Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா- அத்தியாயம்-19

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே....


போன பதிவுக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி....??????


இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.....??


தாமதத்திற்கு மன்னிக்கவும்.....WIFI பிரச்சனை யின் காரணமாக என்னால் இன்று காலை பதிவு கொடுக்க முடியவில்லை....



அதன்பின் அவன் அலுவலகம் செல்ல வில்லை.... வீட்டிலே மடிக்கணினியில் அமர்ந்து வேலை செய்ய தொடங்கினான்....

அவனருகே வந்து "கார்த்திக் மற்றும் காவ்யா க்கு பிறந்தநாள் வருது....புதுசா டிரெஷ் வாங்கனும்...."என்றாள்


"சரிம்மா....இப்ப நீ வேலையை முடிச்சிக்கோ....நான் குழந்தைகளை கூட்டிட்டு வந்ததும் கிளம்பு வோம்....."


"சரிங்க.....நைட் சாப்பிட வீட்டிற்கு வந்திரனும்...."

"சரிம்மா....அவன் மடிக்கணியில் மூழ்கினான்...."

அதன்பின் நாட்கள் அதன் போக்கில் சென்றது.....
-------------------------------

கார்த்திக் மற்றும் காவ்யா பிறந்த நாளும் வந்தது‌... அன்று ஞாயிற்றுக்கிழமை...அன்றுதான் இவர்களின் திருமண நாளும் கூட....காலையில் குழந்தைகளை எழுப்பி குளிகவைத்து புத்தாடை அணியசெய்து காலை உணவை உண்டு கோவிலுக்கு சென்று பெரிய வீட்டிற்கு வந்தனர்....

அங்கு சென்றதும் கேக் கட் செய்து மதிய உணவை உண்டு விட்டு பீச் சென்று விட்டு வீடு திரும்பினர்...

இரவுணவு உண்டு குழந்தைகளும் உறங்கி விட்டனர்....

அவள் படுக்க வர அவன் தூங்கவில்லை....ஏதோ யோசனையில் இருக்க அனுசியாவின் நினைவு என்று தொந்திரவு செய்யாமல் படுத்து கொண்டாள்.....

"சிறிது நேரம் கழித்து,தூங்கலயா மகிழினி?"கேட்டான்...

"ம்ம்ம்...தூக்கம் வரல....ஆனா தூங்கனும்.."

"ஏதாவது சொல்லு...".

"என்ன சொல்ல..."

"ஏதாவது...."

அவள் அமைதியாக இருக்க அவளத் திரும்பி பார்த்தான்...

"நான் கொஞ்ச நேரம் உன் மடில படுத்துக்கவா?"

"ம்ம்ம்...சரி...படுத்துக்கோங்க..."

அவள் எழுந்து அமர அவள் மடியில் முகம் புதைத்து படுக்க அவள் அவனுடைய முடியை வருடி கொடுத்தாள்... முதலில் கூச்சமாய் இருந்தாலும் அவனுக்கு ஆறுதல் கிடைக்க தன் மடிச்சாயந்து அவன் தாயாய் தன்னை நினைக்கிறான் என்று நினைத்தாள்....

திடிரென்று அவன் உடல் குலுங்க பதறி அவனை அணைக்க சிறிது நேரத்தில் அவனே அவளை விட்டு விலகி "எனக்கு ஒரு காபி வேண்டும்" என்றான்...

அவள் காபி எடுத்து வர கீழே செல்ல அதற்குள் அவனும் கீழே சோஃபாவில் வந்து அமர்ந்தான்....

காஃபயை குடுத்து விட்டு அவன் கைகளை ஆதரவாக பிடித்துக் கொண்டாள்...

"நீ போய் தூங்கு...."

"நீங்களும் வாங்க....அவனை அப்படியே விட்டு போக மனதில்லை....

நீ போம்மா....நேரமாகுது....நான் கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு வரேன்..."

"இல்ல...எனக்கும் தூக்கம் வரல...டிவியே பார்ப்போம்...."

"டிவி ஓட..... இருவர் மனமோ அதிலில்லை...."

அவன் அப்படியே சோபாவிலே படுக்க செல்ல "தூக்கம் வந்தால் மேலே போய் படுங்க"....என்றாள்....


