Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா- அத்தியாயம்-17

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே....


போன பதிவுக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி....??????


இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.....??



பள்ளியில் குழந்தைகளை விட்டுட்டு வீடு வந்தவன் அவளை வெளியே போனும்...கிளம்பு என்றான்....

எங்கே என்று கேட்காமலே கிளம்பினாள்....

போய் போட்டோ எடுத்துட்டு வா ....

ம்ம்ம்.சரி....

காரினுள் ஏறியதும்"எங்கேனு கேட்க மாட்டியா??"என்றான்...

கண்டிப்பா கேட்கனுமாங்க??...

ம்ம்ம்...ஆமா....

சரி...எங்க போறோம்?....


போனபிறகு உனக்கே தெரிஞ்சிரும்....

ஏங்க....இதுலாம் ரொம்ப ஓவர் லொல்லுங்க.... சும்மா இருந்த என்ன கேளுனு நீங்க தான் சொன்னீங்க....

அப்படியா...குறும்பு பண்ணினான்....

சரி...என்ன ஏன் ஏங்கககக னு கூப்பிடற...நல்லாவே இல்ல...பெயர் சொல்லியே கூப்பிடு....

இவ்வளவு நாள் இல்லாம திடிரென இப்ப வந்து நல்லா இல்லனு சொல்றீங்க....

இனி அப்படிதான் டார்லிங்....கூறி கண்ணடித்தான்....

ஙேனு வாயை சிறிது திறந்தபடி திகைத்தாள்...

இப்படி பார்க்காத..

எப்படி?

இப்ப பார்த்தல அப்படி...

ஓஓஓ....ஏன் பார்க்க கூடாது??

அப்புறம் எதுனா நான் பொறுப்பில்லை....

நீங்க பேசுறது ஒன்னுமே புரியல....

புரியாம இருக்கிறதும் நல்லதுதான்....எனக்கும் அது வசதிதான்... மறுபடியும் கண்ணடித்தான்....

இப்போதும் சிறிது வாயைத் திறந்தபடி பார்த்து விழித்தாள்....என்ன இப்படிலாம் பண்றீங்க?

இனிமே அப்படித்தான்...

அவளுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது....

புரியுது போல...

எ...ன்னது...து....இல்ல...எதுவும் புரியல....

ஓ....அப்புறம் ஏன் இங்க சிவக்குது???கண்ணத்தை சுட்டிக் காட்டினான்....

அவளுக்கு வெட்கியது.... அவனுக்கு காட்டாமல் அந்தபுறம் திரும்பி கொண்டாள்.....ஆனால் கவனம் பாதையில்லை....

கார் நின்றபிறகு தான் சுற்றுப்புறத்தை பார்த்தவள் அதிர்ந்தாள்....


இங்குதான் என் நண்பன் வீடும் இருந்தது...அப்பல்லாம் அடிக்கடி வருவேன்....அவன் வீடு மாறின பிறகு வர்ரதேயில்லை....

ஓஹோ....


ம்ம்ம்...இறங்கு....

இப்ப எதுக்கு இங்க வந்திருக்கோம்???

உன் அம்மா போட்டோவ எடுத்துவிட்டு வா.... சொல்லி விட்டு உள்ளே சென்றான்...

அவன் உள்ளே வரவும் காஞ்சனா எதிரில் வந்தார்....அவரை சட்டை செய்யாமல் அங்கிருந்த சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்..‌

அவள் உள்ளே வராமல் வெளி வாசலிலே நின்றாள்.....


ஏன்...அங்கே நின்னுட்ட....வா...வந்து இங்க உட்கார்..

அவளோ காஞ்சனாவை பார்த்தாள்....அவள் முகத்தில் பயம் அப்பட்டமாக தெரிந்தது....ஆனாலும் தைரியமாக அவனருகே சென்று அமர்ந்தாள்.....

