Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ராஜா ராணி - 9

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
Hi dear ladies and girls thanksssssssssss alot.

share your views...here comes the next update of ?? raja rani

------------------------------------------------------------------------

காதல் 9
“இப்போ நான் வேணுமா வேண்டாமான்னு நீ சொல்லு….” என நந்தன் பட்டெனக் கேட்க சட்டெனப் பதில் சொல்ல முடியாதவளாக அதிர்ந்த மதுரவசனி, எங்கே தனது மௌனத்தை அவன் தவறாக எடுத்துக் கொள்வானோ எனப் பயந்து, கரகரத்த குரலில்,

“நந்தன் ப்ளீஸ் இப்படில்லாம் பேசாதீங்க.. எனக்குக் கஷ்டமா இருக்கு…..” என மதுரவசனி கெஞ்ச

“மது என்னோட கேள்விக்கு பதில் சொல்லு… நான் உனக்கு வேணுமா வேண்டாமா? எஸ் ஆர் நோ….?” எனக் கேட்க அரக்கனுக்கும் ஆழ்கடலுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டவளாக தான் இருந்தாள் மது.

“எனக்கு நீங்க வேணும்.. நந்தன் “

“ம….து…….ஐ லவ் யூ சோ மச் டா…..” என்றான் நெகிழ்ச்சியாய். அதில் அவளும் நெகிழ,

அந்த நெகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைக்காத வண்ணம், “அப்போ நான் சொல்றதை செய் மது…… நீயே உங்க வீட்ல சொல்லு.. அவங்க என் அப்பா அம்மா இல்ல….. நானும் நீயும் விரும்புறதையும் சொல்லிடு… வேணும்னா நானும் வந்து பேசுறேன்…. குறிச்ச தேதியில கல்யாணம் நடக்கட்டும்.. ஆனா அந்த வீட்டாளுங்க யாரும் வரக்கூடாது… நான் ரகு மட்டும் தான் என் சார்பா… சரியா…” என அவன் சொல்ல

“என்ன நந்தன் பேசுறீங்க….? புரிஞ்சுதான் சொல்றீங்களா…. உங்களைப் பெத்தவங்க இல்லாம எப்படி நம்ம கல்யாணம் நடக்கும்…? அது மட்டுமில்லாம நான் லவ் பண்றேன்னு சொன்னா எங்க வீட்ல சோத்துல விசம் வைச்சு கொல்வாங்க…. அதான் உங்களுக்கு வேணுமா…?” என ஆத்திரமாய்க் கேட்க

“அப்படி எதாவது நடந்தா நான் உன் குடும்பதுக்கே விசம் வைச்சு கொன்னுடுவேன் மது….” என அவன் சீரியசான குரலில் சொல்ல,

இதையெல்லாம் போனில் பேசி அவனிடம் புரிய வைக்க முடியுமென அவளுக்கு தோணாதலால் ,

“நந்தன் எனக்கு உங்களைப் பார்க்கனும்..இப்போவே…நான் வரேன் உங்க வீட்டுக்கு..எனக்கு அட்ரெஸை மெசெஜ் அனுப்புங்க……” என்றவளது கூற்றை ஆமோதித்தவன் அவ்வாறே செய்ய, மதுரவசனி அடுத்த முக்கால் மணி நேரத்தில் நந்தனின் வீட்டில் இருந்தாள்.

அவள் சென்றப்போது அவன் பால்கனியில் நின்று கடலை வேடிக்கைப் பார்க்க, ரகு தான், “மேல இருக்கார்…” என்று சொல்லி அனுப்பி வைத்தான்.

இவன் செய்த கலாட்டவால் அரக்கப் பறக்க கூந்தல் பறக்க, வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்தவள் மூச்சிரைக்க நின்ற இடம் அவனது படுக்கையறை.

அவளது மூச்சிரைப்புக் கேட்டு திரும்பிய நந்தன், “ஹே..!! மதும்மா.. என்ன இது…. இப்படி வந்திருக்க……. கூல் கூல்..” என்றவன் தண்ணீரை எடுத்துப் பருகத் தந்தான்.

