிய போவதை நினைத்து வருந்தினாலும் சேர்ந்து இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருந்தனர்...

மாசி கடைசியில் முகூர்த்த தேதி குறித்திருந்தனர்....

மால்ராஜா துபாயிலிருந்து வந்துவிட்டான்...இனி துபாய் செல்லபோவதில்லை....மெட்ராஸில் உள்ள கடையில் வேலை கிடைத்து விட்டது னு கூறி மகிழ்ந்தான்...பொண்ணும் சென்னைக்கு போனபிறகு இவன் சென்று அடிக்கடி பார்த்துக் கொள்வான் என்று பெற்றோரும் மகிழ்ந்திருந்தனர்...

திருமண நாளும் வந்தது....அந்த தேதிற்குள் பாதி பரீட்சை முடிந்துவிட்டது....



கேசவன்,கண்மணியின் கழுத்தில் எல்லாப் பெரியவர்கள் சாட்சியாக தாலிகட்டினான்....

அதன்பிறகு எல்லாச் சடங்கு செய்து மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்து செல்ல கண்மணி அவள் பெற்றோரைத் கட்டிக் கொண்டு ஒரே அழுகை.... சிறிது நேரத்தில் எல்லா உறவினரும் சேர்ந்து அவளை தேற்றி வழியனுப்பினர்....

கற்பகத்திற்கு ஒரு தடவை தோழியை திருமண கோலத்தில் பார்க்க ஆசை....
அந்த காலத்தில் வயது பெண்களை அடுத்த வீட்டு திருமணமத்திற்கு அழைத்து செல்ல மாட்டர்....அடுத்த பரிச்சையில் அவளை பார்ப்போம் என்று விட்டுவிட்டாள்...



மாலை அவளுக்கு வாங்கிய சீர் அனைத்தையும் கொண்டு உறவினர்கள் கிளம்பி மாப்பிள்ளை யின் வீட்டிற்கு சென்றனர்...

அவர்களை வரவேற்கவோ சாப்பிடுங்கனு சொல்ல கூடயாருமில்லை..... அவர்களே சாப்பிட்டு விட்டு கிளம்பி விட்டனர்....பெண் வீட்டின் சார்பாக யாரையும் தங்க அனுமதிக்கவில்லை....

கிளம்பும் போதும் கண்மணி அழுகை தான்... நல்ல சமத்தா இந்த வீட்டின் முறைப்படி உன்ன மாற்றி நடந்து கொள்.....குடும்ப பெயரைக் காப்பாற்று....சொல்லிவிட்டு அவள் பெற்றோர் கிளம்பி விட்டனர்....

அவர்கள் கிளம்பியதும் அவளை வேறு புடவை மாற்ற வைத்து ஆயிரம் அறிவுரை வழங்கி கேசவனின் அறையில் விட்டனர்....

உள்ளே வந்தவளுக்கு பயத்தில் வேர்த்து கைகள் நடுங்க ஆரம்பித்தது....அவன் ஒன்றுமே பேசவில்லை....

விளக்கணைத்து படுத்துவிட்டான்.... அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை....சிறிது நேரம் கழித்து அதே கட்டிலின் அடுத்த ஓரத்தில் படுத்தாள்....

திடிரென்று அவள் இடுப்பில் கை வைத்து இழுத்து அணைத்தான்....அவள் பயந்து விட்டாள்....ஏற்கனவே கேட்ட அறிவுரையின் படி சத்தம் போட முடியவில்லை....

அவனின் செயல்களை தடுக்க தடுக்க அவன் வேகமாக முன்னேறினான்...வலியில் சத்தமிட முடியாமல் கண்களிலிருந்து மட்டும் கண்ணீர் நிற்கவில்லை.....அவன் தேடுதலை நிறைவேற்றிய பிறகே அவளை விட்டான்....

அதிகாலையில் எழுந்து குளிக்க வெளியே வந்தாள்...அவளை பார்த்த பிறகு தான் மாப்பிள்ளை யின் அம்மா ரஞ்சிதம்க்கு சந்தோசம்.... இந்த திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்தவனை மிரட்டியல்லவா திருமணம் செய்ய வைத்தார்.....


"பின்னால் குளியலறை உள்ளது.... துணிந்து வைத்து குளித்து அங்கே கொடியில் காயப் போட்டுவிட்டு வந்து விளக்கேற்றி முதன்முதலில் பால் காய்ச்சி சர்க்கரை பொங்கல் செய்து காப்பி எடுத்துஅவனை எழுப்பிக்குடு"...என்றார் ரஞ்சிதம்...