இப்போது அவன் சோஃபாவில் படுத்தாலும் தலையை அவள் மடியில் வைத்திருந்தான்.....அவள் கைகளைஅவன் கழுத்தை சுற்றி பிடித்து கொண்டான்....
அவள் என்ன என்று உணரும் முன்னே கண்களை மூடி கொண்டான்....

"மகிழினி...."

"ம்ம்ம்...."

"நிஜமாவே இந்த வாழ்க்கை உனக்கு பிடித்திருக்கா??"

"ஆமாங்க....ஏன் இப்படியே கேட்குறீங்க?"

"தெரிஞ்சிக்கத்தான்...."

"இனி இப்படி கேட்க கூடாது...."

"ம்ம்ம்....இனி இப்படி கேட்கமாட்டேன்...."

"ம்ம்ம்ம்... நல்ல பிள்ளை...."

"ஹோய்...நான் நல்லவன் லாம் இல்ல...."

"ம்ஹ்ம்ம்..நீங்க ரொம்ப நல்லவங்க....

"நம்பாத....நான் ரொமாப மோசமான வன்...."

"எனக்கு தெரியும்...நீங்க நல்லவங்க தான்...."

"இப்போ இப்படி சொல்லுவ...அப்புறம் நீங்க ரொம்ப மோசம்னு சொல்லுவ...."

"நான் ஏன் உங்கள் மோசம்னு சொல்லப் போறேன்???...அப்படி லாம் எப்பவுமே சொல்லமாட்டேன்..."

"பார்க்க தான் போறேன்....."

"எத?"

"எல்லாத்தையும் தான்..."

"புரியல..."

"உன்னைத்தான்....உன்ன முழுசா பார்க்க போறேன்னு சொன்னேன்...".எழுந்து உட்கார்ந்து அவள் முகத்தை பார்த்தான்.ஆனால் கைகளை விட வில்லை....

அவன் வார்த்தைகளில் முகம் சிவந்து தலையை கீழே குனிந்தாள்.

முகத்தை நிமிர்த்தி"பார்க்கவா"....என்றான்...

மறுபடியும் கீழே குனிய நிமிர்த்தி"ஏய்!!!நீ ஏன் இப்படி வெட்கப்படற...என்னால் என்னையே கண்ட்ரோல் பண்ண முடியலை..... உன்ன முத்தமிட்டு கொள்ளவா?னு" கேட்டான்...

கண்களை கீழே தாழ்த்த அதை அவன் பார்க்க கண்களிலே சம்மதம் கிடைக்க அவள் இதழை நெருங்க டக்கென்று மூளை எச்சரிக்க தள்ளி அமர்ந்தான்.....அவள் இன்னும் அந்த புதிய மயக்கத்தில் இருந்து வெளியே வராமலே அவனை பார்க்க"சாரி....சாரிமா..."என்று பதறினான்......

அவளால் தாங்கிக்க முடியவில்லை....அப்படி நெருங்கி வந்து பின் இப்படி விலகி ஏன் தவிக்கனும்???அவளாக அவனை அணைத்து கொண்டாள்....

"ஒன்றுமில்லைங்க.....ஏன் இப்படி சாரிலாம் கேட்குறீங்க??? உங்களுக்கு இஷ்டமில்லனா வேண்டாம்...விடுங்க...இப்ப போய் தூங்குவோம்...வாங்க..".என்று எழ அவள் கையை பிடித்து இழுத்து உட்கார வைத்து மறுபடியும் அவள் மடியிலே படுத்தான்....

"இப்ப என்ன? உங்களுக்கு என் மடில படுக்கும்...அவ்வளவுதான....மேலே வந்து படுங்க....நீங்க தூங்குனதும் நான் தூங்க போறேன்."...என்றாள்....

"இல்ல...கொஞ்சம் பேசணும்"....

"ம்ம்ம்.... சொல்லுங்க..."

"அன்னைக்கு அம்மா பேசுனப்போ நான் லைன்லதான் இருந்தேன்...".

"ஓஹோ."..

"அம்மாவ உன்னிடம் பேச சொல்லிருந்தேன்....என்ன பேசுறாங்கனு தெரியனும்னு லைன்ல இருந்தேன்.."..

