Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா- அத்தியாயம்-16

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே....


போன பதிவுக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி....??????


இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.....??





அறைக்குள் வந்த மகிழினியின் முகம் சந்தோசத்தால் மின்னியது.... கார்த்திக் மற்றும் காவ்யா வை உறங்கவைத்துவிட்டு ஹர்சித்தை பார்க்க அவனோ அங்கிருந்த நாற்காலியில் யோசனையுடன் அமர்ந்திருந்தான்....

எழுந்து அவன் காலருகே உட்கார்ந்து அவன் கைப்பிடிக்க அவன் இயல்பு நிலைக்கு வந்தான்....


என்ன யோசனை??

நீ சின்ன வயதிலிருந்து எவ்வளவு கஷ்டப்பட்டுருக்க.....

அதனால....

இனியாவது நீ சந்தோசமாக இருக்கனும்....இப்போ கூட இந்த வாழ்க்கை விட்டுட்டு வேற வாழ்க்கை அமைச்சுக்கிறியா?

ஏன்?

அப்போது தான் உன் வாழ்க்கை மகிழ்ச்சி யாக இருக்கும்...

ஓஹோ....அப்ப நான் இப்போ சந்தோஷமா இல்லனு உங்களுக்கு தெரியுமா???

அவளை நிமிர்ந்து பார்த்தான்...

ஆம்....என் வாழ்க்கையிலே எப்பவுமே நான் இவ்வளவு சந்தோசமா இல்ல....இதைவிட சிறந்த வாழ்க்கை எனக்கு அமைக்க முடியாதுனு கடவுளுக்கே தெரியும்...அதனால் இப்படி தேவை இல்லாதத யோசிக்காம வந்து படுங்க.... சொல்லிவிட்டு அவள் சென்று படுத்து கொண்டாள்...

இவள் இந்த குடும்பத்தை விட்டு போக மாட்டாள்...அதனால் இனி தான் தான் அவளுக்கேற்ற மாதிரி மாற்றும் என்று முடிவு செய்து விட்டு படுத்தான்....

காலையில் அனைவரும் காலை உணவை முடித்து விட்டு சென்னை செல்ல வேனில் ஏறினர்.....

சென்னை வந்தடைய இரவாகியது.... வேனிலிருந்து இறங்கி வீட்டுக்குள் வந்ததும் கற்பகம் அவரறைக்கு செல்ல அவரை தடுத்த மகிழினி,"நீங்க இப்ப எதுவும் எடுக்க வேண்டாம்த்த....எல்லாரும் இரவு உணவு சாப்பிட்டதும் அதை பார்ப்போம்....இப்ப வந்து சாப்பிட வாங்கனு "சமையலறை க்குள் சென்றாள்......

ஏற்கனவே சரவணன் இவர்கள் வருவதற்கு முன்பே இரவு உணவுக்கு ஆர்டர் செய்திருந்தது வந்திருந்தது‌....

குழந்தைகளை கைகால் கழுவ வைத்து மூவரையும் முதலில் சாப்பிட வைத்தாள்...
பின் அனைவரும் சேர்ந்து உண்டதும் குழந்தைகளை விளையாட விட்டு கற்பகமும் மகிழினியும் ஒரு படுக்கைஅறைக்கு சென்றனர்...

அவளை லாப்ட்டில் மேலே உள்ள அட்டைப் பெட்டியை எடுக்கச் சொல்ல அவளும் எடுத்து கீழிரங்கினாள்....

அட்டைப் பெட்டியை திறக்க உள்ளே பாலித்தீன் பைகளில் தனித்தனியே நிறைய புகைப்படங்கள்.....

அவர் கண்மணியும் கற்பகமும் சேர்ந்து எடுத்துக் கொண்ட கருப்பு வெள்ளை போட்டோவை அவளிடம் தர அதை பார்த்தவள் அப்படியே அதை வருடிக் கொடுத்தாள்....

கண்மணிய தெரிதாமா???...

ம்ம்ம்....கண்களில் கண்ணீருடன் தலையாட்டினாள்...

அத்த....இந்த போட்டோ இன்னைக்கு நைட்க்கு மட்டும் எனக்கு தருவீங்களா???

"இல்லை...முடியாது...."சொன்னது கற்பகமில்லை... அவள் அம்மா போட்டோவை பார்க்கும் போது அவளின் முகத்தில் ஏற்படும் உணர்ச்சிகளை பார்க்க தோன்றி வந்து நின்ற ஹர்சித் தான்...

அவள் முகம் சுருங்கி வாடிவிட்டது....

ஏன்டா?கண்ணால் கற்பகம் கேட்க சிரித்துக் கொண்டே "இதை உனக்கே உனக்குனு வச்சிக்கோ"என்றான்....

கண்ணில் கண்ணீருடன் கற்பகத்தை அணைத்து கொண்டாள்....

