Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா- அத்தியாயம்-22

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே....


போன பதிவுக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி....??????


இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.....??

இந்த எபி எழுத தான் ரொம்ப கஷ்டப்பட்டுடேன்.....அதனால் தான் ரொம்ப லேட்.....தயவு செய்து என்னத தோணுதோ அத சொல்லிருங்க....

நிறையோ குறையோ ஏற்றுக் கொள்கிறேன்...தங்கள் கருத்துக்கு ஆவலாக காத்திருக்கிறேன்....பரிட்சை ரிசல்ட் போல்????





அடுத்த நாள் காலை குழந்தைகள் பள்ளிச் சென்றதும் ஸ்வேதா வை பார்ப்பதற்காக சென்று வந்தனர்....

அவன் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான்... அவனுக்கு அலைபேசி யில் அழைப்பு வர எடுத்து பேசியவன் அந்தப் பக்கம் மால்ராஜா பேச முதலில் எல்லார் நலமும் விசாரித்து விட்டு மகிழினியிடம் அலை பேசியை தர அவள் பேசினாள்....

பேசி முடித்து அலைபேசியை அணைத்து அவனிடம் கொடுத்தாள்....மாமா குடும்பமாக இராமேஸ்வரம் சென்றுள்ளதாகவும் அங்கு அவள் தாத்தா பாட்டி யான கேசவனின் பெற்றோரை சந்தித்ததாகவும் கூறினார் என்பதை கூறினாள்....

"இதை உங்க அப்பாவுக்கு தெரியபடுத்தினாரா என்று கேட்டியா?"

"என் மாமாவிடம் அப்பா எண் இல்லையாம்..அதனால் தகவல் தெரிவிக்க முடியலயாம்.....என்னால் முடிந்தா உடனே தகவல் சொல்ல சொன்னாங்க......."

"ம்ம்ம்....நீயே சொல்லிரும்மா...இதுல நம்பர் இருக்கும்"

"நானா....நான் பேசல.... என்னால் பேச முடியாதுங்க...."தயங்கி கொண்டே கூறினாள்....

"சரி...விடு...நானே தகவல் சொல்லிடுறேன்"...

அவள் வேலைகளை முடித்து விட்டு யோசனையுடன் அமர்ந்திருந்தாள்....அவன் அவளருகே அமர்ந்து அவள் கைகளை பிடித்து கொண்டு ஒரு கையால் தலையை காட்டி "இந்த மண்டைக்குள் என்ன ஓடுது?"கேலியாக கேட்டான்....

"தாத்தா பாட்டி யப் பற்றிதான்..... இராமேஸ்வரத்தில் கடை வைத்திருக்கிறார்களாம்....இங்கே அம்மாவுக்கு பெரிய பாவம் செய்து விட்டதாய் நினைத்து அவர்கள் வாழ்க்கை முழுவதும் ஊருக்கே வராமல் எங்கேயோ போய்ட்டாங்க என்று அன்னப்பூரணி பாட்டி சொன்னாங்க....ஆனால் இப்படி எங்கோ போய் கஷ்டப்படுறாங்கனு நினைக்கும் போது ரொம்ப பாவமா இருக்குது....ஊர்ல எப்படியோ வாழ்ந்திருக்க வேண்டியவங்க...."

"நாம என்ன பண்ண முடியும்??? யார் யார்க்குனு தலைல என்ன எழுதிருக்கோ அது தான் நடக்கும்....விடு.."


"ம்ம்ம்...."என்று எழுந்து சென்றாள்....

அவன் சாப்பிட்டு விட்டு கேசவனை அழைத்து ஒரிடத்திற்கு வரச் சொல்லி தகவலை கூறிவிட்டு மால்ராஜா எண்ணையும் குடுத்து விட்டு பள்ளிக்கு கிளம்பி விட்டான்....

பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு வெளியே வேலையாக செல்வதாக கூறிச் சென்றான்....