அவள் கண்கள் கலங்கி இருக்க, அதை கண்ணுற்ற அவளது கண்ணன், மதுவின் மதி முகத்தைக் கைகளில் தாங்கியவன், கண்களைத் துடைத்து விட்டு,

“என்னாச்சும்மா…ஏன் அழுகை…?” என வாஞ்சையாய்க் கேட்க

“ஏன் போன்ல அப்படில்லாம் பேசுனீங்க.. அநாதை.. அது…. இதுன்னு..” எனத் தேம்பியப்படிச் சொன்னவளின் கையைப் பிடித்தவன், அதை வருடியபடி,

“இப்போ நான் அநாதை இல்ல மது… நீ இருக்கும்போது நான் எப்படி மா அநாதை ஆவேன்… சொல்லு… நீ எப்போவுமே எங்கூட இருப்பதானே…” என ஆவலாய்க் கேட்டவனிடம் ஆமோதிப்பாய் தலையசைத்தாள்.

“மது…. நான் உன்னைப் பார்த்தது.. சண்டைப் போட்டது….. என் மனசை சொன்னது…. எல்லாம் உடனே நடந்து முடிஞ்சிச்சு…. அப்புறம் என்னோட அமெரிக்க பயணம்.. இடையில நீ வேற போன் பேசக்கூடாதுன்னு ஸ்டீரிக்டா சொல்லிட்ட…. என் மதுவோட ஆர்டர் மீற முடியல…… என்னைப் பத்தி நான் உன்ட்ட முழுசா எதுவும் சொல்ல நேரமில்ல…. இப்போ சொல்றேன் கேளு…..” என்றவன் பெருமூச்சை வெளியேற்றி விட்டு,

“நான் நிஜமாவே அநாதை தான் மது…. என்னைப் பெத்தவங்க யார்ன்னே எனக்குத் தெரியாது.. என்னை வளர்த்தவங்க தான் உன்னை வந்துப் பெண் கேட்டது…. அவங்களுக்கும் எனக்கும் எந்த ரத்த சம்மந்தமும் இல்லை….” என வார்த்தைகள் இறுக்கமாய் ஒலிக்க, அவனை அதிர்ச்சியோடு மது ஏறிட்டுப் பார்க்க

நந்தன் கண்கள் சிவக்க, சுவற்றை வெறித்தவாறே மதுவின் கைகளைப் பற்றிய நிலையிலே சொல்லிக் கொண்டேப் போனான்.

“நந்தன் நீங்க நிஜமா தான் சொல்றீங்களா..? கோபத்துல சொல்ல..ல…தா..னே….” என அவள் திணறலோடு வினவ,

“மது… ஒன்னு நல்லா புரிஞ்சிக்கோ… கோபத்துல நான் பொய் சொல்ல மாட்டேன்….. ஒரு காலத்துல விளையாட்டுக் கூட என்னை அவங்க பையன் இல்லன்னு சொன்னா தாங்கதவன் நான்… ஆனா ஒரு நாள் எந்த முன்னறிவிப்பும் இல்லாம வர சுனாமி போல என் வாழ்க்கையும் மாறிடுச்சு….. எல்லாமே தலைகீழாப் போயிடுச்சு… என்னோட அம்மா எனக்கு அம்மா இல்ல…… அப்பா அவர் என்னோட அடையாளம் இல்ல.. என் தம்பி, என் தங்கை, தாத்தா, ஆத்தா யாருமே எனக்கு சொந்தமில்லை…… என்னோட வீடு எனக்கு வீடே இல்ல…… உலகத்தில நான் உதிக்க காரணம் யார்னு இன்னிக்கு வர எனக்குத் தெரில…… நான் தப்பானவங்களுக்குக் கூட பொறந்திருக்கலாம்…..” என்றவன் கண்களிலிருந்து கண்ணீர் கனமாய் இறங்க,

அதை பார்த்த மதுவுக்கும் கண்ணீர் உருண்டோடியது, அவனது கையை இறுகப்பற்றினாள்.

“மது… இந்த பிடியை என்னைக்கும் விட மாட்டதானே…?” எனக் கண்ணீரோடு கேட்டவனைக் கண்டவளுக்கு நெஞ்சம் வலிக்க,

“மாட்டேன் என் உயிர் போற வரைக்கும் விட மாட்டேன்……” எனச் சொல்ல

“ம்ஹூம்.. நான் தான் முதல்ல சாகனும் மது… நீ உலகத்தில இல்லன்னு நினைச்சுப் பார்க்கக் கூட முடியாது என்னால…. நான் செத்தா எனக்காக அழ மது இருக்கான்னு நம்பிக்கையில நான் சந்தோசத்துல செத்து போவேன் மா…” என்று தீர்க்கமாய் சொல்ல

