Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் என் உள்ளம் உன் வசமாகுமா- அத்தியாயம்-24

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே....


போன பதிவுக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி....??????


இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.....??





ஹர்சித் பைலை தேடும் போது டைரி கண்களில் பட இது நம்ம டைரி இல்லையே....அப்போ அவளோடது தான்.... அடுத்தவங்க டைரியை படிக்கிறது தப்பு அதனால் அப்படியே வைத்திருவோம். என்று வைக்கும் போது அதில் நிறைய டைரி இருப்பதை பார்த்தான்....இவ்வளவு டைரியா???என யோசித்து வேறு ஒரு டைரியை எடுத்தான்....நம்ம மகிழினி தான என்ன எழுதியுள்ளாள் என்று பார்ப்போமா வேண்டாமா என்று யோசித்தான்...‌

சரி சும்மா மேலோட்டமாக பார்ப்போம்....அப்படி என்ன எழுதிருக்காள் என்று....அப்படியே ஒரு பக்கத்தை எடுத்து பார்த்தவனால் நம்பமுடியவில்லை.....அவள் வரைந்து வைத்த படத்தை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்....

ஆம்....அங்கே இருத்தது ஹர்சித் படமே...‌
அடுத்தடுத்த பக்கங்களை திருப்ப மேலும் சில படங்கள்....அதுவும் வர்ணங்களுடன்....அவ்வளவு தத்துருபமாக வரைந்திருந்தாள்....

அவனால் இதிலிருந்து வெளி வரயிலவில்லை.... காரணம் அதிலிருந்தது எல்லாம் அவனது இளவயது படங்கள்.... அவனால் வேறேதும் யோசிக்க முடியவில்லை....இது எப்படி சாத்தியம்????

அடுத்தடுத்த டைரியை புரட்ட எல்லாவற்றிலும் ஹர்சித் படங்கள் இருந்தன...அப்போ இவள் நேசித்தது என்னையா?? அவனுக்கு அவ்வளவு சந்தோஷம்.....

இவளுக்கு எப்படி என்னை தெரியும்?அடிக்கடி என்னை பார்த்திருப்பாள் போல???? அப்போதுதான் அவள் கூறியது நினைவு வந்தது..‌
("பக்கத்து வீட்டுக்கு வருவாங்க...பார்த்து பார்த்து பிடித்துவிட்டது....அப்புறம் என் காலேஜிலே பி.ஜி.பண்ணுனாங்க...... அப்பொழுது தான் என் காதலை உணர்ந்தேன்")...ஆக நான் அசோக் வீட்டிற்கு போகும் போது பார்த்திருக்கிறாள்.....பி.ஜி.பண்ணும் போதும் பார்த்திருக்கிறாள்.....ஆனால் நான் இவளை பார்த்ததே இல்லையே.....என்னை ஒரு பெண் இவ்வளவு நேசிச்சிருக்காள்...இது கூட தெரியாமல் இருந்திருக்கேனே....இப்ப என்ன பண்ணலாம்???இதை முழுவதுமாக வாசிக்கும் முன் அவள் வாயாலே இதை சொல்ல வைப்போம்.....அதன் பிறகு அவளுடன் சேர்ந்து இந்த டைரியை வாசிப்போம்....

டைரிகளை எடுத்து வந்து அவர்களது அறையில் ஒளித்து வைத்து விட்டு பைலை எடுத்துக் கொண்டு சென்றான்.....


அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.....அவளை உடனே பார்க்க வேண்டும் போல இருந்தது....ஆனால் வேலையும் இருக்க இரவுதான் இதைப்பற்றி அவளிடம் கேட்கனும் என்று முடிவு செய்து விட்டான்.....எப்படி ஆரம்பிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான்....


----------
இரவு உணவருந்தி விட்டு அவளுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்....டிவி ரிமோட்டும் இல்லை...அதனால் டிவியும் பார்க்க முடியவில்லை...வேறு வழியில்லாமல் மொபைலை பார்த்து கொண்டு இருந்தான்.... அவளோ அவனை கண்டுகொள்ளாமல் வேலைகளில் மூழ்கி இருந்தாள்......

