Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரிஷிராம் எழுதும் 'மண்ணில் விழுந்த நட்சத்திரம்' அத்தியாயம் 2

Advertisement

rishiram

Well-known member
Member
அத்தியாயம் 2

குப்பமே செண்பகத்தின் வீட்டில் தான் இருந்தது. குடிசையின் நடுவில் நீளமாய் ரங்கன் படுக்க வைக்கப்பட்டு வெள்ளைத் துணியால் போர்த்தப் பட்டிருக்க, செண்பகம் கண்களை சேலையின் முந்தானையால் துடைப்பதும், துக்கம் விசாரிக்க வருபவர்களைப் பார்த்ததும் மறுபடியும் 'ஓ' என்று ஒப்பாரி வைப்பதுமாய் இருந்தாள்.
வெளியில் உட்கார்ந்திருந்த மூக்கு வரை குடித்திருந்த பக்கத்து வீட்டு ஆண்கள் பாடு பேச ஆரம்பித்தார்கள்.
'ரங்கன் குடிச்சதும் குடிச்சிது. வூட்டுக்குள்ளார போய் படுத்திருக்க வேண்டியது தானே? பாம்புக்கு தெரியுமா குடிச்சவனா குடிக்காதவனான்னு...இவன் கை ஏதோ அது மேல படவும் போட்டுத் தள்ளிருச்சி.'
'அவன் தூங்கிட்டு இருந்த மானி தானே இருந்தான்?'
'எல்லாரும் அப்படிதான் நெனச்சிருக்காங்க. ராக்காயி தான் வெயில் அடிச்சும் முழிக்காத பய தண்ணி ஊத்தினா முழிச்சுருவான்னு நெனச்சு ஊத்தியும் முழிக்கலங்காட்டி பக்கத்துல போய் ரங்கான்னு கூப்ட்ருக்கா. வாயில நுரைய பாத்திருக்கா. அப்புறம் அவ கூப்பாடு போட, ஆம்பளைங்க போய் பாத்தா மணிக்கட்ல பல்லு தடம் கெடந்தது.'
'சே இத்தினி புள்ளைங்கள விட்டுட்டு போயிட்டானே! இனி செண்பகம் என்ன பண்ணும்? அது வேற புள்ளத்தாச்சியா இருக்குது.'
'என்ன பண்றது. சாமி என்ன நெனக்குதுன்னு யார்க்குத் தெரியுது'
உள்ளே பெண்களின் பாடு வித்தியாசமாய் இருந்தது.
'எத்தினி மாசமாம்?'
'ஆறாம்.'
'பாரேன் பொறக்கறதுக்குள்ள அப்பன முழுங்கிடிச்சி. இனி என்னென்ன பண்ணப் போகுதோ?'
'ஏ சும்மாக் கெட. அவ காதுல வுழுந்தரப் போவுது.'
குப்பத்து பெரியாட்கள் சொல்வதைக் கவனமாய் கேட்டு நடந்து கொண்டான் பெரியவன். வெளியே பாடை கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. ஒரு 'குடி'மகன் 'போனால் போகட்டும் போடா' என்று வேட்டி நழுவுவது கூட அறியாமல் பாடிக் கொண்டே நடன அசைவுகள் போட கூடியிருந்த கூட்டம் சிறிது நேரம் அவரை வேடிக்கை பார்த்தது.
பெரியவர் ஒருவர் 'ஆரம்பிக்கலாம்' எனவே, பிணத்தை குளிப்பாட்டி புதுத் துணி அணிவித்து நெற்றியில் காசு வைத்து சந்தனத்தால் அழுத்தி பாடையில் படுக்க வைத்தார்கள். பெரியவன் மண் பானை தோளில் வைத்து பிணத்தை மூன்று முறை சுற்றி வர ஒவ்வொரு முறையும் அரிவாளால் ஒரு ஓட்டை மண் பானையில் போடப்பட்டது. உள்ளே வைத்திருந்த நீர் 'பீச்' என்று வெளியே வர, பானை உடைக்கப்பட்டது.