இரவு எட்டு மணிஆகியும் வரவில்லை.... குழந்தைகள் உறங்கியதும் அவனுக்கு அழைத்தாள்...அவன் ஏற்கவில்லை.... சிறிது நேரத்தில் அவனே வந்துவிட்டான்...‌

சாப்பிட்டு முடித்ததும் "உனக்கு ஒரு பரிசு கொண்டு வந்துள்ளேன்....என்னவென்று கண்டுபிடி...."என்றான்...

"என்னால் கண்டுபிடிக்க முடியலேயே"....

"கொஞ்சமாவது யோசியேன்...."

"தெரியலேயே..."

"சரி...கண்ணை மூடிக்கொள்...."

அவள் கண்களை மூடியதும் அவள் கைகளில் அதை வைத்தான்....

மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தாள்... கண்ணீருடன் அதை அணைத்து கொண்டாள்....

பிடிச்சிருக்கா???

"ம்ம்ம்.... ரொம்ப பிடிச்சிருக்கு...."அதனையே ரசித்து பார்த்து கொண்டிருந்தாள்....

"பரிசு கொண்டு வந்த எனக்கு எதேனும் கிடையாதா???"


கவனம் அவனிடமில்லை....அதனால் பதிலளிக்கவுமில்லை....சிறிது நேரம் நின்று பார்த்தவன் அவள் தன் பக்கம் திரும்ப போவதில்லை என்று தெரிந்ததும் சிரித்துக் கொண்டே அங்கேயிருந்த படுக்கை அறை யில் சென்று படுத்தான்...

சிறிது நேரம் கழித்தே மீண்டும் அவனை தேட அவன் இல்லை.... அதன்பிறகே அவன் ஏதோ கேட்டது நியாபகம் வர தன்னைத்தானே நினைத்து வெட்கினாள்...

அதை கீழே வைத்து விட்டு அனைத் தேடி அவனிருந்த அறைக்குள் எட்டிப் பார்க்க அவனை படுத்து இருப்பது தெரிய உள்ளே சென்று கட்டிலில் அமர்ந்தாள்....

அவன் கண்விழித்து சிரித்தப்படி"என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட..நீ இனி நாளைக்கு காலைல தான் தெளிவ என்று நினைத்தேன்ம்மா"...கூறினான்..


"சாரி.... நீங்க கொடுத்த பரிசு ரொம்ப பிடிச்சிருந்தது.... நான் இத எதிர்பார்க்கவேயில்லைங்க....எப்படி இப்படி யோசிச்சீங்க?"

"இதுல யோசிக்க ஒன்றுமேயில்லை ம்மா...அதுவாதோன்றிற்று...."

"இப்படி கலர் போட்டாவில் எங்க அம்மாவ நான் நினைச்சு கூட பார்க்கவில்லைங்க....அதுவும் தனியா இருக்கிற மாதிரி வரைய வைத்து கொண்டு வந்துருக்கீங்க....ஆமாம் ஏன் இங்க வந்தத படுத்துருக்கீங்க??"

"அதப் பார்த்ததும் உன் முகத்துல என்ன சந்தோசம்....அதுல நான் கேட்டதுல கூட
கவனம் இல்லை..."

"சாரி..‌என்ன கேட்டீங்க?"

உடனே அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்...."இந்த பரிச கொண்டு வந்த எனக்கு என்ன தருவ?"என்று தான் கேட்டேன்...

"என்ன தரலாம்??? ம்ம்ம்ம்ம்ம்.....இன்று ரசகுல்லா செய்தேன்.....இருங்க அத எடுத்துட்டு வரேன்..."

"எனக்கு நீ எழுந்து செல்லாமலே ரசகுல்லா வேணும்"

"அது எப்படி முடியும்??"

"நீ நினைத்தால் முடியும்"

"எப்படிங்க??ஏதாவது மேஜிக் தெரியுமா??எழுந்து செல்லாமல் கிட்சன்ல இருக்கிறத இங்கயே கொண்டு வருகிற மாதிரி?"

