Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா- அத்தியாயம்-20

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே....


போன பதிவுக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி....??????


இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.....??



தன் காதால் கேட்டது உண்மையானு அதிர்ச்சியில்"என்ன சொல்றீங்க"....மகிழினி.

"ஆமாம்மா...நானும் எல்லாரையும் போல தான் என் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்துக் கொண்டிருந்தேன் .....காலேஜ் படிக்கும் போது அப்பாக்கு ஆக்ஸிடென்ட் ஆகி விட்டது..... இரத்தம் தேவை பட்டது....என்னோடது மட்டும் பொருந்தல.... கொஞ்சம் நாட்கள் கழித்து காலேஜ்ல ப்ளெட் டோனெட் பண்ணுனப்போ தான் எனக்கு சந்தேகம் வர விசாரிச்சேன்.... என்ன தவிர எல்லாருக்கும் நெகட்டிவ்... எனக்கு மட்டும் பாஸிட்டிவ்....

வீட்டிற்கு போய் அம்மாட்ட கேட்டேன்...அம்மா அதிர்ச்சியில் பேசவேயில்ல...ஒரே அழுகை...அப்பா தான் எல்லாத்தையும் சொன்னாங்க.....அம்மாவால் நீ இல்லாமல் இருக்கவே முடியாது.... மூன்று பேரையும் ஒரே மாதிரி தான் பார்த்தாள்...நீ அவள விட்டு மட்டும் போய்விடாதே....அவளால் தாங்கிக்க முடியாதுனு....

யோசிச்சேன்......ஒவ்வொரு நொடியும் என்ன அவங்க பிள்ளையாத்தான் நினைச்சாங்க... எங்கேயும் என்ன‌விட்டுக் கொடுத்தே இல்லை...நான் கேட்காமலே என் தேவைகளை செய்திருவாங்க....

அப்படி பட்டவர்களுக்கு நான் என்ன செய்ய முடியும்....ஒரு சராசரி அம்மாக்குள்ள ஆசையை நிறைவேற்றது தான்...அது செய்யனும்னு முடிவு பண்ணுனேன்....

அதற்கு பிறகு அப்படி ஒன்று எனக்கு தெரிஞ்ச மாதியே காட்டிக்கவில்லை.... ஒழுங்கா நல்ல பிள்ளையா காலேஜ் போய் முன்ன விட நல்லா படிக்க ஆரம்பித்தேன்....

என் அம்மா பார்த்து முடிக்கிற பொண்ணுதான் எனக்கானவள்னு முடிவு பண்ணுனேன்....

ஒருநாள் காலேஜ்க்கு வந்தப்போ அம்மா என்னிடம் இப்ப ஒரு பொண்ணு பார்த்தேன்ப்பா..பேசினேன்ப்பா....ரொம்ப பிடிச்சிருந்துச்சி..அவதான் என் மருமகள் னு முடிவுக்கூட பண்ணிட்டேன்....என்னமா...நான் பேசவேண்டிய டயலாக்லாம் நீங்க பேசுறீங்கனு சொல்லி சிரித்தேன்....இப்படி அம்மா யார்க்கு கிடைக்கும்....

படிச்சதும் அப்பா கூட ஆபிஸ் போய் வேலைகளை கத்துக்கிட்டேன்.....
சரவணனும் சங்கரும் உண்மை தெரிந்தாலும் ஒரு நாள் கூட என்னிடம் கோவப்பட்டதே இல்லை......

அவங்க இரண்டு பேருக்கும் அது காலேஜ் கடைசி வருடம்....இருவரும் வெவ்வேறு பிரிவு.... பிராஜக்ட் க்காக சங்கர் பெங்களூரு போயிருந்தான்....

திடிரென்று ஒருநாள் மதியம் அவன் நண்பனிடமிருந்து போன்... அவனுக்கு ஆக்ஸிடென்ட்....சின்ன காயம் தான்...ஆனால் அவன் உங்கள வீட்டுக்கு தெரியாம வரச்சொல்றான் என்று....

அம்மாட்ட என் நண்பனுக்கு ஆக்ஸிடென்ட் என்று பொய் சொல்லி போனேன்... போய் பார்த்தா ஆபத்தான கட்டம்.....மூளைல இரத்தக்கசிவு...காப்பாற்ற முடியாது....இன்னும் மூன்று மணி நேரம் கூட தாங்காதுனு தெரிய என்ன பண்ணனு தெரியாம அவன் பார்க்க உள்ளே போனால் அவன் அனுசியா கையை பிடித்துக் கொண்டு இருந்தான்..

எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி....அவள் என்ன பார்த்ததும் சத்தம் போட்டு அழ எனக்கு ஒன்னும் புரியல....

அவன் அவள கொஞ்சம் வெளியே நிற்க சொன்னான்....அவ போக முடியாது என்று சொல்லி அங்கே நின்றுக் கொண்டாள்....

என்னிடம்," அண்ணா நானும் இவளும் ஒருத்தரவொருத்தர் நேசிக்கிறோம்...இன்னும் கொஞ்ச நேரத்தில் என்னுயிர் போயிரும் என்று தெரிந்து அவள் அழுறாள்.....

எனக்கு இரண்டு கடைசி ஆசை....ஒன்னு...இப்ப அம்மா அப்பா பார்க்க ஆசையா இருக்கு....ஆனா அவங்கள கஷ்டப்படுத்த விரும்பவில்லை...அவங்கள நீ நல்லா பார்த்துக்கனும்.....

இன்னொன்று....அனுசியா...இவள தேத்தி நீ தான் நல்ல வாழ்க்கை அவளுக்கு அமைச்சி வைக்கனும்....நான் இல்லாமல் அவ எப்படி இருக்க போறானு தெரியல.....நாங்க ரொம்ப நேசிப்போம்....எங்க உறவு அந்த அளவுக்கு இருந்தது....

தலையை தொட்டுக்காட்டி இங்கு ரொம்ப வலிக்குது அண்ணா என்றான்..அவனை கட்டி அணைத்து அழுதேன்....

அவங்களுக்கு தனிமை கொடுத்து விட்டு வெளியே வந்து அமர்ந்துக் கொண்டேன்....
சிறிது நேரத்தில் அனுசியா கதறி அழும்ய சத்தம் கேட்டது....என்னால் உள்ளே செல்லக் கூட முடிய வில்லை.....

அவனோட நண்பர்கள் உதவியோடு சென்னைக்கு புறப்பட்டோம்....அப்பாக்கு தகவல் சொல்லிட்டு யாரிடமும் பேசவில்லை....சென்னை வந்ததும் அனைவரும் அழுது அவனுடைய இறுதி சடங்கு முடித்தோம்...."
நிறுத்தினான்....


அவனை அணைத்து முதுகில் நீவி விட அவனே தொடர்ந்தான்...

நான்காம் நாள் அனுசியா போன் செய்து என்னை ஒரு பார்க் வரச் சொன்னாள்...போய் பார்த்தேன்...கருவுற்றிருப்பதாகக் கூறினாள்.....

சங்கர் கூறிய எங்கள் உறவு வார்த்தை க்கு அர்த்தம் புரிந்தது...என்னால் நம்ப முடியவில்லை...நம்பாமலும் இருக்க முடியவில்லை....என்ன செய்ய வேண்டும் என்றாள்....ஒரு நாள் கழித்து சொல்கிறேன்... எனக்கு யோசிக்கனும் என்றுக்கூறி வந்துவிட்டேன்....

அன்றிரவு முழுவதும் யோசித்தேன்....அவள் வயிற்றில் வளர்வது சங்கர் குழந்தைகள் என்று முதலில் யாரும் நம்ப மாட்டார்கள்...அப்படியே நம்பினாலும் அந்த குழந்தைகளுக்கு அப்பா இல்லை....தன் மகன் திருமணத்திற்கு‌முன்பே ஒரு பெண்ணிடம் இப்படி நடந்துள்ளானே என்று அம்மா அப்பா வருந்துவார்கள்....அனுசியாவை குழந்தையை பெற்றுக் கொடுத்து விட்டு போ என்றும் சொல்லி குழந்தைக்கு அம்மா இல்லாமலும் செய்ய முடியாது....முதலில் அவர்கள் வீட்டில் அவளை இந்த நிலைமையில் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் ....என்ன செய்ய என்று யோசித்து ஒரு முடிவு செய்து மறுநாள் அவளிடம் சொல்ல அவள் மறுக்க கடைசியில் வேறு வழியில்லாமல் சம்மதித்தாள்....இந்த உண்மையை எப்போதும் நீ யாரிடமும் சொல்லக் கூடாது என்று சத்தியமும் வாங்கி கொண்டேன்......"நிறுத்தி மகிழினி முகம் பார்க்க அவள் தவிப்பு அவள் முகத்தில் தெரிந்தது...

மனதினுள் புன்னகைத்து வெளியே பாவமாக முகத்தை வைத்து கொண்டு தொடர்ந்தான்...