பின்னர் செண்பகத்தின் அழுகை வானைப் பிளக்க, ஆறுவும், செவ்வந்தியும், ராஜாவும் 'அப்பா...' என்று கதற, ஆறுவின் ஒக்கலில் இருந்த சிவா என்ன என்று அறியாவிடினும் எல்லோரும் கதறுவதைப் பார்த்து 'ம்ம்...ம்...' என்று கண்ணீரோடு சிணுங்க, ஊரே அந்த குடும்பத்திற்காக ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டதோடு தங்களால் முயன்ற உதவியை ஈமச் சடங்காய் செய்தார்கள். சேகர் ரங்கனுக்கு கொள்ளி வைத்து நல்லபடியாய்(!) அனுப்பி மொட்டை அடித்துக் கொண்டான். பின்னர் ராஜா, சிவாவுக்கும் மொட்டை அடிக்கப்பட்டது.
வீடு முழுவதும் செண்பகம் தண்ணீர் விட்டு கழுவினாள். பின்னர் ஒரு அருமனை வைக்கப்பட்டு அதில் குத்து விளக்கு ஒன்று ஏற்றப்பட்டது. செண்பகம் கண்ணீர் ததும்பும் முகமாய் இருக்க, துக்கம் விசாரிக்க வந்தவர்கள் குத்து விளக்கை கும்பிட்டு விட்டு செண்பகத்தின் பக்கம் திரும்ப குடிசை முழுவதும் அழுகைச் சத்தம் வெடித்தது. இவ்வாறு அமைதியாயும், அழுகையாயும் கலந்து இரவு வரை அந்த குப்பத்தையே ஒரு சோக மயமாக்கியது.
அன்று இரவு,
வெளியூரில் இருந்து துக்கம் விசாரிக்க வந்த ஆண்களும், பெண்களும் அன்று அங்கேயே தங்கி விட்டனர். ஆண்கள் குடிசையின் முன்பு சில கட்டில்களை பக்கத்து வீடுகளில் இருந்து வாங்கிப் போட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தனர். பெண்கள் குடிசையின் உள்ளே படுக்க, இடப் பற்றாக்குறையால் ஆறுமுகமும் அவளுக்குத் துணையாக சிவாவும்(!) ராக்காயி குடிசையில் போய் படுத்துக் கொண்டனர்.
காலையில் இருந்து வேலை செய்த களைப்பும், அப்பாவை இழந்த மன வலியை மீறி ஆறுமுகத்தை கண் அசர வைத்தது.
திடீரென்று இடுப்பின் மீது ஏதோ ஊறுவதைப் போல இருக்கவே, ஏற்கனவே அப்பா பாம்புக்கடியால் இறந்த சம்பவம் நினைவுக்கு வர, ஊறுவது பாம்போ என்ற பயத்தில் ஆறுமுகம் வாயைத் திறக்கப் போக, அவள் வாயை கையால் மூடிய ஒரு உருவம் அவளின் அருகில் க்ளோசப்பில் தெரிய, குடிசையின் கூரை ஓட்டையின் வழியே வழிந்த பால் நிலா வெளிச்சத்தில் அதனைப் பார்த்த ஆறுமுகம் அதிர்ந்தாள்.

(தொடரும்)
 
Nice epi but very sad.
Avalu kochu alla ?
who is tht beast?
Nee avananu kollu di,
If he is with bad intentions.
 
:love: :love: :love:
அப்பா இறந்த அன்றே வா இந்த கொடுமை அவ கத்தி ஊரக் கூட்டனும்.
பெண்ணுக்கு ஏன் ஆறுமுகம் என்ற ்பேர்
 
Last edited:
:love: :love: :love:
அப்பா இறந்த அன்றே வா இந்த கொடுமை அவ கத்தி ஊருக்கு கூட்டனும்.
பெண்ணுக்கு ஏன் ஆறுமுகம் என்ற ்பேர்
பெண்ணுக்கு ஆறுமுகம் என்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பேர் வைப்பார்கள்.
 
Top