“போதும்.. இப்படில்லாம் பேசாதீங்க….” என அவள் சொல்ல

“அப்போ என்ன பேசனும் நீயே சொல்லேன்…”

“அவங்க உங்களை வளர்த்தவங்களா இருந்தாலும் உங்க மேல பாசமா தான் இருக்காங்க.. உங்களை எங்கேயும் விட்டுக்கொடுக்கல… அதுவும் அத்தைக்கு நீங்கன்னா ரொம்ப இஷ்டம்….. நம்ம சேரனும்னு நம்மளை விட அதிக ஆசை அவங்க எல்லாருக்கும் தான்…. என்னோட வீட்டை சமாளிக்கறது ஈசியில்லங்க… என்னோட அப்பா அம்மா மட்டுமில்லாம பெரிப்பா பெரிம்மா, சித்தப்பா சித்தின்னு எல்லாரும் ஒத்துக்கனும்…. அவங்களாம் ஒத்துட்டாலும் ஆத்தா ஒத்துக்கனும்….. இப்படி எல்லாரும் ஒத்துட்டு நம்ம கல்யாணம் நடக்கப்போவுது… அதையேன் நந்தன் தடுக்கப் பார்க்கிறீங்க….. என்ன இருந்தாலும் உங்களை வளர்த்தவங்க தானே… எதுக்கு இந்த கோபம்…? வேண்டாமேங்க…” என மதுப் பொறுமையாகக் கூற

நந்தன் அவள் கைகளிலிருந்து தனது கையை விடுவித்தவன் எழுந்துச் சென்று அவள் முன்னால் உள்ள சுவற்றில் ஒரு காலை வைத்து தரையில் ஒரு காலை ஊன்றி , மதுவை நோக்கி ஒரு கூரியப் பார்வை வீசியவன் ,

“மது… அவங்க என்னை வளர்த்தாங்க தான் மது….. அதை நான் மறுக்கல… ஆனா வளர்த்த விசயம் தெரியாம இருந்திருந்தா நான் வாழ்க்கை முழுக்க நிம்மதியா இருந்திருப்பேன்…. என்னோட குடும்பம் எனக்கே சொந்தமா இருந்திருக்கும்.. ஆனா அது தெரிஞ்சப்பா ஆயிரம் பேர் ஈட்டியை வைச்சு முதுகில குத்தின வலி மது, உயிரை விடனும்னு தோணிச்சு…”என்றவனை அவள் அதிர்ந்த நயனங்களோடு நோக்க

“கேளு…. முழுசா நான் சொல்றதைக் கேளு மது….. வாழ்க்கை முழுக்க நீ மட்டும் எங்கூட வர போவதில்லை… என்னுடைய வலிகளும் தான்… சோ நீ அதையும் தெரிஞ்சிக்கனும் மது……..” என்றவன் கனம் மிகுந்த தனது கடந்த கால பக்கங்களைத் திறக்கத் தொடங்கினான்.


 
ஏழு ஆண்டுகளுக்கு முன்.

இரவு பன்னிரெண்டு மணி.

தனது தாய் வைரத்தின் அறைக் கதவை தட்டினான் ராஜ் நந்தன்.
மனைவியை எழுப்பிய சுந்தரம் ,

“வைரம்மா… உன் புள்ள வந்துட்டான் பாரு…. போய்…. என்ன சர்ப்பரைஸ்னு பாரு….” என்று சொல்ல

வைரமும் வைரத்தின் புன்னகையோடு எழுந்து கதவைத் திறக்கப் போக அவசரமாக மனைவியைத் தடுத்த சுந்தரம் ,

“ஹே..!! நில்லு நில்லு..” என்றபடி மனைவியின் அருகில் வந்து,

அவரது நெற்றியில் முத்தமிட்டு, ஒரு பெட்டியைப் பரிசாக அளித்து, “ஹாப்பி பர்த்டேம்மா” என்றார்.

கணவனின் அன்பில் நெகிழ்ந்தவர், “ரொம்ப தேங்க்ஸ்ங்க…..” என

“பிரிச்சுப் பார்த்துப் பிடிச்சிருக்கான்னு சொல்லு….”