டைரி களை எடுத்து அவன் அமர்ந்திருந்த சோபாக்கு கீழ் வைத்து விட்டு அமர்ந்தான்....வேலைகளை முடித்து விட்டு வந்து அவனருகே அமர்ந்தாள்.....

" வேலை எல்லாம் முடிந்ததா?தூங்க போவோமா?..."என்றான்...

"ம்ம்ம்ம்....போவோம்...."என்று எழ அவள் கைபிடித்து அமரவைத்து

"உன் காதல் கதையை சொல் சொல்"என்று பாடினான்....."

"எ....என்னது?..நீங்க சொன்னது சரியாக கேட்கலை"....

"அதான்ம்மா உன் அருமையான காதல் கதையை சொல் கேட்போம்"நக்கலாக கூறினான்...

"அதான் ஏற்கனவே சொன்னேனே"....

"ஏது!!! செய்யுள் மாதிரி சொன்னியே அதுவா?"....

"ம்...புரியல....என்ன சொல்றீங்க?"

"நான்கு வரி செய்யுள் மாதிரி இல்லாமல் கதை மாதிரி சொல்லு என்றேன்"...


"ஓஓஓஓஓ...இப்போ அது எதுக்கு?"

"தெரிஞ்சிக்கனும்ல....பின்னாடி வரலாறு தப்பா பேசுமே.... பொண்டாட்டி ரோட் காதல் கதை கூட தெரியலனு"


"அச்சோ!அப்படி எல்லாம் இல்லைங்க.....அது வேண்டாமே"

"ஆனால் எனக்கு அது வேணுமே"


"அது வந்து கொஞ்சம் மறந்துட்டு...."

"ஓஓஓஓஓ..பரவால நியாபகம் உள்ளது மட்டும் சொல்லும்மா"

"பதிலில்லை"

"அப்ப ஒன்று பண்ணலாம்.....மறந்த பகுதிக்கு இதை பார்த்து ட்டு சொல்லு "என்று அவள் டைரி களை எடுத்து காண்பித்து சோஃபாவில் வைத்தான்....

அதை பார்த்ததும் அவளால் எதுவே பேசமுடியவில்லை.....

அவன் ஒரு டைரியை எடுத்து அவளிடம் தந்து "ஒருவேளை எல்லாமே மறந்துட்டோ....இத பார்த்து பார்த்து கதை சொல்லு"என்றான்....

வசமாய் மாட்டிக் கொண்டோம்....இனி மறைக்கமுடியாது...சொல்லிவிட வேண்டியது தான் என்று முடிவு செய்து அவனை பார்க்க அவனோ அவள் எப்போது நிமிர்ந்து பார்ப்பாள் என்று காத்திருந்தவன் அவளிடம்" ஐ லவ் யூ சோ மச் மகிழினி" என்று கூறி அவள் இதழ்களை சிறை செய்தான்.....இதுவரை இல்லாத அளவு அவன் செயல் இருந்தது.....

இதை எதிர்பார்க்காத அவளோ திகைத்து பின் மகிழ்ந்தாள்...‌‌நீண்ட நெடுநேர முத்தத்திற்கு பின் அவள்இதழ்களுக்கே விடுதலை அளித்தான்...

"நீ சொல்றதுக்கு முந்தி நான் சொல்லிட்டேன் .....எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கு தெரியுமா?"

"தெரிந்தது"தன் இதழை தடவிக் கொண்டே சொன்னாள்....

"ம்ம்ம்" என்று அசடு வழிந்தவாறே இப்போ சொல் என்று அவளை தன் கைக்குள் வைத்து கொண்டான்....

"அதான் தெரிஞ்சிட்டுல....மீதியை டைரியை பார்த்தே தெரிஞ்சிக்கோங்க"...