"ரொம்ப தைரியம் வந்துட்டு போல....பழசெல்லாம் மறந்துட்ட போல....நல்ல வாழ்க்கை வாழ்றோம்னு திமிரா.....என்ன இருந்தாலும் நீ இரண்டாம் மனைவி தான் இவனுக்கு....உன் அம்மா மாதிரி இரண்டாம் தாரம் .....இந்த வாழ்க்கைக்கே இவ்வளவு திமிருனா முதல் தாரமாக போயிருந்தா தரையில் கால இருந்துருக்காது...."

அவர் பேச பேச அவளையே பார்த்தான்....அவள் குனிக்குறுகியோ அழுதுகொண்டே லாம் அமர்வில்லை...அதுவே அவனுக்கு நிம்மதி தந்தது....

அப்போ....எல்லாமே தெரிஞ்சி வேணும்னே தான் செஞ்சிருக்கீங்க.... எனக்கு இரண்டாம் திருமணம் னு தெரிஞ்சி அதுவும் இவளால் குழந்த பெத்துக்க முடியாதுனு பொய் சொல்லி திருமணம் செய்து வைச்சிருக்கீங்க...அதுவும் யாருக்கும் சந்தேகம் வராது மாதிரி பிளான் போட்டு...இது தப்புன்னு தோனலயா??? இவளுக்கு என்ன குறை??ஏன் இரண்டாந்தாரமா போனும்....ஹர்சித்

ஆமா.....தெரிஞ்சி தான் செய்தேன்...இப்ப என்ன அதுக்கு?இவள் அம்மாவை எனக்கு தெரியாம கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தினதே தப்பு‌‌...இதுல இவள கூட்டிட்டு வந்து என்னையே பார்த்துக்க சொன்னா என்ன அர்த்தம்....நான் என்ன இவளுக்கு ஆயாவா???...இவள் நான் இங்க வச்சி வளர்த்ததே பெரிசு...இவள் பார்க்கும் போது லாம் என் புருஷன் இவ அம்மா கூட இருந்துருக்கானேனு தான் தோணும்....அதுக்கு அவ அம்மா அழகு தான் காரணம்.....இவளும் இப்படி ஒழுங்கா ஒன்னும் சாப்பிடாமலே அழகாவும் அம்சமாகவும் இருக்க கோவம்....அதான் இவளுக்கு எப்படியும் இரண்டாந்தாரம்மாத்தான் கல்யாணம் செய்யனும் இல்லனா இங்கேயே சாகட்டும்னு முடிவு செய்தேன்...இதுலாம் இவ ஸ்கூல் போகும் போதே யோசிச்சி வைச்சிருந்தேன்...ஒருவேளை காதல் கண்றாவினு வந்தா அப்படியே தலைமூழ்கிரலாம்னும் நினைத்திருந்தேன்... .அப்ப பார்த்து இங்க பக்கத்திலயிருந்தவங்க போன் பண்ணி உன்ன பத்தியும் உன் கண்டிசன் பத்தி சொல்லவும் வசதியாபோச்சி....அத பயன்படுத்தி கிட்டேன்....இதுல என்ன தப்பு?

நீங்க பண்ணுனது எவ்வளவு தப்பு தெரியுமா?தினமும் ஒரு பொண்ண கண்ணீர் வடிக்க வைச்சிருக்கீங்க....அது உங்கள உங்க பிள்ளைகள சும்மா விடாது.....

அப்புறம் தப்புலாம் பண்ணுனது உங்க புருஷன்...அப்ப அவர்தான தண்டிக்கனும்....இவள ஏன் கொடுமை படுத்ததனும்??!.....

அவர தண்டிச்சி என் வாழ்க்கைய எதுக்கு நான் கெடுத்துக்கனும்???அதான் இப்படி....இப்படி பண்ணுனா இவள் தண்டிச்ச மாதியும் இருக்கும்...அவர்க்கும் கஷ்டம் தான்....ஆனா எனக்கு இது நிம்மதில.....என்ன பொறுத்த வரை நான் பண்ணினது தான் சரி....