வைரமும் பிரித்துப் பார்க்க, அதில் ரூபி செட் இருக்க,
“ரொம்ப நல்லா இருக்கு…. எனக்குப் பிடிச்சிருக்கு…” என சொல்ல

“நல்ல காலம் அவனுக்கு முன்னாடி நான் சொல்லிட்டேன்.. இந்த வாட்டி மிஸ் பண்ணல….” என்று உற்சாகமாய்ப் பேசிய கணவனிடம்,

“அட டா ரொம்பத்தான்.. எனக்குப் பொறந்த நாளுக்கே முதன்முதலா கிஃப் கொடுத்தவன் என்னோட ராஜாதான்…. அவனை எல்லாம் உங்களால அடிச்சிக்க முடியாது… இப்போ கூட அவன் எழுப்பின சத்தம் கேட்டு தானே நீங்க எழுந்தீங்க…” என்றவர் ,

“அய்யோ.. உங்கட்ட பேசி ராஜாவை ரொம்ப நேரம் நிக்க வைச்சிட்டேன்…” என்று குடுகுடுவென ஓடி கதவைத் திறக்க,

அங்கே விழிகளில் ஆவலோடு நின்ற ராஜாவைக் கண்டவரை, ராஜ் நந்தன் கட்டியணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டு ,

“ஹாப்பி பர்த்டே அம்மா… மெனி மோர் ஹாப்பி ரீடர்ன்ஸ் ஆஃப் தி டே….. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்…” என்று வகைவகையாய் வாழ்த்தி முத்தமிட,

“ரொம்ப தேங்க்ஸ்டா ராஜா… என் செல்லம்…” என அவனுக்கு முத்தமிட, அதைக் கண்ட சுந்தரமோ, “இவளுக்கெல்லாம் கணக்கே தெரியாதா..? நானும் தானே கொடுத்தேன்.. எனக்கு திருப்பி தரல…” என்றவருக்குத் தெரியும் மனைவிக்கு ராஜா மிக மிக ஸ்பெஷலானவன் என்று.

“இந்தாங்கம்மா…” என்றபடி அவரிடம் கார் சாவி ஒன்றை அவன் நீட்ட,

“டேய்..என்னடா…பெரிய பட்ஜெட்லாம் ப்ளான் போட்ட போல….அதான் வீட்ல கார் இருக்கேடா..” என சுந்தரம் சொல்ல

“கார் இருக்கு.. ஆனா என்னோட அம்மாக்குன்னு தனியாவா இருக்கு… உங்களுக்கு ஒன்னுப்பா.. தாத்தாவுக்கு ஒன்னு…. எனக்கு ஒன்னு….. அம்மாவுக்குன்னு தனியா இல்லை இல்லயா..? போகனும்னா தாத்தாவோட பழைய அம்பாசடர்ல தான் போகனும்.. அதான் இந்த கார் அம்மாவுக்கே ..!! அவங்க எங்கப் போகனும்னாலும் இதுல தான் போகனும்…” என அன்போடு அதிகாரம் கலந்துச் சொல்ல

“அதுக்கில்ல ராஜா….. எதுக்குடா இவ்வளவு செலவு உனக்கு…”

“வைரம்.. பிச்சிடுவேன்.. பெயரே உங்கப்பாரு உனக்கு இவ்வளவு காஸ்லியா வைச்சிருக்கார்.. அப்போ என்னோட பெஸ்ட் அம்மாவுக்கு நான் பெஸ்டாதானே செய்யனும்…… அக்சுவலி உனக்கு ஈகுவளான மதிப்புள்ள பொருள் உலகித்துலேயே கிடையாதுமா…. கிடைச்சா அதையே கொடுத்துருப்பேன்… சோ இனி இந்த ராஜமாதா கார்ல தான் போகனும்.. இது ராஜாவோட ஆர்டர்..” என்று ஸ்டிரிக்டாய் சொல்லும் மகனை வாஞ்சையோடு பார்த்தார் வைரம்.

அவனது உத்தரவைக் கேட்டவருக்கு உதட்டோரம் புன்னகை விகசித்தது. உத்தரவிட்டாலும் அதில் உள்ளார்ந்த அன்பு இருப்பதை அவர் அறிவார். ராஜாவின் குணம் அப்படி. பிடிவாதம் இருக்கும். கோபம் இருக்கும்… அதே அளவு பாசமும் இருக்கும்.. எல்லாமே அவனிடம் அதிகப்படிதான் என்று மகனை மனதுள் செல்லமாய் சீராட்டிக் கொண்டார்.

அதன்பின் மறு நாள் வண்ணமயமான விடியலாய் இருந்தது வைரத்துக்கும். ஆம் வண்ணமயம் தான்.