அவர் சொன்னதை யெல்லாம் செய்து விட்டு காப்பியை எடுத்துக் கொண்டு அவனை எழுப்பச் சென்றாள்....

அதற்குள் அவனே எழும்பி அமர்ந்திருந்தான்.....

கா.....கா.....காப்பிபிபி....

வாங்கி குடிக்க கிளம்பி விட்டாள்....

இரவு வரை வேலை இருந்து கொண்டே இருந்தது....ஓய்வு நேரத்தில் ரஞ்சிதம் பேசிக் கொண்டு இருப்பார்....

இரவு ஆனதும் பயம் வந்து விட்டது.... இன்றும் நேற்றே மாதிரி நடந்து கொள்வானோனு....

அவள் பயந்தது தான் நடந்தது....பத்து நாள் அவன் அங்கிருக்கும் வரை அதுதான் நடந்தது......

இடைப்பட்ட நாளில் பரிட்சை க்கு மட்டும் பள்ளிச் சென்றாள்.....அவளை விட்டு விட்டு நின்று கூட்டி வரவேண்டும் என்பது ரஞ்சிதத்தின் கட்டளையல்லவா.....மீறமுடியாது.....

பரிச்சையின் போது கற்பகத்தை பார்த்து சிரிப்பதோடு சரி....பேசக்கூட விடாமல் அழைத்து வந்து விட்டான்....

கண்மணி யின் பெற்றோரும் தங்கள் மகளை காண வருவர்..சில நிமிடங்கள் கூட பேசவிடமாட்டான்..... கூட்டிச் சென்று விடுவான்.....

அவள் வாழ்க்கையை நினைத்து அவளுக்கு மிகவும் கவலையாகி விட்டது....

அவனுக்கு விடுமுறை முடியவும் கிளம்பி விட்டான்.....அவளை அவனுடன் அழைத்து செல்லவில்லை.... அதற்கு அந்த பேதை மகிழ்ந்து போனாள்....


சீக்கிரம் வீடு பார்த்து அழைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆயிரம் முறை ரஞ்சிதம் கூறிவிட்டார்....சரி சரி னு அவரை சமாளித்துக் கிளம்பி சென்று விட்டான்.....


உள்ளம் வசமாகுமா??-தொடரும்...



கதையில் ஒரு கேள்வி கேட்டிருந்தேனே....விருப்பம் இருந்தால் கமெண்ட்ல சொல்லுங்க....காத்திருக்கிறேன்...:love::love:
 
Last edited:
As usual mixture சாப்பிட்டு இருப்பார் :D :D :D

(கேசவன் மறைந்து நின்று பார்த்தார்....)

Interesting sis
மிக்க நன்றி சகோதரி ?

சரியான பதில்....?
கேசவன் எதை மறைந்து நின்று பார்த்தார் னு சொல்றீங்க.....எனக்கு புரியல....கதையில் ஏதாவது தவறா டைப்பிங்க்கா....
 
மிக்க நன்றி சகோதரி ?

சரியான பதில்....?
கேசவன் எதை மறைந்து நின்று பார்த்தார் னு சொல்றீங்க.....எனக்கு புரியல....கதையில் ஏதாவது தவறா டைப்பிங்க்கா....
Magilini குழந்தைகளோடு வரும்போது கேசவன் மறைந்து நின்று பார்த்தார் என படித்தேனே :unsure: :unsure:
 
Magilini குழந்தைகளோடு வரும்போது கேசவன் மறைந்து நின்று பார்த்தார் என படித்தேனே :unsure: :unsure:
சரிதான்... ?
மகிழினியை குழந்தைகளின் முதல் பிறந்த நாளின் போது கோவிலில் வைத்து மறைந்து நின்று பார்ப்பார்....
 
Nice epi dear.
Maapilaiyin appa pesavilaya? Eppadi pa pesa mudiyum mixture sapidum pothu pesinal vikki kollum, allathu veliyil vanthuvidumallo? Mixture mukkiyam amaichare.
மிக்க நன்றி சகோதரி ?....

ஆமாம்.... கரெக்ட்டா சொல்லிட்டீங்க....

உங்க கமெண்ட் செம.......ஹாஹா :ROFLMAO: :ROFLMAO:
 
Top