"அப்படியா???ஏன்?"...

"நீயா அம்மா சொன்னதபத்தி என்னிடம் ஏதாவது ‌நீ கேட்பனு நினைத்தேன்"...

"அத்த அத சொல்லும்போதே அவங்க முகத்தில் அவ்வளவு வேதனை.... அவங்களுக்கே அவ்வளவு கஷ்டம்னா உங்களுக்கு எவ்வளவு இருக்கும்னு நினைச்சேன்...அதனால உங்கள இன்னும் கஷ்டபடுத்த வேண்டாம் என்று தான் கேட்கல..."


"ஓஹோ...."

"சொல்லுங்க....ஏன் அத்தைய சொல்ல சொன்னீங்க?சொல்லனும்னா நீங்க தான் சொல்லனும்‌....அவங்கள ஏன் கஷ்டப்படுத்தனும்?..."


"சில விஷயத்த அவங்களும் சொன்னா நல்லாயிருக்கும்னு நினைச்சேன்....அவங்களும் சிலத வெளிய சொல்லாம கஷ்டபடுறாங்க....மனசு விட்டு பேசுனா அவங்களுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்ல...."

"அதுக்கு நீங்க லைன்ல இருந்திருக்க கூடாதுங்க..."

"அவங்க பேசுறது எனக்கு தெரிய வேண்டியிருந்தது...."

"நீங்க எல்லாரும் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிச்சீருக்கீங்க....."

"ம்ம்ம்..."

"என்னாச்சி???ஏன் அமைதி ஆகிட்டீங்க??"

"மகிழினி....எனக்குள்ள கொஞ்சம் குழப்பம் இருக்குது....உன்கூட சேர்ந்து வாழ ஆசையா இருக்கு...ஆனாலும் சிலது தடுக்குது....எனக்கு கொஞ்சம் டைம் வேணும்னு தான் இவ்வளவு நாள் தள்ளியிருந்தேன்....அது தேவையில்லனு தெரிஞ்ச பிறகு உன்ன நெருங்கும் போது குற்றவுணர்ச்சியாகிருரேன்...நம்ம சேரும் போது நமக்குள்ள எந்த ஒளிவு மறைவு இல்லாமல் இருக்க னும்னு நினைக்கிறேன்"....அவளை பார்த்துக் கொண்டே தொடர்ந்தான்...


"எனக்குள் ஒரு இரகசியம் பொதிந்துள்ளது....அது இதுவரை யார்க்கும் தெரியாது...அது இப்போ உன்ட்ட சொல்லப் போறேன்....உன் இடத்தில் வேறயாராவது இருந்திருந்தா நான் சொல்லிருக்க மாட்டேன்...எனக்குள்ளே வச்சி வாழ்ந்து முடிச்சிருப்பேன்.... இப்போ தான் நம்ம ரெண்டு பேரும் வேறவேற இல்ல...ஒன்று தானு புரிஞ்சிக்கிட்டேன்....அதுக்கே இத்தனை வருடங்கள் ஆகிருக்கு...சொல்லவா???"


"என்ன நம்பி சொல்றீங்கனா கண்டிப்பா உங்க நம்பிக்கைய காப்பாத்துவேன்....ஆனால் முழு மனதானா சொல்லுங்க....இல்லாட்டி சொல்ல வேண்டாம்.... அதேசமயம் எப்பவுமே நான் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன்...."

ரொம்ப சந்தோசம்....அவள் கைகளை பிடித்து கண்களை பார்த்து
"கார்த்திக் மற்றும் காவ்யா எனக்கு பிறந்த குழந்தைங்க இல்லம்மா....சங்கர்க்கும் அனுசியாக்கும் பிறந்த குழந்தைகங்க"சொல்லிவிட்டான்....

அவள் அப்படியே அதிர்ச்சி ஆகிவிட்டாள்...



உள்ளம் வசமாகுமா???


(அடுத்த பதிவுல சொல்லனும்தான் நினைத்தேன்....பின் என்னோட சகோதரிகளை காத்திருக்க வைக்க விரும்பாமல் இப்போதே சொல்லிவிட்டேன்....ஹப்பியா ?????)


Mostly எல்லாரும் guess பண்ணிருப்பீங்க.....
 
Last edited:
Top