காலையில் அவர் கதவைத் திறந்து பார்த்தால் கேக், பலூன், ரீப்பன்ஸ் என வீடே அமர்க்களமாய் இருந்தது. அவரது இளைய மக்கள் ராஜதீபனும் கீர்த்திகாவும் தாய்க்கு வாழ்த்தச் சொல்லப் பூங்கொத்தோடு நிற்க, ராஜா சோஃபாவில் அமர்ந்து பேப்பர் படித்தான். கூடவே அவனது அப்பா சுந்தர்ராஜனும் அவரது தந்தை ராஜகோபாலனும் இருந்தனர்.

இளைய செல்வங்களின் வாழ்த்தை ஏற்றவர், மாமனார் மாமியாரிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க,மருமகளை ஆசிர்வாதம் செய்த ராஜகோபால்,

பெருமையாக “பார்த்தீங்களா என்னோட பேரனை…. எப்படி அம்மாவுக்கு பொறுப்பா.. காலையில எழுந்து வாழ்த்து சொல்றான்.. துரைக்கு வேலைக்குப் போய் சம்பாரிச்சதும் கொழுப்பாயிடுச்சு போல….” என ராஜாவைக் குத்திக் காட்ட

“மாமா எல்லாருக்கும் முன்னாடி இவன் தான் எனக்கு வாழ்த்து சொன்னான்…. அது மட்டுமில்லாம எனக்கு என் புள்ள கார் வாங்கிக் கொடுத்திருக்கான்…” எனத் தாயாய் வைரம் பூரித்துப் போய் சொல்ல

“என்ன ஓட்ட கார்.. ராமராஜன் காலத்து காரா…? ஏன் நம்ம வீட்ல உள்ள கார்லாம் துரைக்குக் கண்ணு தெரிலயோ…?” என ராஜகோபால் மீண்டும் ராஜாவை மட்டம் தட்டிப் பேச

அவர் மனைவி வைதேகி, “என்னங்க நீங்க பேரன் சொந்த காசுல…… சம்பாரிச்சு வாங்கி கொடுத்திருக்கான்… அதை பாராட்டாம…?” எனக் கணவனைக் கடிந்தார்.

அவனது செல்ல வைதேகி ஆத்தாவைப் பார்த்து மாயக்கண்ணனாய் நந்தன் கண்சிமிட்ட,

தீபனோ அண்ணன் அருகில் வந்தவன், “சூப்பர்ணா.. எங்க கிட்ட கூட சொல்லவே இல்ல… ஆனா செம…… என்னோட பர்த்டேக்கும் நீ கார் வாங்கித் தரனும்….. இந்த கோவாலு சொன்னதைக் காதில வாங்காதடாண்ணா…… இவரே அவரோட காரை சொப்பனசுந்தரிக்கிட்ட இருந்து வாங்கிட்டு வந்திருப்பாரோன்னு எனக்கு டவுட்…” எனக் கிசுகிசுக்க

“ஏய்….. தாத்தா வயசில பெரியவர் அப்படி பேசாத தீபு…… உனக்கென்ன கார் தானே அப்போ வர லேட்டஸ்ட் காரே அண்ணன் வாங்கித் தரேன்….” எனத் தம்பியிடம் பாசம் பொங்கச் சொன்னான்.

தீபனுக்கும் கீர்த்திகாவுக்கும் நந்தன் என்றால் கொள்ளை இஷ்டம். அதுவும் தம்பி தங்கைகள் எது கேட்டாலும் மறுப் பேச்சு பேசாமல் வாங்கித் தருவான். முன்பு அவனுக்கு கொடுக்கப்படும் பாக்கெட் மணியில் வாங்கித் தந்தவன் இப்போது வேலைக்குச் செல்லத் துவங்கியதிலிருந்து தனது சம்பாத்யத்தில் வாங்கி தருகிறான்.

இருபத்திரண்டு வயதான ராஜ் நந்தன் வைரம் சுந்தரத்தின் மூத்த வாரிசு. அவனுக்கு அடுத்து அவர்கள் வாழ்வில் ஓளி வீச வந்தான் தீபன். அடுத்து அவர்கள் வீட்டு தேவதை கீர்த்திகா.