ஆமா...இவள் தண்டிச்சி நீங்க என்ன சந்தோசப்பட்டீங்களோ தெரில....ஆனா இவளும் உங்க பிள்ளைங்க வயசுல இருந்தே தான....அப்போ அவளுக்கு எவ்வளவு வலி ,ஏக்கம் இருந்திருக்கும்....அத ஏன் நீங்க நினைக்கல???இதே நிலைமை உங்க பிள்ளைகளுக்கு வந்திருந்தா???....

என் பிள்ளைகளுக்கு ஏன் இப்படி நிலைமை வரனும்???நான் என்ன இவ அம்மா மாதிரி பயந்து கோழையாய் தூக்கில் தொங்கினேன்....என் பிள்ளைங்க என் நல்ல மனசுக்கு நல்லாத்தான் இருக்காங்க....

ஓ....அப்போ நீங்க பண்ணுனது சரில...அதான் உங்க பிள்ளைங்க இப்ப ரொம்ப நல்ல நிலைமையை இருக்காங்களோ??!?


ஆமா....என் பிள்ளைகளுக்கு என்ன குறை???நல்லாத்தான் இருக்காங்க...

நீங்க இவள கொடுமை படுத்துறதுல நேரம் செலவழித்து உங்க பிள்ளைங்கள கண்டுக்கல போல.....


எ....என்..என்ன சொல்ற?

உங்க மூத்த மகளுக்கு குழந்தையே பிறக்காதுனு தெரியும்ல..அது ஏன்னும் தெரியும்ல???உங்களால் அத மறக்க முடியுமா என்ன??காலேஜ் படிக்கிறப்போ பசங்க கூட பழகி ஊர்சுற்றி கெட்டுபோய் கருதரித்து அதை அபார்ட் பண்ணினதுனால தான இப்போ அவளுக்கு குழந்தை பிறக்காதுனு டாக்டர்ஸ் சொல்லிருக்காங்கனு நான் சொல்லாமலே உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே....

பதிலில்லை....

உன் இரண்டாவது பொண்ணு ஒரு வசதியான நாற்பத்தைந்து வயசுகாரன் கூட திருமணம் ஆகாமலே வாழ்ராலாம்ல....அதுசரி இது உங்களுக்கும் தெரியும்ல...

பதிலில்லை....

இப்போ உன் அருமை பையன் கூட போதைமருந்து பழக்கத்தில அடிமையாகி... மருந்துக்கு காசுஇல்லனா சொந்த வீட்லயே திருடுரான் போல..... இதுவும் உங்களுக்கு தெரியாம இருக்குமா???...

இஇஇஇஇதெல்லாம்ம் உனக்கெப்படி தெரியும்????

ஆக இதெல்லாம் வெளிய தெரியாமலே போய்ரும்னு நினச்சிருக்கீங்க.....அப்படிதான...

இந்த கஷ்டமெல்லாம் உங்களுக்கு ஏன்னு தெரியுமா??

நீங்க இவள கஷ்டப்படுத்திப் பார்த்து சந்தோச பட்டு உங்க பிள்ளைங்க என்ன பண்றாங்கனு கவனிக்காம போனது தான்....இவள நடத்துன விதமும் தான்....இவ கண்ணீர்க்கு கடவுள் உங்களுக்கு குடுத்த தண்டனை....நீங்க திருந்தனும்னு இத நான் கேட்கவுமில்ல.....சொல்லவுமில்ல..இதெல்லாம் சிலபேர்க்கு தெரிஞ்சி புரிஞசிக்க வேண்டி தான்.....நீங்க செஞ்சதுல ஒரு நல்லது இவள என் வாழ்க்கைல கொண்டு வந்தது தான்...அதுக்கு நன்றி....



மகிழினியிடம் திரும்பி,"காட்டு"என்றான்.‌..