"அவள் கழுத்தில் அவளே தாலிக் கயிறைக் கட்டக்கொண்டு அவரவர் கழுத்தில் அவரவரே மாலை அணிவித்து கொண்டு முதலில் அவள் வீட்டிற்கு செல்ல நன்றாக திட்டுக் கிடைத்தது... அவளுக்கும் அந்த வீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவள் அப்பா கூற நம்ம வீட்டுக்கு வந்தோம்...

முதலில் அதிர்ந்தாலும் ஏற்றுக் கொண்டனர்...அவள் குற்றவுணர்ச்சி யில் அறையை விட்டே வெளியே வரவில்லை....வீட்டிலும் யாரையும் பார்ப்பதேயில்லை....சங்கர் நினைப்பிலும் என் வாழ்க்கை குறித்தும் கவலையில் ஆழ்ந்தாள்....உணவும் அறையிலேயே முடித்து கொள்வாள்...
என்னாலும் அவளை கட்டாயப்படுத்த முடியவில்லை....

இங்கே இருந்தால் அவளுக்கு மிகவும் சங்கடமாக இருக்கும் ...அது குழந்தைக்கும் நல்லதில்லை என்று முடிவு செய்தேன்... மறுநாளே நான் தனிக்குடித்தனம் போக போகிறேன் என்றேன்....எதுவும் சொல்லாமல் வீடு வாங்கி குடிவைத்தனர்..

அம்மாவை இங்கே வந்து தங்க அனுமதிக்கவில்லை....வீட்டு வேலைக்கு ஆள் வைத்து சமாளித்தேன்....அவள் நண்பர்களை சந்திக்க ஏற்பாடு செய்து குடுத்தேன்....அப்படியாவது அவள் இயல்பாக மாற மாட்டாளா என்று....இனி என் நண்பர்கள் யாரையும் பார்க்க விரும்பவில்லை என்றாள்....ஏன் என்று கேட்டதற்கு தம்பிய காதலித்து விட்டு அண்ணனுடன் வாழ்கிறேன் என்று கேலி செய்கிறார்கள் என்று கூற அதையும் விட்டுவிட்டேன்.....

மூன்றாம் மாதாந்திர செக்கப் செய்யும் போது இரட்டையர்கள் என்று தெரிய வந்தபின் அவள் தெளிந்தாள்... அதற்கு பிறகு அவளிடம் மாற்றம் தெரியவந்தது.... வீட்டில் சிறிது வேலைகள் செய்தாள்.... புத்தகம் படிக்க, சிறிது நடக்க என மாற்றம் வந்தது...அவள் அம்மாவிடம் மட்டும் போனில் பேசுவாள்‌..ஆனாலும் செக்கப்புக்கு மட்டுமே வெளியே வந்தாள்...

ஏழாம் மாதத்தில் அம்மா வந்து வளைகாப்பு பண்ணுவோம் என்று கேட்டதற்கும் அவள் ஒத்துக் கொள்ள வில்லை.....அவள் அம்மா விடமும்‌ வளைகாப்பு க்கு ஒத்துக் கொள்ள வில்லை....

மாடியிலுள்ள இன்னொரு அறையில் தான் இருந்தாள்....இரவில் மட்டும் கதவை தாழ்ப் போடாமல் தூங்குவாள்....ஒன்பதாம் மாதம் என்பதால் மிக கவனமாக இருப்பேன்....என் கதவும் எப்போதும் திறந்தே இருக்கும்‌....ஒரு நாள் இரவில் சிறு ‍‍‌ச‌த்தம் கேட்டதும் உடனே ஓடிச்சென்று பார்த்தேன்....அவள் வலியில் கஷ்டபடுவது தெரிய அவளை அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றேன்....அவளை பரிசோதனை செய்த டாக்டர் இப்போ தான் வலி வர ஆரம்பித்ததுள்ளது.... குழந்தைகள் பிறக்க நேரம் எடுக்கும் என்று கூறிவிட்டு சென்றார்....அப்பப்போ வலி வந்தாலும் அவள் தாங்கி கொண்டே இருந்தாள்.... நான் அம்மா அப்பா க்கு அழைத்து சொல்லிருந்தேன்‌...

திடிரென்று அவளுக்கு முடியாமல் செல்ல டாக்டர் வந்து பரிசோதித்து அவளுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளதாகவும் உடனே ஆபிரேஷன் பண்ணிக் குழந்தைகளை வெளியே எடுக்கனும் என்று கூறினர்....ஆனால் அவள் சிகிச்சை க்கு சம்மதிக்க வில்லை...நான் கெஞ்சி பேசி பார்த்தேன்....