நந்தன் சி.ஏ முடித்து விட்டு ஒரு பெரிய நிறுவனத்தில் ஆடிட்டராக உள்ளான். அவனது திறமை காரணமாய் அவன் பல நிறுவனங்களுக்கு ஆடிட்டராக இருந்தான். படிப்பில் சுமாரானவனாக இருந்தாலும் திறமையில் குறைவில்லாதவனாக இருந்தான் ராஜா. ஆனால் தீபனோ படிப்பில் படுசுட்டி அதிக மதிப்பெண் எடுத்து இஞ்சினியரிங்க் படிப்பில் இந்த வருடம் தான் சேர்ந்துள்ளான். அதனால் தான் தன்னை தாத்தாவுக்குப் பிடிக்கவில்லையோ என்ற எண்ணம் உண்டு ராஜாவுக்கு.

அடுத்து பதினொன்றாவது படிக்கும் கிருத்திகா. அவளுக்கு ராஜா மீது ஒரு ஹீரோ வொர்ஷிப் தான். அவளை விட மூன்று வயது பெரியவனான தீபனோடு அவளுக்கு சண்டை வந்தாலும், ராஜா அவளுக்கு ஃபாதர் ஃபிகர்தான். எதுக்கெடுத்தாலும் அவளுக்கு அம்மாவும் அண்ணனும் வேண்டும்.
ராஜகோபாலனுக்கு நந்தன் என்றாலே அலர்ஜிதான். அவனை சுத்தமாக அவருக்குப் பிடிக்காது. காரணமாக ராஜா பலவற்றை யூகம் செய்து வைத்திருந்தாலும் உண்மை காரணம் அவனுக்குத் தெரியவில்லை. அது தெரிய வந்த போது அவனால் தாங்க முடியவில்லை.

தொட்டதெற்கெல்லாம் அவனை அவர் உதாசீனப்படுத்தினாலும் அவனது ஆத்தா வைதேகிக்காகவும் அவனது தாயார் வைரத்துக்காகவும் அவன் பொறுத்துப் போய் விடுவான். அப்படியேக் கட்டுக்கடங்காமல் கோபம் வந்தாலும் அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளத் தனியாகச் சென்று விடுவான். இல்லாவிட்டால் அவனது கோபத்தை அவனாலேயே தாங்க இயலாது.

ராஜா படிப்பை முடித்தப் பின் அவனுக்கு அவர்களது அலுவலகத்திலேயே வேலை செய்ய சொல்லாமல் வேறு வேலைத் தேடிக் கொள்ள சொன்னார் ராஜகோபால். அதில் அனைவருக்கும் வருத்தம் தான் என்றாலும்,

சுந்தரம் மகனிடம், “ராஜா… தாத்தா சொல்றதை தப்பா எடுக்காதப்பா… என்னையும் அவர் வேலைக்கு வெளியே தான் போகச் சொன்னார்… அப்போதான் நம்ம திறமை என்னன்னு நமக்குத் தெரியும்…. கொஞ்சம் வேலைக் கத்திட்டப் பின்னாடி நமக்கு நீயே ஆடிட்டிங் பாரு.. ராஜா.. சரியாப்பா..” என மகனை சமாதானப்படுத்த அவனும் சமாதானமானான்.

அதன்படியே ஒரு நிறுவனத்தில் சாதாரண பணியில் சேர்ந்து இந்த எட்டு மாதத்தில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளான். அது மட்டுமில்லாமல் ஷேர் மார்க்கெட்டை அனாலஸை செய்வதிலும் இவன் புலி. ஆகையால் அந்த வருமானம் வேறு. அதையும் அவன் இன்வெஸ்ட் செய்து அந்த லாபத்தையும் ஈட்டினான். மகனது முன்னேற்றத்தைக் கண்டு வைரமும் சுந்தரமும் அகம் மகிழ்ந்தனர். சுந்தரம் சீக்கிரமே தந்தையை சரிகட்டி மகனுக்கு அலுவலகத்தில் பொறுப்பு வழங்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

காலையில் அனைவரும் உண்டு முடித்து தீபன் காலேஜுக்கும், கீர்த்தி பள்ளிக்கும் செல்ல, ராஜா வழக்கம் போல் தாயாரை ஊட்டி விட வைத்து சாப்பிட்டான். இது சின்ன வயதிலேர்ந்து வழக்கம். அவன் ஸ்கூல் கிளம்பும் அவசரத்தில் சரியாக சாப்பிடாமல் செல்ல, அதிலேர்ந்து மகனுக்கு ஊட்டி விடும் வழக்கத்தை அவர் செய்ய, ஒரு கட்டத்தில் அவர் ஊட்டி விடாவிட்டால் சாப்பிடாமல் இருக்கும் அளவுக்குப் போனான் நந்தன்.

