Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா- அத்தியாயம்-21

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே....


போன பதிவுக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி....??????


இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.....??இது சின்னபதிவு தான்.....நாளை பெரிய பதிவு தருகிறேன்.....





அவன் சொல்லி முடித்தான்....

"நிஜமாகவே நீங்கள் செய்தது எவ்வளவு பெரிய காரியம்....யாரா இருந்தாலும் செய்ய யோசிக்கிற விஷயத்த செய்துட்டு அதை யாருக்கும் தெரியாம வேற மறைத்து வாழ்ந்திருக்கீங்க பாருங்க....தன்கூட பிறந்தவங்களோட குழந்தைக்கே செய்யனும்மா என்று நினைக்கிற காலத்தில் நாம் இருக்கிறோம்....ஆனால் நீங்க....என்னால் சொல்ல முடியலங்க... சத்தியமாக சொல்றேன் யூ ஆர் கிரேட் பர்சன் இன் த வேல்ர்டு().....இப்படி இருக்கும் என்று நான் நினைக்கவே யில்லை.....எந்த இடத்திலும் யார்க்கும் சந்தேகம் வராம பார்த்து பார்த்து கொண்டு வந்துருக்கீங்க....இனியும் இது யாருக்கும் தெரிய வராது....என் வாயிலிருந்தும் இது எந்த காலத்திலும் வெளி வராதுங்க......

அத்தை மாமா வும் என்ன சும்மாவா?? உங்களுக்கு எவ்வளவு ஆதரவாக இருந்திருக்காங்க......உங்க வாழ்க்கை சந்தோசமா இருக்கனும் என்று எல்லாத்தையும் விட்டு கொடுத்து உங்களுக்காக என்று எல்லாவற்றையும் செய்து குடுத்துருக்காங்க.... எனக்கு இப்படி உயர்வான எண்ணங்கள் கொண்ட உறவினர்கள் கிடைச்சிருக்கு..."கூறினாள்...


சிறிது நேரம் அமைதி நிலவியது...

திடிரென்று,"எனக்கு ஒரு சந்தேகம்..."என்றாள்..‌

"கேள்‌‌.‌...."

அத்தை மாமாக்கு இது தெரியாம ‌மறைச்சீங்க..ஓகே...ஆனால் ஏன் அங்க போய் எல்லார் கூடவே இருக்கலாமே....இன்னும் ஏன் வேண்டாம் என்றே சொல்றீங்க?"

"மகிழினி,எல்லாம் பயம் தான்.... எங்கே அவங்க கூடவே இருந்தா இது சங்கர் குழந்தைகள் என்று கண்டுபிடிச்சிருவாங்களோ என்று தான்.... என்ன தான் அனுசியா மாதிரியே குழந்தைகள் இருந்தாலும் குணம், பழக்கவழக்கங்கள் வைத்து கண்டுபிடித்திரலாம் அல்லவா....‌இதே எப்பவாவது குழந்தைகளை பார்க்க வரும் போது அவர்களுடன் இருப்பது மட்டுமே தோணும் அல்லவா??"....

"ம்ம்ம்.....அவ்வளவுதானா???"


வேறென்ன???"

"சரவணன் திருமணம் பத்தி எதுவும் சொல்லவில்லையே???"


"சரவணனும் ஸ்வேதாவும் நான்கு வருடங்களாக காதலித்தவர்கள்...அவள் வீட்டிற்கு தெரிந்து பிரச்சனை ஆகி வீட்டில் அடைத்து விட்டனர்....

இவனும் நம்ம வீட்டில் சொல்ல செய்தி என் காதிற்கு வர அவள் வீட்டில் போய் பேசியதில் உடனே திருமணம் வைக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தினர்....

வேறு வழியில்லாமல் அம்மா,அப்பாவை சம்மதிக்க வைத்தேன்மா...அவர்களும் ஒத்துக் கொண்டனர்....

அம்மாக்கு தான் மிக வருத்தம்...... யாருக்கும் அவர்கள் பார்த்து திருமணம் முடிக்க வில்லை என்று....என்ன செய்வது???இனி அடுத்த தலைமுறையினர்க்கு திருமணம் செய்ய அவர்கள் பொறுப்பில் விட்டுவிட வேண்டியது தான்"....