"முடியாததும்மா.....எனக்கு உன் வாயால் தான் கேட்கனும்..நீ என்ன எப்போ எங்க முதல்ல பார்த்தாய்?.."என்றான்....


நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போதுதான் உங்கள முதல்ல பார்த்தேன்....எங்க வீட்டு பக்கத்து வீட்டு மாடியில் நின்னுகிட்டு இருந்தீங்க..அப்புறம் அடிக்கடி உங்கள் பார்ப்பேன்.....

"ஆறாம் வகுப்பிலேவா???"

"ம்ம்ம்....உங்கள் பார்த்தாலே ஒரு நிம்மதியான பீல் கிடைக்கும்...அதனால பார்க்க ஆரம்பித்தேன்.....அப்பலாம் அடிக்கடி வரமாட்டீங்க.....அதனால் சும்மா இருக்கும் போது உங்கள் வரைய ஆரம்பித்தேன்..
அத அப்புறமா பார்த்துப் பேன்........."

"ஓஓஓஓ....ஆனால் நான் உன்ன ஒரு தடவை கூட பார்க்கவேயில்லையேம்மா..."

"ம்ஹும்ம்..என்ன நீங்க பார்த்துருக்கீங்க..."

"அப்படியா...‌எனக்கு நியாபகமில்லையே...."


"ம்ம்ம்....ஒரு தடவை நைட் 7 மணிக்கு போல என்னோட பெரியம்மா என்ன மொட்டமாடில உள்ள ரூம்க்கு மற்ற வைத்து பூட்டி லைட்ட ஆஃப் பண்ணிட்டு போய்ட்டாங்க....நான் அப்போ அழுது கத்துனப்போ நீங்க தான் கதவை திறந்து விட்டீங்க....."

"ஆமா...நியாபகம் வந்துவிட்டது...அந்த பொண்ணா நீ....ஆனா அந்த முகம் நியாபகமில்லையே‌....நானும் இப்படி ஒருநாள் செய்தேனே....சாரிம்மா."கைபிடித்து கேட்டான்.‌.


"ம்ம்ம்...இனி இப்படி பேசாதீங்க...நடக்கனும்னு இருந்திருக்கு‌.‌.விடுங்க"

"அப்புறம்"...

"அப்புறம் நீங்க எப்போதாவது தான வருவீங்க....வரும் போது உங்க சத்தம் கேட்கும்ல அத வச்சி தான் பார்ப்பேன்‌.....வரவில்லைனா உங்க படத்த பார்த்துப்பேன்....அதுகூட பேசலாம் செய்திருக்கேன்...ஆனால் அது காதல் என்று புரியவில்லை..... இப்படியே போய்ட்டு இருந்தது...."

"நான் காலேஜ் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது ஒருநாள் நீங்க என்ன கூப்பிட்டு உன் டிரஸ்ல பின்னாடி இரத்தகறையா இருக்குனு சொல்லிவிட்டு போய்ட்டீங்க....எனக்கு அவ்வளவு அதிர்ச்சி...இந்த நிலைமையிலா நீங்க என்னிடம் வந்து பேசனும் என்று கூச்சம் வேற.... ஒருபக்கம் சந்தோசம் வேற...நீங்க இந்த காலேஜ் தானென்றால் தினமும் பார்க்கலாமே என்று.."சொல்லி அவன் முகம் பார்த்தாள்...

"சாரிம்மா....இந்த நிகழ்ச்சி நியாபகமிருக்கு....ஆனால் முகம் நியாபகமில்லை...."


"ஓஓஓஓஓ...அதன் பின்பு நீங்க எம்.பி.ஏ.மாணவன் என்று தெரிந்து கொண்டேன்....அன்றைலயிருந்து தினமும் வந்து உங்களை பார்ப்பேன்."...நிறுத்தினாள்.‌.


