மகிழம்பூவன் மற்றும் சஹஸ்ராவிற்குச் சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தேறி இருந்தது.
தங்களது திருமணப் பேச்சின் போது தனது மனைவி கேட்டுக் கொண்டதன் படியே ஆறு மாதங்கள் அவள் தனது வீட்டிலும், அடுத்த ஆறு மாதங்கள், தான் அவளது வீட்டிலும் தங்கிக் கொள்ள முடிவெடுத்து அதை இன்றளவும் செய்து வருகிறான் மகிழம்பூவன்.
அதேபோல் அவனுக்காகத் தன்னை முழுமையாக மாற்றிக் கொள்ள நினைத்தவளிடம்,”உன்னோட ஆளுமை, அதிகாரத் தோரணை, வேலை செய்றப் பாங்கு, எல்லாமே ஒழுங்காக, நேர்த்தியாக இருக்கனும்ன்ற எதிர்பார்ப்பு இதையெல்லாம் மாத்திக்காதே அழகிம்மா! அதெல்லாம் உன்னோட அடையாளத்தை உனக்கு வாங்கிக் கொடுத்து இருக்கு! உனக்கே தோணும், நாம சிலதை மாத்திக்கிட்டால் நல்லதுன்னு! அந்தக் குணங்களை மட்டும் மாத்திக்கோ! அதுவும் உனக்காக மட்டும் யோசிச்சு மாத்திக்கோ! எனக்காக நீ மாறத் தேவையில்லை!”என்று அவளிடம் அறிவுறுத்திப் புன்னகைக்க,
அதில் எப்போதும் போல் மயங்கி அவனுடைய கன்னக் குழியில் அழுந்த முத்தமிட்டாள் சஹஸ்ரா.
அந்த ஊரில் புதிதாக கட்டப் போகும் தொழிற்சாலையின் அடிக்கல் நாட்டு விழாவிற்கான நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் சில நேரங்கள் தான் இருந்தது.
அந்த விழாவிற்குச் செல்வதற்காகத் தான் தற்சமயம் கிளம்பிக் கொண்டு இருந்தார்கள் மகிழம்பூவன் மற்றும் சஹஸ்ரா.
தனது கணவனின் முகம் முழுவதும் தனது இதழ்களால் முத்திரைகளைப் பதித்துக் கொண்டு இருந்தவளிடம்,
“நீ இப்படியே பண்ணிட்டு இருந்தால் எனக்குத் தான் கஷ்டம் அழகி! அதுக்கப்புறம், என்னால் என்னோட உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிடும்! பார்த்துக்கோ!”என்று மனைவிக்கு அறிவுறுத்தினாலும் கூட அவளுக்கு ஏதுவாகத் தனது முகத்தை ஒப்புக் கொடுத்துக் கொண்டு தான் இருந்தான் அவளது கணவன்.
உடனே அவளோ,”இந்தக் கருப்பு நிறத்தை வச்சுத் தானே எங்கிட்ட இருந்து தள்ளி இருந்தீங்க? அதுக்குத் தான் நான் உங்களுக்கு இப்படி தினமும் தண்டனைக் கொடுத்துட்டு இருக்கேன்! உங்க கருப்பு நிறம் எனக்குள்ளே வந்துட்டால் உங்ககிட்ட இருந்து அதைப் பத்தின அந்தத் தாழ்வு மனப்பான்மைப் போயிடும்ல? அதனால் தான்!”என்றவளின் கூற்றில் காதலும், நெகிழ்ச்சியும் தோன்றி விடவும்,
அவளது இதழ்களை அழுத்தமாகச் சிறையிட்டு விட்டான் மகிழம்பூவன்.
அதில் தானும் அவனுக்கு இணையாக அவனது இதழ்த் தேனை உறிஞ்சத் தொடங்கி விட்டாள் சஹஸ்ரா.
அவர்களது கதவைத் தட்டும் சத்தம் கேட்டதுமே இருவரும் பிரிந்து கொண்டனர்.
“யாரு?” - சஹஸ்ரா.
“நான் தான் அழகி! ஃபங்க்ஷனுக்குச் சரியான நேரத்துக்குப் போக வேண்டாமா? சீக்கிரம் வாங்க”என்று அவர்களுக்கு அறிவுறுத்தி விட்டுச் சென்றாள் வண்ணமதி.
உடனே தாங்கள் இருவரும் தங்களைச் சரிபடுத்திக் கொண்டு வெளியே வந்து விட அவர்களை அழைத்துக் கொண்டு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர் அவர்களது குடும்பத்தார்.
அவ்விடத்தை அடைந்ததும் அங்கே அனைத்து ஏற்பாடுகளையும் முன்னரே செய்து வைத்திருந்தபடியால் இப்போதுசெங்கலை நட்டு வைத்து அதற்கு மஞ்சள், குங்குமம் மற்றும் பூவைத் தூவுவது மட்டும் தான் பாக்கி!
பால்ராஜ்,“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இந்தச் செங்கலை நட்டு வைங்க”என்றவரோ,
அவர்கள் அதைச் செயல்படுத்த தொடங்கியதும்,”மல்லிகா! உன்னோட ஆசைகளை எல்லாம் நிறைவேத்திட்டேன்! நீ எப்பவும் இதே மாதிரியே எங்க எல்லார் கூடவும் சாமியாக இருந்து நம்மளோட எதிர்கால சந்ததிகளுக்கு உறுதுணையாக இருந்து வழிநடத்தனும்!”என்று தன் மனைவியிடம் நெகிழ்வான குரலில் வேண்டிக் கொள்ள,
அவரைப் பின்பற்றித் தாங்கள் அனைவரும் மல்லிகாவை மனதாரத் தொழுது அவருக்கு நன்றி கூறினர்.
அதற்குப் பிறகுத் தங்களது இருவரின் கைகளாலும் செங்கலைப் பிடித்து அதை நட்டு வைத்து அதில் மஞ்சள், குங்குமம் பூசிப் பூவையும் தூவி விட்டனர் அந்த இளம் தம்பதி இருவரும்!
தனது கனவை மறக்காமல் அதை ஆரம்பிப்பதற்காகத் தன்னுடனேயே பக்கபலமாக இருந்து அதற்கான அனைத்து வேலைகளிலும் உதவிய தன் கணவனைக் காதலுடன் பார்த்தாள் சஹஸ்ரா என்றச் சங்குப்பூவழகி!
அதேபோல் தன்னுடைய காதலை ஏற்றுக் கொண்டுப், அதைப் புரிந்து கொண்டுத், தான் ஆசைப்பட்டபடியே தன்னைப் போலவே தன்னை உயிராக காதலித்துக் கொண்டிருக்கும் தனது மனைவியை நேசம் மேலோங்கப் பார்த்தான் மகிழம்பூவன்.
இவர்களுக்குள் இந்தக் காதலும், புரிதலும், அனுசரணையும், அபரிமிதமான நம்பிக்கையும் என்றும் குறையாமல் நிறைந்து வழியட்டும் என்று மகிழம்பூவனையும், சங்குப்பூவழகியையும் ஆசீர்வதித்து நாமும் விடைபெற்றுக் கொள்வோமாக!
சுபம்
இந்தக் கதைக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் டியர்ஸ்...
Special thanks to @Srichitra
@Angels laddus2
@MEGALAVEERA 