"எப்படி குழந்தைகளின் தாயார் பெயரில் என் பெயர் சேர்த்தீங்க?"

"பணமிருந்ததால் இது சாத்தியம் ஆகிற்று"....

"ம்ம்ம்.இனி இவர்கள் நம் குழந்தைகள் மட்டுமே...வேறு யாரும் உரிமை கொண்டு வர முடியாது‌.‌..."

"ஆமாம்...யாரும் வரமாட்டார்கள்...வரவும் விடமாட்டேன்"...மகிழினி,இந்த உண்மையை ஏன் உன்னிடம் இவ்வளவு நாள் சொல்லவில்லை என்று உனக்கு கோவமில்லையா?"

நீங்கள் தான் அன்றே சொல்லிட்டீங்களே!!!..

எ....என்று????

சிரித்துக் கொண்டே,"ஏன் இப்படி பதறுகறீங்க???நான் சொல்ல வந்ததே வேற....சில விஷயங்களை யாரிடமும் சொல்ல முடியாது....சில விஷயங்களை எல்லாரிடமும் சொல்ல முடியாது என்று"....

"ஆமாம்‌...அது உண்மை தானேம்மா"

"இப்ப ஏன் சொன்னீங்க?"

"முதலில் சொல்லக் கூடாது என்று உறுதியாக இருந்தேன்.....உன் குணம் புரிந்ததும் யோசித்தேன்....,நீ சிறு வயதிலிருந்தே பட்ட கஷ்டங்கள் தெரிந்து உனக்கு எந்த குறையும் இல்லை என்று தெரிந்து பின் உனக்கும் சராசரி பெண்ணிற்கான ஆசையை யோசித்தேன்....அதனால் என் எல்லா நிபந்தனைகளையும் விட்டு கொடுக்க முடிவு செய்தேன்...ஆனால் உன்னை நெருங்கும் போது உனக்கு உண்மையாக இருக்கனும் என்று மூளை எச்சரிக்கை செய்யும்....அதன் பின்பு பின்வாங்கி விடுவேன்....உன்னோட உணர்வுகளை தூண்டி பின் விலகி என்று உன்னை மிகவும் காயப் படுத்துகிறேன் என்று எனக்கு தெரியுதும்மா....ஆனால் இனி அப்படி நடக்காது.... ஏனென்றால் நான் ஏன் விலக வேண்டும் சொல்லு"....என்றான்...

அவளிடம் பதிலில்லை....


"என்ன ஆயிற்று???...ஏன் அமைதியாக இருக்கிறாய்???"...


"ஒ...ஒன்னுனுமில்ல்ல்லையே....."

"ஏன் இப்படி பதறுற??இப்போவே எதையும் பண்ணப் போற ஐடியாவேயில்லை....அதுவா இயல்பா நடக்கும் போது நடக்கட்டும்...எனக்கு இன்னைக்கு நிம்மதியா தூக்கம் வரும்‌....மனசுல இருந்த கவலை கஷ்டம்,ரகசியம் னு இப்ப எதுவுமில்லாம காலியா இருக்கு...வா....ரொம்ப நேரமாச்சி....தூங்குவோம்... காலையில் எழுந்து பள்ளிக்கு அனுப்பனும்ல...அப்புறம் ஸ்வேதாவ போய் பார்த்துட்டு வருவோம்..."கைப் பிடித்து எழ வைத்தான்....

"நீங்க போங்க....லைட் ஆஃப் பண்ணிட்டு வரேன்...."

அவன் சென்றுவிட அவள் சமையலறைக்குச் சென்று காஃபி பாத்திரங்களை கழுவி விட்டு விளக்குகளை அணைத்து விட்டு வருவதற்குள் தூங்கி விட்டான்....

அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்......தினமும் இப்படி படுத்தவுடன் ஒருநாளும் அவன் தூங்கியதேயில்லை.....இன்று இப்படியென்றால் கண்டிப்பாக இத்தனை நாள் அவன் மனம் குழம்பி உள்ளது....அவனை இனி நிம்மதியாக ,சந்தோசமாக வைக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டு அவளிடத்தில் படுத்து உறங்கினாள்....


உள்ளம் வசமாகுமா???
 
Top