"மகிழினி.‌..என்ன சொல்றதுனே தெரியல....ஒரு பொண்ணு என்ன தினமும் பார்க்க வருகிறதுனு கூட தெரியாமல் இருந்திருக்கேனே...."அவளை கட்டிக் கொண்டு "அப்புறம்" என்றான்....


"அத்தை கூட ஒருநாள் என்னிடம் பேசிருக்காங்க"என்றாள்...

"இங்க பாருடா!!!இது எப்போ?"....

ஒரு நாள் அத்தை காலேஜ்க்கு வந்திருந்தப்போ அங்க போய்ட்டிருந்த என்னக் கூப்பிட்டு"உங்க கிளாஸ்ல போய் இதக் குடுக்க முடியுமா என்று கேட்டாங்க.....உங்க அம்மா அதுவும் உங்கள் பார்க்க அவங்களே அனுப்பும் போது கசக்குமா என்ன?உடனே சரியென்று உங்கள் பார்க்க பேசப்போறோம் என்று சந்தோசம் ஒரு புறம் என்றால் என்ன நியாபகம் வச்சி அதை எதுவும் கேட்ருவீங்களோ என்று பதற்றம் ஒரு புறம் என உங்கள பார்க்க வந்து உங்கட்ட இத கொடுக்க சொன்னாங்க என்று கொடுத்துவிட்டு உங்க முகத்தை பார்த்தா நீங்க என்ன நிமிர்ந்து கூட பார்க்காம கைகளில் வாங்கி விட்டு உங்க அம்மாவ பார்க்க போய்ட்டீங்க....திரும்ப நான் உங்க பின்னாலே வந்து மறைந்து இருந்து பார்க்கும் போது அந்த உங்கட்ட"(இப்ப ஒரு பொண்ணு பார்த்தேன்ப்பா..பேசினேன்ப்பா....ரொம்ப பிடிச்சிருந்துச்சி..அவதான் என் மருமகள் னு முடிவுக்கூட பண்ணிட்டேன்....என்னமா...நான் பேசவேண்டிய டயலாக்லாம் நீங்க பேசுறீங்கனு சொல்லி சிரித்தீங்க")சொல்லிட்டு இருந்தாங்க....
அது கேட்டப்போ எவ்வளவு சந்தோசம் தெரியுமா?"அப்புறம் தான் இது காதல் என்று புரிந்துக் கொண்டேன்..‌..

இது எப்படி சாத்தியமாகும்???நான் யாருனே உங்களுக்கு தெரியாது‌‌.‌‌....வீட்லயும் சொல்ல முடியாது....உங்கள் நினைக்கவே கூடாது என்று முடிவு செய்தேன்.....ஆனால் என்னால அது முடியல...சரி படிச்சி முடித்து வேலைக்கு போய்ட்டு தான் உங்கள வந்து சந்திச்சி என் காதலை சொல்லனும் என்று முடிவு செய்தேன்...கேம்பஸில் வேலை கிடைத்தது...வேலை பெங்களுரில் ஒருவருடம் கண்டிப்பாக அங்கே இருந்தாக வேண்டிய நிலைமை....ஒரு வருடம் தானே சீக்கிரம் போய்விடும் என்று நம்பினேன்...ஆனால் அதற்கு ரொம்ப கஷ்டப்பட்டுடேன்.ஆனாலும் காதலை எப்படி சொல்ல என்று தெரியாமலே கனவில் உங்களுடன் வாழ ஆரம்பித்தேன்.....

வேலைக்கு சென்று ஒரு வருடம் முடிந்ததும் உங்களை பற்றி விசாரித்தேன்..அடுத்த நாள் உங்க ஆபிஸ் வந்து தெரிந்தது தான் உங்கள் திருமணம்.... என்னால் அதை தாங்கி கொள்ளவே முடியவில்லை.....உண்மையை சொன்னால் வாழ்வே பிடிக்கவில்லை....தற்கொலை செய்யக் கூடாது என்று தான் வாழ தீர்மானித்தேன்...

இனி என் வாழ்வில் காதல் ,திருமணம் என்ற பேச்சே கிடையாது என்று உறுதியாக இருந்தேன்.....