அதற்கு அவள் தயவுசெய்து என்னை மன்னியுங்கள்....என்னால் உங்க வாழ்க்கையே பாழாகிவிட்டது....நான் சங்கரும் இப்படி நெருங்கி பழகி இருக்க கூடாது என்று நினைத்து கவலைப்படுவதா?அவன் இல்லாமல் இந்த உலகத்தில் வாழக் கூடாதுனு நினைத்த எனக்கு ஆறுதலாய் வந்த குழந்தைகளை நினைத்து மகிழ்வதா?என்று தெரியாமல் இருந்தபோது என் வீட்டில் ஏற்க மாட்டாங்க என்று உங்களிடம் பேசி உங்கள் பாதுகாப்பில் இருந்து உங்கள் வாழ்க்கையை அழித்த குற்றவுணர்வு என்னை மிகவும் அரித்து விட்டது....

எனக்கு தெரியும்...என்னால் பிரசவத்தி
ற்கு பிறகு உயிர்வாழ முடியாது.... ஆதலால் எங்க குழந்தைகளை நீங்க தான் பாத்துக்கனும்.....இன்னுமும் சுயநலமாக தான் யோசித்து உங்களை கஷ்டப் படுத்துறேன்....ஆனாலும் வேறு வழியில்லை....என்னை மன்னியுங்கள்....ஆனால் ஒரு நிபந்தனை...அதுவும் ஒரு நாளுக்குள் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.... இல்லையென்றால் என் ஆத்மா சாந்தி அடையாது.....இதற்கு சம்மதியுங்கள் என்று என் காலில் விழுந்து விட்டாள்....எவ்வளவோ முயற்சி செய்தும் என்றாள் அவளை சமாதானப் படுத்த முடியவில்லை..... இறுதியில் குழந்தைகள் மேல் சத்தியாமாக திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினப்பிறகே சமாதானம் ஆனாள்....

அவள் அம்மாவிடம் பேச வேண்டும் என்றதும் போன் செய்து குடுத்தேன்...அவள் அம்மாவிடம் அவளை ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்திருப்பதாகவும், இரட்டை குழந்தைகள் என்றும் தன்னை நான் நன்றாக கவனித்து கொண்டேன் எனவும் கூறினாள்..... அவளுக்கு இந்த பிரசவத்தில் ஏதேனும் ஆனால் அவளுக்கு இறுதி காரியத்தை அவள் அப்பாவோ அல்லது அவள் அண்ணன் தான் செய்ய வேண்டும் என்றாள்....

பிறகு நான் போன் வாங்கி அவர்களிடம் பேசி உடனே வரச் சொன்னேன்....

என் அம்மா அப்பா வந்தபின்பு தான் சிகிச்சைக்கு செல்வதாக சம்மதித்தாள்....அதற்குள் அவர்களும் வர அவர்களிடமும் சிறிது நேரம் பேசி விட்டே ஆபரேஷன் தியேட்டர்க்கு கொண்டு செல்ல பட்டாள்....

குழந்தைகளை மட்டும் தான் காப்பாற்ற முடிந்தது என்றனர்....நான் அமர்ந்திருக்க இரண்டு குழந்தைகளையும் என்னிடம் தான் முதலில் தந்தனர்...

நான் அம்மா அப்பாவை வாங்க சொல்லிவிட்டு எந்த பெண்ணால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதோ அப்படி பெண்ணை பார்க்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று விட்டேன்....நிறைய யோசித்து முடிவு செய்து தான் திரும்பினேன்...

அதன்பிறகு எல்லாவற்றையும் அம்மா, அப்பா,சரவணனே பார்த்து கொண்டனர்...

நீ அன்று வீட்டுக்குள் வருவதற்கு சிறிது நேரம் முன்பு தான் வந்தேன்... நீ வந்ததிலிருந்து உன் முகத்தை தான் பார்த்துக்கொண்டு இருந்தேன்....

உன்னை பார்த்ததும் எங்கோ பார்த்த நினைவு....ஆனாலும் இந்த பெண்ணுக்கு இப்படி ஒரு குறையாக என்று தான் தோனிற்று....உனக்கு அனுசியாவை ஏற்கனவே தெரிந்திருந்ததும் புரிந்தது...குழந்தைகள் உன் மடியில் கிடத்தப்பட நான் வாங்கி வந்திருந்த தாலியை உன் கழுத்தில் அணிவித்தேன்..."
நிறுத்தினான்...




உள்ளம் வசமாகுமா????
 
Last edited:
Top