"உன்னோட ஆள் அங்கே....அவன அணைத்துக்கோனு"கை நீட்டி புன்னகைத்துக் கொண்டே எழுந்து வெளியே சென்று விட்டார்....

அவன் இப்போது அவளருகில் வந்து அமர அவளுக்கு வெட்கம் வர அதை மறைத்தாள்...

அவனிடம் போட்டோவை காட்டி "இது என் அம்மா....நான் அவங்கள பார்த்துட்டேன்....பார்க்கவே முடியாதோனு எத்தனையோ நாள் நினைத்து அழுதிருக்கேன்"....என்றாள்...

ஏன்??இப்போ இவ்வளவு கண்ணீர்....அதான்...உன் ஆசை நிறைவேறிட்டுல....

ம்ம்ம்....எங்க அம்மா ரொம்ப அழகுல????...போட்டாவை பார்த்து கேட்க..

ஆமா... எனக்கு ஏற்கனவே தெரியும்....

எப்படி??

"அதான் உன் அப்பாவ பார்த்திருக்கேனே...."நக்கலாக கூறி அவளை அணைத்து கொண்டான்...அவளும் சந்தோசமாக ஏற்றுக் கொண்டாள்....

அவன் பார்வை மெதுவாக அடுத்த பாலித்தீன் பைக்கு சென்றது....
அதை உணர்ந்த மகிழினி அவனை விட்டு தள்ளி அமர்ந்தாள்...

அவன் அதை எடுக்க அவளும் பார்க்க அதனுள் ஒரு வாலிபனின் உருவம்....

"சரவணன் போட்டோ தான...இது ஏன் இங்க இருக்கு???...."அவனை யோசனையாகப் பார்க்க

கண்கள் கலங்கியபடி"இது என் தம்பி....சங்கர்... சங்கர் மற்றும் சரவணன் இரட்டையர்கள்...ஒரு விபத்தில் நான்கு வருடத்திற்கு முன் இறந்து விட்டான்..."என்று கூறி போட்டோவை உள்ளே வைத்து அட்டைப் பெட்டியில் வைத்து லாப்ட்டில் வைத்தான்..அதற்குள் இயல்பு நிலைக்கு திரும்பி அவளருகே அமர்ந்தான்...

அவளேதும் பேசவில்லை....கையை மட்டும் பிடிக்க அவளை இந்தமுறை இழுத்து அணைத்து கொண்டான்.... அவளுக்கும் பிடித்திருக்க அமைதியாய் இருந்தாள்...


வெளியே குழந்தைகள் சத்தம் கேட்க இருவரும் நகர்ந்து வரவேற்பரை சென்றனர்....

அங்கு போய் எல்லாரிடமும் அவள் அம்மா போட்டாவை காட்டினாள்....


கற்பகம் அவளை தன்னருகே உட்கார் வைத்து ஒரு கேசட்டை எடுத்து வந்து அவர் வீட்டு டேப்ரெக்கார்டரில் போட்டார்...அவள் யோசனைய்க பார்க்க....அதில் ஒரு பெண் இனிமையான குரலால் பாடிக்கொண்டிருந்தாள்.....அதை புரிந்து திகைத்து கண்ணீருடன் அவர் முகம் பார்க்க அவர் "ஆமாம்" னு தலையசைத்தார்...

என் அம்மாவின் குரலா இது.....என்னால் நம்பவே முடியல.....நான் இன்னைக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கேன்னு தெரியுமாம்த்த....என் அம்மா போட்டோ பார்த்து என் அம்மா குரல் கேட்டு.....அச்சோ!!! கடவுளுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.....


"சரி தாம்மா.....உன் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும்....."கணேசன்.

"எல்லாரும் போய் படுங்க...."கற்பகம்.

"அம்மா...நாங்க வீட்டுக்கு போறோம்.."ஹர்சித்

இப்பவா??ஏன்ப்பா??காலைல போலாம்ல....இங்கவாவது நாம் வரும்முன் ஆட்களை சுத்தம் செய்ய சொல்லிருந்தேன்...அங்க இன்னும் தூசியாயிருக்கும்ல....

நாங்க போய் பார்த்து கொள்கிறோம்....மகிழினியின் புறம் திரும்பி" உன்னால் முடியும்ல?"கேட்டான்...

ம்ம்ம்.... தலையை ஆட்டினாள்...

போ...போய் பொருட்கள் எல்லாம் எடுத்து வா...நான் டேக்ஸி புக் செய்றேன்...

அவள் எடுத்துவர எல்லாரிடமும் சொல்லி கொண்டு கிளம்பினர்....

வீட்டிற்கு போய் சுத்தம் செய்து படுக்க பதினொன்றானது....


காலையிலேயே எழுந்து வீட்டு காவலாளியை பொருட்கள் வாங்கிவர செய்து சமைத்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு போட்டாவை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்....




உள்ளம் வசமாகுமா???
 
Top