எந்த அன்னைக்கானாலும் மகவுக்கு ஊட்டி விடுவது பிடித்த செயல்தானே..!
அதுக்கு வைரமும் விதிவிலக்கல்லவே..!! ஆனால் காலையில் மாமனார் அலுவலகம் சென்ற பின் தான் மகனுக்கு ஊட்டி விடுவார். அந்த விசயத்தால் அவருக்கு மனத்தாங்கல் தான். ராஜாவை அவர் எளக்காரமாய்ப் பார்ப்பதை அவர் என்றுமே விரும்பியதில்லை. சுந்தரத்துக்கும் ராஜாவின் மீது அதிக பாசம் தான். ஆனால் அதை அவர் காட்டியதில்லை. தந்தையைக் கண்டிக்கவும் முடியாமல் அவர் மகனை விட்டுக்கொடுக்க முடியாமலும் எந்த நேரமும் தடுமாறுவார்.

“அம்மா.. சூப்பர்மா.. உங்க கைப்பக்குவத்தை அடிச்சிக்க ஆளே இல்ல…” என அன்னையின் சமையலை ராஜா பாராட்ட,

“இப்படித்தான் டா ராஜா உங்கப்பன்னும் சொன்னான்.. இன்னிக்கு பாரு….. வைரம்… சாம்பார் பிரமாதம்.. ரசம் ருசின்னு….. சொல்லிட்டுப் போறான்.. நீயும் பாரு மாறிடுவ…” என வைதேகி சொல்ல

“போங்க ஆத்தா… என் அம்மா தான் எனக்கு உலகத்திலேயே முக்கியம்.. எவளா இருந்தாலும் அவங்களுக்கு அடுத்த இடம் தான்…. உங்க பையன் சரியில்லன்னு உங்களுக்குப் பொறாமை….” என்றவன் சாப்பிட்டு விட்டு கைகழுவியபின் தாயின் முந்தானையில் தனது வாயைத் துடைத்தான்.

“ராஜா…. இன்னும் வளராம இருக்க.. நீ..குழந்தையா நீ” என வைரம் அவன் செயலையக் கண்டுக் கேட்க,

“என் அம்மாக்கும் நான் குழந்தைதான்…” என்றவன் ,

“சரிம்மா சீக்கிரமா கிளம்பு……. நம்ம கோவிலுக்குப் போகலாம்….” என்று அவரை துரிதப்படுத்திக் கோவிலுக்கு அழைத்துச் சென்றான்.

வைதேகியோ மனதில், “கட்டினவன் கூடக் கோவிலுக்கு அழைச்சிட்டுப் போகல…. ஆனா இந்த புள்ளையைப் பாரு பெத்தவளை எப்படி தாங்குறான்னு…… இவனைப் பெத்தவ கொடுத்து வைச்சிருக்கனும்.. இந்த புள்ளைக்குக் குறையெதும் கொடுக்காத சாமி…” என்றுப் பேரனை மனதார ஆசிர்வதித்தார்.

அடுத்த இரு மாதங்கள் விரைவாக ஓடி விட,

தீபனின் பிறந்த நாளும் வந்தது. தம்பியிடம் கொடுத்த வாக்கின்படி தனது ஒட்டுமொத்த சேமிப்பையும் கரைத்து சம்பளத்தையும் போட்டு கூடவே கார் லோனும் வாங்கி ஜாக்குவார் காரை வாங்கிப் பரிசளித்தான்.

அவனைப் பொருத்தவரையில் பாசம் மட்டுமே பிரதானம். பணமெல்லாம் இரண்டாம் இடம் தான். தம்பிக்காக கடன்பட்டாலும் அதை அவன் சந்தோசமாகவே ஏற்றான்.

அன்று தீபனின் பிறந்த நாள் பொழுது உற்சாகமாய்க் கழிய, அன்றிரவே ஒரு ஆழிப்பேரலை அடித்து ராஜாவை நிலைக்குலையச் செய்தது.

அந்த பேரலையின் சீற்றம் தாங்கமாட்டாமல் ராஜா உயிரையே விடும் நிலைக்குப் போனான்.

ஆட்டம் தொடரும்..!!
 
Top