அன்றிலிருந்து சில மாதங்கள் கழித்து காலையில் வேலைக்கு கிளம்பி கொண்டிருந்த என்னை வலுக்கட்டாயமாக கூட்டி வந்தார்கள்.....காரில் ஏறிய பிறகு தான் எனது பேக்கை பார்க்க உனக்கு திருமணம் என்றார்....எனக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்லி மும் கேட்கவில்லை‌‌.‌....சரி....உங்க வீட்ல எல்லாரிடமும் சொல்லி நிறுத்தி விட வேண்டும் என்று தான் உள்ளே வந்தேன்...

ஆனால் நான் வந்து பார்த்தது அனுசியா போட்டாவையும், குழந்தைகளையும் தான்‌‌....எல்லாம் புரிய குழந்தைகளை உங்களிடம் சொல்லி நானே வைத்துக் கொள்ள முடிவு செய்யும் போது தான் என் கழுத்தில் ஏதோ ஊற நிமிர்ந்து பார்த்தா நீங்க என் கழுத்தில் தாலிக் கட்டிக் கொண்டிருப்பதை தான்....


உள்ளுக்குள் அவ்வளவு சந்தோசம் தான் ....ஆனால் நீங்க இப்போது வேறு ஒருவளின் கணவன் ......அவளும் என்னுயிர்த் தோழி, அவள் குழந்தைகள் ...என கொஞ்சம் குழப்பமிருந்தாலும் இனி இதுதான் என் வாழ்க்கை.....எனக்கு பிடித்தவருடன் என் வாழ்க்கை....இதுலாம் ஏன் இப்படி நடக்கனும்.....ஏதேதோ யோசித்து முடிவில்"என் உயிருள்ள வரை இனி இது என் வாழ்க்கை ...என் கணவன் ...என் குழந்தைகள்" ...என உறுதியுடன் தான் இல் வீட்டிற்குள் நுழைந்தேன்...."கூறி அவன் முகம் பார்க்க அவனோ அவளை அப்படியே இறுக்கமாக அணைத்துக் கொண்டான்...‌


அவளை விடுவித்தவன்"ம்ம்ம்....சொல்லு"..

"அவ்வளவுதான்"

"உன் காதலை சொல்"

"எப்படி?"

"உன் விருப்பப்படியே"

"ம்ம்ம்ம்"....யோசித்தாள்‌.‌‌

அவன் சிறிது நேரம் காத்திருந்து விட்டு படுத்துக் கொண்டான்...‌."அனுசியா எப்படி தெரியும்?"என்றான்.‌‌..

"
அவள் என் பள்ளித் தோழி..‌ஏழு வருடங்களாக எங்கள் நட்பு இருந்தது‌...‌எனக்காக நிறைய செய்வாள்....சாப்பாடு லாம் கொண்டு வருவாள்.‌...பேசிட்டே இருப்பாள்‌......அவ அம்மாவும் நல்லா பேசுவாங்க..‌.‌தினமும் காலைல சாயங்காலம் அவள் கூப்பிட வருவாங்க......காலேஜ் வேற போனதுக்கு அப்புறம் தொடர்பில்லாம போயிற்று"என்றாள்...


அவன் கண்களை மூடி படுத்திருந்தான்....அதன்பின்.எதுவும் பேசவில்லை......

அவளுக்கு தயக்கமிருந்தாலும் அவன் நெற்றியில் முதல் முத்தத்தை பதித்து"ஐ லவ் யூ ஹர்சித்"என்று அவனை கட்டிக் கொண்டாள்...‌அவள் முத்தத்தில் விழித்தவன் அவள் வார்த்தைகளில் இவ்வுலகையே வென்றவாறு மகிழ்வுடன் அவனுடைய மகிழ்ச்சியை கட்டிக் கொண்டான்.....


உள்ளம் வசமாகுமா???
 
Last edited:

Advertisement

Latest Posts

Top