"நீங்க இதுவரை என்னை எப்படி நினைச்சிருக்கீங்கனு தெரிஞ்சிகிட்டேன்....
நான் உங்கள் என் அம்மா மாதிரி தான் பார்த்தேன்.....என் கண்ணீர் கூட அறியா வயதில் புரியாமல் அழுதது...உண்மை தெரிந்து உங்க நிலைமையில் யோசிச்சப்போ அதன்பிறகு நான் அதற்காக அழுதது இல்ல....என் அக்கா, என் தங்கச்சி,என் தம்பி னே தான் நினைத்தேன்....அவங்க வாழ்க்கை இப்படி இருக்கேனு எனக்கு வருத்தம் தான்....எனக்கு நீங்க செய்த எதனாலும் என்னால் மறக்க கூட முடியும்....ஆனா என்னோட ஆசை தெரிந்தும் நான் பாத்திரக்கூடாது என் அம்மா போட்டோ வ எரிச்சீங்கல அத நான் எப்பவும் மன்னிக்க மாட்டேன்....நீங்க அவங்கள நான் பார்க்க கூடாது னு தான அப்படி செஞ்சீங்க...ஆனா நான் என் அம்மாவ பார்த்துட்டேன்....இன்னொன்று தெரியுமா???அவங்க குரலையும் கேட்டுவிட்டேன்.....இத சொல்லத்தான் வந்தேன்.....இனி இங்க வரவே மாட்டேன்பெரியம்மா......நம்ம போகலாம்....வாங்க போலாம்..."என்றாள்....

"உன் பொருள் ஏதேனும் எடுக்க வேண்டும் என்றால் எடுத்துக் கொண்டு வா" என்றான்...

அவள் தங்கியிருந்த ஸ்டோர் ரூம்க்கு சென்று அவளுடைய சர்ட்டிபிகேட்ஸ்,அவள் டைரி களை எடுத்து கொண்டு வந்தாள்...

அவனிடம் தலையசைத்து கிளம்பியவள் அங்கே நின்று எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த கேசவனைக் கண்டு வாசலிலே நின்றுவிட்டாள்....

அடுத்த நிமிடமே கணவனின் கையை பிடித்து கொண்டு வெளியே சென்று விட்டாள்..


காரிலேரியது முதல் இருவரும் ஏதும் பேசவில்லை..... அவளுக்கு தனிமை கொடுத்து அவனும் அமைதியாக வண்டி ஓட்டினான்....


கார் வந்து நின்றது பெரிய வீட்டில் தான்....
சரவணன் அலுவலகம் சென்றிற்க,ஸ்வேதா அவள் அம்மா வீட்டிற்கு சென்றிற்க வீடு அமைதியாயிருந்தது....

கற்பகம் மற்றும் கணேசனிடம் எல்லாவற்றையும் சொல்லி விட்டு மதிய உணவை உண்டு கிளம்பி விட்டனர்.....


வீட்டிற்கு சென்றதும்,"என்னை பற்றி ஏற்கனவே உங்கட்ட சொல்லலனு என் மேல் வருத்தமா??"என்றாள்....


"இல்லமா...சில விஷயங்களை நாம் எல்லாரிடமும் சொல்ல முடியாது....சில விஷயங்களை யாரிடமும் சொல்ல முடியாது.....அதனால இதுலாம் ஒன்னுமில்ல...விடு...போய் சர்ட்டிபிகேட்ஸ லாக்கர்ல வை....லாக்கர் பாஸ்வேர்ட்******."சொல்லிவிட்டு மடிக்கணினி முன் அமர்ந்தான்....


இவள் டைரி களை கீழே உள்ள டிராயரில் வைத்துவிட்டு லாக்கரை திறந்து சர்டிபிகேட்ஸை உள்ள வைக்கும் போது அதிலிருந்ததை திகைத்துப் பார்த்து மகிழ்ச்சியுடன் அதை அணைத்து கொண்டாள்....


உள்ளம் வசமாகுமா??
 
Last edited:
Top