"சரியான டியூப்லைட் நீ.....நான் சொல்ற ரசகுல்லா இங்கே தான் இருக்கு....அதுக்கு நீ குனிந்தாள் போதும்"என்று கூறி கண்ணடிக்க புரிந்தவளுக்கு வெட்கத்தில் தன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள்...

அவள் கைகளை விலக்கியப்படி "நீ தரவில்லை என்றால் நானே ரசகுல்லா வை ருசிச்சிக்கிறேன்"...

"அய்யோ!!என்ன இப்படி பேசுறீங்க!!!"

"பேசாதடா மடையா!!செய் என்று திட்ரீயா?

"இல்ல... இல்ல...திட்டலாம் இல்லங்க"

"திட்டலானா நீயே ரசகுல்லா குடு"

"ஹ்ம்ம்....மாட்டேன்"

"அப்ப திட்னனு ஒத்துக்கோ"

"ஐயோ!!என்ன இப்படி வம்பு பண்றீங்க... குழந்தைகள் எந்திச்சா தேடுவாங்க...நான் போறேன்ப்பா"

அவளை எழ விடாமல் பிடித்து கொண்டு"குழந்தைகள் எந்திக்க மாட்டாங்கனு தெரிஞ்சும் பொய்யா சொல்ற??உன்ன என்ன பண்ணலாம்?....ம்ம்ம்....மகிழினி....உனக்கு பிடிக்கலையாம்மா?....பிடிக்கலனா சொல்லிரு ....விட்டுறுவேன்'"

அவன் கண்களை பார்த்து பேச முடியாமல் கீழே குறித்துக் கொண்டாள்...அவள் நாடியை பிடித்து தூக்கி அவனை பார்க்க செய்ய கண்களை மட்டும் நிமிர்த்தவேயில்லை....

"பயப்படுறீயா?'

பதிலில்லை...

"மகிழினி...என் கண்களை பார்....
நீ சம்மதித்தால் மட்டுமே தான் எதுவுமே..."


"ம்ம்ம்..."சம்மதமாக தலையசைக்க

"அப்போ நான் இப்போது உன் கண்ணத்தில் கிஸ் பண்ண சம்மதமா?"


"ம்ம்ம்...."அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்....

அவள் முகத்தை கைகளில் ஏந்தி அவள் கண்களை பார்க்க அவளும் அவன் கண்களை பார்க்க அவள் இதழை தன் இதழ்களால் மூட அவள் கண்களை மூடினாள்...‌அதன்பின்பானது அவர்களுக்கு தனி உலகமாகமானது...

------------------



மகிழினி,உனக்கு சந்தோசம்தானே???இல்லனா சொல்லும்மா...நானா எதுவும் வற்புறுத்திட்டேனா?

"ம்ம்ம்‌..அப்படி எதுவுமில்லை...சந்தோசம் தாங்க...."சிணுங்கியபடி பேச

"ஓகே..இப்படி பேசி என்ன அடுத்த ரவுண்ட் போலாம்னு சொல்ற"கண்ணடித்து கேட்க

"வேண்டாம் என்று சொன்னா மட்டும்"அவள் வம்பிலுக்க


"இதுல மட்டும் உன் பேச்ச கேட்கிற ஐடியாவே இல்லம்மா"என்று அவர்கள் தங்கள் உலகத்திற்குள் சென்றனர்....


சில மணி நேரங்கள் கழித்து,"போதும்மா....ரொம்ப களைத்து போய்ட்டோம்...மீதி நாளைக்கு...இனி கொஞ்சம் தூங்குவோம்"என்று அவளை அணைத்துக் கொண்டான்...


இந்த அறையில் எப்போதும் இனி ஒரு செட் டிரஸ் இரண்டு பேருக்கும் வைத்துக்கொள்....

ம்ம்ம்...

அவளால் அவனை சிறிதும் விலக முடியாதபடி அணைத்துக் கொண்டே உறங்கினான்...அவளுக்கு தான் மகிழ்ச்சியில் தூக்கமே வரவில்லை....அவனை பார்த்து கொண்டே இருக்க எப்பொழுது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை....



உள்ளம் வசமாகுமா??? தொடரும்
 
Last edited:
Top